Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

மாணவர்களுக்காக... பலாலி வீதியில்... கோண்டாவில் பஸ் டிப்போ வரை போவது என, பாடசாலை நண்பர்கள் சொல்லிய ஞாபகம் உண்டு நவீனன்.

அந்த பஸ்ஸில்... உரசிக் கொண்டு வர... உரும்பிராய் பெடியளும், வருவார்களாம்.

பிற்குறிப்பு: கோண்டாவில் தாண்டித்தான்... உரும்பிராய். 808´ல் ஏற வேண்டும் என்று, வேறு பஸ் நேரடியாகப் போனாலும்... கோண்டாவிலில் ரான்ஸ்சிற் பஸ் பிடிப்பார்களாம். அப்போ... எனக்கு பஸ்சில் பள்ளிக்கூடம், போக முடியலையே... என்று, ஏக்கமாய்... இருக்கும்.

808 பாடசாலை பஸ் அல்ல தமிழ்சிறி, 808 யாழ் பஸ்நிலையத்தில் வெளிக்கிட்டு பொற்பதி வீதி ஊடாக கோண்டாவில் சந்தி வரை போனதாக தான் நினைவு.

நாங்கள் 764 பஸ் தான் எப்போதும :D ்

ஜீவா கதையை தொடரவும்

Edited by நவீனன்

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

808 பாடசாலை பஸ் அல்ல தமிழ்சிறி, 808 யாழ் பஸ்நிலையத்தில் வெளிக்கிட்டு பொற்பதி வீதி ஊடாக கோண்டாவில் சந்தி வரை போனதாக தான் நினைவு.

நாங்கள் 764 பஸ் தான் எப்போதும :D ்

ஜீவா கதையை தொடரவும்

யாழ்ப்பாணத்தை இணைப்பது.... ஐந்து முக்கிய வீதிகள்.

கண்டி வீதி - சாவகச்சேரிப் பெடியள் வருவது (அமுசடக்கியள்)

பண்ணை வீதி - படிப்பில் கவனமாயிருப்பார்கள் (தலையில் நல்லெண்ணை வழியும்)

காங்கேசன் துறை வீதி - விலாசம் காட்டுவார்கள். (அங்கை... ஒண்டும் இருக்காது)

பலாலி வீதி - காதலர் வீதி. (ஜொள்ளு விடுபவர்க்களுகானது)

பருத்துறை வீதி - இசகு, பிசகு என்றால்... பின்னிப், பெடலெடுத்து விடுவார்கள். :D  :lol:

ஜீவா கதையை தொடரவும்..................... :rolleyes:

இந்த ஐந்து வீதிகளுக்குப் பெயர் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறேன்.. :D

1) கண்டிவீதி ==> நுணா வீதி.. :icon_mrgreen:

2) பண்ணை வீதி ==> நெடுக்ஸ் வீதி :lol:

3) காங்கேசன் துறை வீதி ==> சாத்திரி அண்ணா வீதி. :icon_mrgreen:

4) பலாலி வீதி ==> தமிழ்சிறி வீதி :o

5) பருத்தித்துறை வீதி ==> ஜீவா வீதி :D

மானிப்பாய் வீதியை மறந்திட்டியள் 

காங்கேசன் துறை வீதியை, நீங்கள் ஒப்பிட்டதை நினைக்க... ****** சிரிப்பு பிச்சுக் கொண்டு வந்து விட்டது. :D  :lol:  :icon_idea:

மானிப்பாய் வீதியை மறந்திட்டியள் 

மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டைச் சந்தியில் காங்கேசன் துறை வீதியுடன் இணைகின்றது அல்லவா... விழி.

நியானி: ஒரு சொல் நீக்கம்

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 12

நாங்கள் போகும் போது மாலைக் காட்சிக்கு தியேட்டரில் கூட்டம் அலைமோதியது.

ரிக்கற் புக் பண்ண என்று சொல்லி தனிக் கவுண்டர் இருந்தது அதிலும் ஆண்கள்,பெண்களுக்கு என்று தனிய,

"நீங்கள் அத்தை கூட இருங்கோ நான் புக் பண்ணிட்டு வாறேன்."

கையில் ஐந்து ரிக்கற்றுக்களுடன் வந்தாள்.

"என்ன படத்துக்கு குட்டிமா"?

"கண்ணா லட்டு தின்ன ஆசையா.."

ஏன் சமர்,அலெக்ஸ்பாண்டியன் என்று வந்திருக்கு அதைப்பார்க்கலாமே?

குட்டிமா .. குடுக்குற காசுக்கு படம் பார்த்து சிரிச்சு,சந்தோசமா இருக்கணும், அதை விட்டு அவனவன் பறந்து பறந்து கொஞ்சம் கூட நிஜத்துக்கு பொருத்தமில்லாமல் அடிக்கிற சண்டைக் காட்சியோ இல்லை "அழுவாச்சி காவியங்களை" பார்க்கிறதுக்காகவோ காசு குடுக்கிறது வேஸ்ட் குட்டிமா.

"யாரைக் கேட்டாலும் கேள் ஃபிரண்ட்,மனைவி கூட பீச்சுக்கு போனம்,பார்க் போனம், தியேட்டர் போனம் எண்டுவாங்கள்,

தியேட்டருக்கு தனிய இரண்டு பேரும் போனால் லைட் அணைச்சால் போல ஜாலி தான் என்று சொல்லுவாங்கள் ..

முன்ன பின்ன ஆரையும் கூட்டிக்கொண்டு போயிருந்தாலாவது தெரியும், அப்படி என்ன தான் அங்கை பண்ணுறாங்கள் என்று பார்க்கலாம் என்றாள்  இவள் என்ரை ஃபீலிங்சை கொஞம் கூட புரிஞ்சுக்கிறாள் இல்லையே".!!

மொக்கை படம் என்றால் தானே நமக்கும் வசதி ..  "எனக்கு அப்பர் படம் காட்டினது போல தான் என்று நினைத்தேன்"

நான் முதன் முதல் தியேட்டரிலை பார்த்த படம் போல யாரும் பார்த்திருக்கேலாது.

அக்கா ஆக்களுக்கு தியேட்டரிலை படம் பார்க்க என்று ஆசை தீபாவளிக்கு ஒருக்கா அக்கா,மாமியோடை பவா அக்கா, அம்மா எல்லாரும் நெல்லியடி மகாத்மா தியேட்டரிலை படம் பார்க்க போனவை.."சுயம்வரம்" ஏதோ என்று தான் படம் பார்த்ததா சொல்லி ஞாபகம். அப்பா என்னிடம் தனக்கு  "துலாபாரம்" படம் தான் பிடிச்சது என்று சொல்லுவார். கனக்க தரம் வீட்டை தெரியாமல் களவாப் போய் பார்த்ததா எல்லாம் சொல்லுவார்.

எப்பவும் அவர் முணு முணுக்கிற பாட்டு

" நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன் மொழி பேசும் சிங்காரச்செல்வம்"..

எனக்கும் ஆசை தியேட்டர் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆனால் என்னை ஒரு நாள் கூட கூட்டிக்கொண்டு போனதில்லை. நான் அப்பரை நெடுக கரைச்சல் குடுத்தபடி படம் பார்க்க கூட்டிக்கொண்டு போகச் சொல்லி. ஓம்..ஓம்!!

என்று சொல்லி ஏதோ ஒரு விசேஷத்துக்கு தியேட்டருக்கு கூட்டிக்கொண்டுபோனார்.

படம் எப்ப தொடங்கும் என்று நேரம் அப்பருக்கு தெரியாது போல நாங்கள் போக படம் தொடங்கிவிட்டது அப்பர் யோசிச்சிட்டு

"மகாத்மா தியேட்டரிலை கட்டியிருந்த கட்டவுட்டைக் காட்டி இது தானப்பு படம்" என்று சொல்லிக் காட்டி கூட்டிக்கொண்டு வந்திட்டார். அப்ப சின்னப்பிள்ளை தெரியவா போகுது. கட்டவுட்டைப் பார்த்து தியேட்டரிலை படம் பார்த்தனான் என்று புழுகிக்கொண்டு திரிஞ்சது தான் மிச்சம்".

இப்பவரைக்கும் அண்ணா,அண்ணி தவிர வீட்டை யாருக்குமே தெரியாது ஊரிலை இருக்கும் போதே நான் தியேட்டருக்கு போனது.

ஏ/எல் படிக்கும் போது தான் முதன் முதல் பீக்கோன் ரியூசனுக்கு கட் அடிச்சிட்டு போய் நெல்லியடி சந்தியிலை கொடிகாமம் ரோட்டிலை இருக்கிற லக்‌ஷ்மி தியேட்டரிலை முதன் முதல் படம் பார்த்தது. அதை தியேட்டர் என்று சொன்னாலே தியேட்டருக்கு மரியாதை இல்லாமல் போயிடும், ஒரு மினி சினிமா கொட்டகை என்று தான் சொல்லவேணும்.

பார்த்த படமே ஞாபகம் இல்லை என்றால் பாருங்கோவன்.

பிறகு யாழ்ப்பாணம் போனாப்போலை தான் சனிக்கிழமையும் வகுப்பு இருக்கு என்று பொய் சொல்லிப்போட்டு ராஜா- மஜா, மனோகரா- சிவகாசி ,நாதன்ஸ்- கிரிவலம்  இப்படிக் கனக்க படம் பார்த்தது.

"ஆமா நாளைக்கு எத்தனை மணி ஸோவுக்கு ரிக்கற் எடுத்தாய்?"

9;30க்கு..

அந்த வெள்ளனக்காலையா???? ஏன் மேட்னி ஷோ இல்லை ஈவினிங் ஷோவுக்கு எடுத்திருக்கலாம் தானே?

"மற்ற படங்களுக்கு தான் எல்லா நேரமும் ரிக்கற் கிடைக்குமாம், கண்ணா லட்டு தின்ன ஆசையாவுக்கு ரிக்கற் எல்லாரும் புக் பண்ணிட்டாங்களாம் அது தான் எடுத்திட்டன்"

அந்த காலமை போறதுக்கு யாருக்கும் விருப்பம் இல்லை இரவிரவா இதே கதை தான். மத்தியானம் வர எப்படியும் ஒரு மணியாவது ஆசை லச்சி அத்தை சொல்லிட்டா நான் இறால் இல்லாட்டி மீன் வாங்கி பாட்டியட்டை குடுக்கிறேன் அவா சமைச்சு வைக்கட்டும், நீங்கள் எல்லாரும் வெளிக்கிட்டு நில்லுங்கோ நான் எட்டுமணி போல வாறேன் என்று சொல்லிட்டு அவா போட்டா.

நாங்கள்  நல்ல நித்திரை எல்லாரும் குளிச்சு முடிய 7 மணிக்கு மேலை தான் நான் எழும்பினது.

விஷாலி ஐந்து மணிக்கே எழும்பிட்டாளாம், படிக்கிறதுக்கே அந்த நேரம் எழும்புவாளோ தெரியாது.

தியேட்டருக்கு போறதுக்கு விடிய ஐந்து மணிக்கே எழும்பிய குடும்பம் என்றால் அது நாங்களாத் தான் இருப்போம்.

எட்டுமணிக்கெல்லாம் பஸ் ஸ்ராண்டிலை நிக்கிறம் என்றால் பாருங்கோவன்.

கொஞ்ச நேரம் நிக்க "ஷேர் ஆட்டோ" வந்திச்சுது .. தியேட்டருக்கு போக ஒரு காக்கா குருவி கூட இல்லை.

நாங்கள் தான் முதல். செக்குரிட்டி எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்திட்டு இருந்தான்.

அப்பத்தான் சொன்னாள் இது நடிகர் விஜய் இன் தியேட்டர் என்று. " சந்ரா மெட்ரோ மால்" என்று தகப்பன் எஸ், சந்திரசேகர் பெயரில் இருக்கு என்று சொன்னாள்.

ஒன்பது மணி அப்படித்தான் தியேட்டர் திறந்தாங்கள். உள்ளை போனால் எல்லாருக்கும் metal detector ஆல் உடல் சோதனை செய்து போட்டுத்தான் விட்டார்கள்.

இருக்கைகள், ஒலியமைப்பு எல்லாம்  திறம்.

ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தும் போது, பவர்ஸ்டார் வந்த காட்சிகளில் சிரிப்பொலி அமர்க்களப்படுத்தியது.

காலைக் காட்சிகள் என்றதாலை அனேகம் பேர் குடும்பமாய் வந்ததால் விசிலடிப்புகள் வலு குறைவு.

"எனக்கு படம் பிடிச்சிருந்தாலும், தியேட்டருக்கு கேள் ஃபிரண்ட்ஸோடை வாறவங்கள் என்ன தான் அப்படிச் செய்யுறாங்கள் என்று பார்ப்பதிலையே நேரம் போட்டுது. அப்ப தானே பிற்காலத்துக்கு உதவும்.

நானும் ஏதாச்சும் கை,காலுக்கு உழைவெடுக்கலாம் என்று பார்த்தால் இவளும் விஷாலியும் சேர்ந்து கை தட்டி,விழுந்து விழுந்து சிரிக்கிறாளுங்க " பக்கத்திலை ஒருத்தன் அப்பாவியா இருக்கிறான் என்றதையே மறந்து"..

ஒரு விதத்திலை எனக்கு கடுப்பா இருந்தாலும் இன்னொரு விதத்திலை சந்தோசம் தான். இதுக்கு முதல் அவள் அப்படிச் சிரிச்சுப் பார்த்ததில்லை அந்த வகையிலை கண்ணா லட்டு தின்ன ஆசையா - கலகல்.

"வீட்டை வந்து கொஞ்ச நேரம் இருந்திட்டு அப்படியே பாட்டி வீட்டை போய் சாப்பிட்டிட்டு பாட்டிக்கும் நாளைக்கு திரும்ப பயண்ம் போறேன் என்று சொல்லி விட்டு வீட்டை நோக்கி நடக்கிறோம்,  பயண ஆயத்தம் செய்ய..

தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐந்து வீதிகளுக்குப் பெயர் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறேன்.. :D

1) கண்டிவீதி ==> நுணா வீதி.. :icon_mrgreen:

2) பண்ணை வீதி ==> நெடுக்ஸ் வீதி :lol:

3) காங்கேசன் துறை வீதி ==> சாத்திரி அண்ணா வீதி. :icon_mrgreen:

4) பலாலி வீதி ==> தமிழ்சிறி வீதி :o

5) பருத்தித்துறை வீதி ==> ஜீவா வீதி :D

எங்களிற்கென தனி வீதி உள்ளது யாழ்   மானிப்பாய்  வீதியாக்கும். யாழ்.மாதகல்.  யாழ்  காரைநகர். யாழ் சில்லாலை  யாழ்.கீரிமலை ..இந்த  பகுதி பேரூந்து  எல்லாம் நம்ம ஊரை தாண்டித்தான் போகுமாக்கும். இசைக்கு ஞாபக மறதி வந்திட்டுபோலை  கூகிழிலை போட்டு பாக்கவும். :lol: :lol: நம்ம வழி எப்பவும்  தனி வழி :icon_mrgreen:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

"மகாத்மா தியேட்டரிலை கட்டியிருந்த கட்டவுட்டைக் காட்டி இது தானப்பு படம்" என்று சொல்லிக் காட்டி கூட்டிக்கொண்டு வந்திட்டார். அப்ப சின்னப்பிள்ளை தெரியவா போகுது. கட்டவுட்டைப் பார்த்து தியேட்டரிலை படம் பார்த்தனான் என்று புழுகிக்கொண்டு திரிஞ்சது தான் மிச்சம்". :lol:  :lol:  :D 

சாத்திரி அண்ணா.. தவறு தமிழ்சிறியின்மேல்தான்.. பிரபலமான மானிப்பாய் வீதியை மறந்துவிட்டார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா.. தவறு தமிழ்சிறியின்மேல்தான்.. பிரபலமான மானிப்பாய் வீதியை மறந்துவிட்டார்.. :D

எல்லாத்தையும் விட முக்கியமானதொண்டை விட்டிட்டன்.  அன்றைய காலத்தில் யாழ் தெல்லிப்பழை  வீதி .துர்க்கையம்மன் கோயிலுக்காக ஒவ்வொரு  செவ்வாயும்  சிறப்பு  பேருந்து  விடுவார்கள்.  பஸ்சிற்கு முன்னால் வாழை தோரணம் எல்லாம் கட்டி  தனிய பெண்கள் மட்டும்தான் உள்ளை . பின்னாலை  சைக்கிள்களில்   வேறையார்  நாங்கள்தான்.  அளவெட்டி பகுதிகளில் அந்த பஸ்சிற்கு ஆராத்தி எல்லாம் எடுப்பார்கள். தொடர்ந்து ஏழு செய்வாய்  அந்த பஸ்சிலை துர்க்கையம்மன் கொயிலுக்கு போகிற பெண்களிற்கு   பின்னாலை போற  பெடியளோடை எப்படியாவது காதலாகி  கசிந்து கண்ணீர் மல்கி  துர்க்கையம்மன் கோயிலையே கலியாணமும் நடந்திடும்.  ஆனா நான் ஒரு எழுபது கிழையைமாவது  துர்க்கையம்மன் கோயிலுக்கு  அந்த பஸ்சிற்கு பின்னாலை சைக்கிளை மிதிச்சிருப்பன்.  ஒண்டும் மாட்டுப் படேல்லை  ஒரு நாள்  ஒரு கை மட்டும் யன்னால்  என்னை நோக்கி நீள  வேகமாக  மித்தபடி கையை  நெருங்கியபோது  ஒரு செவ்வரத்தை பூவோடு  ஒரு துண்டு கடிதம். எட்டிப் பிடித்து  கடிதத்தை படித்தேன்   பூவை காதில் வைத்துக்கொள் . இனியும் பின்னால் வராதே என்றுஎழுதியிருந்தது.  பிறகென்ன அந்த அனியாயம்  தாங்கமலேயே  துர்கையம்மனும் தன்னுடைய  பகுதியை  உயர் பாது காப்பு வலயம் ஆக்கி விட்டிருந்தார்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிற்கென தனி வீதி உள்ளது யாழ்   மானிப்பாய்  வீதியாக்கும். யாழ்.மாதகல்.  யாழ்  காரைநகர். யாழ் சில்லாலை  யாழ்.கீரிமலை ..இந்த  பகுதி பேரூந்து  எல்லாம் நம்ம ஊரை தாண்டித்தான் போகுமாக்கும். இசைக்கு ஞாபக மறதி வந்திட்டுபோலை  கூகிழிலை போட்டு பாக்கவும். :lol: :lol: நம்ம வழி எப்பவும்  தனி வழி :icon_mrgreen:

உங்களுடன் உடன் படுகின்றேன், சாத்திரியார்.

'தாவடி, மானிப்பாய், சில்லாலை ஏறுங்கோ' எண்டு தான் உங்கட பஸ்ஸின்ர நடத்துனர் அந்த நாளையில கத்திறவர்!  

கொஞ்சம் வயசு போனதுகள், சில்லுக்குக் கிட்டவுள்ள கதவாலை தான் ஏறுறது! :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐந்து வீதிகளுக்குப் பெயர் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறேன்.. :D

1) கண்டிவீதி ==> நுணா வீதி.. :icon_mrgreen:

2) பண்ணை வீதி ==> நெடுக்ஸ் வீதி :lol:

3) காங்கேசன் துறை வீதி ==> சாத்திரி அண்ணா வீதி. :icon_mrgreen:

4) பலாலி வீதி ==> தமிழ்சிறி வீதி :o

5) பருத்தித்துறை வீதி ==> ஜீவா வீதி :D

தமிழ் சிறியின் நடமாட்டம் அவதானிக்கப் பட்ட இடங்கள்.

நாவலர் வீதி 

அரசடி வீதி 

றக்கா ரோட்டு

கே கே எஸ் வீதி

கஸ்தூரியார் வீதி.

கைலாச பிள்ளையார் கோவிலடி.

இந்த ஏரியா, இந்து மகளிர் கல்லூரி, நல்லூர்க் கோவில்,போன்ற முக்கியமான இடங்களைக் கவர் பண்ணியது.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... மன்னிக்கவும், எனது மண்டையிலுள்ள விக்கிப் பீடியாவில், சிறிது தவறு நடந்து விட்டது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிற்கென தனி வீதி உள்ளது யாழ்   மானிப்பாய்  வீதியாக்கும். யாழ்.மாதகல்.  யாழ்  காரைநகர். யாழ் சில்லாலை  யாழ்.கீரிமலை ..இந்த  பகுதி பேரூந்து  எல்லாம் நம்ம ஊரை தாண்டித்தான் போகுமாக்கும். இசைக்கு ஞாபக மறதி வந்திட்டுபோலை  கூகிழிலை போட்டு பாக்கவும். :lol: :lol: நம்ம வழி எப்பவும்  தனி வழி :icon_mrgreen:

ஏன்.... மானிப்பாய் வீதியால் கீரிமலைக்கு போகவேணும்..... சாத்திரியார். :D

51423-Royalty-Free-RF-Clipart-Illustrati

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீதியை தொடரவும்............ :D

தொடருகிறேன் அக்கா,

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவின், கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்.

கதையை... தொய்ய விட்டால், சுவராசியம் போயிடும் ஜீவா. :icon_idea:

நன்றி சிறியண்ணா உங்கள் கருத்துக்கு ..

அதுக்காக தான் நேற்று உங்கள் ஆர்வத்தைப் பார்த்ததும் எழுதி முடிச்சிட்டேன்.

வார இறுதியில் கொஞ்சம் வேலை கூட அது தான் அண்ணா,

விரவில் முடித்து விடுகிறேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, அர்ஜுன் சொன்ன பஸ் இலக்கம் 808 யாழ் பஸ்நிலையத்தில் வெளிக்கிட்டு கோண்டாவில் வரை போவது.

மன்னிக்கவும்,

நான் தமிழ்நாட்டில் ஏதும் பஸ் இலக்கத்தை சொல்லுறாரோ என்று நினைச்சிட்டன். :rolleyes:

அடுத்தநாளே மீண்டும் ஜேர்மன் திரும்பவுள்ளீர்கள் என்றதும் கவலையாக உள்ளது. மற்றவர்கள் சொன்னது போல் பிரியா அக்காவுடன் தனிமையாக நேரத்தை செலவிட உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. :( :(

விஷாலி ஐந்து மணிக்கே எழும்பிட்டாளாம், படிக்கிறதுக்கே அந்த நேரம் எழும்புவாளோ தெரியாது.

தியேட்டருக்கு போறதுக்கு விடிய ஐந்து மணிக்கே எழும்பிய குடும்பம் என்றால் அது நாங்களாத் தான் இருப்போம்.

எட்டுமணிக்கெல்லாம் பஸ் ஸ்ராண்டிலை நிக்கிறம் என்றால் பாருங்கோவன்.

கொஞ்ச நேரம் நிக்க "ஷேர் ஆட்டோ" வந்திச்சுது .. தியேட்டருக்கு போக ஒரு காக்கா குருவி கூட இல்லை.

நாங்கள் தான் முதல். செக்குரிட்டி எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்திட்டு இருந்தான்.

அப்பத்தான் சொன்னாள் இது நடிகர் விஜய் இன் தியேட்டர் என்று. " சந்ரா மெட்ரோ மால்" என்று தகப்பன் எஸ், சந்திரசேகர் பெயரில் இருக்கு என்று சொன்னாள்.

:lol: :lol:

"எனக்கு படம் பிடிச்சிருந்தாலும், தியேட்டருக்கு கேள் ஃபிரண்ட்ஸோடை வாறவங்கள் என்ன தான் அப்படிச் செய்யுறாங்கள் என்று பார்ப்பதிலையே நேரம் போட்டுது. அப்ப தானே பிற்காலத்துக்கு உதவும்.

:o :o

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தநாளே மீண்டும் ஜேர்மன் திரும்பவுள்ளீர்கள் என்றதும் கவலையாக உள்ளது. மற்றவர்கள் சொன்னது போல் பிரியா அக்காவுடன் தனிமையாக நேரத்தை செலவிட உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. :( :(

இவரு சொல்லிட்டாரு.. நீங்களும் நம்பிட்டீங்க.. :D:icon_mrgreen:

இவரு சொல்லிட்டாரு.. நீங்களும் நம்பிட்டீங்க.. :D:icon_mrgreen:

:icon_mrgreen: :icon_mrgreen:

அண்ணா,

ஜீவா அண்ணா கூறிய பல விடயங்களை பார்க்கும் போது இந்தியாவில் நின்ற காலப்பகுதியில் மிக நீண்ட நேரத்தை சூழவும் வேறு நபர்களுடன் (கூட்டுக்குடும்பமாக) தான் கழித்திருக்கிறார். அப்படியே இடைக்கிட இவர்கள் இருவர் மட்டும் தனிமையில் நேரம் செலவழிக்க முடிந்திருந்தாலும் அது எவ்வளவு கொஞ்ச நேரம் என்பதை ஓரளவு ஊகிக்க முடியும். :) ஜேர்மனிலிருந்து பிரியா அக்காவை சந்திக்க சென்றவருக்கு இது போதுமா? எப்படியோ ஏமாற்றம் தான். :rolleyes:  (அவர் அவ்வாறு கருதினாலும் கருதாவிட்டாலும்...)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நல்லாத்தான் இருக்கு.. :D

ஆரோ நாற்சந்தியில யீவாவுக்கு கேணத்தனமான ஐடியா குடுத்தமாதிரி இருந்திச்சே :lol: :lol: :icon_mrgreen::D

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ நாற்சந்தியில யீவாவுக்கு கேணத்தனமான ஐடியா குடுத்தமாதிரி இருந்திச்சே :lol: :lol: :icon_mrgreen::D

ஐடியா கொடுத்தால் அதை அப்படியே ஏற்க வேண்டுமென்பதில்லையே.. :D ஜீவா சரி, பிழைகளை ஆராய்ந்து தனக்கான முடிவை எடுத்துக் கொண்டார்.. :D அவ்வகையில் அவரது சுயமான செயற்பாட்டை மதிக்கிறேன்.. :wub:

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மகாத்மா தியேட்டரிலை கட்டியிருந்த கட்டவுட்டைக் காட்டி இது தானப்பு படம்" என்று சொல்லிக் காட்டி கூட்டிக்கொண்டு வந்திட்டார். அப்ப சின்னப்பிள்ளை தெரியவா போகுது. கட்டவுட்டைப் பார்த்து தியேட்டரிலை படம் பார்த்தனான் என்று புழுகிக்கொண்டு திரிஞ்சது தான் மிச்சம்". :lol:  :lol:  :D 

:D :D

என்னுடைய இளமைக் காலத்திலை இப்படி  ஊருப்பட்டதுகள் நடந்திருக்கு சொல்ல வேணும் என்றால் ஒரு யாழ் போதாது ... :rolleyes::lol::icon_idea:

நன்றி உங்கள் வரவிற்கும், கருத்த்உ பகிர்விற்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தநாளே மீண்டும் ஜேர்மன் திரும்பவுள்ளீர்கள் என்றதும் கவலையாக உள்ளது. மற்றவர்கள் சொன்னது போல் பிரியா அக்காவுடன் தனிமையாக நேரத்தை செலவிட உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. :( :(

இடையிலை ஒருநாள் இருந்தது தான் ஆனால் எங்கும் வெளியில் போகததாலும், அவை எழுத்தில் வடிக்க முடியாதவை என்பதாலும் எழுதவில்லை சிஸ்டர்... :rolleyes::icon_idea:

:lol: :lol:

:o :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரு சொல்லிட்டாரு.. நீங்களும் நம்பிட்டீங்க.. :D:icon_mrgreen:

மாம்ஸ் ..... ஒரு முடிவோடை தான் இருக்கிறியள் போல .. :lol::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.