Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகேந்திரனுடனான சந்திப்பில் பிரபாகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமா பெண்களை இழிவுபடுத்துகிறது இயக்குநர் மகேந்திரனுடனான சந்திப்பில் பிரபாகரன்

குமுதத்தில் இயக்குநர் மகேந்திரன்

துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார்.

திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சினிமா பற்றிச் சொல்லி, ஒரு படமும் தயாரித்துத் தரவேண்டும். வரமுடியுமா? என்று கேட்டார்கள். மறுவார்த்தையாக மறுப்புச்சொல்லாமல் சம்மதித்தேன். அருமையான மூன்று மாதங்கள். அங்கேயிருந்து 1996என்ற அவர்களின் வாழ்க்கை சார்ந்த சினிமாவை எடுத்துக் கொடுத்தேன். யாருமே முறைப்படி அனுபவம் பெற்ற நடிகர்கள் கிடையாது. 1996ன் இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தபோதுதான், திடீரென்று எடிட்டிங் அறையின் வெளியே கார் வந்து நின்றது.

சினிமா, கலைப் பிரிவுக்குத் தலைமை வகிக்கும் சேரா என்னை அணுகினார். நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டும். அவரும் உங்களோடு கதைக்க விரும்புகிறார். இப்போதே நீங்கள் புறப்பட வேண்டும் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகள், விவரணைகள், பாதுகாப்பு, சிறிய பதட்டம், பரபரப்பு, ஆர்வம். நாம் சந்திக்கப்போகிறவர் யார் என்று புரிந்துவிட்டது. வேகம் பற்றிக்கொண்டது. சூழ்நிலை கெடுபிடி ஆகிவிட்டது. வழியெங்கும் தம்பியின் படை. பிரமாதமான கட்டுக்கோப்பு. உங்களில் யாராலும் யூகிக்க முடியாத இடத்தை நோக்கிய பயணம். சேரா என்னிடம் மெல்லிய சிரிப்போடு, பேசிக் கொண்டே வந்தார். தலைவர் உங்களின் உழைப்பைப் பற்றி விசாரித்தார். சந்தோஷப்பட்டார். பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இந்த விருப்பம் சாதாரணமானதல்ல என்று பேசிக்கொண்டே வந்தார். எனக்கு ஒன்றுமே நிலை கொள்ளாமல் தவித்தேன். உலகத்தையே தன் பக்கம் பார்க்க வைக்கிற மாபெரும் தலைவன். அவரையே சந்தித்துப் பேசப் போகிற பேரனுபவம். அதை எப்படி நாம் உள்வாங்கப்போகிறோம் என்றெல்லாம் சிந்தனைகள்.

திடீரென்று அடுக்கடுக்கான விசாரணைகள். பாதுகாப்பு குளறுபடி இல்லாத கம்பீரமான விசாரணை. இருப்பிடம் நெருங்கப்போகிறோம் என்று தெரிந்துவிட்டது. சேராவிடம், நான் அவரை எப்படிக் கூப்பிடுவது. சார் என்றா, அல்லது வேறு முறையிலா? என்று, போட்டோக்களில் பார்த்திருந்த அவரின் கம்பீரத்தை நினைவுபடுத்திக் கேட்டேன். நீங்கள் அவரைத் தம்பி என்று அழைத்தால் பிரியப்படுவார். நாங்கள் எல்லோருமே அவரை எங்களுக்குள் அழைக்கும் விதம் அதுதான். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்றார். நான் பயப்படவில்லை. பெருமிதப்பட்டேன்.

அந்த இடமும் வந்தது. அரசியல் பிரிவுத்தலைவர் தமிழ்ச்செல்வன் வெள்ளைச் சிரிப்போடு எங்கிருந்தோ பிரசன்னமானார். என்னை வரவேற்று, அவர் இருக்கிற அறைக்கு அழைத்துப்போனார். நான் எப்படி அந்தக் கதவைத் திறப்பது என்று கணநேரம் திகைத்தபோது, மெல்லத் திறந்தது கதவு. வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். என்னால் அவரை ஐயா என்றுதான் அழைக்க முடிந்தது. என்னை இருக்கையில் அமர்த்திய பிறகே உட்கார்ந்தார். என் மனக்கதவுகளையெல்லாம் திறந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தார் தலைவர். உருகிக்கரைந்து உள்ளே போய்க்கொண்டேயிருந்தேன். அன்போடு பேசத்தொடங்கினார் தம்பி.

நாங்கள் உறக்கம் இல்லாமல், சதா விழித்துக்கொண்டேயிருக்கிறோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கட்டுரை!

pg3.jpg

சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை.

-மகேந்திரன்

இதுதான்

ஒரு நல்ல மனிதனின் பண்பாடு.

எவரோடு என்ன பேச வேண்டும்

எதைப் பேசக் கூடாது எனும் கட்டுக் கோப்பு.

நல்லதொரு பயணம்...............

சந்திப்புகள் தொடரட்டும்

நல்ல படைப்புகள் உருவாகட்டும்.

வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான கட்டுரை. இணைத்ததற்கு நன்றிகள் சாத்திரி

வாசித்த போது ஏதோ ஒன்று மனதை நெகிழ செய்தது...

அதிஸ்டக்கார இயக்குனார் தான். தலைவரிடமிருந்து அழைப்பு வந்து அவரை நேராக பார்த்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கு.

தகவலுக்கு நன்றிகள் சாத்திரி.

  • கருத்துக்கள உறவுகள்

மகேந்திரனின் சந்திப்பைப் பார்க்கும்போது நாமும் தலைவரைச் சந்திக்க வெண்டும் என்ற ஆசை எழுகின்றது. என்றோ ஒரு நாள் சுதந்திரத் தமிழீழத்தில் தேசியத்தலைவனை ஒரு மூலையில் இருந்தாவது நேரே பார்த்தாலே இப்பிறப்பின் புண்ணியத்தைப் பெற்று விடுவோம்!

சந்தித்த மூன்றரை மணி நேரமும் ஒரு வார்த்தை கூட பிரபாகரன் அரசியல் பேசவில்லை என்பது ஞாபகத்திற்கு வந்தது. அவருக்கு எரிக் சோல்ஹம்மிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. தமிழ்ச்செல்வனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. இந்த மகேந்திரனிடமும் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.

அருமை! அருமை! அதுதான் எங்கள் தலைவர்!

1987 þø ÍÐÁ¨Ä¢ø ¿¼ó¾ ´Õ Üð¼ò¾¢ø

¾¨ÄÅ¨É ´Õ ã¨Ä¢ø þÕóÐ ¾Ã¢º¢ò¾

«ÛÀÅò¨¾ «Ê§Âý ¦ÀüÈ¢Õ츢§Èý.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாத்திரியார் இணைப்பிற்கு.. இனிமையான அனுபவம். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் கண்டா ஒரு நாள் நீங்களும் சந்திக்கலாம் தலைவரை.. ஏதாவது அரிய சாதனை செய்யும்.. சும்மா மற்றவைக்கு சோதனை வைச்சு வேதனை கொடுக்காமல்.

:wink: :P

மகேந்திரனின் சந்திப்பைப் பார்க்கும்போது நாமும் தலைவரைச் சந்திக்க வெண்டும் என்ற ஆசை எழுகின்றது. என்றோ ஒரு நாள் சுதந்திரத் தமிழீழத்தில் தேசியத்தலைவனை ஒரு மூலையில் இருந்தாவது நேரே பார்த்தாலே இப்பிறப்பின் புண்ணியத்தைப் பெற்று விடுவோம்!

நன்றிகள் சாத்திரி

25no.jpg

35gi.jpg

mahen0ud.jpg

பட உதவி-மட்டு ஈழநாதம்

படங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சிறி

புலிகள் தலைவர் சினிமா ரசிகரா? சினிமாக்கள் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கிறதா?

ஈழத்தில் நிறைய சினிமாத் தியேட்டர்கள் உண்டா?

சமீபத்தில் பாய்ஸ் படம் திரையிட புலிகள் அனுமதி மறுத்ததாக கேள்விப் பட்டேன்....

புலிகள் தலைவர் சினிமா ரசிகரா? சினிமாக்கள் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கிறதா?

ஈழத்தில் நிறைய சினிமாத் தியேட்டர்கள் உண்டா?

சமீபத்தில் பாய்ஸ் படம் திரையிட புலிகள் அனுமதி மறுத்ததாக கேள்விப் பட்டேன்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சினிமாக்களை எப்பொழுதும் புலிகள் ஆதரிப்பார்கள்!!

எனக்கு இயக்குனர் மகேந்திரன் மீது பொறாமையாக இருக்கு எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு அவருக்கு கிடைச்சிருக்கே :wink: :P

கவலைப்படாதீங்கோ நித்தி.....

நான் அடுத்த முறை தலைவரை சந்திக்க போகும்போது

கூட்டிக்கொண்டு போகிறன்... :P :wink:

புலிகள் தலைவர் சினிமா ரசிகரா? சினிமாக்கள் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கிறதா?

ஈழத்தில் நிறைய சினிமாத் தியேட்டர்கள் உண்டா?

சமீபத்தில் பாய்ஸ் படம் திரையிட புலிகள் அனுமதி மறுத்ததாக கேள்விப் பட்டேன்....

பிரபாகரனுக்கு சினிமா பிடிக்குதோ இல்லையோ தெரியாது..ஆனா சினிமா ஸ்ரார்களுக்கு பிரபாகரனைப் பிடிக்கும். குறிப்பா கப்டன் விஜயகாந் தன் பிள்ளைகளுக்கே புலிகள் இயக்க முன்னணி உறுப்பினர்களின் பெயர்களை வைத்துள்ளதாக எங்கோ செய்தி படித்த ஞாபகம். உள்ளூர உள்ள விருப்பங்களை வெளில சொல்ல விட்டால் எல்லோ. தடாவும் பொடாவும் போட்டா....எப்படி பேசுறது சனநாயக தேசத்தில தடா பொடா அவசியம் தான் போங்கோ..! :wink: :P

இனிமையான அனுபவமான இணைப்புக்கு நன்றி சாத்திரி.

சரி சரி ஒருதரும் பொறாமைப்படாதீங்கோ.

நாங்களும் சீக்கிரம் தலைவரை சந்திக்காலம். :wink:

புலிகள் தலைவர் சினிமா ரசிகரா? சினிமாக்கள் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கிறதா?

ஈழத்தில் நிறைய சினிமாத் தியேட்டர்கள் உண்டா?

சமீபத்தில் பாய்ஸ் படம் திரையிட புலிகள் அனுமதி மறுத்ததாக கேள்விப் பட்டேன்....

தம்பி கட்டுரையை தயவுசெய்து மீண்டும் ஒருமுறை படித்து பாரும் சினிமாரசிகர் (சினிமாபைத்தியம்) இந்தியாவில் தான் கேள்விப்பட்டுள்ளேன் எம்மை பொறுத்தமட்டில் சினிமாஎன்பது ஒரு சிறந்த ஊடகம் சிறந்தகலை உலகில் மனிதனுக்கு கிடைத்த மிகச்சிறந்தபொளுது போக்கு சாதணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் தலைவர் சினிமா ரசிகரா? சினிமாக்கள் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கிறதா?

ஈழத்தில் நிறைய சினிமாத் தியேட்டர்கள் உண்டா?

சமீபத்தில் பாய்ஸ் படம் திரையிட புலிகள் அனுமதி மறுத்ததாக கேள்விப் பட்டேன்....

தலைவரின் வரலாற்று, ஒளிப்பதிவான, விடுதலைத்தீப்பொறிக்கு வழங்கிய செவ்வியோன்றில்

"நான், வீரபாண்டி கட்டபொம்மன் போன்ற வீரமிகு தமிழர் வரலாற்று படங்களை பாாத்தேன், விடுதலை வேட்கை கொண்ட, விடுதலை இயங்கள் பற்றி, நூல்களை படித்தேன். எனக்குள்ளும் வீரம் விளைந்தது" என்று சொன்ன நினைவு

தமிழீழத்தில் சினிமா திரையரங்குகள் நிறைய இல்லை. ஆனால், நல்ல திரைப்படங்கள் மக்களை சென்றடைகின்றது.

தமிழீழம் என்ற எமது நாட்டில், தென்னிந்தியாவிலிருந்து வருகின்ற, மேற்குலகில் இருந்து வருகின்ற, அனைத்து திரைப்படங்களும், "தமிழீழ தணிக்கை பிரிவு" (Censer board) அனுப்பப்ட்டு, தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிடப்படுகின்றன. அதில் நூற்றுக்கு 50 வீதத்துக்கு அதிகமான ஆபாச காட்சிகள் நிறைந்த படங்கள், அல்லது ஆபசத்தை தூண்டு விதமான இரட்டை கருத்துள்ள, வசனநடைகள் இருக்கும் படங்கள் முற்றாக தடை செய்யப்படுகின்றன. இவை விடுவிக்கப்பட்ட தமிழீழப்பகுதியில் மட்டுமின்றி விடுவிக்கப்பட்டாத ஆக்கிரமிப்பு பகுதியிலும் அமுலில' இருக்கிறது.

அந்த வகையில் போய்ஸ் (Boys) திரைப்படம் தடை செய்யப்பட்டது. இதே காரணங்களுக்காக அவுஸ்ரெலியாவிலிருந்து போய்ஸ் (Boys) படச்சுருள்கள் மீள இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக அறிந்தேன்.

கவலைப்படாதீங்கோ நித்தி.....

நான் அடுத்த முறை தலைவரை சந்திக்க போகும்போது

கூட்டிக்கொண்டு போகிறன்... :P :wink:

நன்றி வசி அண்ணா :wink: :P

வாசிக்கும்போது நானே நேரில் சந்தித்தது போல ஒரு உணர்வு.

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குனர் மகேந்த்திரன் ரொம்பக் கொடுத்து வைத்தவர் தான்.. தலைவரே அழைத்து அவரை சந்தித்தார் எனும் போது பெருமையாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றிகள் சாத்திரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.