Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் திரையில் ரசிக்கும் அஞ்சலியின் உண்மைக் கதை சோகக் கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இவர் என் தாயும் அல்ல! அது என் குடும்பமும் அல்ல!" - அஞ்சலி கண்ணீர் பேட்டி!
 
  ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி 

கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
 
தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம்வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர். 
 
 
anjali.jpg
 
இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்

படுகிறது. இதுகுறித்து அஞ்சலி,  ’’நீங்கள் என்னுடைய 

அம்மா என்று நினைக்கிறவர் என்னுடைய அம்மா கிடையாது. அவர் என்னுடைய சித்தி. மேலும், சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமே என்னுடைய சொந்த குடும்பம் கிடையாது.
 
 என்னுடைய சித்தியின் குடும்பத்தைத்தான் நான் அழைத்துவந்து இங்கு குடியமர்த் தியிருக்கிறேன். அவர்களுக்காக நான் நிறைய செய்திருக்கிறேன். என்றாலும் எனக்குத் தெரியாமலேயே பெரிய மோசடி வேலைகளை செய்து வருகிறார்.
 
anjaliinside2.jpg
 
கோடிக்கணக்கில் என்னுடைய பணத்தை கையாடல் செய்துவிட்டார். இவருக்கு உறுதுணையாக இருந்து

வருபவர் இயக்குனர் களஞ்சியம். இருவரும் என்னை ஒரு 

மெசின் போலவே நடத்துகிறார்கள். என்னை தாங்கமுடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். 
 
எனதுசொந்த அண்ணன், அக்காவைக்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இனியும்

பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மேஜர். என்னுடைய சொந்தக் 

காலில் நிற்க முடிவு எடுத்துவிட்டேன். இப்போது ஐதராபாத்தில் குடியேறியிருக்கிறேன். தற்போது எனக்கு யாரும் துணையில்லை. என்னுடன்

தொடர்புடைய 

வர்களின் போன் நம்பர்களைக்கூட அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி அவதூறு பரப்பவும் தயாராக இருக்கிறார்கள். 
 
anjaliinside1.jpg
 
என் உடலில் சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு என்னுடைய சித்தியும், இயக்குனர்

களஞ்சியமும்தான் முழுப் பொறுப்பு. நான் சினிமாவில் இதுவரை சம்பாதித்த 

பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். எனக்கென்று இப்போது எதுவுமில்லை. 
 
இனிமேல்தான் என்னுடைய தேவைக்கு பணம் சேர்க்க வேண்டும். எனது உண்மை நிலையை விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளிப்படுத்துவேன்’’என்று தெரிவித்துள்ளார். இயக்குனர்

களஞ்சியம் அஞ்சலியுடன் ’கருங்காளி’ திரைப்படத்தில் நடித்தவர் 

என்பது குறிப்பிடத்தக்கது.
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகை அஞ்சலி புகார்! இயக்குநர் களஞ்சியம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி தன்னிலை விளக்கம்!
 

kalangiyam-anjali-0001.jpg

 

நடிகை அஞ்சலி புகார் கூறியதை தொடர்ந்து, இயக்குநர் களஞ்சியம் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை அஞ்சலி, தனது தாயார் என்று கூறிக்கொண்டு பாரதி தேவி என்பருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பாரதி தேவியின் வீட்டில் இருந்து அஞ்சலி திடீரென வெளியேறினார். ஐதராபாத்தில் உள்ள அஞ்சலி, சென்னையில் உள்ள சினிமா நிருபர்களுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது சென்னையில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை பறிக்க முயற்சி நடப்பதாகவும், பாரதிதேவியுடன் சேர்ந்து இயக்குநர் களஞ்சியமும் தமக்கு சித்ரவதை செய்வதாகவும், கொலை மிரட்டல் வருவதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இயக்குநர் களஞ்சியம், தன்னுடைய வழக்கறிஞர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தம்மால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி, தமக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார். அஞ்சலியை எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. அவருடைய சொத்துக்களை பறிக்க முயற்சி செய்யவில்லை. அஞ்சலி புகாரின் பின்னணி குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமக்கு எதிராக அஞ்சலியை பொய் பிரச்சாரம் செய்யும்படி சிலர் தூண்டிவிடுவதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாகவும் களஞ்சியம் கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=96496

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிக்காக நக்கீரா  செய்தியை சொருகிய்  நெடுக்கருக்கு  ஒரு புள்ளி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி: போலீசுக்கு போன களஞ்சியம்!

அஞ்சலியின் பேட்டிதான் இன்றைய கோலிவுட்டின் ஹாட் டாக். "என்னுடன் இருப்பது எனது அம்மா என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர் என் அம்மா கிடையாது. சென்னையில் என்னுடன் இருக்கும் குடும்பமும், எனது சொந்த குடும்பம் இல்லை.

என்னுடைய கோடிக்கணக்கான பணத்தை சித்தி கையாடல் செய்து விட்டார். சித்திக்கு டைரக்டர் களஞ்சியம் உறுதுணையாக இருக்கிறார். இருவரும் என்னை பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின் போலவே பயன்படுத்தினர். தாங்க முடியாத அளவுக்கு கொடுமையும் இழைத்தார்கள். " என்று பேட்டியளித்தார்.

அதுமட்டுமன்றி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீ்து சரமாரியான புகார்களைக் அடுக்கினார் அஞ்சலி.

இப்புகார்கள் குறித்து இயக்குனர் களஞ்சியம் "அஞ்சலியை நான்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்தேன். 'சத்தமில்லாமல் முத்தமிடு' என்ற படத்தில், நடிகை தேவயானியின் தம்பி ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்தேன்.

அப்படம் வெளிவரவில்லை. முதல் பட இயக்குனர் என்ற முறையில், அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு பழக்கம் இருந்தது. குடும்ப நண்பர் என்ற முறையில், நான் அவர்களுக்கு சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். பாரதிதேவி அஞ்சலியின் தாயார் இல்லை என்பது, எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.

அவர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுவது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. ஒரு காலத்தில், அஞ்சலியின் தாயாருக்கு நான் சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். அதை மனதில் வைத்துக்கொண்டு இப்பிரச்னையில் அஞ்சலி என்னை இழுத்து விட்டு இருக்கிறார். இப்போது அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.

அஞ்சலி சம்பாதித்த பணத்தை எல்லாம் நான் சுருட்டி விட்டதாக கூறியிருக்கிறார். இதை அவர் நிரூபிக்க முடியுமா? நிரூபிக்காவிட்டால் நான் அவரை சட்ட ரீதியாக சந்திப்பேன். என்னை பற்றி தவறாக கருத்து தெரிவித்து விட்டதாக நாளையே அஞ்சலி மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அஞ்சலி பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிட வேண்டியிருக்கும் " என்று தெரிவித்த நிலையில், இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்த களஞ்சியம், அஞ்சலி தமக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

அத்துடன் அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறியதன் பின்னணி என்ன? அவரை பின்னால் இருந்து இயக்குபவர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தம் மீது பொய்ப் புகார் கூறிய அஞ்சலி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகார் கொடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய களஞ்சியம், அஞ்சலியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார்.

மேலும் தான் ஹீரோவாக நடிக்கும் 'ஊர் சுற்றி புராணம்' என்ற படத்திற்கு அஞ்சலியின் கால்ஷீட்டை அவரது தாயார் எனக் கூறப்பட்ட பாரதி தேவி கொடுத்துள்ளதாகவும், இதில் 15 நாட்கள் வரை நடித்துள்ள அஞ்சலி, இன்னமும் 30 , 35 தினங்கள் அவர் நடிக்க வேண்டியதுள்ளதால், கொடுத்த கால்ஷீட்படி அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் களஞ்சியம் கூறினார்.

இதற்கு அஞ்சலி என்ன சொல்லப்போகிறாரோ?

 

http://www.vikatan.com/new/article.php?module=news&aid=13669

  • கருத்துக்கள உறவுகள்
அன்பின் அஞ்சலி,
 
அவசரத்துக்கு ஒரு ரெலிபோனும் அடிக்க முடியல...உன் நம்பர் ரெண்டுமே ஸ்விட்ச் ஆப்னு இருக்கு...சொல்லாமல் கொள்ளாமல் நீ எங்க போய்த்துலைஞ்சனி..?
 
அந்த ஸ்டோர் இயக்குனன் வேற உன்னைய நான் தான் பின்னாடி இருந்து தூண்டிவிடறதா பேட்டி குடுத்துட்டு இருக்கான். பணம் போனா போகட்டும்....மறுபடியும் உழைச்சுக்கலாம் வவுத்த வாய கட்டி... நமக்கு மானம் தான் முக்கியம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துடாத. தெலுங்கு படம் வேற பாதில நிக்குதுன்னு ப்ரொடியூசர் பெருசு கதறுது.
 
இந்த போஸ்ட்டை தந்தி போல் பாவித்து உடன் தொடர்புகொள்ளவும்
 
இப்படிக்கு
உன் செல்லம்..
அத்தான்.


:lol:

ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி திடீரென்று மாயமாகியுள்ளார்.

ஹைதராபாத்தில் தங்கி இருந்தபோது ஊடத்தினரை போனில் தொடர்பு கொண்டு சித்தி பாரதிதேவி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார்.இருவரும் தன்னை சித்ரவதைபடுத்தியதாகவும் பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின்போல் பயன்படுத்தினர் என்றும் கூறினார்.

இதுவரை சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை பறித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் ஐதராபாத் வந்து விட்டேன் என்றும் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர் நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டலில் தங்கி அவர் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது கைபேசிக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது.

அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குத்தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. போல்பச்சன் பட நாயகனான நடிகர் வெங்கடேஷ், படப்பிடிப்புக்கு வராததால் அஞ்சலி மீது புகார் தர உள்ளதாக கூறியுள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.vivasaayi.com/2013/04/blog-post_6573.html

Edited by நியானி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
’உண்மையை சொல்லட்டுமா?’ - அஞ்சலியை மிரட்டும் களஞ்சியம்!
 
அஞ்சலியையும் அவருடன் பொது நிகழ்ச்சிகளுக்கும், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் வந்த பாரதி தேவியையும் பார்த்தவர்கள், அவர்களை தாய்-மகள் என்பதைவிட சகோதரிகள் என்று தான் சொல்வார்கள். அவ்வளவு கேஷுவலாக இருந்தவர்களுக்கிடையில் இப்படி ஒரு நெருப்பா? என்று ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்கிறது கோடம்பாக்கம்.
 
anjaliinside.jpg
 
’பாரதி தேவி என் தாயல்ல சித்தி. என் தாயும்-தந்தையும் ஆந்திராவில் இருக்கிறார்கள். நான் இருக்கும் இடத்தையும், என் பெற்றோர்கள் இருக்குமிடத்தையும் இப்போது கூறினால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும் அதற்கு முழு காரணம் பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தான்” என்று அழுது புலம்பினாராம் ஹைதராபாத்தில் இருந்து ஃபோன் செய்த அஞ்சலி. 
 
எதிர்பாராத சமயத்தில் அஞ்சலி வெடித்துவிட்டாரோ என்னவோ! இன்று(09.04.13) காலை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த இயக்குனர் களஞ்சியம் வழக்கமான ஆக்ரோஷம் இல்லாமல் அமைதியாகவே காணப்பட்டார். களஞ்சியம் அளித்துள்ள பேட்டியில் “ அஞ்சலி கூறுவது முழுப் பொய். அவர் கூறுவது போல் நான் அவரை ஏமாற்றவில்லை. என் படத்தில் அஞ்சலி 15 நாட்கள் நடித்திருக்கிறார். அவர் வந்து மீதி படத்தையும் நடித்துக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் நடிகர் சங்கத்தில் முறையிடுவேன். எனக்கு ஃபெப்சி துணையிருக்கிறது. 
 
அதுமட்டுமல்லாமல் என் மீது சாட்டிய அபாண்டமான புகாரையும் இல்லை என்று கூறாவிட்டால் நான் மானநஷ்ட(!) வழக்கு போடுவேன். இவற்றை செய்ய அஞ்சலி மறுத்தால், அஞ்சலி பற்றிய சில உண்மைகளை சொல்வேன்” என்று வில்லன் கணக்காக பேட்டி கொடுத்துள்ளார். மிரட்டல் போல வெளிவந்த அந்த ‘உண்மைகளை சொல்வேன்’ பற்றி கோலிவுட்டில் பலவித செய்திகள் வெளியாகிவிட்டன.  
 
அஞ்சலிக்கும், களஞ்சியத்துக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், அதை சொல்லி அஞ்சலியின் மார்கெட்டை குறைத்துவிடுவதாகவும் தான் களஞ்சியம் மிரட்டுகிறாராம். இதைப்பற்றி உண்மையான தகவல் இல்லையென்றாலும் கோடம்பாக்கத்தில் தற்போதைய ஹாட் டாபிக் இது தான்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிக்கு கொடிய நோய் உள்ளது; மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிர் போய்விடும்: சித்தி பகீர்

 

நடிகை அஞ்சலிக்கு கொடிய நோய் உள்ளதாகவும் தினமும் மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் அவரது சித்தி பாரதிதேவி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
 

 இதுகுறித்து பாரதி தேவி,  ‘’அஞ்சலியை என் மகள் போல் பார்த்துக்கிட்டேன். ஒரு தோழி மாதிரி கூடவே இருந்தேன். சினிமாவில் இவ்வளவு அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தது நான்தான். என்னைப்போய் சொத்துக்களை அபகரித்ததாக சொல்லி நோகடித்து விட்டார்.
 

அஞ்சலி மனதை யாரோ கெடுத்திருப்பது தெரியுது ஒரு தமிழர்தான் இதற்கு பின்னணியில் இருக்கிறார். அஞ்சலிக்கு தனியாக வசிக்க ஆசை வந்து விட்டது. நான் அவரை யாருடனும் பேசவிடவில்லை, சித்ரவதை செய்கிறேன் என்கிறார்.
 

இவ்வளவு காலமாக வளர்த்து ஆளாக்கி இருக்கேன். அவள் அம்மா, அண்ணன் யாரும் வந்து பார்க்க வில்லை. இப்போ சம்பாதிக்கிறார் என்றதும் ஓடி வருகிறார்கள்.
 

எனக்குள்ள பயமெல்லாம் அவர் உடல் நிலை பற்றிதான். அஞ்சலிக்கு கொடிய நோய் இருக்கு.   அதற்காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் உயிரோடு இருக்க முடியாது. என்ன நோய் என்பதை சொல்ல மாட்டேன். அதுபற்றி சொன்னால் அவர் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும்.
 

நான்தான் சினிமாவில் வளர்த்து விட்டேன். நானே அவள் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்க மாட்டேன். அஞ்சலி சம்பாத்தியத்தில் வீடு, கார் வாங்கி இருக்கேன். அவர் பணம் எதுவும் எனக்கு தேவை இல்லை. எல்லாவற்றையும் திருப்பி கொடுத்து விடுவேன்’’என்று தெரிவித்துள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=96616

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கொடிய நோய்? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லமாட்டா என்றிட்டாவில்ல. அப்புறம் என்ன கேள்வி. சொல்லமாட்டம் எண்டாப் பிறகும் கேள்வி கேட்கிறாங்க பாரு..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொல்லமாட்டா என்றிட்டாவில்ல. அப்புறம் என்ன கேள்வி. சொல்லமாட்டம் எண்டாப் பிறகும் கேள்வி கேட்கிறாங்க பாரு..! :lol::D

 

கொடிய நோய் என்று வாசித்த உடனேயே நிப்பாட்டிப்போட்டன்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

571181926Untitled-1.jpg

பெங்களூரில் பதுங்கியிருக்கும் அஞ்சலி : உடன் இருப்பவர் யார்?

மர்மமான முறையில் காணாமல் போன நடிகை அஞ்சலி பெங்களூரில் தங்கியிருப்பதாக அவரது செல்போன் அழைப்பின் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். 

இந்தநிலையில் அவருடன் தங்கியிருப்பது யார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மார்ச் 31ம் திகதி ஹைதராபாத்துக்கு தனது சித்தப்பா சூரி பாபுவுடன் படப்பிடிப்புக்காகப் போனார் அஞ்சலி. 

அதன் பிறகு தான் அவர் காணாமல் போனார். அவரைக் கடத்தி விட்டதாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அவரே யாருடனோ வெளியேறி விட்டதாக செய்திகள் வந்தன. 

இளம் நடிகர் ஒருவருடன் அவர் போயிருப்பதாகவும் செய்திகள் கூறின. இந்த நிலையில் அஞ்சலியின் இருப்பிடம் குறித்து சரிவரத் தெரியால் பரபரப்பு காணப்படுகிறது. 

தற்போது அஞ்சலி இருக்கும் இடம் குறித்து தெரியவந்துள்ளதாக தெரிகிறது. நேற்று தனது அண்ணன் ரவி சங்கரை தொடர்பு கொண்டு பேசிய நடிகை அஞ்சலி, பின்னர் தயாரிப்பாளர்கள் சுரேஷ்பாபு, அரவிந்த் ஆகியோரையும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது, நான் குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதனால்தான் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. உங்களுக்கு சிரமம் கொடுத்ததற்காக வருந்துகிறேன். இன்னும் 2 நாட்களில் நான் வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று கூறியுள்ளார். 

இந்த தொலைபேசி அழைப்புகள் எங்கிருந்து வந்தன என்று பொலிஸார் விசாரித்தபோது அவை பெங்களூரிலிருந்து வந்ததாக தெரிய வந்ததாம். எனவே அஞ்சலி பெங்களூரில் பதுங்கியிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலும் தனது அண்ணனிடம் அஞ்சலி பேசுகையில், தன்னுடன் ஒருவர் இருப்பதாகவும், எனவே பயப்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அஞ்சலியுடன் தங்கியிருக்கும் அந்த நபர் யார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் நடிகரா, அப்படியானால் தெலுங்கு நடிகரா, தமிழ் நாட்டு நடிகரா அல்லது வேறு யாரேனுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தெலுங்கு இளம் நடிகர்கள் யாரேனும் ´காணாமல்´ போயுள்ளனரா என்பது குறித்தும் ஹைதராபாத் பொலிஸார் விசாரித்து வருகின்றனராம். 

 
  • கருத்துக்கள உறவுகள்

நான் படங்கள் பார்ப்பதில்லை .............. இவருடைய சில பாடல்கள் பார்த்திருக்கிறேன்.

 
மிகவும் நன்றாக நடிக்கிறார். சின்ன வயதிலேயே அப்படி இப்படியான பாடல் காட்சில்களில் இவரை நடிக்க வைத்திருந்ததை  பார்த்தே சந்தேகம் ஒன்று இருந்தது.
இப்போ உண்மை என்றாகி இருக்கிறது.
இவரை நல்ல படங்களில் நடிக்க வைக்கலாம். நன்றாக நடிக்கிறார்.

 

 

 

http://www.youtube.com/watch?v=JXECgI6Pc5A

 

http://www.youtube.com/watch?v=01X7znwpigQ

 

http://www.youtube.com/watch?v=fqWLmdhvVMg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=gPbAG2jYwhA

 

 

http://www.youtube.com/watch?v=5LhTZRwkKUs

 

http://www.youtube.com/watch?v=aJHueyooUgI

 

 

அஞ்சலியின் உடைய  கலை வாழ்வில் சில தடைகள் வந்திருப்பினும் 

 
அனைத்து  தடைகளையும் உடைத்து அவருடைய கலை சேவை தொடர வேண்டும் என்பதே. கலை ரசிகர்கள் ஆகிய எமது வேண்டுகோள் ஆகும்.
 
மேலே இருப்பவை அத்திவாரங்கள்.
கட்டிடம் எப்படி இருக்கும்? என்று கற்பனை பண்ணவே முடியவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொம்பு அக்கா இப்ப அஞ்சலி .. அக்ஷரா எண்டு இளம் பெட்டயளோட திரியிறா....

மற்றதா இருக்குமோ ??????????? :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

சொம்பு அக்கா இப்ப அஞ்சலி .. அக்ஷரா எண்டு இளம் பெட்டயளோட திரியிறா....

மற்றதா இருக்குமோ ??????????? :lol:

 

மற்றது என்றால் ?

எங்களைப்போல மற்றுகருத்தாலரோ???
 
இந்தியாவில்தானே புலியில்லை. அங்கு மாற்றுகருத்தை யாரோடு பேசுறது?
  • கருத்துக்கள உறவுகள்

 

மற்றது என்றால் ?

எங்களைப்போல மற்றுகருத்தாலரோ???
 
இந்தியாவில்தானே புலியில்லை. அங்கு மாற்றுகருத்தை யாரோடு பேசுறது?

 

 

அஞ்சலிக்கு பெட்டையளைத் தானாம் பிடிக்குமாம் :) அதைத் தான் மதிவதனஜீ சொல்ல வாறார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி மருதங்கேணியார்  பாப்பாவுக்கு எத்தினை வயது? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.