Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில்

Featured Replies

சுமே கதை கட்டி இப்ப படம் காட்டுகின்றீர்கள் :lol:

நான்றாக இருக்கு உங்கள் தோட்டப் படங்கள்

உங்கள் வீட்டில் வேறு யாருக்கும் இதில் ஈடுபாடு உண்டா? பராமரிக்க இலகு

  • Replies 213
  • Views 27.8k
  • Created
  • Last Reply

சுமே வீட்டுக்குள் இருப்பவையும் வடிவாய் இருக்கு எனக்குப்  பூந்தோட்டத்தை இரசிக்க மட்டும் விருப்பம் பராமரிக்க .........

  • கருத்துக்கள உறவுகள்

சுமே உங்களுக்கு தோட்டத்தில் நல்ல ஈடுபாடு உள்ளதை படங்கள் நிரூபிக்கின்றன. அழகாக இருக்கிறது. நன்றாக பராமரிக்கிறீர்கள். எனக்கும் தோட்டக்கலையில் நிறைய ஈடுபாடு இருக்கிறது. பகலவன் கூறியதுபோல் சில உணர்வுகள் உண்டு. வெளியே சொன்னால் வித்தியாசமாக பார்ப்பார்கள். மனிதர்களைக்காட்டிலும் மரங்கள் விலங்குள் பறவைகள் என்பனவற்றுடன் எனக்கு நிறையவே ஈர்ப்பு இருக்கிறது. கனடாவில் சமருக்கு மட்டும் வெளியே தோட்டம் பூமரங்கள் என்று அவற்றின் சின்னச்சின்ன வளர்ச்சியில் மனதைப் பறிகொடுப்பேன். எல்லாம் வீட்டில் இருக்கும்போது இப்போது வேலை கடந்த 3 வருடங்களாக பெரிதாக எதையும் நட்டு வளர்த்ததில்லை இம்முறை கொஞ்சம் வீட்டில் பின்புறத்தில் மினக்கட விரும்பம் இருக்கிறது. தோட்டம் போட்டால் உங்களைப்போல இங்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்கிறேன். :)

கடும் காலநிலையிலும் தோட்டம் செய்வதற்கு பாராட்டுகள் சுமோ.
 
சிறிய காணி என்ற படியால் வேலி ஓரமாக படிக்கடுப் பொறிமுறையில் சாடிகளை வைத்தீர்கள் என்றால் இன்னும் அழகாகவும் நிலத்தை வினைத்திறனுடம் பாவிக்கலாம். ( Efficient use of space )
 
4-tier-plant-stand1.jpg?w=500
 
நம்ம வீட்டில் முருங்கை, மாதுளை, கறிவேப்பிலை, வாழை, துளசி, செவ்வரத்தை, மல்லிகை, சில காட்டுமரங்கள்..
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தோட்டம் அழகாக இருக்கு.

எனக்கும் தோட்டமென்றால் ஒரே பைத்தியம், என் வீட்டில் முருங்கை, மா, தேசி, கொய்யா, வேம்பு, கருவேப்பிலை, பப்பாசி, வாழை, தோடை, வல்லாரை, கீரை, பயித்தங்காய், பாவற்காய், புடலங்காய், பிசுகங்காய், பொன்னாங்கானி, சுண்டங்கத்தரி, மிளகாய்,  போஞ்சி (மூன்று வாகை),  கற்பூரவள்ளி, ரோஸ், சிதம்பரத்தை, கள்ளி, நாயுண்ணி, இன்னும் சில பெயர் வருகுதில்லை, பெரிய சில மரங்களும் உண்டு பெயர் தெரியா

மாலை வந்தவுடன் தண்ணிவிடுவதும், சமைத்த கழிவுகள் & முயல் புழுக்கைகளை மரங்களுக்கு போடுவதுதான் முதல் வேலை.

இவ்வளவு மரங்கள் அவுஸ்திரேலியாவில்... வளர்க்கின்றீர்கள் என்னும் போது.... ஆசையாக உள்ளது. உடையார். :)

IMG_0077_zpsdbb4fcbd.jpg

இண்டைக்கு இவ்வளவும் காணும் என்று நினைக்கிறன் :D :D

படங்கள்..... வடிவாக உள்ளது, சுமோ. :)  :rolleyes: 

வாழைக்குட்டியை கிளப்பி, தொட்டியில் வைச்சாச்சு போலை கிடக்குது. :D

படங்கள் நன்றாக இருக்கிறது சுமோ. மீன் குளத்திற்கு நீர் வீழ்ச்சி உண்டா? .

உடையார் / ஈசன், அவுஸ்திரேலியத் தமிழர்களின் தோட்டங்களைப் பார்க்க ஆசை.   உங்கள் படங்களையும் இணையுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உடையார், அலை, இசை, பகலவன்,வாத்தியார்,புங்கை, நந்தன்,வந்தி, சகாரா, ஈசன், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றி.

சில மரங்கள் தற்கொலை கூட செய்யும். மிருகங்கள் (நாய்) கூட தன்னைத்தானே வருத்தி தற்கொலை செய்வதை பாத்திருக்கிறேன். அவை உணவை எடுப்பதில்லை. அவற்றுக்கு பிடித்த உணவை வைத்தால் கூட. அது போல தான் உங்களின் உணர்வை புரிந்து கொண்டு அந்த ரோசா செடி தற்கொலை செய்திருக்கலாம்.

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் பகலவன்.

உங்கள் தோட்டம் அழகாக இருக்கு.

எனக்கும் தோட்டமென்றால் ஒரே பைத்தியம், என் வீட்டில் முருங்கை, மா, தேசி, கொய்யா, வேம்பு, கருவேப்பிலை, பப்பாசி, வாழை, தோடை, வல்லாரை, கீரை, பயித்தங்காய், பாவற்காய், புடலங்காய், பிசுகங்காய், பொன்னாங்கானி, சுண்டங்கத்தரி, மிளகாய்,  போஞ்சி (மூன்று வாகை),  கற்பூரவள்ளி, ரோஸ், சிதம்பரத்தை, கள்ளி, நாயுண்ணி, இன்னும் சில பெயர் வருகுதில்லை, பெரிய சில மரங்களும் உண்டு பெயர் தெரியா

மாலை வந்தவுடன் தண்ணிவிடுவதும், சமைத்த கழிவுகள் & முயல் புழுக்கைகளை மரங்களுக்கு போடுவதுதான் முதல் வேலை.

நீங்களும் என்னைப்போல் பைத்தியம் தானா? வேம்பும் முருங்கையும் விதை நட்டிருக்கிறேன் இன்னும் முளைக்கவில்லை. உங்கள் தோட்டத்தின் படங்களையும் போடுங்கள் உடையார்.

சுமே கதை கட்டி இப்ப படம் காட்டுகின்றீர்கள் :lol:

நான்றாக இருக்கு உங்கள் தோட்டப் படங்கள்

உங்கள் வீட்டில் வேறு யாருக்கும் இதில் ஈடுபாடு உண்டா? பராமரிக்க இலகு

என்ன செய்யிறது. அப்பப்ப படமும் காட்டத்தானே வேணும். :D :D

சுமே வீட்டுக்குள் இருப்பவையும் வடிவாய் இருக்கு எனக்குப்  பூந்தோட்டத்தை இரசிக்க மட்டும் விருப்பம் பராமரிக்க .........

சரியான பஞ்சி பிடித்த ஆளாய் இருக்கிறீர்கள் அலை.

சுமே உங்களுக்கு தோட்டத்தில் நல்ல ஈடுபாடு உள்ளதை படங்கள் நிரூபிக்கின்றன. அழகாக இருக்கிறது. நன்றாக பராமரிக்கிறீர்கள். எனக்கும் தோட்டக்கலையில் நிறைய ஈடுபாடு இருக்கிறது. பகலவன் கூறியதுபோல் சில உணர்வுகள் உண்டு. வெளியே சொன்னால் வித்தியாசமாக பார்ப்பார்கள். மனிதர்களைக்காட்டிலும் மரங்கள் விலங்குள் பறவைகள் என்பனவற்றுடன் எனக்கு நிறையவே ஈர்ப்பு இருக்கிறது. கனடாவில் சமருக்கு மட்டும் வெளியே தோட்டம் பூமரங்கள் என்று அவற்றின் சின்னச்சின்ன வளர்ச்சியில் மனதைப் பறிகொடுப்பேன். எல்லாம் வீட்டில் இருக்கும்போது இப்போது வேலை கடந்த 3 வருடங்களாக பெரிதாக எதையும் நட்டு வளர்த்ததில்லை இம்முறை கொஞ்சம் வீட்டில் பின்புறத்தில் மினக்கட விரும்பம் இருக்கிறது. தோட்டம் போட்டால் உங்களைப்போல இங்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்கிறேன். :)

யாழில் கூட ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குமேல் இருந்தால் அலுப்படிக்கும். ஆனால் நான் தோட்டத்தில் போய் இருந்தால் நாள்முழுதும் இரசித்துக்கொண்டு இருப்பேன். ஆனால் வீட்டில் என்னைத் தவிர மற்றவர்களுக்கு பெரிதாக நாட்டமில்லை. கணவராவது  அப்பப்ப வந்திருப்பார். பிள்ளைகளோ கட்டுக்குள்ள எல்லாம் நாங்கள் வரமாடம் என்று வர மறுத்து விடுவர்.

கடும் காலநிலையிலும் தோட்டம் செய்வதற்கு பாராட்டுகள் சுமோ.
 
சிறிய காணி என்ற படியால் வேலி ஓரமாக படிக்கடுப் பொறிமுறையில் சாடிகளை வைத்தீர்கள் என்றால் இன்னும் அழகாகவும் நிலத்தை வினைத்திறனுடம் பாவிக்கலாம். ( Efficient use of space )
 
4-tier-plant-stand1.jpg?w=500
 
நம்ம வீட்டில் முருங்கை, மாதுளை, கறிவேப்பிலை, வாழை, துளசி, செவ்வரத்தை, மல்லிகை, சில காட்டுமரங்கள்..

ஈசன் உங்கள் முறையில் என்றால் இன்னும் நிறையப் பூங்கன்றுகள் நடலாமே. ஆனால் நான் எத்தனையோ கடைகளுக்குச் சென்றுள்ளேன். இதுபோல் ஓரிடமும் காணவில்லை. இனிப் போகும்போது பார்க்கிறேன். வேறு ஏதாவது புது ஐடியா இருந்தால் கூறுங்கோ.

படங்கள் நன்றாக இருக்கிறது சுமோ. மீன் குளத்திற்கு நீர் வீழ்ச்சி உண்டா? .

உடையார் / ஈசன், அவுஸ்திரேலியத் தமிழர்களின் தோட்டங்களைப் பார்க்க ஆசை.   உங்கள் படங்களையும் இணையுங்கள்.

நீர்வீழ்ச்சி ஒன்றும் இல்லை. உங்களிடமும் பொண்ட் இருக்கிறதா??

ஈசனும் அவுசா??

'பொன்ட்' இருக்கிறது. அதில் 25,30 மீன்கள் உள்ளன. சிறிய நீர்வீழ்ச்சி ஒன்று வைத்துள்ளேன். சிறிய நீரோடை செய்ய உத்தேசம் இருந்தது நேரமில்லை. இந்த வருடம்தான் அதனைச் சுற்றி பாறைகள் பதித்து பூச் செடிகள் நாட்ட வேண்டும். வெயில் வந்தால் தோட்டத்தில்தான் அதிக நேரம் செலவிடுவது. அது ஒரு தனி அனுபவம்.

ஈசனும் அவுஸ்தான், ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறார். :D

என்னிடம் 21 மீன்களே இருக்கின்றன. ஒரு பெரியது இருக்கிறது.அது பார்க்கவும் பயப்படுத்தும். இருந்த கருப்பு மீன்களை மட்டும் காணவில்லை. உண்டுவிட்டது என நினைக்கிறேன். நான்கு கால்களுடன் ஒன்று உள்ளது. நாளை படம் போடுகிறேன்.

சிறிய குட்டிகளாக இருந்தால், அவை பெருக்கும்  மட்டும் ஒளிந்து கொள்வதற்கு தாவரங்கள் வேண்டும். அல்லது பெரிய மீன்கள் உண்டு விடும். நிறைய குட்டிகள் பெருகுவதால் தாவரத்தை எறிந்து விட்டேன். சிறிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும். ஆரம்பத்தில் சில குட்டிகள் கருப்பாக இருந்து ஓரிரு வருடங்களில் வர்ணமாக மாறும். உங்களிடம் உள்ள பெரிய மீன், மற்றைய மீன்களை உண்ணும்  வேற்றின மீனோ  தெரியாது.

முடிந்தால் Low voltage underwater LED pond light வாங்கி 'பொன்ட்' இன் அடியில் பதியுங்கள். விலை குறைவு.  நல்ல இசையைக் கேட்டுக் கொண்டு சிவப்புத் திராட்சை இரசத்தின் துணையுடன், இரவில் ஒளிக் கீற்றுக்களில் மீன்கள் ஓடித் திரிவதைப பார்க்க ரம்மியமாக இருக்கும்.  

ஈசன் உங்கள் முறையில் என்றால் இன்னும் நிறையப் பூங்கன்றுகள் நடலாமே. ஆனால் நான் எத்தனையோ கடைகளுக்குச் சென்றுள்ளேன். இதுபோல் ஓரிடமும் காணவில்லை. இனிப் போகும்போது பார்க்கிறேன். வேறு ஏதாவது புது ஐடியா இருந்தால் கூறுங்கோ.

ஈசனும் அவுசா??

நாலு பலகையை வாங்கி அறுத்து டிறில்ளரால துளைபோட்டு இப்படி ஒரு படிக்கட்ட செய்ய முடியாதவருக்கா வாழ்க்கப்பட்டு போயிருக்கிறீங்க ?
(பகிடிக்கு.. பகிடிக்கு..)  :D
 
தோட்டம் எல்லாம் இல்ல. மரங்கள் மட்டும் தான். முருங்கை நல்லா பூக்குது இன்னும் காய்க்கவில்லை. வருசம் முழுதும் பூக்குமே, கோயிலுக்குக் கொண்டு போகலாம் என்டு சொல்லி அரலி மரங்களை வரிசையா நட்டு வைச்சிருக்கிறன். இன்னும் பூக்கத் தொடங்க வில்லை. (கடும் சிவப்பு , வெள்ளை ,ரோசாப்பூ நிறத்தடிகளை வெட்டிக் கொண்டுவந்து வேர் தூண்டி மருந்தில தோச்சு நட்டு முளைக்க வச்சனான்.)
 
மர சைசில கறிவேப்பில வளர்ந்திருக்கு.
 
இந்த தைப்பொங்கலுக்கு வாழை இலையில சாப்பிட்டோம். சின்ன ஆக்கள் நல்லா சந்தோசப்பட்டார்கள். பிறகு நிலத்தை மொப் பண்ண வேண்டியதாயிற்று.  :D

பலகை அறுப்பதற்கு மனிசன் எதுக்கு. நானே செய்துபோடுவன். எனக்குத்தான் நேரமில்லை செய்து மினைக்கெட. ஆனால் நான் வேறு ஒரு ஐடியா போட்டிருக்கிறான் செய்துவிட்டுப் படம் போடுறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போறபோக்கைப்பாத்தால் வெளிநாடுகளிலையும் வடலிவளர்த்து கள்ளு குடிப்பினம் போலை கிடக்கு :lol: .......சும்மா சொல்லக்கூடாது சுமேரியின்ரை வீட்டுத்தோட்டம் அந்தமாதிரியிருக்கு :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும். :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன். என்னிடம் உள்ளவை பெரிய சாடிகள். இது சிறிய சாடியில் பூங்கன்றுகள்  வைக்க நல்ல முறைதான்.

போறபோக்கைப்பாத்தால் வெளிநாடுகளிலையும் வடலிவளர்த்து கள்ளு குடிப்பினம் போலை கிடக்கு :lol: .......சும்மா சொல்லக்கூடாது சுமேரியின்ரை வீட்டுத்தோட்டம் அந்தமாதிரியிருக்கு :)

அண்ணா என் வீட்டு மரத்தில இறக்கிற முதல் கள் உங்களுக்குத் தான். :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMG_0112_zps9b13beea.jpg

கிவிக் கொடி

IMG_0110_zps98d4ee24.jpg

ஒலீவ்  மரம்

IMG_0107_zps96ec0d93.jpg

மாதுளை மரம்

IMG_0089_zpsec4072e9.jpg

பசன் புருட் கொடி

IMG_0087_zps0ab6139e.jpg

முல்லை மரம்

IMG_0079_zps47d817a2.jpg

IMG_0073_zps878e01dc.jpg

IMG_0071_zpsf286c0e8.jpg

P1000098_zps5d9f363b.jpg

IMG_0062_zpsc0a22a0c.jpg

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ம்ம்...... நல்லாய் இருக்கு நண்பி

பலகை அறுப்பதற்கு மனிசன் எதுக்கு. நானே செய்துபோடுவன். எனக்குத்தான் நேரமில்லை செய்து மினைக்கெட. ஆனால் நான் வேறு ஒரு ஐடியா போட்டிருக்கிறான் செய்துவிட்டுப் படம் போடுறன்.

நன்றாக இருக்கு உங்கள் தோட்டம். உங்கள் அறுவையையே தாங்க முடியல, அதுக்குள் பலகை வேறு அறுக்க வெளிகிட்டுவிடாதீர்கள், வீட்டில் உள்ளவர்கள் ஓடிவிடுவார்கள்

தோட்டம் நல்லாதான் இருக்கு.  அட இருந்தாலும் பப்பா மரம் ஒன்றையும் காணலையே. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு உங்கள் தோட்டம். உங்கள் அறுவையையே தாங்க முடியல, அதுக்குள் பலகை வேறு அறுக்க வெளிகிட்டுவிடாதீர்கள், வீட்டில் உள்ளவர்கள் ஓடிவிடுவார்கள்

பக்கத்து வீட்டுப் போலந்துக் காறரைத் துரத்த எனக்கு வேற வழி தெரியவில்லை. :lol: :lol:

தோட்டம் நல்லாதான் இருக்கு.  அட இருந்தாலும் பப்பா மரம் ஒன்றையும் காணலையே. :D

பப்பா மரம் இருந்ததுதான். பழம் பிடுங்கும் போது முறிந்துவிட்டது. :lol: :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

பப்பா மரம் இருந்ததுதான். பழம் பிடுங்கும் போது முறிந்துவிட்டது. :lol: :lol:

கவலைப்படாதேங்கோ! போனது போகட்டும்!

தலைக்கு வருந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. உங்கள் வீட்டு தோட்டதை பற்றி எழுதுபவர்கள் எல்லாம் ஒரு குணமாகத்தான் எழுதினார்கள். இனி அதை வைத்து உங்களின் கையை, காலை  ஒருதரும் இலவில் முறிக்க இலாது. 

ஆனால் நான் அப்படி இல்லை. நீங்கள் மரத்தாலை விழுந்து காயப்பட்டால் நான் கவலைப்பட்டிருப்பேன்.

:lol:  :lol:

நான் வெகு சிறிய தோட்டம் மட்டும் செய்வேன். கோடையில் கத்தரி, மிள்காய், தக்காழி, உருளைக்கிழங்கு, குடை மிளகாய் என்று வைப்பேன். இந்த முறை இன்னமும் ஒரு இடமும் வெள்ளை முட்டி கிடைக்க வில்லை. ஒரு சாதரண கத்தரியை வைத்து விட்டு வேறு இனம் கிடக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். போஞ்சி நல்லது என்பதால் இந்த முறை அதை Try பண்ணுகிறேன்.(சிறகுப் போஞ்சி)

2001 இருந்து வீட்டில் Gold Fish  வளர்த்து வந்தோம். போன மாரியில் மீன்களை திருப்பிக் கொடுத்துவிட்டு தொட்டிகள் இரண்டையும் எறிந்து விட்டேன்.

இப்போதைய பொழுது போக்கு யாழ் மட்டும்தான். நீங்கள் நல்ல சுறு சுறுப்பு போல் இருக்கு. பலவற்றில் கை போட முடிகிறது - (பப்பா மரம் முறிந்துவிட்டதால்த்தான் இதை எழுதினேன் :D )

Edited by மல்லையூரான்

இது கவலைப் படுற மாதிரித் தெரியேல்ல. விழுந்திருக்க வேணும் எண்டு ஆசைப்பட்ட மாதிரி எல்லோ கிடக்கு :lol: :lol: :lol:

நான் ஒரு நேரத்தில் நான்கு தோணியில் பயணம் செய்துகொண்டு இருப்பவள் . அதுதான் எனக்கு நின்மதியும். என்னால் சும்மா இருக்க முடியாது.

நீங்கள் யாழுக்குள்ள மட்டும் கிடக்கிறதால தான் இப்ப கொஞ்ச நாளா அரசியல் சார்ந்த திரிகளில் நீங்கள் எழுதுபவை சுடுகின்றன. ஆதலால்

மீண்டும் நாயோ, பூனையா, மீனோ வளவுங்கோ. சூடு குறைஞ்சசிடும் மல்லை. :D :D :D

நீங்கள் தான் அரசியல் எழுதுவதில்லையே. அப்புறம் என்ன சுட்டுது?

ஒருதடைவை இந்த வீட்டிலை உரல் இடிக்க அடுத்தவீட்டுக்கார அம்மாளுக்கு கை கொப்பளிச்சதாம்.

அப்படி என்றால் கஸ்டம் தான்.

இனி கவனமாக எழுதுகிறேன். :D  :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் அரசியல் எழுதுவதில்லையே. அப்புறம் என்ன சுட்டுது?

ஒருதடைவை இந்த வீட்டிலை உரல் இடிக்க அடுத்தவீட்டுக்கார அம்மாளுக்கு கை கொப்பளிச்சதாம்.

அப்படி என்றால் கஸ்டம் தான்.

இனி கவனமாக எழுதுகிறேன். :D  :D

எனக்கு ஒருநாளும் சுடாமல் இருக்கத்தான் யாழ் அரசியலில் நான் மூக்கை நுழைப்பதில்லை. அதற்காக நாங்கள் அரசியல் தெரியாதவர்களும் அல்ல. :lol: :lol:

பக்கத்து வீட்டுக்காரன் நீங்கள் அளவுக்கு மிஞ்சி  இடிப்பதால் உங்களுக்கு கை நோகப்போகிறது என்றுதான் கூறினேன். :D  :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.