Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளேக்கை சந்தித்தார் சுப்பிரமணியம் சுவாமி – ஜெனிவா தீர்மானத்தை பலவீனப்படுத்த முயற்சி

Featured Replies

பிளேக்கை சந்தித்தார் சுப்பிரமணியம் சுவாமி – ஜெனிவா தீர்மானத்தை பலவீனப்படுத்த முயற்சி [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 12:07 GMT ] [ கார்வண்ணன் ]

MR-s.swamy.jpgஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைப் பலவீனப்படுத்துவதற்கும், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இந்தியாவின் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சிறிலங்கா அரசாங்கம் தரகராக களமிறக்கியுள்ளது. 

கடந்தவாரம், சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற சுப்பிரமணியம் சுவாமி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவையும் அலரி மாளிகையில் சந்தித்துப் பேசியிருந்தார். 

இதையடுத்து, அமெரிக்கா சென்ற சுப்பிரமணியம் சுவாமி, தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளார். 

தனிப்பட்ட முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட சந்திப்பு இது என்று கூறப்பட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான தரகராகவே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. 

சுமார் ஒரு மணிநேரம் பிளேக்குடன் உரையாடியுள்ள சுப்பிரமணியம் சுவாமி, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மான வரைபு தொடர்பாக சிறிலங்காவுடன் ஒபாமா நிர்வாகம் பேச்சு நடத்தி இணக்கம் காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இந்தத் தீர்மானம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிவினைச் சக்திகளின் வெற்றியாக அமைந்து விடக்கூடாது என்றும், இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறக் கூடும் என்றும் பிளேக்கிடம், சுப்பிரமணியம் சுவாமி எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகளுடனான தனது சந்திப்பு குறித்தும் அவர் திருப்தி வெளியிட்டுள்ளார். 

மனிதஉரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு விசாரணையையும், சிறிலங்காவின் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அனைத்துலக குழுவும் அதை மேற்கொள்ளக் கூடாது என்றும் சுப்பிரமணியம் சுவாமி வலியுறுத்திக் கூறியுள்ளார். 

அமெரிக்க அதிகாரிகளுடன் தான் மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில், சிறிலங்காவுக்கு உத்தரவிடும் தொனியிலோ, அனைத்துலக விசாரணையைக் கோரும் வகையிலோ ஜெனிவா தீர்மானம் இருக்காது என்றும் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 

இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130308107912

 

 

 

 

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அதிலை ஒண்டும் இல்லை.. அதையும் மாத்தப் போகினமா? :D

 

இந்த மேற்குலகம், இந்தியா, ஜனநாயகம் போன்றவற்றால் தீர்வில்லை என்பதை விளங்க வைப்பதற்கு இப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு.. :D

பிளேக் தான்கூட  இலங்கையை கைவிட்டுவிட்டார். இவர் போய் சந்தித்தது பிளேக்கை மட்டுமென்றால், அதற்கு மேலே போகவில்லை என்றால் பிளேக் இனிமேலைய காலங்களில் பொறுப்பு எடுத்து நடத்த முடியாத சாமி போன்றவர்களின் கதையில் நம்பி விசையங்கள் தொடங்க மாட்டார். பிளேக் இந்திய அரசு இலங்கை பற்றி ஒரு வாக்குறுதி கொடுத்தாலே அதை ஏற்று இனி அமெரிக்க கொள்கைகளை திரும்ப மாற்ற முயலமாட்டார்.

 

சாமி போன்றவர்கள் கூறும் எதிர்வு கூறல்கள் இனித் தேவை இல்லை. இரண்டு கிழமைகளில் இந்த வருடம் விசாரணைக்கான பிரேரணை வருகிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

Edited by மல்லையூரான்

அமெரிக்காவுடன் பேசவே மாட்டோம்; பிரேரணை குறித்து கெஹலிய

                                                         hehaliya.jpg
                            
                                                        

ஜெனிவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பாக அமெரிக்காவுடன் பேசமாட்டோம். 

அதற்கான அதிகாரமும் இல்லையென சவால் விடும் வகையில் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.

நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனிவா விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போதே அமைச்சர் இப்படிக் கூறினார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியாவில் பெரும் கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலும் தமிழ் நாட்டிலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
 
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசி ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என சனை கூறியுள்ளார். 

இது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

 

எல்லா விடயங்களுக்கும் ஒரு தனிப்பட்ட அமெரிக்காவை நாட வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் சர்வதேச நாடுகள் அனைத்துக்குமேதெளிவுபடுத்தியுள்ளோம்.


மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் இலங்கைக் குழுவுக்குத் தலைமைதாங்கிச் செல்பவருமான பெருந்தோட்டக் கைத்தொழில் துறைகள்  அமைச்சர் மஹிந்த சமரசிங்க அரசு மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 
 
அதனை உலக நாடுகள் பரிசீலனை செய்யவேண்டும். அமெரிக்காவுடன் மட்டும் தனிப்பட்ட முறையில் பேசவேண்டிய அவசியம்இப்போது இல்லை என்றார். மற்றும் ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

எதிர்க்கட்சிகள் கூறுவது போல் நாம் இவ்விவகாரத்தை அசட்டை செய்ய வில்லை. மிகவும் அவதானத்துடன் இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றோம். தேவையான சகல ஆயத்தங்களை செய்து வருகின்றோம். 

அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்.ஜெனிவா மாநாட்டில் ஏற்படும் சவால்களை எதிர் கொள்ளும் சக்தி எமக்குண்டு என்றார்.

அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தும் படி கேட்கப்படமாட்டாது என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இது உண்மையா? என அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இங்கே ஒரு விடையத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பது எவருக்குமே தெரியாது. இன்னும் பிரேரணை முன்மொழியப் படவுமில்லை. 

இப்படி இல்லாத, தெரியாத விடயம் பற்றி எப்படி அபிப்பிராயம் கூறுவது.பிரேரணை வந்தபின் பார்ப்போம். இந்தியாவும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. நாம் விழிப்புடன்தான் இருக்கிறோம் என்று பதிலளித்தார்.
                            
http://onlineuthayan.com/News_More.php?id=643131884608411905                           

 

 ஐநாவில் தீர்மானம் USA இலங்கையின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டுமாம் - சுப்ரமணியம் சுவாமி             

 

subramanian-swamy.jpgதீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இலங்கையின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத்திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளக்கிடம், சுப்ரமணியம் சுவாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தத் தீர்மானமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தரப்பிற்கு வெற்றியாகும் வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு புலி ஆதரவு தரப்பு வெற்றியடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது புலிகள் மீள ஒருங்கிணைய வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை ஜனநாயக ரீதியில் நியமிக்கப்பட்ட உள்நாட்டு அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும், சர்வதேச சக்திகளின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் சர்வதேச அமைப்புக்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் இலங்கைக்கு நடவடிக்கை எடுக்க

வழியமைத்துக் கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19409:--usa--------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

 

சாமி ரம்புக்கவெலவுடன் ஒரு நாளும் பேசி இல்லைப்போல் இருக்கு.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் இல்லாத தீர்மானத்தை வைத்து எனக்கென்னமோ இதில எங்கட நேரத்தை வினாக்கின்றோமோ என்று எண்ணத்தோன்றுகிறது ....   

மகிந்த கூட்டத்திற்கு ஆப்பு வைக்க கூடியவர்களில் ஒருவர், சுவாமி.

நாங்கள் என்னதான் சுப்பிரமணியசுவாமியை கிண்டலடித்தாலும், சிறிலங்கா அரசின் இந்த நகர்வு மிகவும் கெட்டிக்காரத்தனமான ஒன்று. கடந்த ஆண்டு இந்தியா சிறிலங்காவிற்காக வேலை செய்தது. இந்த முறை இந்தியாவின் தலைசிறந்த தரகு அரசியல்வாதியாகிய சுப்ரமணியசுவாமி அதை செய்கிறார்.

சுப்ரமணிய சுவாமி சிறிலங்காவின் செய்தியையும் இந்தியாவின் செய்தியையும் சரியான முறையில் அமெரிக்காவிற்கு சொல்வார். தமிழர் தரப்பு (அப்படி ஒன்று இருந்தால்) இதை சரியாக விளங்கிக் கொள்வதற்கே தடுமாற வேண்டியிருக்கும்.

நாங்கள் என்னதான் சுப்பிரமணியசுவாமியை கிண்டலடித்தாலும், சிறிலங்கா அரசின் இந்த நகர்வு மிகவும் கெட்டிக்காரத்தனமான ஒன்று. கடந்த ஆண்டு இந்தியா சிறிலங்காவிற்காக வேலை செய்தது. இந்த முறை இந்தியாவின் தலைசிறந்த தரகு அரசியல்வாதியாகிய சுப்ரமணியசுவாமி அதை செய்கிறார்.

சுப்ரமணிய சுவாமி சிறிலங்காவின் செய்தியையும் இந்தியாவின் செய்தியையும் சரியான முறையில் அமெரிக்காவிற்கு சொல்வார். தமிழர் தரப்பு (அப்படி ஒன்று இருந்தால்) இதை சரியாக விளங்கிக் கொள்வதற்கே தடுமாற வேண்டியிருக்கும்.

 

சிரி லங்கா 65 ஆண்டுகளாக ஒன்றன் பின் ஒன்றாக பல கெட்டித்தனமான நகர்வுகளை செய்து , அன்று தென் கொறியாவுக்கு சமனான பொருளாதாரத்தை இன்று சீனாவிடம் கூட கடன் வாங்க முடியாத நிலைக்கு கொண்டுவந்ததுதான் மிச்சம்.

 

சும்மா வந்த சுதந்திரத்தை பேணத் தெரியாமல் சுயாதின விசாரணை குழு நாடுக்குள் வந்தால்தால் தான் இனி அரசியல் நகரும் என்ற நிலை.

 

தொடர்ந்து புழுகி என்ன? கக்கீம் போன்ற முடிச்சு மாறிகளே கிழக்கில்  பொய்க கதைகளை சொல்லித்தான் தேர்தலில் நிற்கவேண்டியிருந்தது இந்த அரசாங்கத்துடன் இணைய.

 

இன்னொரு கெட்டித்தனமான நகர்வு தன்னைல் 1/7 ஒன்றாக மட்டும் இருந்த ஒரு சிறுபான்மையை அழித்தது. அதிலும் திறமை அவர்களை அழிக்கும் போது அரசதலைவர்கள் வரைக்கும் முட்டள் தனமாக போர் குற்றத்தில் மாட்டத்தக்கத்தாகத்தான் செய்து முடித்திருக்கிறார்கள்.

 

எல்லா கொலைகாரர்களும் கொலையை செய்யும் போது ஒரு திட்டத்துடன் தான் போய் செய்கிறார்கள். கொலையை கண்டு பிடித்து கோட்டுக்கு கொண்டு செல்வது எப்பதும் இலகாகவும் இருந்ததில்லை. மேலும் அதை கோட்டில் விசாரிக்கும் சட்ட அறிஞர்கள் அந்த கூட்டத்தின் அறிவை பலதடவைகள் மெச்சித்தான் வழக்கை தாக்கல் செய்வார்கள். அதன் நோக்கம் இருந்த மூளையை குற்றவாளிகள் எப்படி பயன் படுத்தினார்கள் என்பதை நீதிபதியை கவனிக்க வைக்கவே.

 

இந்த பெரிய ராஜத்தந்திரிக்கு தனக்கு என்று ஒரு கட்சி வைத்திருக்க முடியவில்லை. பள்ளிக்கு போக முடியாத காமராஜர் பாவித்த ராஜதந்திரங்களால் "King Maker" என்ரு பட்டம் எடுத்த பின்னர்தான்  அரசியலை விட்டார். இந்த PhD மானம் மரியாதை இல்லாமல் தெருவெல்லாம் அடி வாங்குகிறார்.

 

அதிலே என்ன பெரிய ராஜதந்திரம்?

 

Edited by மல்லையூரான்

கெலும் மைக்ரே இன்னொரு காணொளியை இல்லை வேறு போர்க்குற்ற ஆதாரங்கள் என்பனவற்றை விட அமெரிக்காவிற்கு இலங்கையில் அதன் பிடி இறங்கி செல்வதே தமிழர் பிரச்சனையை முன்னெடுப்பதற்கு காரணம் என்பது தமிழர் தரப்பால் விளங்கிய ஒன்று.

 

எனவே இதில் சுவாமி எதையும் செய்யமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி  போன்றோரின் இருப்பே

பிரபாகரன்களை  உருவாக்க போதுமானது........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

திருனெல்வேலி அல்வாக்கடையா  அமெரிக்கா.....இது எல்லாம் எம்மை உறுதி குலைய செய்வதற்கு கோத்தா கூட்டத்தின் படம் காட்டல்...

Edited by alvayan

எல்லோரும் பிரேரணை வரும் வரையும் சும்மா சும்மா நொட்டி பார்ப்பாங்க.

 

பிரேரணை தோல்வியாக போனால் சிங்களவரின் ராஜதந்திரமென்று டமாரம் அடிபாங்கள். . 

பிரேரணை வெற்றி மாதிரி காணப்பட்டால் போன பிரேரணைக்கு பிறகு கனகாலம் அடங்கியிருந்த மாதிரி கப்சிப் ஆக இருப்பாங்கள்.

 

25 கூட்டத் தொடர் அடுத்த வருடம் வர அறிவுறைகளை தூக்கி கொண்டு காளாங்கள் மதிரி ஊரெங்கும் முளைப்பாங்கள்.

 

இவ்வளவுதான் அவர்கள் அரசியல் பாண்டியத்தங்கள்.

சுவாமியை சிங்களம் பாவித்து அமெரிக்காவை இல்லை இந்தியாவை மாற்றுவதை விட....

 

 

அமெரிக்காவும் இந்தியாவும் சுவாமியை பாவித்து மகிந்த கூட்டத்தை உடைக்க சாத்தியங்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமியை சிங்களம் பாவித்து அமெரிக்காவை இல்லை இந்தியாவை மாற்றுவதை விட....

 

 

அமெரிக்காவும் இந்தியாவும் சுவாமியை பாவித்து மகிந்த கூட்டத்தை உடைக்க சாத்தியங்கள் அதிகம்.

நீங்கள் கூறுவதைப்பார்த்தால் சுப்பிரமணிய சுவாமி சிறிலங்காவிற்கு ஒரு சகுனி 

சுவாமியின் நடவடிக்கைகளை பார்க்கும்பொழுது எரிக் சொல்ஹெய்மின் நினைவுகள் வருகின்றன  :icon_idea:

பிளேக்கைச் சந்திப்பதற்கு தமிழ் தலைமைகள் பல காலம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அநேகமாக அவரது அலுவலக அதிகாரிகளை மட்டுமெ சந்திக்க முடிகிறது.

 

ஆனால் சுவாமி என்ற தனி மனிதன் நினைத்ததும் பிளேக்கை சந்திக்க முடிகிறது.

 

இந்த நிலையில் அமெரிக்கா பெரிதாக எதையோ கிழிக்கப் போகிறது என்ற முழக்கங்களைக் கேட்கின்ற போது எரிச்சல் தான் வருகிறது. 

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக ஏற்பட்ட எரிச்சலால் சிறிலங்காவை தட்டி வைக்க அல்லது சிறிலங்காவுடன் பேரம் பேச தமிழர் தொடர்பில் அமெரிக்கா பேசுகிறது அவ்வளவு தான்....

பிளேக்கைச் சந்திப்பதற்கு தமிழ் தலைமைகள் பல காலம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. அநேகமாக அவரது அலுவலக அதிகாரிகளை மட்டுமெ சந்திக்க முடிகிறது.

 

ஆனால் சுவாமி என்ற தனி மனிதன் நினைத்ததும் பிளேக்கை சந்திக்க முடிகிறது.

 

இந்த நிலையில் அமெரிக்கா பெரிதாக எதையோ கிழிக்கப் போகிறது என்ற முழக்கங்களைக் கேட்கின்ற போது எரிச்சல் தான் வருகிறது. 

 

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் காரணமாக ஏற்பட்ட எரிச்சலால் சிறிலங்காவை தட்டி வைக்க அல்லது சிறிலங்காவுடன் பேரம் பேச தமிழர் தொடர்பில் அமெரிக்கா பேசுகிறது அவ்வளவு தான்....

தமிழருக்கு முடிவு என்ன என்று எதிர்வு கூறத்தக்க கராணிகள் எதாவது வெளியில் புதிதாக வெளிவந்தில்லை. ஆனால் ஐரோப்பாவில் இருப்போருக்கு தெரியும் ஒபாமின் வருகை எவ்வளவுக்கு உலகை ஆறுதலில் போட்டது என்று. ஜேர்மனி, நோர்வே எங்குமேதான் வித்தியாசம் காட்டியது. அது நாள் எடுத்து தன்னும் இலங்கையிலும் காட்டித்தான் தீரும்.

 

இலங்கை இந்தியாவை சந்திக்க முடியவில்லை என்பதை வெளிவிவகார மந்திரி சபை விவாத்தில் வெளியிட்டிருந்தார். அவர் தான் இலங்கையை  அமெரிக்காவிடம் பேசவும் சொன்னது. அதையும் அவர் சபையில் தான் வெளிவிட்டார்.

 

இப்போது மூன்று விடையங்கள் வெளிவருகிறது.

1. இலங்கையின் தூதுவர்கள் வாசிங்டன் போனார்கள். - முடிபற்றி கொழும்பு ஊடகங்கள் எதுவும் இதுவரையில் சொல்லவில்லை.

2. கெகெலிய இலங்கை அமெரிக்காவுடன் பேசாது என்றார்.(போன முறை 75 பிரதிநிதிகளை அனுப்பிய இலங்கை இந்த முறை அமெரிக்காவுடன் பேச சட்டமில்லை என்றிருக்கிறார்)

3.மகிந்தா சாமியை கூப்பிட்டு அமெரிக்கா அனுப்பினார்.(இந்தியா முழுவதிலும் இவர் ஒருவர்தான் இலங்கையுடன் வெளிப்படையாக ஆதரவுடன் இருப்பவர்)

 

நிகழ்சிகளை பார்த்தால் இலங்கை உந்த பழம் புளிக்கும் என்று கூறுவது போலத்தான் படுகிறது. ஆனால் சிலர் சந்தேகப்படுகிறார்கள் சாமி மாதிரி ஊத்தைகள் அமெரிக்க ஆதரவை பெற எந்த கேடுகெட்ட வேலைகளையும் முயற்சிக்கலாம் என்பது.

 

ஆனால் சில நிகழ்சிகள் சாமிக்கு எதிராகவும் இருக்கு. 

1.போன முறை அமெரிக்கா மீது இந்தியா போட்ட அழுத்தங்களுக்கு இந்த முறை எதையும் இலங்கையில் செய்து முடித்துக் காட்டவில்லை. இதனால் இந்தியாவே விலத்திவிட்டது. சாமி இந்தியா பக்கத்தால் அமெரிக்காவை திருப்த்திப்படுத்த முடியாது. இலங்கைக்காக அவரால் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது. செய்யத்தக்கது புலிகள் இந்தியாவில் பயிற்சி எடுக்கிறார்கள், தலைவர் திரும்பி வருகிறார் போல கதைகளை சொல்வதுதான்.  இதை சிறிலங்கா பலமுறை சொல்லியும் வடக்கு  இராணுவத்தை கூட மீளப்பேற வேண்டும் என்பதில் கூட அமெரிக்கா விட்டுக்கொடுக்கவில்லை. அமெரிக்கா இன்னொருமுறை இலங்கையில் இலகுவில் ஏமாறது. 

 

2. பிரேரணையை அமெரிக்காதான் கொண்டுவந்தது. இப்படியான அலுவல்களை அமெரிக்கா இதுவரையில் செய்து இல்லை. அதாவது பிரேரணையால் அது சிலவற்றை செய்ய முயல்கிறது. அப்படியானால் இது வரையில் அமெரிக்காவுக்கு இலங்கையில் கிடைத்தது என்ன? எதுவும் இல்லை. சாமியால் சீனாவை வெளியேற்றவும் முடியாது, அமெரிக்காவுக்கு முதலிட சந்தர்ப்பம் எடுத்து கொடுக்கவும் முடியாது. எப்படியோ அமெரிக்க எதிர்பார்க்க கூடியதெல்லாவற்றுக்கும் இலங்கை அமெரிக்காவுடன் பேசியேதான் ஆக வேண்டும்.

 

3.இப்போதும் பிளேக்தான் தெங்கிழகாசிய அதிகாரி. ஆனால் அவர் சிலகாலமாக இலங்கையுடன் திருப்தியில் இல்லை.

போனதடவை இலங்கை வந்து பிரேரணைக்கு ஆதரவு வாங்கி சென்றபின்னர் இலங்கை ஏமாற்றியது. 

 

பிரேரணையில் கேட்ட LLRC பரிந்துரைகளுக்கான தேசிய செயல்பாட்டு அறிக்கையில் அவரை ஏமாற்றியது.

 

அவர் தானாக முன் வந்து இலங்கை அமெரிக்காவை ஏமாற்றியது என்று காங்கிரசில் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

 

இந்த நிலையில் மகிந்தா அல்லது கோத்தா போய் பிளேக்கை சந்தித்தால் அவர் இன்னொரு தடவை இலங்கையை காபாற்ற முயலாம். சாமியின் வெறும் தூண்டல் கதைகளை மட்டும் கேட்டுக்கொண்டு அவர் இன்னொருதடவை தனது கையை இலங்கையில் சுட்டுக்கொள்ள விரும்பமாட்டார். பிளேக் தனது முழு பலத்தையும் போட்டுத்தான் இலங்கைக்கு உதவினவர். தான் ஏமந்துவிட்டத்தாக காங்கிரசில் சொல்லிவிட்டார், இனி அவரை போய் சாமி திருப்த்தி படுத்த கூடியது எதுவும் இருக்குமாப் எனக்கு படவில்லை.

கடந்த வருடம் தமிழர்கள் சில நடவடிக்கைகளை ஜெனீவா சார்ந்து எடுத்த பொழுது, பொதுவாக அமேரிக்கா இவ்வாறான முடிவுகளை மூன்று மாதங்களுக்கு முன்னராகவே எடுத்துவிடும் என பலராலும் கூறப்பட்டது.

 

அதேவேளை சாமி உண்மையில் பிளேக்கை சந்தித்தாரா என்பது அமெரிக்க தரப்பால் உறுதிப்படுத்தப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தரப்பில் இருந்து பிளேக் சுவாமியை சந்தித்தார் என ஏதாவது செய்திகள் வந்தனவா??

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தரப்பில் இருந்து பிளேக் சுவாமியை சந்தித்தார் என ஏதாவது செய்திகள் வந்தனவா??

 

குண்டூஊசி விக்கறவன் எல்லாம் சந்திப்பதை செய்தியாக போட அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் இடமில்லை  தோழரே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.