Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படித்ததில் பிடித்த குட்டி கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்.
 

 

உண்மைதான்

ஆனால் இந்த பக்குவம் எமக்கு வரும்   போது காலம் கடந்திருக்கும்

 

தொடருங்கள்

  • Replies 82
  • Views 308.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் முக்கியமான படிப்பினைக் கதை, அபராஜிதன்!

 

அடிக்கடி தலையைக் காட்டுங்கள்! :D

  • தொடங்கியவர்

அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை.

கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்கள்.

ஒரு விளையாட்டாக அதை வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன்பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்கள்..

ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டான். :D


ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை,நிறை இருக்கும் என்பதை புரிந்து கொண்டால் நமக்கு சகிப்புத் தன்மை
வந்துவிடும்.
 

 

உண்மைதான்

ஆனால் இந்த பக்குவம் எமக்கு வரும்   போது காலம் கடந்திருக்கும்

 

தொடருங்கள்

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் :)

 

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றி

 

 

நன்றி  

லியோஅண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் .. :)

 


தொடருங்கள் அபராஜிதன்

 

 

 

நன்றி அக்கா அடிக்கடி இந்த பக்கமும் எட்டி பாருங்க :)

 

 


மிகவும் முக்கியமான படிப்பினைக் கதை, அபராஜிதன்!

 

அடிக்கடி தலையைக் காட்டுங்கள்! :D

 

 

நன்றி  அண்ணா  அடிக்கடி வர முயற்சி  பண்றன் :)

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் "பசு " ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது ...!

பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சியை விவசாயி

தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன ..!
இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்
பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட யாது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது ..
.
"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்

 

via fb 

  • கருத்துக்கள உறவுகள்

"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்

 

நன்றி

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்கியமான படிப்பினைக் கதை, அபராஜிதன்!

  • தொடங்கியவர்

"நீதிக்கதை"

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம். தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை. எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.

வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,

"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.

நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?" என்று கேட்டார்.

"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன். பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன். இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார்.

சமமாக இருந்தது.

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.


"மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம் நையாண்டி பழிசுமத்தல் சேறு பூசுதல் " என்று பலவிஷயத்தில் வருவர்
நீயோ அவற்றை நீ அடித்தளமாக வைத்து முன்னேறிவா இந்த பசுவை போல்

 

நன்றி

தொடருங்கள்

 

 

நன்றி  அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும்  :)


முக்கியமான படிப்பினைக் கதை, அபராஜிதன்!

 

 

நன்றி  அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் ..  :)


ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"

# காலங்கள் மாறினாலும் ... மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை :D

 

via fb 

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

 

நன்றி

தொடருங்கள்

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றிஅண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

"ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி

இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை"

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

"அதுக்கு அவள் எத்தனை மரம் ஏறி இறங்கினாளோ.......?"

 

அருமையான தத்துவம்! :D

 

தொடருங்கள், அபராஜிதன்!

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிக்கதைகள் சிறந்த படிப்பினை தரும் பதிவுகளாக இருக்கின்றன.

தொடருங்கள் அபராஜிதன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது. 

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு, 

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார். 

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்… 

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார். 

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம். 

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர், 

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

 

via fb 

  • தொடங்கியவர்

நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

 

நன்றி

தொடருங்கள்

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் :)

 

 

அனைத்தும் நல்ல கதைகள், பகிர்வுக்கு நன்றிஅண்ணா

 

 

 

நன்றி   வருகைக்கும் கருத்துக்கும்

:)

 

அருமையான தத்துவம்! :D

 

தொடருங்கள், அபராஜிதன்!

 

 

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும் :)

 

 

குட்டிக்கதைகள் சிறந்த படிப்பினை தரும் பதிவுகளாக இருக்கின்றன.

தொடருங்கள் அபராஜிதன்

 

 

நன்றி அண்ணா  வருகைக்கும் கருத்துக்கும்:)

  • கருத்துக்கள உறவுகள்

பூதம் ஒரு சின்னப் பிழை விட்டிட்டுது , முதல்ல  மனேஜரிலிருந்து  ஆரம்பித்திருக்க வேண்டும் ! என்ன சொல்ல பூதத்துக்கும் பாதம் சறுக்கும் !!

தொடருங்கள் !!

  • கருத்துக்கள உறவுகள்

பூதம் ஒரு சின்னப் பிழை விட்டிட்டுது , முதல்ல  மனேஜரிலிருந்து  ஆரம்பித்திருக்க வேண்டும் ! என்ன சொல்ல பூதத்துக்கும் பாதம் சறுக்கும் !

 

You have excellent presence of mind..Mr.Suvi.

 

அருமையான குட்டி படிப்பினை கதைகளை இணைக்கும் 'அபராஜி'க்கும் நன்றி

  • தொடங்கியவர்

வீட்டின் வறுமையால் படிக்க மிகவும் கடினப்பட்ட இவர், கடன் வாங்கி புத்தகங்களைப் படித்தார். அப்பாவிடம் இருந்து நேர்மையைக் கற்றிருந்தார். எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்.

வழக்கறிஞர் தொழிலில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதை தன் கொள்கையாக அவர் எப்பொழுதும் கொள்ளவில்லை. ரொம்பவும் அமைதியான இவரின் மனைவியுடன் உறவில் கொஞ்சம் கசப்பிருந்தது; ஒரு நாள் ஹாயாக அவர் சுடு சூப்பை முகத்தில் ஊற்ற, துடைத்த விட்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

தொடர்ந்து பல தோல்விகளை வாழ்க்கையில் சந்தித்த இவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது ஆட்சிக்கு வந்தால் அடிமை முறையை முற்றிலும் நீக்குவதாக உறுதி தந்தார்.

ஒரு சிறுமியின் கடிதத்தை படித்து, அதில் ஒல்லியான முகவாட்டம் கொண்ட அவர், தாடி வளர்த்துக் கொண்டால் பெண்கள் ஓட்டளிப்பார்கள் என்கிற கருத்தை, நன்றி சொல்லி அப்படியே செய்தார். 

ஜனாதிபதி ஆனதும் ஓர் உறுப்பினர், ‘‘லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!’’ என நக்கலாக சொல்ல, ‘‘அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்’’ என்றார் அமைதியாக.

வென்றதற்கு பின் கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்திக் கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார். கொதித்து எழுந்த தெற்கு மாகாணங்கள் அமெரிக்காவை விட்டு விலகி போர் தொடுத்தன. போர்களங்களில் தன் பிள்ளைகளை இழந்தார்; நாடே தத்தளித்தது. அப்பொழுது எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை என அறிவிப்பு வெளியிட தெற்கு மாகணங்களில் இருந்த கறுப்பின மக்களும் இவருக்கு ஆதரவாக போரில் குதிக்க நாடு ஒன்றுபட்டது.

கெட்டிஸ்பர்க் உரையில் தான் ஜனநாயகம் மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு நடத்தப்படுகிறது என விளக்கம் தந்தார்; தேர்தல் வந்தது மீண்டும் வென்றார். 

ஆப்ரகாம் லிங்கனை ஜான் பூத் எனும் நாடக கலைஞன் நாடகம் பார்த்தபொழுது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. மீளா தூக்கத்தில் ஆழ்ந்தார் அடிமைகளை ரட்சிக்க வந்த அந்தத் தலைவன். 

‘‘நான் வெல்வதைவிட உண்மையாக இருக்கவே வேண்டும்; நான் மாபெரும் வெற்றிகளை பெறுவதைவிட என் அக வெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால். அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்’’ என்றவர் ஆபிரகாம் லிங்கன்

 

VIA FB


பூதம் ஒரு சின்னப் பிழை விட்டிட்டுது , முதல்ல  மனேஜரிலிருந்து  ஆரம்பித்திருக்க வேண்டும் ! என்ன சொல்ல பூதத்துக்கும் பாதம் சறுக்கும் !!

தொடருங்கள் !!

 

 

 

நன்றிகள் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)

 

 

You have excellent presence of mind..Mr.Suvi.
 


அருமையான குட்டி படிப்பினை கதைகளை இணைக்கும் 'அபராஜி'க்கும் நன்றி

 

நன்றிகள் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

*If you plant honesty, you will reap trust.
* If you plant goodness, you will reap friends.
* If you plant humility, you will reap greatness.
* If you plant perseverance, you will reap contentment.
* If you plant consideration, you will reap perspective.
* If you plant hard work, you will reap success.
* If you plant forgiveness, you will reap reconciliation.
* If you plant faith in God , you will reap a harvest.

So, be careful what you plant now; it will determine what you will reap later..

“Whatever You Give To Life, Life Gives You .

 

via fb 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் = மிசிஸ்  வாசு.

பல ஆண்களின் தோல்விக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான்  =  மிஸ்டர்  முதலாளி. :)  :icon_idea:  :D

  • தொடங்கியவர்

இந்திய மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, அமெரிக்கா போக ஆசை வந்தது. ஒரு அமெரிக்க அதிகாரியை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், அமெரிக்காவுக்கு போய் சேர்ந்தது.

அமெரிக்காவில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள் தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,

"ஏய்... நான் இந்தியாவில் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு, மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும் தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.

அந்த ஊழியர், "உண்மை தான்... நீ இந்தியாவில் காட்டு ராஜா தான்... ஆனால், அமெரிக்காவுக்கு குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.

இந்திய டாக்டர்கள் சொந்த நாட்டில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். "நீங்கள் அமெரிக்கா போய் குரங்காக இருப்பதை விட, இந்தியாவில் ராஜாவாக இருங்கள்

 

via fb


ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் = மிசிஸ்  வாசு.

பல ஆண்களின் தோல்விக்குப் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான்  =  மிஸ்டர்  முதலாளி. :)  :icon_idea:  :D

 

நன்றிகள் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.:)

  • 1 month later...
  • தொடங்கியவர்

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

 

 

  • தொடங்கியவர்

ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். முதல்நபர், 'இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் பலத்தைக் கொடு’ என்று கடவுளிடம் கேட்டார். உடல் பலத்தைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல் வெறும் உடல்பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

இரண்டாவது நபர், 'ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா’ என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஒரு பொத்தல் இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கி விட்டார்.

மூன்றாவதாக அந்தப் பெண், 'நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு’ என்று சொன்னாள். தண்ணீர் வற்றிவிட்டது. நடந்து சென்று கரையைத் தாண்டினாள். இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?’ என்று கேட்டார். 'எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம் இது. அந்த அனுபவம்தான் இப்படிப் புத்திசாலித்தனமாக என்னை செயல்பட வைத்தது’ என்று அந்த அம்மா சொன்னார்.

 

via fb

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடவுளும் ஒரு பாடம் படித்திருப்பார்!

 

இப்படிக் கொஞ்சப் பெண்கள் இருந்தால், உலகத்தில் ஆறுகளே இருக்காது! :icon_idea:

 

நன்றிகள்,அபராஜிதன்!

ஓர் ஆற்றின் இந்தக் கரையில் இருந்து அந்தக் கரையைக் கடக்க இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். முதல்நபர், 'இந்த ஆற்றை நீந்திக் கடக்கத் தேவையான உடல் பலத்தைக் கொடு’ என்று கடவுளிடம் கேட்டார். உடல் பலத்தைக் கொடுத்தார் கடவுள். ஆனால் அந்த ஆளுக்கு நீந்தத் தெரியவில்லை. நீச்சல் பயிற்சி இல்லாமல் வெறும் உடல்பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்? தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தார்.

இரண்டாவது நபர், 'ஆற்றைக் கடந்து போவதற்கு எனக்கு ஒரு படகு தா’ என்று கடவுளிடம் கேட்டார். படகு வந்தது. அதில் ஏறிப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால் அந்தப் படகில் ஒரு பொத்தல் இருந்தது. தண்ணீர் உள்ளே வந்து, படகு கவிழ்ந்து, தண்ணீரில் மூழ்கி விட்டார்.

மூன்றாவதாக அந்தப் பெண், 'நான் அந்தக் கரைக்குச் செல்ல வசதியாக தண்ணீரே இல்லாமல் செய்துவிடு’ என்று சொன்னாள். தண்ணீர் வற்றிவிட்டது. நடந்து சென்று கரையைத் தாண்டினாள். இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், 'எப்படியம்மா நீ மட்டும் புத்திசாலித்தனமாக இப்படி நடந்துகொண்டாய்?’ என்று கேட்டார். 'எனக்கு முன்னால் இரண்டு பேர் செய்த தவறுகளில் இருந்து நான் படித்த பாடம் இது. அந்த அனுபவம்தான் இப்படிப் புத்திசாலித்தனமாக என்னை செயல்பட வைத்தது’ என்று அந்த அம்மா சொன்னார்.

 

via fb

 

பெண்கள் எப்போதும் புத்திசாலிகள், ஆண்கள் கோட்டை விட வேண்டியது தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.