Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரீஆ சட்டப்படி மகளுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக ஏற்கிறேன்: ரிசானாவின் தாய்

Featured Replies

உண்மையில் குற்றவியல் ரீதியாக ஆராய்ந்தால் மல்லையூரன் கூறுவதில் நிச்சயம் உண்மை உண்டு. இறந்த குழந்தையின் தாய்/தந்தை உண்மையான குற்றவாளிகளாக இருக்க நிச்சயம் சாத்தியங்கள் உள்ளன. தம்மீது எங்கு குற்றம் வந்துவிடுமோ எனும் பீதியில் இவர்கள் இலகுவாக வீட்டுப்பணிப்பெண் தலையில் குற்றத்தை கட்டியிருக்கலாம். தாம் எங்கு குற்றவாளிகளோ பிடிபடுவோமோ எனும் காரணத்தினாலேயே வீட்டுப்பணிப்பெண்ணிற்கு மரணதண்டனையை வாங்கிக்கொடுப்பதில் இவர்கள் விடாப்பிடியாக நின்று இருக்கலாம். இங்கு கவலைக்குரிய விடயம் என்ன என்றால் இவ்விடயமாய் கருத்துக்கள் எழுதும்பலரும், மற்றும் ஊடகங்களும் ரிசானா தவறு செய்தார் எனும் ரீதியில் எழுதுகின்றார்கள். ரிசானாவே குழந்தையைக்கொன்றார் என்பதற்கு வலுவான எந்த ஆதாரங்களும் இல்லை. மரணமடைந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனையே செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

  • Replies 60
  • Views 3.7k
  • Created
  • Last Reply
சவூதி அராபியாவில் அந்த நாட்டு குடிமக்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.  அங்கு நாட்டு குடிமக்கள் மிகவும் சிறுபான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு துறைகளிலும் வேலை செய்ய வந்தவர்கள் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். சவூதி மக்கள் செல்வந்தர்களாக இருப்பதால் சாதாரண குற்றச்செயல்களில் ஈடுபடும் தேவை அவர்களுக்கு இல்லை.

வளமையாக செய்வதைதான் இப்பவும் செய்ய முயல்கிறீர்கள்...

2010 ம் ஆண்டின் சவுதி அரேபிய தரவுகளின் படி  84599 குற்றச்செயல்கள் நடை பெற்று இருக்கின்றன...   அதில்  50.9% மானவை  வெளிநாட்டவர்களால் இடம் பெற்றது...   அப்படி பார்த்தால் 49.1 %  மானவை  சவுதி அரேபியர்களால் இடம் பெற்றவை...  

50.9% மான வெளிநாட்டவர்களில்  பெரும்பான்மையானவர்கள்  ஷரியத் சட்டத்தை பின் பற்றும் வளக்கமுடைய  நாடுகளான  பாக்கிஸ்தான், பங்களாதேஸ், இந்தோநேசியா, சூடான் , ஜெமன், போண்றவற்றில் இருந்து போனவர்கள்...

மேலும் தகவலுக்கு....

Foreigners eight times more likely to be executed in Saudi Arabia, report says Foreigners facing capital punishment in Saudi Arabia are eight times more likely to be put to death than citizens of the Islamic kingdom, a report from Amnesty International has shown.

.......................

.......................

"Poor foreign workers are literally paying with their lives when accused of capital crimes in Saudi Arabia," said Amnesty International UK Director Kate Allen. "Frequently bamboozled by secretive and unfair trials conducted in a language they don't even understand, they go to their deaths with little assistance from their home countries and little mercy from a grossly unfair Saudi justice system. The use of capital punishment in Saudi Arabia is a disgrace. The Kingdom should introduce a moratorium immediately."

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/saudiarabia/3192085/Foreigners-eight-times-more-likely-to-be-executed-in-Saudi-Arabia-report-says.html

ரிசானாவுக்காக கண்ணீர் விட்டவர்கள், கவிதை எழுதியவர்கள், படுகொலையை கண்டித்தவர்கள் எல்லாரும் லூசுப் பயல்களாகி விட்டனர். வாழ்க அவர் குடும்பம்.

கொழும்பில் மாளிகாவத்தை, கிரான்ட்பாஸ் போன்ற பண வசதி அற்ற முஸ்லிம்கள் வாழும் சேரிகளில் (வத்தை) அவர்களுடன் சேர்ந்து வசித்து இருக்கின்றேன். 4 கக்கூஸை 100 பேருக்கு மேல் பாவிக்கக் கூடிய சேரிகளில் 3 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்து இருக்கின்றேன். அவர்களுடன் நெருங்கி பழகி இருப்பதால் இவர்களின் மத வெறி எத்தகையது எனக்குத் தெரியும். தன் குழந்தையா இஸ்லாமா எனும் வரும் போது மதத்தினைத் தான் முன்னிலைப் படுத்துவர்.

கற்பு காக்கின்றோம் என்று உடல் முழுக்க கறுப்பு ஆடை போட்டு மூடும் இதே பெண்கள், பாலியல் வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள் அதிகம் நடக்கும் என்று தெரிந்தும் மத்திய கிழக்கிற்கு செல்வர். ஒவ்வொரு பக்கத்து வீட்டிலும் பாலியல் வன்முறைகள் தொடர்புகள் பற்றி ஏராளமான கதைகள் உலாப் போகினும், விடுமுறைகளுக்கு பின்னர் மீண்டும் மீண்டும் ம.கி இற்குச் செல்வர்.

இதில் என்னா முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறீர்கள் நிழலி? இராணுவத்தில் இணைந்த தமிழ் சிறுமிகள் வதைபடவில்லை என்று அறிக்கைவிட்ட கீதாஞ்சலி ஷரிய சட்டதையா பின்பற்றி அப்படி ஒரு அறிக்கைவிட்டார்?

மத்திய கிழக்கு அவர்களின் மதம். அவர்கள் மதத்தால் அன்னியோன்னியம் காண்கிறார்கள். அண்மையில் யாழில் ஒரு வீடியோ பதிவாகியிருந்தது. தந்தை கொடுமையாக அடிக்க, அடிக்க பிள்ளை தந்தையிடம்தான் திரும்ப திரும்ப துணை தேடி சென்றது.

எத்தனை பேருக்கு பெரியார் மாதிரி வைராக்கிய மனம் வந்து வாய்க்கிறது.

சவுதி இளவரசர் இலனகையில் இருந்த நாட்கள் இது. ஈரானிடம் எண்ணை வாங்கமுடியாமல் போய்விட்ட இலங்கை தனது வழமையாக தலதாமாளிகை வரவேற்புக்களை பலதொகை பணத்தை செலவளித்து அவருக்கு செய்துகொண்டிருந்திருக்கும்.

எதிர்பாராதவிதமாக இந்த வேள்வியும் அந்த நாட்களில் வந்து விழுந்துவிட்டது. அந்த தாய்  அல்ஜசீரா போன்றவற்றுக்கு  "எனது பிள்ளையை காப்பாறுவோம் என்ற அரசியல் வாதிகள் எங்கே போய்விட்டார்கள்" என்று பேட்டி கொடுத்துவிட்டா. விசேச தொழுகைகள் கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டன. வெள்ளிக்கிழமை நெருங்கி வந்துகொண்டிருந்தது. சவுதி இளவரசர் பார்க்க பல காட்சிகள் நடந்தேறத்தக்க சூழல் உருவாக்கிக் கொண்டு வந்தது.

ஹிஸ்புல்லாஹ் பெண்ணின் வீட்டுக்கு போனார். சவுதி இளவரசர் பேரால் இலங்கை கடன்களாக பெற்றதிலிருந்து  10 இலட்சம் பணம் தருவதாக வாகுறுதி கொடுத்தார். பெண் தனது மகளை காப்பாற்றுவதகாக கூறிய அரசியல்வாதிகளை தேடாமல் தனது மகளுக்கு மோட்சம் தேடித்தந்த அல்லாவை புகழ்ந்தார். 

இது வாழ்கை என்ற சிறையில் வாடும் ஏழைகளின் கதை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
வளமையாக செய்வதைதான் இப்பவும் செய்ய முயல்கிறீர்கள்...

தயா

கண்டுபிடித்ததற்கு பாரட்டுக்கள். ஒரு சின்ன திருத்தம்! செய்ய முயலவில்லை, செய்திருக்கிறேன். வழமைக்கு மாறாக நான் மட்டுமல்ல மற்றவர்களும் பெரும்பாலும் எதுவும் செய்வதில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். நீங்கள் எப்படி?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ரிசானாவின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் நிதியுதவி   face.jpg By Farhan 

2013-01-13 13:19:57  

55887444.JPG

சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் நிதியுதவி வழங்கியுள்ளார்.

55887744.JPG

காத்தான்குடிக்கு நேற்று விஜயம் செய்த அவர் சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் 10 இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.

22225544.jpg

8887755.JPG

http://www.virakesari.lk/article/local.php?vid=2534

  • தொடங்கியவர்

சி.என்.என்.இல் சூடான விவாதம் ....

http://www.cnn.com/2013/01/13/world/meast/saudi-arabia-beheading/index.html?hpt=hp_t1

22225544.jpg

10 லட்சம் ரூபா என்றால் 1000 டொலர் கொடுக்க வேண்டும். காசோலையால் கொடுக்காமல் நோட்டுத் தாளில் கொடுக்கிறார்கள். பள்ளிக்குட கொப்பியில் கிளிச்ச பேப்பர் ஏதற்கு. சவுதி இளவரசர் தாயிற்கு பரிசளிக்கத்தான் இலங்கை வந்ததாக நாடகமாடுகிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
ரிஸானாவின் குடும்பத்திற்கு முழுமைபெற்ற வீடமைத்து கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த உத்தரவு

images9.jpgசவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கின் குடும்பத்துக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   இதன்படி “ஜனசெவன” வீடமைப்புத் திட்டத்தின் பேரில் மூதூரில் ரிஸானா வசித்த வீடு அமைந்துள்ள காணியில் முழுமைபெற்ற வீட்டை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

இவ்வீட்டின் நிர்மாண வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும்.

வீட்டின் பரப்பளவு, வீட்டின் வரைபடம் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

ரிசானாவின் குடும்பத்திற்கு வீடு  

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. இந்த வீட்டினை ஜனாதிபதி மூலம் ரிசானாவின் பெற்றோரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய வீட்டிற்கான அடிக்கல் நடும் வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதி மூதூரில் நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப். ஏ. மஜீத் மேற்கொண்டுள்ளார்.

ரிசானாவின் சகோதரிக்கும், சகோதரருக்கும் வேலைவாய்ப்புகளை பெற்று கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குடும்பத்திற்கு தேவையான ஏனைய வசதிகளும் வழங்கப்படும் எனவும் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=2540

ஆரம்பத்தில் பெயர் குறிப்பிட விரும்பாத சவுதி தனவந்தர் என்ற பம்மாத்து கதையை கைவிட்டு விட்டு அது இலங்கை அரசுதான் வீடுகட்ட வருகிறது என்பதை ஒத்துகொள்கிறார்கள்.  ரீசானவின் விசத்தை நன்றாகவே சிராணியின் விசத்தை மூடத்தக்கதாக மற்றி சிங்கள மோடையாக்களுக்கு தண்ணிகாட்டிவிட்டது அரசு.

இது வரை ரிசானாவின் குர்பானியை பற்றி எழுதாதவர்கள் சிலர் இனி யாழில் நயீப். ஏ. மயீத்தின் புகழ் பாட வருவார்கள்.

ரிசானாவின் வீடு புனர்நிர்மாணம் செய்யப்படும்-பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

FRIDAY, JANUARY 11, 2013

Hibullah.jpg

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் வீடு புனர்நிர்மாணம் செய்துகொடுக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் ரிசானாவின் சொந்த ஊரான மூதூர் பள்ளிவாசலொன்றும் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் பணியகம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல்சேனா லங்காதிகார இன்று வியாழக்கிழமை ரிசானாவின் வீட்டுக்கு விஜயம் செய்தார். 

ரிசானாவின் குடும்பத்திற்கு தேவையான நிதியுதவிகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்வர் என அவர் கூறினார். 

தற்போதும் கூட ரிசானாவின் குடும்பம் வருத்தப்படுகின்றது என தெரிவித்த வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், தனது மகளின் சடலத்தை தருமாறு ரிசானாவின் தாய் மீண்டும் கேட்டதாக குறிப்பிட்டார். 

இதேவேளை, ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி அரேபியா தனவந்தரொருவர் முன்வந்துள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். 

‘ரிசானா நபீக்கின் குடும்ப வறுமை நிலையை கருத்திற் கொண்டு எந்தநோக்கத்திற்காக அவர் சவூதி அரேபியாவுக்கு சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டும் 

“இது தொடர்பில் சஊதி அரேபியாவை சேர்ந்த தனவந்தர் ஒருவருடன் கலந்துரையாடியபோது நான்கு மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளதாக” பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, ரிசானா நபீக்கின் வீட்டை நோக்கி மக்கள் கூட்டங்கூட்டமாகச் இன்று வியாழக்கிழமை சென்று தங்களின் அனுதாபங்களை தெரிவிக்கின்றனர். மூதூர் பிரதேச மக்களோடு வெளி பிரதேச மக்களும் வந்தனர். 

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரும் றிஸானா நபீக்கின் வீட்டுக்கு சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.

http://kattsmsweb.blogspot.com/2013/01/blog-post_78.html

  • கருத்துக்கள உறவுகள்
சி.என்.என்.இல் சூடான விவாதம் ....

http://www.cnn.com/2013/01/13/world/meast/saudi-arabia-beheading/index.html?hpt=hp_t1

சூடான விவாதம் எண்டு அங்கை போனால், ஒபாமா ஒரு கறுப்பர், அமெரிக்க ஜானதிபதி எண்டு விவாதம் போகுது.. :D திரிக்கு சம்பந்தமில்லை எண்டு வெட்ட மாட்டினமா? :rolleyes::D

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

செய்திகளை பார்வையிடும் நோக்கில் உலாவிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட செய்தி, மனதை உருக்க வைதத்துவிட்டது. அல்லாஹ் போதுமானவன்
Lankamuslim.org

மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42

உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40

அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216

உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ
“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)
இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…

இப்படிக்கு
A J M மக்தூம்

ரிசானாவின் பாவங்கள்? அவர் கொலை செய்தார் என்று கூற விழைகிறாரா? :rolleyes: அப்படியே அவர் கொலை செய்தவராகினும், ஒரு குழந்தைக்கு மரணதண்டனை விதிக்க வழியுண்டா சரி ஆ சட்டத்தில்? குழந்தை என்பதற்கு என்ன வரைவிலக்கணம் அவர்கள் சட்டப்படி? :huh:

"எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?"

மனமார முஸ்லீம் சகோதரர்கள் பிராத்திக்கிறார்களாயின் அது ஒருபாகியம்.

வீட்டு வேலக்காரி எஜமானியுடன் சண்டை பிடிக்கமாட்டாள். "நான் சிறுமி வீட்டுக்கு வந்த நாளில் இருந்து தொடர்ந்து வதைத்தேன்" என்பதை இந்த வளமாக போடுகிறார். அவவின் தூதர்கள் இந்த செய்தியை கொண்டுவருகிறார்கள். 17 வயது சிறுமி இப்படி ஒன்றை துணிந்து செய்வதாயின் அது மனநிலை சரியில்லாத ஒரு ஆளாக மட்டுமே இருக்க முடியும். நிச்சயமாக அந்த பிள்ளையின் முகத்தில் குறந்த பட்சம் ஒரு முரட்டு சுபாவம் தன்னும் தென்படவில்லை. (அப்படி ஒரு பிரத்தியேக பார்வை அந்த சிறிமியின், தாய், தந்தை, சகோரரர்களில்-முழு குடும்பத்திலும் யாரின் புகைப்படங்களிலும் காணப்படவில்லை) இந்த எஜமானி 18 நாள்களுக்குள் தனது சதியை விரைவாக அரங்கேற்ற முயன்றிருக்கிறார். 18 நாள் வீட்டில் வைத்து அந்த சிறுமியை வதைத்திருக்கிறார். அதன் பின்னர் குழந்தையை பிழையான நிலையில் கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.  ஆனால் கோபமாக இருந்த பணிபெண்ணுடன் நாலு மாத  குழந்தையை விட்டுவிட்டு போன எஜமானியின் பிள்ளையாக அந்த குழந்தை இருக்க முடியாது . நிச்சயமாக அந்த தாய் இரு கொலைகளுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

22225544.jpg

10 லட்சம் ரூபா என்றால் 1000 டொலர் கொடுக்க வேண்டும். காசோலையால் கொடுக்காமல் நோட்டுத் தாளில் கொடுக்கிறார்கள். பள்ளிக்குட கொப்பியில் கிளிச்ச பேப்பர் ஏதற்கு. சவுதி இளவரசர் தாயிற்கு பரிசளிக்கத்தான் இலங்கை வந்ததாக நாடகமாடுகிறார்கள்.

1000 டாலர்ஸ் ஆ? எந்த நாட்டு நோட் ல அது சாத்தியம்? :D

வேற எது zimbabwe dollar தான்..

zimbabwe_dollars.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் 10,000 டொலர் நோட்டு இருக்கு.. :D

1000singapore.jpg

இது சுவிஸ்..

swiss_franc_1000_reverse-1-300x122.jpg

  • கருத்துக்கள உறவுகள்

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

செய்திகளை பார்வையிடும் நோக்கில் உலாவிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட செய்தி, மனதை உருக்க வைதத்துவிட்டது. அல்லாஹ் போதுமானவன்

Lankamuslim.org

மௌலவி A J M மக்தூம்

அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்2:155(

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன் 2:156)

أُولَٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ

இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். (அல் குர்ஆன் 2:157)சவுதி அராபியாவில் பணிப் பெண்ணாக வேலை செய்து கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு பின் சென்ற புதன்கிழமை (09.01.2013) 11 மணியளவில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட உங்கள் மகள் றிசானாவை அவருக்கு அத்தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு முன் சந்தித்தோம். அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் (மரன சாசனம்) பற்றி வினவவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

அவரை சந்தித்ததும் அவரின் இறுதி ஆசைகள் மற்றும் வசிய்யத் ஏதும் இருக்கிறதா? என்று வினவினேன். அவருக்குப் புரியவில்லை, விளங்கப் படுத்தினேன். அதற்கு பதில் சொல்லாது ஊருக்கு நான் எப்போது செல்வது? என்று வினவினார். அப்போது அவர் ஊருக்கு சென்று விடலாம் எனும் எதிர் பார்ப்பிலேயே இங்கு வந்துள்ளார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

சரி, எண்ணத் தீர்ப்பு உங்கள் மீது விதிக்கப் பட்டுள்ளது என்று வினவிய போது, அவரின் முழு கதையையும் சொல்லி விட்டு பின் மரண தண்டனை இப்போது விதிக்கப் பட்டுள்ளது என்று கூறினார். அந்த இறுதி நேரத்திலும் அவர் மீது சுமத்தப் பட்டிருந்த கொலைக் குற்றத்தை அவர் மறுத்தார்.

உங்களுக்கு மரண தண்டனை இன்றுதான் நிறைவேற்றப் படப் போகிறது என்று தடுமாற்றத்துடன் கூறினேன். அதற்கு அவர் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

அப்போது நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்று கேட்டேன். என்ன சொல்வது? என்று பதற்றத்துடன் என்னிடம் தாழ்ந்த குரலில் வினவினார்.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதை புரிய படுத்தினேன்.

என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா? என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது. அங்குள்ள அதிகாரிகளிடம் இது பற்றி கூறி, அவருக்காக பரிந்து பேசினேன். அவர்களும் மரணித்த குழந்தையின் பெற்றோரிடம் பேசி முயற்சி செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்.

அப்படி அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டால், உங்கள் மரண தண்டனை இன்று நிறைவேற்றப் படும். உங்களிடம் ஏதாவது பணம், பொருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது? என்று வினவிய போது, மொத்தம் ஐநூறு சவுதி ரியால்கள் சொட்சம் இருப்பதாகவும், அதனை சதகா செய்திடுமாரும் வேண்டிக் கொண்டார்.

அவற்றை யாருக்கு? எங்கு? எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்கப் பட்டபோது, இங்கேயே, எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே அவருக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார்.

அவருக்கு “ஷஹாதா” (அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வஹ்தஹு லாஷரீக லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு) என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும், துஆ செய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டது.

அங்கிருந்த அதிகாரிகள் வாக்குறுதி அளித்தது போன்றே இறந்த குழந்தையின் உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசியும் பலனில்லாமல் போய்விட்டது. அங்கிருந்த அனைவரின் எதிர் பார்ப்பும் ரிசானா மன்னிக்கப் பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காத போதும், அவரின் தண்டனை நிறைவேற்ற நியமிக்கப் பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப் பட்ட போது கூட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ஒருவர் மன்னித்து விட்டார்களா? என்று கேட்டார், இன்ஷா அல்லாஹ் மன்னித்து விடுவார்கள் என்றே அவர் அதற்கு பதில் அளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்து விடுவார்கள் என்பதே அவரின் எதிர் பார்ப்பாக இருந்தது. நாட்டு மன்னர், இளவரசர் சல்மான் போன்றோர் இதற்காக முயற்சித்தும் பலனளிக்காமை இங்கு சுட்டிக் காட்டத் தக்கது. மேலும் அங்கிருந்த யாரும் அவருடன் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. பண்பாகவும், பாசமாகவுமே நடந்து கொண்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு நியமிக்கப் பட்டிருந்தது போன்றே அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணியளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்கத்திற்கு சொந்தக் காரியாக ஆக்கியருள்வானாக. இப்பொழுது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: “முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையை செய்திட முயற்சி செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

உங்கள் மகள் ரிசானா விடயத்திலும் இதனையே கற்றுக் கொண்டோம். முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

மேலும் அது பற்றிய செய்திகள் வருகிறதா? என்று அடிக்கடி இணைய தளங்களை பார்த்தேன். எனினும் அங்கே செல்லும் வரை எந்த செய்தியையும் காணவில்லை. அங்கிருந்த அதிகாரிகளிடம் இது பற்றி வினவிய போது, உங்கள் நாட்டு தூதரகம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். எனவே உத்தியோகப் பூர்வமாக செய்தி வரும் வரை நான் வேறு யாரிடமும் கூறுவதைத் தவிர்த்துக் கொண்டேன்.

இது இவ்வாறிருக்க இன்று ஊடகங்களில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் நிறைய பரிமாறப் படுகின்றன. சில முஸ்லிம் சகோதரர்கள் கூட ஈமானுக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுகின்றனர். அல்லாஹ் எங்களை மன்னிக்க வேண்டும். உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப் பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள். எனினும் நான் அவர்களிடம் எனக்கு இது பற்றிய முழு தகவல்களும் கிடைக்க உதவி செய்யுங்கள் என்று வேண்டிக் கொண்ட போது, இன்ஷா அல்லாஹ் உதவுகிறோம் என்று கூறினார்கள். அதற்கான சந்தர்ப்பம் அமைந்தால் இன்ஷா அல்லாஹ் அதனை வெளி உலகுக்கு கொண்டு வருவேன். இங்கு விமர்சிக்கப் படுவது அல்லாஹ்வின் மார்க்கம், அல்லாஹ்வின் சட்டம் என்பதாலேயே இதற்கு முயற்சி செய்கிறேன். வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது. மேலும் இவருக்கு நிறைய வெகுமதிகளையும், சுவன பாக்கியத்தையும் இறைவன் வழங்குவான். அதே நேரம் இவர் தவரிளைத்திருந்தால் அந்த தவறு இத்தண்டனை மூலம் மன்னிக்கப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ். இறைவன் அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ ۚ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான். 14:42

உயிரிழந்த அக்குழந்தையின் பெற்றோர் மன்னிக்கவில்லை என்பதற்காக அவர்களை விமர்சிப்பதற்கு எமக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிபதற்கும், மன்னிக்காமல் இருப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. மன்னித்திருந்தால் நிறைய நன்மைகளை அடைந்திருப்பார்கள் என்பதையும் இஸ்லாம் தெளிவு படுத்த தவறவில்லை.

وَجَزَاءُ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِّثْلُهَا ۖ فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى اللَّهِ ۚ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ

இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது – நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். 42:40

அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள். இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் இறைவன் யாவற்றையும் நன்கு அறிந்தவன், மிகவும் ஞானமுள்ளவன். அவனுக்குத் தான் தெரியம் எதில் மக்களுக்கு நலவு இருக்கிறது, எதில் தீமை இருக்கிறது என்று. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216

உங்கள் மகள் உலகமறிய இவ்வாறு மரணத்தை சந்தித்ததன் மூலம் என்னென்ன மாற்றங்கள், நலவுகள் ஏற்பட போகிறதோ என்பதை இறைவன் மாத்திரமே அறிவான். உங்கள் மகள் ரிசானா விடுதலையாகி வந்திருந்தாலும் என்றோ ஒரு நாள் மரணமடைந்தே இருப்பார். ஆனால் அதனை யாரும் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். எனினும் இப்போது முழு உலக முஸ்லிம்களும் அவருக்காக இருகரமேந்தி துஆ செய்கின்றார்கள். இது அவருக்குக் கிடைத்த பாக்கியமல்லவா?

பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் பணிப் பெண்கள் உள ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக துன்பங்களுக்கு ஆளாகுவது உண்மையே. எனவே இந்த நிகழ்வின் மூலம் பாடம் கற்று பெற்றோர்கள், கணவன்மார்கள் உட்பட அனைவரும் தமது பொறுப்பிலுள்ள பெண்களை வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ

“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)

இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நேரான வழியை காட்டுவானாக, உங்கள் பொறுமைக்கு நற்கூலி வழங்குவானாக, உங்கள் மகள் ரிஸானாவின் பாவங்களை மன்னித்து அவருக்கு சுவன பாக்கியத்தைத் தந்தருள்வானாக…

இப்படிக்கு

A J M மக்தூம்

Lankamuslim.org

என்ன கொடுமை ரிசானா கடைசி வரைக்கும் தன்னை விட்டு விடுவார்கள் என்டே நினைத்திருந்தார் :o

மௌலவி A J M மக்தூம்

அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள். இது போன்றவர்கள் பற்றியே இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:நான் கூட உங்கள் மகளுக்காக நிறையவே துஆ செய்தேன். உங்கள் மகளின் மரண தண்டனைப் பற்றிய செய்தி ஒரு நாள் முன்னதாகவே எனக்கு கேள்வி பட்டது. அதாவது மேற்குறிப்பிட்ட சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது. அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டு செல்லும் போது “இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப் படுகிறார் என்றால் அநியாயக் காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக” என்று கூட பிரார்த்தித்தேன்.

இந்த தூ ஆ செய்த நேரத்திற்கு ரிசானாவை விட்டுவிட சொல்லும்படி இறந்த குழந்தையின் பெற்றோருடன் பேசியிருக்கலாம்.

என்ன கொடுமை ரிசானா கடைசி வரைக்கும் தன்னை விட்டு விடுவார்கள் என்டே நினைத்திருந்தார் :o

ஓம் அக்கா, மரண தண்டனை நிறைவேற்ற போவதாக கூறினாலும் தன்னை அவர்கள் மன்னிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் இருந்திருக்கிறார்.

ஆனாலும் கண்ணை கட்டி விட்டு முழங்காலில் இருத்தி தலையை குனிய சொல்லி பின்னர் தான் வாளால் வெட்டுவார்கள். அவ்வாறு தான் வேறு வீடியோக்களில் உள்ளது. எனவே இறுதி நேரத்தில் மரணிக்கப்போவது அவருக்கு தெரிந்திருக்கும். அந்நேரம் துடிதுடித்திருப்பார்.

உங்கள் மகள் ரிசானா அநியாயாமாக கொள்ளப் பட்டிருந்தால், தெரிந்து கொண்டே அவருக்கு அநியாயம் செய்தோரை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான். மறுமையில் இதற்கு பதிலாக அநியாயம் செய்தோரின் நன்மைளை எடுத்து இவரின் நன்மைகளில் சேர்க்கப் படவோ, அவர்களுக்கு போதியளவு நன்மைகள் இல்லாத சந்தர்ப்பத்தில் இவரின் தீமைகளை அவர்களின் மீது சுமத்தப் படவோ வாய்ப்புள்ளது.

எந்நிலையிலும் இறைவனின் விதியை மீறி உங்கள் மகள் ரிசானாவின் மரணம் இடம்பெற்றிருக்க முடியாது. இறைவன் பின்வருமாறு கூறுகிறான்:

ۗ قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ

“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (3:154)

இறைவன் ஒரு மனிதனுடைய மரணத்தை குறித்ததொரு பூமியில் வைத்து பிரிப்பதாக விதித்திருந்தால், அந்த இடத்திற்கு செல்வதற்கான தேவையை ஏற்படுத்துவான் என இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இப்படிக்கு

A J M மக்தூம்

Lankamuslim.org

"உங்களை நான் கொல்லப்போகிறேன். கொலை செய்த பின் அநியாயமாக நான் உங்களை கொலை செய்தமைக்காக இறைவன் என்னை தண்டிப்பான்" என்று யாரும் இவருக்கு சொல்லி விட்டு கொஞ்ச நேரம் விட்டு வைத்தால் இவர் இறைவன் விதிப்படி தான் தனக்கு மரணம் நிகழப்போகிறது என்று சொல்லி அதை ஏற்றுக்கொள்வாரா? <_<

நல்லா தான் மதத்தை சாட்டி சாதாரண மக்களை முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள். :rolleyes:

இம்மையை பற்றி கதைக்கும் போது மறுமை பற்றி கதைத்து பூச்சாண்டி வேலை காட்டுகிறார். ரிசானா இந்த பிறவியில் குற்றம் செய்திருந்தால் மறுபிறவியில் தண்டிக்கப்படட்டும் என்று சொல்லி விட்டு அவரை விட்டிருக்கலாமே. அதற்கு மட்டும் மறுபிறவி மேல் நம்பிக்கை இல்லையா? ^_^

422239_562273930468773_54650196_n.jpg

- from fb -

முள்ளிவாய்க்காலிலும் பல அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். அப்பொழுதே கடவுள் நம்பிக்கையை கைவிட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்க இன்னும் கடவுள் நம்பிக்கையை கை விடலியா?

  • கருத்துக்கள உறவுகள்

22225544.jpg

10 லட்சம் ரூபா என்றால் 1000 டொலர் கொடுக்க வேண்டும். காசோலையால் கொடுக்காமல் நோட்டுத் தாளில் கொடுக்கிறார்கள். பள்ளிக்குட கொப்பியில் கிளிச்ச பேப்பர் ஏதற்கு. சவுதி இளவரசர் தாயிற்கு பரிசளிக்கத்தான் இலங்கை வந்ததாக நாடகமாடுகிறார்கள்.

இந்தபடத்தில ஹிஸ்புல்லாவோட பார்வையே செரி இல்லையே இது தான் சவுதி பணமா எம்பிட்டு தேறும்? என்று வைச்ச கண் வாங்காமல் பாத்திட்டு நிக்கிறாரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.