Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணம் என்றும் இந்துக்களின் ராஜ்யதானியமாகவே அதன் கலை கலாச்சார அம்சங்களோடு இருக்கும். சங்கிலிய மன்னனின் வாரிசு விசேட செவ்வி

Featured Replies

அதற்க்காக ஒட்டுக் குழுக்களின் கொலைகளை இரண்டகர்களின் மனித அழிப்பை யாரும் சரி என்று சர்வதேசமோ இல்லை தமிழ் இனமோ சான்றிதழ் கொடுக்கவில்லை நண்பரே

 

அப்படி நானும் சொல்லவில்லை

 

யாழ்பாண ராசதானியின் மாமன்னர் 28ம் ரெமிகிஸ் தானும் போட்டுத்தள்ளியிருப்பார் என்ற கருத்தில் இருந்து போட்டுத்தள்ளுவது குறித்தே எனது கருத்து சுட்டிக்காட்டப்படுகின்றது. மேற்கண்ட கருத்தில் போட்டுத்தள்ளுவதை ஒரு புறம் வைத்துவிட்டு வேறெங்கோ சுற்றி சுழன்று கேள்வி கேட்கப்படுகின்றது.

 

சரியான விடையின் கீழ் கோடிடுக

1- டக்ளசும் புலியும் தமிழர்கள். (முற்றுப்புள்ளி) இந்த இரண்டு தமிழ்குழுக்களில் தமிழ்மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

2- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

 A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

இதற்குள் நாம் என்னத்தை மல்லுக்கட்டியும் விடையை மாற்ற முடியாது. புதிய கேள்விகளை உருவாக்குவதே சிறந்தது. புதிய கேள்விகளில் என்றாலும் எமக்குள் நாம் போட்டுத்தள்ளுவது குறித்த கேள்வி இல்லாமல் இருந்தால் நல்லது. அவ்வளவுதான் இங்கு சொல்லக்கூடியது.

 

(நான் கைத்தடி நீங்கள் கைப்புள்ள அவ்வளவுதான் வித்தியாசம்)

 

 

இந்த மனிதர் பலதவை தமிழரின் போராட்டங்களை கொச்சைப் படுத்தி அறிக்கை விட்டுவிட்டார்.  இந்தப் பேட்டி அதில் ஒன்று.

 

வேண்டுமென்றே பதில்களுக்காக தெரியப்பட்ட கேள்விகளும், பின்னர் அதற்கான பதில்களும். இது வெளிவந்திருப்பதன் நோக்கம் வடமாகணத்தேர்தல். அதனால்த்தான் அவர் வடமாகாண தேர்தலை பற்றி சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.  தனது அரசியல் கட்சி சம்பந்தமாக கேள்வி கேட்டு பதில் அளித்திருக்கிறார்.  தனிப்பட கூட்டமைப்பை மட்டும் தாக்கியுமிருக்கிறார்.

 

பேட்டி எல்லா இடத்திலும் தாங்கள் யாழில் எழுதும் கருத்துகளுடன் ஒத்துப்போகிறது. ஒரே ஒரு இடத்தில் அவர் தான் கூறியவற்றுக்கு எதிராக வேண்டுமென்றெ கருத்து கூறியிருக்கிறார். நீங்கள் அந்த இடத்தை வந்து நிரப்பி எழுத முயல்வது போல் படுகிறது.

 

இரண்டு மூன்று இயக்கங்கள் ஒரு போராட்டத்தில் பங்கு பற்றும் போது அவைகளுக்குள் இருக்கும் சகோதர சண்டை எங்கும் புதுமையானது அல்ல. (அது புத்திசாலித்தனமா, இல்லையா என்பது எனது வாதம் அல்ல. அது தமிழ் இனத்தில் மட்டும்தான் காணப்படுகிறது என்பதியே கேள்வி கேட்கிறேன்) . அது இன்று சிரியாவில் கூட இருக்கிறது.  இதை வைத்து "சேரசோழ பாண்டியராகட்டும் சங்கிலியன் தெடங்கி புலிகள் ஏனைய இயக்கங்கள் ஆகட்டும் சொந்த இனத்தை சர்வநாசம் பண்ணி அடுத்த இனங்களுக்கு அடிமையாக்கினார்கள் தவிர இனத்தை கட்டியெழுப்பவில்லை. மதம் சாதி பிரதேசம் என்பது காலா காலத்துக்கும் வக்கிரம்பிடித்த ஒன்றாக இன்றுவரை நிலைக்கின்றது. நாகரீகமடையாத காட்டுமிராண்டிநிலையில் ஒரு இனம் உலகில் இருக்கின்றது என்றால் அது தமிழினம்தான்." இப்படி உக்கிரமான  கருத்து எழுதுவது சில வர்மம் தீர்க்க எழுத பட்ட கருத்துப்போலப் படுகிறது. தெலுங்கு மக்கள், கேரளர், கன்னடர், மகாராஸ்டிரர்  எல்லோருமே தான் தமது உள்பூசல்களுடனும், அயல், வெளிபூசல்களுடனும் வாழ்ந்து வரும் போது இந்த பொதுவாக்கம் உண்மை இல்லாதது. மகாராஸ்டிராவில் சிவ சேனையும் குஜராத்தில் முஸ்லீம் சண்டையும் அண்மைய நிகழ்வுகள்.  கண்டி இராசியத்தை காட்டிகொடுத்ததும், தமது உள்பூசல்களால்,  இரண்டு சிங்கள மந்திரிகள் என்பதும் உண்மை. பண்டாராநாயக்காவில் ஆரம்பித்து இலங்கையிருந்த அனைத்து சிங்கள தலைமைகளும் உள்பூசல்களால் பதவி இழக்க முதல் அல்லது இழந்த பின்னர் பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் இரண்டு பெரிய JVP கலவரங்கள் நடந்ததும், பண்டாரநாயக்கா, D.S. உடன் முரணி சாதி வேறுபாட்டால் வேறு கட்சி ஆரம்பித்தார் என்பதும் சரித்திரங்களில்  சொல்லப்பட்டிருக்கு. இருந்தாலும் பொய்களையும் புனைகலையும் கூறி தனது இனத்தை வேண்டுமென்றே தூற்றுபவர்கள் நமது இனத்தில் உண்டு என்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்குச் சொல்லும்.

 

நீங்கள் பிடித்துவைத்திருக்கும் இவரின் கருத்து அவர் தனது கருத்துக்ககு எதிராக சொன்ன கருத்து ஆனால் நீங்கள் அவரின் முழு பேட்டியையும் தள்ளிவைத்துவிட்டு அந்த கருத்தை எடுத்து விவாதிக்க முயல்கிறீர்கள். ஆனால் ஏன் அவர் தனது பேட்டிக்கு எதிராக அப்படி ஒரு கருத்து சொன்னார் என்ற கேள்வியை கேட்பதை தவிர்த்து விட்டீர்கள்.

 

ஆயுத இயக்கங்கள் தங்கள் உயிர்களை காப்பாற்ற மற்ற இயங்கங்களை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை எதிர்த்த ரெமிஸ் சகோதர மதத்தினரை கொல்ல வேண்டும் என்று கருத்துவைக்கிறார். இதை நீங்கள் அதில் உள் நோக்கம் இருக்க முடியாது என்றும் அது தமிழ் இனத்தின் பொது நடத்தை என்றும் பிழையான உதாரணங்கள் முலம் எடுத்து நிறுவ முயல்கிறீர்கள். உங்களுக்கு தமிழ் (நீங்கள் இவ்வளவு தூற்றிய பின்னரும் உங்கள் இனம் தமிழ் இனமகா இருந்தால்- உங்கள்) இனதின் மீது இருக்கும் குரோதத்தை அதி வெறுப்பாக கொட்டித்தள்ளியிருக்கிறீர்கள். அதன் பின்னர் பின்னர் வெறுப்பைக் காட்டும் மற்ற்வர்களை தூற்றுகிறீர்கள். மொத்ததில் நீங்களும் ரெமிசும் ஒரே நடத்தையையே காட்டுகிறீகள்.

 

அதற்கு மேலும் ஆதாரமாக, ரெமிசு மாதிரி  நீங்களும் உங்கள் பக்கத்தில் பதிலுக்கேற்ற கேள்விகள் கேட்டு பதில் அளித்திருக்கிறீர்கள். முடிமறைக்க முடியாத உண்மையான தமிழ் மக்களால் "பொடியள்" என்று அழைக்கப்பட்ட புலிகளை "தமிழ்மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்" என்ற விடைக்கு தெரிவாக்குவிக்க முயல்கிறீர்கள். இதை வசதியாக்க  இரண்டு இயகங்களை மட்டும்தான் ஒப்பிட்டீர்கள் என்பதும், பின்னர் பதிலில் இந்திய, இலங்கை அரசுகளை வேண்டுமென்றே இழுத்துவந்து அவற்றுகிடையில் புலிகளை தெரிவு செய்த்து காட்டினதும் நகைப்புக்கிடம்.

 

புலிகள்  அதிகமான மற்றய இயக்கங்களை கொலை செய்தார்கள்.  ஆனால் டக்கிளசின் குண்டர்கள் இன்றும் பொது மக்களை கொல்வதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். அண்மையில் நெடுந்திவில் 12 வயது பிள்ளையை வன்முறை படுத்தி கொலை செய்தார்கள். கனடாவில் வசித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அழைத்து உடமைகளை திருடிவிட்டு கொலை செய்தார்கள்....... அவர்களின் கொலை அன்றிலிருந்து இன்னும் தொடர்கிறது. ஆனால் இலங்கையில் அவற்றை பற்றி பேச முடியாது. தமிழ் நாட்டில் அப்படி இல்லை. இவர் செய்த கொலைக்கு அங்கே இருக்கும் வழக்கை சந்திக்க மறுக்கிறார்.

 

அதே நேரம் நீங்களே கொலைகள் செய்கிறவர் என்று ஏற்றுகொள்ளும் ஒருவர் புலிகளை விட குறந்த கொலைகளை செய்தார் என்று நியாப்படுத்தி ஒரு ஜனநாயக அரசில் விசாரணைகள் இல்லாமல் மந்திரிப் பதிவி வகிப்பதையும் நியாப்படுத்துகிறீர்கள்.

 

அதன் பின்னர் தமிழ் இனத்தை வாய் நிறைய திட்டித்தீர்த்திருக்கிறீர்கள்.

 

 

 

 

Edited by மல்லையூரான்

 

 
இன்றும் தமிழர்களை வதைக்கும் ஒட்டுக்குழு(க்கள்) எவை?
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
கள்ள வாக்கு மூலம் தமிழ் மக்களை பேய்க்காட்டும் ஒட்டுக்குழுக்கள் எவை?
 
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதும் சொத்துக்களை சூறையாடுவதும் பெண்களிடம் சேட்டை செய்பவர்கள் யார்?
 
1 .ஈ.பி.டி.பி
 
2. புளட்
 
3.ரெலோ
 
4.ஈரோஸ்
 
கேள்விகள் தொடரும். விடைகளை சண்டமாருதன் விரைவில் தருவார்

 

 

5. கருணா

6. பிள்ளையான்

 

தந்திரமாக புலிகளை விட்டுவிட்டீர்களே !

 

விடைகள் என்னும் நூறு வரை நீளும். எல்லாம் தமிழர்களே. அதனால் எல்லாம் சரியான விடைகள்.

 

கேள்வியை மாற்றும்போது விடைகளும் மாறும். கேள்வி மாறவேண்டுமானால் போட்டுத்தள்ளும் மனநிலை மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

5. கருணா

6. பிள்ளையான்

 

தந்திரமாக புலிகளை விட்டுவிட்டீர்களே !

 

விடைகள் என்னும் நூறு வரை நீளும். எல்லாம் தமிழர்களே. அதனால் எல்லாம் சரியான விடைகள்.

 

கேள்வியை மாற்றும்போது விடைகளும் மாறும். கேள்வி மாறவேண்டுமானால் போட்டுத்தள்ளும் மனநிலை மாறவேண்டும்.

டக்ளசின் போட்டுத்தள்ளல் இந்த நிமிடம் வரை தொடர்கிறது. புலிகளை இனி சாட்டு சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது. ஈ.பி.டி.பிக்கு கூஜா தூக்கும் நீங்கள் எப்படி அவர்களின் அராஜகத்தை நிற்பாட்டலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

இன்றும் தமிழர்களை வதைக்கும் ஒட்டுக்குழு(க்கள்) எவை?

கள்ள வாக்கு மூலம் தமிழ் மக்களை பேய்க்காட்டும் ஒட்டுக்குழுக்கள் எவை?

சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களை காட்டிக்கொடுப்பதும் சொத்துக்களை சூறையாடுவதும் பெண்களிடம் சேட்டை செய்பவர்கள் யார்?
 

5. கருணா

6. பிள்ளையான்

 கேள்விகளையும் பதில்களையும் வாசிக்கவும்.

 

5. ஆவது வர முடியும், ஆனால் அது S.L.F.P என்றூதான் நீங்கள் போட்டிருக்க வேண்டும்.

6. இனிமேல் கேள்விகளில் வர முடியாது

 

 

 

 

இப்படி உக்கிரமான  கருத்து எழுதுவது சில வர்மம் தீர்க்க எழுத பட்ட கருத்துப்போலப் படுகிறது. தெலுங்கு மக்கள், கேரளர், கன்னடர், மகாராஸ்டிரர்  எல்லோருமே தான் தமது உள்பூசல்களுடனும், அயல், வெளிபூசல்களுடனும் வாழ்ந்து வரும் போது இந்த பொதுவாக்கம் உண்மை இல்லாதது. மகாராஸ்டிராவில் சிவ சேனையும் குஜராத்தில் முஸ்லீம் சண்டையும் அண்மைய நிகழ்வுகள்.  கண்டி இராசியத்தை காட்டிகொடுத்ததும், தமது உள்பூசல்களால்,  இரண்டு சிங்கள மந்திரிகள் என்பதும் உண்மை. பண்டாராநாயக்காவில் ஆரம்பித்து இலங்கையிருந்த அனைத்து சிங்கள தலைமைகளும் உள்பூசல்களால் பதவி இழக்க முதல் அல்லது இழந்த பின்னர் பழி வாங்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கையில் இரண்டு பெரிய JVP கலவரங்கள் நடந்ததும், பண்டாரநாயக்கா, D.S. உடன் முரணி சாதி வேறுபாட்டால் வேறு கட்சி ஆரம்பித்தார் என்பதும் சரித்திரங்களில்  சொல்லப்பட்டிருக்கு. இருந்தாலும் பொய்களையும் புனைகலையும் கூறி தனது இனத்தை வேண்டுமென்றே தூற்றுபவர்கள் நமது இனத்தில் உண்டு என்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்குச் சொல்லும்.

 

 

 

 

 

இனங்களுக்குள் உட்பூசல்கள் எல்லா இடத்திலும் உண்டு ஆனால் இனத்துக்கென்று ஆபத்துவரும்போது அவர்கள் இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தமிழர்களை அழித்து சிங்கள தேசத்தை கட்டியெழுப்புவதில் JVP இணைந்தே நின்றது. கேரள கன்னட மராட்டியர் எவரும் இனம் என்று வரும்போது இணைகின்றனர். அழிவின் உச்சத்தில் கூட இயக்கங்கள் இணைந்ததா இல்லை தமிழகக் கட்சிகள் இணைந்ததா? மற்ற இனங்களுடன் தமிழனத்தை ஒப்பிடுவது அந்த இனங்களை அவமதிப்பதாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

டக்ளசின் போட்டுத்தள்ளல் இந்த நிமிடம் வரை தொடர்கிறது. புலிகளை இனி சாட்டு சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது. ஈ.பி.டி.பிக்கு கூஜா தூக்கும் நீங்கள் எப்படி அவர்களின் அராஜகத்தை நிற்பாட்டலாம் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

 

இந்த நிமிடம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

 

அப்பன் மகளை பாலியல் பலாத்காரம் செய்தாலும் ஒட்டுக்குழு காரணம்

முன்னாள் புலிகள் சாப்பிட வழியில்லாமல் பாலியல் தொழில் செய்தாலும் ஒட்டுக்குழு காரணம்

வறுமையில் எவன் கொள்ளையடிதாலும் கொலை செய்தாலும் ஒட்டுக்குழு காரணம். உங்கள் நினைப்பு எப்போதும் நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவிக்குப் பிறந்த தூய்மையான ஒழுக்க சீலர்கள் ஒட்டுக்குழுதான் உங்களை கெடுக்கின்றது என்பதாகும். ஒட்டுக்குழு என்பதும் இந்தச் சமூகத்தில் இருந்து உருவானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

என்னத்தை சாட்டுச்சொல்லி தப்பிக்கின்றது? அங்க ஒட்டுக்குழு இங்க பாம்புக்குழு. மொத்தத்தில் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே !

  • கருத்துக்கள உறவுகள்

5. கருணா

6. பிள்ளையான்

 

தந்திரமாக புலிகளை விட்டுவிட்டீர்களே !

 

விடைகள் என்னும் நூறு வரை நீளும். எல்லாம் தமிழர்களே. அதனால் எல்லாம் சரியான விடைகள்.

 

கேள்வியை மாற்றும்போது விடைகளும் மாறும். கேள்வி மாறவேண்டுமானால் போட்டுத்தள்ளும் மனநிலை மாறவேண்டும்.

 

 

 

1.புலிகளுக்கும் மேற்கூறிய கேள்விகளுக்கும் சம்பந்தமில்லை.
 
2.ஒட்டுக்குழுக்களுக்குள் அவர்கள் அடங்கமாட்டார்கள்
 
3.  4 பிரதான விடைகள் மாத்திரம் போடப்பட்டுள்ளன.

 

1.புலிகளுக்கும் மேற்கூறிய கேள்விகளுக்கும் சம்பந்தமில்லை.
 
2.ஒட்டுக்குழுக்களுக்குள் அவர்கள் அடங்கமாட்டார்கள்
 
3.  4 பிரதான விடைகள் மாத்திரம் போடப்பட்டுள்ளன.

 

எப்படி? தொண்டுநிறுவனப் பணிப்பெண்களை பாலியல் வக்கிரம் செய்து கொலைசெய்த கருணா இனியபாரதியின் வக்கிரம் குறைவானதா? பிரதானத்தில் இருந்து விலத்துகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிமிடம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

 

அப்பன் மகளை பாலியல் பலாத்காரம் செய்தாலும் ஒட்டுக்குழு காரணம்

முன்னாள் புலிகள் சாப்பிட வழியில்லாமல் பாலியல் தொழில் செய்தாலும் ஒட்டுக்குழு காரணம்

வறுமையில் எவன் கொள்ளையடிதாலும் கொலை செய்தாலும் ஒட்டுக்குழு காரணம். உங்கள் நினைப்பு எப்போதும் நீங்கள் எல்லோரும் பரிசுத்த ஆவிக்குப் பிறந்த தூய்மையான ஒழுக்க சீலர்கள் ஒட்டுக்குழுதான் உங்களை கெடுக்கின்றது என்பதாகும். ஒட்டுக்குழு என்பதும் இந்தச் சமூகத்தில் இருந்து உருவானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

 

என்னத்தை சாட்டுச்சொல்லி தப்பிக்கின்றது? அங்க ஒட்டுக்குழு இங்க பாம்புக்குழு. மொத்தத்தில் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே !

 

 

புலிகள் இல்லாத இவ்வேளையில் நான் சொன்ன நடவடிக்கைகளை செய்பவர்கள் இலங்கை அரசபடைகளுடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி தவிர வேறு யாரும்  99.9% இருக்கவே முடியாது.
 
மிகுதி உங்களின் கற்பனை கருத்துக்களுக்கு நான் ஜவாப்தாரியல்ல.
 
தின்ன வழி இல்லா விட்டால் உழைத்து சாப்பிடுவது. ஏன் மக்களிடம் 
சூறையாடுகிறீர்கள்??
 
தமிழ் மக்களுக்கு ஆயுதபோராட்டத்தை விட்டவர் என பெருமைபட கூறும் டக்ளஸ் என்னத்துக்கு இப்போதும் ஆயுத குழு வைத்து இருக்கிறார் என கூற முடியுமா?? தமிழ் மக்களுக்கு பயமா? துரத்தி துரத்து வெழுப்பார்கள் என்று.
  • கருத்துக்கள உறவுகள்

28 ம் சங்கிலிய மன்னன் யாழ்ப்பாண மண்ணில் விரைவில் கோலோச்ச வாழ்த்துகள் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி? தொண்டுநிறுவனப் பணிப்பெண்களை பாலியல் வக்கிரம் செய்து கொலைசெய்த கருணா இனியபாரதியின் வக்கிரம் குறைவானதா? பிரதானத்தில் இருந்து விலத்துகின்றீர்கள்.

 

 

உங்களின் ஆசையை ஏன் கெடுப்பான்.
 
5. கருணா
 
6.பிள்ளையான்.
 
சரி இப்போ மிகச்சரியான விடையை கூறவும்.

 

இனங்களுக்குள் உட்பூசல்கள் எல்லா இடத்திலும் உண்டு ஆனால் இனத்துக்கென்று ஆபத்துவரும்போது அவர்கள் இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். தமிழர்களை அழித்து சிங்கள தேசத்தை கட்டியெழுப்புவதில் JVP இணைந்தே நின்றது. கேரள கன்னட மராட்டியர் எவரும் இனம் என்று வரும்போது இணைகின்றனர். அழிவின் உச்சத்தில் கூட இயக்கங்கள் இணைந்ததா இல்லை தமிழகக் கட்சிகள் இணைந்ததா? மற்ற இனங்களுடன் தமிழனத்தை ஒப்பிடுவது அந்த இனங்களை அவமதிப்பதாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இது வேறு. இது அதை நியாப்படுத்தவில்லை. இது வேறு ஒன்றை நியாயப்படுத்துகிறது. அதற்கு பின்னர் வருவோம்.ஆனால் முதலில் :

 

இதை நீங்கள் முதலில் எழுதவில்லை என்பது உண்மை. அதாவது நீங்கள் முதலில் எழுதியது வர்மம் தீர்க்க என்பதிலிருந்து வேறுபாட்டை காணமுடியவில்லை.

 

நீங்கள் சொல்ல்வரும் கேரளர் தமிழர் என்றதை மறந்து தடுமாறுகிறீர்கள். இதே நிலைதான் வட கன்னடர், மகராஸ்டிரரர் எல்லோருமே. மேலும் தென்னகம் எல்லாம் ஒரே இனம். உயிரியல் ரீதியில் நீங்கள் வலிந்து கட்டும் மொழி வேற்றுமை உண்மை இல்லாதது.

 

JVP தங்களை தாங்கள் அழித்தது. JVP ஆபத்தில் மாட்டியது கூட உள்வீட்டுக்காட்டிகொடுப்பனவுகளால் எல்லோரும் தங்களைத்தான் காட்டிக்கொடுக்கிறார்கள். உள்வீட்டு JVP முதலில் அடக்க தமிழ் பொலிசுகள்தான் பாவிக்கப்பட்டார்கள். சிறிமாவோ இந்திய படையை கொண்டு வர முதல் ASP  சண்முகம் போன்ற்வர்களை தான் JVP யை அடக்க பாவித்தார். பின்னர் சிங்கள பொலிசுகளை நம்பாமல் உள்வீட்டுக் கலவரத்தை அடக்க இந்தியன் ஆமியைக்கொண்டு வந்தார்.

 

ஐ.நாவின் தீர்மானங்கள் சிங்கள நவ அரசர்களை போர்குற்ற வழக்குகளில் சிக்க வைக்கலாம். இதை நிச்சயமாக்குவதற்கு சனல்- 4 இலங்கை கொலைக்களம் படங்களை தயாரித்து பிரேரணை நேரம் வெளிவிடுகிறது அது இலங்கை அரசுக்கு ஆபத்தான நேரம். நீங்கள் இன்னொரு திரியில் சிங்கள ஆமிக்காரர்தான் இந்த சனல்-4 க்கு ஒளிபடம் கொடுக்கிறார்கள் என்று எழுதியிருந்திர்கள்.  இது ஆபத்து நேரத்தில் காட்டிக்கொடுப்பது. மேலும் பிலிமாத்தலவையும், எகிலபொலவும் செய்த வேலை ஆபத்தில்லாத கண்டி அரசை ஆபத்துக்குள் போட்டு அழித்தது. இவர்களின் வரிசையில் தான் தேவனந்தா.

 

ஆனால் இது வரையில் ஒரு தனிக்கட்சி அரசியாலால் சேர்ந்து நின்று போராடும் இலங்கையின் ஒரு இனம் தமிழ் இனம் மட்டுமே. முஸ்லீம்கள் ஆபத்தில் மாட்டிய பின்னரும் அஸ்வரும் கக்கீமும் பதியுதினும் இன்னமும் இணைய மறுத்து அரசுடன் சேர்ந்து  பொதுபல சேனாவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அது மட்டுமல்ல அஸ்சிரப் ஆரம்பித்தகட்சியை கூட அழித்துவிட்டார்கள்.

 

நீங்கள் இங்கே சொல்ல வருவது இனத்துக்கு ஆபத்து வந்தால் துஸ்டர்களுடன் இணையலாம் என்பது. அது சரியா தெரியாது. அப்படியாயின் இராசியத்திற்கு ஆபத்து வந்த போது கிறிஸ்தவர்களை கொலை செய்யலாம் என்று கூறும் ரெமிசை உயிரை கொடுத்து எதிர்ப்பான் ஏன்?

 

நீங்கள் வன்மையாக கண்டிக்க வேண்டியது தேவானந்தா மாதிரி ஆட்களையும் தன் இனத்தை தூற்றும் உங்களை மாதிரி நபர்களையுமே. அதாரமில்லாமல் இப்படி எழுதிவிட்டு தடுமாறுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

Edited by மல்லையூரான்

எப்படி? தொண்டுநிறுவனப் பணிப்பெண்களை பாலியல் வக்கிரம் செய்து கொலைசெய்த கருணா இனியபாரதியின் வக்கிரம் குறைவானதா? பிரதானத்தில் இருந்து விலத்துகின்றீர்கள்.

கருணா பிள்ளையான் போன்ற பிரம்போக்குகள் உன்ன்னதமான புலிகள் அமைப்பில் இருந்த போது இபிடிபி போன்று கேவலமான வேலைகளை செய்யவில்லை புலிகள் அமைப்பில் இருந்து விலக்க அல்லது விலகிய பின் தான் கேவலம் கேட்டார்கள் ஆனால் இபிடிபி டக்லஸ் போன்றவர்கள் காலம் காலமாகவே இதைத்தானே செய்கிறார்கள்

தலைப்பு தெளிவாக சொல்கிறது  இந்த ஆளை தேர்தல் நேரம் இந்துகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்காக்க அமர்த்தபட்டிருக்கு என்று. மேலும் இதனால் தனிப்பட்ட முறையில் கூட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கு.

 

அதனாலேயே பொய்யட் போன்றவர்கள் கருத்தான " மன்னரில் கத்தோலிக்கரை கொலைசெய்ததே யாழ்ப்பான அரசின் முடிவின் ஆரம்பாகும்." என்ற கருத்து இங்கே முதன்மை பெறுகிறது. பொய்யட் இந்த கருத்தை எழுத முதல் ஐரோப்பிய இனங்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாண ராச்சியத்தை மட்டும் அல்ல உலகம் முழுவதையும் தான் பிடித்துஆண்டார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கோண்டு தான் யாழ்பாண இராசியம் பிடிபட்டமைக்கான காரணாமாக அந்த கொலையை முன் வைக்கிறார். ஆனால் பிடிபட்ட நாடுகளில் எங்கெங்கே கிறிஸ்த்தவர்கள் கொல்லபட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

றெமிஜியஸ் கனகராஜா 2010 அல்லது 2011ல் நெதர்லாந்து ராணியால் கௌரவிக்கப்பட்டவர். இவர்களது உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியைக் கீழே தந்துள்ளேன். இவரது அரண்மனையுடன் தொடர்பு கொண்டால் அவர்கள் இரண்டு மூன்று  தினங்களுக்குள் பதில் தொடர்பை ஏற்படுத்துவார்கள். 

 

 

http://www.jaffnaroyalfamily.org/

 

புலிகள் சர்வதேச அளவில் தேர்வு எழுதவில்லை. இலங்கை ஐ.நா.வில் எழுதிய தேர்வில் இரண்டு தடவைகள் பெயில். இலங்கை மீளாய்வுக்கு கேட்டிருக்கு. அதற்கான பதில் விரைவில் கிடைக்கலாம்.

 

1948லிருந்து தமிழர் தமது பிரச்சனைகளை சர்வ்தேசமயப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஸ்கொட்லாந்து பொண்ரவை 300 ஆணுகளாக முயல்கின்றன. நாம் 60 வருடம் மட்டுமே.

மன்னாரில் கிறிஸ்தவ திருச்சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது!
 
மன்னாரில் கிறிஸ்தவ திருச்சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது!
by Editor on 18th-April-2013
 

MannarM1.jpgமன்னார் அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் உடைக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை இரவு 11 மணியளவில் இனந்தெரியாத காடையர் கும்பலொன்று இந்த நாசகாரச் செயலைச் செய்துள்ளது.

அடம்பன் கண்ணாட்டி கிராமத்தில் உள்ள புனித பிலிப் நேரியர் ஆலயத்திற்கு முன்பாக புனித பிலிப் நேரியர் திருச்சொரூபம் கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு 11 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற கும்பல் கண்ணாடிப்பெட்டியினுள் வைக்கப்பட்டிருந்த புனித பிலிப் நேரியர் திருச்செரூபத்தை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு கொண்டு சென்று நடு வீதியில் வீசி உடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து இன்று காலை – ஒன்று திரண்ட கண்ணாட்டி கிராமமக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

manthai_pilip-15.jpg manthai_pilip-1.jpg manthai_pilip-12.jpg manthai_pilip-13.jpg

 

இந்த இந்து வெறித் தலைப்பும், மேலே உள்ள செய்தியும் கிறிஸ்தவர்கள் தங்கள் பாதுகாப்பை ஊர்ஜிதம் செய்ய வேண்டியவர்களாக்குகிறது. இவை கிறிஸ்தவர்கள் மீது திட்ட மிட்டவையாக இருக்கலாம்.

Edited by மல்லையூரான்

சரியான விடையின் கீழ் கோடிடுக

1- டக்ளசும் புலியும் தமிழர்கள். (முற்றுப்புள்ளி) இந்த இரண்டு தமிழ்குழுக்களில் தமிழ்மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

2- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

 A- புலிகள், B - டக்ளஸ், C- இலங்கை அரசு, D- இந்திய அரசு.

 

இதற்குள் நாம் என்னத்தை மல்லுக்கட்டியும் விடையை மாற்ற முடியாது. புதிய கேள்விகளை உருவாக்குவதே சிறந்தது. புதிய கேள்விகளில் என்றாலும் எமக்குள் நாம் போட்டுத்தள்ளுவது குறித்த கேள்வி இல்லாமல் இருந்தால் நல்லது. அவ்வளவுதான் இங்கு சொல்லக்கூடியது.

 

(நான் கைத்தடி நீங்கள் கைப்புள்ள அவ்வளவுதான் வித்தியாசம்)

 

 

உண்மையான பதிலைப் பார்ப்போம்!

 

1- தமிழ்குழுக்களில் தமிழ் மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

முதல் மூன்று பொருத்தமான விடைகள்:

(1) டக்ளஸ் கும்பல்

(2) வரதர் கும்பல் 

(3) டெலோ சிறிசபாரத்தினம் கும்பல்

 

 

2-  தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை, தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களை, தமிழ் பெண்களை பாலியல் பாலத்காரம் செய்தவர்களை, தொடர்ச்சியான எச்சரிக்கைகளை மீறி இப்படியானவர்களுக்கு தொடர்ந்து உதவிய கயவர்களை - கைத்தடிகளை, திருந்தாத கொள்ளைக்காரர்களை அழித்து தமிழ் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் யார்?

(1) தமிழீழ விடுதலைப் புலிகள்

 

3- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

முதல் மூன்று பொருத்தமான விடைகள்:

(1) சிங்கள அரசு

(2) இந்திய அரசு

(3) டக்லஸ் கும்பல்

 

 

4- தமிழர்களைக் கடத்தி சொத்துக்களைப் பறித்தவர்கள், தமிழ்ப் பெண்களை பாலியல் இம்சைக்கு ஆளாக்கிய (சிங்கள, இந்திய அரசுகள் தவிர்ந்த) குழுவினர் யார்?

(1) டக்லஸ் கும்பல்

(2) வரதர் கும்பல் 

 

ஆசானின் பதில்கள் 100வீதம் சரியான. பதில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில்  செய்யப்படாத பல தியாகசாதனைகளை தமது உயிர் பொருள் ஆவி  அத்தனையையும் கொடுத்து எமக்காக செய்தவர்களை 

இனவாதிகள்

ஆக்கிரமிப்பாளர்கள் 

கொடுங்கோலர்களுடன் சரிநிகராக நிறுத்தி

ஆராயும் ஒரு இனம் உலகத்திலுண்டு என்றால் அது தமிழினம் மட்டுமே. :(  :(  :(

உண்மையான பதிலைப் பார்ப்போம்!

 

1- தமிழ்குழுக்களில் தமிழ் மக்களை கொன்றது அவலப்படுத்தியது நிர்கதியாக்கியது யார் அதிகம்?

 

முதல் மூன்று பொருத்தமான விடைகள்:

(1) டக்ளஸ் கும்பல்

(2) வரதர் கும்பல் 

(3) டெலோ சிறிசபாரத்தினம் கும்பல்

 

 

2-  தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை, தமிழர் சொத்துக்களை கொள்ளையடித்தவர்களை, தமிழ் பெண்களை பாலியல் பாலத்காரம் செய்தவர்களை, தொடர்ச்சியான எச்சரிக்கைகளை மீறி இப்படியானவர்களுக்கு தொடர்ந்து உதவிய கயவர்களை - கைத்தடிகளை, திருந்தாத கொள்ளைக்காரர்களை அழித்து தமிழ் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்தவர்கள் யார்?

(1) தமிழீழ விடுதலைப் புலிகள்

 

3- தமிழ்மக்களை அதிகம் கொன்றது யார்?

 

முதல் மூன்று பொருத்தமான விடைகள்:

(1) சிங்கள அரசு

(2) இந்திய அரசு

(3) டக்லஸ் கும்பல்

 

 

4- தமிழர்களைக் கடத்தி சொத்துக்களைப் பறித்தவர்கள், தமிழ்ப் பெண்களை பாலியல் இம்சைக்கு ஆளாக்கிய (சிங்கள, இந்திய அரசுகள் தவிர்ந்த) குழுவினர் யார்?

(1) டக்லஸ் கும்பல்

(2) வரதர் கும்பல் 

 

 

கொஞ்சப்பேர் வந்து புலிகளை பரிசுத்தமானவர்கள் என்று மல்லுக்கட்டுவதில் தாம் ஏதோ சாதிப்பதாக நினைக்கின்றார்கள். புலிகள் ஆதரவாளர்களைவிட எந்த மடயன் உலகில் இதை ஏற்றுக்கொள்ளப்போகின்றான்? பயங்கரவாதம் என்று உலகமே ஒன்றுதிரண்டு முடிவுகட்டியபின் இன்னும் பயங்கரவாதமாகவே புலிகள் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றது.

 

ஏனைய இயக்கங்களை அழித்தொழித்தபோது இந்த உலகம் பார்த்தது

ஆயிரக்கணக்கான இஸ்லாமியத்தமிழர்கள் ஒரே நாளில் அகதியாக்கப்பட்டபோது இந்த உலகம் பார்த்தது

அரசியல் தலைவர்களை படுகொலை செய்தபோது இந்த உலகம் பார்த்தது.

அரசியல் தலைவர்கள் மீதான தற்கொலைத்தாக்குதல்களை இந்த உலகம் புதிய பயங்கரவாதமாகப் பார்த்தது. உலகத்திற்கு புதிய பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்ற மிகமோசமான நிலை உலகில் வேறெந்த போராட்ட அமைப்புக்கும் இல்லை.

இது தவிர சிறுவர் ஆட்சேர்ப்பு கட்டாய ஆட்சேர்ப்பு போதை மருந்துக் கடத்தல் என்பவற்றிலான குற்றச்சாட்டுகள்.

இலங்கையை  கடந்து இந்தியத் தலைவரை கொன்ற குற்றச்சாட்டு.

 

இப்படியான பல காரணங்காளலே ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டு முடிவுகட்டப்பட்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாதவாறு தமிழர்கள் இலங்கையில் அடிமைநிலைக்கு அச்சுறுத்தல் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

எல்லாம் முடிந்தபின் இப்ப போய் உலகத்துக்கு சொல்லுங்கோ "புலிகளை விட மோசமானவர்கள் இருக்கின்றார்கள் நீங்கள் அவசரப்பட்டு புலிகளை பயங்கரவாதிகளாக்கி அழித்துவிட்டீர்கள், அவர் மணலை திருடினவர் இவர் கப்பம் வாங்கியவர் இப்படி இருக்க எப்படி புலிகளை பயங்கரவாதமாக்கினீர்கள் ? என்று நியாயபம் கேட்டு ஒரு உண்ணாவிரதம் இருந்தால் சிலவேளை இந்த உலகம் தான் விட்ட தவறுகளை திருத்த வாய்ப்புள்ளது.

 

புலிகளின் அளப்பெரிய தியாகங்கள் அர்ப்பணிப்புகள் போற்றப்படவேண்டியது உள்வாங்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதே நேரம் தவறுகள் எதிர்கால முனைவுகளில் களையப்படவேண்டிய அவசியம் இருக்கின்றது. இல்லையேல் தியகமும் அற்பணிப்புகளும் அர்த்தமற்றதாகும். ஒருமுறை ஏன் தோற்றோம் என்று சிந்திக்க மறுப்பவன் மறுமுறை வெல்லப்போவதில்லை.

 

புலிகளை விட மோசமானவர்கள் ஒட்டுக்குழுக்களே  என்ற உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டு இந்த சர்வதேசம் விரைவில் புலிகள் பரிசுத்த போராளிகள் என்பதை உணர்ந்து தாம் புலிகளை அழித்த தவறுக்கு பதிலாக தமிழீழத்தை பெற்று தரவேணும் என்று நல்லூர் கந்தனை வேண்டிக்கொண்டு எனது கருத்தை இத்திரியில் முடிக்கின்றேன்.

துவேச பேட்டி ஒன்றை வெளிவிட்டு அதில் மேலும் கட்டி எழுப்பி தமிழர்களை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று இரண்டாக பிரிக்க செய்த முற்சியின் தோல்வி முடிவு இது.

 

இது வடமாகாண தேர்தலை நோக்கிய அறிவிப்பு. ஆனால் வட மாகாண தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ரம்புக்கவலவிடம் உதயன் பத்திரிகையின் தாக்குதல் தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பமா என்று கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. இந்த பேட்டி, அந்த மாதிரியெல்லாம்  சில்லறை வன்முறைகளுடன் தேர்தலை நடத்திமுடித்துவிட அரசு விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. எடுப்பு பெரிய Grand Scale ஆக இருக்க போகிறது என்பதுதான் இந்த பேட்டியின் உட்கருத்து.

 

 



இதைத் தொடந்து யாழில் பல தில்லுமுல்லு பிரச்சாரங்களை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று சரவணபவர் அவர்களீன் பேட்டியை (tvi)கேட்ட போது பல விடயங்கள் இத்திரிக்கு பொருத்தமானவை(கருத்தாளர்களின் கருத்துக்கள்) என்பதால் பதிகிறேன்.
 
 உதயன் அலுவலகத்தில் வந்த மூவரில் ஒருவர் ரி 56 ம் ஏனைய இருவரும் சாதாரண துப்பாக்கியும்(?) வைத்திருந்தார்கள். உள்ளே வந்த இருவரும் சரளமாக தமிழில் பேசினார்கள்.இவர்கள் யாராக இருக்கும் என்பதில் ஊகம் தேவை இல்லை. நிச்சயமாக ஈ.பி.டி.பி கும்பல் தான்.அச்சு இயந்திரத்தை நோக்கி சுட்டு பாகம் பாகமாக பெற்றோல் ஊற்றி கொழுத்தினார்கள்.பின்னர் பரவி இருந்த உதயன் பத்திரிகைகளையும் கொளுத்தினர்.
 
வன்னியில் முஸ்லிம்களை குடியேற்ற முஸ்லிம் அமைச்சர் முயற்சித்த போது அங்குள்ள மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து 22 வருடங்களாக இங்கு வசிக்கும் எங்களுக்கே காணிகள் திருப்பி தரவில்லை. எப்படி முஸ்லிம் மக்கள் குடியேற்றபடலாம் என ஆர்ப்பாட்டம் செய்து குடியேற வந்த மக்கள் கலைக்கப்பட்டனர்.முஸ்லிம் அமைச்சருடன் டக்ளசின் வலது கை சந்திரகுமார் கூட்டாக செயற்பட்டு சொந்த இனத்துக்கு எதிராக செயற்பட்டார்.

இவர்தான் எங்களின் 23 ம் எலிகெஷியா ? :icon_mrgreen:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.