Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள உறவுகளின், அசத்தல் கருத்துகள்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா, நீங்களும் உங்கட 13 பிளசும், மைனசும்!!

 

போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க!!.

 

எத்தினை நாளுக்கு பீலா விடப் போறீங்க??

 

நம்மை எல்லாம் கட்டி ஆண்டு, சூரியன் உதிக்காத சாம்ராஜ்யம் என்று மார் தட்டிய, பிரிட்டிஷ்காரன் நாட்டிலேயே, ஸ்காட்லான்ட்காரன் பிரிந்து போக நிக்கிறான்.

 

காலம் ஒரு நாள் மாறும். அப்ப நாங்க பாத்துகிறோம்!!!

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: நாதமுனி. பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123893&hl=

  • Replies 131
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொய்களை   விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும்

பேப்பர்களிலும் இணையத்திலும் எழுதுவதில்

இன்றைய தமிழ் ஊடகங்களை யாராலும் மிஞ்சமுடியாது..

 

தலைப்பை இணைத்தவர்: நாரதர்.

அசத்தல் கருத்து: வாத்தியார். பதிவு இலக்கம் - 28

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123860&page=2

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒரு, எழுத்தாளனுக்கு அழகு... நேர்மையாக எழுதுவது.
ஒரு, இடத்தில்.... அவர‌து நேர்மைக்குச் சந்தேகம் ஏற்பட்டாலும்...
எழுதியது... அவ்வளவும், குப்பைத் தொட்டிக்குள் வீசி, விடுவார்கள் வாசகர்கள்.
இதனை... மட்டும், எம்மவர்கள், புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

 

தலைப்பை இணைத்தவர்: நாரதர்.
அசத்தல் கருத்து: தமிழ்சிறி. பதிவு இலக்கம் - 42

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123860&page=3

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன விசயமுன்னா.. இப்படியான விடயங்களை இருட்டடிப்புச் செய்வதில் எதிரியை விட துரோகிகள் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டுள்ளமையும் கண்கூடு. ஏன்னா அப்பதானே அவன் வயிறு நிறையும்..! :icon_idea::rolleyes:

 

நாளைக்கு இந்த நினைவுத் ஸ்தூபியை முஸ்லீம் காங்கிரஸ் இடிக்க.. பொதுபல சேன.. அதில புத்தர் சிலையை வைக்க சரியா இருக்கும்..! யாழில அதற்கு ஒரு புலி வியாக்கியானம் எழுத.. நாலு பேர் விழுந்தடிச்சு வருவினம்..! :lol:

தலைப்பை இணைத்தவர்: ரமணன்005.

அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 4

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123985&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் என பேசி பேசி காலம் கடத்தும் இந்த கொடூர கோமாளியும் அதன முஸ்லிம் வியாபார மந்திரிகளுளும் இது பற்றியும் பேச வண்டும்..

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர்.தவிர இக்காலப்பகுதியில் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன.

அது வரை இன ஐக்கியம் முஸ்லிம் தமிழர்களுக்கு இடையில் ஏற்படாது..இது வெறும் சாம்பிள் தான்..முஸ்லிம் தலைமை சுய நலன் தவிர்த்து நேர்மையுடன் செயல்பட முன் வர வேண்டும்...

அவர்களுக்கு தமிழர்களை விட முஸ்லிம்களுக்கு நேர்மையாக நடக்க பலகை வேண்டும்..

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: யாழன்பு. பதிவு இலக்கம் - 85

http://www.yarl.com/forum3/index.php?showtopic=123727&page=5

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு !

அந்தக் கல்விக்கே தெய்வமான கலைவாணி அவள் !!

வெள்ளைத் தாமரைப் பூவில்  இருப்பவளை

அவள் பெருமை உணர்ந்தவர்

வெள்ளை மாளிகைக்கு அருகே வைத்திருப்பதில்

என்ன வியப்பு !! :D

 

தலைப்பை இணைத்தவர்: யாழன்பு.

அசத்தல் கருத்து: சுவி. பதிவு இலக்கம் - 6

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124019&hl=

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

தமிழினம் கரவுவஞ்சகம் இல்லாத இனம். ஐயோ என்றவருக்கு ஆதரவுதரும் இனம்..உதவிமனப்பான்மை நிறைந்த இனம்...மற்றவருக்கு கெடுதல் வருவதை விரும்பாத இனம்.எதிரிகளும் நல்லவனாக நடித்து ஏமாற்றக்கூடிய இனம்.எதிரிக்கும் மூன்றுவேளை உணவு கொடுத்து பராமரிக்கும் இனம். இப்படி எத்தனையோ.........நம்பி ஏமாறும் இனம் தமிழினம்.
இதனால்த்தான்  எமது வரலாறுகளும் நாடுகளும் அழிந்துகொண்டிருக்கின்றன.

 

 

 

 

 

 

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.
அசத்தல் கருத்து: குமாரசாமி அண்ணா . பதிவு இலக்கம் - 7

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124003
 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் ஆச்சரியம் இலங்கை அல்ல.  அது அம்பாந்தோட்டை.  இலங்கையில் மின்சார வினியோகம். இவைதான் உண்மையான ஆச்சரியங்கள்.

 

வடக்கில் நடப்பதை மூடி மறைத்து பவித்திரா இந்த பொய்யை சொல்கிறா. வன்னியில் மக்களின் நிலை என்ன என்பது சிங்களவருக்கு தெரியாதா அல்லது தெரிந்துகொள்ள விரும்பவில்லையா தெரியாது. இந்தியா தனது 50,000 வீடுகளில் 5,000 தன்னும் கட்டி முடிக்கவில்லை. இது வெல்லாம் வடக்குக்கு போவதல்ல. ஆனால் வடக்கில் தேவைப்படும் புது வீடுகள் 120,000. இது போரினால் சிதைந்தவற்றை திருத்துவதல்ல. அந்த நிலையில் நாடு முழுக்க பவித்திரா மின் வழங்க முன்வருகிறார். இதே ஆள்தான், ஒருமாதத்திற்கு முன்னர், மினார விலையை 87% த்தால் உயர்த்திவிட்டு UNP தான் இலங்கையின் மின்சார விலை உயர்வுக்கு, தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றவர். இவர் பதவிக்கு வந்ததே சில மாதங்களுக்கு முன்னர் சம்பிக்க பதவி இழந்த பின்னர்தான்.இன்று ஒரு வருடத்திற்குள் இலங்கை முழுவதற்கும் தான் மினசாரம் தரப்போவதாக கூறுகிறார்.   இந்த மாதிரி ஆசியாவின் ஆச்சரியமாக பொய் சொல்கிறார். இந்த மாதிரி ஒரு சாதனையை யப்பான், சிங்கபூர் தன்னும் எப்பவாது செய்ததா தெரியாது.

 

அருகில் இருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கவனியாமல், அந்த நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று அழைத்த அரசியல்வாதிகள் தாம் இன்று ஆட்சியில் இருக்கும் சிங்கள ஆட்சியாளர்கள். அந்த சிங்களவர் வடக்கில் மட்டும் அல்ல,  தெற்கில் இருக்கும் அம்பாந்தோட்டையில் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் வாழ்கிறார்கள். 

 

இலங்கையின் மின்சார வினியோகம் என்பது இலங்கை முழுவதின் பொருளாதாரத்தையும் அதீத விலைவாசிச் சுழல்வுக்குள் தள்ளிவிடப்போகிறது.  இது இலங்கையில் உருவாகிகொண்டிருக்கும் இரத்தப்புற்று நோய் என்றால் அம்பாந்தோட்டை  சரும புற்று நோயாக வளர்ந்துகொண்டு வருகிறது. இந்த இரண்டும் ஆசியாவில் காணாத ஆச்சரிய நோய்களாக மாறி வருகின்றன.  இரண்டும், மருந்து காணப்பட்டாவிட்டால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு சாவு மணியடிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றன.

 

பலூனை ஊதி விளையாடும் சிறுவன் பலூனை வாயில் இருந்து எடுத்து மேலே எறிந்தவுடன் அது காற்றுபோய் கீழே விழுவது போல சீனா என்ற  சிறுவன் கையை விடும் நாளைக்காத்துக்கொண்டிருக்கிறது இந்த இரண்டும்.

 

தலைப்பை இணைத்தவர்: பிழம்பு.

அசத்தல் கருத்து: மல்லையூரான். பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124120&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அவசரமாகவும்

ஒற்றுமையாகவும்

இப்படி அதிரடி நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதைப்பார்த்தாலே புரியும்

தமிழர்களைவிட

மாகாணசபையால் இவர்களுக்கு  இருக்கும் பலாபலன்களை......... :(

 

தலைப்பை இணைத்தவர்: காஷ்னி.

அசத்தல் கருத்து: விசுகு. பதிவு இலக்கம் - 2

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124107&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தினையை பார்த்திட்டம். இது எல்லாம்.. யு யு பி. இதுகளைப் பார்க்கிற படியால் தான்.. யார் உண்மையா மக்களோடு மக்களுக்காக நின்றார்கள். போராடினார்கள் என்ற விபரம் தெரிய வருகுது வடிவா..! அதுமட்டுமன்றி.. யார் யார் என்ன கோணத்தில காய் நகர்த்திட்டு இருக்கினம் என்றதும் புரிய வரும்..!

 

வெளவால் கிட்ட இருந்து கறக்கனுன்னா.. கவுந்து கிடந்து தான் ஆகனும்..! :lol:

 

தலைப்பை இணைத்தவர்: நுணாவிலான்.

அசத்தல் கருத்து: நெடுக்காலபோவான். பதிவு இலக்கம் - 10

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124093&hl=

இந்திய முட்டாள் ராஜதந்திரிகளால் தமிழர்களை ஒடுக்க உருவாக்கப்பட்ட அரைகுறை  ஒப்பந்தத்தால் வெளிப்படும் இந்தியாவின் கையாலாகாத தன்மையை தெளிவாக விளங்கி அறைகூவல் விடுக்கும் சிங்கள அமைச்சரின் கால்களில் விழுவதைத் தவிர இந்திய மதிய அரசுக்கு வேறு வழியில்லை என்பதையே  இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

அத்தகைய கையாலாகாத இந்திய மத்திய அரசாகவுள்ள அரைவேக்காடுகளின் கால்களில் விழுமளவுக்கு சம்பந்தனின் 60 வருட அனுபவமுடைய வங்குரோத்து அரசியல் உள்ளது.

 

இதை உணராமல் வீரவன்ச மீது பாய்வதில் அரத்தமில்லை.

தலைப்பை இணைத்தவர்: பிழ‌ம்பு.

அசத்தல் கருத்து: சயானி. பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124115&hl=

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவுகள், தொடருங்கள் தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவுகள், தொடருங்கள் தமிழ் சிறி

 

நன்றி உடையார். நீங்களும்... கண்ட அசத்தல் கருத்துக்களை இணையுங்களேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தியுள்ள மனிதர்களை நயத்தாலும், புத்தி குறைந்தவர்களைப் பயத்தாலும் தாம்பத்தியத்தில், இணைத்து வைப்பது சமுதாய வழக்கம்! :o

 

நான் பிறந்த இனத்தில், இவ்வளவு மடையர்கள் (அதுவும் புலத்தில்) இருக்கிறார்கள் என்பதை நினைக்க, மிகவும் கவலையாக உள்ளது!

 

நாதமுனியின் கருத்துடன் (கண்ணதாசனின் வரிகள்) , நூறு வீதம் உடன்படுகின்றேன்!

 

தலைப்பை இணைத்தவர்: நெடுக்காலபோவான்.

அசத்தல் கருத்து: புங்கையூரான். பதிவு இலக்கம் - 12

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124186&p=906696

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கலகம் என்பதற்கு அப்பால் எமக்கு நடந்த கொடூரம் இந்த உலகிற்கு மீண்டும் ஒரு தடவை எடுத்துசொல்லப்பட்டிருக்கு என்பதே உண்மை. 

 

தலைப்பை இணைத்தவர்: சின்ன‌வ‌ன்.

அசத்தல் கருத்து: தமிழ்ச்சூரியன். பதிவு இலக்கம் - 27

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124424&page=2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் கேட்டு யாரும் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை.

 

மற்றுக்கருத்துக்கள் அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற தத்துவத்தில் செயல் ஆற்றுகிறார்கள்.  அவற்றுக்கு பதிலாக இந்த சரித்திரங்களை தெரிந்தவர்கள் இவற்றை தாமும் தொடர்ந்து பதிய வேண்டும். மாற்றுக்கருத்துகள் பதியும் பதிவுகளுக்கு பதிலாக இவை பதியப்படுவதால் மட்டுமே மேற்கு நாடுகள் ஒருநாளாவது இவற்றைக்கண்டு தமது தவறை திருத்த வாய்ப்புண்டு. என்வே மாற்றுக்கருத்துகளை கேள்வி கேட்பதுடன் நிறுத்தாதீர்கள். அவர்களின் தொடர்ந்த பதிவுகளை உங்களுக்கு பதில் அளிக்க கிடத்த சந்தர்ப்பம் ஆகுங்கள். விசுகர் ஒருமுறை எழுதிய உதாரணத்தை பயன்படுத்துங்கள். கன்று தாயின் மடியில் இடித்தால் வலியாக மாற விடமால் உங்களின் பதில்கள் என்ற பால் சுரக்க கிடைத்த உந்தலாக மாறவிடுங்கள். முடிவு நல்லதாக மாறும். மாற்றுக்கருத்துக்கள் அரச பணத்தில் தமிழருக்கு செய்யும் சேவையாக மாறட்டும்.

 

தலைப்பை இணைத்தவர்: யாழ் அன்பு.

அசத்தல் கருத்து: மல்லையூரான். பதிவு இலக்கம் - 5

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124730&hl=

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூகம்  என்றால் கள்ளன் காடையன் துரோகி நல்லவன் கெட்டவன் நாட்டுப்பற்றாளன் இனப்பற்றாளன் ஆன்மீகவாதி அரசியல்வாதி என்று எல்லா பிரிவும் இருக்கும். அதற்க்காக அவன் தன இனம் மீதானா பற்றை காட்டக் கூடாது என்று இல்லை. சொந்த இனத்தை அவன் மறக்காமல் இருக்கிறானே என்று சந்தோசப் படுங்கோ 

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

அசத்தல் கருத்து: யாழ் அன்பு. பதிவு இலக்கம் - 14

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125000&page=1

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனோடு இணக்க அரசியலும்.. இணங்கிப் போதலும்.. என்று அடிமைத்தனத்திற்கு சோரம்போதலுக்கு.. அழகு வசனங்கள் சேர்க்காமல்.. ஐக்கிய சிறீலங்கா.. ஒன்றுப்பட்ட நல்லிணக்கம்.. சமாதானமும் சகோதரத்துவமும்.. என்று சாணக்கிய கனவான் அரசியல்பேசி.. சிங்கக் கொடியை தூக்கினால்.. சிங்களத்தை படித்துவிட்டால்.. சிங்களச் சிப்பாயை திருமணம் செய்துவிட்டால்.. சிங்களவனை நடுவீட்டில் குடியிருத்தி விட்டால்.. தமிழன் சுதந்திரம் அடைந்து விடுவான்.. உரிமை பெற்றுவிடுவான் என்று நம்ப வைக்க முனையும்.. கொலை.. கொள்ளைக் கூட்டத்தினரிலும் பார்க்க.. காசி அண்ணன் தனது இந்தப் பேச்சில் வெளிப்படுத்திய ஆதங்கம் ஒன்றும் மிகையான ஒன்றாகத் தெரியவில்லை..!

நெடுக்ஸ் அண்ணா

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126402&page=3#entry919751

  • 2 weeks later...

http:


நல்லதொரு பதிவு

 

பெண்மையை பூரிப்புடன் அணுகுபவர்களுக்குத்தான் தாய்மையின் அழகியலும் புரியும். பெண்மையை புரிதல் தான் ஆண்மையின் வெற்றியே.

 

//www.yarl.com/forum3/index.php?showtopic=127344

 

 

ஆகா என்ன அற்புதமான சிந்தனை.... அந்த சிந்தனையூடாக  வந்த வரிகள் .இந்த வருடத்தில் நான் வாசித்த மகத்துவமான மாண்பான, வார்த்தைகள் ..............போற்றுவோம் உறவுகளே .நிழலியை 

 

Edited by தமிழ்சூரியன்

http:

 

//www.yarl.com/forum3/index.php?showtopic=127344

 

 

ஆகா என்ன அற்புதமான சிந்தனை.... அந்த சிந்தனையூடாக  வந்த வரிகள் .இந்த வருடத்தில் நான் வாசித்த மகத்துவமான மாண்பான, வார்த்தைகள் ..............போற்றுவோம் உறவுகளே .நிழலியை 

 

ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் :D

உண்மை மட்டுமே என்னை இப்படி எழுத தூண்டும் நிழலி ..............உண்மை . :)

  • கருத்துக்கள உறவுகள்

goshan_che, on 18 Aug 2013 - 4:52 PM, said:

கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தான் தமிழர் முன்புள்ளே ஒரே தெரிவு.
விருப்புவாக்கை பொறுத்தவரை, மூன்றில் ஒரு வாக்கை முதன்மை வேட்பாளருக்கு போடுவதன் மூலம் முதலமைச்சர் எமது ஆணை உடைய ஒருவரே என்று உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.
 
மக்களோடு இன்றுவரை நின்று மாதம் மாதம் 4ம் மாடிக்கு போய் வரும் சிறீதரன் எம் பி விக்கினேஸ்வரனுக்கு விருப்பு வாக்கை போடுவது எமது வரலாற்றுக்கடமை என்கிறார்.
 

 

 

 

 

தலைப்பை இணைத்தவர்: நேற்கொழு தாசன்

அசத்தல் கருத்து: goshan_che, 

 

பதிவு இலக்கம் - 09

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127697&p=926973

எனக்கு சீமானின் அரசியலில் பிடிப்பும் இல்லை நம்பிக்கையும் இல்லை.

 

ஆனால் அவர் இந்த அழைப்பிதழில் தலைவர் நேரடியாகவே வாழ்த்தினார் என்றோ அல்லது தலைவருக்கு அழைப்பிதழ் கொடுத்தார் என்றோ எழுதியுள்ளார் என்று பிரச்சாரம் செய்ய முனைந்தால் கண்டிப்பாக அவர்களின் செயலில் எந்தவிதமான நேர்மையும் இல்லை என்றே நம்புவேன். கடவுள் படம் முன் வைத்து ஆசிர்வாதம் வாங்கும் செயலைப் போன்று, அப்பா அம்மாவின் படம் முன் வீழ்ந்து ஆசிர்வாதமும் வாழ்த்தும் பெறும் பண்பாட்டைப் போன்றுதான் இதுவும். என் பண்பாட்டின் வழி இத்தகைய நம்பிக்கைகளும் அதையொட்டிய பழக்கவழக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன.

 

முட்டையில் முடியைத் தேடுவது போன்று சீமானின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நுணுக்குக் காட்டி வைத்து பார்த்துவிட்டு அதனை பூதக் கண்ணாடி கொண்டு பெருப்பித்து, பொய்யாக குறை காணும் இப்படியான செயல்களை சீமானின் அரசியல் மீதான எதிர்வினையாக கொள்ள முடியாது. மாறாக, நேரடியாக அவரது அரசியலை ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக கேள்வி கேட்பதற்கும் அருகதையும் அறிவும் அற்றவர்களின் வெறுமனே காழ்ப்புணர்வுடனான விமர்சனமாகவே கொள்ள முடியும். இத்தகைய போக்கு எந்தவிதமான நல்ல பின் விளைவுகளையும் தரபோவதில்லை.

 

சீமான் தவறு செய்தால் கண்டியுங்கள், விமர்சியுங்கள், அதனூடாக அவரது அரசியலை கேள்விக்குட்படுத்துங்கள். ஆனால், மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றை கண்ணும் காதும் வைத்து பெருப்பித்து அதனூடாக உங்கள் அரசியலை நியாயப்படுத்த முனைந்தால், மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவீர்கள். இதன் மூலம் ஒன்று மட்டும் புரிகின்றது.

 

சீமானின் அரசியலை விமர்சிக்கும் தகுதி உங்களுக்கு அறவே இல்லை என்பதுதான் அது.

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127721#entry926915

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கப்பல்களை அமெரிக்கா தாழ்க்கத்தொடங்கியது சந்திரிக்கா காலத்தில். அந்த நேரம் ரணில் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது கப்பல்களின் மையங்களை பிரதமருக்கு தெரியாமல் பிளேக் சந்திரிக்காவிடம் கொடுத்தார். கப்பல்கள் தாழ்ந்த செய்திகளை ரணில் பத்திரிகைகளில் படித்துவிட்டு அதை பாராளுமன்றத்திலும் தெரிவித்து அமெரிக்க தூதுவராலயத்திலும் முறைப்பாடு செய்தார். ரணில் புஸ்சை சந்திக்க முயன்ற தடவைகள் பலமான தோல்விகளை சந்தித்தார். புலிகள் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக கிளிடன் காலத்தில் அறிவிக்கப்பட்டு,  2001 பின்னர் சரவதேச பயங்கரவாதிகளாக தரம் உயர்த்தப்பட்டார்கள். புலிகள் உடனடியாக கொடுத்த 9/11 அனுதாபச் செய்தியை கவனிக்காமல் தட்டிக்கழித்து, மூன்று நாட்களின் பின்னர் கொடுத்த சந்திரிக்காவின் செய்தியை ஏற்று அமெரிக்க ராஜாங்க அமைச்சு பதில் அளித்தார்கள். லன்ஸ்ரெட் காலத்திலேயே சம்பந்தர் வரைக்கும் வீசா மறுக்கப்பட்ட பயங்கரவாதியாக கணிக்கப்பட்டுவிட்டார். அதாவது அமெரிக்கா தமிழர் முழுப்பேரையும் பயங்கரவாதிகளாக்கண்டது. கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய நாடுகள் அனுமதித்தும்அமெரிக்கா தமிழருக்கு அடைக்கலம் மறுக்கும் நாடாக மட்டுமே தொடர்ந்தும் இருந்தது. 

 

அமெரிக்காவின் தலையீடு காரணமாக புலிகளை தோற்கடிக்க முடியும் நம்பிக்கை SLFP யிடம் இருந்தது. அந்த நேரம் அது UNP யிடம் இருக்கவில்லை. SLFP கூட்டமைப்புடன் வேலை செய்ய விரும்பி, நீலன் போன்றோர் SLFP யுடன் இணைந்து ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்புகள் வரைந்தார்கள். ஆனால் UNP புலிகளுடன் இருப்பதாக காட்டிக்கொண்டு கருணா போன்றவர்களை அணைத்து வைத்திருந்தது. இது அமெரிக்காவுக்கு பிடியாத விடையமாக இருந்தால் தான் போருக்காக செய்துவந்த உதவிகளை ரணிலிடம் மறைத்து வந்தார்கள்.

 

அமெரிக்கா 2004 ஆண்டு சுனாமியில் JVPயுடன் இணைந்து புலிகள் பக்கம் எந்த பணம் போகாமல் பார்த்தது. தனது பணம் முழுவதையும் அமெரிக்கா தெற்கில் மட்டும்தான் செலவழித்தது. இதை கிளிண்டன் கூட எதிர்த்தார். 

 

தேர்தல் நேரம் ராஜபக்ஷா பற்றிய உண்மைகளை சந்திரிக்கா அமெரிக்காவுக்கும் வெளிவிட்டா. அமெரிக்காவும் அவவுமாக சேர்ந்து மகிந்தா SLFP இல் அதிபராக வராமல் தடுக்க முயன்றார்கள். ஆனால் அது முடியவில்லை. அவர் SLFP யின் அதிபர் வேட்பாளர் ஆனார். நரியர் நண்பனாக நடித்து புலிகளின் முதுகில் குத்தி கருணாவை பிரித்த கோபத்தால் அவர்கள் ரணிலை ஆதரிக்க விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தேர்தலை பகிஸ்கரித்தார்கள். மகிந்தா பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அதே கதைதான் நடந்திருக்கும். (அது மட்டுமல்ல தேர்தல் நேரம் எந்த மேற்கு நாடும் தனது வெளிப்படையான ஆதரவை ரணிலுக்கு காட்டவும் இல்லை. மகிந்தாவை எதிர்க்கவும் இல்லை. இது வெளிப்படையாக நடந்தது பொன்சேகாவின் தேர்தலில் மட்டுமே - ஜனநாயக நாட்டில் அது நிகழக்கூடாது, தூதுவராலயங்கள் தேர்தலில் தலையிடக்கூடாது.) மகிந்தா பணம் கொடுத்த கதை மங்கள வெளியே வந்த பின்னர் தெரிய வந்த கதை. அதாவது மகிந்தாவுக்கு எதிரான ஒருவரால் வெளிவிடப்பட்ட இரகசியம். இதை மகிந்தாவோ புலிகளோ வெளிவிடவில்லை. ஏற்கனவே மகிந்தாவை நிறுத்த முடியாமல் போனபின்னர் ரணில் என்ற நரியில் குதிரை பந்தயத்திற்கு பணம் கட்டிய பிளேக், இந்த இரகசியம் வெளிவந்த பின்னர், பிரபாகரன் காசு வாங்கிக்கொண்டு தன்னை விழுத்தியதாக முடிவு பண்ணிக்கொண்டு,  200 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டியில் எகிலப்பொல எடுத்த முடிவை எடுத்தார்.  அதாவது தனது உறவான எதிரியை நிர்மூலமாக்க தனது முழு எதிரியுடன் கை கோர்ப்பது. இதுதான் பஞ்ச தந்திரத்தில் வரும் குதிரையும் கலைமானும் கதை. பிளேக் வலிய மகிந்தாவின் காலில் போய் விழுந்தார். ரூசிய லும்பும்பா தயாரிப்புக்களான JVPயினரின் வீடுகளுக்கு தனது கௌரவத்தை விட்டு பயணம் போனார். ப்யங்கரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில்லை என்ற கோரிக்கையை கைவிட்டு பிளேக் விமலைப் போய் சந்தித்தார். SLMMமை வெளியேற வைத்தார். சேர்மனி முழு எதிர்ப்பு காட்டியும் EU வை புலிகளை தடுப்பித்தார். எந்த ஒரு பிடியையும் கைக்குள் வைக்காமல் "தன் உடல் ஆவி, பொருள் எல்லாவற்றையும் கொடுத்து" மகிந்தாவின் காலில் சரண் அடைந்தார். 

 

ஆனால் போர் முடிந்தவுடன் SLFPயும் JVPயும் இணைந்து பிளேக்கின் முதுகில் குத்தினார்கள். அவரை வெளியே போட்டார்கள். சீனா முழுவத்தாக உள்ளே வந்தது. அமெரிக்கா வெளியேற்றப்பட்டது. அவரை மட்டக்களப்பு போன கெலியில் வைத்து முடிக்க முயன்றார்கள். இதானல் மனம் உடைந்த பிளேக் போக இடமில்லாமல் திகைத்தார். பொன்சேக்காவை அமெரிக்காவுக்கு அழைத்து மிரட்டி பணிய வைத்து ரணிலுக்கு எதிராக திருப்பி அவரை UNP யின் வேட்பாளர் ஆக்கினார். பொன்சேக்கா சிறையில் போய் முடிய அவரை வெளியே எடுக்க முடியாமல் போனது. கனடா இலங்கையிடம் ஐ.நா வில் படு கேவலமான தோல்வி கண்டது. தில்லு முல்லுக்கு மேலாக தில்லுமுல்லு ஆடி பிளேக் இறுதியில் தனது ஆட்டங்கள் இலங்கையில் அவியாது என்று கண்டு இன்று கிழக்காசிய பதவிலிருந்து விடுபடுகிறார்.

 

ஒபாமாவில் அரசில் இருந்த பெண்கள் இலகுவில் இலங்கையால் வாங்கப்பட முடியாமல் போன பின்னர் மெல்ல மெல்ல மனித உரிமைகள் சபையில் மாற்றங்கள் வந்து பொன்சேக்கா வெளியே வந்தார். அவர் உடனே பிரிடெரிக்கா யாண்சினதும், அமெரிக்காவினதும் முதுகில் குத்தின்னார். அமெரிக்கா மட்டுமல்ல, பொன்சேக்கா வெளியே வரும் போது திருந்தி வருவார் என்று நினைத்தவர்களில் நமது யாழ்க்கள உறவு அக்குத கூட ஒருவர். அவர் இறுதி வரைக்கும் பொன்சேக்காவை தமிழர் பக்கம் திருப்ப எதாவது வழிகள் தென்படும் என்று நினைத்தவர்.  ஆனால் சிங்கள இராஜதந்திரத்தில் ஊறிய பொன்சேக்கா, மனித உரிமைகளை பற்றி விசாரிக்க இலங்கை வந்த  நவனீதம் பிள்ளையை கூடத் தாக்கி பேசித்தான் அனுப்பி வைத்தவர்.  

 

மொத்ததில் புலிகள் தங்கள் பாதையை மாற்றி அமெரிக்காவுக்காக ரணிலை எதிர்க்கவில்லை. புலிகள் தேர்தலை ஆதரிக்கவில்லை. அது அந்த நேரத்து நிலைமையில் தேவை இல்லாதது. அமெரிக்கா வாய்விட்டுக் கேட்காதது. மனதுக்குள் அமெரிக்கா ராஜபக்ஷாவை விரும்பியது. மகிந்தா வந்தால்த்தான் புலிகளை அவரை கொண்டு அடிப்பிக்க முடியும் என்று நம்பினார்கள். இதனால் அமெரிக்க தெரிந்து கொண்டே ரணிலை ஒதுக்கியது. இதில் புலிகளை சாட்ட ஒன்றும் இல்லை. இலங்கையின் முழு பட்ஜட்டையும் விட பெரிய பட்ஜட்டை உலகை உளவு பார்க்க போடும் அமெரிக்கா, இலங்கை மாதிரி சின்ன நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பாதது பிளேக் கால அரசாங்க அமைச்சின் அவமான கரமான நடத்தை. தான் எதிரிகளாக நினைத்து கப்பல்களை  தாழ்த்துக்கொண்டிருந்த புலிகள் தங்களின் வேட்பாளரை ஆதரிக்கவில்லை என்பதில் உண்மை இல்லை.

இப்படியான நக்கல்களை நிர்வாகம் தொடந்தும் கண்டும் காணது போல்விட்டு வைக்கிறது. இதில் என்ன அரசியல் விவாதம் இருக்கிறது? இதை ஏன் நிர்வாகம் நீக்க முடியாது?

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு

38 ஆவது கருத்தில் மல்லையூரான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129134&page=2#entry936204

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஏன் ஏவுகணைகளைச் செய்து வருகுது. ஒரு ஏவுகணையையும் அது நிஜத்தில் பாவித்ததே இல்லை. அதுக்கு எதற்கு ஏவுகணை..??! மேலும்.. பரிசோதனையில் தோல்வியையும் வெற்றி என்று அறிவிக்கலாம். உண்மையில் நிஜத்தில் போரில் பாவித்தால் தான் அதன் அருமை பெருமை தெரியும். அமெரிக்கா உற்பத்தி செய்யுற ஏவுகணையைப் பாவிக்கவே போர் தொடுக்குது. ரஷ்சியா வித்துக் காசாக்குது. சீனா அடிக்கி வைச்சு வீரம் காட்டுது. இந்தியா..????????????!  :D  :lol:

 

தலைப்பை இணைத்தவர்: தமிழரசு.

2´வது கருத்தில்... நெடுக்காலபோவான்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129195&hl=

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------

நம்பி ஏமாறுவது என்பது வேறு. எமக்கான குரல்களை புறக்கணிக்காமல் அதற்கு ஆதரவு வழங்குவது என்பது வேறு. இங்கு இரண்டாவதை தான் நான் உட்பட பலர் பல விடையங்களில் முக்கியப்படுத்துகிறோம்.

அதில் அவர்கள் சுயநலம் இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அதை பற்றி கவலையில்லை. அவர்கள் குரல் எமக்கு நன்மை விளைவிக்குமாக இருந்தால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். அவர்கள் குரல் எமக்கு எதிராக திரும்பினால், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அத்துடன் அவர்களை புறக்கணிக்க தயங்கவும் கூடாது. அதை விடுத்து எமக்கு நன்மை ஏற்படுத்தும் விடையங்களிலும் தொட்டதுக்கும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் போராடுவதற்கு யாருமே முன் வர மாட்டார்கள். :rolleyes::)

 

தலைப்பை இணைத்தவர்: பையன் 26.

107´வது, கருத்தில்... துளசி.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130671&page=6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.