Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள வீரர் சங்ககாராவை நிகழ்வில் கலந்து கொள்ளவிடாது தடுத்த மாணவர்கள். [படங்கள்]

Featured Replies

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் கிரிக்கெட் டீமின் கேப்டன் 'குமார் சங்ககாரா என்ற சிங்கள கிரிக்கெட் வீரர் உட்பட சன் ரைசர்ஸ் வீரர்கள்   கலந்து கொள்ள இருந்த      விளம்பரதாரர்கள் நிகழ்ச்சி 11.30 க்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனை அறிந்த மாணவர்கள் அங்கு முற்றுகையிட திரண்டனர் இதனை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டளர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடக்க இருந்த   நிகழ்ச்சி ரத்து செய்வதாக அறிவித்து பின்னர் அங்கு நிகழ்ச்சி நடை பெறவில்லை.

அதனையடுத்து அந்த நிகழ்ச்சியை  தாஜ் கோரமண்டலிற்கு  மாற்றினார்  அங்கும் மாணவர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியதால் நிகழ்ச்சி  நடைபெறவில்லை.

இன்று  விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நடைபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் அடுத்து நிகழ்ச்சி எப்போ, எங்கே நடத்துவது என்று தெரியாத நிலையில் உள்ளனர் நிகழ்ச்சி  ஏற்பட்டளர்கள் .

 பலத்த காவல்துறை பாதுகாப்பு இரு இடங்களிலும் போடப்பட்டுள்ளது.  மாணவர்கள் அந்த நிகழ்வை  தடுக்கக  தயார் நிலையில் உள்ளனர்.

dinaithal-tamilnews.JPG

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14236:the-player-kollavitatu-sangakkara-effected-students-participated-in-the-event&catid=36:tamilnadu&Itemid=102

  • Replies 89
  • Views 6.2k
  • Created
  • Last Reply

நன்றி மாணவர்களே.

தமிழர்களுக்கிடையில் ஆப்பிறுக்கி ராசபக்சாவுக்கு பரிசில் வழங்கும் குடும்பத்தின் சன் குழுமத்தையும் தமிழ் நாட்டில் பகிஸ்கரிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

சங்ககார ;;;;;;;;; என்னை இந்தியா எதிர்கவில்லை ஒரு சிலர் எதிர்கிறார்கள் இந்தியா எனக்கு  ஆதரவு என்று அன்று சொன்னார் இன்று அந்த இந்திய எங்கே சென்றது .

சரி இனி நாளை ஒரு செய்தி இருக்கிறது காத்திருங்கள் சங்ககாரஅவர்களே ........

  • கருத்துக்கள உறவுகள்

523650574san.jpg

சங்கக்காரவை எதிர்த்து ஐதராபாத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்!

இலங்கை போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் இலங்கை வீரர் சங்ககர ஐதராபாத் ஐ.பி.எல். அணியின் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் இன்று (24) திடீர் போராட்டம் நடந்தது. ஐதராபாத்தில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் முன் இந்த போராட்டம் நடந்தது. 

உடனடியாக பொலிஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பு என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

(மாலைமலர்)

  • கருத்துக்கள உறவுகள்

:( :(

வெட்கக்கேடுடுடுடு :(

83இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பணியாமல் தமிழ் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.

தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின் அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடு ஒன்றில் துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டு வீரருக்கு, தாம் அதிகாரத்தில் இருக்கும் ஒரு பெரும் மாநிலத்தில் தமிழர்கள் கொடுத்த வரவேற்பையும் பரிசையும் பாருங்கள்.

வெட்கக்கேடு!

தூரக்கில்லாத, அரசியல் அறிவற்ற, உணர்ச்சிவசப்பட்ட இம்மாதிரியான லூசுத்தனங்களை தமிழகத்தின் சில அரசியல் சக்திகள் தூண்டிவிட்டுக்கொண்டே இருக்குமானால் இலங்கைத்தமிழர் கடைசியாக இருக்கிற கோவணத்தையும் இழக்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள்.

குமார் சங்கக்காரவின் 2011 உரையின் பகுதி:

// I recollect now the race riots of 1983 now with horror, but for the simple imagination of a child not yet six it was a time of extended play and fun. I do not say this lightly as about 35 of our closest friends, all Tamils, took shelter in our home. They needed sanctuary from vicious politically-motivated goon squads and my father, like many other brave Sri Lankans from different ethnic backgrounds, opened his houses at great personal risk.

For me, though, it was a time where I had all my friends to play with all day long. The schools were closed and we’d play sport for hour after hour in the backyard – cricket, football, rounders…it was a child’s dream come true. I remember getting annoyed when agame would be rudely interrupted by my parents and we’d all be ushered inside, hidden upstairs with our friends and ordered to be silent as the goon squads started searching homes in our neighbourhood.

I did not realise the terrible consequences of my friends being discovered and my father reminded me the other day of how one day during that period I turned to him and in all innocence said: “Is this going to happen every year as it is so much fun having all my friends live with us.” //

:Kumar Sangakkara's 2011 MCC Spirit of Cricket Cowdrey Lecture

Fb

இது சங்ககாரவுக்குகெதிரான போரட்டமல்ல. 35 தமிழரை ஒரு கிழமை காக்கும் போராட்டமல்ல. சங்கக்கார தனது விளையாட்டை கைவிட்டுவிட்டு திரும்பிப் போய் தமிழரை காக்கவில்லை. தமிழர் தங்கள் போராடத்தை கைவிட்டுவிட்டு சங்ககாரவின் விளையாட்டை காப்பாற்ற முடியாது, அன்று செய்த ஒரு சின்ன பரிகாரத்துக்காக இனத்தின் விடுதலையை விலையாக கேட்க முடியாது. முழு சிங்கள வீரர்களும் இல்ங்கை திரும்ப வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சங்கக்கார ரொம்ப நல்லவரு என்கிற வியாக்கியானம் எல்லாம் கதைக்கு ஆகிறதில்லை.. :D

இன அழிப்பை ஒருவர் நடத்துவார்.. இன்னொருவர் சிலரைக் காப்பாற்றுவார்.. சிங்கள அரசியல் இதுதான்..

என்னிடமும் சில சிங்களவர்கள் கேடடார்கள்.. சிங்கள குண்டர்கள் தமிழர்களைக் கொன்றபோது நாங்கள் காப்பாற்றினோமே.. ஏன் எங்களை வெறுக்கிறீர்கள் என்று.. :D

நான் அவர்களிடம் சொன்னது.. காப்பாற்றும் நீங்கள்தான் தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள் என்று..

அதெல்லாம் தமிழ் நாட்டு மாணவர்கள் பார்த்துக்கொல்லுவார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் தமிழ் நாட்டு மாணவர்கள் பார்த்துக்கொல்லுவார்கள் :D

கடைசியாக நடந்த எதிர்ப்பு, ஆந்திர மாநிலத்துள்ள ஹைதராபாத் நகரிலை...

அங்கும்... தமிழக மாணவர்கள் போய்விட்டார்களா? சந்தோசமாய்... இருக்குது. :D

நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரர் எப்போதுமே தமிழரை தனது வீட்டில் குடி அமர்த்துவார். கலவரங்களின் போது பாதுகாக்கவும் முயலுவார். இது அவர் போன்றவர்களுக்கு எதிரான போராட்டமல்ல.

விக்கிரமபாகு தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் எல்லாப் போராட்டங்களுக்கும் சென்று வருகிறார்.

இதில் எதுவும் நாம் இனி சிங்களவருடன் இணைந்து வாழ முடியும் என்று ஆக்காது. நாம் விக்கிரமபாகுவுக்கு செய்யத்தக்க கைமாறு எமக்கு என்று ஒரு ஆட்சி கிடைத்தால் அதில் விக்கிரமபாகு விரும்புவது போன்ற இனங்களுக்கு சமத்துவமான, ஏழை பணக்காரன் அற்ற ஆட்சி ஒன்றை ஏற்படுத்தி அவரை கௌரவிப்பதாகும். மற்றும் படி நாம் இனி சிங்களவருடன் இணைந்து வாழ முடியாது.

Edited by மல்லையூரான்

மாலைமலர் ,நக்கீரன் எல்லாம் யாழில் இணைத்து அறிவை வளர்க்கின்றோம் .நல்ல முன்னேற்றம் .

  • கருத்துக்கள உறவுகள்

மாலைமலர் ,நக்கீரன் எல்லாம் யாழில் இணைத்து அறிவை வளர்க்கின்றோம் .நல்ல முன்னேற்றம் .

"தேனீ" வாசிச்ச உங்களுக்கு, இது... பெரிய‌ அறிவாக இருக்கலாம். :D

மாலைமலர் ,நக்கீரன் எல்லாம் யாழில் இணைத்து அறிவை வளர்க்கின்றோம் .நல்ல முன்னேற்றம் .

எப்பிடியாது உங்களுக்கு பின்னால் தன்னும் வந்து கொண்டிருக்க வேண்டும் என்ற ஆர்வத்தால்..

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சங்கக்கார ரொம்ப நல்லவரு என்கிற வியாக்கியானம் எல்லாம் கதைக்கு ஆகிறதில்லை.. :D

இன அழிப்பை ஒருவர் நடத்துவார்.. இன்னொருவர் சிலரைக் காப்பாற்றுவார்.. சிங்கள அரசியல் இதுதான்..

என்னிடமும் சில சிங்களவர்கள் கேடடார்கள்.. சிங்கள குண்டர்கள் தமிழர்களைக் கொன்றபோது நாங்கள் காப்பாற்றினோமே.. ஏன் எங்களை வெறுக்கிறீர்கள் என்று.. :D

நான் அவர்களிடம் சொன்னது.. காப்பாற்றும் நீங்கள்தான் தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள் என்று..

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?

மனச்சாட்சியை தொட்டு நீங்கள் உங்கள் அப்பிப்பிராயத்தை விளக்கத்துடன் போட்டுவிட்டு கேள்வியை போடுவதுதான் மனசாட்சியானது. 

இதில் மகிந்தாவின் தேர்தல் பற்றி வரவில்லை. "தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள்

"

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியை தொட்டு நீங்கள் உங்கள் அப்பிப்பிராயத்தை விளக்கத்துடன் போட்டுவிட்டு கேள்வியை போடுவதுதான் மனசாட்சியானது. 

இதில் மகிந்தாவின் தேர்தல் பற்றி வரவில்லை. "தொடர்ச்சியாக கொலைகாரக்கட்சிகளையும் ஆட்சியில் அமர்த்துபவர்கள்

"

மன்னிக்கவும் நீங்கள் தான் இசை என்று எனக்குத் தெரியாமல் போயிட்டுது :(

  • தொடங்கியவர்

சென்னை ஸ்டேடியதிற்குள் போராட்டம் நடத்த இருந்த மாணவர்கள் கைது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிறது.

இதில் சென்னையை சேர்ந்த சன்குழுமம் நிர்வகிக்கும் சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் சங்ககர காப்டனாக உள்ளதால் அதனை எதிர்த்தும் சிங்கள வீரர்கள் இந்தியாவில் எங்கும் விளையாட கூடாது என்றும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு , பிரபா தலைமையிலான மாணவர்கள் போராட்டம் நடத்த  ஸ்டேடியதிற்குள் செல்லவிருந்த வேளை  காவல்துறையினரால்  சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் .

எந்த வழியிலாவது போராட்டகாரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கிரிக்கெட் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மேலும் நூறுக்கும் -க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொறுத்தபட்டும் அதனை மீறி மாணவர்கள் மைதானத்துக்குள் சென்று அவர்களது டிஷர்ட் களில் We Want Tamil Eelam , boycott sri lanka என்று அச்சிடப்பட்ட பனியன் துணியை உடலுக்கு போட்டு கொண்டு இருக்கையின் மேல் நின்று கீழ்க்கண்டவாறு முழக்கங்ககளையிட்டு போராட்டம் நடந்த இருந்தனர் . இதனை தொலைபேசி ஊடக ஓட்டுகேட்ட காவல்துறையினர்  மாணவர்களை   சுற்றிவளைத்து கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர்.

Who is side are you on?

Where is the Huminty?

Lanka Play by the Rules

we want tamil eelam..

genocidal srilankans get out.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14258:stetiyatirkul-a-struggle-to-arrest-the-students&catid=36:tamilnadu&Itemid=102

மன்னிக்கவும் நீங்கள் தான் இசை என்று எனக்குத் தெரியாமல் போயிட்டுது :(

அது விளங்கியிருந்தால் கொலைகார ஆட்சி என்றவுடன் மகிந்தாவை விழுந்து விழுந்து காப்பாற்ற முயலவேண்டிய தேவை வந்திருக்காது. <_<

Edited by மல்லையூரான்

மன்னிக்கவும் நீங்கள் தான் இசை என்று எனக்குத் தெரியாமல் போயிட்டுது :(

எல்லாம் பொல்லு கொடுத்து அடிவாங்கும் கேசுகள் :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கோ இசை மகிந்தா ஆட்சிக்கு வர முழுக்க,முழுக்க சிங்களவரா காரணம்?

புலிகள் சொன்னார்கள் என்று சொல்வீர்கள்.. ஆனால் வாக்குச்சீட்டு யார் கையில் இருந்தது..?

இன்னொரு விடயம்.. இலங்கைத்தீவை இதுவரை ஆட்சி செய்த இரு கட்சிகளுமே இன அழிப்பை மேற்கொண்ட கட்சிகளே.. இதில் ரணில் வந்திருந்தால் எல்லாம் நல்லபடியாக இருந்திருக்கும் என்பது ஒரு கருத்தியல் மட்டுமே.. மற்றும்படி அது உண்மை ஆகிவிடாது..

ஆக இத்தகைய பெரும்பான்மை இனக் கட்சிகள் இரண்டையுமே தாங்கிப் பிடிப்பவர்கள் சிங்களவர்களே என்பதை மறுக்க முடியுமா?

சிங்கள இனவாதம் எனக்குத் தெரிந்து வெள்ளக்காரர் எங்கட நாட்டை விட்டுப் போனதில் இருந்தே இருக்குது...அந்த இனவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழரை விட சிங்களவரே அதிகம்...ஜேபிவி புரட்சி அது,இது என்று கொல்லப்பட்ட சிங்களவர்கள் எத்தனை?
 
வாசுதேவா தமிழர்க்காக கதைக்கிறார் ஏன் புலிகள் அந்த நேரத்தில் அவருக்கு வாக்குப் போடச் சொல்லி கேட்கவில்லை? 2009 க்குப் பின்னர் கூட அவருக்கு வோட்டுப் போடச் சொல்லி ஒருத்தரும் கேட்கவில்லை.தமிழர்களும் அவருக்கு ஆதரவளிக்கவில்லை...சிங்களவர்கள் இனவாதிகள் என்று சொல்கின்ற தமிழரே இப்படி நட‌ந்து கொள்ளும் சிங்களவர்கள் நட‌ந்து கொள்வதில் என்ன தப்பு?
 
ஒருவர் நல்லவராய்,இனவாதியாய் இருந்திட்டால் மட்டும் ஆட்சி அமைக்க போதுமானதாக இருக்காது.ஒரு அர‌சை நிர்வகிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் :)

அது விளங்கியிருந்தால் கொலைகார ஆட்சி என்றவுடன் மகிந்தாவை விழுந்து விழுந்து காப்பாற்ற முயலவேண்டிய தேவை வந்திருக்காது. <_<

நான் காப்பாற்ற வேண்டிய நிலையிலா மகிந்தா இருக்கிறார்

நான் காப்பாற்ற வேண்டிய நிலையிலா மகிந்தா இருக்கிறார்

அவர் நல்ல நிலையில் இருக்கிறாரா, இல்லையா  என்பது  பற்றி எனக்கு தெரியாது. முதலில் அதை நீங்கள் உங்கள்  மனச்சாட்சியைப் பாவித்து சொல்லிவிட வேண்டும். ஆனால்  அப்ப ஏன் காப்பாத்துவான்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

பல மேலை நாடுகளில் பார்த்தீர்கள் என்றால் இனவாதம் பேசும் கட்சிகளை மக்களே ஓரமாகத் தள்ளி வைத்துவிடுவார்கள். கனடாவில்கூட வலதுசாரிக் கட்சியும் இடதுசாரிக் கட்சியும் இளக்கமாகி மையப்புள்ளிக்கு அருகேதான் நிற்கிறார்கள்.. ஒருபால் திருமணத்தை எதிர்க்கும் வலதுசாரிகள்தான் இப்போது ஆட்சியில் உள்ளார்கள்.. ஆனால் அவர்களால் ஏற்கனவே கொண்டுவரப்பட்டுவிட்ட சட்டத்தை ஒன்றும் செய்துவிட முடியாது.. பிறகு மக்கள் எதிர்ப்பிற்கு ஆளாக நேரிடும்..

ஆக ஜனநாயகத்தில் மக்கள் விருப்பையே கட்சிகள் பூர்த்தி செய்வார்கள்.. இலங்கையில் சிங்களக் கட்சிகள் தமிழர் அழிப்பைக் காலம் காலமாகச் செய்து வருகின்றன.. அவர்கள்தொடர்ந்தும் பதவிக்கு வரவே செய்கிறார்கள்.. ஆகவே தமிழின அழிப்பே பெரும்பான்மை சிங்களவரின் விருப்பம் என்பதும் நல்லிணக்கம் எல்லாம் ஒரு கனவே என்பதும் தெ ளிவாகிறது..

மற்றது சிங்களவரே சிங்களவரை அழித்தது இனவாதத்தினாலா? அது ஆட்சி அதிகாரத்திற்கான போட்டியால் விளைந்ததே தவிர இனவாதத்தால் அல்ல.. ஒரே இனத்துக்குள் எவ்வாறு இனவாதம் வரும்?

அதேபோல சிங்கள "இனவாதத்தால்" பாதிக்கப்பட்ட தமிழரைவிட சிங்களவரே அதிகம் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?? இத்தகைய கருத்தியலை இதற்கு முன்னரும் ஒருவர் சொன்னதாக ஞாபகம்..

மற்றும்படி வாசுதேவவுக்குக் கேட்டிருக்கலாம் என்பது ஊகமே.. முடிவு எடுத்தவர்களிடம்தானே அதற்கான விளக்கங்களும் இருக்கும்?

சிங்களவர் எம் மீது செய்தது இனவாதப் போர் என்று நாம் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிறார்கள் அவர்கள்.உலக நாடுகளும் அதைத் தான் நம்புகின்றன.
 
பெளத்த பீடாதிபதிகள்,அரசியற் கட்சிகள் எல்லோரும் தமிழரை எதிர்க்க காரணம் அறிவால் சிறந்த தமிழர்களிடம் ஆட்சி,அதிகாரம் போனால் தங்களது நிலை மிகவும் கேவலமாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.அதை சாதரண மக்களுக்கு சொல்லி,சொல்லி வளர்த்ததால் அவர்களும் அதையே கடைப் பிடிக்கின்றனர்.நாடும்,ஆட்சி அதிகாரமும் தங்கட கையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.இனவாதம் பேசாத ஒருவரிடம் இந்த நாடு போனால் அவர் தமிழருக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்திடுவார் அதன் பின்னர் முழு நாடுமே தமிழர்க்கு சொந்தமாகி விடும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
 
ஆர‌ம்பத்தில் இருந்த ஜேவிபி அட‌க்கப்பட்ட,கஸ்ட‌ப்பட்ட,உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும்,தமிழருக்காகவும் தான் குர‌ல் கொடுத்தது[அப்போது இருந்த ஜேவிபியோடு சேர்ந்து புலிகள் போராடி இருக்கலாம்.] அதற்காக, உரிமைக்காக இறந்த[அரசால் கொல்லப்பட்ட] சிங்களவர்கள் முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழரை விட்டுப் பார்த்தால் அதிகம் என்றே நினைக்கிறேன்.
 
சாதர‌ண மக்களுக்கு வேறு தெரிவில்லை.இரு பெரிய கட்சிகள் செய்வது பிழை என்று தெரிந்தாலும் அவர்களுக்கே வாக்களிக்க வேண்டிய நிலை.அவர்கள் வாக்களித்தாலோ இல்லா விட்டாலோ மாறி,மாறி இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் தேர்தலில் போட்டியிட‌ப் போகிறார்கள் ஆட்சியமைக்க போகிறார்கள்
 
நீங்கள் சொல்வது மாதிரி இனவாதம் இல்லாத ஒருவர் ஆட்சியமைக்க வேண்டும் என்டால் அப்படி யார் தற்போது இருக்கிறார்? வாசுதேவாவா?...இந்த நிலை மாற வேண்டுமானால் அடிப்படியில் சிங்களவர்களின் எண்ண ஓட்டத்தை மாற்ற வேண்டும்.நாங்கள் சிங்களவர்களுட‌ன் சேர்ந்து வாழ முடியாது என சொல்லிக் கொண்டு இருந்தால் இது நட‌க்குமா?...இப்பவும் அடிச்சுப் பிடிக்கோனும் என்டு தான் எங்கட‌ ஆட்கள் நினைக்கினமே தவிர‌ சிங்கள மக்களது எண்ண ஓட்டத்திற்கு என்ன கார‌ணம்? அதை எப்படி மாற்றலாம் என ஒருத்தரும் சிந்திக்கேல்ல

"ஆர‌ம்பத்தில் இருந்த ஜேவிபி அட‌க்கப்பட்ட,கஸ்ட‌ப்பட்ட,உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காகவும்,தமிழருக்காகவும் தான் குர‌ல் கொடுத்தது[அப்போது இருந்த ஜேவிபியோடு சேர்ந்து புலிகள் போராடி இருக்கலாம்.]

ஆரம்பத்தில் ஜெ.வி.பி தமிழரின் உரிமைகளுக்கு போராடியது என்பதற்கான ஆதங்களை தர முடியுமா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.