Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியின் செந்தேன் மலரே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியின் செந்தேன் மலரே..
தமிழ் மகனின் பொன்னே சிலையே..
காதல் தேவதையே!
காதல் தேவதை பார்வை கண்டதும்,
நான் எனை மறந்தேன்..!

ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படத்தில் ஜெர்மனியின் அழகான வீதிகளில் - பெரும்பாலும் சிலைகளுக்கு அடியில், நம் திரைக்காதலர்கள்கள் பாடியபோது எப்படியும் ஜெர்மனியை பார்த்துவிட வேண்டும் என ஒரு துடிப்பு அக்காலத்தில் இருந்தது...பின்னர் அது எனது தொழிற் சார்ந்த விடயத்தால் நிறைவேறியதையும் கண்டேன்..

சரி, அடுத்தமுறை அங்கே போனால் என்ன வித்தியாசமான உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் என்னென்ன அம்சங்கள் உள்ளன என இணையத்தை துளாவியபோது இந்த செயற்கை உல்லாசபுரியைக் கண்டேன்.

பழைய சோவியத் யூனியனின் போர் விமானங்களின் தரிப்பிடங்களாக விளங்கிய மிகப்பெரிய இக்கூடாரத்தை முற்றிலும் மாற்றியமைது பெரும் உல்லாசபுரியாக வடிமைத்துள்ளனர். "டிராபிகல் ஐலாண்ட்" எனப்படும் இப்பகுதி ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் நகரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலுள்ள "க்ராஸ்னிக்" (உச்சரிப்பு சரியா?) என்ற என்ற இடத்தில் உள்ளது. இந்த செயற்கை பூங்காவின் நீளம் 360மீ, அகலம் 210மீ, உயரம் 107மீ.

2004-ல் பொதுமக்கள் பாவனைக்காக இந்த 'உல்லாச உள்ளரங்கம்' திறந்து வைக்கப்பட்டது.

9jznmt.jpg

i-q6RBQck-L.jpg

i-G6HW29Q-L.jpg

i-9LRxDvh-L.jpg

i-fpNNBGZ-L.jpg

i-32mDNZR-L.jpg

i-kFn5zBQ-L.jpg

i-tkxjRfc-L.jpg

i-5Qkmqz6-L.jpg

i-t6kRFkB-L.jpg

i-WtrNxWh-L.jpg

i-P3JhNhN-L.jpg

i-wMbNHrC-L.jpg

ஜெர்மனியில் குடியிருக்கும் கள உறவுகளான தமிழ்சிறி, கு.சா, சாந்தி மற்றும் சோழியன் ஆகியோர் யாராவது இங்கே தென்படுகிறார்களா? என தேடினேன்..

ம்ஹூம்....! நஹி..ஹை...!! :lol:

மேலதிக விபரங்களுக்கு இந்த இணையதை சொடுக்கவும்...

http://www.tropical-islands.de/en/attractions/

படங்கள் உதவி : http://photos.denverpost.com

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியனின் பதிவைப் பார்த்த பின்பு தான்... இந்த இடம் இருப்பதே... தெரியும்.
பெர்லின் நம்மூரிலிருந்து 800 கி.மீ. துரம் என்பதால்... படத்தை பார்த்து ரசிப்போம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெர்லின் நம்மூரிலிருந்து 800 கி.மீ. துரம் என்பதால்... படத்தை பார்த்து ரசிப்போம். :D

படத்தை பட்டும் பார்த்து ரசிக்க இது ஜெலினா அல்லவே!  :rolleyes:

தூரம் இப்பொழுதெல்லாம் ஒரு பொருட்டா? உங்கள் நகரத்திலிருந்து பெர்லினுக்கு, 'ஏர் பெர்லின்' விமானம் மூலம் சென்றுவர 370 டாலர்தான்..கோடை விடுமுறைக்கு கண்டு வாருங்கள்...!

ஆசையாக இருக்கு.

பார்ப்போம் பென்சன் எடுத்தபின் :lol:

பென்சன் எடுத்த பிறகா? :o

சிலவற்றை அந்தந்த காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டுமன்றோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனியில் குடியிருக்கும் கள உறவுகளான தமிழ்சிறி, கு.சா, சாந்தி மற்றும் சோழியன் ஆகியோர் யாராவது இங்கே தென்படுகிறார்களா? என தேடினேன்..

ம்ஹூம்....! நஹி..ஹை...!! :lol:

ராஜவன்னியன் என்னை நீங்கள் காண்பதென்றால் இந்த மலையில் தான் காணலாம். :lol:

IdarOberstein-a23305003_zpsc67b9403.jpg

nahe_zpsfe3d1dba.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அழகான இடம் நன்றிகள் அண்ணா பகிர்விற்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ட சொர்க்கங்கள், காலம் போகப் போக....?  :icon_idea: 

- இதுவும் ஜெர்மனிதானுங்கோ..!

5xpe2f.jpg

rk7v4z.jpg

2uxuveh.jpg

2pzgtwn.jpg

30csl0x.jpg

9pxhtv.jpg

2dmfmde.jpg

9i5iqb.jpg

2147gcm.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் என்னை நீங்கள் காண்பதென்றால் இந்த மலையில் தான் காணலாம். :lol:

நீங்கள் எப்போதிருந்து 'சேவற்கொடியோன்' அடிமையானீர்கள்?  :o

இடம் வடிவாத்தான் இருக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்.... எம்மவர்களால் உருவாக்கப்பட்ட, ஹம் பிள்ளையார் கோவில். :)

Jahresfest-des-Sri-Kamadchi-Ampal-Tempel

Hamm_Sri_Kamadchi_Ampal-Tempel.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட இதுவரை கேள்விப்படவில்லை.நன்றி அண்ணா பகிர்வுக்கு.

ராஜவன்னியன் என்னை நீங்கள் காண்பதென்றால் இந்த மலையில் தான் காணலாம். :lol:

IdarOberstein-a23305003_zpsc67b9403.jpg

nahe_zpsfe3d1dba.jpg
 
சாந்தி ஆற்றையன் தொல்லை தாங்காமல் மலை ஏறி  விட்டியளோ???

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எப்போதிருந்து 'சேவற்கொடியோன்' அடிமையானீர்கள்?  :o

இடம் வடிவாத்தான் இருக்கு. :)

செவற்கொடியுமில்லை பாவற்கொடியுமில்லை வன்னியன் யேர்மனி வந்த போது வாழ அனுமதி கிடைத்த இடம். :mellow: இப்படியே மலையேறி வாழுவோமென இங்கேயே தங்கிவிட்டோம். இங்கு இரண்டாம் உலக யுத்த சமாதிகள் நினைவிடங்கள் முதல் பல வரலாற்று museum முதல் பல அழகு குவிந்த சிறிய கிராமம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ஆற்றையன் தொல்லை தாங்காமல் மலை ஏறி  விட்டியளோ???

எல்லாம் அவன்(ள்) செயல் சுமேயக்கா. :D

  • கருத்துக்கள உறவுகள்

செவற்கொடியுமில்லை பாவற்கொடியுமில்லை வன்னியன் யேர்மனி வந்த போது வாழ அனுமதி கிடைத்த இடம். :mellow: இப்படியே மலையேறி வாழுவோமென இங்கேயே தங்கிவிட்டோம். இங்கு இரண்டாம் உலக யுத்த சமாதிகள் நினைவிடங்கள் முதல் பல வரலாற்று museum முதல் பல அழகு குவிந்த சிறிய கிராமம்.

சாந்தி, பலருக்கும்... நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த போது....

அனுமதிக்கப் பட்டு, கிடைத்த இடங்கேளே... அவர்களது இரண்டாவது, வாழ்விடங்களானது. இதுகும் நன்மைக்கே என்று நினைக்கின்றேன்.

இன்று... எந்த ஒரு ஜேர்மன் சிறிய நகரத்திலும்... தமிழன் ஒருவனைக் காண முடியும். அவுஸ்திரேலியாவில்... சிட்னியிலும், பிரான்சில்... பரிசிலும், இங்கிலாந்தில்.... லண்டனிலும், கனடாவில்.... ரொரொன்ரொவிலும், அமெரிக்காவில்... நியுயோர்க் புரூக்ளினும்... தமிழர் வாழ்வது போலல்ல.

ஜேர்மன்காரன் தூர நோக்குள்ளவன், என்பதற்கு  நல்ல உதாரணமானவன். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

...இப்படியே மலையேறி வாழுவோமென இங்கேயே தங்கிவிட்டோம். இங்கு இரண்டாம் உலக யுத்த சமாதிகள் நினைவிடங்கள் முதல் பல வரலாற்று museum முதல் பல அழகு குவிந்த சிறிய கிராமம்.

30,000 பேர் வாழுற உங்கள் 'பேட்டை' நல்லாவே இருக்கு. :)

Idar%20Oberstein.JPG

6138327-_Idar_Oberstein.jpg

15367317.jpg

15383943.jpg

6982510.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரியைப்பார்த்தபோது

தமிழக தமிழர்கள் எம்மை எவ்வாறு கணக்கீடு செய்து வைத்துள்ளனர் என்று எனக்கு முன்பும் நடந்த ஒரு நிகழ்வுடன் புலநாகிறது.

போன வாரம் நடந்த எங்களது குறும்பட விழாவுக்கு நடுவராக பாலாயி சக்திவேல் அவர்கள்

எமது குறும்படங்களை (அவை புலம் பெயர் அவலங்களைப்பற்றியவை)  பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இடையில் நிறுத்தி  ஒரு விளக்கம் கேட்டார்.

ஏன் இந்தக்கதைகள் நிஐத்திலிருந்து தவறி யதார்த்தத்தை பிரதிபலிக்காமல் எடுக்கப்பட்டுள்ளன என்று.  ஒரு அரை மணித்தியாலத்திற்கு மேல் அவருக்கு இது தான்நிஐம் என்றும் இது தான் இங்குள்ள  வாழ்க்கை என்றும் விளங்கப்படுத்த வேண்டியிருந்தது.

அதற்கு அவர் சொன்னது

தமிழகத்தில் நாங்கள் புலம் பெயர்  தமிழ்கள் எல்லோரும் பெரும் பணக்காறர்களாகவும் வசதிகளில் புரள்வதாகவும் தான் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். இங்கு வந்து இதைப்பார்த்த பின்தான் எனக்கு உங்களது புல வாழ்க்கை புரிகிறது என்றார்.

அதைப்போலத்தான்  எம்மைப்பற்றி ராயவன்னியன் அவர்களுடைய கணிப்பும்  இருக்கு என்பது இந்த படங்களையும் அவரது எழுத்துக்களையும் பார்க்க  தெரிகிறது.

அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த  திரியைப்பார்த்தபோது

தமிழக தமிழர்கள் எம்மை எவ்வாறு கணக்கீடு செய்து வைத்துள்ளனர் என்று எனக்கு முன்பும் நடந்த ஒரு நிகழ்வுடன் புலநாகிறது.

...

அதைப்போலத்தான்  எம்மைப்பற்றி ராயவன்னியன் அவர்களுடைய கணிப்பும்  இருக்கு என்பது இந்த படங்களையும் அவரது எழுத்துக்களையும் பார்க்க  தெரிகிறது. அப்படி இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் ஐயா.

இல்லை விசு நீங்கள் தவறாக அனுமானித்துள்ளீர்கள்..

இங்கே எழுதியிருப்பவை யாவும் ஒரு வழிகாட்டலாகவே எழுதுகிறேன். ஒருவேளை புலத்திலுள்ள ஒரளவு வசதி படைத்தோருக்கு இச்செய்தி போய் சேரலாமில்லையா?

யாவருமே மிக மிக பொருளாதார ரீதியில் வாடுகிறார்களெனில், பலருடைய பயணக் கட்டுரைகளை, அலங்கார குறிப்புகளை யாழ் களம் கண்டிருக்காதுதானே?

ஒருவேளை தமிழ் சிறிக்கு பெர்லின் செல்ல நான் எழுதிய சிபாரிசை வைத்து நீங்கள் இப்படி எண்ணுகிறீர்களென நினைக்கிறேன்.. அவர் சென்றமுறை துருக்கிக்கு விடுமுறையை கழிக்க சென்றவரை உள்நாட்டிலிருக்கும் ஒரு சுற்றுலா இடத்திற்கு செல்ல கவனிக்குமாறு கூறுவதில் தவறு இருக்க முடியுமா விசு?

மேலும் சில படங்கள், நான் ஜெர்மனி சென்ற போது எடுத்தவை - அதைக் குறிக்க, 'நான் கண்ட சொர்க்கங்கள்' என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

Edited by ராஜவன்னியன்

விசுகு எதனைக் குறிபிட்டு,  எழுதினார் என்று தெரியவில்லை.... ராஜவன்னியன்.

ஆனால்... இங்கிருந்து, 800 கி.மீ. தூரத்திலுள்ள பெர்லினுக்குப் போவதை விட... 3000 கி.மீ. தூரத்திலுள்ள துருக்கிக்குப் போவது மலிவானது. பெர்லினிக்குப் போய் வர 370 ஐரோ விமான ரிக்கற், என்றால்.... அங்கு சாதாரண நான்கு நட்சத்திர விடுதியில் ஒரு நாளைக்குத் தங்க 50 ஐரோ வேண்டும். 

துருக்கிக்கு 400 ஐரோவுடன்.... 14  நாட்கள், ஐந்து நட்சத்திர கொட்டேலில்... மூன்று நேரச் சாப்பாட்டுடன், கடற்கரையிலிருந்து 10 நிமிட நடையில் நல்ல இடங்கள் உள்ளது. அத்துடன் வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட மக்களையும் பார்த்த திருப்தி எற்படும்.

வரும்போது... மலிவான உடுப்புகள், வாழைப்பழம், மாதுளம்பழம், போன்ற பழவகைகளும்... பூசனிக்காய், போஞ்சி போன்ற மரக்கறிகளையும்.... வாங்கிக் கொண்டு வரலாம்.  :D

Edited by தமிழ் சிறி

விமானப் பயணம் என்பது, பயணம் செல்ல ஒரு வழிமுறையை உதாரணமாக சொன்னேன் சிறி.

இதைவிட குறைந்த கட்டணங்கள் உள்ள சிக்கன விமான வழித் தடங்கள் இருக்கலாம், அல்லது தொடருந்து மூலம் செல்லலாம்...

அடைய மனமிருந்தால் மார்க்கம் உண்டுதானே?

உள்நாட்டிலேயே இருப்பதால், சிக்கன நடவடிக்கைகள் பற்றிய உங்கள் மதிப்பீடும் சரியாகவே இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி! லொறியிலை போய்வந்தனீங்களோ இல்லாட்டி பிளேனிலை போய் வந்தனீங்களோ?Smiley107klein.gif

மனம் இருந்தால்... மார்க்கம் உண்டு என்பது உண்மைதான் வன்னியன்.

ஆனால்... பெர்லின் வாழ்க்கைச் செலவு கூடிய நகரம்.

பேரூந்தில் செல்வது இன்னும் மலிவு. அத்துடன் காரில் போனால்...  அவ்வாவு தான்.... காரை கட்டி இழுத்துக் கொண்டுதான் திரும்ப ஊருக்கு வர வேணும். ஏனென்றால்.... பெர்லினில், மற்றைய நகரத்து இலக்கங்கள் உள்ள காரின் ரயரை, கண்ணாடியை  சேதப்படுத்த என்று ஒரு கும்பலே இருக்குது.

ஆனால்... மற்றைய... நகரங்களை விட... பெர்லினில் தான்... இரண்டாவது உலகப் போர் சம்பந்தப்பட்ட, இடங்கள்... அருங்காட்சியகங்கள் அதிகமாக உள்ளது.

வீட்டிலும்... பெர்லின் பார்க்க... ஆசைப்பட்ட போது.. தயக்கத்துடன் மறுத்து, பின் பாடசாலை சுற்றுலாவாக, ஒரு கிழமை பார்த்துவிட்டு வந்தவர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! லொறியிலை போய்வந்தனீங்களோ இல்லாட்டி பிளேனிலை போய் வந்தனீங்களோ?Smiley107klein.gif

grosse-tragetasche-75-cm-x-55-cm-x-28-cm

துருக்கிக்கு போற, பிளேன் எல்லாம்... கிட்டத்தட்ட லொறி மாதிரித்தான் இருக்கும்.... குமாரசாமி அண்ணா. :D 

ஒவ்வொருவரும்.... 20 கிலோ கொண்டு போகலாம் என்று இருந்த போது... என்னிடம்,  60 கிலோ பொருட்கள் தான் இருந்தது.  குடுத்த காசுக்கு.... அதையும் பிரயோசனப் படுத்துவம்.... என்ற தமிழ் மூழையை பாவிச்சு.... சந்தையில (உமல் பை மாதிரி,) உரச்சாக்கு மாதிரியான பை இரண்டை வாங்கி... மரக்கறி, பழவகைகளை வாங்கி 100 கிலோ ஆக்கிப் போட்டன். :lol:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.....என்னிடம் 60 கிலோ பொருட்கள் தான் இருந்தது.  குடுத்த காசுக்கு.... அதையும் பிரயோசனப் படுத்துவம்.... என்ற தமிழ் மூளையை பாவிச்சு.... சந்தையில (உமல் பை மாதிரி,) உரச்சாக்கு மாதிரியான பை இரண்டை வாங்கி... மரக்கறி, பழவகைகளை வாங்கி 100 கிலோ ஆக்கிப் போட்டன். :lol:

ஆள், பேய்க்காய்தான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

grosse-tragetasche-75-cm-x-55-cm-x-28-cm

துருக்கிக்கு போற, பிளேன் எல்லாம்... கிட்டத்தட்ட லொறி மாதிரித்தான் இருக்கும்.... குமாரசாமி அண்ணா. :D 

ஒவ்வொருவரும்.... 20 கிலோ கொண்டு போகலாம் என்று இருந்த போது... என்னிடம்,  60 கிலோ பொருட்கள் தான் இருந்தது.  குடுத்த காசுக்கு.... அதையும் பிரயோசனப் படுத்துவம்.... என்ற தமிழ் மூழையை பாவிச்சு.... சந்தையில (உமல் பை மாதிரி,) உரச்சாக்கு மாதிரியான பை இரண்டை வாங்கி... மரக்கறி, பழவகைகளை வாங்கி 100 கிலோ ஆக்கிப் போட்டன். :lol:

நல்லகாலம் துருக்கியிலை பிலாப்பழம் இல்லை......அதுவுமெண்டால் கிலோ இன்னும் எகிறியிருக்கும் happy0199.gif

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் துருக்கியிலை பிலாப்பழம் இல்லை......அதுவுமெண்டால் கிலோ இன்னும் எகிறியிருக்கும் happy0199.gif

துருக்கியில்... வாழைமரம், மாமரம், மாதுளைமரம் எல்லாம்... வளரும் போது.... பிலாமரத்தை ஏன் அவர்கள் வளர்க்கவில்லை என்று தெரியவில்லை.

பிலாக்காயின் முள்ளைப் பார்த்து, பயந்து விட்டார்களோ தெரியாது. :lol: 

என்னுடன் வேலை செய்யும்,  துருக்கிக்காரருக்கு... கொஞ்ச பிலாக்கொட்டை கொடுத்து.... ஊரிலை கொண்டு போய் வளர்க்கச் சொல்லப் போறன். :D

Edited by தமிழ் சிறி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியின் பல இடங்களை பார்த்துள்ளேன். போன இடங்களின் நூறன்பேர்க் பிடித்து இருந்தது. ஜேர்மனியின் இயற்கை அழகு ஒரு வகை அழகு. சில புகையிரத நிலையங்களை விமான நிலையம் மாதிரி கட்டி இருப்பார்கள்.அவையும் அழகு தான்.வீதி ஒரங்களில் 45 பாகை சரிவில் உள்ள நிலங்களில் கூட பயிர்கள் பயிரிட்டு இருப்பார்கள்.பச்சை பசேல் என இருப்பதோடு மிக அழகாகவும் இருக்கும். ஓட்டோ பான் சொல்லி வேலை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.