Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோகன் அண்ணாவிடம் ஒரு விண்ணப்பம்….

Featured Replies

அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம்

அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர்

அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில்

அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன்.

திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில்

தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம்

தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம்

தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார்

யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட

யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர்

யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர்

யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர்

ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே

அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன்

அடுத்தவரை நொந்திடாமல் அணைத்துச் செல்லும் விந்தையை

அண்ணா நீங்கள் கற்றவழி அறிந்திடவும் விழைகிறேன்.

அப்பன் நின்று அறிவுரைகள் சொல்லுகின்ற போதிலே

அவரருமை அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவராம்

அருகிருந்து வழிகள் சொல்லி அரவணைத்த வேளையில்

அதிகம் உன்னைப் புரிந்ததில்லை அதனால் என்றும் புகழ்ந்ததில்லை

காலமாற்றம் செய்த செயலோ கலியுகத்தின் கொடுமையோ

கனிவு கொண்ட உம்மனதில் காயம் பட வைத்ததோ

களத்தில் நின்றும் தள்ளி நின்று காவல் புரியும் சேவகா

காலமிட்ட பணியினை நீர் செய்திடவே வந்திடும்.

நல்லதொரு வீணையினை தமிழுக்காகத் தந்தவர்

நாளும் அதைக் காத்திடவே நாமும் உம்மை அழைக்கிறோம்

மோதிநிற்கும் உறவுகளை கோதி மீள இணைத்திட

மோகனும்மை தவிர இங்கே யாரினாலே முடிந்திடும்

  • கருத்துக்கள உறவுகள்

............அதாவது இப்ப இருக்கின்ற களப் பொறுப்பாளர்கள், மட்டுறுத்தினர்கள் எல்லாம் வேஸ்ட்....யாழ் களம் மணிவாசகன் ஐயாவின் அரசியலுக்கு ஏற்ற மாதிரி (முன்னர் இருந்த 'ஒரு பேப்பர் அரசியல் பாருங்கோ') யும், அவர் இன்று இணைந்து இருக்கின்ற அரசியல் அமைப்புக்கு ஏற்ற மாதிரியும் இல்லை பாருங்கோ....மோகன் வந்தாலாவது மாற்றம் வரும். என்று சொல்ரார்...  :icon_idea:  :icon_idea:

.........அதான் இப்ப இருக்கின்ற களப் பொறுப்பாளர்கள், மட்டுறுத்தினர்கள் எல்லாம் வேஸ்ட் என்கின்றாரோ.. :icon_idea:  :icon_idea:

Edited by வைரவன்

  • தொடங்கியவர்

தன்னுடைய சொந்த நிதியில் ஒரு களத்தை உருவாக்கி ஏராளமான உறவுகளை உள்வாங்கி காத்திரமான களமாக வளர்த்தெடுத்த  மோகன் அண்ணாவை திரும்பவும் வாருங்கள் என்று அழைப்பதற்கு இப்போது இருப்பவர்கள் கெட்டவர்கள் என்றும் ஒரு பொருள் உள்ளது என்பதை இப்போது தான் நான் அறிகிறேன்.

தற்போது களத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் நிழலி அவர்களும் மோகன் அண்ணாவை மீள வரும்படி தான் அடிக்கடி அழைப்பதை பலமுறை களத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்.

தயவு செய்து இதற்குத் தவறாகப் பொருள் கொள்ளாதீர்கள்....

மோகன் அண்ணா, நீங்கள் விலகியிருந்து யாழ்களத்தை வழிநடத்தியது போதும். மீளவும் களத்திற்கு வாங்கோ. :)

என்னை யாழில் அனுமதிக்கும்படி முன்னர் உங்களிடம் ஒரு திரியில் கேட்டிருந்தேன். இன்னொரு திரியில் blog சம்பந்தமாக கள உறவுகளிடம் உதவி கேட்ட போது நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள். மற்றபடி உங்களை எனக்கு தெரியாது. :rolleyes: அந்நேரம் நிழலி அண்ணாவிடம் பொறுப்பை கொடுத்து விட்டீர்கள். :rolleyes:

ஆனால் யாழ்கள உறவுகள் உங்களை பற்றி எழுதிய கருத்துகளை பார்த்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் மேல் மிகுந்த மரியாதையும் உருவானது. :) நீங்கள் மீண்டும் களத்திற்கு வந்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருத்தி. :) மீண்டும் வாருங்கள். :)

Edited by துளசி

......ஓ.. அப்ப சரி...இப்படி தமிழில் விளக்கமாக சொன்னால்தான் புரியும். ..நாரதர் மாதிரி முதலாம் பதிலில் நான் கேட்டதால பார்த்தியளோ ஒரு விளக்கம் கொடுக்க சான்ஸ் வந்துட்டுது

....அதோட இங்கு நிழலி மட்டும் வெட்டிப் புடுங்குவதில்லை.... இணையவன், அந்நியனின் அவதாரமாம் நியானி, நுணாவிலான் ஆகியோரும் இருக்கினமில்ல...

  • தொடங்கியவர்

புரிதலுக்கு நன்றி...

இங்கே கருத்தின் ஒரு பகுதழ ஒவ்வாதது எனக் கண்டால் வெட்டியும் முழுமையாகத் தவறான கருத்தாக இருந்தால் புடுங்கியும் நியானி, நிழலி, இணையவன், நுணாவிலான் உள்ளிட்டவர்கள் உழைக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் நிழலி மோகன் அண்ணாவின் அவசியம் குறித்து களத்திலேயே பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்.

நுணாவிலான் என்னுடைய கவிதைக்குப் பச்சைப் புள்ளி .இட்டு ஆமோதித்திருக்கிறார்.

இணையவனுடன் தனிப்பட்ட முறையிலே தொடர்பிலிருப்பவன் என்ற முறையில் அவரின் மோகன் அண்ணா குறித்த பார்வை என்ன என்பதை நானறிவேன்.

நியானி யார் என்பது யாருக்குமே தெரியாத படியால் அவரது தனிப்பட்ட கருத்து எனக்குத் தெரியாது.

எனவே களத்திற்காக தற்போதும் 'வெட்டிப் புடுங்குபவர்கள்' மோகன் அண்ணாவின் வழி வந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் யாரும் மோகன் அண்ணா மீள இணைந்து கொள்ள வேண்டும் என்னுடைய கருத்திலிருந்து வேறுபடாதவர்கள் என்று புரிகிறது.

உங்களிற்கு மோகன் அண்ணா மீண்டும் இணைந்து வழிகாட்ட வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால் அதற்கான காரணங்களைத் தாராளமாகக் குறிப்பிடலாம்.

நியாயமிருப்பின் ஏற்றுக் கொள்வேன்...

அடுத்தததாக நான் தற்போது சார்ந்திருக்கும்அரசியலமைப்பு குறித்து எழுதியிருந்தீர்கள்.அது எது என்று அறிவித்தால் இனியாவது போய் இணைந்து கொள்ள வாய்ப்பாயிருக்கும்.

மோகன் வராது இருக்கும் வரையே இந்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள முடியும்

  • தொடங்கியவர்

மோகன் வராது இருக்கும் வரையே இந்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள முடியும்

அப்படிச் சொல்ல முடியாது சபேசன்... காரணம் மோகன் அண்ணா கிட்டத்தட்ட 10 வருடங்கள் களத்தை நிர்வகித்தவர் ஆனாலும் அவர் மீதான பாசம் மாறி விடவில்லை. 

ஒருமுறை அவரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவரா அவர் என்று பிரமிக்க வைத்தவர். அந்த அளவிற்கு மென்மையானவர்.

கண்டிப்பும் அதை விடப் பொறுமையும் கொண்ட சிறந்த நிர்வாகியாகவே அவரைப் பார்க்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகள் இருந்த நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இப்பொழுது பெயரை கெடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்களே அதிகம்

கடந்த பத்து ஆண்டுகள் இருந்த நிலை வேறு. இன்றைய நிலை வேறு. இப்பொழுது பெயரை கெடுத்துக் கொள்ளும் வாய்ப்புக்களே அதிகம்

பெயரை வாய்ப்புகள் கெடுக்குமா? அல்லது  காக்கும்மா?

பிரிந்து கிடந்தோரை இணைத்து யாழை உருவாகினாரா அல்லது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெயரை தேடிக்கொண்டு ஒழித்துவிட்டாரா?

வாய்பிருந்ததால் மட்டும்தான் நல்லவராக இருந்தார் அல்லது அவரின் சுயரூபம் வெளிவரும் என்று பழைய உறவு ஒன்று எதிர்வு கூறும் போது மற்றைய உறவுகளுக்கு மோகன் மீது இருக்கும் மரியாதையில் கேள்வி எழாதா? இந்த கருத்து உண்மையில் மோகனை தெரிந்தவர் ஒருவர் என்பதால் கூறப்பட்டதா அல்லது வழமையான எதிர்வு கூறலா? மற்றய இடங்களில் ஏற்றிய அதே வாழைப்பழத்து  ஊசியா மோகன் மீதும் வேண்டும் என்றே ஏற்றப்படுகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விசுகு  அண்ணை எழுதிய ஆசை என்ற கவிதையை வாசித்த போது 

எனக்கு "மோகன் அண்ணா இடைக்கிடையாவது களத்தில் உலாவரவேண்டும் என்ற 

 ஆசை" உள்ளது என எழுத நினைத்தேன் . நேரம் கிடைக்கவில்லை

நீங்கள் கவிதையாகவே எழுதிவிட்டீர்கள்

மணிவாசகன் உங்கள் கவிதைக்கு நன்றிகள்

வாய்பிருந்ததால் மட்டும்தான் நல்லவராக இருந்தார் அல்லது அவரின் சுயரூபம் வெளிவரும் என்று பழைய உறவு ஒன்று எதிர்வு கூறும் போது மற்றைய உறவுகளுக்கு மோகன் மீது இருக்கும் மரியாதையில் கேள்வி எழாதா?

சபேசன் அண்ணாவின் அந்த கருத்தை வாசித்தால் சபேசன் அண்ணா மேலான மரியாதை தான் குறையுமே தவிர மோகன் அண்ணா மேலான மரியாதை குறையாது. பயப்படாதீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அழகான கவிதைக்கு நன்றி.

யார் சொன்னது மோகன் அண்ணா யாழில் இல்லை என்று? யாழ் களத்தின் இதயமாய் துடித்துக்கொண்டு இருப்பவரே அவர் தானே... என்ன பின்தளத்தில் நின்று தன்னுடைய வழிநடத்தல்களை செய்கின்றார் அவருடைய தளபதிகள்..முன் அரங்கில் நின்று அதனை செயல்ப்படுத்தி கொண்டு இருகின்றார்கள்.......that's all

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி

கவிதை

எங்கே இதையெல்லாம் ஒழித்து வைக்கின்றீர்களோ தெரியாது

கோபமாக உள்ளது.

முன்பும் ஒருமுறை சகாராவுக்கு எழுதியது தான்

நீங்கள் இதுபோல் ஒழித்திருப்பதால்தான் .................???? :(

மற்றது மோகன் அண்ணாவுக்கான கோரிக்கை பற்றி

அவர் செய்தது போதும் என்பது தான் எனது நிலைப்பாடு

வந்தால் நிச்சயம் பெருமகிழ்ச்சி  தான். :icon_idea:

  • தொடங்கியவர்

மோகன் அண்ணா, நீங்கள் விலகியிருந்து யாழ்களத்தை வழிநடத்தியது போதும். மீளவும் களத்திற்கு வாங்கோ. :)

என்னை யாழில் அனுமதிக்கும்படி முன்னர் உங்களிடம் ஒரு திரியில் கேட்டிருந்தேன். இன்னொரு திரியில் blog சம்பந்தமாக கள உறவுகளிடம் உதவி கேட்ட போது நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள். மற்றபடி உங்களை எனக்கு தெரியாது. :rolleyes: அந்நேரம் நிழலி அண்ணாவிடம் பொறுப்பை கொடுத்து விட்டீர்கள். :rolleyes:

ஆனால் யாழ்கள உறவுகள் உங்களை பற்றி எழுதிய கருத்துகளை பார்த்தே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள் மேல் மிகுந்த மரியாதையும் உருவானது. :) நீங்கள் மீண்டும் களத்திற்கு வந்தால் சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருத்தி. :) மீண்டும் வாருங்கள். :)

வணக்கம் துளசி!

உங்களைப் போலப் பலரும் மோகன் அண்ணாவின் மீள்வருகையை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்கே இந்தப் பதிவு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் மோகன் அண்ணா என்று சொன்னால் நம்பவா போறீங்கள்

  • தொடங்கியவர்

நேற்று விசுகு  அண்ணை எழுதிய ஆசை என்ற கவிதையை வாசித்த போது 

எனக்கு "மோகன் அண்ணா இடைக்கிடையாவது களத்தில் உலாவரவேண்டும் என்ற 

 ஆசை" உள்ளது என எழுத நினைத்தேன் . நேரம் கிடைக்கவில்லை

நீங்கள் கவிதையாகவே எழுதிவிட்டீர்கள்

மணிவாசகன் உங்கள் கவிதைக்கு நன்றிகள்

வணக்கம் வாத்தியார்!

பலரது ஆசையையும் பிரதிபலிக்கும் விதமாகவே இந்தக் கவிதை.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் மோகன் அண்ணா என்று சொன்னால் நம்பவா போறீங்கள்

சந்தர்ப்பமே இல்லை

அவர் பெரும் பொறுமைசாலி.... :icon_idea:

  • தொடங்கியவர்

முதலில் அழகான கவிதைக்கு நன்றி.

யார் சொன்னது மோகன் அண்ணா யாழில் இல்லை என்று? யாழ் களத்தின் இதயமாய் துடித்துக்கொண்டு இருப்பவரே அவர் தானே... என்ன பின்தளத்தில் நின்று தன்னுடைய வழிநடத்தல்களை செய்கின்றார் அவருடைய தளபதிகள்..முன் அரங்கில் நின்று அதனை செயல்ப்படுத்தி கொண்டு இருகின்றார்கள்.......that's all

வணக்கம் சுண்டல்!

பின்களத்தில் மோகன் அண்ணா இருப்பது தெரியும். 

அவரை முன்களத்திலும் காண வேண்டுமென்பதே ஆசை...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நான் தான் மோகன் அண்ணா என்று சொன்னால் நம்பவா போறீங்கள்

அதை நம்ப முடியாது ரதி! :D  :D

அவருக்குக் கோபம் வராது. வந்தாலும் காட்ட மாட்டார்.

ஆனாலும் உங்களுடைய நியாயமான கோபமும் ரசிக்கக் கூடியதே :lol:

நல்லதொரு திரி

கவிதை

எங்கே இதையெல்லாம் ஒழித்து வைக்கின்றீர்களோ தெரியாது

கோபமாக உள்ளது.

முன்பும் ஒருமுறை சகாராவுக்கு எழுதியது தான்

நீங்கள் இதுபோல் ஒழித்திருப்பதால்தான் .................???? :(

மற்றது மோகன் அண்ணாவுக்கான கோரிக்கை பற்றி

அவர் செய்தது போதும் என்பது தான் எனது நிலைப்பாடு

வந்தால் நிச்சயம் பெருமகிழ்ச்சி  தான். :icon_idea:

வணக்கம் விசுகு அண்ணா!

வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி!

சரி சரி வந்திட்டமில்ல. இனிக் கோபிக்கக் கூடாது...

செய்தது காணும் எண்டெல்லாம் அவரை விட ஏலாது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

அதை நம்ப முடியாது ரதி! :D  :D

அவருக்குக் கோபம் வராது. வந்தாலும் காட்ட மாட்டார்.

ஆனாலும் உங்களுடைய நியாயமான கோபமும் ரசிக்கக் கூடியதே :lol:

மணிவாசகன் சின்னப் பிள்ளை மாதிரி இருக்கிறீங்கள் ஒருவருடைய குணாதிசயம் இன்னவாக இருந்தால் அதை முதல் ஜடி(மோகன்) பிரதிபலிக்கும். இன்னொரு ஜடி வந்து அதற்கு எதிர் மறையாகத் தான் இருக்கும் அது தான் ஜடி ரதி
 
எனக்கு மோகன் என்ட பெயரில யாழில உலாவத் தான் விருப்பம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இப்போதைக்கு சரியில்லை...உங்கள் அழைப்பிற்கு நன்றி...கொஞ்ச காலம் போக நானே வருவேன் :)

இதிலே இருக்கும் கருத்துகளை அலசி அலசி ஆராய்ந்ததில் ஈழத்தில் போர் நடந்தால் நிலைமை வேறு இல்லாத போது நிலைமை வேறு என்றுதான் எனக்கு தெரிகிறது.விரைவில் போர் வெடிக்கும்.அப்போ குறைகள் ஒன்றும் யார் கண்ணுக்கும் தெரியாது.அண்மையில் ஒரு முக நூல் இடுகையில் சீமான் அவர்கள் ஒரு நடிகைக்கு கேக் ஊட்டூவதாக படத்தையும் பிரசுரித்து இவர் தான் ஈழம் பெறப்போவதாகவும் எழுதியிருந்தார்கள்.ஏன் ஈழம் பெற நினைப்பவனெல்லாம் சாமியாராகி விடவேண்டும் என்று நியதி உண்டோ? ஒருவனின் கொள்கை வேறு,  அவரது சொந்த வாழ்க்கை வேறு.அதே போலத்தான் இங்கும்.சும்மா சும்மா யாரையும் பற்றி தேவையில்லாமல் கொசிப்படிக்காமல் விடுவோமா!

என்ன நடந்தது நீலப்பறவை? இத் திரியில் யாரைப் பற்றி கொசிப்படித்தார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் சின்னப் பிள்ளை மாதிரி இருக்கிறீங்கள் ஒருவருடைய குணாதிசயம் இன்னவாக இருந்தால் அதை முதல் ஜடி(மோகன்) பிரதிபலிக்கும். இன்னொரு ஜடி வந்து அதற்கு எதிர் மறையாகத் தான் இருக்கும் அது தான் ஜடி ரதி
 
எனக்கு மோகன் என்ட பெயரில யாழில உலாவத் தான் விருப்பம் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் இப்போதைக்கு சரியில்லை...உங்கள் அழைப்பிற்கு நன்றி...கொஞ்ச காலம் போக நானே வருவேன் :)

ஒரு கதை தெரியுமா ரதி?

சீதையைக்கடத்திய  இராவணனால் அவளை  நெருங்கமுடியவில்லையாம்.

இவளை  நெருங்குவதென்றால் தான் இராமனாக உருமாறவேண்டும் என நினைத்த இராவணன் இராமனாக உரு மாறினானாம்.  இராமனாக உரு மாறியதுமே இவனுக்கு சீதை மீது இன்னொருவன் மனைவிமீது ஆசை வரவில்லையாம்.

மோகன் அண்ணா

ரதி.............  சந்தர்ப்பமே இல்லை :lol:  :D  :D

சிலருக்கு நான் எழுதிய கருத்து புரியவில்லை. நல்ல பெயர் எடுப்பவர்கள் உண்மையில் நல்லவர்கள் என்றோ, கெட்ட பெயர் எடுப்பவர்கள் உண்மையில் கெட்டவர்கள் என்று யாரும் சொல்லி விட முடியாது.

மோகன் கெட்ட பெயர் எடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றால், அதற்கு மோகன் கெட்டவர் என்று அர்த்தம் இல்லை. ஒரு நல்லவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடிய கெட்டவர்களும் இங்கே இருக்கின்றார்கள் என்கின்ற அர்த்தமும் அதில் இருக்கலாம்.

ஆனால் நான் கூறியதன் பொருள் எதுவெனில், பல கோணங்களில் கருத்துக்களைக் கொண்டிருக்கும் பல்வேறு தரப்புக்கள் உலாவும் இடமாக யாழ் களம் இருப்பதனால், இதை நிர்வாகம் செய்வது என்பது மிகக் கடினம். இன்று ஒரு தரப்பிடமும், நாளை வேறு ஒரு தரப்பிடமும் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டுதான் களத்தை நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது என்பதையே சுட்டிக் காட்டினேன்.

மோகன் அல்ல, வேறு யார் வந்தாலும் இதை தவிர்க்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

924.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.