Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மாற்றீடான சாசனம் தேவைதானா?’ செந்தமிழன் சீமான் ஆட்சேபனை!

Featured Replies

‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை விளக்கத்திற்கு மாற்றீடாக தமிழீழ சுதந்திர சாசனம் வரைவது தேவைதானா?’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தின் அரசியல் வடிவம், பொருளாதாரப் பொறிமுறை, சமூகக் கட்டமைப்பு, மலையக மக்களின் நிலை, சாதி, சமயம், பெண்ணடிமைத்துவம், வர்க்கம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை தெளிவுபடுத்தும் அiனைத்து அம்சங்களையும் 1985ஆம் ஆண்டு வெளியாகிய ‘சோசலிச தமிழீழம்’ கொண்டிருப்பதையும் தனது உரையில் சீமான் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதேயிடத்தில் கருத்து வெளியிட்ட கொளத்தூர் மணி அவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்க நூலாக விளங்கும் ‘சோசலிச தமிழீழம்’ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்தினாலே போதுமானது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1985 சோவியத் காலம் இன்றில்லை. அன்று எங்கள் தேசத்தைச் சுற்றி இருந்த.. பூகோள அரசியல் இராணுவ பொருண்மிய நிலையும் இன்றில்லை. நிறைய மாற்றங்கள். விடுதலைப்புலிகளின் ஆரம்ப போராட்ட அணுகுமுறைகளிலும் இன்று நிறைய..மாற்றங்கள். ஆனால்.. ஒன்றில் மட்டுமே மாற்றம் இருக்கவில்லை. அது தான் சுதந்திர தமிழீழம் என்பது.

 

அந்த வகையிலும்.. தலைவரின் பிரசன்னமற்ற இந்தக் கால இடைவெளியிலும்..  தொய்ந்து விடாமல்.. சுதந்திர தமிழீழ இலட்சிய இருப்பை மேல்நிலைப்படுத்த.. அதனை உலகம் உற்று நோக்க.. சுதந்திர தமிழீழத்திற்கான சாசனம் ஒன்று இயற்றப்பட வேண்டியதும்.. அதனை உலக அரங்கின் முன் நிறுத்தி நிற்க வேண்டியதும் அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

‘, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்க நூலாக விளங்கும் ‘சோசலிச தமிழீழம்’ நூலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்தினாலே போதுமானது என்று தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்படி ஒரு நூல் விடுதலை புலிகள் வெளியிட்டவையளோ?அதில இருக்கிற நல்ல விடயங்களையும் இலக்கியவாதிகள் எழுதலாமே...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு நூல் விடுதலை புலிகள் வெளியிட்டவையளோ?அதில இருக்கிற நல்ல விடயங்களையும் இலக்கியவாதிகள் எழுதலாமே...

 

அப்படி நல்ல விடயங்களை இலக்கியவாதிகள் எழுதுவது கிடையாது அதற்க்கு மாறாக விடுதலை புலிகள் மீது விமர்சம் வைப்பதற்கு என்றால் முந்தியடிச்சு எழுதுவினம். 
 
என்ன செய்வது தமிழனின் தலைவிதி அப்படி ..  :(
  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் பிரசன்னமற்ற இந்தக் கால இடைவெளியிலும்..  தொய்ந்து விடாமல்.. சுதந்திர தமிழீழ இலட்சிய இருப்பை மேல்நிலைப்படுத்த.. அதனை உலகம் உற்று நோக்க.. சுதந்திர தமிழீழத்திற்கான சாசனம் ஒன்று இயற்றப்பட வேண்டியதும்.. அதனை உலக அரங்கின் முன் நிறுத்தி நிற்க வேண்டியதும் அவசியம்..! :icon_idea:

 விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வரையில் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளும் உலக நாடுகளால் பயங்கரவாதமாகவே பார்க்கப்படும் அல்லது பார்க்க வைக்கப்படும். தமிழர்கள் உலகில் எங்காவது ஒரு சுதந்திர அரசை நிறுவிக்கொள்ளும்வரை இதனின்றும் விடுபடுவது சாத்தியமல்ல. இன்றைய நிலையில் மாற்றம் ஒன்றின் மூலம் பலனை அடைய முயற்சிப்பது அவசியமே.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் தமது காலத்திலேயே பழைய "சோசலிச தமிழீழ" கொள்கை பலவற்றினை தவிர்த்திருந்தது பலருக்கு தெரியும். போராட்ட காலத்திலேயே உருவான சர்வதேச அரசியல், பொருளாதார மாற்றங்கள் அதற்கு காரணமாயிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவும் ஒரு சோஷலிசக் குடியரசுதானே..?! ஆனால் அங்கும் முதலாளித்துவம் உள்ளதுதல்லவா?

 

இந்த சோஷனிலிசம் என்பதற்கு இறுக்கமான வரைமுறை என்று ஒன்று இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

Socialism is an economic system characterized by social ownership of the means of production and co-operative management of the economy. "Social ownership" may refer to cooperative enterprises, common ownership, state ownership, or citizen ownership of equity. There are many varieties of socialism and there is no single definition encapsulating all of them. They differ in the type of social ownership they advocate, the degree to which they rely on markets or planning, how management is to be organized within productive institutions, and the role of the state in constructing socialism.

 

http://en.wikipedia.org/wiki/Socialism

 

இறுக்கமான சோஷலிசக் கோட்பாடுகளே பொதுவுடமைக் கொள்கை என்பதுபோல் சொல்லப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 

மேலதிக காணொளிகளையும் தரவேற்றிக்கொண்டிருக்கிறேன்...

 

எனது காணொளிகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற subscribe செய்யவும்... http://www.youtube.com/user/periyaardk?feature=sub_widget_1

 

  • கருத்துக்கள உறவுகள்

நவீன இலக்கியவாதிகளின் இலக்கிய கூட்டம் என்பது  புலிகள் பிரதிநிதிகளை அழைத்து அவர்களை பேசவிடாது கூக்குரல் இடுதல் குழப்புதல் போன்றவற்றை செய்து புலிகளின் மேல் பழிகளையும் போட்டு விடுவதாகும்.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.