Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகமெங்கும் மாபெரும் மாணவர் புரட்சி வெடித்துள்ளது!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்றுமட்டும் தோன்றுகிறது... மிக அருமையான வாய்ப்பு நெருங்கியபோது, அனைத்தையும் ஒற்றுமையில்லாமல் கோட்டைவிட்ட 'குடாக்குகள்' ஈழத்தமிழர்கள்...

எல்லோரும் சேர்ந்து இழுத்தால் தான் தேர் நகரும். ஈழ தமிழர் 90% வீதமான மக்கள் ஈழக் கோரிக்கையுடன் இருக்கிறார்கள், இருந்தார்கள். உலக தமிழர் நாம் எல்லாம் கட்சி வேறுபாடுகளை மறந்து தேசிய தலைவரின் பின்னல் நின்றிருந்தால் (8 கோடி மக்கள் )

ஒன்றில் அரசியல் வழியில் அல்லது ஆயுத வழியில் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். நாம் தான் பிழை விட்டு விட்டோம். அதை திருத்தி கொள்வதை விட்டு, 30 லட்சம் சனம் தன்னால் முடியுமான வரை போராடியது, அதை தவறான வார்த்தை பிரயோகங்களால் எழுதுதல் கூடாது.

அரசியல் வாதிகள் தங்கள் கட்சி வரையறைக்குள்தான் இயங்க முடியும். ஆனால் மாணவர் சமுதாயம் ஒரு நாட்டின் தலை விதியையே மாற்றக்கூடியது.

இந்த மாணவர் மணிகளுக்குள் ஒரு சுயநலமில்லாத தலைவன் உருவாகுவான்.

சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை: தீவிரமடையும் மாணவர் போராட்டம்

             
            

பதிவு செய்த நாள் -மார்ச் 11, 2013  at   10:34:05 PM

          

 

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த
வலியுறுத்தியும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக
இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், தமிழகத்தின் பல்வேறு
இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னை லயோலா கல்லூரி
மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது, தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.


கோவை அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் 10 பேர் கால வரையற்ற உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும், நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் 13
பேரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி புனித வளனார்
கல்லூரியிலும் மாணவர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியிலும் மாணவர்கள் போராட்டம்
நடைபெற்றது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் இலங்கை அரசை
கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள்
கல்லூரிக்கு அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நுழைந்து
போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும்
மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.

 

http://puthiyathalaimurai.tv/students-protest-continue

இந்த விவாதத்தில் மனுஸ்ய புத்திரன் சொல்வதைக் கவனியுங்கள். இதை ஒத்த கருத்தைத்தான் நான் நேற்று முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கடைசியில் தங்கபாலு கூட மாணவர்கள் ஒரே கோரிக்கையில் இல்லை என்று மாணவர்கள் மீதே குற்றச்சாட்டை திருப்புகிறார். ஒரு மாணவர் மாநில அரசு தமக்கு ஆதரவாக இருப்பதாக வேறு சொல்கிறார். லயோலா கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்த பின்பும் இப்படி சொல்கிறார்.

இந்தப் போராட்டம் சில மாற்றங்களை செய்யக் கூடும். மற்றையபடி புரட்சி வெடித்து விட்டது என்று சொல்வது எல்லாம் சற்று அதிகம்.

ஈழத் தமிழர்கள் அடிக்கடி எதையாவது எதிர்பார்த்து ஏமாறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தில் மனுஸ்ய புத்திரன் சொல்வதைக் கவனியுங்கள். இதை ஒத்த கருத்தைத்தான் நான் நேற்று முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தேன்.

கடைசியில் தங்கபாலு கூட மாணவர்கள் ஒரே கோரிக்கையில் இல்லை என்று மாணவர்கள் மீதே குற்றச்சாட்டை திருப்புகிறார். ஒரு மாணவர் மாநில அரசு தமக்கு ஆதரவாக இருப்பதாக வேறு சொல்கிறார். லயோலா கல்லூரி மாணவர்களை காவல்துறை கைது செய்த பின்பும் இப்படி சொல்கிறார்.

இந்தப் போராட்டம் சில மாற்றங்களை செய்யக் கூடும். மற்றையபடி புரட்சி வெடித்து விட்டது என்று சொல்வது எல்லாம் சற்று அதிகம்.

ஈழத் தமிழர்கள் அடிக்கடி எதையாவது எதிர்பார்த்து ஏமாறுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால் இதை சொல்ல வேண்டி இருக்கிறது.

சபேசனின் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன்.. மாணவர்கள் டெசோவில் இணைந்துகொள்ள வேண்டும்.. :D

டெசோ தனக்கு தெரிந்த வழியில் போராடட்டும். மாணவர்கள் தமக்கு தெரிந்த வழியில் போராடட்டும். ஒன்றை ஒன்று மோத விடுகின்ற சக்திகள் பற்றி மாணவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டம் ஒரு எல்லையை தாண்டிப் போகாது. அதை லயோலா கல்லூரியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் பார்த்தோம். அதையும் மீறி எல்லை மீறிப் போனால் கருணாநிதி நல்லவராகி விடுவார்.

சரியான கருணாநிதி அரசியல்தான்.

 

இது வரையும் எழுதிய பிரேரணைகளால் ஒன்றும் வராது என்று. - அது இப்போ சரியா என்று சந்தேகம்

 

டெசோ இல்லாமல்  மாணவர் போராட்டத்தால் ஒன்றும் வராது-  அதுவும் பின்னர் சந்தேகம். (அல்லது டெசொ நின்றிருந்தால் தமிழ்நாட்டு அரசு உண்ணாவிரத்தத்தை குழப்பாமல் மாணவர்களை இறக்க விட்டிருக்கும்?)

 

திரிக்கு திரி ஓடி ஓடி மாணவர் போராட்டம் வெற்றிகரமாக குழப்பட்டுவிட்டது என்று விளம்பரம்- அது மூடி மறைக்க ஏலாத ஏமாற்றம், அங்கு சந்தேகத்திற்கே இடமில்லை.(யாரும் எல்லா மாணவரும் பள்ளிகளின் முன் இறந்து விழப்போகிறார்கள் என்று தமக்குதான் ஆரூடம் சென்ன்னர்களா? எல்லை, எந்த எல்லை? இன்றையை போன்று போராடத்தை அடக்க முயன்றால் எல்லாபள்ளிகளும் சேற்ந்துகொள்ளும் என்ற வெற்றியின் எல்லையா?)

 

இப்போது எல்லை தாண்டி போகாது, போனால் கருணாநிதி நல்லவராகிவிடுவார் - அப்படி ஒரு துஸ்டனுக்கு பின்னால் போனால்த்தான் விடுதலை ஆச்சு என்றுதானா சாத்திரம் கூறினார்கள்.(செயலாளர் நாயம் கூடத்தானே விடுதலைக்கா உழைக்கிறார். எப்படி கருணாநிதி இனி மட்டும்தான் நல்லவராக முடியும்? )

 

சரியான கருணாநிதியின் டெசொ அரசியல் தான்.

 



உண்ணா விரத மேடைக்கு வந்த டெசோ அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையே மாணவரகளின் போராட்டத்தினை ஒடுக்கியமைக்கு பின்னணி என்றும் கூறப்படுகிறthu
 

 

இனி அந்த கடவுள் துணை,
அந்த இறைவண் துணை என்பதைவிட
மாணவர்கள் துணை என்பதில் பெருமிதம் கொள்வோம்.


மாணவர்களின் இந்த புரட்சி ஆழி அலையில் போலி
இந்திய தேசியம் உடைக்கபடும், தமிழர் எழுச்சி பொங்கட்டும்.

 

தமிழர் மீது திட்டமிட்ட இனபடுகொலை நடந்தபோதும்,
தமிழக மீனவர்கள் காக்கை கருவிபோல, நாயயைவிட கேவலமாக கொல்லபட்டபோதும்.
நாடற்று நாதியற்று நின்றோம்.
 

எங்கள் தமிழ் மொழிக்கு, எங்கள் தமிழ் இனத்துக்கு என்று
தனிநாடு வேண்டும் என்று கண்டோம், அடைய உறுதிகொண்டோம்.

 

போதும் இந்த கிந்திய அடிமைமோகம்
இனியும் புழுவாய், புச்சியாய் அற்ப்பமாய்
கிந்தியாவின் காலில் வீழ்ந்துகிடந்து சாகும் அடிமையாய் இல்லாமல்
தமிழ் இனம் தனித்துவமாய் சுந்திரமாய் இந்த உலகில் வலம் வரவேண்டும்

 

இவர்கள் மாணவர்கள் அல்ல
மானம்உள்ளவர்கள் மாண்புமிக்கவர்கள்.
தமிழ் சமுதாய மாணவர்கள்
இனி உலக மாணவர்களின் முன்னோடி
அனைத்து உலக மாணவர்களின் வழிகாட்டி
 

தமிழ் இனம் சாகும் போது எந்த கடவுளும் வந்துஉதவவில்லை
போராடும் மாணவர்களே
நீங்களே தமிழர்களின் துணை அரண்,
உங்களை வணங்குகிறேன் போற்றுகிறேன்.

 

முகநூல் - பாண்டிதுரை

  • கருத்துக்கள உறவுகள்

.. . நாம் தான் பிழை விட்டு விட்டோம். அதை திருத்தி கொள்வதை விட்டு, 30 லட்சம் சனம் தன்னால் முடியுமான வரை போராடியது, அதை தவறான வார்த்தை பிரயோகங்களால் எழுதுதல் கூடாது.

இதில் தவறான வார்த்தையில் விமர்சிக்க எங்கே இருக்கிறது? குடாக்குகள் என்ற பதம் இப்படி அப்பாவியாக ஏமாந்து போக வேண்டாமென குறிக்க, அக்கறையில் எழுதப்பட்டது.

 

சிதம்பரத்தில் நல்ல மாணவ செல்வாக்குடன் இன்றும் உண்ணாவிரதம் தொடர்வதை தொலைகாட்சிவாயிலாக காண முடிந்தது. நாளை முதல் சென்னை , திருச்சி மாணவர்கள் திரும்ப உண்ணாவிரதத்தை / வேறு வகையிலான போராட்டங்களை ஆரம்பிப்பார்கள் என்று கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், வெற்றி பெற வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.