Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லெபாரா நூலகம் (‘Lebara Library’) கிளிநொச்சியில் திறப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Lebara_Library_001_CI.jpg

போரால் பாதிக்கப்பட்ட தாயக மக்களிற்கு ‘லெபாரா நிதியத்தினால்’ (Lebara Foundation) கிளிநொச்சியில் புதிய நவீன நூலகம் ஒன்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் வெளிநாட்டுத் தொலைபேசிச் சேவைகளை வழங்கும் ‘லெபாரா மொபைலின்’ அங்கமான லெபாரா நிதியம், இலங்கை, இந்தியா உட்பட பல உலக நாடுகளில் பல்வேறு தொண்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களும், மாணவர்களும் மீள் குடியேறி, தமது வாழ்வை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் இந்தக் காலப்பகுதியில், அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களும், அவர்கள் வழிநடக்கும் மாணவர்களுக்கும் இந்த நூலகம் நிச்சயம் உதவும்.

Lebara_Library_014.jpg

கல்வி நூல்கள் மட்டுமன்றி 25 இற்கும் மேற்பட்ட கணினிகள், காணொளி, ஒலி அமைப்பு உட்பட உபகரண வசதிகளுடன் நவீன முறையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளமை, பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்களும், பல்லாயிரக் கணக்கான மாணவர்களும் பயன்பெற ஏதுவாக இருக்கும் என இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மத குருக்கள் தெரிவித்தனர்.

நூல்களை வாசிப்புதற்கு மட்டுமன்றி நாளாந்தம், மற்றும் வார முறையில் கல்வி வகுப்புகளை நடத்தும் வகையிலும் இந்த நூலகம் அமையப் பெற்றிருப்பதால், உள்நாட்டிலும், வெளிநாட்டில் இருந்தும் செல்லும் கல்வியாளர்களால் மாணவர்கள் கல்வி, மற்றும் பல்மொழி அறிவைப் பெற இருக்கின்றனர். வசதியற்ற மாணவர்களுக்கும் நிதியுதவி செய்து கல்வி வழங்கும் திட்டமும் இதில் உள்ளடப்பட்டுள்ளது.

Lebara_Library_007.jpg

வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மேலதிக கல்வியறிவை ஊட்டும் நோக்கில் இந்த நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போரின் போதும், அதன் பின்னர் இடம்பெயர்ந்தபோதும் இழந்த கல்வியை ஈடுசெய்ய இந்த நூலகம் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

மிக வேகமாக வளர்ந்துவரும் உலகின் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடாக, தம்மை வளர்த்தெடுக்க பாடசாலைக் கல்விக்கு அப்பால் இந்த நூலகம் வன்னி மாணவர்களிற்கு துணை நிற்கும் என லெபாரா நிதியம் நம்புவதாக அதன் நோக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ் மக்களின் சொத்தாக இருக்கும் கல்வி அறிவை தக்க வைக்கும் ஓர்ம மனநிலையை மாணவர்களின் மத்தியில் பேணும் முக்கிய தேவையும் இருக்கின்றது.

இந்த நூலகத்திற்கு நூல்களை வழங்க விரும்புவர்கள் லெபாரா நிறுவனம் இயங்கும் 8 நாடுகளில் அதன் அலுவலகத்தை அல்லது லெபாரா நிதியத்தைத் தொடர்புகொண்டு அவற்றை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lebara_Library_008.jpg

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் (பெப்ரவரி 2012) யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் 50 வீடுகள் அடங்கிய ‘லெபாரா கிராமம்’ (Lebara Village) போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு கையளிக்கப்பட்டிருந்தன.

லியோன், பாஸ்கரன், ரதீசன் (LE-BA-RA) ஆகியோரால் உருவாக்கப்பட்டு, கடந்த 11 வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் லெபாரா நிறுவனம், தனது நிதியத்தின் ஊடாக பல்வேறு தொண்டுகளை செய்து வருகின்றது.

இந்தியா தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள 113 ஏதிலிகள் முகாம்களில் உள்ள 4000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு  கடந்த பல வருடங்களாக இந்த நிதியத்தினால் பல்வேறு பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லெபாரா நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தாயகம், தமிழ்நாடு மற்றும் உலகில் உள்ள சிறுவர்கள், ஏதிலிகளுக்கு உதவி புரிவதற்காக ஒரு மில்லியன் யூரோவை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), மற்றும் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பிற்கு (UNHCR) லெபாரா வழங்கி இருந்தது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் சிறுவர்கள் அனைத்துலக ரீதியாகப் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாராவது விவரம் தெரிந்தால் சொல்லுங்கள். இந்த நூலகத்துக்கு ஒருவர்  நூல்கள் / புத்தகங்கள் அனுப்ப விரும்பினால் எவ்வாறு அனுப்புவது என்று. என்னிடமே கல்வி புத்தகங்களில் இருந்து பல புத்தகங்கள் குவிந்து கிடக்கு,

Lebara_Library_001_CI.jpg

இந்த நூலகத்திற்கு நூல்களை வழங்க விரும்புவர்கள் லெபாரா நிறுவனம் இயங்கும் 8 நாடுகளில் அதன் அலுவலகத்தை அல்லது லெபாரா நிதியத்தைத் தொடர்புகொண்டு அவற்றை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lebara_Library_008.jpg

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் (பெப்ரவரி 2012) யாழ்ப்பாணம் மணியம்தோட்டத்தில் 50 வீடுகள் அடங்கிய ‘லெபாரா கிராமம்’ (Lebara Village) போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு கையளிக்கப்பட்டிருந்தன.

லியோன், பாஸ்கரன், ரதீசன் (LE-BA-RA) ஆகியோரால் உருவாக்கப்பட்டு, கடந்த 11 வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் லெபாரா நிறுவனம், தனது நிதியத்தின் ஊடாக பல்வேறு தொண்டுகளை செய்து வருகின்றது.

இந்தியா தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள 113 ஏதிலிகள் முகாம்களில் உள்ள 4000 இற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு  கடந்த பல வருடங்களாக இந்த நிதியத்தினால் பல்வேறு பணித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

லெபாரா நிறுவனத்தின் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தாயகம், தமிழ்நாடு மற்றும் உலகில் உள்ள சிறுவர்கள், ஏதிலிகளுக்கு உதவி புரிவதற்காக ஒரு மில்லியன் யூரோவை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), மற்றும் ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் அமைப்பிற்கு (UNHCR) லெபாரா வழங்கி இருந்தது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் சிறுவர்கள் அனைத்துலக ரீதியாகப் பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு செய்தி

மிகவும் பலனுள்ள  சேவை

தமிழரது வரலாற்றில் பொறிக்கப்படக்கூடிய பணி

வாழ்க  வளமுடன்

இவர்களின் இணையம்: http://www.lebarafoundation.org/sri-lanka/library

இதில் உள்ள info@lebarafoundation.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கனடாவில் இருந்து எவ்வாறு புத்தகங்கள் அனுப்புவது மற்றும் உதவுவது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதில் வந்தால் விவரங்களை பின்னர் எழுதுகின்றேன்.

Edited by நிழலி
மின்னஞ்சல் முகவரி குறிப்பிட

நல்லதொரு செய்தி,

மிகவும் பலனுள்ள  சேவை !
தமிழரது வரலாற்றில் பொறிக்கப்படக்கூடிய பணி ....

Lebara Foundation னுக்கு நன்றிகள் ...

நல்லதொரு செய்தி,

மிகவும் பலனுள்ள  சேவை !
தமிழரது வரலாற்றில் பொறிக்கப்படக்கூடிய பணி ....

Lebara Foundation னுக்கு நன்றிகள் ...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திட்டம்...வாழ்த்துக்கள்

  • 2 years later...

இவர்களின் இணையம்: http://www.lebarafoundation.org/sri-lanka/library

இதில் உள்ள info@lebarafoundation.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கனடாவில் இருந்து எவ்வாறு புத்தகங்கள் அனுப்புவது மற்றும் உதவுவது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பதில் வந்தால் விவரங்களை பின்னர் எழுதுகின்றேன்.

 நிழலி நீங்கள் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ளலாம்.அல்லது இந்த விலாசத்திற்கே நேரடியாக தானமாக வழங்குவதாக இங்குள்ள (bill of landing or consignee must to be donation to library) பார்சல் அனுப்புவர்கள் மூலமாக அனுப்பலாம்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திட்டம்...வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

போரில் கொல்லப்பட்ட போராளிகளினதும் பொதுமக்களினதும் பிள்ளைகளை பராமரித்து வரும் முள்ளியவளையில் உள்ள 'பாரதி' இல்லம் தமது நூல் நிலையத்துக்கு நூல்கள் கேட்கின்றனர். விரும்பியவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு உதவி புரியுங்கள்.

தொடர்புகளுக்கு: http://www.bharathyillam.org/?cat=6

ஆரு சிறிதரனா... ஹஹ்ஹஹா...ஆள் அதுக்கும் கொமிசன் கேட்பார்.   சாதாரண Recommendation இற்கே காசு கேட்கும் ஆள் இதற்கு விடுவாரா...?

மிகவும் நன்றி நிர்மலன். கண்டிப்பாக தொடர்பு கொண்டு அது தொடர்பான விடயங்களை யாழில் பகிர்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நிழலி.

இவர்களுக்கு நூல்களை வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும்.

அங்கு சென்று வருபவர்களிடம் எல்லாம் உதவி புரியுமாறு கேட்கின்றனராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரு சிறிதரனா... ஹஹ்ஹஹா...ஆள் அதுக்கும் கொமிசன் கேட்பார்.   சாதாரண Recommendation இற்கே காசு கேட்கும் ஆள் இதற்கு விடுவாரா...?

மிகவும் நன்றி நிர்மலன். கண்டிப்பாக தொடர்பு கொண்டு அது தொடர்பான விடயங்களை யாழில் பகிர்வேன்.

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் நானும் டீல் பண்ணியிருக்கிறேன். “எதுவாக இருந்தாலும் காசாக என்னிடம் குடுங்கோ. மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பதே தாரக மந்திரம்.

அவர் எடுப்பது போக மிச்சம் வருமா என்பது சந்தேகம்தான்.

மிச்சம் வந்தால், அவர் குடுப்பதாக நியூஸ் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் ஊடாக எதனையும் செய்விக்க முயற்சிக்காதீர்கள். சிறீதரன் தன்னை தீவிர தமிழ்த் தேசியவாதியாக காட்டிக்கொண்டு தனக்கு சாதகமாக வரக்கூடிய விடயங்களுக்கே முன்னுரிமை கொடுப்பவர்.

புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை திருப்திப் படுத்தும் விதமாகவே சிறீதரன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இவற்றை சிறீதரன் மீதான தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சி காரணமாக கூறவில்லை. நேரடி அனுபவம். மற்றவர்கள் பட்ட அனுபவத்தின் ஊடாக உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.

எந்த உதவியாக இருந்தாலும் நீங்களே அங்கே உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு உதவுங்கள். பணத்தினை அவர்களின் வங்கி இலக்கத்துக்கு அனுப்புங்கள். பொருள் உதவி வழங்க விரும்பின் ஊரில் உள்ள உங்கள் நம்பிக்கையானவர்கள் ஊடாக செய்யுங்கள்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திட்டம்...வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
திட்டம் நல்லது ...
திரைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதும் முக்கியம்.
 
ஆப்ரிக்காவிட்கு உதவி செய்வது என்றால் மேற்கு உலகிற்கு கொள்ளை பிரியம்.
இப்போ பில் கேட்ஸ் இந்தியாவில் சிறுவர்களுக்கு ஊசி ஏத்தும் உரிமம் பெற்று இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.