Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை

 இசைஞானி இளையராஜா பிப்ரவரி 23ம் தேதி அமெரிக்காவில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐட்ரீம்ஸ் நிறுவனம் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

நியூஜெர்சி, ப்ரூடென்ஷியல் மையத்தில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடக்கவுள்ளது. ரிஹானா போன்ற பெரிய பெரிய ஆட்களின் இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் இது. இங்குதான் இசை ராஜாங்கம் நடத்த உள்ளார் ராஜா. இளையராஜாவின் நிகழ்ச்சி குறித்து ஐட்ரீம்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராஜ்குமார் கூறுகையில், இளையராஜாவின் இசை யாருடனும் ஒப்பிட முடியாதது. மகத்தான இசை மேதை அவர். அவருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருடைய நிகழ்ச்சியை அதிலும் அமெரிக்காவில் அவரது முதல் நேரடி நிகழ்ச்சியை நடத்துவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவரும் இதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், அவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல நூறு பாடல்களைப் படைத்துள்ளார். அதிலிருந்து எதைத் தேர்வு செய்வது என்றே தெரியவில்லை. காரணம் அத்தனையுமே முத்துக்கள். இதில் எதை விடுவது... நேரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் நான்கு மணி நேரம் நடைபெறப் போகும் அந்த ஷோவில், இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களைத் தேர்வு செய்து அதை இடம்பெறச் செய்யவுள்ளோம் என்றார் அவர்.

இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சிக்கு 100 டாலர் முதல் 500 டாலர் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிஹரன், சித்ரா, மனோ உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியைக் காண 18000 ரசிகர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/02/ilayaraja-live-new-jersey-169447.html

தமிழர் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த எங்கேயும் எப்போதும் ராஜா ட்ரினிட்டி இவன்ட்ஸ்

இசைஞானி இளையராஜா குழுவினரின்  " எங்கேயும்  எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. கடந்த வருடம் கனடாவில் மட்டுமன்றி இந்திய ஊடகங்களிலும்  சர்ச்சையாகப் பேசப்பட்ட இந்த பிரமாண்ட நிகழ்வினை சிறந்த முறையில் வழங்க ட்ரினிட்டி இவன்ட்ஸ் நிறுவனத்தார் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்

கடந்த வருடம் நவம்பர் 3 ஆம் திகதி நடப்பதாக இருந்த இந்நிகழ்வு தவிர்க்க இயலாத இயற்கை சீற்றங்களால் தள்ளிப் போடப்பட்டது யாவரும் அறிந்ததே. வட அமெரிக்காவில் நடைபெறும் இளையராஜாவின் முதலும் , இறுதியுமான பிரமாண்ட இசை நிகழ்வாக இது இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

இந்நிகழ்வை " ட்ரினிட்டி இவன்ட்ஸ் "  நிறுவனத்தின்  தலைவர்களான Dunstan,  கிசான் ஆகியோர் ஒழுங்கு செய்துள்ளார்கள். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த இரண்டு இளம் தொழிலதிபர்களும் கனடிய தமிழர்களின் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி ஆதரவினை வழங்கி தமிழர்களின் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடக்க ஆதரவளித்து வருகின்றனர்.

கனடிய மருத்துவ பல் மருத்துவக் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை , The Canadian Tamil Alumni Association , The Camp Initiative, STEVE CLIFF வழங்கிய இசையின் சங்கமம் , நினைவுகள் night ஆகியவை சமீபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அனைத்திற்கும் பெருமளவு நிதி உதவி அளித்தவர்கள் இவர்களே. மேலும் தெற்காசிய ஆட்டிசம் விழிப்புணர்வு நிலையத்திற்கு ( South Asian Autism Awareness Centre - SAAAC ) 25000 கனடிய டொலர்களை நன்கொடையாகவும் இவர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இசைஞானி இளையராஜா குழுவினரின்  " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு இம்முறை தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்க்கும் மிகப் பெரிய நிகழ்வாக அமையக் கூடும் என நம்பப்படுகிறது.

மேலும் இந்நிகழ்விற்காக இளையராஜா குழுவினர் கடந்த வருடம் ரொறொன்ரோவில் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன் , மனோ, கார்த்திக், ஹரிசரண், விஜய் ஜேசுதாஸ், சத்யன், பவதாரிணி, சித்ரா, சாதனா சர்கம் உள்ளிட்ட பிரபல பாடகர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைக் கலைஞர்களும் பங்குபெறவுள்ள இந்நிகழ்வில் சில உள்ளூர் கலைஞர்களும் பங்களிப்பு செய்ய உள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள தெரிவிக்கின்றன. நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

.இந்நிகழ்விற்கான நுழைவுச் சீட்டுக்களை ரொறொன்ரோவில் உள்ள அனைத்து தமிழ்க் கடைகளிலும்  ட்ரினிட்டி இவன்ட்ஸ் இணைய தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

http://ekuruvi.com/illaya%20raja%20musical%20night%202013

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த எங்கேயும் எப்போதும் ராஜா ட்ரினிட்டி இவன்ட்ஸ்

இந்நிகழ்வை " ட்ரினிட்டி இவன்ட்ஸ் "  நிறுவனத்தின்  தலைவர்களான Dunstan,  கிசான் ஆகியோர் ஒழுங்கு செய்துள்ளார்கள். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த இரண்டு இளம் தொழிலதிபர்களும் கனடிய தமிழர்களின் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி ஆதரவினை வழங்கி தமிழர்களின் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடக்க ஆதரவளித்து வருகின்றனர்.

கனடிய மருத்துவ பல் மருத்துவக் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை , The Canadian Tamil Alumni Association , The Camp Initiative, STEVE CLIFF வழங்கிய இசையின் சங்கமம் , நினைவுகள் night ஆகியவை சமீபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அனைத்திற்கும் பெருமளவு நிதி உதவி அளித்தவர்கள் இவர்களே. மேலும் தெற்காசிய ஆட்டிசம் விழிப்புணர்வு நிலையத்திற்கு ( South Asian Autism Awareness Centre - SAAAC ) 25000 கனடிய டொலர்களை நன்கொடையாகவும் இவர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இசைஞானி இளையராஜா குழுவினரின்  " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு இம்முறை தமிழ் மக்கள் அனைவரும் திரண்டு வந்து பார்க்கும் மிகப் பெரிய நிகழ்வாக அமையக் கூடும் என நம்பப்படுகிறது.

மேலும் இந்நிகழ்விற்காக இளையராஜா குழுவினர் கடந்த வருடம் ரொறொன்ரோவில் ஊடகச் சந்திப்பு ஒன்றிற்கும் ஏற்பாடு செய்திருந்தமை அனைவரும் அறிந்ததே.

யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன் , மனோ, கார்த்திக், ஹரிசரண், விஜய் ஜேசுதாஸ், சத்யன், பவதாரிணி, சித்ரா, சாதனா சர்கம் உள்ளிட்ட பிரபல பாடகர்களும்

நூற்றுக்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைக் கலைஞர்களும் பங்குபெறவுள்ள இந்நிகழ்வில் சில உள்ளூர் கலைஞர்களும் பங்களிப்பு செய்ய உள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள தெரிவிக்கின்றன. நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராசா மேல் என்றுமே மதிப்புண்டு.

ஆனால் அவரும் இந்த நிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரலைப்பார்த்தபோது தன்னில் நம்பிக்கை வைக்காது பெரும் வியாபாரி  ஆகிவிட்டாரே என்று கவலை தருகிறது இந்த செய்தியும் நிகழ்ச்சியும்.

இசையானியின் இசை  நிகழ்ச்சி  வெற்றிபெற  கோபிநாத் தேவை  என்பது தான் இன்றைய  நிலையா? :(  :(  :( 

'akootha', on 31 Oct 2012 - 16:09, said:snapback.png

இப்படியான சில கேள்விகளை நானும் கேட்டேன், ஒருவரும் தடைக்கற்களை அகற்றவில்லை :(

யார் இந்த தொழில்நுட்ப நிறுவனம்?

மூன்று வருடமே இயங்கும் இவர்களுக்கு எவ்வாறு இவர்களுக்கு இப்படி ஒரு பாரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது?

இவர்களுக்கு பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

இந்நிகழ்வை " ட்ரினிட்டி இவன்ட்ஸ் "  நிறுவனத்தின்  தலைவர்களான Dunstan,  கிசான் ஆகியோர் ஒழுங்கு செய்துள்ளார்கள். கடந்த மூன்று மாதங்களாகவே இந்த இரண்டு இளம் தொழிலதிபர்களும் கனடிய தமிழர்களின் நிகழ்வுகளுக்கு பெருமளவு நிதி ஆதரவினை வழங்கி தமிழர்களின் நிகழ்வுகள் வெற்றிகரமாக நடக்க ஆதரவளித்து வருகின்றனர்.
 
https://www.youtube.com/watch?v=z245kGj9IYo&list=PL3627BBD6B367E09E&index=46

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற முறை நடாத்த இருந்த ஆட்கள் தான் இம்முறையும் நடாத்தப்போகிறார்கள். போன முறை இலங்கை அரசு பின்னணியில் நின்று நடாத்த போவதாக பூச்சாண்டி காட்டியவர்கள் இம்முறை பேச்சு மூச்சை காவில்லை.

எழுத்துப்பிழை

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கட்டணம் 100 முதல் 500 டொலர்கள் 

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கும் 

இளையராஜாவிற்கும்  கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையராசா மேல் என்றுமே மதிப்புண்டு.

ஆனால் அவரும் இந்த நிகழ்ச்சியின் நிகழ்ச்சி நிரலைப்பார்த்தபோது தன்னில் நம்பிக்கை வைக்காது பெரும் வியாபாரி  ஆகிவிட்டாரே என்று கவலை தருகிறது இந்த செய்தியும் நிகழ்ச்சியும்.

இசையானியின் இசை  நிகழ்ச்சி  வெற்றிபெற  கோபிநாத் தேவை  என்பது தான் இன்றைய  நிலையா? :(  :(  :( 

கே.எஸ் ராஜா,பி.எச்.அப்துல்ஹமீத்,ராஜேஸ்வரி சண்முகம் என்று எல்லோருமே பெரிய அறிவிப்பாளர்கள்.ஒரு நிகழ்ச்சிக்கு சகலதும் அறிந்த புலமைபெற்ற அறிவிப்பாளர் மிகமுக்கியம். இல்லையேல் அத்தனையும் பாழ்........

புலம்பெயர் நாடுகளிலும் மாசிமாதத்தில் வரும் 14ம் தேதியின் சிறப்பு பெயருடைய சிம்மகுரலோனும் பல இடங்களில் அவசியம் தேவைப்படுகின்றார். ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க அறிவிப்பாளர் மிக முக்கியம். :(

'akootha', on 31 Oct 2012 - 16:09, said:snapback.png

இப்படியான சில கேள்விகளை நானும் கேட்டேன், ஒருவரும் தடைக்கற்களை அகற்றவில்லை :(

யார் இந்த தொழில்நுட்ப நிறுவனம்?

மூன்று வருடமே இயங்கும் இவர்களுக்கு எவ்வாறு இவர்களுக்கு இப்படி ஒரு பாரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது?

இவர்களுக்கு பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? 

https://www.youtube.com/watch?v=z245kGj9IYo&list=PL3627BBD6B367E09E&index=46

பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்  :lol:  :lol:  :lol:

தமிழர் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்த எங்கேயும் எப்போதும் ராஜா ட்ரினிட்டி இவன்ட்ஸ்

கனடிய மருத்துவ பல் மருத்துவக் கூட்டமைப்பு, கனடியத் தமிழர் பேரவை , The Canadian Tamil Alumni Association , The Camp Initiative, STEVE CLIFF வழங்கிய இசையின் சங்கமம் , நினைவுகள் night ஆகியவை சமீபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அனைத்திற்கும் பெருமளவு நிதி உதவி அளித்தவர்கள் இவர்களே. மேலும் தெற்காசிய ஆட்டிசம் விழிப்புணர்வு நிலையத்திற்கு ( South Asian Autism Awareness Centre - SAAAC ) 25000 கனடிய டொலர்களை நன்கொடையாகவும் இவர்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பணம், அவர்களின் இசை ஆர்வம் இந்த இரண்டையும் குறிவைத்து பல மில்லியன்கள் 'பட்ஜெடில்' நடாத்தப்படுகின்றது இந்த நிகழ்வு.

ஏற்கனவே குறிப்பிட்ட கார்த்திகை மாதத்தில் இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் இந்த நன்கொடைகளும் உதவிகளும் நடந்திருக்காமல் போயிருக்கலாம். அந்தவகையில் என் போன்றவர்களின் வேண்டுதல்கள் இன்று நிறைவேறியுள்ளன. நன்றிகள்.

நன்கொடைகளின் பின்னால் இலங்கை அரசு இல்லை என்பதை இப்போது உறுதிப்படுத்தவேண்டிய தேவையில்லை?

அன்று நாம் கூறிய ஒரே கருத்து "இது உங்களுக்குள் நடக்கும் பணத்தை மையமாக வைத்த போட்டி" என்பதே.

உங்கள் போட்டிகளுக்குள் மாவீரர், மாவீரர் தினம், தேசீயம் , இலங்கையரசு, இலங்கை இந்தியப் புலனாய்வுத்துறைகள் என்று நீங்கள் இழுத்தது அப்பட்டமான குற்றம். நியாயத்துக்கு புறம்பான செயல்.

தேசீயத்தை சுயநலத்திற்கு பண லாபத்திற்கு அடயாளத்தேடல் அடயளப்போட்டிகளுக்கு பயன்படுத்தும் இச்செயலை உங்கள் கருத்துக்களால் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. கடந்த நவம்பரில் தொடங்கிய இந்த கருத்தாடலில் இனி கருத்தாடுவதற்கு எதுவும் இல்லை. பலவிதத்தில் உங்களுக்கு நன்றிகள்.

இது ஒன்றும் புதியவிடயமல்ல ,தங்களுக்கு தண்டம் வைக்காவிட்டால் அவன் அரசின் ஆள்  ,கைக்கூலி ,இப்படி பல பட்டங்கள் கட்டிவிடுவார்கள் ,

ஆனால் கள்ள காட் அடித்தாலும் ,தூள் கடத்தினாலும் ஒரு பங்கு கொடுத்தால் தேசிய பட்டியலில் இணைத்து மேடையிலும் ஏற்றிவிடுவார்கள்.

அதுதான் இப்ப ஒவ்வொன்றாக போய் தொலையுதுகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்டு 24 மணித்தியாலம் ஆகப்போகின்றது. இன்னும் கொஞ்சம் பொறுத்துப்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.எஸ் ராஜா,பி.எச்.அப்துல்ஹமீத்,ராஜேஸ்வரி சண்முகம் என்று எல்லோருமே பெரிய அறிவிப்பாளர்கள்.ஒரு நிகழ்ச்சிக்கு சகலதும் அறிந்த புலமைபெற்ற அறிவிப்பாளர் மிகமுக்கியம். இல்லையேல் அத்தனையும் பாழ்........

புலம்பெயர் நாடுகளிலும் மாசிமாதத்தில் வரும் 14ம் தேதியின் சிறப்பு பெயருடைய சிம்மகுரலோனும் பல இடங்களில் அவசியம் தேவைப்படுகின்றார். ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க அறிவிப்பாளர் மிக முக்கியம். :(

உண்மைதான் அண்ணா

ஆனால் நீயா நானாகோபிநாத்தை

ஒரு அறிவிப்பாளராக நான் அறியவில்லை.

தற்போதைய  பிரபலம் மட்டுமே.

அது தான் கேட்டேன்

இதைத்தான் கடந்த விவாதங்களில் மீண்டும் மீண்டும் சொல்லி வந்தோம். பணம் பறிப்பதற்காகவே "மாவீரர் மாதம்" என்கின்ற கோசத்தை கையில் எடுத்தார்கள் இவர்கள். இதை நம்பிக் கொண்டு ஒரு சுயபுத்தியற்ற கூட்டமும் அந்தப் பரப்புரையில் இணைந்து கொண்டது.

ஒரு இலட்சம் கனடிய டொலர்கள் கப்பமாக கேட்கப்பட்டது. மறுத்ததன் விளைவு இளையராஜா துரோகியாக்கப்பட்டார். விழாவை நடத்துகின்ற நிறுவனம் பற்றி சந்தேகங்கள் பரப்பப்பட்டது.

இன்றைக்கு இந்தக் கும்பலுக்கு பணிந்து போய் கப்பத் தொகைகள் கட்டப்பட்டு விழா நடைபெறுகிறது. இது தமிழினத்தின் இன்னும் ஒரு பின்னடைவு. பணம் பறிக்கும் அந்தக் கும்பல் தமிழர்களின் அரசியல் மேடையில் இருந்து அகற்றப்படும் வரை விடிவு என்பது இல்லை.

Edited by சபேசன்

ஆதாரத்தை இணைக்கவும்.

கனடாவில் சம்பந்தப்பட்டவர்களிடம் நீங்கள் கேட்டு உறுதிப்படுத்தலாம். ஒரு இலட்சம் டொலர் பற்றி நான் கடந்த விவாதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இன்றைக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்கே இணைக்கப்பட்ட செய்தியே சொல்கிறது. கனேடிய தமிழர் பேரவை, உலகத் தமிழர் இயக்கம் ஆகியன விழாவை நடத்தும் நிறுவனத்திடம் பெருமளவு நிதி பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றைக்கு ஒன்றும் இரகசியம் இல்லை. சுற்றி வளைத்து அதை செய்தியாகவே வெளியிட்டு விட்டார்கள்.

யாராவது அவசரப்பட்டு பழைய ஞாபகத்தில் நிகழ்ச்சியை எதிர்க்க புறப்பட்டு விடக் கூடாது என்பதற்காக "நாங்கள் வாங்கி விட்டோம்" என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

உங்களுக்கு கட்டுரையும் கற்பனையும் கேள்விஞானக்கதைகளும் எழுத வரும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் தொடர்ந்து அவ்வாறு பயணிக்கமுடியாது.

மக்கள் நம்பவேண்டுமென்றால் ஆதாரங்களுடன் வரவும்.

அதுவே இன்று மக்களுக்கு நீங்கள்  செய்யும் சேவையாகவும் பெரும்  உதவியாகவும  இருக்கும்.

அதைவிடுத்து எதிரிக்கு எதிரி  நண்பன்

நண்பனுக்கு நண்பன் எதிரி என்ற கதைகள்  பொதுத்தளத்தில் வேண்டாம்.

நன்றி

விசுகு!

கடந்த நவம்பர் மாதம் வரை இந்த நிறுவனம் யார் என்ற கேள்வி இங்கே கேட்கப்பட்டது. இன்றைக்கு இந்த நிறுவனம் நிறைய நிதி அளித்திருக்கிறார்கள் என்று செய்தி இங்கே இணைக்கப்படுகிறது. இந்த நிதிகள் அனைத்தும் நவம்பர் மாதத்திற்கு பின்னரேயே வழங்கப்பட்டிருக்கின்றன.

நவம்பருக்கு முன்னர் வழங்கியிருந்தால் எந்தப் பிரச்சனையுமே வந்திருக்காது. அவர்களுடைய பின்னணி பற்றியும் யாரும் இங்கே கேள்விகளை கேட்டிருக்க மாட்டார்கள்.

இப்பொழுது தங்களுக்கும், தங்கள் நட்பு அமைப்புக்களுக்கும் அத்தோடு சில தொண்டு அமைப்புக்களுக்கும் இவர்கள் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு பிறகும் என்ன ஆதாரம் கேட்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் அமெரிக்காவிலும் வரலாறு காணாத பனிப்பொழிவு இருந்தும் பணப்பொழிவு இசைஞானியின் நிகழ்வைத் தடங்கல் இன்றி நடாத்த உதவுகின்றது போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.