Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை, பிணங்களின் தேசம். ராஜபக்ச, சுடுகாட்டின் அரசன்! இனி இலங்கை?-ஆனந்த விகடன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bala.jpg
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது. நாம் நிறையப் பிணங்களைப் பார்த்துவிட்டோம்.

தலை நசுங்கிய குழந்தைகள், மார்பகம் சிதைக்கப்பட்ட பெண்கள், குடல் பிதுங்கிய கர்ப்பிணிகள், உடல் சிதறிய போர் வீரர்கள்… நிறையப் பார்த்துவிட்டோம்.

ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அந்தப் பாலகனின் புகைப்படங்கள் அத்தனை கோரமானது இல்லை.

அறியாமை நிரம்பிய முகத்துடன் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிடுகிறான். தனக்கு நேரப்போகும் கொடூரத்தை அவன் அறிந்திருக்கவில்லை.

அடுத்த புகைப்படத்தில் துப்பாக்கிக் குண்டுகள் அவன் மார்பில் பதிந்திருக்கின்றன. உயிர் இல்லை. அந்த முகத்தில் உறைந்திருக்கும் குழந்தைத் தன்மையே உலகை உலுக்கியிருக்கிறது.

இவை அசைக்க முடியாத போர்க்குற்ற ஆவணங்கள்’ என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

கடந்த ஆண்டு ‘கில்லிங் பீல்ட்ஸ்’ என்ற பெயரில் இலங்கையின் கோரமுகத்தை வெளிக்கொண்டு வந்த சனல் 4 தொலைக்காட்சிதான், இந்த ஆண்டு ‘நோ பயர் ஸோன்’ என்ற பெயரில் புதிய ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்ட புகைப்படங்கள், கேணல் ரமேஷ் அடித்துக் கொல்லப்படும் பதற வைக்கும் காட்சி உள்ளிட்ட பல முக்கியமான ஆதாரங்கள் இதில் உள்ளன.

இந்தப் படங்களின் தயாரிப்பாளர் கெல்லம் மெக்ரே, ”இது ஒரு சாட்சியமற்ற போர் என்று கடந்த ஆண்டு குறிப்பிட்டேன். இலங்கை அரசு அப்படித் தான் இதை நடத்தியது.

நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்த ஆதாரங்கள் இரண்டு இலங்கை இராணுவ வீரர்களால், அவர்களின் செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்டவை.

இலங்கையை விட்டு வெளியேறி வந்திருக்கும் அவர்களிடம் இருந்து இதைப் பெற்றுதான் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார்.

இலங்கை யுத்தம் நடைபெற்றபோது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அமைதி காத்த மேற்கத்திய நாடுகளும், அவர்களின் ஊடகங்களும் இப்போது பதறுகின்றன.

தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்ததைப் போல, ‘இலங்கை ஒரு போர்க் குற்றம் புரிந்த நாடு’ என்கிறார்கள். பல நாடுகள் இலங்கை மீது சர்வதேச விசாரணையைக் கோருகின்றன.

ஏதேனும் ஒரு வகையில் நீதியையும் தீர்வையும் தேடும் தமிழர் ஆதரவு அரசியல் சக்திகள், இந்த உலகளாவிய ஆதரவை இலங்கைக்கு எதிராகத் திருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

ஆனால் இலங்கை அரசோ, ‘அனைத்தும் பொய்’ என்று போகிற போக்கில் நிராகரிக்கிறது. சர்வதேச சமூகத்தின் கோபமும் எதிர்ப்பும் இலங்கையைத் துரும்பு அளவுக்குக்கூடச் சலனப்படுத்தவில்லை.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றம் குறித்த விவாதங்கள் விரிவாக நடைபெறவிருக்கின்றன.

இதில் பங்கேற்பதற்காக இலங்கை, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருந்து பல தமிழ் அரசியல் குழுக் கள் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளன.

இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவு இலங்கைக்கு ஓர் அரசியல் நெருக்கடியை உருவாக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. ஆனால், யதார்த்தம் என்ன?

கடந்த ஆண்டு நடைபெற்ற இதே ஜெனிவா மனித உரிமைக் கூட்டத்தில், ‘நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும்’ என்று அமெரிக்கா கண்டிப்பு காட்டியது.

அதைப் பெரிய வெற்றியாக எல்லோரும் பேசினார்கள். நல்லிணக்க ஆணைக் குழு என்பது வேறு ஒன்றும் இல்லை… இலங்கை அரசே ஒரு குழு அமைத்து, தன்னைத்தானே விசாரித்துக் கொண்டது.

அப்படி விசாரித்து தமிழர்களுக்குச் சில சீர்திருத்தத் திட்டங்களை அமுல்படுத்த அந்தக் குழு பரிந்துரைத்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் தீர்ப்பு.

இந்த ஒரு வருடத்தில் அந்தக் கண்துடைப்பு பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு அமுல்படுத்தவில்லை. இந்த நிலையில்தான் மறுபடியும் ஐ.நா. கூட்டம் நடக்கிறது. இப்போது என்ன நடக்கும்?

”நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த மேலும் ஓர் ஆண்டு அவகாசம் கேட்பார்கள். நிச்சயம் அதற்கு அனுமதி அளிக்கப்படும்.

அதைத் தாண்டி சனல் 4-ன் ஆதாரங்களால் சில சர்ச்சைகள் உருவாகலாம். இதற்காக, பெயரளவுக்கு இலங்கையை மேற்கத்திய நாடுகள் கண்டிக்கும். அதைப் பெரிய வெற்றியாக நாம் கொண்டாடலாம்.

ஆனால், அதனால் இலங்கைக்குச் சிறு ஆபத்தும் நேராது. ஏனெனில், இலங்கையை இந்தியா மட்டும் பாதுகாக்கவில்லை. சீனா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையை அரண்போலக் காக்கின்றன!” என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ப்பது பலருக்கு வியப்பை அளிக்கலாம். ‘இலங்கை மீது விசாரணை வேண்டும்; நடவடிக்கை வேண்டும்’ என்ற அமெரிக்காவின் சமீபகாலப் போக்குகளை வைத்துப் பார்க்கும்போது இது முரணாகத் தோன்றலாம்.

ஆனால், நடைமுறையில் சீனாவின் செல்வாக்கு, இலங்கைத் தீவில் எல்லை கடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கையைச் செல்லமாகக் குட்டிவைக்க அமெரிக்கா நினைக்கிறது; தண்டிப்பதற்கு அல்ல!

இதற்கு உதாரணம் ஒன்றும் சொல்ல முடியும்… 2009 இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த இலங்கை இராணுவ ஜெனரல்களில் ஒருவர் சவேந்திர சில்வா. போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? அதே அமெரிக்க இராணுவத்துக்கு, பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகரமாக முறியடிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறார்.

இதுதான் இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் நிஜ முகம்!

இன்னொரு புறம், இத்தகைய ஆதாரங்களை முன்வைத்து இந்திய அரசை மனம் இரங்க வைத்து விடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பிணங்களைக் கண்டு பதறாத காங்கிரஸ் அரசின் ‘கூட்டு மனசாட்சி’, பாலச்சந்திரனின் ஒரே சடலத்தில் விழித்தெழும் என நம்புவது அரசியல் அறியாமை.

எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்து வைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியதோ… அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்னொரு கோணத்தையும் நாம் மனதில்கொள்ள வேண்டும்.

சனல் 4 ஈழப் போர் தொடர்பான ஆதாரங்களைப் படிப்படியாக வெளியிடும் பரபரப்பு உத்தி, மிகவும் ஆபத்தானது. பாலச்சந்திரன் குண்டு துளைக்கப்பட்டு சடலமாக விழுந்து கிடக்கும் புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

அதை வெளியிட்ட சனல் 4-தான் இப்போது பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

இந்தப் புகைப்படங்கள் ஒரே கேமராவால் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை. உண்மையானவை என்று சொல்கிறார் கேலம் மெக்ரே.

எனில், நிச்சயம் கடந்த வருடமே பாலச் சந்திரன் உயிருடன் உள்ள புகைப்படமும் அவர் களிடம் இருந்திருக்கிறது.

அடுத்த ஆண்டு பாலச்சந்திரன் கொல்லப்பட்ட வீடியோகூட வரலாம். இதை மெக்ரேவும் ஒப்புக்கொள்கிறார்.

எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பொருத்த மான நேரத்தில் வெளியிடுவோம்” என்கிறார்.

பொருத்தமான நேரம்’ என அவர் சொல்வதன் பொருள் என்ன? அடுத்த ஆண்டு ஜெனிவா கூட்டமா?

இங்கிலாந்து அரசு, கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 3.8 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு வியாபாரம் செய்திருக்கிறது.

ஒரு பக்கம் இலங்கை யின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஆயுத வியாபாரம் செய்யும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது சனல் 4-ன் ஆவணப்படம் சிறு விமர்சனத்தையும் வைக்கவில்லை.

தமிழர் அமைப்புகளும் இதைப் பற்றி எதுவும் கேட்காமல் ‘யாரோ ஒருவர் செய்தால் சரிதான்’ என்று ஒதுங்கிப் போகிறார்கள்.

ஆனால், நிதர்சன யதார்த்தங்களை உணர்ந்து கொண்டு, நமக்கான நீதியை யாரேனும் பெற்றுத் தருவார்கள் என நம்பியிருக்காமல், இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

அதுதான் தீர்வுக்கான வழி. மற்றபடி மனசாட்சியைத் தட்டி எழுப்பி நியாயம் பெறுவ தற்கு இலங்கையையும் இந்தியாவையும் நியாயவான்கள் ஆட்சி செலுத்தவில்லை.

இலங்கை, பிணங்களின் தேசம். ராஜபக்ஷே, சுடுகாட்டின் அரசன்!

ஆனந்த விகடன்

balachan_01.jpgbalachan_02.jpg

http://tamil24news.com/news/?p=46667

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தமிழர் ஏன் பாகிஸ்தானுடன் கூட்டு வைக்கவில்லை?

வேறை ஒரு கூட்டு வரவேணும்.. :rolleyes:

கட்டுரை பலவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொது சிலவற்றில் குழம்புகின்றது.

சென்றவருட பிரேரணைக்கு அமெரிக்க ராஜாங்க அமைச்சு ஆயத்தபடுத்தும் போது சில மாதங்களுக்கு முன்னர் மகிந்தா கூறியது "ராஜாங்க அமைச்சால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. பாதுகாப்பு அமைச்சு என்னோடுதான்" என்பதாகும். மேலும் கதிர்காமர் காலத்தில் அமெரிக்க- இலங்கை தூதரகம் எவ்வளவோ எதிர்த்தும் அமெரிக்கா அரசு
இலங்கைக்கு தொடர்ந்து உதவியே செய்தது.  இதில் சவேந்திரா சில்வா ஐ.நா.பதவியை வைத்து ஒரு கூடத்திற்குள் ஊடுருவி விட்டால் அதை அமெரிக்க கொள்கையாக வருணிக்க முடியாது.

இங்கிலாந்து அரசின் ஆயுத விற்பனை இன்னொரு குழப்பம். இங்கிலாந்தில் இப்போது இருப்பது பழமைபேண்
கட்சி. இது பிளேயயர் காலத்து தொழில் கடிசியை விட தமிழர்களை எத்தனையோ மடங்கு மதிக்கிறது. இது இங்கிலாந்தே ஒட்டு மொத்தமாக தமிழர் விடையத்தில் மாறி விட்டது என்பதைத்தான் காட்டுகிறது. பொருளாதாரத் தடை ஒன்றும் வராத வரைக்கும் இங்கிலாந்து இலங்கையுடன் வியாபாரம் செய்யும். அதில் கோபத்தபய பெயர் சொல்லப்பட்டு போர்குற்றம் சாட்டுப்படும் வரையும் இலங்கையில் சட்டப்படி பதிவு செய்த பாதுகாப்பு கம்பனி ஒன்று சர்வதேச நாடுகளில் ஆயுதம் வாங்க்குவதை தடுக்க முடியாது. இதில் GATT(WTO) போன்றவற்றில் இருப்பவைகளால் மறுக்க முடியாமல் இருக்கலாம். இதை இங்கிலாந்து போருக்கு பாவிக்க கொடுக்கவில்லை என்பதும், தனியார் பெயரில் உள்ள கம்பனிகள்தாம் வாங்கின
என்பதும் கவனிப்படவேண்டும்.

நாம் எமது இலக்காக இராசா குடும்பத்தை வைத்திருந்தால் எந்த நாட்டை குறை கூற வேண்டும், எந்த நாட்டை ஆதரிக்க வேண்டும் என்பதில் குழப்பம் வராது.

Edited by மல்லையூரான்

ஈழ தமிழர் ஏன் பாகிஸ்தானுடன் கூட்டு வைக்கவில்லை?

நாட்டை விட்டு ஓடி வாற பிசியில அதை பற்றி யோசிக்கவில்லை .

அதைத் தாண்டி சனல் 4-ன் ஆதாரங்களால் சில சர்ச்சைகள் உருவாகலாம். இதற்காக, பெயரளவுக்கு இலங்கையை மேற்கத்திய நாடுகள் கண்டிக்கும். அதைப் பெரிய வெற்றியாக நாம் கொண்டாடலாம்.

ஆனால், அதனால் இலங்கைக்குச் சிறு ஆபத்தும் நேராது. ஏனெனில், இலங்கையை இந்தியா மட்டும் பாதுகாக்கவில்லை. சீனா, அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலங்கையை அரண்போலக் காக்கின்றன!” என்பது சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ப்பது பலருக்கு வியப்பை அளிக்கலாம். ‘இலங்கை மீது விசாரணை வேண்டும்; நடவடிக்கை வேண்டும்’ என்ற அமெரிக்காவின் சமீபகாலப் போக்குகளை வைத்துப் பார்க்கும்போது இது முரணாகத் தோன்றலாம்.

ஆனால், நடைமுறையில் சீனாவின் செல்வாக்கு, இலங்கைத் தீவில் எல்லை கடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இலங்கையைச் செல்லமாகக் குட்டிவைக்க அமெரிக்கா நினைக்கிறது; தண்டிப்பதற்கு அல்ல!

இதற்கு உதாரணம் ஒன்றும் சொல்ல முடியும்… 2009 இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த இலங்கை இராணுவ ஜெனரல்களில் ஒருவர் சவேந்திர சில்வா. போர்க் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இவர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இவர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? அதே அமெரிக்க இராணுவத்துக்கு, பயங்கரவாதத்தை எப்படி வெற்றிகரமாக முறியடிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறார்.

இதுதான் இலங்கையைத் தண்டிக்கக் கோரும் அமெரிக்காவின் நிஜ முகம்!

இன்னொரு புறம், இத்தகைய ஆதாரங்களை முன்வைத்து இந்திய அரசை மனம் இரங்க வைத்து விடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பிணங்களைக் கண்டு பதறாத காங்கிரஸ் அரசின் ‘கூட்டு மனசாட்சி’, பாலச்சந்திரனின் ஒரே சடலத்தில் விழித்தெழும் என நம்புவது அரசியல் அறியாமை.

எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்து வைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டியதோ… அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்னொரு கோணத்தையும் நாம் மனதில்கொள்ள வேண்டும்.

சனல் 4 ஈழப் போர் தொடர்பான ஆதாரங்களைப் படிப்படியாக வெளியிடும் பரபரப்பு உத்தி, மிகவும் ஆபத்தானது. பாலச்சந்திரன் குண்டு துளைக்கப்பட்டு சடலமாக விழுந்து கிடக்கும் புகைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.

அதை வெளியிட்ட சனல் 4-தான் இப்போது பாலச்சந்திரன் உயிரோடு இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறது.

இந்தப் புகைப்படங்கள் ஒரே கேமராவால் அடுத்தடுத்து எடுக்கப்பட்டவை. உண்மையானவை என்று சொல்கிறார் கேலம் மெக்ரே.

எனில், நிச்சயம் கடந்த வருடமே பாலச் சந்திரன் உயிருடன் உள்ள புகைப்படமும் அவர் களிடம் இருந்திருக்கிறது.

அடுத்த ஆண்டு பாலச்சந்திரன் கொல்லப்பட்ட வீடியோகூட வரலாம். இதை மெக்ரேவும் ஒப்புக்கொள்கிறார்.

எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன. பொருத்த மான நேரத்தில் வெளியிடுவோம்” என்கிறார்.

பொருத்தமான நேரம்’ என அவர் சொல்வதன் பொருள் என்ன? அடுத்த ஆண்டு ஜெனிவா கூட்டமா?

இங்கிலாந்து அரசு, கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும் 3.8 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள ஆயுதங்களை இலங்கை இராணுவத்துக்கு வியாபாரம் செய்திருக்கிறது.

ஒரு பக்கம் இலங்கை யின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் ஆயுத வியாபாரம் செய்யும் இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது சனல் 4-ன் ஆவணப்படம் சிறு விமர்சனத்தையும் வைக்கவில்லை.

தமிழர் அமைப்புகளும் இதைப் பற்றி எதுவும் கேட்காமல் ‘யாரோ ஒருவர் செய்தால் சரிதான்’ என்று ஒதுங்கிப் போகிறார்கள்.

வெளிப்படையான உண்மைகள்.  58 கலவரம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையான படுகொலைகள் வரை தமிழர்கள் பகடைக்காய்களே இப்போது மேற்குலக நாடுகள் தமது நலன்களுக்காக  நடந்த கொலைகளைப் பற்றிப்பேசும் காலம். இதில் தமிழர்கள் நலன்கள் என்பது துளியும் கிடையாது ஏனெனில் அத்தனை கொலைகளிலும் பிரித்தானியாவின் ஆதரவும் பங்கும் இருக்கின்றது.

இதன் ஆகக் கூடிய எல்லை இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அதற்காக மகிந்த கோத்தா அப்புறப்படுத்தப்பட்டு தமக்கு சார்பானதொரு அரசு தலமை உருவாக்குவது வரை போகலாம். தவிர சிங்களப் பேரினவாதத்தை துளியும் அசைத்துப்பார்க்க முடியாது.

எத்தனை அழுத்தங்களை மேற்குலகம் கொடுத்தாலும் அது சிங்களத்தை சிங்கள தேசத்தை நோக்கியதாகவே இருக்கும். சிங்களத்துக்கு மாற்றீடாக தமிழர் என்ற ஒரு சக்தியை பற்றி இதுவரை சர்வதேசத்தின் எந்த நாடுகளும் கற்பனை பண்ணியதில்லை இப்போதைக்கு அந்த நிலையும் இல்லை. ஏனெனில் அந்த கற்பனைக்குள் வருவதற்கு கூட தமிழன் தகுதியானவன் இல்லை.

தமிழர்களின் அரசியல் கூச்சல்களுக்கு ஏதாவது ஒரு தலைப்பு வேணும். மூன்று நாலு மாதத்துக்கு ஒருக்கால் ஏதாவது ஒன்றை எடுத்தக்கொள்ள வேண்டியதுதான் பாரிசில் பருதி கொலை பின்னர் கொஞ்ச நாள் போக மாவீரர் மாதம் பிறகு இப்போது நோ பயர் சோன் இதுவும் முடிய நாலஞ்சு மாதத்தில் ஏதாவது புகைப்படம் வரும் இல்லை ஆரயாவது போட்டுத்தள்ளுவாங்கள். படைத்தவன் படி அளப்பான், ஏதாவது தீனி கிடைக்கும்.

அரிச்சுனின் ஒரு பக்க கிண்டல்கள் சில சுவரசியமானவை. பலதடவைகளில் புலிகள் தோற்ற பின்னர் தாக்க பதுங்கியிருப்பத்தாக யாழில் கட்டுரைகள் எழுதியிருந்ததாக பலதடவை கிண்டல்கள் பண்ணியிருக்கிறார். இவரின் கண்கள், சிலர் இன்னமும் இலங்கையின் 65 ஆண்டுகால இன அழிப்பு குற்றங்களை 2009 ம் ஆண்டு மேயை வைத்து சர்வதேசத்தின் மீது சுமத்தி மகிந்தாவை தாம் இன்னமும் காப்பாற்றிவிடலாம் என்று நப்பாசை வைத்து யாழில் எழுதுபவர்களை இவர் கண்டுகொள்ளது ஏன்? இவர்களுக்கு பதில் எழுதும் துணிச்சல் மனதில் இருக்க?

புலிவாந்தி மட்டும்தன் முடிகிறது என்பதுதான் விளக்கமா? அல்லது மகிந்த கூட்டம் ஆட்சியில் இருந்துதுரத்துப்பட்ட பின்னர் தான் தனது எதிர்வு கூறல்களை  இந்த  மேட்டுக்குடி அரச குடும்ப கேடயங்களுக்கு எதிராக எழுத காத்திருக்கிரார?

Edited by மல்லையூரான்

தமிழர்களை ஏமாற்ற முடியாது. இவர்கள் இன்று சர்வதேசத்தின் உதவியுடன் ஜெனிவாவில் உறுதியாகப் போராடுகிறார்கள். தற்போது  கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்றக்கொள்ளவில்லை - நிமல்கா பேர்ணான்டோ

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு ஓடி வாற பிசியில அதை பற்றி யோசிக்கவில்லை .

அல்லது நாட்டை விட்டு வெளிக்கிட்டு 30 வருடமாகி விட்டது.நாடு என்ன நிலை என்று தெரியாமல் எழுந்தமானத்துக்கு எழுதுவதே  தொழிலாகி போனதாலும் தெரியாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. :D

M.I.A தான் இப்ப உங்கள் லேட்டஸ்ட் தலைவி போல  ,நாட்டில ஒரு அரை இஞ்சி அரக்கமுடியவில்லை வெளிநாட்டில் கோலிவூட் லெவலில ஆட்ட தொடங்கிவிட்டீர்கள் என்ற லெவலில கதை .

மிளாகாய்காவது சரியான உரத்தை போடுங்கோ அல்லது அதுவும் முள்ளிவாய்கால் ஆகிவிடும் .

நாட்டை விட்டு ஓடி வாற பிசியில அதை பற்றி யோசிக்கவில்லை .

நீங்களும் ஓடித்தான் போனிங்க்களோ?

உங்களுக்கு விசா குடுத்துத்தான் போனிங்கலாக்கும் எண்டு நினைச்சன்.

எங்கட புலி பெட்டையின் முஸ்லிம் மார்கெடிங் பார்க்கவில்லையோ? நாங்கள் ஹொலிவூட் படத்திற்கு பாட்டு போடுற லெவலுக்கு வந்

புலிகள் குறித்த விமர்சனங்களுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான பெண்போராளிகள் தமது உயிர்களை அர்பணித்துள்ளார்கள. கொடும் சித்திரவதைக்குள் அகப்பட்டுள்ளனர். இதைக் கொண்டு போய் புலிப்பெட்டை என்பது அந்த முன்னாள் மற்றும் இப்போது வதைபடும் பெண் போராளிகளை அவமதிப்பதாகும்.

உங்கள் எழுத்துக்களின் உள்ளார்ந்த அரத்தம் மிக விசமத்தனமானது.

புலம்பெயர் அடயாளம் தேடி பொறுக்கித்தனத்துக்கு இந்த பெம்புள பாடவேணும் ஆடவேணும் என்பதோட சரி. தவிர தாயகத்தில் மக்கள் உங்கள் விருப்பப் படி ஆட வேண்டியதில்லை.

நல்ல நல்ல பெரிய நிலையில் இலை மறை காயாக தமிழர் இருக்கிறார்கள்.

மாங்காயா பிலாக்காயா என்று சொல்லவே இல்லை.

தமிழர்கள் அனைவரும் அடிமைகள். இது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட யதாரத்தம். சிங்களத்துக்க கீழ் அடிமையாய் இருந்தாலும் சொந்த நிலத்தில் அடிமையாய் இருப்பவன் மட்டும் என்றோ ஒருநாள் அதிலிருந்து விடுபடுவான். புலம்பெயர்ந்தவன் நிரந்தர அடிமை. சுதந்திரத்தை துறந்தவன். அவனது அகராதியில் விடுதலை என்ற சொல்லே கிடையாது. தன்னை தான் திருப்திப்படுத்தும் வகையில் இரண்டாம்தர பிரஜை, இலைமறை காய், இன்னும் தொழில்சார் பட்டங்களை டெக்டர் எஞ்சினீயர் பேராசிரியர் என்று வைத்துக்கொள்ளலாம் ஆனால் சொந்த நிலத்தை துறந்தவன் விடுதலைக்கு அப்பாற்பட்ட நிரந்தர அடிமை.

ஈழ தமிழர் ஏன் பாகிஸ்தானுடன் கூட்டு வைக்கவில்லை?

இந்தியாவின் மீது அளவுகடந்த நம்பிக்கை, அவர்களே தமிழீழம் பெற்று தருவார்கள் பெற்று தர உதவுவார்கள் என்ற நம்பிக்கை பெரும்பாலான தமிழருக்கு இருக்கின்றது அதனாலையே இந்தியாவுக்கு பகை நாடான பாகிஸ்தானுடன் கூட்டு வைக்கவில்லை

ஆனால் இந்தியா தமிழர்களை ஒருபோதும் மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை என்பது வேறவிடயம்

  • கருத்துக்கள உறவுகள்

M.I.A தான் இப்ப உங்கள் லேட்டஸ்ட் தலைவி போல  ,நாட்டில ஒரு அரை இஞ்சி அரக்கமுடியவில்லை வெளிநாட்டில் கோலிவூட் லெவலில ஆட்ட தொடங்கிவிட்டீர்கள் என்ற லெவலில கதை .

மிளாகாய்காவது சரியான உரத்தை போடுங்கோ அல்லது அதுவும் முள்ளிவாய்கால் ஆகிவிடும் .

உங்களிண்ட மிளகாய் தோட்டம் மாலைதீவில் கோடி கோடியாய் கொட்டி கொடுக்குதாக்கும்??

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனின் கருத்துக்கள் சுவாரசியமானவை. ஆனால் அவரை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டால்த்தான் பிரச்சனை. அவரது கருத்துக்களை வாசித்தோமா, சிரித்தோமா என்றதுடன் நிறுத்திவிட வேண்டும், அதற்குமேல் எந்தத் தகுதியும் அந்தக் கருத்துக்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவரது பிரச்சினை அவருக்கு. தம்மையும் புலிகள் இயங்கவிட்டிருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் என்கிற ஆதங்கமாக இருக்கலாம். இங்கும் சிலர் இருக்கிறார்கள், பொளொட்டின் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த செ. பாஸ்கரன் மற்றும் வன்னியிலும் இந்தியாவிலும் தோழர்களுக்கு அரசியல் (?) சொல்லிக்கொடுத்த சிறி மாஸ்டர் ..என்று சிலர். தாம் இயங்க அனுமதிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை இன்றுவரை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தப்பித் தவறி மாலைதீவைப் பற்றிக் கேட்டால் பேச்சு அப்படியே அடங்கிவிடுகிறது. இதனாலேயே அவர்களைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காக மாலைதீவுப் பற்றிய எனது கேள்விகளை மிகவும் சிரமப்பட்டு அடக்கி வருகிறேன். பாவம் எத்தனை நாளுக்குத்தான் அவர்களைப் புண்படுத்துவது? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.