Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் இதற்கு முதலில் எழுதி அழித்தனான், என்ன சொல்வது அல்லது நான் நினைப்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தோம் இந்தியாவில் தற்போது விடுமுறைக்கு கோயிலில் இருந்து வரும் போது பஸ்ஸில் தான் வந்தோம். நானும் அவளும் கடைசி சீட்டில் இருந்தோம் அத்தை,சித்தி,விஷாலி பக்கத்திலை

இருந்தாங்க ..

ப்ரியா சொன்னாள்.."எனக்கு அந்த பொம்பிளையை பிடிக்கவே இல்லை" !

யாரை? ஏன்??

"நீயே பாரு.."

பஸ்ஸில் நல்ல நெரிசல் 45 - 50 வயது மதிக்கத்தக்க மனுசன் ... உங்கள் கதையில் வரும் சம்பவம். நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்கள்.

"அவளுக்கு தெரிஞ்சும் விலத்தாமல் இருக்கிறாளே" என்றாள் பிரியா..

உண்மையில் கோவம் வந்தாலும், அந்த நொடி ஆணாக இருந்து அதைப் பார்க்கும் போது வந்த கோவம்..

"இவங்களை எல்லாம் என்ன செய்ய"

விடுங்கோ அவளே பேசாமல் இருக்கிறாள்.

.............. முடிவு உங்களிடமே .....

உண்மையில் இதையும் அந்த அனுபவப் பகிர்வில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால், இதை எப்படி என்று எழுத தவிர்த்திருந்தேன்.

  • Replies 60
  • Views 9.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    அதே..   அழுக்கை அடக்கி மறைக்கிறவன் நல்லவன் எனப்படுவான்..

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

    குழப்பம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் ரதி? கதையின் முடிவை உங்களால் அடையாளம் காண முடியவில்லையா.... உங்களுக்குத் தோன்றுவதை எழுதினால்தான் என்னால் விளக்கம் கொடுக்கமுடியும் ரதி. வழமையான எழு

  • தப்பிலி
    தப்பிலி

    உங்களிட்ட கடிவாங்காம பாம்பு எப்படி தப்பிச்சுது?

கையாளப்பட்டது ஒட்டாமல் நிற்குதா :o:blink:

ஓம்... நான் இதை எழுதியிருந்தால் அந்த இடத்தில் மார்பு என்ற சொல்லையே பயன்படுத்தியிருப்பேன். எம் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் எழுத்து வழக்கில் இருப்பதுதானே. ஒரு பெண்ணாக நீங்கள் அந்தச் சொல்லை சொல்வதில் சங்கடங்கள் ஏன் என்றுதான் புரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  :o:huh:

அனுபவிச்சு எழுதினதை நீங்கள் அனுபவிச்சு வாசிச்சீங்களா? :icon_mrgreen:

ஒருவேளை இவரும் முயல் பிடிச்சிருப்பாரோ? :unsure::blink:

நான் வெள்ளைவேட்டி கட்டின கள்ளன் இல்லை......சுத்த பிராமணியள் மாதிரி என்னாலை பந்தாவும் காட்டத்தெரியாது. நல்லதுகெட்டது மனிசருக்கு தெரியோணுமெண்டால்.....ஒவ்வொருமனிசனும் உண்மை கதைக்க வேணும்....அப்பதான் சமுதாயங்கள் உருப்படும். :icon_idea:

உங்கள் துணிவை பாராட்டனும். நன்றி பகிர்வுக்கு. ஊசி வைத்திருக்கனும் எப்பவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இதற்கு முதலில் எழுதி அழித்தனான், என்ன சொல்வது அல்லது நான் நினைப்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை நேரில் பார்த்தோம் இந்தியாவில் தற்போது விடுமுறைக்கு கோயிலில் இருந்து வரும் போது பஸ்ஸில் தான் வந்தோம். நானும் அவளும் கடைசி சீட்டில் இருந்தோம் அத்தை,சித்தி,விஷாலி பக்கத்திலை

இருந்தாங்க ..

ப்ரியா சொன்னாள்.."எனக்கு அந்த பொம்பிளையை பிடிக்கவே இல்லை" !

யாரை? ஏன்??

"நீயே பாரு.."

பஸ்ஸில் நல்ல நெரிசல் 45 - 50 வயது மதிக்கத்தக்க மனுசன் ... உங்கள் கதையில் வரும் சம்பவம். நீங்களே கற்பனை பண்ணிப்பாருங்கள்.

"அவளுக்கு தெரிஞ்சும் விலத்தாமல் இருக்கிறாளே" என்றாள் பிரியா..

உண்மையில் கோவம் வந்தாலும், அந்த நொடி ஆணாக இருந்து அதைப் பார்க்கும் போது வந்த கோவம்..

"இவங்களை எல்லாம் என்ன செய்ய"

விடுங்கோ அவளே பேசாமல் இருக்கிறாள்.

.............. முடிவு உங்களிடமே .....

உண்மையில் இதையும் அந்த அனுபவப் பகிர்வில் எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு ஆனால், இதை எப்படி என்று எழுத தவிர்த்திருந்தேன்.

ஆரம்பத்தில் முழுசிப்போட்டு போனபோதே உணர்ந்தேன் நீங்கள் ஏதோ எழுத நினைத்து முடியாமல் போகிறீர்கள் என்று. இருந்தாலும் நம்ம கூட்டுவாசிகளின் கருத்துப்பதிவுகள் உங்களையும் மனந்திற்ந்து எழுத வைத்திருக்கிறது.

விபச்சாரம் மலிந்த இந்தியாவில் இப்படியான சம்பவங்கள் அதிகந்தானே... நீங்கள் பார்த்த அவர்கள் அப்படியான மனிதர்களாகக் கூட இருக்கலாம். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்... நான் இதை எழுதியிருந்தால் அந்த இடத்தில் மார்பு என்ற சொல்லையே பயன்படுத்தியிருப்பேன். எம் பேச்சு வழக்கில் இல்லாவிடினும் எழுத்து வழக்கில் இருப்பதுதானே. ஒரு பெண்ணாக நீங்கள் அந்தச் சொல்லை சொல்வதில் சங்கடங்கள் ஏன் என்றுதான் புரியவில்லை.

நிழலி அதிகமாக வேலைசெய்யும் இடத்தில் இப்படி இடக்கு முடக்காகவே அதிக பாவனையில் இல்லாத சொற்களைக் கொண்டு பகிடிகள் விடுவதால் அதுவே அதிக பரிச்சயம் ஆகிவிட்டது. மற்றப்படி சங்கடங்கள் ஏதுமில்லை

நான் வெள்ளைவேட்டி கட்டின கள்ளன் இல்லை......சுத்த பிராமணியள் மாதிரி என்னாலை பந்தாவும் காட்டத்தெரியாது. நல்லதுகெட்டது மனிசருக்கு தெரியோணுமெண்டால்.....ஒவ்வொருமனிசனும் உண்மை கதைக்க வேணும்....அப்பதான் சமுதாயங்கள் உருப்படும். :icon_idea:

கு.சா அண்ணை இப்பிடி வெள்ளாந்தியா இருக்கீங்களே!!!! :rolleyes:

உங்கள் துணிவை பாராட்டனும். நன்றி பகிர்வுக்கு. ஊசி வைத்திருக்கனும் எப்பவும்

எதற்கு என்னுடைய துணிவைப்பாராட்டணும் என்று எழுதியுள்ளீர்கள்? :unsure:

இப்படி ஒரு சிறுகதையை எழுதியதற்கா? :rolleyes:

இதற்கெல்லாம் என்னைப்பாராட்டவேண்டாம் அப்படியெல்லாம் பாராட்டுச் சொல்லவேண்டும் என்றால் எனக்கு இப்படியொரு கருப்பொருளில் கதை எழுதத் தூண்டிய என்னுடைய வேலையிடத்து இம்சை அரசிகளுக்குத்தான் சொல்ல வேண்டும் வந்தியத்தேவன்

தனத்தை... தொட்ட, அல்ப திருப்தியோடை.. பாம்பு தப்பி ஓடியிருக்கலாம்.

கடைசியாய்... சிலாகையால், அடிவாங்கிச் சாகப் போகுது பாம்பு.

திரத்தி, திரத்தி கொத்த வருவதைப் பார்க்க... கொம்பேறி மொக்கன் பாம்பு போலை இருக்குது.

இருக்கலாம் தமிழ்சிறீ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கு.சா அண்ணை இப்பிடி வெள்ளாந்தியா இருக்கீங்களே!!!! :rolleyes:

போலி வாழ்க்கை வாழவேண்டுமா???? :)

கவிதைகளை எழுதிவந்த உங்களிடம் கவித்துவமான கதைகளையும் எழுத முடியும் என்று காட்டி நிற்கின்ற ஒரு படைப்பு சகாறா அக்கா. 

கருப்பொருள், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நேரடியாக தாக்குவது போல அமைந்தாலும், அதில் தவறிழைத்தவன் தண்டிக்கபடவேண்டியவனே என்பதில் மாற்று கருத்து இல்லை. இருந்தாலும் உங்கள் முற் குறிப்பு போலவே, பிற் குறிப்பில் மற்றைய பாலினம் விடும் தவறுகளையும் சுட்டிகாட்டினால் பாலின நடுநிலைமை இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

ஜீவா எழுதிய கருத்திற்கு நீங்கள் பதிலிடும்போது, அவ்வாறு தவறிழைக்கும் பாலினத்தை, காசுக்காக உடலையும் உணர்வுகளையும் விற்பவர்களுடன் ஒப்பிட்டு நியாயபடுத்துவதை அவதானித்தேன். உங்கள் கதையில் தவறிழைப்பவனும் அந்த பாலினத்தில் அந்த வகைக்குள் உட்படுத்தலாம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பான்.. சிலாகையால அடி வாங்கியவன் இயல்பில் நல்லவனாகவும் இருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பான்.. சிலாகையால அடி வாங்கியவன் இயல்பில் நல்லவனாகவும் இருக்கலாம்!

அதே..

அழுக்கை அடக்கி மறைக்கிறவன் நல்லவன் எனப்படுவான்.. :D

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகளை எழுதிவந்த உங்களிடம் கவித்துவமான கதைகளையும் எழுத முடியும் என்று காட்டி நிற்கின்ற ஒரு படைப்பு சகாறா அக்கா. 

கருப்பொருள், ஒரு குறிப்பிட்ட பாலினத்தை நேரடியாக தாக்குவது போல அமைந்தாலும், அதில் தவறிழைத்தவன் தண்டிக்கபடவேண்டியவனே என்பதில் மாற்று கருத்து இல்லை. இருந்தாலும் உங்கள் முற் குறிப்பு போலவே, பிற் குறிப்பில் மற்றைய பாலினம் விடும் தவறுகளையும் சுட்டிகாட்டினால் பாலின நடுநிலைமை இருந்திருக்கும் என்பது எனது கருத்து.

ஜீவா எழுதிய கருத்திற்கு நீங்கள் பதிலிடும்போது, அவ்வாறு தவறிழைக்கும் பாலினத்தை, காசுக்காக உடலையும் உணர்வுகளையும் விற்பவர்களுடன் ஒப்பிட்டு நியாயபடுத்துவதை அவதானித்தேன். உங்கள் கதையில் தவறிழைப்பவனும் அந்த பாலினத்தில் அந்த வகைக்குள் உட்படுத்தலாம் அல்லவா.

நன்றி பகலவன் உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்

பகலவன் ஒரு சிறுகதை ஒரு கருப்பொருளைச்சுமந்து வரும்போது அந்தக்கதையின் வடிவம் வெற்றிபெறும். ஒரே விடயத்தை இரண்டு பாலினங்களுக்குள் சம அளவில் எழுத விளையும்போது கதையின் வடிவம் கட்டுரைத்தனத்தை கொண்டதாக மாறக்கூடியதாக அமைந்துவிடும். அப்படியும் எழுதலாம் அதற்கு மிகவும் கைதேர்ந்த எழுத்தாளர்களாக இருக்கவேண்டும். அத்தோடு எழுதப்படும் விடயம் கதையின் இயல்புநிலையைத் தாண்டி ஒட்டாத்தன்மையை வெளிப்படுத்திவிடக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் எழுதலாம். அதேநேரம் எதிர்பாலினத்திலும் இத்தகைய விடயங்கள் இல்லாமல் இல்லை. எனக்குத் தெரிந்தவரை பல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைக்கதை வடிவில் எழுத விருப்பம்தான். காலம் கைகொடுக்கும்போது நிச்சயமாக பரவலாக எழுதுவேன். :wub:

ஆணும் பெண்ணும் உடன்பட்டு உரசல்களை மேற்கொள்ளும்போது அது சமூக ஒழுக்கத்திற்கு மாறானதாக இருந்தால் அது விபச்சாரம் என்ற வரைவுக்குள்தான் அடங்கும். அதுவே ஒரு பாலினத்தின்மேல் மற்றப்பாலினம் காவாலித்தனமாக கட்டவிழ்த்துவிடும் தொடுகைகள் என்றால் தண்டனைக்குரியனவே. அங்கு அந்த கயமையை மேற்கொள்பவரிடம் காணப்படுவது விபச்சாரத்தன்மையைக் காட்டிலும் எதிர்பாலினத்திடம் காட்டும் அதிகாரமும், அலட்சியமும், சகமனிதர் அனுமதியின்றி அவர்மீதான அத்துமீறிய செயல்கள் மூலம் சுயஇன்பம்  நுகரும் திருட்டுத்தனமும் ஆகும். ஒருவர் அனுமதியின்றி எதிர்பாலினத்தார் பாலியல் சார்ந்த தொடுகைகளை மேற்கொள்வதை விபச்சாரம் என்ற பதத்திற்குள் உட்படுத்த முடியாது. பகலவன் உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. :rolleyes:

Edited by வல்வை சகாறா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.