Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இன்று கனடாவில் ஒரு சாவு.பதினேழு வயது மாணவன் பதினேழுவது அல்லது பதின் நான்காவது மாடியால் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.இவனது அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கின்றனர்.இவன் ஏற்கனவே மன உழச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.அத்தோடு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றான்.இறுதியாண்டு படிப்பு கடுமையாக படிக்க வேண்டிய நேரமாய் இருக்கும்.ஏற்கனவே வைத்தியரின் அறிவுரைப்படி தகப்பனின் பிரிவு தான் இந்த மாணவனைப் பாதித்ததாகத் தகவல் இருவரும் சேர்ந்து வாழ்ந்திருந்தால் இந்தப்பிஞ்சின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்.இவரின் அம்மாவின் ஆட்கள் தான் இவருக்கு அதிகம் போலத்தெரிகிறது.பிந்திக்கிடைத்த தகவலின் படி தகப்பனார் வந்து பார்க்க முன்பே உடலை அடக்கம் செய்ய முயற்சிக்கிறார்களாம்.இப்போ சொல்லுங்கள் உங்கள் முடிவுகளை.......

  • Replies 148
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவனுக்கு இரங்கல்கள்.

இங்கும் ஒரு குடும்பம்.. நான் கண்டது. தகப்பன் ஊரில ஒரு ஆசிரியர். யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். தாய் வீட்டுப் பெண். அவர்களுக்கு சில ஆண் பிள்ளைகளும்.. சில பெண் பிள்ளைகளும்... (பிள்ளைகளின் எண்ணிக்கை அந்தக் குடும்பத்தை இனங்காண முடியாத படிக்கு மாற்றப்பட்டுள்ளது.) அவர்கள் பிரித்தானியாவிற்கு அகதியாக வந்து.. விசாவும் கிடைத்து பிள்ளைகள் பள்ளிகளில் படிக்கும் காலத்தில்.. தாய் வழி ஆட்கள் தாயைத் தூண்டிவிட்டு.. பிரச்சனைகளை உருவாக்கி பெற்றோர் இருவரினதும் 50 களில் அவர்களை விவாகரத்துக்கு இட்டுச் சென்றனர். இன்று அந்தப் பிள்ளைகளில் 3 வர் ஹாங்கில. ஒருவர் ரேப்பிஸ்ட்.. என்று சொல்லுற அளவிற்குப் போயிட்டார். ஆனால் அடிப்படையில் நல்ல குழந்தைகளாகவே இருந்தனர்.! அந்தத் தகப்பனார் படாதபாடு பட்டுது பிள்ளைகளை நல்வழிக்குக் கொண்டு வர. இருந்தும் தாயின் துக்கரமான முடிவுகளால்.. தாய் வழி சொந்தங்களின் சுயநலமான சிந்தனைகளால் ஒரு குடும்பம் சிதைந்தது மட்டுமல்ல.. சமூக விரோத எண்ணமுள்ள பிள்ளைகளையும் உருவாக்கவே அவர்களால் முடிந்துள்ளது.

இப்படிப் பல குடும்பங்கள்.. இங்கே புலம்பெயர் மண்ணில்.. அநேகம்.. தறிகெட்டுப் போகும்..  பெண்களின் சிந்தனையால் தான் இந்த நிலைகள் உருவாகி வருவதை கண்கூடாக காண முடிகிறது..! ஆனால்.. அதை ஏற்கும் பக்குவமற்ற நிலையிலேயே எமது சமூகத்தில் இன்னும் பெண்கள் தங்களை.. பூ.. செடி.. என்று கொண்டு நிற்கின்றனர். அவர்கள் பூவும் அல்ல.. செடியும் அல்ல. மனிதர்கள். வக்கிரமான மனநிலை எந்த நேரத்திலும் அவர்களுக்குள் தோன்றக் கூடிய மோசமான பிறவிகள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொண்டு தான் ஒரு பெண்ணோடு வாழ முனைய வேண்டும். அப்படி அவள் வாழ நேரிடுகின்ற போது குடும்பத்தை பாதிப்பில் இருந்தும் காக்கக் கூடிய துணிவும் ஆற்றலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் இணைய விரும்பும் ஆண்களுக்கு நிச்சயம் அவசியம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு தெரிஞ்சு ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகளது கதை ஆயிரம் இருக்கும்...அந்த கதைகளை வைத்து முழு ஆண் வர்க்கமே கூடாது என நான் சொல்ல வரவில்லை...ஒரு சில கதைகளை மட்டுமே கேட்டு எழுதும் நீலப்பறவையை என்ன சொல்ல ^_^
 
  • கருத்துக்கள உறவுகள்
இன்று கனடாவில் ஒரு சாவு.பதினேழு வயது மாணவன் பதினேழுவது அல்லது பதின் நான்காவது மாடியால் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.இவனது அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கின்றனர்.இவன் ஏற்கனவே மன உழச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.அத்தோடு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றான்.இறுதியாண்டு படிப்பு கடுமையாக படிக்க வேண்டிய நேரமாய் இருக்கும்.ஏற்கனவே வைத்தியரின் அறிவுரைப்படி தகப்பனின் பிரிவு தான் இந்த மாணவனைப் பாதித்ததாகத் தகவல் இருவரும் சேர்ந்து வாழ்ந்திருந்தால் இந்தப்பிஞ்சின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்.இவரின் அம்மாவின் ஆட்கள் தான் இவருக்கு அதிகம் போலத்தெரிகிறது.பிந்திக்கிடைத்த தகவலின் படி தகப்பனார் வந்து பார்க்க முன்பே உடலை அடக்கம் செய்ய முயற்சிக்கிறார்களாம்.இப்போ சொல்லுங்கள் உங்கள் முடிவுகளை.......

பெற்றோரின் செயல்களால் பிள்ளையின் உயிர் பறிபோய்விட்டது.

அதைவிட கொடுமை தகப்பனார் பார்க்கும் முன்பே அடக்கம் செய்ய முற்படுவது.

எப்போ திருந்தப்போயினமோ!

எனக்கு தெரிஞ்சு ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள்,குழந்தைகளது கதை ஆயிரம் இருக்கும்...அந்த கதைகளை வைத்து முழு ஆண் வர்க்கமே கூடாது என நான் சொல்ல வரவில்லை...ஒரு சில கதைகளை மட்டுமே கேட்டு எழுதும் நீலப்பறவையை என்ன சொல்ல ^_^
 
ரதி நான் உங்களுடன் விதண்டாவாதம் செய்ய வேண்டும் என்றில்லை. தற்போது கிடைத்த செய்தியைப்போட்டேன்.இச் செய்தி ஏதோ விததில் அவர்களை சென்றடைந்தால் தகப்பனுக்காக காத்திருப்பார்கள் என்ற நப்பாசை தான்
 உங்களுக்கு தெரிந்தவற்றையும் தெரியப்படுத்துங்கள்.எம்முடைய இலக்கு பிற்காலச்சந்ததி சிறக்க வேண்டும் அதற்கு நாம் வழி விட வேண்டும்.அப்போ எங்கள் தவறை திருத்திகொள்ள ஏதுவாகவிருக்கும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

என்ன ரதி நீங்கள் இப்படிக் கூறிவிட்டீர்கள். நகைச்சுவையாய் சிலர் எழுதியிருந்தாலும் இத்திரிமூலம் நிறைய விடயங்கள் அறியப்பட்டதே. நான் இத்திரியை ஆரம்பிக்கும் போது எதிர்பார்த்ததுபோல் திரி நகரவில்லைத்தான். ஆனாலும் உங்களைப் போல் பெண்கள் பலர் வந்து கருத்து எழுதியிருப்பின் அதன் தன்மை மாறியிருக்கலாம். கோபித்துக் கொண்டு எந்திரிக்கு வராமல் விட்டுவிடாதீர்கள்.

நீலப்பறவை தீர விசாரிக்காமல் ஒருவரை தவறென்று கூறவே முடியாது. தகப்பன் செய்த அதீத தவறுகளின் பாதிப்பில் வெறுப்பின் உச்சியில் இருக்கும் குடும்பம் தகப்பன் மகனைப் பார்க்கக் கூடாது என்ற தண்டனையை வழங்க நினைத்திருக்கலாம். நீங்கள் யாரோ மூன்றாம் ஆளின் கதைகேட்டு எழுதுகிறீர்கள். நெருங்கிச் சென்றால் உங்கள் கருத்துக் கூடத் தந்தைக்கு எதிராக மாறலாம். ஆண்பிள்ளைகளைப் பொருத்தவரை  தவறுகளைச் சுட்டுவது பெண்களாயிருக்கும் பட்சத்தில் பெண்களில் ஒரு வெறுப்பும் ஆனில் ஒரு இரக்கமும் வருவது இயல்புதான். அதுக்கும் பத்து பன்னிரண்டு வயது உள்ளவர்களே தாமாக முடிவெடுத்து தந்தையுடன் போய் வாழும் காலமிது. பதினேழு வயது மாணவன், பெற்றோரின் பிரிவினால் தற்கொலை எனில் உண்மை பெற்றோரின் பிரிவு மட்டுமே காரணமாக முடியாது.
அடுத்து தொலைக்காட்சியில் மற்றவர்களிடம் தம்மை முன்னிலைப்படுத்த நடந்த உரையாடலைக் கொண்டுவந்து போடுகிறீர்களே. இது உங்கள் பக்க வலுவின்மையைக் தான் காட்டுகிறது .

ஒரு குடும்பம் அழிவதற்கு பெண்ணும் ஒரு காரணமாக இருந்தாலும், ஒரு ஆண் தன் அன்பால் அல்லது அல்லது ஆளுமையால் குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாத ஆணினால்த்தான் பல குடும்பங்கள் சிதைந்து போயுள்ளன. ஒரு பார்வையாலேயே பிள்ளைகளைக் கட்டுப் படுத்தக் கூடிய தந்தையர் இருக்கின்றனர். அதற்கும் மேலாக அரசாங்கத்தின் மேலதிக சலுகைகள் கூட பல குடும்பங்கள் பிரிவதற்குக் காரணமாகின்றன. பணம் தான் அனைத்தையும் நிர்ணயிக்கும் காரணியாக இக்காலத்தில் உள்ளது. அதற்காக எல்லோருக்குமே அது பொருந்தவும் மாட்டாது. முக்கியமாக ஆண்கள் அளவுக்கதிகமாக பெண்காலில் விழுவதைத் தவிர்த்தார்களானால் அரைவாசிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

இளம்பிள்ளைகள் புலம்பெயர் நாடுகளில் தறிகெட்டுப் போவதற்குக் காரணம் பெற்றோர்கள் அல்ல. பெற்றோர்கள் இருவரும் நல்லவர்களாய் இருந்து பிள்ளைகளை பாடசாலைக்கும் வீட்டுக்கும் கொண்டுபோய் விட்டு ஏற்றி இறக்கி கவனமாகக் கண்காணித்த குடும்பத்துப் பிள்ளை பாடசாலயில் உதவாதவர்களுடன் சேர்ந்து  கங்ஸ்ரர் ஆகப் போய்விட்டான். இவற்றிற்கெல்லாம் நாம் எதைக் கூறினாலும் பொருந்தாது என்பதுதான் உண்மை.  

 நாடு உருப்படுமா?

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்
நீலப்பறவை தீர விசாரிக்காமல் ஒருவரை தவறென்று கூறவே முடியாது. தகப்பன் செய்த அதீத தவறுகளின் பாதிப்பில் வெறுப்பின் உச்சியில் இருக்கும் குடும்பம் தகப்பன் மகனைப் பார்க்கக் கூடாது என்ற தண்டனையை வழங்க நினைத்திருக்கலாம்.

இந்தமாதிரி சித்தாந்தங்களால்தான் பிரச்சினைகள் உருவாகிறது.. :rolleyes:

தகப்பன் கொலைகாரனாகவே இருந்தாலும் நீதி மன்றம் அல்லது காவல்துறை மூலமான தடைகள் இல்லாமல் வேறு எவராலும் இவ்வாறான தடைகளைப் போட முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்பட வேண்டும். இவர்கள் யார் தண்டனை வழங்குவதற்கு? :huh:

இந்த திரியின் ஆரம்பத்தை வாசித்தேன் அதற்கு கருத்தும் எழுதினேன்   .. :) .........இறுதியை வாசித்தேன் :D ,,,,,,,,,,,,இடையில் வாசிக்க நேரமின்மையால் இசையிடம் விளக்கம் கேட்கிறேன் ............... :icon_idea:

 உண்மையில் இந்த திரிக்கு என்ன நடந்தது ..... :rolleyes: ......இடையில் வேறு தலையங்கத்துடன் யாராவது புகுந்திட்டான்களா . :D  :D ....ஒன்னும் புரியலப்பா :lol:  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
 நாடு உருப்படுமா?

இது இங்கிலாந்தில் ஒளிபரப்பான ரிசா சோ வுக்கு நிகராக உள்ளது. நல்ல முயற்சி. சமூகத்தில் பதுக்கி வைத்து மறைத்து வைத்து நடத்தப்படும் அநாகரிகங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நல்ல நிகழ்ச்சி.

நான் பார்த்த அளவில் அந்த ஆணிடமும் ஆரம்பத்தில் நல்ல பண்புகள் இருந்துள்ளன.

ஆனாலும் அது சுயநலம் மிகுந்தாக பரிமான வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் தவறான ஆபாச.. வீடியோக்களின் பாதிப்பு அவரிடம் இருந்துள்ளது.

அதற்கு அந்தப் பெண்ணின் நடத்தைகளும் ஒரு காரணம்.

மேலும்.. குடும்பக்கட்டுப்பாடு பற்றிய அறிவின்மை.. அந்த ஆணால்.. பெண்.. ஒரு இயந்திரமாக பயன்படுத்தப்படும் சூழலை தோற்றுவித்துள்ளது. பல அபோசன்களுக்கும் அது இட்டுச் சென்றுள்ளது. இதற்கு அந்த ஆண் மட்டும் காரணம் அல்ல.. அந்தப் பெண்ணும்.. இந்திய சமூக.. மற்றும்.. கல்வி முறையில் உள்ள குறைபாடும் ஒரு காரணமாகும்.

மேலும்..

கணவனின் ஆதரவை இழந்திட்டால்.. பெற்றோர் உள்ள பெண்கள் பெற்றோரோடு போய் இருக்கலாம். இல்ல.. சகோதரங்களோடு போய் இருக்கலாம். சமூகத்திற்கும் தனக்கும் தன்சார்ந்தோருக்கும் பாதிப்பற்ற வகையில் கெளரவமாக தனித்து வாழலாம்.. இல்ல.. அன்னை திரேசா போன்ற பல முன்னோடிகளின் வழியைப் பின்பற்றலாம். அதைவிட்டிட்டு.. இன்னொரு பெண்ணுடனான தகாத உறவில் தான் ஆதரவு இருக்கிறது என்று சொல்வதை அவ்வளவு உறுதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலும்.. அந்த ஆணிடம் இருந்து அவர் மனைவி - இன்னொரு பெண் உறவை வைச்சு (திருத்த முடியாத நிலையில்.. மனைவி உள்ள போது அவன் அப்படிச் சிந்திக்கத் தூண்டுப்படுவது பற்றி தீர்ப்புச் சொன்னவாவும் கருதல்ல) பிள்ளைகளின் கல்வித் தேவைக்கு பணம் பெற்றது பற்றி.. அசிங்கம் என்று கருதுபவர்கள்.. அந்தப் பணம் இல்லையேல் இந்தப் பிள்ளைகளை இன்று இந்த சோவில் பார்க்க முடிந்திருக்குமோ தெரியவில்லை. அந்த அம்மாவும் இவ்வளவு காலமும் பிள்ளைகளின் தேவைகள் பற்றி சிந்தனை இல்லாமல் தகாத உறவில் கவனம் செலுத்திவிட்டு இப்போ பிள்ளை பிள்ளை என்று அழுவதில் என்ன பயன்..??!

தாயைப் பிரிந்திருந்த சிறு பிள்ளைகள்.. யாரிடம் இருக்கப் போகிறாய் என்று கேட்டால்.. அம்மாவிடம் என்று சொல்லத்தான் செய்யுங்கள். அதற்காக அவர்களை தனது ஆதரவுக்காக தவறான நடத்தை உள்ள ஒரு பெண்ணுடன் சேர்த்து அனுப்புவது எந்த வகையில் பாதுகாப்பு..?????! அந்தப் பிள்ளைகள் இந்தப் பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..??!

எனக்கென்னவோ.. தீர்ப்புச் சொன்னவா அந்த ஆணின் மீது எழுந்த ஆத்திரத்தில் எட்டிய ஒரு மோசமான தீர்ப்பாகவே இது தெரிகிறது. உண்மையில் அந்தப் பிள்ளைகளை சிறிது காலம்.. அவர்களின் grand parents இடம் கையளித்து தாய் தந்தையரின் போக்குப்பற்றி ஆராய்ந்து அதன் பின் தான்.. நீதிமன்றம் வழங்கும் தீர்வுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற தீர்ப்புக்கே.. வந்திருக்க வேண்டும்.

எதுஎப்படியோ.. நீதிமன்றங்களாவது இது விடயத்தில் உண்மையான சமூக அக்கறையோடு செயற்பட்டால் நன்று. :icon_idea:

Edited by nedukkalapoovan

எல்லோரும்  பெண்களே 

அருமையானதோர் காணொலி. ஆயினும், தத்துவார்த்தமாகப்பார்த்தால் தவறு உள்ளது. Double Positive OR Double Negative ஆனது Positive + Negative இற்கு நிகராய் அமையமுடியாது. இன்னோர் விதத்தில் கூறுவதானால் (- 10) + (10) அல்லது  (- 10) - (10) ஆனது (-10) + (-10) அல்லது (-10) - (-10) இற்கு இணையாகமுடியாது.

Spoiler
தலைப்பு சம்மந்தப்பட்ட விடயத்திற்கு வந்தால் காதல் என்பது சும்மா சில ஹார்மோன்களின் விளைவு என்பது தவிர வேறொன்றும் இல்லை என்று கூறும் பலரும் மூன்று இஞ்சி நீளமான இத்தூண்டு குஞ்சாமணி ஆளைப்போட்டு ஆட்டுகின்ற சிப்பிலி ஆட்டம்பற்றி பேசாமல் எதிர்ப்பாலினர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்குவது வேடிக்கை. ஒட்டுமொத்தத்தில் உடலியல் இயக்கமே ஹார்மோன்களின் விளைவுகளே! அவ்வாறு பார்க்கும்பட்சத்தில் காதல், திருமணம், குடும்ப உறவு, தாம்பத்தியம், சகலதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளனவே! 14வயதுக்காதலை ஹார்மோனின் சேட்டை என்று கூறினால்.. ஆண்கள் 44வயதில் பெண்டாட்டியை சுற்றிவளைத்து காமக்களியாட்டம் ஆடுவதும், மற்றும் பெண்கள் ஆணிற்கு ஆசையுடன் Vagina குழாயை நீட்டுவதும்... இவையெல்லாம் எதன் சேட்டைகள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

Edited by கரும்பு

செச்செச்செச்சசா ,,,,,,,,,,,,,,சீ போங்க வாசிக்க வெட்கமாய் இரிக்கு ............... :lol:  :lol::D  :icon_idea:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தமாதிரி சித்தாந்தங்களால்தான் பிரச்சினைகள் உருவாகிறது.. :rolleyes:

தகப்பன் கொலைகாரனாகவே இருந்தாலும் நீதி மன்றம் அல்லது காவல்துறை மூலமான தடைகள் இல்லாமல் வேறு எவராலும் இவ்வாறான தடைகளைப் போட முடியாது. அது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்பட வேண்டும். இவர்கள் யார் தண்டனை வழங்குவதற்கு? :huh:

இசை, தந்தையைப் பார்க்கவிடாது தண்டனை வழங்குவது சரி என்று நான் வாதிடவில்லை. மனிதர்களுக்குத் தோன்றும் வெறுப்பின் உச்சம் எதுவரை செல்லும் என்பது யாருக்கும் தெரியாது. எனக்குத் தெரிந்து ஒரு பெண் மிகவும் நல்லவள். அவளுக்கு ஒரேஒரு மகன். மகனுக்கு ஐந்து  வயதாக இருக்கும்போது அவளுக்கு புற்றுநோய் வந்துவிட்டது. ஒருவருடமாக வைத்தியசாலையும் வீடுமாக அவளும் கணவனும் சகோதரர்களும் அலைந்தார்கள். நோய் குணமாகி அவள் சாதாரணமாக வந்துவிட்டாள். அதன்பின் கணவன் ஆவலுடன் எப்போது பார்த்தாலும் சண்டை. மகனை மனைவியுடன் அதிகம் கதைக்கக் கூட விடுவதில்லை. மனைவிக்கு பாலுறவில் ஆர்வமில்லை என்று கூறி விவாகரத்துக்கும் விண்ணப்பித்துவிட்டார். தன் மகனைத் தன்னுடன் வைத்துக் கொள்ள அப்பெண் படாத பாடுபட்டார். எனக்கு அப்பாவுடன் இருக்கத்தான் விருப்பம் என மகன் கூறிவிட்டான். ஒரு வருடத்திலேயே தந்தை மறுமணம் புரிந்துவிட்டார். இன்றுவரை அப்பெண் தனிமரமாக பாடசாலை வாசலில் நின்று தன்  மகனைப் பார்ப்பதுடன் தன்  ஆசையை ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

அந்தக் கணவன் மறுமணம் செய்ததைக் கூட நான் தவறு என்று கூறவில்லை. ஆனால் ஒரு ஆறுவயதுப் பிள்ளையின் மனதை மாற்றும் அளவுக்கு ஒரு தாயைப் பற்றி அவர் என்னெல்லாம் கூறியிருந்தால் மகன் தாயிடம்  சேராது விட்டிருப்பான். அந்தப் பெண்ணுக்குக் கூடத் தெரியவில்லை என்ன கூறியிருப்பான் என. இறந்த மகனைப் பார்க்க விடவில்லை என்பது மனித உரிமை மீறல் எனில் இது மட்டும் எதற்குள் அடங்கும் இசை. இப்படி ஆண்கள் பற்றிக் கூற ஆரம்பித்தால் எவ்வளவோ இருக்கு. அதற்கே தனித்திரி திறக்கலாம்.

இந்த திரியின் ஆரம்பத்தை வாசித்தேன் அதற்கு கருத்தும் எழுதினேன்   .. :) .........இறுதியை வாசித்தேன் :D ,,,,,,,,,,,,இடையில் வாசிக்க நேரமின்மையால் இசையிடம் விளக்கம் கேட்கிறேன் ............... :icon_idea:

 உண்மையில் இந்த திரிக்கு என்ன நடந்தது ..... :rolleyes: ......இடையில் வேறு தலையங்கத்துடன் யாராவது புகுந்திட்டான்களா . :D  :D ....ஒன்னும் புரியலப்பா :lol:  :D  :icon_idea:

திரி  தன் ஆரம்பக் கருத்திலிருந்து மாறிவிட்டது என்பது உண்மைதான் தமிழ்ச்சூரியன். எனக்கே உலகில் நடக்கும் பல விடயங்கள் தெரியாமல் இருந்ததனால் என்னால் அடித்துக் கூற முடியவில்லை என்பதும் பலர் இத்திரிக்குக் கருத்திடப் பயந்ததினாலும், முக்கியமாக யாழ்கள உறுப்பினர்களை ஏன் நோகடிப்பான் என்னும் நோக்கிலும் நானும் அவர்கள் பாட்டில் விட்டுவிட்டேன். ஆனாலும் ஒரு திரியை ஆரம்பித்தவள் என்று பார்க்கும் போது தவறு என்மேல்தான்.

ஆண்கள் எத்தனை தவறுகள் செய்தாலும் அவை ஆண்களால் பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை என்பதுடன் .பெண்களும் அதை பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் பெண் செய்யும் சிறிய தவறும் மிகைப்படுத்தப் பட்டு பெரிதாக்கப்படுவது அதிகமாக உள்ளது. எமது புலப்பெயர்வும் அதற்கு முக்கிய காரணியாகக் கொள்ளலாம்.

புலம்பெயர் வாழ்வு எம்மினத்தை மாற்றிவிட்டதா என்றால் இந்நாட்டுச் சட்டங்களின் ஓட்டைகளும் பொருளாதார வளமும், சமூக பயமற்ற வாழ்வும்தான் எம்மினத்தை மாற்றிவிட்டது. பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும் முறையும், ஊடாடும் உறவுகள் நண்பர்களும் நல்லமுறையில் அமைந்தால் எல்லோர் வாழ்வும் சிறக்கும். தவறும் பட்சத்தில் இப்படியான சீர்கேடுகள் தான். அவற்றை நாம் தடுக்க முடியாவிடினும் குறைக்க அல்லது எதிர்காலச் சந்ததியிடம் பரவாமல் தடுக்க என்ன செய்யப் போகிறோம் நாம் என்பதுதான் என் கேள்வி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூத்தைப் பாருங்க.. மனைவி - கணவனின் அக்கா.. அம்மா.. சண்டை. இடையில் ஆண் சிக்கித் தவிப்பு.. இறுதியில் அவனும் குற்றவாளி.. :)

http://youtu.be/tye0O-ljQGI

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 இளம்.. பெண்கள் சமூகத்தின் கேடுகெட்ட தனத்தைப் பாருங்க...

http://youtu.be/Id6rYIlYw9Q

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் ஆரம்பத்தை வாசித்தேன் அதற்கு கருத்தும் எழுதினேன்   .. :) .........இறுதியை வாசித்தேன் :D ,,,,,,,,,,,,இடையில் வாசிக்க நேரமின்மையால் இசையிடம் விளக்கம் கேட்கிறேன் ............... :icon_idea:

 உண்மையில் இந்த திரிக்கு என்ன நடந்தது ..... :rolleyes: ......இடையில் வேறு தலையங்கத்துடன் யாராவது புகுந்திட்டான்களா . :D  :D ....ஒன்னும் புரியலப்பா :lol:  :D  :icon_idea:

இதுக்குத்தான் உங்கள மாதிரி   ஒரு ஆள் வேண்டும் என்பது????

கேள்வி  கேட்க....

புலிகளை  விமர்சிக்கின்றோம் அல்லது அவர்களது  கடந்த காலத்தை ஆராய்கின்றோம் என்று தொடங்கி  இன்று எங்கு வந்து நிற்கின்றோமோ அதேபோல் பெண்களை  விமர்சிக்கின்றோம் எனத்தொடங்கி ஒவ்வொருவருடைய  தனிப்பட்ட விடயங்களை  பொதுப்பிரச்சினையாக  பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.

தொடக்கம் எவ்வாறு தப்பானதோ முடிவும் பாதையும் தவறாகவே முடியும்........ :(

ஆமோதிக்கின்றேன்

தேசிய தலைவரும் அவரின் அமைப்பிற்கும் ஒரு கொள்கை கோட்பாடு கட்டுக்கோப்புண்டு அது வேறு.

தனித்தனிக் குடும்பங்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள சமூகம் என்பது வேறு.

ஒரு உயிர்க்கலத்தில் புற்றுநோய் வரும் என்றால் அது பல்கிப் பெருகி.. முழு உடலையும் அழிக்கும். அதுபோல் தான் தனிக்குடும்பம் ஒன்றின் கதை இன்னொரு குடும்பத்திற்கு உதாரணமாகி.. அது ஒரு சமூகத்தையே பீடையாக தொற்றிக் கொண்டால்.. அப்புறம் நீங்க என்ன பண்ணிலாலும் அதை அகற்ற முடியாது. வேணுன்னா நாலு விதமா மாற்றி எழுதி புரட்சியாளன்.. முற்போக்குவாதின்னு உங்களுக்கு நீங்களே ஒரு அங்கீகாரம் கொடுத்துக்க முடியுமே தவிர.. சமூகம் ஒட்டுமொத்தமாக.. நன்மை பெறாது..!

இன்று பெண்ணியமும் அதே நிலையை தான் கண்டுள்ளது..!

ஒரு மாற்றத்தின் நன்மை.. தீமைகள் அளவிடாத குடும்பமும் சரி.. சமூகமும் சரி அதிக காலம் நிமிர்ந்து நிற்க முடியாது. புலிகளை மீளாய்வு செய்பவர்கள் பலர் தங்கள் சுயத்தை.. குடும்பத்தை மீளாய்வு செய்வதில்லை..! அதுவேற கதை. அந்த இடத்தில் உங்களோடு உடன்படும் நான்.. ஒவ்வொரு கும்பமும் சேர்ந்ததே சமூகம் என்ற வகையில்... ஒரு குடும்பத்தில் இனங்காணப்படும் பிரச்சனையை தனி ஒரு சம்பவம் என்று தட்டிக் கழிக்க முடியாது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றே சொல்கிறேன். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் ஆரம்பத்தை வாசித்தேன் அதற்கு கருத்தும் எழுதினேன்   .. :) .........இறுதியை வாசித்தேன் :D ,,,,,,,,,,,,இடையில் வாசிக்க நேரமின்மையால் இசையிடம் விளக்கம் கேட்கிறேன் ............... :icon_idea:

 உண்மையில் இந்த திரிக்கு என்ன நடந்தது ..... :rolleyes: ......இடையில் வேறு தலையங்கத்துடன் யாராவது புகுந்திட்டான்களா . :D  :D ....ஒன்னும் புரியலப்பா :lol:  :D  :icon_idea:

இந்த விவாதம் பரிணாம வளர்ச்சி கண்டுவிட்டது தமிழ்சூரியன்.. :icon_idea:

இசை, தந்தையைப் பார்க்கவிடாது தண்டனை வழங்குவது சரி என்று நான் வாதிடவில்லை.

இந்த வரியை நீங்கள் அந்தப் பதிலில் சேர்த்திருக்க வேணும். :D அவ்வாறு இல்லாமல் போனதால் நீங்கள் அந்தக் கருத்தை ஆதரித்ததாக எடுத்துக்கொண்டுவிட்டார் வழக்கறிஞர்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளே.. இப்படி எல்லாம் பெண்கள் உலகமா.... கொடுமை சரவணா...பெண்களே பெண்களுக்கு சாபக்கேடாக...!

http://youtu.be/S5OU7WGAtOk

  • கருத்துக்கள உறவுகள்

இது வேற.... ஆண்களிலும் சில கோமாளிகள்...

http://youtu.be/iUkdvtnjLKk

ஐயோ நம்மால முடியல்ல.. இத்தோடு இத்தலைப்பில் இருந்தும்.. இந்த உலகத்தின் பெண்களினதும் ஒரு சில.. ஆண்களினதும்... மிக.. மோசமான பக்கங்களை எனியும் பார்க்க விரும்பாமல் விலகிக் கொள்கிறேன். ரெம்பக் கொடுமை. :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நெடுக்ஸ்.. உங்களை மாதிரி இரண்டொருபேர் இருக்கிறதாலதான் அப்பாவி ஆண்குலத்தின் பாதுகாப்பு ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. :D

நிற்க.. காணொளிகள் எல்லாம் நீளமா இருக்கு.. :unsure: பிறகுதான் பார்க்க வேணும்.. :blink: எல்லா காணொளிகளிலும் தாய்க்குலங்கள்தான் தெரியினம்.. :o   பயமா இருக்கு..  :(  :D

 இசை நீங்கள் நெடுக்சை அப்பாவி என்கிறீர்களா >>>>>> :lol:  :D

ஏற்கனவே திசை மாறிய திரியை வேறு கோணத்திற்கு மாற்றுகிறேன் என்று தப்பாய் நினைக்க வேண்டாம் [ எதோ என்னால் முடிந்தது ] :D  :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.