Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலிகள்

Featured Replies

எல்லோருக்கும் வணக்கம்

புதினம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற "போலிகள் " என்ற கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

மணிவாசகன்

போலிகள்

காலையில் தன்னுடைய பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு வந்ததிலிருந்தே சதாசிவத்தின் கால்கள் நிலத்தில் நிற்க மறுக்கின்றன. பரபரப்பும் அவசரமும் கலந்த வேகத்துடன் அவர் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார்.

லண்டன் மாநகரின் அந்தப் பிரபல்யமான கோயில் திருவிழாவின் இன்றைய உபயகாரர் அவர்தான். பரபரப்பு இருக்காதா என்ன?

அதுவும் அவருடைய பரம எதிரி குலசேகரத்தின் திருவிழாவைப் புகழ்ந்து சனமெல்லாம் வாய்நிறையப் பேசிக் கொள்வதைக் கேட்கக் கேட்க தன்னுடைய திருவிழாவை எப்பாடு பட்டாவது குலசேகரத்தின் திருவிழாவைவிடச் சிறப்பாகச் செய்துவிட வேண்டுமே என்ற ஆர்வம் அவரிடம் நிறைந்திருந்தது. அதனை ஆர்வம் என்று சொல்வதை விட வெறி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வெறி அவரது ஒவ்வொரு நடவடிக்கையிலும் பளிச்சென்று தெரிந்தது.

சதாசிவம் சாதாரண "அகதியாக" இங்கிலாந்திற்கு வந்தவர்தான். கடும் உழைப்பும் "வேறுபல" காரணங்களும் இன்று அவரை நகரின் பெயர் குறிப்பிடக் கூடிய தமிழ்ப்பிரமுகராக உயர்த்தியிருக்கிறது.

நகரத்தில் இருக்கும் இரண்டு பெற்றோல் நிரப்பும் நிலையங்களுக்கும் மூன்று கடைகளுக்கும் சொந்தக்காரர். அத்துடன் கணக்கில் வராத பல "வியாபாரங்களிலும்" சதாசிவம் கில்லாடி.

இதைவிட ஆலய பரிபாலன சபைத் தலைவர், புலம்பெயர் மக்கள் முன்னேற்றச்சங்கச் செயலாளர். .. .. இப்படிப் பலப்பல பதவிகள். வளமும் வசதியும் உள்ள இடத்தைத் தேடி பட்டங்களும் பதவிகளும் வந்து ஒட்டிக் கொள்வது இயல்பு தானே.

இருக்கின்ற பதவிகள் போதாதென்று தமிழ் வர்த்தகர் சங்கத் தலைவர் பதவியிலும் ஒரு கண் வைத்திருக்கிறார். அந்தப் பதவிக்குத் தன்னுடன் போட்டியில் இறங்கியிருக்கும் குலசேகரத்தின் திருவிழாவைப் பற்றி மற்றவர்கள் வாய் நிறையப் புகழ்ந்து பேசினால் எரிச்சலாக இருக்காதா என்ன?

"இவங்கள் எல்லாற்றை வாயையும் அடைக்கிற மாதிரி என்ரை திருவிழாவை எடுப்பாச் செய்து காட்டாட்டி நான் சதாசிவம் இல்லை."

மனதிற்குள் சபதம் எடுத்தவாறு காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

"குமார் .. ஓடிப்போய் தமிழ்க் கடையிலை நல்லதாப் பாத்து ஒரு நூறு தேங்காய் வாங்கிக் கொண்டு வா…. ….. சும்மா கண்டதையும் வாங்காமல் நல்லா கிலுக்கிப் பாத்து வாங்கு .. . ."

ஏதோ சொல்ல வாயெடுத்த குமாரைக் கவனிக்க அவருக்கெங்கே நேரம்? அதற்குள் தாவி மற்றைய வேலையாளை எதற்காகவோ ஏவிக் கொண்டிருக்கிறார்.

குமார் அந்தப் பெற்றோல் நிலையத்தில் வேலை செய்யும் இளைஞன். புலம்பெயர் மண்ணிலே எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்

புலத்தின் நிதர்சனக்களை தோலுரிக்கும் கதை,

இதைக் கதை என்பதை விட சாட்டை அடி என்று சொல்லலாம்.புலத்தில் எங்க சாதி இருக்கு எண்டு இங்கையும் கன பேர் கொக்கரிச்சுக் கொண்டு திரியுறவை.அவயின்ர தகிடுதத்தம் எல்லாம் இப்ப ஒவ்வொண்டா அவிழுது.

தொடர்ந்து இவ்வாறான நல்ல சமூகப்பிரஞ்ஜை உள்ள ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

என்று திருந்தும் எமது சமூகம்,வேரொடு புடுங்கி நட்டாலும் ,உந்த கேடு கெட்ட விசயங்கள் மட்டும் தவறாம வந்திடும்.

இங்க கோவில் எல்லாம் இப்படியான வியாபாரங்களும் நடப்புக்களும் தானே?

  • தொடங்கியவர்

வணக்கம் நாரதர்,

சரியாச் சொன்னீங்கள். உண்மையிலை எங்களைச் சுத்தியிருக்கிற அழுக்குகளை வெளியிலை சொல்ல விரும்பாமல் அதெல்லாம்இப்ப இல்லை எண்டு எங்களை நாங்களே சமாளிக்கிறம் அல்லது ஏமாத்திறம்.

இது எப்பிடி இருக்குதெண்டால் வீட்டுக் கழிவுகளை எடுத்த வெளியிலை வீசாமல் வெளியிலை தெரியாமல் நடுவீட்டுக்குள்ளை வைச்சு பெரிய கம்பளியாலை மூடி மறைச்சமாதிரி. கொஞ்ச நாள் போனால் வீடே நாறும். .....

அதுக்குமுதல் அழுக்கு இருக்குது எண்டு வெக்கப்படாமல் சொல்லி அதை இல்லாமல் செய்யிறது தான் சரி எண்டு நினைக்கிறன்.

அன்புடன்

மணிவாசகன்

நல்ல கதை மணி அண்ணா :P

பாவம் குமார் மாதிரி எவ்வளவு பேர் இந்த நாட்டுக்கு அகதியா வந்து நம்பருமில்லாம வேலை செய்து கஸ்டப்படுகினம் ஆனால் சமுதாயத்தில மனச்சாட்சியை கொன்று போட்ட சதாசிவம் மாதிரியான ஆக்கள் நல்லவர்கள் கொடைவள்ளல்கள் :evil:

கதை நன்றாக உள்ளது மணிவாசன் அண்ணா. புலம்பெயர்வாழ் மக்களின் வாழ்க்கை முறையை நன்றாக விளக்கியிருக்கிறீங்கள். வாழ்த்துக்கள்.

அங்கிள் அப்படியே ÒÄõ¦ÀÂ÷óதோâý ¯ñ¨Á நிலை¨Â ¯½÷â÷ÅÁ¡¸ ¦º¡øÄ¢Â¢Õ츢ȣ÷¸û. கதை நன்றாக இருக்கிறது.

அகதி நிலை மறுக்கபட்டு இப்படியான நம்மினத்தவர்களின் முதலித்துவத்தால் துன்பங்களை அனுபவிக்கும் இளைஞர்களின் உணர்வுகளை அழகாக சொல்லி இருக்கின்றார்கள்.

சாப்பிட முடியாத கடவுளுக்காக பணத்தை வாரி இறைக்கும் மனிதர்கள் ஒரு மனிதனின் பசியின் தன்மையை அறிய முடியலையே.

அழகான கதை.. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் நாரதர், நித்திலா, சுஜிந்தன்,ரசிகை, ரமா,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

அன்புடன்

மணிவாசகன்

¿ýÈ¢ Á½¢Å¡º¸ý..¸¨¾ ¿ýÈ¡¸ þÕ츢ÈÐ.

¿õÁ¢¨¼§Â ÀÄÕõ þôÀÊò¾¡ý....

¾¢Õó¾ ÅÆ¢Â¢ø¨Ä..!!! þÐ ¸ºôÀ¡É ¯ñ¨Á.

  • தொடங்கியவர்

வணக்கம் பொடியா, :D

கருத்துக்கு நன்றி.

  • 3 weeks later...

புலத்தில் நடப்பதை சிறப்பாகப் சொல்லியிருக்கிறீர்கள் மணிவாசகன்.

கோயில்களுக்கும் பெயருக்காகவும் அள்ளிக் கொடுக்கத் தயாரான பலர் தம்மிடம் வேலைசெய்பவர்களை அடிமைகளாக நடத்துவது இங்கே வழமை.

சாட்டையடியான கதை

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டு;க்கள் மணி வாசகன் இது போன்ற இன்னும் ஆக்கங்களை எதிர்பாக்கிறோம் புலத்தில் வதிவிட அனுமதி பத்திரம் இல்லாத பலரின் நிலை இதுதான் ஆனால் அவர்களை வெள்ளை காரனை விட எம்மவர்களே பிழிந்தெடுத்து வேலை வாங்குகிறார்கள் என்பது தான் வேதனை தெடருங்கள்

மற்றொரு சிறப்பான சிறுகதை மணிவாசகன்.மூன்று கதைகளும், நமக்கும் தெரிந்த கதைதானே நானேன் இப்பிடி ஒரு கதையை எழுதேல்ல என்று யோசிக்க வைக்கக்கூடியவை.பாராட்டுக்கள

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் நடப்பதினை கதை மூலம் காட்டும் மணிவாசகனுக்கு பாராட்டுக்கள்.

நானும் லண்டனில் படிக்கும் போது பெற்றோல் நிலையத்தில் இப்படியான பணத்தினை மட்டும் குறியாக இருக்கும் முதலாளிகளின் கீழ் வேலை செய்த அனுபவங்கள் உண்டு. மனித நேயமற்ற இப்படியான தமிழர்களின் கீழ் வேலை செய்யும் தமிழர்களுக்கு எத்தனை, எத்தனை கதைகள்.

உண்மையை நன்றாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் மணிவாசகன்.

  • 4 weeks later...

பங்கர்....

மணியண்ணை

சும்மா

கலக்குறார்....

நெசமத்தன்

சொல்லிறியளே

மணியண்ண...

என்ன

இது

உங்க கதை

போல கிடக்கு...

அனுபவம்

யாஸ்திய

கிடக்கு...

என்னண்ண

நீங்கள்

முப்படை

தளபதியோ....??

இந்த

கலக்கு

கலக்கிறியள்...

அண்ணை

அப்ப

சொல்லிறியளே

உங்கட

குரு யாரண்ண...???

என்னண்ண

இப்படி

வெட்க்கப் படுறியள்

சொல்ல...

சிவகாமியோட

பார்த்தன்

சும்மா

அம்மா

டயலாக்க பேசி

கவிழ்த்து விட்டியள்...

சும்மா

சொல்லப் படாது

பவர் புல் கிள்ளடி

மணியண்ண....

ஆம..

அவரு

கடவுளுக்கே

மனு கொடுதடத

பாட்டி யெல்லே....

அப்ப எனக்கு

மணயாச்சு

மணி அண்ண

வரட்டே....

-வன்னி மைந்தன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.