Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. சீமான் சுவிசில் பாதுகாப்பு கோரினாரா அல்லது அங்குள்ளவர்கள் இவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை.. ஆனால் அவர் பாதுகாப்பு கோரியிருந்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க முடியாது என்பது எனது கருத்து.. சுப்பிரமணிய சாமிக்கே கறுப்புப்பூனை படை இருக்கு.. :D

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுடன் சேர்ந்து எடுத்த படத்தைக் காட்டித்தான் சீமான் பிழைப்பு நடத்தும் போது குறிப்பிட்ட போராளி அமைப்புடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அறியாமை என்று சொல்வதை நினைத்து எங்கை போய் முட்ட? இல்லை பிரபலமையக் கூடிய அளவுக்கு அதுக்கு முன்னர்  சீமான் சினிமாவிலும் கூட கோலோச்சினாரா????

நீங்கள் எங்கும் முட்டவேண்டிய அவசியமில்லை. நிதானமாகச் சிந்தித்தாலே போதும்..!

தேசிய தலைவரோடு.. வைகோ.. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் உட்பட பலரும் படம் எடுத்துள்ளனர். சீமானும் எடுத்துள்ளார். அவர்களுக்குள் ஒரு வித அரசியல் புரிந்துணர்வு இருந்துள்ளது.

அதன்படி சீமான் செயற்படுகிறார்.

வைகோ.. நெடுமாறன் ஐயா போன்றவர்கள் சீமான் அளவிற்கு தமிழகத்தில்.. பகிரங்க எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. ஆனால் சீமான் அப்படியல்ல. அவர் இன்ன கட்சியை வீழ்த்துவேன் என்று சொல்லிச் செயற்படும் ஒருவர். அதுமட்டுமன்றி வைகோ.. போன்று அவருக்கு நீண்ட கட்சி வரலாறும் இல்லை.

அந்த வகையில்.. அவர் இவர் பாணியில் தான் அரசியல் செய்யனும் என்றில்லை. அவர் தனது பாணியில் அரசியல் செய்வதும் கட்சியை அமைத்துக் கொள்வதும் தவறில்லையே..!

மேலும்.. சுவிஸில் அவருக்கு அந்தநாட்டு காவல்துறைக்கு மேலதிகமாக இந்தப் பாதுகாப்பை உள்ளூர் மக்கள் தன்னார்வ அடிப்படையில் செய்வதில் என்ன தவறு. ஏலவே பிரான்சில்.. நடந்த சம்பவங்கள்.. போன்று ஒன்று நடந்த பின்.. அதற்கு ஆயிரம் கற்பனைக் கட்டுரைகள் வரைய அதனை அணி பிரித்து வரவேற்பதும்.. எதிர்ப்பதும் என்று நில்லாமல் வருமுன் காக்க சில நடவடிக்கைகளில் இறங்குவதில் என்ன தவறிருக்கிறது.

சீமான்.. வைகோ.. இருவரும் ஒருவரல்ல. அவர்களின் இலக்கு ஒன்றாக இருப்பினும் பயணிக்கும் பாதைகள் வெவ்வேறானவை. நீங்கள் அதைக் குழப்பிக் கொள்ளாமல் தெளிவோடு பார்த்தால்.. முட்ட வேண்டிய தேவையே வராது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

Seeman-su-7.jpg

Seeman-su-6.jpg

Seeman-su-5.jpg

இவை சுவிஸுக்கு வந்த போது எடுத்த படம். ஆயிரம் விண்ணாணம் கதைத்தாலும், எனக்கும், உங்களுக்கும், எல்லாருக்கும் புரியும் இந்தப் படங்கள் சொல்லும் சேதி.

இந்தப்படங்கள் என்ன செய்தியை சொல்லுகின்றன..அதை சொன்னால் அதைப்பற்றி பேசலமே..எனக்கென்றால் விளங்கவே இல்ல இந்தப்படங்களில் என்ன தவறு அல்லது இந்தப்படங்கள் என்ன செய்தியை சொல்கின்றன என்று..இதைத்தான் அர்ஜுன் அண்ணாவிடமும் கேட்டேன்..பதில் இல்லை... இந்தப்படங்களைப்பற்றி விமர்சிப்போர் இந்தப்படங்களில் என்ன தவறு இருக்கு அல்லது இந்தப்படங்கள் சொல்லும் செய்தி என்ன என்று எழுதினால் அவை குறித்து பேசலாமே..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைக் கேட்டு சிரிக்காமல் இருப்பதற்கு பெயர்தான் ஜென் நிலை... :D
பதில் என்றால் சரி பிழை என்று சொல்லாமல் அல்லது தவறை தவறு என்று சொல்லாமல் இரண்டுக்கும் நடுவால் போவதா..? :D 

அர்ஜுன் அண்ணாவின் கருத்து எனக்கு சரி எனத் தோன்றும் போது அதுவே உங்களுக்குத் தவறு என்று தோன்றுகின்றது அல்லவா அப்படித்தான் இந்தப்படம் அவருக்கு தவறு என்று படுகின்றது என்று சொல்லி பவர்ஸ்டாரை ஒப்பிட்டு எழுதினார். இதற்கு தனியே அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

avaiko_big56.jpg11755_512617882131496_1816822758_n.jpg

vaiko_big62.JPGvaiko_big21.JPG

இது வைகோ அண்ணா டீம்

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லா விசமப்பிரச்சாரங்களையும் தாங்கி தாண்டி வந்த நாம் தமிழர்கட்சியை இந்த சில்லறைத்தனமான விசமப்பிரச்சாரங்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதை காலம் காட்டும்.. 

புலிகள் இயக்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்ற உசுப்பேத்த்ல்களால் தான் இன்றைய இந்த ஈழத்தமிழனின் அவலநிலைக்குக் காரணம், இன்னுமொரு முறை இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்பதற்காக யார் விமர்சித்தாலும் அதில் தவறில்லை என்பது தான் என்றும் என்னுடைய நிலைப்பாடு.

அதே காலம் சில பிழைப்புவாதிகளையும் நிச்சயம் அடையாளம் காட்டும்.

தமிழின எதிரிகளைத் தவிர வேறு யாரையும் வீழ்த்த வேண்டிய தேவை இன உணர்வுள்ள தமிழனுக்கு கிடையாது..நீங்கள் யாரை வீழ்த்தப்புறப்படிருக்கிறீர்கள் ஜீவா..?

எது சுபேஸ் இன உணர்வு????

சொந்த இனத்தின் அவலத்தை தம் வயிற்றுப்பிழைப்புக்கு வசதியாக்கிக் கொள்ளும் இழிநிலைக்குப் பெயர் இன உணர்வு என்றால் நிச்சயம் அது என்னிடம் இல்லை. :wub:

ஜீவா.. சீமான் சுவிசில் பாதுகாப்பு கோரினாரா அல்லது அங்குள்ளவர்கள் இவ்வாறு செய்தார்களா என்று தெரியவில்லை.. ஆனால் அவர் பாதுகாப்பு கோரியிருந்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க முடியாது என்பது எனது கருத்து.. சுப்பிரமணிய சாமிக்கே கறுப்புப்பூனை படை இருக்கு.. :D

சுப்பிரமணிய சுவாமிக்கு அரசே கறுப்புபூனைப்படைப் பாதுகாப்பு குடுத்ததா? இல்லை அவரே வைத்துக் கொண்டாரா மாம்ஸ்??? :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்ற உசுப்பேத்த்ல்களால் தான் இன்றைய இந்த ஈழத்தமிழனின் அவலநிலைக்குக் காரணம், இன்னுமொரு முறை இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்பதற்காக யார் விமர்சித்தாலும் அதில் தவறில்லை என்பது தான் என்றும் என்னுடைய நிலைப்பாடு.

அதே காலம் சில பிழைப்புவாதிகளையும் நிச்சயம் அடையாளம் காட்டும்.

ஜீவா..

விமர்சனம் என்றுமே பிழையில்லை.. ஆனால் விமர்சனங்களுக்கும், வெறும் காழ்ப்புணர்ச்சிக்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.. உதாரணமாக..

செய்தி: புலிகள் கிளிநொச்சியை இழந்தார்கள்..

விமர்சனம்: வன்முறையைக் கையிலெடுத்தால் தோல்வி நிச்சயம்.. (இப்படி இருக்கலாம் ஒரு விமர்சனம்..)

காழ்ப்புணர்ச்சி: மொக்குக்கூட்டத்துக்கு சொல்புத்தி இருந்தால்தானே..

சுப்பிரமணிய சுவாமிக்கு அரசே கறுப்புபூனைப்படைப் பாதுகாப்பு குடுத்ததா? இல்லை அவரே வைத்துக் கொண்டாரா மாம்ஸ்??? :D

அவர் கேட்டு மத்திய அரசு குடுத்தது.. ஜெயா அம்மாவும் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள்.. :D

ஆக, ஒருவரின் சுய பாதுகாப்புக்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகளை குறை சொல்ல முடியாது.. ஏதாவது நடந்துவிட்டால் விமர்சித்தவர்கள் பொறுப்புக்கூற வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்ற உசுப்பேத்த்ல்களால் தான் இன்றைய இந்த ஈழத்தமிழனின் அவலநிலைக்குக் காரணம், இன்னுமொரு முறை இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்பதற்காக யார் விமர்சித்தாலும் அதில் தவறில்லை என்பது தான் என்றும் என்னுடைய நிலைப்பாடு.

அதே காலம் சில பிழைப்புவாதிகளையும் நிச்சயம் அடையாளம் காட்டும்.

இந்தக் கருத்தும் தவறானதாகவே தெரிகிறது. புலிகள் இயக்கம் மீது விமர்சனம் வைக்க பல்வேறு அமைப்புக்களும் இருந்தன. வைத்தன. புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு போராட்டம் ஒன்றை நடத்தவில்லை.

ஆனால் அந்த விமர்சனங்கள் எந்தளவிற்கு போராட்டத்தை வழிநடத்தின என்பதை நீங்களே அறிவீர்கள்..??! ஏனெனில் புலிகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அந்த அமைப்பின் அழிவை நோக்கி வைக்கப்பட்டு வந்தனவே தவிர.. அந்த அமைப்பின் அல்லது மக்களின்.. பொது இலக்கை வெல்வது எப்படியென்றல்ல. அதுதான் நான் தோற்கக் காரணம். நாம் தோற்க புலிகள் அல்ல காரணம்.. எம்மில் தோன்றியிருந்த களைகளே அதிக காரணம். அந்தக் களைகளை மாற்றுக்கருத்தென்று வளர்த்தெடுத்துக் கொள்ள அனுமதித்த நாம்.. அதன் விளைவுகளைப் பற்றி இன்றும் பேசாமல் தான் இருக்கிறோம். அந்த மாற்றுக் கருத்துக்கள் சாதித்தவை என்ன..?????????????! புலி எதிர்ப்பை உமிழ்ந்ததை.. தேசத்தைப் போராளிகளைக் காட்டிக்கொடுத்ததைத் தவிர..!!!

அதே தான்.. இன்று சீமான் மீதும். இந்த விமர்சனங்கள் தான் ஆபத்தானவை. அதிலும் விமர்சனம் வைக்காமல் இருப்பது மேல்..!

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவின் கருத்து எனக்கு சரி எனத் தோன்றும் போது அதுவே உங்களுக்குத் தவறு என்று தோன்றுகின்றது அல்லவா அப்படித்தான் இந்தப்படம் அவருக்கு தவறு என்று படுகின்றது என்று சொல்லி பவர்ஸ்டாரை ஒப்பிட்டு எழுதினார். இதற்கு தனியே அவர் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அர்ஜுன் அண்ணா ஒரு படம் போட்டார்..அதை தவறு என்று நக்கலாக எழுதினார்..நான் கேட்டேன் 

"இந்தப்படம் ஏன் தவறாக உங்களுக்குபட்டது இங்கு போடும் அளவுக்கு..? அதற்கு விளக்கம் தாருங்கள் அண்ணா..அதைப்பற்றி பேசுவோம்..." 
 
என்று...பதில் இல்லை... அதே போல ஒருபடம் போட்டு அவரின் கருத்துக்களை ஆமோதித்து நீங்களும் எழுதினீர்கள்..உங்களிடமும் அதையே கேட்டேன்..பதில் மேலே நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்..இதை அர்ஜுன் அண்ணா சொல்லாததால் உங்களிடம் கேட்ட கேள்விக்கான(அதே வகையான கேள்வி என்பதால்) பதிலாகவே எடுத்துக்கொள்கிறேன்..
 
அதாவது உங்கள்பதில் உங்களுக்கு தவறு என்று தோன்றியது அதனால் போட்டீர்கள்..ஆனால் என்ன தவறு என்று தெரியாது...அல்லது சொல்ல விருப்பமில்லை...அப்படி எடுத்துக்கொள்ளலாமா..?
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தான் சிக்கலே ரதி

நீங்கள் பிரபாகரனாக

தலைவராக அவரை ஏன் நினைக்கின்றீர்கள்???

அவரும் அப்படி எங்கும்  சொன்னதாக தெரியவில்லை.

இந்தப்படத்திலுள்ள  அவரது தம்பிகள் தொண்டர்கள் அவருக்கு இருக்கும் ஆபத்துக்குறித்து பாதுகாப்புக்கொடுப்பது அவரவர் உரிமையல்லவா.

அது தேவையும் கூட அல்லவா.

உயர,உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது' என்ட பழமொழி தான் ஞாபகம் வந்து தொலைக்குது.

இந்த  வார்த்தை தேவையா?

நாமாகவே ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டு அவரைத்தாழ்த்த இது போன்ற வார்த்தைகளைப்பாவிப்பது  எமக்காக குரல் கொடுக்கும் அவர்களைச்சீண்டாதா??? :(

தமிழ் நாட்டில் சீமானை விட அர்ப்பணிப்புடன் கூடிய சாதரண மக்கள் கண பேர் இருக்கினம்.நீங்கள் மேலே அவரை,தலைவரோடு ஒப்பிட தக்கதாக எழுதினதை பார்த்த படியால் நானும் அப்படி எழுதினேன்.
 
சீமானை அழிப்பதற்கு எதிரிகள் தேவையில்லை அவர் தன்னாலேயே அழிவார்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீழ்த்த வேண்டிய ஆள் சீமான் அண்ணா இல்லை..இதனால் இழப்பு ஈழத்தமிழர் நமக்குத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்..எதற்காக விமர்சிக்கிறீர்கள்,யாரை விமர்சிக்கிறீர்கள் என்ற அடிப்படை புரிந்துணர்வே இல்லாமல் ஒருசிலரைப்பார்த்துவிட்டு ஒவ்வொருவராய் வாந்தி எடுக்கிறீர்கள்..

எம்மை படைத்த கடவுளேயே விமர்சிக்கிறோம்,எங்களுக்காக தன்னை,தன் குடும்பத்தையே கொடுத்த தலைவரேயே விமர்சிக்கிறோம்.அப்படி இருக்கையில் இவரை விமர்சிப்பதில் என்ன தப்பு
 
விமர்சனங்களை வைத்து சரி,பிழைகளை ஆராய்ந்து தங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.சீமானுக்கு இப்ப என்னத்திற்கு தேவையில்லாத வேசம்? 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக, ஒருவரின் சுய பாதுகாப்புக்கு அவர் எடுக்கும் நடவடிக்கைகளை குறை சொல்ல முடியாது.. ஏதாவது நடந்துவிட்டால் விமர்சித்தவர்கள் பொறுப்புக்கூற வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.. :unsure:

இந்தப்படத்தை அர்ஜுன் அன்ணா இணைத்த காரணத்தால் தான் சிலர் தேசியத்திற்கு எதிரானது, கேவலப்படுத்த இணைத்தார் என்று எழுதி இருந்தார்கள், இதையே வேறு ஒருவர் இணைத்திருந்தால்

நான் சொன்னது போல "வாழ்த்துக்கள்", "காவல்தெய்வம்"  போன்ற எழுத்துக்கள் வந்து குவிந்திருக்கும், ஆக இதில் தலைப்பை திறந்தவரை வைத்து எடை போடுகிறார்களே தவிர, விமர்சனங்களை அல்ல.

  • தொடங்கியவர்

கனடா வந்து என்ன பேசுவது என்று தெரியாத அளவு விளக்கமான ஆள் உந்த ஆள்

இப்படி எத்தனை  பேர்வழிகளை நாம் பார்த்துவிட்டோம் .எம் ஜி ஆர் இருக்கும் போது அவர் பெயர் சொல்லி அரசியலில் புகுந்து உள்ள ஆட்டம் எல்லாம் போட்டு விலாசம் இல்லாமல் போனவர் பலர் .இப்ப புலி வேஷம் போடுவதுதான் எடுபடும் ,அங்குதான் விசிலடிக்கும் கூட்டம் நிறைய இருக்கு .அவர்கள் காசில் உலகம் சுற்றி.வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கத்த உணர்சிவசப்பட்டு இந்த கோஸ்டிகள் நாளை தமிழிசம் அண்ணை வாங்கி தருவார் என்று போய்படுக்க வசதியாய் இருக்கும் .

இதில் வை கோ மட்டும் விதிவிலக்கு .அந்த மனுஷன் உண்மையில் எமக்காக உழைப்பவர் ,மற்றதுகள் எல்லாம் அல்லைகைகள்.சீமானுக்கு முதல் திருமா உந்த வேசம் போட்டு உலகம் சுற்றி கேட்டரிங்காரர் வீட்டு அரங்கேற்றதிற்கு பிரதம விருந்தினராக வந்து பின் தமிழ்நாட்டில் ஒரு சீட் கிடைத்ததும் காங்கிரசுடன் ஓட்டிக்கொண்டவர் .

இப்ப சீமானின் முறை ,இதே கேற்றரிங்காரர் தான் இவரையும் இழுத்துக்கொண்டு திரிகின்றார் (அண்மையில் அவர் மகளுக்கு மகளுக்கு தான் சீமான் புக்கை தீத்தினார் ).இரண்டு சீட் கிடைத்தால் சோனியாவிடம் போனாலும் போவர் .

எங்கட விசிலடிச்சான் குஞ்சுகள் தான் பாவம் பஞ்சியிலாமல் அடுத்த ஒருவரை தேடுவார்கள் தமிழிழம் பிடிக்க ஏனெனில் தாங்கள் போராட இவர்கள் என்றும் தயாரில்லை .

ஆரும் பிடிச்சு தருவான் உங்களுக்கு நாடு இப்படியே பார்த்துக்கொண்டு இருங்கோ .

விமர்சனம் என்பதற்கும் தலைப்பை திறந்தவருக்கும் இடையில் பலத்த இடைவெளி உள்ள போது.. இதன் நோக்கத்தை அறிந்து கொள்வதற்கு அதிக ஆராய்தல் அவசியமே இல்லை. அவர் அப்படித்தான். அவர்கள் தாங்களும் திருந்தமாட்டார்கள்.. தங்களைச் சுற்றியுள்ள.. மற்றவர்களையும் சுயமாக.. சிந்திக்க விடமாட்டார்கள்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கருத்தும் தவறானதாகவே தெரிகிறது. புலிகள் இயக்கம் மீது விமர்சனம் வைக்க பல்வேறு அமைப்புக்களும் இருந்தன. வைத்தன. புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு போராட்டம் ஒன்றை நடத்தவில்லை.

ஆனால் அந்த விமர்சனங்கள் எந்தளவிற்கு போராட்டத்தை வழிநடத்தின என்பதை நீங்களே அறிவீர்கள்..??! ஏனெனில் புலிகள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அந்த அமைப்பின் அழிவை நோக்கி வைக்கப்பட்டு வந்தனவே தவிர.. அந்த அமைப்பின் அல்லது மக்களின்.. பொது இலக்கை வெல்வது எப்படியென்றல்ல. அதுதான் நான் தோற்கக் காரணம். நாம் தோற்க புலிகள் அல்ல காரணம்.. எம்மில் தோன்றியிருந்த களைகளே அதிக காரணம். அந்தக் களைகளை மாற்றுக்கருத்தென்று வளர்த்தெடுத்துக் கொள்ள அனுமதித்த நாம்.. அதன் விளைவுகளைப் பற்றி இன்றும் பேசாமல் தான் இருக்கிறோம். அந்த மாற்றுக் கருத்துக்கள் சாதித்தவை என்ன..?????????????! புலி எதிர்ப்பை உமிழ்ந்ததை.. தேசத்தைப் போராளிகளைக் காட்டிக்கொடுத்ததைத் தவிர..!!!

அதே தான்.. இன்று சீமான் மீதும். இந்த விமர்சனங்கள் தான் ஆபத்தானவை. அதிலும் விமர்சனம் வைக்காமல் இருப்பது மேல்..!

புலிகளை, மக்களை அழித்ததற்கு மாற்றுக்கருத்து என்று பேசியோரை விட தாயகம், தேசியம் குறித்துப் பேசிய வியாபாரிகளின் செயற்பாடுகளே அதிகம். போராட்டம், தாயக நிலமை குறித்த உண்மை விடயங்கள் மக்களிடம் செல்வதைத் தடுத்து ஒரு போலி மாயைக் கட்டியமைத்து அவர்களை ஒரு மந்தைகளாக நடாத்த முனைந்ததன் விளைவே இன்றைய நிலமைக்குக் காரணம்,

ஆனால் நீங்கள் சொன்னது போல மாற்றுக்கருத்துக்களால் வந்த விளைவுகளைப் பேசாமல் விடவும் அந்த போலித்தேசியம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது தான் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தை அர்ஜுன் அன்ணா இணைத்த காரணத்தால் தான் சிலர் தேசியத்திற்கு எதிரானது, கேவலப்படுத்த இணைத்தார் என்று எழுதி இருந்தார்கள், இதையே வேறு ஒருவர் இணைத்திருந்தால்

நான் சொன்னது போல "வாழ்த்துக்கள்", "காவல்தெய்வம்"  போன்ற எழுத்துக்கள் வந்து குவிந்திருக்கும், ஆக இதில் தலைப்பை திறந்தவரை வைத்து எடை போடுகிறார்களே தவிர, விமர்சனங்களை அல்ல.

ஜீவா.. நான் அந்தக் கருத்தை உங்களுக்குத்தான் எழுதினேன்.. :D

சுவிசில் பாதுகாப்பு எதற்கு என்பதுபோல் எழுதியிருந்தீர்கள்.. அவரவர் பிரச்சினைகள் அவரவருக்கு.. உள்விவகாரங்கள் முழுவதுமே தெரியாத நம்மால் எதுவும் சரியாகக் கூறிவிடமுடியாதல்லவா..

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. அன்று இயக்கத்திற்கு சீருடை வந்தபோது அதை வைத்து ஆயுதம் வாங்கலாம் என்று சிலர் விமர்சித்ததை என் காதுவழியே கேட்டுள்ளேன்.. இயக்கம் பிற்பாடு அடைந்த வளர்ச்சியும், இன்று அது காட்சியிலேயே இல்லாத ஒரு நிலையை அடைந்ததும் வரலாறு..

ஆகவே நாளை என்ன நடக்கும் என்பதை சொல்வதற்கு நாம் ஜோசியர்கள் அல்ல.. அப்படிச் சொல்லி அது நடக்காமல் போனால் சொன்னர்வர்கள்மீதான மதிப்பு குறைந்துவிடும்.. அதனால் தம்பி என்கிற முறையில் சொல்கிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வீழ்த்த வேண்டிய ஆள் சீமான் அண்ணா இல்லை..இதனால் இழப்பு ஈழத்தமிழர் நமக்குத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்..எதற்காக விமர்சிக்கிறீர்கள்,யாரை விமர்சிக்கிறீர்கள் என்ற அடிப்படை புரிந்துணர்வே இல்லாமல் ஒருசிலரைப்பார்த்துவிட்டு ஒவ்வொருவராய் வாந்தி எடுக்கிறீர்கள்..

இதனால் இழப்பு ஈழத்தமிழர் நமக்குத்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சீமானை எதிர்ப்பதால் ஈழத்தமிழரிற்கு என்ன நட்டம் .ஆதரிப்பதால் என்ன இலாபம் என்று ஒரு பட்டியலை போடுங்கள்.நாங்களும் தெரிந்து அரசியலை படித்துக் கொள்கிறோம்.

வாந்தி எடுக்கிறீர்கள்..

அதெப்பிடி  தமிழ் தேசியம் பேசும்  அனைவரிற்கும் அதே வசனம் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. நான் அந்தக் கருத்தை உங்களுக்குத்தான் எழுதினேன்.. :D

சுவிசில் பாதுகாப்பு எதற்கு என்பதுபோல் எழுதியிருந்தீர்கள்.. அவரவர் பிரச்சினைகள் அவரவருக்கு.. உள்விவகாரங்கள் முழுவதுமே தெரியாத நம்மால் எதுவும் சரியாகக் கூறிவிடமுடியாதல்லவா..

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. அன்று இயக்கத்திற்கு சீருடை வந்தபோது அதை வைத்து ஆயுதம் வாங்கலாம் என்று சிலர் விமர்சித்ததை என் காதுவழியே கேட்டுள்ளேன்.. இயக்கம் பிற்பாடு அடைந்த வளர்ச்சியும், இன்று அது காட்சியிலேயே இல்லாத ஒரு நிலையை அடைந்ததும் வரலாறு..

ஆகவே நாளை என்ன நடக்கும் என்பதை சொல்வதற்கு நாம் ஜோசியர்கள் அல்ல.. அப்படிச் சொல்லி அது நடக்காமல் போனால் சொன்னர்வர்கள்மீதான மதிப்பு குறைந்துவிடும்.. அதனால் தம்பி என்கிற முறையில் சொல்கிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம்.. :D

நன்றி மாம்ஸ். :)  லைக் முடிஞ்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை, மக்களை அழித்ததற்கு மாற்றுக்கருத்து என்று பேசியோரை விட தாயகம், தேசியம் குறித்துப் பேசிய வியாபாரிகளின் செயற்பாடுகளே அதிகம். போராட்டம், தாயக நிலமை குறித்த உண்மை விடயங்கள் மக்களிடம் செல்வதைத் தடுத்து ஒரு போலி மாயைக் கட்டியமைத்து அவர்களை ஒரு மந்தைகளாக நடாத்த முனைந்ததன் விளைவே இன்றைய நிலமைக்குக் காரணம்,

ஆனால் நீங்கள் சொன்னது போல மாற்றுக்கருத்துக்களால் வந்த விளைவுகளைப் பேசாமல் விடவும் அந்த போலித்தேசியம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது தான் காரணம்.

மக்களிடம் கொண்டு செல்லப்படாத மாயை.. போலி.. இவற்றில் சிலவற்றை பட்டியலிட முடியுமா..??!  அப்படி கொண்டு செல்லப்படாத மாயைகள் எவ்வாறு இன்றைய நிலையை தோற்றுவித்தன என்பதைச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

ஏனெனில் மக்கள் என்ற வரிசையில் நீங்கள் உணர்ந்த அதே மாயை.. போலிகளை மற்றவர்களும் உணர்ந்தே இருப்பர். அது உணரப்பட இடமளிக்கப்பட்டத்தை ஏன் நீங்கள் இனங்காட்ட மறந்தீர்கள்...???!

உலகில் எங்குமே 100% திறந்த அரசியலும் இல்லை.. போராட்டமும் இல்லை. அரசும் இல்லை..! ஏன் தனிநபர்களின் சொந்த வாழ்க்கையே 100% திறந்ததாக இல்லை..! transparency என்பது confidential க்கு அப்பாற்பட்டது என்பதே யதார்த்தம். :icon_idea:

Edited by nedukkalapoovan

இன்று விழுந்தும் எழ முடியாததற்கான காரணத்திலேயே ஒட்டு மொத்த பூத்துச்சுத்தல்களும் அடங்கி இருக்கின்றன. புலிகளை விட்டால் யாராலும் எதுவும் பிடுங்க முடியாது என்று சொல்லி அவர்களுக்குச் சமாந்தரமாகவேனும் வேறு யாரையும் வளரவிடாமல் விட்டதிலேயே ஒட்டுமொத்தக் காரணங்களும் உள்ளதே. புலிகள் தவிர்த்த ஒரு மாற்றுத்தலமை இருந்திருந்திருந்தால் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் கூட இந்தளவு நிலையும் வந்திராதே

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. நான் அந்தக் கருத்தை உங்களுக்குத்தான் எழுதினேன்.. :D

சுவிசில் பாதுகாப்பு எதற்கு என்பதுபோல் எழுதியிருந்தீர்கள்.. அவரவர் பிரச்சினைகள் அவரவருக்கு.. உள்விவகாரங்கள் முழுவதுமே தெரியாத நம்மால் எதுவும் சரியாகக் கூறிவிடமுடியாதல்லவா..

இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. அன்று இயக்கத்திற்கு சீருடை வந்தபோது அதை வைத்து ஆயுதம் வாங்கலாம் என்று சிலர் விமர்சித்ததை என் காதுவழியே கேட்டுள்ளேன்.. இயக்கம் பிற்பாடு அடைந்த வளர்ச்சியும், இன்று அது காட்சியிலேயே இல்லாத ஒரு நிலையை அடைந்ததும் வரலாறு..

ஆகவே நாளை என்ன நடக்கும் என்பதை சொல்வதற்கு நாம் ஜோசியர்கள் அல்ல.. அப்படிச் சொல்லி அது நடக்காமல் போனால் சொன்னர்வர்கள்மீதான மதிப்பு குறைந்துவிடும்.. அதனால் தம்பி என்கிற முறையில் சொல்கிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம்.. :D

அப்படியா ?? யார் விமர்சித்தார்கள் இயக்கத்திலா ?? அல்லது ஊரிலா??  இப்பதான் பல  வரலாறுகள் வெளியே வருது  கொஞ்சம் எடுத்து விடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப்படங்கள் என்ன செய்தியை சொல்லுகின்றன..அதை சொன்னால் அதைப்பற்றி பேசலமே..எனக்கென்றால் விளங்கவே இல்ல இந்தப்படங்களில் என்ன தவறு அல்லது இந்தப்படங்கள் என்ன செய்தியை சொல்கின்றன என்று..இதைத்தான் அர்ஜுன் அண்ணாவிடமும் கேட்டேன்..பதில் இல்லை... இந்தப்படங்களைப்பற்றி விமர்சிப்போர் இந்தப்படங்களில் என்ன தவறு இருக்கு அல்லது இந்தப்படங்கள் சொல்லும் செய்தி என்ன என்று எழுதினால் அவை குறித்து பேசலாமே..?

இந்தப் படங்கள் சொல்லும் செய்தி அடுத்த கொள்ளைக்குத் தயார் என்பதே.. ^_^:wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா ?? யார் விமர்சித்தார்கள் இயக்கத்திலா ?? அல்லது ஊரிலா??  இப்பதான் பல  வரலாறுகள் வெளியே வருது  கொஞ்சம் எடுத்து விடுங்கோ

அது வரலாறா? :rolleyes: புளிச்சல் கதை என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடா வந்து என்ன பேசுவது என்று தெரியாத அளவு விளக்கமான ஆள் உந்த ஆள்

இப்படி எத்தனை  பேர்வழிகளை நாம் பார்த்துவிட்டோம் .எம் ஜி ஆர் இருக்கும் போது அவர் பெயர் சொல்லி அரசியலில் புகுந்து உள்ள ஆட்டம் எல்லாம் போட்டு விலாசம் இல்லாமல் போனவர் பலர் .இப்ப புலி வேஷம் போடுவதுதான் எடுபடும் ,அங்குதான் விசிலடிக்கும் கூட்டம் நிறைய இருக்கு .அவர்கள் காசில் உலகம் சுற்றி.வாங்கிய காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கத்த உணர்சிவசப்பட்டு இந்த கோஸ்டிகள் நாளை தமிழிசம் அண்ணை வாங்கி தருவார் என்று போய்படுக்க வசதியாய் இருக்கும் .

இதில் வை கோ மட்டும் விதிவிலக்கு .அந்த மனுஷன் உண்மையில் எமக்காக உழைப்பவர் ,மற்றதுகள் எல்லாம் அல்லைகைகள்.சீமானுக்கு முதல் திருமா உந்த வேசம் போட்டு உலகம் சுற்றி கேட்டரிங்காரர் வீட்டு அரங்கேற்றதிற்கு பிரதம விருந்தினராக வந்து பின் தமிழ்நாட்டில் ஒரு சீட் கிடைத்ததும் காங்கிரசுடன் ஓட்டிக்கொண்டவர் .

இப்ப சீமானின் முறை ,இதே கேற்றரிங்காரர் தான் இவரையும் இழுத்துக்கொண்டு திரிகின்றார் (அண்மையில் அவர் மகளுக்கு மகளுக்கு தான் சீமான் புக்கை தீத்தினார் ).இரண்டு சீட் கிடைத்தால் சோனியாவிடம் போனாலும் போவர் .

எங்கட விசிலடிச்சான் குஞ்சுகள் தான் பாவம் பஞ்சியிலாமல் அடுத்த ஒருவரை தேடுவார்கள் தமிழிழம் பிடிக்க ஏனெனில் தாங்கள் போராட இவர்கள் என்றும் தயாரில்லை .

ஆரும் பிடிச்சு தருவான் உங்களுக்கு நாடு இப்படியே பார்த்துக்கொண்டு இருங்கோ .

உங்களின் ஊகம் சரியா என அதிக காலம் பொறுக்க தேவை இல்லை.சீமான் நடிக்கிறார் என்றால் அது கூடிய விரைவில் தெரிந்து விடும்.அப்போ உங்களின் எதிர்வு கூறலை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது வரலாறா? :rolleyes: புளிச்சல் கதை என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.. :D

நீங்கள் சொன்னால் அது வரலாறு அல்லது கல்வெட்டாக இருக்கும் என்று ஒரு நம்பிக்கைதான் அதுதான்  அப்பாவித்தனமா கேட்டிட்டன். சரி அந்த புளிச்சலை யார் எங்கை சொன்னார்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.