Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடத்தை கெட்டவளா? இப்படி சொல்லீட்டா எப்படிங்க....

Featured Replies

வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள்.
 
கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. 
 
தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவது இயல்பாகிறது. ஒரு பெண் அப்படி நடப்பது சரி என்று நான் வாதாடவில்லை. தவறு தவறு தான். ஆனால் அந்த நிலைமைக்குப் பெண்ணை இட்டுச் செல்வது யார்? 
 
ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவள் கணவன்தான். கணவன் முதலில் தன்னுடைய நடத்தை, அவளோடு கொண்டிருக்கும் உறவு என்பனவற்றில் சரியாக இருக்குமிடத்து, அவனது மனைவி தவறான பாதையில் போனால். அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும், தன் குடும்பத்துக்குள்ளேயே உணர்வு ரீதியாக தனித்து விடப்படும் பெண்களின் நிலை என்ன?
 
பெண் மென்மையானவள் என்றும், இளகிய மனம் படைத்தவள் என்றும் கூறும் இந்த சமூகம், அதே காரணங்களை  தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஆணை விட்டு விட்டு.. பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்ப்புக் கூறி விடுகிறது...
 
இயல்பிலேயே மெல்லிய மனம் படைத்த பெண்களே மேலும் மேலும் பாதிக்கப்படுகிறார்கள். ......
 
அன்று விஜய் தொலைக்காட்சியின் ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் பார்த்த போது அந்த பெண்ணின் அப்பாவித்தனமும் அறியாமையும் என் மனதைத் தைத்தது. போலீஸ் ஸ்டேசனில் பலர் முன்னிலையில் வைத்து நடத்தை கெட்டவள் என்று சொன்னார்களே என்று பரிதவிக்கிற அவள், தொலைகாட்சி வரை வந்து, அதைப் பார்க்கும் கோடிக் கணக்கான தமிழர்களிடையே தன்னை நடத்தை கெட்டவள் என்ற பார்வையை தோற்றுவித்து சென்ற அவளின் அறியாமையை என்னவென்று சொல்வது... அந்தப் பெண்ணைப் பார்த்து நடுவர் (நிர்மலா பெரியசாமி அவர்கள்) “அது உண்மை தானே..” என்று திரும்ப திரும்ப கேட்ட போது... அவள் அந்த சங்கடத்திலிருந்து தப்புவதற்குக் காட்டிய அவசர உணர்வின் வெளிப்பாடு...அப்பப்பா... கொடுமைங்க...  நடுவர் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது... அதைவிட தன் (பொருந்தா) காதலன் திருமணம் செய்து மனைவியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் போது அவன் எனக்கு வேண்டும் என்று குழந்தை போல் அடம்பிடிக்கும் செயல்.. பரிதாபம்... என் மாமா தான் வேண்டும் என்ற இன்னொரு இளம் பெண்ணின் கதறல்... ஆனால் இத்தனைக்கும் காரணமான அந்த இரண்டு ஆண்களுக்கும் (அவள் கணவன், காதலன்) என்ன பாதிப்பு.. அவர்களுக்கு இது இடையில் ஏற்பட்ட சிறு குழப்பமே.. பின்னர் ஜாலியான இன்னொரு திருமண வாழ்க்கை... என்னங்க இது... இதை கேட்க யாருமே இல்லியா?
 
இந்த சமூகத்தில் நடத்தை கெட்டவன் என்று முத்திரை குத்தப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அது எப்படீங்க? ஒரு பெண் தனியாகவே விபச்சாரம் பண்ண முடியுமா? நாம் எப்போதுமே வில்லை விட்டுட்டு அம்பை நோகும் சமுதாயமாகவே இருக்கிறோமே...
 
இந்தத் தருணத்தில், சில நாட்களாக உலகத் தமிழினத்தை சற்று துடிக்க வைத்த ஈழத்து வித்தியா ராணியின் பேட்டி ஞாபகத்துக்கு வருகிறது... இதைக் கேட்ட என் நண்பன் ஒருவர்... “சிங்களவங்களை எல்லாம் வெட்டிக் கடலில் எறிந்தால் தான் என் மனம் ஆறும் என்று மீசை துடிக்க கர்ச்சித்தார்... அவரைப் போல உணர்ச்சியின் விழிம்பில் நிற்கும் என் அருமைத் தமிழ் சகோதரர்களுக்கும்,  இதை ஒரு அரசியல் பரப்புரைக்காக யாரேனும் பயன்படுத்த நினைத்தால் அவர்களுக்கும் என் நண்பருக்கு கூறிய என் கருத்தையே...கூற விரும்புகிறேன்.
 
இந்தக் கதை ஒரு வேளை உண்மையானால், வித்தியா ராணி என்ற பெண் விபச்சாரியாவதற்கு சிங்களவன் தானா முதல் காரணம்? அவளைத் தெரிந்தவர்கள் (தமிழர்) அவளை ஆதரிக்கவில்லை.. தொழில் கொடுக்கவில்லை... பயந்தார்களாம்.. இதை வித்யாராணியே தன் பேட்டியில் குறிப்பிடுகிறாள். சரி இதற்குப் பின் அவளை அந்தத் தொழிலுக்கு அழைத்தது யார்? (இங்கே அவளைக் கற்பழித்ததாகக் கூறப்படும் மிருகங்களை அல்ல.. இறுதியில் அவள் உடலுக்கு விலைபேசிய மிருகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்... ) அவனும் ஒரு தமிழன் தான்.. இதில் வேடிக்கை என்னவென்றால்.. உணவு கொடுக்கப் பயந்தார்கள்... தொழில் கொடுக்கப் பயந்தார்கள்.. அவளோடு சயனிக்க மட்டும் பயப்படவில்லையா...? யாரை கேட்பது?
 
தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதி இப்போது யாழ் மண்ணில் இருந்திருந்தால் வித்யாராணி விலை போயிருக்க முடியாது... ஆனாலும் இந்தப் பேட்டி கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது... இத்தகைய அவலம் ஈழ மண்ணில் நடக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது எனினும்... ஒரு ஒழுக்கம் கட்டுப்பாட்டுடன் நெருப்பாகி நிமிர்ந்த ஒரு போராளியினால் இதை ஒரு தொழிலாக செய்ய முடியுமா?... என என் மனம் திரும்பத் திரும்ப ஓலமிடுகிறது.... இவர்களை எல்லாம் இத்தகைய வழிகளில் தெரிந்தோ தெரியாமலோ தள்ளிவிட்டுவிட்டு அவர்களை நடத்தை கெட்டவர்கள் என்று முடிசூட்டுதல் வேறு....
 
சில கணவர்கள் சொல்வார்கள்.. நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன்... அவள் கேட்டதெல்லாம் வேண்டிக் கொடுத்தேனே... நகைகள் எல்லாம் கொடுத்தேனே... பட்டுச்சேலை வாங்கிகி கொடுத்தேனே.. கணவர்களே உங்கள் மனைவி மாற்றனிடம் உடுபுடவையும் நகையுமா கேட்டுப் போகிறாள்.. நீங்கள் கொடுக்கத் தவறியதைத் தானே தேடிப் போகிறாள்.. எனவே இத்தகைய சப்புக்கட்டலை விட்டு விட்டு.. நீங்கள் கொடுக்கத் தவறுகிறது என்ன என்று அவதானியுங்கள்... உங்கள் அன்பையும் ஆதரவையும் வேறு யாரும் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுத்துப் பாருங்கள்.. அவள் உங்களைச் சுற்றிச் சுற்றி வருவதை...
 
அப்பாவிக் கணவர்கள் என்னை முறைக்கிறது புரியுது... இதோ உங்க பக்கம் வந்துட்டேங்க...
 
அப்பாவிக் கணவர்களைப் பின்னி எடுக்கிற அரியாத்தைகளுக்கு.. (மேன்மை பொருந்திய அரியாத்தை அவர்களே.. மன்னிச்சுடுங்க...இந்த பொண்ணுங்க எல்லாம் தங்களை அப்படித்தான் நினைக்கிறாங்க.. அதனால உங்க பெயரைப் பயன்படுத்த வேண்டி வந்துட்டுது... ) எத்தனையோ பெண்கள் தங்கள் கணவர்கள் தங்களை மதிப்பதே இல்லை என்று ஏங்கிக் கொண்டிருக்க.. நீங்களோ உங்கள் கணவர்களை  மதிக்காமல், அன்பு காட்டாமல் நடப்பது கூட அவர்கள் உங்களை விட்டு விலகி விடும் அபாயத்தை ஏற்படுத்துகிறீர்கள்... ஆகமொத்தம்.. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கைத்துணைக்கு அளவற்ற அன்பு செலுத்தவேண்டியவர்களே... அடுத்தவரை குற்றம் சாட்டுவதை விடுத்து, கணவனோ மனைவியோ குடும்பத்தை விட்டு நெறி பிறழாமல் வாழ வாழ்க்கைத் துணையே பலமாக இருக்க வேண்டும்... என்னங்க... வீட்டுக்கு கிளம்பீட்டீங்களா... அப்படியே அன்பை அள்ளிட்டு போங்க....  
 
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இது முடியல்லையா...???!

எத்தனையோ ஆயிரம் பேர் குப்பி கடித்து.. கரும்புலியாகி..  காத்த இன மானத்தை.. ஒரு சில தனிநபர்கள் தம் பிறழ்வால் காற்றில் பறக்க விட அதற்கு.. நியாயம் கற்பிக்க.. எத்தனை விடயங்களில் குற்றம் காண வேண்டி இருக்குது..???! எத்துணை முற்போக்கு.. புரட்சி பேச வேண்டி இருக்குது..???!

ஆணோ.. பெண்ணோ.. ஒழுகும் ஒழுக்கத்தின் பால் தான் அவரின் வாழ்வு மீதான மதிப்பீடு... அமைகிறது. உலகெங்கும்.. தமிழர்களிடம் மட்டுமல்ல.. இந்த நிலை.

அதுதான் வள்ளுவன் சொன்னான்.. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று. அதனால் தான் தலைவரும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளித்தார். தலைவரின் பாசறையில் இருந்து தப்பானவர்கள் உருவானது குறைவு. ஒரு சில..????! :icon_idea:

[ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கனும் .

ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவளின் கணவன்தான் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தான் தனித்துவிடப்பட்டேன், அன்புக்காட்ட ஆள் இல்லை அதனால் அன்பை தேடி ஓடினேன் என்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை??

கணவனிடம் கிடைக்காத அன்பையும் அரவனைப்பையும் மற்றவரிடம் தேட ஆரம்பித்தால் அந்த தேடுதலுக்கு நிச்சயம் முடிவு இருக்காது. மறு திருமணம் செய்யவேண்டிய தேவை இருந்தாலும் அல்லது அப்படியான சூழ்நிலை வந்துவிட்டது என்றாலும் அதற்கு ஒரு உறவுமுறை இல்லையா??? அடுத்த பெண்ணின் வாழ்வை கெடுக்கிற அளவிற்கு அவசியம் என்ன???

அன்பு, பாசம் என்று மட்டும் இதற்கு பெயர் வைத்துவிடாதீர்கள்...???!!!!!

அன்பு மட்டும்தான் அவளின் தேடுதல் என்றால் அதற்கு கணவன் என்ற உறவுதான் தேவை என்று இல்லையே!!  அந்த உறவு ஒரு சகோதரனாக கூட இருக்கலாம்;இருக்கனும் இல்லையா??  

என் கருத்து , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கற்பு என்பது ஒன்றுதான். இப்படியான பெண்கள் நிச்சயம் வெறும்  பாசம் என்பதை மட்டும் தேடவில்லை என்பது என் எண்ணம்.

நான் வித்தியா ராணி போன்ற பெண்களை பற்றி பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்க மேலே கூறிப்பிட்ட,  தொலைக்காட்சியில் தோன்றிய பெண்ணை போன்றவர்களை பற்றித்தான் கருத்தை தெரிவிக்கிறேன். இவர்களைதான் இப்பொழுது அதிகம் காணமுடிகிறது.!!!

தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவது இயல்பாகிறது. ஒரு பெண் அப்படி நடப்பது சரி என்று நான் வாதாடவில்லை. தவறு தவறு தான். ஆனால் அந்த நிலைமைக்குப் பெண்ணை இட்டுச் செல்வது யார்? 
 
இப்படியான விடயங்களை என் மனைவியோ சகோதரியோ அல்லது தாயோ செய்தா அது கடும் தவறு.

.

இதுவே பக்கத்து வீட்டுக்கார பெண்ணோ  அல்லது என்னுடன் வேலை செய்கின்ற பெண்ணோ அல்லது வேறு எந்தப் பெண்ணோ செய்தால் தவறே இல்லை :icon_mrgreen:  :icon_mrgreen: :icon_mrgreen:  

(அப்பாடி...பொறுப்பா ஒரு பதில் எழுதிட்டன்)

கற்பு என்பது ஆணாதிக்க சமுதாயத்தின் திணிப்பு. அது எப்போதும் ஆணுக்குச் சாதகமானது பெண்ணுக்கு பாதகமானது. இது இப்போது தலையை கொய்துகொண்டிருக்கும் இஸ்லாமிய ஷரி சட்டம்போல் சில காலங்களுக்கு முன்பு கணவன் இறந்த உடன் உடன் கட்டை என்று மனைவியை நெருப்புக்குள் தள்ளி கொன்றுவிடும் காட்டுமிராண்டித்தனத்தில் எஞ்சியிருக்கும் ஒன்று. இதன் தோற்றப்பாடு சாதியத்தை தக்கவைப்பது தற்போது ஒழுக்கம் புனிதம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்கின்றது. நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை. இந்த கற்பை பற்றி பேசுகின்றவர்களே உலகில் அதிகம் செக்ஸ் படங்களை இணையதளங்களில் தேடுவதாக ஆண்டாண்டுக்கு கணக்கெடுப்புகள் சொல்கின்றது. குடும்பத்துக்குள் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் இங்கே தான் அதிகம். வெளித்தெரிவதற்கு இந்த கருத்தியல் திணிப்பு விடாது. அண்ணன் பொண்டாண்டி அரைப்பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி முக்கா பொண்டாட்டி என்று இது குடும்பங்களுக்குள்ளாக கண்ணாமூச்சி ஆடுகின்றது வெளியே கற்பாக நடிக்கின்றது. முன்னேறிய சமுதாயங்களின் அறிவும் உணர்வும் புறத்தோற்றமமும் நாகரீகம் அடைந்துள்ளது தமிழ்ச்சமுதாயத்தின் புறத்தோற்றத்தில் நாகரீக சாயல் இருப்பினனும் அகத்தில் காட்டுமிராண்டிகள்தான். இதனால் தான் ஆணாதிக்கம் சாதியம் ஒன்றுபட முடியாத மனோபாவம் என தம்மை தாமே இந்த மக்கள் கூட்டம் அழித்துக்கொள்கின்றது.

பெண் தனது அடிப்படைத்தேவைகளே தானே பூர்த்திசெய்யக் கூடிய நிலையில் இருக்கும்போதே நிம்மதியாக இருக்க முடியும். ஆணைச் சார்ந்திருக்கும் வரை அவனது ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருக்க முடியும். தனக்கு விருப்பமில்லாத கணவனை எந்த நேரத்திலும் தூக்கி ஏறியும் சுதந்திரம் வேண்டுமானால் பெண் தன் சொந்தக்காலில் நிற்கவேணடும். அடிமைப்படுத்துவதும் தவறு அடிமையாவதும் தவறு தவிர சுதந்திரமாக இருப்பது அவரவர் தனிப்பட்ட விசயம், அதில் சமூகக் காவலர் சமயக்காவலர் என்று மூக்கை நுளைப்பதும் தவறு.

மன்னிக்கனும் .

ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவளின் கணவன்தான் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தான் தனித்துவிடப்பட்டேன், அன்புக்காட்ட ஆள் இல்லை அதனால் அன்பை தேடி ஓடினேன் என்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை??

கணவனிடம் கிடைக்காத அன்பையும் அரவனைப்பையும் மற்றவரிடம் தேட ஆரம்பித்தால் அந்த தேடுதலுக்கு நிச்சயம் முடிவு இருக்காது. மறு திருமணம் செய்யவேண்டிய தேவை இருந்தாலும் அல்லது அப்படியான சூழ்நிலை வந்துவிட்டது என்றாலும் அதற்கு ஒரு உறவுமுறை இல்லையா??? அடுத்த பெண்ணின் வாழ்வை கெடுக்கிற அளவிற்கு அவசியம் என்ன???

அன்பு, பாசம் என்று மட்டும் இதற்கு பெயர் வைத்துவிடாதீர்கள்...???!!!!!

அன்பு மட்டும்தான் அவளின் தேடுதல் என்றால் அதற்கு கணவன் என்ற உறவுதான் தேவை என்று இல்லையே!!  அந்த உறவு ஒரு சகோதரனாக கூட இருக்கலாம்;இருக்கனும் இல்லையா??  

என் கருத்து , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கற்பு என்பது ஒன்றுதான். இப்படியான பெண்கள் நிச்சயம் வெறும்  பாசம் என்பதை மட்டும் தேடவில்லை என்பது என் எண்ணம்.

நான் வித்தியா ராணி போன்ற பெண்களை பற்றி பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்க மேலே கூறிப்பிட்ட,  தொலைக்காட்சியில் தோன்றிய பெண்ணை போன்றவர்களை பற்றித்தான் கருத்தை தெரிவிக்கிறேன். இவர்களைதான் இப்பொழுது அதிகம் காணமுடிகிறது.!!!

அதற்கு அன்பு பாசம் என்று பெயர் வைத்து விடாதீர்கள் ................அதற்கு ஏற்கனவே பெயர் வைத்தாகிவிட்டது...................................

இது ஒருவன் பசிக்காக களவெடுத்தான் என்பதால் இனிமேல் களவு சட்டபூர்வமானதாக படவேண்டும் என்ற அரை வேக்காட்டு விவாதம். சமுதாயத்தின் கட்டுக்கோப்பை விளங்க முடியாவிட்டால் போகுது; சாரதாண மேற்கு நாடுகளின் திருமண விதிகளைகூட இது வரையில் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது கவலைக்குரியது.

நிம்மதியான வாழ்க்கைக்கு வெளிப்படையான சட்டங்களும், மக்கள் பாதுகாப்பாக உணரும் சமுதாய அமைப்பும் இருக்க வேண்டும். இரண்டில் ஒன்றுதானும் குறைவதால் நிம்மதி இழக்கப்படும்.  அதாவது மக்கள் வைத்திருக்கும் பொருளை பாதுகாப்பாக வைத்திருக்க சாடிமட்டும் போதாது; மூடியும் வேண்டும்.

என்றுமே தமிழ் பெண்கள் தமது கணவரை எங்கும் மேய்ந்துவர இலவச சீட்டு கொடுத்திருந்ததுதான் தமிழ் பண்பாடு என்று கூற முயல்வது மட்டரக அறிவால் தமிழ் பண்பாட்டை ஆராயும் மடமை. தமிழர் காதல் திருமணத்தில் இருந்து பின்னர் அதை விலத்திபோன போதுகூட சம்பிரதாய சடங்குகளில்  தான் அடிமை பிடிக்க முடியாமல் இருப்பது வெளிப்படை. கிடைக்கத்தக்க ஆண்களும் பெண்கள் மாதிரியேதான் இதில் பங்கிடப்படுகிறார்கள்.

கோவலனின் கதையில் கண்ணகி தங்கியிருந்த இடையர் கோவலன் திரும்பட்டும் என்று போடும் கூத்து நிகழ்சிகள் தங்கள் வலிமைமைக்குள் தங்கள் கணவர் மீது கண்காணிப்புகளை வைத்திருந்ததினால் ஏற்பட்ட பண்பாடே என்பது துலங்கும். 

முஸ்லீம் சமுதாயம் பெண்கள் விடையத்தில் ஆணாதிகத்தை காட்டுகிறது. ஆனால் சகோதரன் இறந்து விட்டால் அவளை தனக்கு மனைவியாகும் வழக்கம் இருக்கிறது. வட இந்திய இந்துகளிடம் சாதீ பரவலாக இருந்தது. (உண்மையில் மிக கடுமையாக அமூலாக இருந்த காலங்களில்  1% மக்கள் பின்பற்றியிருந்திருக்கலாம். ஆனால் யாரையாவது இன்னொருவர் தீக்குள் இழுத்து போட்டது கிடையாது. அறுதலி என்பது தமிழில் பழைய பாவனைச் சொல். எல்லோரும் தற்கொலை செய்யவில்லை) இதை இன்றைய ஆண்கள் சுண்ணத் செய்வதை போன்ற ஒரு நடத்தையாக கொள்ளலாமே அல்லாமல் ஆணாதிகத்தால் ஏற்பட்டது என்பது நிறுவப்படாது. முஸ்லீம் சமூகத்திலும் அது ஒரு தீர்வே. ஆனால் இந்துக்கள் பெண்களை ஆள வெண்டுமாயின் அருமையாக கிடைக்கும் இலவச சொத்தை வைத்து அனுபவிக்காமல் தீக்குள் போட்டுவிட்டு போவர்கள் என்பது முட்டாள் கதை. இந்த தத்துவங்களை சிலர் பொருள் விளங்காமல் இங்கே இழுத்துவருவதைப்பாரத்தால் ஒன்று நினைவுக்கு வருகிறது. களைக்கூத்தாடி தெருவில் ஒருதடவை தன் உடுக்கை அடித்து ஆடி ஆடிப் பாடிப்பணம் சேர்த்துவிட்டு கம்பையும் அதையும் அதை அருகில் வைத்துக்கொண்டு மரத்தின் கீழ் படுத்து தூங்கினான். பார்த்துக்கொண்டிருந்த குரங்குகள் உடுக்கை எடுத்துகோண்டோடிப்போய் அடித்து அடித்து கிளைக்கு கிளை தாவி கீச்சிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மை தவறும் எவரும் மரியாதையை இழப்பது இயல்பானதே.. கணவனுடன் சரிவரவில்லையாயின் முறைப்படி விலகிக்கொண்டு மறுவாழ்வைத் தேடுவதே பெண்களுக்கான நேர்மை.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்
நான் இந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை...ஆனால் பொதுவாக கணவன் மூலம்  அன்பு,பாசம் கிடைக்காட்டில் அதற்கு ஈடான அன்பு சகோதர,சகோதரி மூலமோ,பெற்றோர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலம் கிடைப்பது கஸ்டம்...இன்னொரு வழியில் சொல்லப் போனால் தாம்பத்தியத்திற்கு ஈடான அன்பை இவர்களால் ஈடு செய்வது என்பது பெரும்பாலும் கஸ்டம்...
அதை இன்னொரு ஆணால் கிடைக்கும் போது அவனை நம்பிப் போகிறார்கள்...இதில் அந்த இரு ஆண்களுமே அந்த பெண்களை ஏமாற்றுகிறார்கள்.
 
பெண்களுக்கு கணவனிட‌மிருந்து அன்பு,பாச‌ம் கிடைக்கா விட்டால் அவனை விட்டு விலகிப் போய் வேறு யாரையாவது அவளது மனதிற்கு பிடித்தவனாய்ப் பார்த்து கட்டலாம் அல்லது போய் பிர‌ண்டாக வைத்திருக்கலாம்...ஆனால் கணவனோடு இருந்து கொண்டு இன்னொருத்தனோடு தொட‌ர்பு வைப்பது கள்ளக்காதல்...அது சமுதாய சீர்கேடுகளுக்கு வழி வகுக்கும்  
  • கருத்துக்கள உறவுகள்

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியா!

இதை பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம்.

'ஒட்டாதாயின் சட்டென வில'
 
என்பது மாதிரி  முன்னோர்கள் திரிபறக் கூறியுள்ளார்கள்.
 
இந்த ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி போன்றவைதான்  வாழ்க்கையின் முன்னோடி' என்று நினைத்தால் கஷ்டம்.

  • தொடங்கியவர்

இன்னும் இது முடியல்லையா...???!

எத்தனையோ ஆயிரம் பேர் குப்பி கடித்து.. கரும்புலியாகி..  காத்த இன மானத்தை.. ஒரு சில தனிநபர்கள் தம் பிறழ்வால் காற்றில் பறக்க விட அதற்கு.. நியாயம் கற்பிக்க.. எத்தனை விடயங்களில் குற்றம் காண வேண்டி இருக்குது..???! எத்துணை முற்போக்கு.. புரட்சி பேச வேண்டி இருக்குது..???!

ஆணோ.. பெண்ணோ.. ஒழுகும் ஒழுக்கத்தின் பால் தான் அவரின் வாழ்வு மீதான மதிப்பீடு... அமைகிறது. உலகெங்கும்.. தமிழர்களிடம் மட்டுமல்ல.. இந்த நிலை.

அதுதான் வள்ளுவன் சொன்னான்.. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று. அதனால் தான் தலைவரும் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளித்தார். தலைவரின் பாசறையில் இருந்து தப்பானவர்கள் உருவானது குறைவு. ஒரு சில..????! :icon_idea:

[ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப்படும்.

(ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மையைத் தருவதால் அந்த ஒழுக்கம் உயிரையும் விடச் சிறந்ததாகப் போற்றப்படும்)]

உங்கள் கருத்துக்காக நன்றி நண்பரே.. இது பழைய ஆக்கம் தான்... நான் இதை இங்கிருப்பவர்களும் வாசிக்கட்டுமே என்று தான் இங்கே போட்டு வைத்தேன். தவறை நியாயம் கற்பிப்பது என் நோக்கமல்ல.. அந்தத் தவறுக்குப் பின்னால் இருக்கக் கூடிய காரணங்களை சொல்வதே என் நோக்கம். சமூகம் சாதாரணமாக நடத்தை கெட்டவள் என்று தீர்ப்பு சொல்வதற்கு முன்னால் அதற்குக் காரணமானவர்களையும் திரும்பி பார்க்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.. 

  • தொடங்கியவர்

மன்னிக்கனும் .

ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவளின் கணவன்தான் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தான் தனித்துவிடப்பட்டேன், அன்புக்காட்ட ஆள் இல்லை அதனால் அன்பை தேடி ஓடினேன் என்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை??

மேலே கூறப் பட்ட இரண்டு பெண்களின் நடத்தையையும் நான் சரி என்று கூற முயலவில்லை... அன்பு என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்று.. இதில் நியாய அநியாயம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்

  • தொடங்கியவர்

மன்னிக்கனும் .

ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவளின் கணவன்தான் என்ற உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தான் தனித்துவிடப்பட்டேன், அன்புக்காட்ட ஆள் இல்லை அதனால் அன்பை தேடி ஓடினேன் என்பதில் எந்த ஒரு நியாயமும் இல்லை??

கணவனிடம் கிடைக்காத அன்பையும் அரவனைப்பையும் மற்றவரிடம் தேட ஆரம்பித்தால் அந்த தேடுதலுக்கு நிச்சயம் முடிவு இருக்காது. மறு திருமணம் செய்யவேண்டிய தேவை இருந்தாலும் அல்லது அப்படியான சூழ்நிலை வந்துவிட்டது என்றாலும் அதற்கு ஒரு உறவுமுறை இல்லையா??? அடுத்த பெண்ணின் வாழ்வை கெடுக்கிற அளவிற்கு அவசியம் என்ன???

அன்பு, பாசம் என்று மட்டும் இதற்கு பெயர் வைத்துவிடாதீர்கள்...???!!!!!

அன்பு மட்டும்தான் அவளின் தேடுதல் என்றால் அதற்கு கணவன் என்ற உறவுதான் தேவை என்று இல்லையே!!  அந்த உறவு ஒரு சகோதரனாக கூட இருக்கலாம்;இருக்கனும் இல்லையா??  

என் கருத்து , ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கற்பு என்பது ஒன்றுதான். இப்படியான பெண்கள் நிச்சயம் வெறும்  பாசம் என்பதை மட்டும் தேடவில்லை என்பது என் எண்ணம்.

நான் வித்தியா ராணி போன்ற பெண்களை பற்றி பேசவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்க மேலே கூறிப்பிட்ட,  தொலைக்காட்சியில் தோன்றிய பெண்ணை போன்றவர்களை பற்றித்தான் கருத்தை தெரிவிக்கிறேன். இவர்களைதான் இப்பொழுது அதிகம் காணமுடிகிறது.!!!

சகோதரி,

பொதுவாக நாம் மற்றவர்கள் தேடும் எதற்கும் முடிவு இருக்காது என்பது தான் உண்மை. அப்படியிருக்க கணவனின் அன்பைத் தேடுவது சாத்தியமும் இல்லை, நியாயமும் இல்லை என்பது எனக்கும் உங்களுக்கும் புரியலாம். ஏனென்றால் நாங்கள் ஓரளவுக்காவது இவை பற்றி புரிந்துகொள்ளக் கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் அத்தகைய எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாத சாதாரண கிராமத்து பெண்களுக்கு இவை புரிந்திருக்க முடியாது. 

அடுத்து,

பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு இயற்கையாகவே அமைந்தவை. அது நெறி தவறிப் போகாமல் நாம் தான் கலாச்சாரம் என்ற ஒன்றால் கடிவாளம் போட்டு வைத்துக் காப்பாற்றுகிறோம். ஆனால் அதை எல்லாராலும் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் தான் எமது சமூகத்தில் இத்தகைய பிரச்சனைகள் இன்னமும் நடக்கிறது. பெண்கள் யாரையும்சார்ந்திருக்க கூடாது என்பது எமது முற்போக்கு சிந்தனை. ஆனால் இன்னும் பல பெண்கள் அந்த சிந்தனைக்குள் வரவில்லை.. அதை ஏற்படுத்த வேண்டியது படைப்பாளிகளான எமது கடமையும் கூட என நினைக்கிறேன்... சேர்ந்து முயற்சி செய்வோம் சகோதரி...

  • தொடங்கியவர்

கற்பு என்பது ஆணாதிக்க சமுதாயத்தின் திணிப்பு. அது எப்போதும் ஆணுக்குச் சாதகமானது பெண்ணுக்கு பாதகமானது. இது இப்போது தலையை கொய்துகொண்டிருக்கும் இஸ்லாமிய ஷரி சட்டம்போல் சில காலங்களுக்கு முன்பு கணவன் இறந்த உடன் உடன் கட்டை என்று மனைவியை நெருப்புக்குள் தள்ளி கொன்றுவிடும் காட்டுமிராண்டித்தனத்தில் எஞ்சியிருக்கும் ஒன்று. இதன் தோற்றப்பாடு சாதியத்தை தக்கவைப்பது தற்போது ஒழுக்கம் புனிதம் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டிருக்கின்றது. நடைமுறையில் அப்படி எதுவும் இல்லை. இந்த கற்பை பற்றி பேசுகின்றவர்களே உலகில் அதிகம் செக்ஸ் படங்களை இணையதளங்களில் தேடுவதாக ஆண்டாண்டுக்கு கணக்கெடுப்புகள் சொல்கின்றது. குடும்பத்துக்குள் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் இங்கே தான் அதிகம். வெளித்தெரிவதற்கு இந்த கருத்தியல் திணிப்பு விடாது. அண்ணன் பொண்டாண்டி அரைப்பொண்டாட்டி தம்பி பொண்டாட்டி முக்கா பொண்டாட்டி என்று இது குடும்பங்களுக்குள்ளாக கண்ணாமூச்சி ஆடுகின்றது வெளியே கற்பாக நடிக்கின்றது. முன்னேறிய சமுதாயங்களின் அறிவும் உணர்வும் புறத்தோற்றமமும் நாகரீகம் அடைந்துள்ளது தமிழ்ச்சமுதாயத்தின் புறத்தோற்றத்தில் நாகரீக சாயல் இருப்பினனும் அகத்தில் காட்டுமிராண்டிகள்தான். இதனால் தான் ஆணாதிக்கம் சாதியம் ஒன்றுபட முடியாத மனோபாவம் என தம்மை தாமே இந்த மக்கள் கூட்டம் அழித்துக்கொள்கின்றது.

பெண் தனது அடிப்படைத்தேவைகளே தானே பூர்த்திசெய்யக் கூடிய நிலையில் இருக்கும்போதே நிம்மதியாக இருக்க முடியும். ஆணைச் சார்ந்திருக்கும் வரை அவனது ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருக்க முடியும். தனக்கு விருப்பமில்லாத கணவனை எந்த நேரத்திலும் தூக்கி ஏறியும் சுதந்திரம் வேண்டுமானால் பெண் தன் சொந்தக்காலில் நிற்கவேணடும். அடிமைப்படுத்துவதும் தவறு அடிமையாவதும் தவறு தவிர சுதந்திரமாக இருப்பது அவரவர் தனிப்பட்ட விசயம், அதில் சமூகக் காவலர் சமயக்காவலர் என்று மூக்கை நுளைப்பதும் தவறு.

தங்கள் காத்திரமான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... 

ஒவ்வொரு கருத்தும் நச் தான்.. விடாதேங்கோ... தொடர்ந்தும் கருத்துக்களைக் கொடுத்து என்னை ஊக்குவிப்பது மட்டுமன்றி.. இந்த சமூக முன்னேற்றத்துக்கு உங்கல் கருத்துக்கள் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்... மீண்டும் என் நன்றிகள்...

  • தொடங்கியவர்

நேர்மை தவறும் எவரும் மரியாதையை இழப்பது இயல்பானதே.. கணவனுடன் சரிவரவில்லையாயின் முறைப்படி விலகிக்கொண்டு மறுவாழ்வைத் தேடுவதே பெண்களுக்கான நேர்மை.. :huh:

சரிதான் நண்பரே... பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதுவே பொருந்தும். ஆனால் அதே வேளை, ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி.. தங்கள் வாழ்க்கைத் துணைக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதை நமது படைப்புகளில் அழுத்திச் சொல்ல முற்படுவோம்.

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

நான் இந்த நிகழ்ச்சி பார்க்கவில்லை...ஆனால் பொதுவாக கணவன் மூலம்  அன்பு,பாசம் கிடைக்காட்டில் அதற்கு ஈடான அன்பு சகோதர,சகோதரி மூலமோ,பெற்றோர் மூலமோ அல்லது நண்பர்கள் மூலம் கிடைப்பது கஸ்டம்...இன்னொரு வழியில் சொல்லப் போனால் தாம்பத்தியத்திற்கு ஈடான அன்பை இவர்களால் ஈடு செய்வது என்பது பெரும்பாலும் கஸ்டம்...
அதை இன்னொரு ஆணால் கிடைக்கும் போது அவனை நம்பிப் போகிறார்கள்...இதில் அந்த இரு ஆண்களுமே அந்த பெண்களை ஏமாற்றுகிறார்கள்.
 
பெண்களுக்கு கணவனிட‌மிருந்து அன்பு,பாச‌ம் கிடைக்கா விட்டால் அவனை விட்டு விலகிப் போய் வேறு யாரையாவது அவளது மனதிற்கு பிடித்தவனாய்ப் பார்த்து கட்டலாம் அல்லது போய் பிர‌ண்டாக வைத்திருக்கலாம்...ஆனால் கணவனோடு இருந்து கொண்டு இன்னொருத்தனோடு தொட‌ர்பு வைப்பது கள்ளக்காதல்...அது சமுதாய சீர்கேடுகளுக்கு வழி வகுக்கும்  

அதே... அதே.. இந்தக் கருத்துக்கு யாரிடமும் மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்... 

அதே போல சமுதாய சீர்கேடுகள் பற்றி விழிப்புணர்வு இல்லாத பெண்களை விழிக்க வைப்பது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்...

உங்கல் கருத்துக்கு நன்றி சகோதரி

‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியா!

இதை பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம்.

ஹா..ஹா... இந்தத் தீர்மானத்துக்கு நானும் இறுதியில் வந்து விட்டேன் சகோ. ஆனால் அதைப் பார்ப்பதால் இந்த சமுதாயத்தின் சீரழிவுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருப்பதால் அதை இடைக்கிடை பார்க்கலாம் என நினைக்கிறேன்...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 

'ஒட்டாதாயின் சட்டென வில'

என்பது மாதிரி  முன்னோர்கள் திரிபறக் கூறியுள்ளார்கள்.

இந்த ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி போன்றவைதான்  வாழ்க்கையின் முன்னோடி' என்று நினைத்தால் கஷ்டம்.

இந்த நிகழ்ச்சி ஒருபோதும் முன்னோடியாக முடியாது சகோ. ஆனால் இந்த சீர்கெட்ட சமூகத்தைக் காட்டும் கண்ணாடி... 

சமுதாயத்திற்கு எதைச் சொல்ல வேண்டும் என்பதை எம்போன்றவர்களுக்கு காட்டுவது இது போன்ற நிகழ்ச்சிகளே.. சில வேளைகளில் நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வெறும் பொழுது போக்காக மட்டும் பார்க்கிறோம்.. இவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவும் பல விடயங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். 

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சகோ 

QUOTE:"ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கைத்துணைக்கு அளவற்ற அன்பு செலுத்தவேண்டியவர்களே... அடுத்தவரை குற்றம் சாட்டுவதை விடுத்து, கணவனோ மனைவியோ குடும்பத்தை விட்டு நெறி பிறழாமல் வாழ வாழ்க்கைத் துணையே பலமாக இருக்க வேண்டும்"... என்னங்க... வீட்டுக்கு கிளம்பீட்டீங்களா... அப்படியே அன்பை அள்ளிட்டு போங்க"

வாழ்க்கை இருவரிலும் தங்கியிருக்கு. உணர்ந்து செயல்பட்டால் சொர்க்கம்

"... என்னங்க... வீட்டுக்கு கிளம்பீட்டீங்களா... அப்படியே அன்பை அள்ளிட்டு போங்க"

வார இறுதி அன்பு நல்ல பாயும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பப் பெண்ணுக்கு திருமணத்துக்கு வெளியே ஒரு தொடர்பு இருக்குமாயின் சந்தேகத்துக்கு இடமின்றி அவள் நடத்தை கெட்டவள்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. இல்லாட்டி அவளை குலவிளக்கு, மாதரசி, மங்கையர் திலகம் என்றா அழைக்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.