Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணாநிதி கதறல்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி

சென்னை: இலங்கை விவகாரத்தில், மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்துள்ளதால், இலங்கை தமிழர்களின் நிலையில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்ததற்காக கட்சியினர் கவலைப்படவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட சிலரின் ஆசைப்படி நாங்கள் மத்திய அரசிலிருந்து வெளியே வந்து விட்டோம். இப்போது என்ன நடந்து விட்டது? ஈழத்தமிழர்களின் பிரச்னைகள் தீர்ந்து விட்டதா? அல்லது அமெரிக்க தீர்மானத்தின் மீது ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இந்தியா திருத்தம் கொண்டு வந்து விட்டதா? அல்லது பார்லிமென்ட்டில் தான் தீர்மானம் எதுவும் கொண்டு வந்து விட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியே வந்து விட்டது. இது ஒன்று தான் நடந்துள்ளது. ஆனால் இதற்காக கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, தி.மு.க., ஏன் வெளியே வரவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ள அவர், இவையெல்லாம் தி.மு.க., மீது பழி போட நடக்கும் முயற்சி என குற்றம்சாட்டியுள்ளார். வரலாறு தெரிந்தவர்கள் இது போன்ற யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் தான் இரட்டை வேடம் போடுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளதற்கு பதிலளித்துள்ள அவர், கடந்த 1956 ம் ஆண்டு முதல் தமிழக மக்கள் தனது நடவடிக்கைகளை அறிவார்கள் என்றும், அதே வேளையில், கடந்த 2002ம் ஆண்டு பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும் என ஜெ., தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை மக்கள் மறந்து விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் உறவுகளை முறித்துக்கொள்ள தி.மு.க., தயங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள அவர், இதன் மூலமாக மத்திய அரசு கவிழ்ந்து தான் பிரதமராக வரலாம் என்ற எண்ணத்தில் முதல்வர் இவ்வாறாக கூறிவருவதாக கருணாநிதி பதிலளித்துள்ளார். சேது சமுத்திர திட்டம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவற்றில் முதல்வர் ஜெயலலிதா தான் இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Dinamalar

இது தினமலர் வாசகர்களின் கருத்து....

sundararaman - chennai,இந்தியா

தலைவா உன் குடும்ப பாசம்தான் உனக்கு பெருசா இருக்குது இல்லையா? உன்னோட இந்த பேட்டியிலிருந்து இலங்கை தமிழனுக்காக நீ ஒன்றும் பதவியை தூக்கி எரிய வில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஏதோ ஜெயலலிதாவும் மற்றவர்களும் கிண்டல் அடிக்கிறார்களே என்றுதான் வெளியே வந்ததாக தெரிகிறது. நீ தமிழனுக்காக ஒன்றுமே செய்ய தயாராக இல்லை. சுயநலம் மட்டுமே உன் மொத்த எதிர்பார்ப்பு. அடுத்த தேர்தலிலும் காங்கிரசு காரன் உன்கூடதான் கூட்டணி வைக்க போகிறான். நீ முடியாது என்று சொன்னாலும் தப்ப முடியாது. முப்பது தொகுதிகள் விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயம் உனக்கு வரப்போகிறது. ஜாக்கிரதை.

T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா

மீண்டும் கூட்டணிக்குள் நுழைய ஆசையா பெருசு?

இலங்கை தமிழர்கள்ன்னு ஒரு இனம் இருந்தாத்தான அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு...அதுதான் 2009லே எல்லாத்தையும் அழிச்சுப்பிட்டீன்களே...

maravan - dublin,அயர்லாந்து

கடந்த 2009 ம் வருடம் நீங்கள் வெளியே வந்திருந்தால் பல அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்..அது உங்களுக்கு தெரியவில்லையா???... மறவன்

Edited by SUNDHAL

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் ஆட்சி கவிழவேண்டும்.. அவ்வளவுதான்..

ஆனால் கவிழ விடமாட்டோம் என்கிறார் அன்பழகன்..! உங்கட நாடகத்துக்கு ஒரு அளவே இல்லையா..!? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி சபேசன் அண்ணா பண்ணுற காமடிக்கும் ஒரே அளவே இல்லியா...முடியல்ல :D

கருணாநிதி கூறுவது மிகச் சரியான கூற்று

கருணாநிதி மத்திய அரசிலிருந்து விலகியதால் ஈழத் தமிழருக்கு என்ன நன்மை நடந்து விட்டது. எனவே தானைத் தலைவர் கருணாநிதி வில க வேண்டும் என்று கூக்கிரலிட்டவர்களே கவனியுங்கள். கருணாநிதி மத்திய அரசீலருந்து விலகாமல் மன்மோகன்சிங்கிற்கும் அன்னை சோனியாவிற்கும் தந்திகளை அனுப்பியிருந்தால் பின்வரும் நன்மைகள் ஏற்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

1. மகன் அழகிரி இப்போது முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மதுரையில் போய் இருந்திருக்க மாட்டார்.

2. டில்லியிலிருந்து சிதம்பரமும் மற்றைய முக்கியஸ்தர்களும் அடிக்கடி தமிழகம் வ்நது தானைத் தலைவர் கருணாநிதீயைச் சந்தித்து  எப்படி தமிழ் மக்களுக்கு ஈழத்தைப் பெற்றுக் கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தியிருப்பர்.

3.தமிழகத்தின் சகோதரி கனிமொழிக்கும் மத்தியில் பலம் வாய்ந்த அமைச்சர் பதவி கிடைத்திருக்கும்.

4. மத்திய அரசிலிருந்து விலகாமல் வயிற்றில் வாய்வு விழுந்து விட்டால் நம் தலைவர் கருணாநிதி மெரீனா கடற்கரையில் தம்பதி மன்னிக்கவும் தம்பதிகளள்ள் சமேதராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வினாடிகள் உண்ணாவிரதம் இருந்திருப்பார்.

5. பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி மனித சங்கிலி வைத்திருப்பார்.

6. மத்திய அரசிற்கு எல்லாரையும் தந்தி அடிக்கும்படி கேட்டிருப்பார். இதனால் தபால் திணைக்களத்திற்கு பல கோடி ரூபா இலாபம் ஏற்பட்டிருக்கும். 

இதையெல்லாம் விட்டு விட்டு பதவி விலகச் சொல்லி நீங்க சொல்ல நானும் பதவி விலக தேவையா இதெல்லாம்.

இதையெல்லாம் தமிழக மக்களும் எனது உயிரினும் மேலான ஈழத்தமிழர்களும் உணர்ந்து கொள்ம் நாள் விரைவில் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

நீங்கள் சொல்வது உண்மைதான்

ஆனால் என்ற ஒரு சொல் பல அர்த்தங்களைக்கொடுக்கக்கூடியது

அந்த வகையில் இந்த வெளியில் வருதல் என்பது இன்றைய நிலையில் நிரந்தரம் என்பதற்கு அத்திவாரமாக பார்க்கப்படும்.  இதற்கும் மத்திய  அரசு அடங்கவில்லை செவி  சாய்க்கவில்லை எனில் விளைவுகள் விபரீதமாகும்

அதை யெயலலிதாவே முன் நின்று செய்வார்  அத்துடன் மத்திய  அரசே மாறலாம்.

இன்றைய நிலைப்படி தமிழகத்தில் வெளிக்கட்சிகள் எவையும்  (காங்கிரசோ பாரதீக ஐனதாவோ) கட்டுக்காசைக்கூட பெறமுடியாதநிலைதான் உள்ளது.  இதை யெயலலிதா முழுமையாக பாவித்தாரானால் பாராளுமன்ற  தேர்தலில் தனியே  நின்று 40 ஆசனங்களைக்கைப்பற்றுவார்.

அதன் மூலம் மத்திய  அரசில் முக்கிய  இடத்தை அல்லது அவரது கனவான இந்தியாவை ஆளுவதை அடைவார்.

அண்மையில் நடாத்தப்பட்ட பல புரட்சிகளை கொஞ்சம் கவனியுங்கள் ஆய்வாளரே

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

பலதடவை பொறுத்திருந்த அனுபவம் எமக்கு உண்டு..! :D இதற்கும் பொறுத்திருப்போம்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி சபேசன் அண்ணா பண்ணுற காமடிக்கும் ஒரே அளவே இல்லியா...முடியல்ல :D

பாவம் அவரும்  தமிழன் தானே

எப்பொழுதும் எம்மவருக்கு எம்மவரின் திறமைகள் குறித்து ஒரு ஏளனம் இருக்கும்

மாணவர் போராட்டம் பற்றி  அன்றிலிருந்து இவருக்கும் இங்கு வேறு சிலருக்கும் இந்த ஏளனப்பார்வை  உள்ளது

கவனித்தீர்களானால் புரியும்

மாறவே மாட்டாத யென்மங்கள்

பிழைத்துப்போகட்டும் :(

நாங்கள் வெளியே வந்ததால், இலங்கை தமிழர்களுக்கு என்ன நடந்து விட்டது? கருணாநிதி கேள்வி

இதைப்பார்த்தால் ஏதாவது மத்தியஉ அரசு செய்துவிடக்கூடாது

செய்தால் தான் தான் காரணம் அழிவுக்கு என்பது புலனாகிவிடும் என்று  கலந்து எடுத்த முடிவு போல் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவின், ஐந்தாவது நிமிடத்திலிருந்து.... கருணாநிதி ஐயோ... கொலை பண்றாங்கப்பா... என்று கதறுவது தான்... உண்மையான கதறல். :D

பிற் குறிப்பு: 30.06.2001 எடுக்கப் பட்ட பழைய‌ ஓளிப்பதிவு இது.

Edited by தமிழ் சிறி

அதிகம் பொறுக்கத் தேவையில்லை. ஒரு பத்து பன்னிரண்டு மாதத்தில் நடக்க உள்ள தேர்தலில் பதில்கள் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

என்ன அண்ணா..இப்படி பெரிய பெரிய பந்தி பந்தியாய் எல்லாம் ஆய்வு எழுதுவிங்கள்...ஆனால் இப்படி எழுதுவிங்கள் என்று கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை....மாணவர்கள் சீமான் அண்ணா  வைக்கோ ஜயா  போன்றவர்கள் கருணாநிதியை பற்றி சொல்லுறது  தெரியும் தானே ....மற்றது அவர்ட்ட மகள் ஜெயிலுக்குப் போனது...கருணாநிது ஆட்ச்சியில் இருந்த போது தான் ஈழத்தில் மக்கள் அவலவு அழிவையும் சந்திச்சது......இருன்ட உலகில் வாழாமல் வெளிச்சமா உலகுக்கு வாங்கோ சபேசன் அண்ணா....சுண்டல் சொன்னது போல உங்களின் கருத்தை வாசிச்சு சிரிப்பை அடக்க முடிய வில்லை.... :D

kollaniriiiiiiiiii.jpg
 
Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் பொறுக்கத் தேவையில்லை. ஒரு பத்து பன்னிரண்டு மாதத்தில் நடக்க உள்ள தேர்தலில் பதில்கள் தெரியும்.

இது தர்க்க ரீதியான பதில் போல தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் பொறுக்கத் தேவையில்லை. ஒரு பத்து பன்னிரண்டு மாதத்தில் நடக்க உள்ள தேர்தலில் பதில்கள் தெரியும்.

ஹலோ சபேசன்.. பதில் தெரியும்.. சரி.. ஆனால் அது என்ன பதில் என்றுதான் எங்களுக்கு இப்ப தெரிய வேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இது தர்க்க ரீதியான பதில் போல தான் இருக்கிறது.

கடவுளை  நம்பாத சபேசனது சாபம் பலிக்குமா???? :(

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை  நம்பாத சபேசனது சாபம் பலிக்குமா???? :(

கிளிநொச்சி விழாது என்றும் ஒரு ஆய்வு செய்தவர். :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி விழாது என்றும் ஒரு ஆய்வு செய்தவர். :icon_mrgreen:

இடிக்கிறது சிவன் கோயில்

படிக்கிறது சிவபுராணம்

என்ற கதை போலக்கிடக்கு....... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CBI விட்டு வெருட்டின வெருட்டில கருணாநிதி பயந்து போய்ட்டார் அது தான் நிஜம்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி டெசோவைத் தூசு தட்டிக் கொண்டுவந்தும் ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. மத்திய அரசில் இருந்து வெளியேறியும் ஒன்றையும் சாதிக்கவில்லை என்பவற்றுக்கு அப்பால் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தால் எரிச்சலில் இருக்கின்றார் என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துகின்றது.

அவருக்கு ஈழத் தமிழ்மக்களை தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தியே பழக்கப்பட்டுவிட்டது. அதனால் முதல்வர் ஜெயலலிதா ஏதாவது நல்லதைச் செய்து பெயரை எடுத்து அடுத்த தேர்தலிலும் வென்றுவிடுவாரோ என்று பயம் கொள்கின்றார்.

நுணாவிலான் போன்ற புரிதல்தன்மை குறைவான ஒருவர் மட்டுறுத்தினராக பணியாற்றும் ஒரு களத்தில் எழுதிக்கொண்டிருப்பது சற்று வேதனையை தருகிறது. ஆயினும் இதையும் தாண்டித்தான் போக வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு இதில் எழுதுகிறேன்.

நுணாவிலான்! நான் கிளிநொச்சி விழாது என்று எழுதவில்லை. கிளிநொச்சி விழாது என்று நான் கட்டுரை எழுதியிருந்தால் அதை இங்கே இணைக்கலாம். எனக்கு நன்கு நினைவிருக்கிறது. கிளிநொச்சியில் இராணுவம் சந்தித்துக் கொண்டிருந்த பேரிழப்புக்கள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன்.

மற்றைய இடங்களை விட புலிகள் கிளிநொச்சியில் பாரிய மறிப்புச்சமரை செய்திருந்தார்கள். இதைப் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். அந்தக் கட்டுரையை கூட இப்படித்தான் முடித்திருக்கிறேன். "கிளிநொச்சி விழுகிறதோ, இல்லையோ, இந்தச் சண்டையில் படையினர் சந்திக்கும் இழப்புக்கள் போரின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்"

இராணுவத்தின் இழப்புக்களை பெரிதாக எழுதி விட்டு மற்றைய ஆய்வாளர்கள் போன்று கிளிநொச்சி விழவே விழாது" என்றோ கிளிநொச்சி ஒரு ஸ்டாலின்கிராட்" என்றோ எழுதமால் "கிளிநொச்சி விழுகிறதோ, இல்லையோ" என்று ஒரு கேள்விக்குறியோடு முடித்திருப்பது ஏன் என்று அறிவோடு சிந்தித்தால் புரிந்திருக்கும்.

இப்பொழுது மீண்டும் கருணாநிதிக்கு வருகிறேன்! தயவுசெய்து யாராவது கருணாநிதியால் 2009இல் இந்தப் படுகொலைகளை எப்படி தடுக்க முடிந்திருக்கும் என்பதை சரியான முறையில் சொல்லுங்கள். ஒரு வரைவின் மூலமாக இதை, இதை அவர் செய்திருந்தால் இது, இது நடந்திருக்கும், அதன் மூலம் எமது அழிவு தடுக்கப்பட்டிருக்கும் என்று விளங்கப்படுத்துங்கள். இதை ஒரு சவாலாக விடுக்கிறேன்.

எனது புரிதல் பற்றி நீங்கள் எனக்கு சொல்லி தர தேவையில்லை.உங்களின் நிலையில்லாத உறுதியான முடிவுகளை சொல்லாமை என்பனவற்றை பல வருடங்களாக அவதானித்துள்ளேன்.இப்போதும் கூட ஒரு முடிவாக சொல்லாமல் அப்படியும் நடக்கலாம் இப்படியும் நடக்கலாம் எனும் தளம்பல் நிலையில் எழுதுபவர் என்பது யாவரும் அறிந்ததே.
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் போன்ற புரிதல்தன்மை குறைவான ஒருவர் மட்டுறுத்தினராக பணியாற்றும் ஒரு களத்தில் எழுதிக்கொண்டிருப்பது சற்று வேதனையை தருகிறது. ஆயினும் இதையும் தாண்டித்தான் போக வேண்டும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு இதில் எழுதுகிறேன்.

சரக்கு குறைவாக இருந்தால் இன்று போய் நாளை வரலாம் சபேசன்

அதுக்காக மேடை  கோணல் என்றெல்லாம் எழுதுவதும்

ஒரு கருத்தாளனை

தேவையற்று குறைபிடிப்பதும் அநாகரிய  செயலாகும்

இதை வன்மையாக கண்டிக்கின்றேன்

விசுகு! எழுதாத ஒன்றை எழுதியதாக ஒரு நிர்வாகி கூறுவது எவ்வளவு பெரிய தவறான செயல் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்றை சரியாக விளங்கிக் கொள்ளுங்கள். அன்றைக்கு இருந்த நிலையை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் எங்களுக்கு தரப்பட்ட பணியை செய்தோம். "கிளிநொச்சி ஒரு ஸ்ராலின்கிராட்டாக மாறுகிறது" என்று அன்றைக்கு எத்தனை பேர் எழுதினார்கள் என்று நினைவுபடுத்திப் பாருங்கள். இதுதான் உண்மையில் விரும்பப்பட்டது.

இந்த இடத்தில்தான் "கிளிநொச்சி விழும்" என்று நம்பிய நாங்கள் ஒரு சமநிலையை கையாண்டோம். இராணுவத்தின் இழப்புக்களை எழுதுவது. புலிகளின் மறிப்புச்சண்டைய விதந்துரைப்பது. முடிவில் விழாமலும் போகும், விழவும் செய்யும் என்று சமாளித்து முடிப்பது.

விழவே விழாது என்று எழுதி கைத்தட்டல் வாங்குவதை விடுத்து நாங்கள் எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவில் உண்மையை பேசினோம். விழும் என்பதை சொற்களுக்கு இடையால் பேசினோம். புரியாதவர்கள் இன்றைக்கு அதை கிளறி தவறான கருத்தை உருவாக்க முனைகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது.

தயவுசெய்து யாராக இருந்தாலும் என்னுடன் நேர்மையாக கருத்தாடுங்கள். பொய்களையும் புரட்டுக்களையும் சொல்லித்தான் என்னை மடக்க முடியும் என்பது உங்களின் பலவீனத்தையும் அறியாமையையும்தான் காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். திண்ணையிலும் சொல்லியிருக்கிறேன். நான் எழுதியவைகளுக்கு நான் பொறுப்பு. பதில் சொல்ல துணிவோடு தலை நிமிர்ந்து நிற்கிறேன். நேர்மையோடு உண்மையை பேசுங்கள். பதில் சொல்கிறேன். எழுதியவைகளை நீங்கள் விரும்பியபடி திரிக்காதீர்கள்.

நான் எழுதியவைகளுக்கு பொழிப்புரை வழங்குவதற்கு நான் உயிரோடு இருப்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின்  பழைய கட்டுரைகளை எங்கே வாசிக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சபேசன் ஊருக்கு எல்லாம் போனீங்கள். அங்க சந்திக்கவேண்டிய ஆட்களையெல்லாம் சந்திச்சீங்களோ!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது. விரைவில் அதன் தாக்கம் தெரியும். திமுக வெளியே வந்தது. மத்தியில் ஆட்சி கவிழவில்லை. 2009இல் வெளியே வந்திருந்தாலும் ஆட்சி கவிழ்ந்திருக்காது. ஆகவே திமுக ஏன் அதை செய்திருக்க வேண்டும் என்ற கேள்வி இனிக் கேட்கப்படும். ஆனால் யாரும் தர்க்கரீதியான பதிலை தரப் போவது இல்லை. மீண்டும் கருணாநிதியை திட்டி பதிலை எழுதிவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் சிந்தனையை உருவாக்கும். பொறுத்திருந்து பாருங்கள்

இதில் தர்க்க ரீதியாகப் பதிலளிக்க என்ன இருக்கிறது?

2009 இல் திமுக வெளியேறி மத்திய அரசு கவிழ்ந்திருக்கும் அல்லது கவிழாதிருக்கும் அது இரண்டாவது பிரச்சினை. 32 கிலோ மீட்டர் தொலைவில் தமிழகத்தின் மொழியால், இனத்தால், கலாசாரத்தால் பின்னிப்பிணைந்த ஈழத் தமிழர் அழிந்துகொண்டிருக்கையில், மத்தியில் பதவியில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

மத்தியில் அப்போதும் இப்போதும் பதவியில் இருந்த இருக்கின்ற திமுக  தமிழகத் தமிழருக்கு என்னத்தை வெட்டிப் புடுங்கினது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.