Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு : மக்களின் கருத்தறியும் கேள்விக் கொத்து !
 
தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்……

தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :

www.tamileelamfreedomcharter.org/

சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள :

தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71

ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61

அறிமுகக் கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7

 

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான கேள்விக் கொத்தில் ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும்  இந்த சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரித்துள்ளது.

தமிழீழ சுதந்திர சாசனதத்தினை அச்சத்தோடு சிங்கள அரசு பார்த்து வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் பல்வேறுபட்ட தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவுடன் புலம்பெயர் தேசங்களெங்கும் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான செயற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழீழ சுதந்திர சாசனத்தை வரைவதற்கு உலகெங்கும் வாழும் தமிழ்மக்களினதும் சிங்கள முற்போக்கு வாதிகளினதும் மற்றும் அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும் உள்ளீட்டைப் பெறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள தமிழீழ சுதந்;திரச சாசன உருவாக்கத்திற்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

 

கீழே உள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கும் கேள்விகளுக்குhttp://tamileelamfreedomcharter.org/ எனும் இணையவழியூடாக பதில்களை இட்டுக் கொள்ள முடியும் என்பததோடு அச்சுப்பிரதிகளைப் பெற்றுக் கொண்டும் கருத்துக்களை பதிலிட்டு வழங்க முடியும்.

கேள்விக் கொத்தின் விபரம் :

இச் சுதந்திர சாசனம் தமிழீழ மக்கள் தனித்தன்மை கொண்டவர்கள், இன்று  சிறீலங்கா என்று அழைக்கப்படும் தீவில் மரபுவழி தாயக பூமியை உடைமையாகக் கொண்டவர்கள், பன்னாட்டு   சட்டங்களின் கீழ் சுதந்திர நாடொன்றில்  தம்மைத்தாமே ஆளும் உரிமை கொண்டவர்கள் என  முரசறைகிறது. மக்களது தன்னாட்சி உரிமை தற்போதைய பன்னாட்டு சட்டங்களின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.

மேலும் இச் சாசனம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது 100,000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் எனவும்  தற்பாதுகாப்பு, தற்பத்திரப்படுத்தல் ஆகிய சட்டம் மற்றும்  தார்மீக கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் சுதந்திரமும் இறைமையும் உள்ள நாடொன்றிலேயே தமிழ் மக்கள் கண்ணியமாகவும் மற்றும் மனித உரிமைகளைத் துய்து மகிழவும் முடியும் என முரைசறைகிறது.  

மேலும் இச் சாசனம் இலங்கைத்தீவில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட கொலை, வன்புணர்ச்சி, கொள்ளை ஆகியவற்றிற்குப் பரிகாரமாக தமிழீழத்தில் இனப் பாகுபாடும் மற்றும் மனித உரிமை மீறல்களும் பல தலைமுறைகளாக தமிழ் மக்களுக்கு துன்பத்தை விளைவித்தன என்ற உண்மையைக்  கருத்திற் கொண்டு  ஆண் பெண் சமத்துவம் மத சுதந்திரம் போன்ற சகல உரிமைகளும் அங்கீகரிக்கப்படும் என முரசறைகிறது.

மனித உரிமைகள் என்பது அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்புகள் ஆகும். அவற்றுக்கு   மனதர்கள் என்ற அடிப்படையில்  நாம் அனைவரும்  உரித்துடையவர்கள் ஆவர். மனித உரிமைகள் என்பது அகவை, தேசியம், இனம், நிறம், மதம், பால், பாலியல் முன்னுரிமை அல்லது வேறு தகைமை வேறுபாடிமின்றி யாவருக்கும் பொருந்தும்  என்பதை இச் சாசனம் ஏற்றுக் கொள்கிறது. 

சுதந்திர சாசனம் என்பது ஒரு தேசிய இனத்தின் விடுதலை வேட்கையின் வெளிப்பாடு ஆகும். சுதந்திர சாசனம் தேசிய இனம் ஒன்றின் அடிப்படைக் கோட்பாடுகளையும் அடிப்படை உரிமைகளையும் உள்ளடக்கிய ஆவணம் ஆகும். சில உரிமைகள் முக்கியமானதால்  குடிமுறை,  பொருளாதார, சமூக மற்றும் பண்பாடு உட்பட அவற்றுக்குக் குறிப்பிட்ட சட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.  இவ்வாறன உரிமைகள் குறைக்கப் படவோ அன்றி  நீக்கப் படவோ முடியாதவை.  ஆனால் ஒத்திசைவுக்கு  ஏற்ப  உருவாகும்  புதிய உரிமைகள் சேர்க்கப்படலாம். 

இச் சுதந்திர சாசனம்  மூலமாக தமிழீழ மக்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் ஜக்கிய நாடுகள் அவையால் தங்களுக்கு அடையாளப் படுத்துள்ள உரிமைகளை வலியுறுத்துகிறார்கள்.  மனித உரிமைகள் மதிக்கப்பட்டாலே சமாதானமும் பாதுகாப்பும் பேணப்படும் என்பதை தமது வரலாறின் மூலமாக நன்றாக அறிந்து கொண்ட தமிழீழ மக்கள் ஒருவருக்கொருவர் இந்த உரிமைகளை வழங்கியும்  தம்முடன் வாழும் ஏனைய மக்களுக்கு இவ்வுரிமைகளைக் கொடுப்பதற்கும் தங்களை ஈடுபடுத்துகிறார்கள். 

இச் சுதந்திர சாசனம் ஜக்கிய நாடுகள் அவையின் பல்வேறு மனித உரிமை உடன்படிக்கைகளில் மற்றும் சாற்றுதல்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மனித உரிமைகளும் தமிழீழ அரசியலமைப்பு ஆவணங்களில் மாற்ற முடியாத உரிமைகளாக உள்வாங்கப்படும் என உறுதியளிக்கிறது.

ஜக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் அடிப்படையில் வரையப்படும்  இப் சாசனம் தமிழீழ மக்களுக்கு மாற்ற முடியாத உரிமை உண்டு எனத் தெரிவிக்கிறது.  அதே சமயம் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு தம்மோடு தொடர்பில் வரும் சகலருக்கும் அவ்வுரிமைகள் உண்டென்பதை அங்கீகரிக்க வேண்டும் என்ற கடப்பாடு உண்டு என்றும் தெரிவிக்கிறது. 

இச் சுதந்திர சாசனம் அரசின் நடவடிக்கைகளை எடை போடும் அளவுகோலாகவும் அதே சமயம் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் உதவுகின்றது. இப் பட்டயம் சட்டவாளர்கள் அல்லது முடிவு எடுப்பவர்கள் வினை செய்யும் போது மனித உரிமைகள் முன்னிடப்படுத்தப்பட வேண்டுமென்பதை உறுதிசெய்யும்.  

இச் சுதந்திர சாசனம்  மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படவிருக்கும் தமிழ் ஈழத்திற்கும் மனித உரிமைகள் மீறப்பட்டு அடக்குமுறை தொடரும் சிறீலங்காவிற்கும் உள்ள வேறுபாட்டை ஒப்பீட்டடிப்படையில் கோடிட்டுக் காட்டும். 

கேள்விக்கொத்து

(பதில்களை தருவதற்கு தரப்பட்டுள்ள இடம் போதாதுவிடின் பிறிதொரு தாளில் கேள்வி இலக்கத்தையும் அதனுடைய பதிலையும் கேள்விக்கொத்துடன் இணைத்துவிடவும்)

    தமிழீழ சுதந்திர சாசனம் 

 

தமிழீழ மக்களின் சுதந்திரம்  பற்றிய  கோட்பாடுகளை(கொள்கைகளை), இந்த சுதந்திர சாசனத்தில்  தெளிவாக இயற்றி  அதனை அனைத்துலக அரங்கில் முரசறைதல், எங்கள் சுதந்திரத்தினை அடைவதற்கான வழியென நாம் நம்புகின்றோம்.

1.    தமிழீழ சுதந்திர சாசனத்தின் அவசியம் என்ன?

அ. அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரம், சொத்துக்கள் மற்றும் சுமூகநிலை பேணப்படுவதல்  

ஆ. அது பெரும்பான்மை தனிமனித சுதந்திரங்களை உறுதி செய்வதோடு நீதித்துறைகளிலும், நிர்வாகங்களிலும் அரசுக்குள்ள அதிகாரத்தினை கட்டுப்படுத்தல் 

 

இ. தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் அமையவிருக்கும் தமிழீழத்தின் மாதிரியினை விளங்க வைத்தல் 

ஈ. மேற்கூறிய யாவும் 

2.    இந்த சாசனத்தினை உருவாக்குவதற்கும் முரசறைவதற்கும் யார் ஈடுபட வேண்டும் என்று நம்புகிறீர்கள்?

அ. .உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள்

ஆ. இலங்கையில் வாழும் தமிழர்கள் 

இ. புலம்பெயர் தமிழர்கள் 

ஈ. இலங்கை வாழ் தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் 

3.    சர்வசன வாக்கெடுப்பின் மூலம் எட்டப்படும் முடிவு தமிழ் மக்களின் விடுதலைக்கான நிரந்தர அரசியல் தீர்வாகும் என நம்புகின்றீர்களா? 

இது அவர்கள் சமாதானத்துடனும் சுயகௌரவத்துடனும் பாதுகாப்புடனும் ஒரு தேசிய இனமாக வாழ வழி வகுக்குமா ?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

4.    இலங்கைத் தீவில் தமிழ் தேசிய முரண்பாட்டிற்கான தீர்;வினை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதனை அங்கீகரிக்கின்றீர்களா ?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ.தெரியவில்லை 

 

5.    அப்படியானால் அனைத்துலகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும்? 

எந்த மட்டத்தில் ? எவ்வளவு வரையறைக்குள் ? இதில் எந்த நாடுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

உங்களுடைய கருத்துக்களை தரவும்

________________________________________________________________________

________________________________________________________________________

________________________________________________________________________

6.    தமிழீழ மக்களுக்கு வேறு எந்த அரசியல் தீர்வுகளை கருத்தில் கொள்கிறீர்கள்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

உரிமைகளும் சுதந்திரங்களும் 

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும், சுதந்திரங்களையும் இந்த சுதந்திர சாசனம் உறுதிப்படுத்தும் 

7.    வரலாற்று ரீதியாக தமிழீழ மக்கள் அனுபவித்த ஒடுக்குமுறையை கருத்தில் கொண்டு  தமிழீழ சுதந்திர சாசனம் எந்த முக்கிய உரிமைகளையும்  சுதந்திரங்களையும்  கொண்டிருக்க வேண்டும்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

8.    தமிழ் மக்கள் சுதந்திரத்திற்;கான உரித்துடையவர்கள் என்று  கோருவதற்கு கீழ் வருவனவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையாக அமையும்?

அ. தாய்நாட்டிற்கான உரிமை 

ஆ. சுயநிர்ணயத்துக்கான உரிமை 

இ. தேசியத்துக்கான உரிமை

ஈ. இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை 

9.    எங்கள் தேசியத்தை கோருவதற்கு மேலும் வேறு எந்த உரிமைகளை சேர்க்க வேண்டும் என எண்ணுகிறீர்கள்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 

10.    சுதந்திர இறைமையுள்ள ஒரு தமிழீழ அரசினை உருவாக்குவதற்கு ஒரு தமிழார்களாக சுய நிர்ணய உரிமை மற்றும் இறைமை என்பனவற்றை நீங்கள் பிரயோகிக்க விரும்புகிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ.தெரியாது

    வரலாறு

 

இயற்கையாக பிரிக்கப்பட முடியாத எங்கள் தமிழீழப் பிரதேசம் அன்று தொட்டு இன்று வரைக்கும்  சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புக்  கரங்களுக்குள் இருக்கிறது.

11.    இடைக்கால தன்னாட்சி நிர்வாகத்தினரால் பரிந்துரைக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கின்  எட்டு மாவட்டங்களாகிய  அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா என்பன தமிழீழத்தின் பூகோள எல்லைகளாக வரையறுக்கப்படுவதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஏற்றுக் கொள்கிறேன் 

ஆ. இல்லை 

இ. தெரியாது

12.    இறுதியாக எங்களது பூர்வீக தாய்நாட்டை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்வதற்கும் அதன் பிளவு படாத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குமாக  நீங்கள் நினைக்கும் சில தெரிவுகள் யாவை? 

முன் நடந்த வரலாற்றில் இருந்து வேறு எந்த உதாரணங்களைஎடுக்கலாம்?

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

 

13.    சுpறிலங்கா  அரசாங்கங்களால் வாக்குறுதிகள் மீறப்பட்டமையாலும், ஒருபக்க சார்பாக ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டமையாலும் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்ட வரலாறு பற்றி நீங்கள் அறிந்துள்ளீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை.

இ. தெரியாது

14.    தொடர்ச்சியாக  சிறிலங்கா அரசாங்கங்களால் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட அடக்குமுறைகள், பாகுபாடுகள், அரச வன்முறைகள்,அரசினால் ஏவி விடப்பட்ட வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியாது

15.    தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தற்பாதுகாப்பு நிலையில் இருந்ததென்பதனையும்;  அதாவது தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மூன்று தசாப்த காலங்களாக தமிழர்களின் அமைதி வழி, அகிம்சை வழி  சனநாயக போராட்டங்கள்  மற்றும் அரசியல் போராட்டங்கள் மிகக் கொடூரமான அரச வன்முறை மூலம் அடக்கியொடுக்கப்பட்டது என்பதனையும்  தேசியப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உள்நாட்டு மற்றும் அனைத்துலக தலையீடு இன்மை காரணம் என்பதனையும்  நம்புகிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

16.    1972 ம் ஆண்டு மற்றும் 1978 ம் ஆண்டுகளில் சிறிலங்காவின் அரசியல் யாப்புகள் எழுதப்பட்ட போது தமிழ் மக்கள் அதில் பங்கு பற்றவில்லை என்பது பற்றி அறிந்திருக்கின்றீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ.தெரியவில்லை 

    சுதந்திர தேசத்தின் கருவிகள் 

 

17.    ஆனைத்துல கண்காணிப்பின் கீழ் தமிழீழத்தில் சனநாயக சுதந்திர தேர்தல் ஆணைக்குழு  ஒன்று  அனைத்துலக சனநாயக நோக்கங்களுக்கும் ,நியமங்களுக்கும் அமைய தேர்தல்களை நடாத்த வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

18.    சட்டம்,ஒழுங்கு, ஆட்சி, கட்டளை, தீர்மானங்கள் என்பன சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதவுரிமைகள் பாதுகாப்பு நியமங்களுக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

19.    அனைத்துலக மனிதவுரிமைகள் அமைப்புக்களின் உறுதுணையுடன் காத்திரமான (திறன் வாய்ந்த) பொறி முறையொன்றினை கொண்ட ஒரு சுதந்திரமான மனிதவுரிமைகள் ஆணைக்குழு ஒன்றினை மிகவிரைவில் அமைப்பதன் மூலம் மனிதவுரிமைகளை பாதுகாக்கவும், மனிதவுரிமைகள் கடமைப் பாடுகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் இருக்கவேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

20.    இந்த மனிதவுரிமைகள் ஆணைக்குழு எந்தவொரு தனிப்பட்ட நபர் ஒருவரின் முறைப்பாட்டினைப்  பெற்றுக் கொள்ளவும், எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்(நஷ்டஈடு) வழங்கவும் அவரின் உரிமைகள் மீளுறுதி செய்யப்படுவதற்குமான முழு உரிமையையும் கொண்டிருக்கும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

    கொள்கைகள் 

21.    எந்த மதத்திற்கும் தமிழீழத்தில் முதலிடம் கொடுக்கப்படமாட்டாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

22.    தமிழ் தவிர, வேறு எந்த மொழி உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்?

அ. ஆங்கிலம் 

ஆ. சிங்களம் 

இ. ஆங்கிலம்;, சிங்களம்

 

23.    தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

24.    சிறுவர்கள் எல்லோருக்கும் கட்டாய ஆரம்ப கல்வி இருக்க வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

25.    தமிழீழ குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா ?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

26.    தமிழீழத்திற்கு  சுயாதீன  கiயூட்டு ஊழல் ஆணைக்குழு ஒன்று தேவையென்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

சுதந்திர தேசத்தின் கடப்பாடுகள் 

 

27.    அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் சட்டநியமங்களுக்கு தமிழீழம் கட்டுப்பட வேண்டும்?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியாது

28.    தமிழீழம்  அனைத்துலக மனிதவுரிமைகள் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்? 

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியாது

29.    நீதிக் கோட்பாடுகள், சுதந்திரம்(விடுதலை), இறைமை, தன்னாட்சி, மனித கௌரவம் மற்றும் மக்களின் உரிமைகள்  என்பவற்றை நடைமுறைப்படுத்த விரும்புகின்றீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ.தெரியவில்லை

30.    தமிழீழத்தில் அரசுத் தலைவர் ஒருவர் ஆகக் கூடியது இரண்டு  பதவிக் காலங்களுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ.தெரியவில்லை 

31.    உலக குடியியல், அரசியல் உரிமைகள் சாசனம் சரத்து 27ல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் சிறுபான்மை இனத்திற்கும் உரியது என்பது உத்தரவாதமளிக்கப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியவில்லை 

32.    நீதித் துறை நிர்வாகங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களங்கள் தமிழீழத்தில் அமைக்கப்படும். நீதித்துறை அதிகாரங்கள் இத் திணைக்களங்கள் ஊடாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் நீதிபதிகளின்(சுதந்திரம்) சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அ. ஆம் 

ஆ .இல்லை 

இ. தெரியவில்லை 

33. தமிழீழத்தில் சுதந்திர வர்த்தக வலயம் வேண்டுமா?

அ. ஆம் 

ஆ. ஆம்,குறிப்பிட்ட காலத்திற்கு 

இ. இல்லை 

ஈ.  வேறு 

34.    அமையும் தமிழீழம் பிராந்திய அமைதிக்கும் அதன் நிலையான தன்மைக்கும் (நிரந்தரத் தன்மைக்கு) வழி வகுக்கும்?

அ. ஆம் 

ஆ. இல்லை 

இ. தெரியாது

cleardot.gif

இக் கேள்விப் பட்டியலில் சுதந்திரம் தொடர்பாக குறிப்பிடப்படாத வேறு ஏதாவது உரிமைகள், விடயங்கள் இந்த சுதந்திர சாசனத்தில் உள்ளடக்கப்படவேண்டி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதனை இங்கே குறிப்பிடவும்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

வணக்கம்!

இதில் எட்டாவது கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்களில் உள்ள நான்கு விதமான உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப்பட்டவர்கள் உலக சாசனங்களையும்.. அரசியல் நூல்களையும் வாசித்தால் அவற்றிக்கிடையே உள்ள வேறுபாட்டை உணரலாம். இதுதான் சொல்லுறது கொஞ்சம் என்றாலும் பள்ளிக்கூடம் போய் அரசியல் படிச்சிருக்கனுன்னு. சும்மா சும்மா நின்றிட்டு நாலு பந்தி எழுதினா குழப்பம் வரத்தான் செய்யும். :)

 

நா.க.த.அ விசமத்தனங்களுக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை காலத்தை வீணடிக்காமல்... நீங்கள் உங்கள் மூதவையோடு ஆராய்ந்து.. உங்களுக்கு சரி என்று தோன்றுவதை மக்களிற்க்கு வெளிச்சொல்லி செய்யுங்கள். அதுபோதும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இது சாதரண மக்களிம் கொடுக்கப்படுகின்ற கேள்விக் கொத்தில் இருக்கின்ற ஒரு கேள்வி. அனைவரையும் அரசியல் சாசனங்களையும், உலக அரசியலையும் படிக்கத் தூண்டுகின்ற நா.க.அரசின் சேவைக்கு நன்றி.

படிப்பதற்கு நேரமோ, வசதியோ இல்லாதவர்களுக்காகவாவது இதை யாராவது விளங்கப்படுத்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ச‌பேச‌ன் கேட்ட‌தில் எந்த‌ விச‌ம‌த் த‌ன‌மும் இருப்ப‌தாக‌ என் சின்ன‌ மூளைக்குத் தெரிய‌வில்லை. எல்லாரும் டாக்ட‌ர் ப‌ட்ட‌ம் வாங்கி விட்டு இதை வாசிக்க‌ வேணுமெண்டால் இன்னுமொரு நூறு வ‌ருஷ‌ம் க‌ழிச்சுத் தான் ப‌திலை எதிர் பார்க்க‌லாம். அல்ல‌து க‌ட்டெறும்பை எடுத்து ஊர‌ விட‌லாமோ? அதுவும் த‌மிழ் தெரிந்த‌ க‌ட்டெறும்பாக‌ இருக்க‌ வேணுமே??

 

  • கருத்துக்கள உறவுகள்

இது கேள்விக் கொத்து. மக்கள் (sample) விளங்கிக் கொண்டுள்ள வகைக்கு அவர்களிடம் இருந்து..பதிலை எதிர்பார்ப்பதுதான்.. அளிப்பதுதான் தரவுகளில் (data).. முடிவுகளில் (results).. reliability க்கு வகை செய்யும். மக்களுக்கு விளக்கிவிட்டு கேள்விக் கொத்து கொடுப்பது பக்கச் சார்வு.. bias..!

 

ஒரு படிச்ச மனுசனே இப்படி எழுதிறது.. முடியல்ல..! நாங்க எங்க போய்க்கிட்டுருக்கமுன்னு..!

 

அவர்களின் கேள்விக் கொத்தில் தவறிருந்தால் .. அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். தயவோடு..! அதுதான் ஒரு கற்றறிந்தவனின் பண்பு..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஜெயபாலன்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் இப்பதிவு இடப் பட்டிருந்தும் மிகச் சொற்பமானவர்களே... பார்த்துள்ளார்கள்.  மே, முதலாம் திகதி முன் பதிலளியுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும், முக நூலிலும்  பதியுங்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்!

இதில் எட்டாவது கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்களில் உள்ள நான்கு விதமான உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்க முடியுமா?

 

சபேசனுக்கு பிழை பிடிக்க மட்டும்தான் தெரியுமா?

இறங்கி  வேலை செய்யுங்கள் ஐயா

மற்றவனின் வலி  தெரியும் :(  :(  :(

விசுகு! நான் பிழை பிடிக்கவில்லை. விளங்கப் படுத்தச் சொல்லிக் கேட்பதையும் பிழை பிடிப்பதாக அர்த்தம் செய்ய வேண்டாம். இதைக் கேட்டு பல நாட்களாகியும் இங்கே களத்தில் இந்த நிமிடம் வரை யாரும் அதற்கான விளக்கத்தை சொல்லவில்லை.

பொதுவாகவே நான் ந.க.அரசு மீது விமர்சனம் செய்வது வெகு குறைவு. ந.க.அரசை ஒழுங்காக இயங்க விடமால் குறிப்பிட்ட தரப்பு செய்து வருகின்ற குழப்ப நடவடிக்கைகளால் ந.க.அரசு மீது அனுதாபமே உண்டு.

அதே வேளை என்னால் முற்று முழுதாக விளங்கிக் கொள்ளப்பட்டு, சரி என்றும், பயன் உள்ளது என்றும் நம்புகின்ற விடயங்களில் நான் என்னை ஈடுபத்தி செயற்படுவதே என்னுடைய வழக்கம்.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கூட ஆதரவு 

 

சபேசன் நண்பர் 

 

 

தாய்நாட்டிற்கான உரிமை 

சுயநிர்ணயத்துக்கான உரிமை 

தேசியத்துக்கான உரிமை

 

இத்தனை உரிமைகளும் எமக்கு இருந்தன ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியை சிங்களவருக்கு மட்டும் ஒப்படைத்து சென்ற படியால் எங்கள் இறைமை மறுக்கப்பட்டது அதை திரும்பி பெறுவதே இழந்த இந்த மூன்றுஉரிமைகளையும் திரும்பி பெறுவதே

 

 

இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை #

இது எனது விளக்கம் சரியாயின் கூறவும் தவறின் சொல்லவும் 

  • 3 weeks later...

எல்லொரும் தங்கள் விளக்கங்களை இங்கே கொடுப்பது நல்லது. மேலும் இந்த கேள்விகளை கூட்டங்களுக்கும் சென்று கேளுங்கள். கூட்டங்கள் அதற்காகத்தான் பிரதானமாக வைக்கப்படுகிறது. பலருக்கு பல கேள்விகள் இருந்தால் உங்கள் நாட்டு நா.க.அரசின் பிரதிநிதிகளிடன் மேலதிக கூட்டங்களை வைக்க சொல்லிக்கேட்டுப்பாருங்கள்.

 

8.    தமிழ் மக்கள் சுதந்திரத்திற்;கான உரித்துடையவர்கள் என்று  கோருவதற்கு கீழ் வருவனவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையாக அமையும்?

அ. தாய்நாட்டிற்கான உரிமை - ஐ.நாவால் வரையறுக்கப்பட்டது. இது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். 
ஆ. சுயநிர்ணயத்துக்கான உரிமை - பாதிக்கப்பட்ட இனம் ஒன்று ஐ.நா விடம் கேட்டு பெறத்தக்கது.
இ. தேசியத்துக்கான உரிமை - தனித்துவமான இனம் ஒன்று தன்னை பாதுகாக்க கேட்பது. வடக்கு கிழக்கில் தம்மை தனி இனமாக கருத்தும் முஸ்லீம்களுடன் இணைந்திருப்பதால் இது நமக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். நாம் கேட்கும் விடுதலை இரண்டு இனத்திற்கும். அவர்களும் தமிழர்களாக கருதப்பட்டு இப்போது தாக்ப்கபடுவதால்  பதிலில் (இ) வையும் உள்ளடக்கலாம்
ஈ. இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை  -மேல்க்காட்டிய விளக்கம்.

 

 

 


பலதெரிவுகளை கேட்பதால் நான்கும் பொருந்தும்.

 

எல்லொரும் தங்கள் விளக்கங்களை இங்கே கொடுப்பது நல்லது. மேலும் இந்த கேள்விகளை கூட்டங்களுக்கும் சென்று கேளுங்கள். கூட்டங்கள் அதற்காகத்தான் பிரதானமாக வைக்கப்படுகிறது. பலருக்கு பல கேள்விகள் இருந்தால் உங்கள் நாட்டு நா.க.அரசின் பிரதிநிதிகளிடன் மேலதிக கூட்டங்களை வைக்க சொல்லிக்கேட்டுப்பாருங்கள்.

 

8.    தமிழ் மக்கள் சுதந்திரத்திற்;கான உரித்துடையவர்கள் என்று  கோருவதற்கு கீழ் வருவனவற்றில் எந்த உரிமைகள் அடிப்படையாக அமையும்?

அ. தாய்நாட்டிற்கான உரிமை - ஐ.நாவால் வரையறுக்கப்பட்டது. இது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்க வேண்டும். 

ஆ. சுயநிர்ணயத்துக்கான உரிமை - பாதிக்கப்பட்ட இனம் ஒன்று ஐ.நா விடம் கேட்டு பெறத்தக்கது.

இ. தேசியத்துக்கான உரிமை - தனித்துவமான இனம் ஒன்று தன்னை பாதுகாக்க கேட்பது. வடக்கு கிழக்கில் தம்மை தனி இனமாக கருத்தும் முஸ்லீம்களுடன் இணைந்திருப்பதால் இது நமக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். நாம் கேட்கும் விடுதலை இரண்டு இனத்திற்கும். அவர்களும் தமிழர்களாக கருதப்பட்டு இப்போது தாக்ப்கபடுவதால்  பதிலில் (இ) வையும் உள்ளடக்கலாம்

ஈ. இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை  -மேல்க்காட்டிய விளக்கம்.

 

பலதெரிவுகளை கேட்பதால் நான்கும் பொருந்தும்.

 

இன்றுதான் நானும் நிரப்பி அனுப்பினேன். (ஈ) வையே தெரிந்தேன்.

 

வணக்கம்!

இதில் எட்டாவது கேள்விக்கு அளிக்கப்பட்டிருக்கும் பதில்களில் உள்ள நான்கு விதமான உரிமைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்க முடியுமா?

 

இதில் பத்தாவது கேள்வி சுயநிர்ணயத்தை ஆதரிக்கிறீர்களா எண்று கேட்க்கிறது...  சுயநிர்ணயம் என்பது எங்களுக்கு எது தேவை எண்று நாங்களே முடிவெடுக்கும் உரிமை எண்று சுருக்கமாக சொல்லலாம்...  

 

ஆகவே அதை தவிர்த்தால் வரும்   "தாய்நாடு என்பதும்,  தேசியம் என்பதும்"  வாழும் மக்கள் சார்ந்தது...

 

இலங்கையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு எண்று அவர்கள் ஐநா அங்கீகரிக்கும் அள்வான 300 வருடங்களுக்கு மேலாக வாழும் மக்கள் அவர்களின் நிலம்  தாய் நாடு  அதில் வாழும் தமிழர்கள் ஒரு தனியான நீண்டகால  மொழி, கலாச்சரம் கொண்ட  தேசிய இனம்...  இதை அண்மைய காலம் வரைக்கும் இலங்கை அரசு கூட அங்கீகரித்து இருந்தது...   

 

இவை இரண்டையும் விட மிக முக்கியமான காரணமாக இருக்க கூடியது  "இழந்த இறைமையை மீளப் பெறும் உரிமை"...   ஏற்கனவே ஆட்ச்சியில் இருந்த தமிழினம் மீளவும் அந்த உரிமையை கேட்க்கின்றது...   அதாவது பலவந்தமாக அங்கிலேயர்களா பறிக்கப்பட்ட  எங்களது உரிமையை மீளவும் கேட்ப்பது... 

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியைக்கேட்டவர்

சந்தேகம் வந்தால் மட்டுமே கேட்கிறார்

தெளிவு வந்தால் சொல்கிறாரில்லை

 

இதிலேயே அவரது சந்தேகத்தில்

நாம் சந்தேகிக்க இடம் வைக்கிறார்?? :D

(ஒருவேளை பத்திரிகைப்புத்தியாக இருக்குமோ??? :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வியைக்கேட்டவர்

சந்தேகம் வந்தால் மட்டுமே கேட்கிறார்

தெளிவு வந்தால் சொல்கிறாரில்லை

 

இதிலேயே அவரது சந்தேகத்தில்

நாம் சந்தேகிக்க இடம் வைக்கிறார்?? :D

(ஒருவேளை பத்திரிகைப்புத்தியாக இருக்குமோ??? :lol: )

 

நண்பர் சபேசன், பத்திரிகையும் நடத்துபவரா? விசுகு.

அந்தப் பத்திரிகையின் பெயரைச் சொன்னால்... நாங்களும், வாங்கி வாசிப்போம் தானே.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைனில் தமிழீழ சாசனம் நோக்கிய எனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என் தாய் நாட்டுக்கு ஆற்றிய சிறிய பங்களிப்பாக இதனை என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்றாக நோக்குகிறேன்.

 

நன்றி இந்தச் சந்தர்ப்பத்தை அளித்த நா.க.த.அ க்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்லைனில் தமிழீழ சாசனம் நோக்கிய எனது கருத்துக்களைத் தெரிவித்துவிட்டேன். என் தாய் நாட்டுக்கு ஆற்றிய சிறிய பங்களிப்பாக இதனை என் வாழ்நாள் பாக்கியங்களில் ஒன்றாக நோக்குகிறேன்.

 

நன்றி இந்தச் சந்தர்ப்பத்தை அளித்த நா.க.த.அ க்கு..! :icon_idea:

 

இங்கு நடந்த கருத்தரங்குக்கு  போயிருந்தேன்.

 

இடக்குமடக்காக கேட்கப்பட்டதற்கும்

தெளிவாக பேசினார்கள்

விளக்கம் தந்தார்கள்

அமைதியாக சொல்வதைக்கேட்டார்கள்

உள் வாங்கினார்கள்.

 

 

 

(கவலையாக இருந்தது

வந்திருந்தோர் 20 அல்லது 30) :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.