Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் துன்பங்களும் கடவுளின் இருப்பும் யதார்த்த சம்பவங்களும்
இக்பால் செல்வன்
 
 

628x471.jpg


மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது அதே சமயம் பலவீனமானதும் கூட. மனம் என்பதில் இருந்து தான் இன்றைய உலகின் அனைத்து விடயங்களும் உருவாக்கம் பெற்றன. நாம் அன்றாடம் சுகிக்கும் ஒவ்வொரு பொருள்களும் மனித மனதில் இருந்து தோன்றியவை. ஆனால் உலகில் பெரும்பங்கான மனிதர்களின் மனம் கோணலாகவும், விரிவடையாமலும், சுருங்கியும் கிடக்கின்றன. 
 
மனித இனம் உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இனமாகவும் இருக்கின்றது. பல விடயங்களைக் கண்டு அஞ்சும் தன்மையது. குறிப்பாக நாம் அறியாத விடயங்களை எண்ணி கடுமையாக பயப்படுகின்றோம். தெரியாதவற்றை தெரிந்தவைகளை இட்டு நிரப்பி கற்பனை செய்து கொள்கின்றோம். குறிப்பாக துன்பங்கள் ஏற்படும் போது, மனித மனம் தனது இயல்பான சிந்தனை ஆற்றல்களை இழந்து விடுகின்றது. 
 
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் எண்ணற்ற துன்பங்களை சந்திக்கின்றோம், அவற்றில் சிலவற்றை சுயமாகவோ, பிற துணையோடும் கடந்து விடுகின்றோம். சில சமயங்களில் அவற்றை கடக்க கடுமையாக துன்பப் படுகின்றோம், கடுமையாக முயல்கின்றோம். அச் சமயங்களில் மனம் நிதானித்து இருப்பதில்லை, எளிய வழிமுறைகளைத் தேடும். எதைக் குடித்தால் பித்தம் தீரும் என கண்களில் தென்படும் எவ் வகை தீர்வுகளையும் முயற்சி செய்ய யத்தனிப்போம். 
 
வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தவை என பண்டைய சான்றோர்கள் எண்ணினார்கள். அவை மனம் சார்ந்தவை, உடல் சார்ந்தவை என வகைப்படுத்தினார்கள். ஆனால் இத் துன்பங்களை தீர்க்கும் வழிமுறைகளில் தான் ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டைக் தத்தமது அனுபவங்கள் ஊடாக முன்வைத்தனர். உதாரணத்துக்கு புத்தரோ பற்று நிலையே துன்பத்துக்குக் காரணம் என்றார், பற்றுக்களை துறக்க வலியுறுத்தினார். 
 
கிரேக்க தத்துவஞானியான எபிகுருசு துன்பங்களை அகற்றத் தொடங்குவதன் மூலம் இன்பங்களை பெறலாம் எனக் கூறினார். துன்பங்களின் வேர்களைத் தேடி அறிவின் ஊடாக அவற்றை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.   பிரிடரிக் நீட்சே என்ற பிரஞ்சு மெய்யியலாளர் துன்பங்களை மிகவும் நல்லது எனவும், அது வாழ்வினை உறுதிப்படுத்தவும், மன வலிமையை கூட்டவும் பயன்படுகின்றது என முற்றாக மாற்றுக் கருத்தை முன் வைக்கின்றார். 
 
ஆனால் சில மத நிறுவனர்களோ, கடவுளை வணங்குவதால், கடவுளிடம் சரண்டைவதால் துன்பங்களை தீர்க்க இயலும் என்றார்கள். இத்தகைய துன்பமான நிலையில் தான் மூட நம்பிக்கைகள் உள் புகுகின்றன. எளிய மனிதர்களின் துன்பங்களை பயன்படுத்தி நல்ல விளைச்சலை அறுவடை செய்யவே ஒரு ஒருங்கியம் (System) இன்றளவும் செயல்பட்டு வருகின்றது.  
 
இத்தகைய ஒருங்கியங்கள் மதங்கள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், மரபுகள், பாரம்பரியங்கள் என்ற பெயரில் சமூகத்தில் நீடித்து வருகின்றன. விளிம்பு நிலை மனிதர்களும், ஏழை எளியோர்களும், இயலாதோரும் தமது துன்பங்களுக்கு காரணங்கள், காரியங்கள், விடுதலைகள் அனைத்துக்கும் மூட நம்பிக்கைகளில் சரணாகதி அடையச் செய்ய வைக்கப்படுகின்றார்கள். இது வரைக் காலமும் உலகின் துன்பங்களை இத்தகைய மூட நம்பிக்கைகள் சார்ந்த ஒருங்கியத்தின்  (System) ஊடாக தீர்வு கிடைத்ததாக நான் அறிந்திருக்கவில்லை, தற்கால மன அமைதியை வேண்டுமானால் கிடைக்கலாம். அல்லது தீர்வு எட்டப்பட்டதாக போலியாக நம்ப வைக்கப்படலாம். ஆனால் உண்மையான தீர்வை ஒரு போதும் எட்டப்படுவதே இல்லை. 
 
இவ்வாறு தான் அமண்டா பெறி என்ற 16 வயது சிறுமி ஏப்ரல் 21, 2003-ஆம் ஆண்டு காணாமல் போனார். அதன் பின்னர் அவளை அவளது தாயார் லுவானா மில்லர் தேடாத இடமில்லை, வணங்காத தெய்வமில்லை. அவை ஏன் தமது மகள் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதைக் கூட அறியாமல் இறுதியாக ஒரு குறி சொல்லும் சோதிடப் பெண்மணியிடம் சென்றார். சில்வியா பிரவுன் என்ற அந்த குறி சொல்பவளோ, மில்லரின் மகள் உயிரோடு இல்லை எனக் கூறி விட்டாள். அதனைக் கேட்டு மனமுடைந்த மில்லரோ 2006-ஆம் ஆண்டு இறந்து போனார். 
 

Kidnappers-1874966.jpg
காஸ்ற்ரோ சகோதரர்கள்

ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா, அமண்டாவையும், மேலும் இரு பெண்களையும் 54 வயதுடைய பெட்ரோ காஸ்ற்ரோ மற்றும் அவரது சகோதரர்கள் ஏரியல் காஸ்ற்ரோ, ஒனில் காஸ்ற்ரோ ஆகியோரும் கடத்தி ஒரு வீட்டில் பத்தாண்டுகளாக அடைத்து வைத்துள்ளனர். அத்தோடு நிறுத்தாமல் அவர்களை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியும், உடல் மற்றும் உள்ளத்தை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளனர். 
 
கடந்த வாரம் இந்த பெண்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இந்த செய்தி அமெரிக்காவின் கிளிவ்லாந்து பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் இந்த மூவரும் சமூகத்தில் நல்ல மனிதர்கள் என்ற முகமூடி இட்டு ஏமாற்றியும் உள்ளனர். சொல்லப் போனால் காணாமல் போன பெண்களை தேடும் பணியிலும், அதற்கு தேவையான பணம் வசூலிக்கும் நிகழ்ச்சியிலும் கூட பங்கேற்றுள்ளனர். அதில் அமண்டா பெறிக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது, அக் குழந்தைக்கு ஆறு வயதும் ஆகி உள்ளது என்பது தான் கொடுமை. 
 
சுற்றத்தார் சிலருக்கு இவர்கள் மீது சந்தேகங்கள் இருந்த போதும், யாரும் பெரிதாக சாட்டை செய்யவில்லை. அத்தோடு காவல்துறையினரின் கண்களில் கூட மண் தூவப் பட்டு இத்தனைக் காலமும் இந்த இளம் பெண்களை வீட்டுச் சிறைப் படுத்தி உள்ளனர் இந்த கயவர்கள். 

 

கடவுள் தீமைகளை அழிக்க விரும்பகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் அவர் வல்லமை அற்றவர்.



அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா?



அப்படியானால் கடவுள் கருணை அற்றவர்.



விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா?



அப்படியானால் தீமை எங்கிருந்து வருகின்றது?



வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா?



பிறகு ஏன் கடவுள் என்று (ஒன்று இருப்பதாக) கூறிக்கொள்ள வேண்டும்?



- எபிகுருசு



உலகில் இவ்வாறான சம்பவங்கள் ஏன் நடக்கின்றன, இந்த பெண்களுக்கு துன்பங்கள் ஏற்படாமலோ, துன்பம் ஏற்பட்ட போது காப்பாற்றாமலோ இருந்த கடவுளை இன்னமும் நாம் நம்பத் தான் வேண்டுமா? உயிருடன் துன்பப் பட்ட பெண் இறந்து விட்டாள் எனக் கூறிய சோதிடத்தை என்ன செய்யலாம் ?
 
இவை எல்லாம் கடவுளின் சித்தம் என்றோ, எல்லாம் அவர்களின் தலை விதி என்றோ பிற்போக்குத் தனம் பேசுபவர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பெண்கள் உங்களின் மகளாகவோ, சகோதரியாகவோ, ஏன் நீங்களாகவோ இருந்தால் கூட இவ்வாறு தான் பேசுவீர்களா ?!!


 
 
http://www.kodangi.com/2013/05/cleveland-kidnap-victims-amanda-berry-and-existence-of-pain-and-god.html
 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளை  நொந்து  என்ன  பலன்???

 

இந்த மூன்றையும் போடும்  வகையில் மற்றவரெல்லாம் தெளிவாகணும்.............

எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்று கோயிலுக்குப் போகும் வழியில் திருப்பம் ஒன்றில் மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளானார்கள். வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவருமே மிகச்சிறிய காயங்களுடன் தப்பிக் கொண்டனர். வாகனம் தீரும்பவும் சேவையில் ஈடுபடுத்த முடியாதபடி சேதமடைந்திருந்தது.

 

வாகனத்தில் இருந்து காயமெதுவுமின்றி தப்பிக்கொண்ட பெரியவர; சொன்ன வசனம் இது நல்ல வேளை கடவுள் புண்ணியத்திலை ஆபத்தில்லாமல் தப்பீட்டம்.

 

என்னுடைய கேள்வி காப்பாற்றியது கடவுளன்றால் மோத வைத்தது யார்?

 


 

Edited by Manivasahan

எடுத்த எடுப்பி்ல் மூன்றுபேரையும் போட நினைப்பதற்கு அமரிக்கா ஒன்றும் தமிழ் சிந்தனை முறையை கொண்டிருக்கவில்லை. அதில் இரண்டு சகோதரர்கள் மீது குற்றம் பதிவுசெய்யப்படவில்லை.

 

 

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

போட நினைப்பது தமிழ் சிந்தனை முறை என்பதை வன்மையாக கண்டிக்கின்றேன் .அது குறிப்பிட்ட ஒரு தமிழ் கூட்டதிற்கு   உரித்தானது மட்டுமே .

 

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

  • கருத்துக்கள உறவுகள்

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

  • கருத்துக்கள உறவுகள்

 

http://www.theatlantic.com/national/archive/2012/05/yes-america-we-have-executed-an-innocent-man/257106/

 

 

 

அமெரிக்காவை பற்றி பெருமையாக நினைப்பதும் தன் இனத்தை சிறுமையாக நினைப்பதும் ஒரு அடிமையின் மனப்பாங்கு தான்.
 
இவ்வளவு சட்டம், விஞ்ஞானம் எல்லாம் இருந்தும் நிரபராதி அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளாரே??

 

 

ம்ம்ம்

அமெரிக்காவில் மரணதண்டனை உண்டு என்பதையே  மறந்து பேசுகின்றார்கள்....

ஏன் ரெலோ பொபி தாஸ் என்று போட்டுத்தள்ளவில்லையா? புளட் உள்ளுக்குள் போட்டுத்தள்ளவில்லையா? இல்லை ஏனைய இயக்கங்கள் தான் மாறி மாறி போட்டுத்தள்ளவி்ல்லையா? கூடுதலாக போட்டுத்தள்ளியவன் தலையில் எல்லாக் குற்றங்களை இனத்தின் காட்டுமிராண்டித்தனத்தை சுமத்த முடியாது. சேர சோழ பாண்டியர்கள் மாறி மாறிப்போட்டுத்தள்ளினதுதான் புறநானுறும் அக நானூறும். பெளத்தரையும் சமணரையும் கழுவேற்றி கரை கண்டதுதான் ஆன்மீகம் சமயம். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது. வரலாறு முழுக்க காட்டுமிராண்டிகளாகவே கடந்து வந்தவர்கள் இப்பவும் எவன் தலை கிடைக்கும் ஓட்டைபோடலாம் என்றே சிந்திக்கின்றார்கள். இதில கண்டனம் வேறு !!

ஒரு கூட்டம் என்று நான் குறிப்பிட்டது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை அல்ல .அப்படியான சிந்தனையில் ஒரு கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனங்களில் மிருகத்தன்மை அதிகரித்து வரும் காலம் இது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, தகாத தொடர்பு,  அடிதடி அராஜகம்

என்பன இன்று அதிகரித்து உள்ளது

 

ஆதிகாலத்தில் மனிதன் மிருகங்களை வேட்டையாடிஉண்டு  வாழ்ந்தான்.

ஏன் மிருகமாகவே வாழ்ந்தான் என்று கூறலாம் .  அன்றும்  இன்றுபோல இந்த பாதகங்கள்   இல்லை எனக் கூறமுடியாது .

ஆதி மனித காலத்திற்கும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி கண்ட மனித காலத்திற்கும்

அதிக வித்தியாசம் காணப்படவில்லை.

 

ஆனால் இவற்றிற்கு இடப்பட்ட காலத்தில் மனிதன் நாகரீக வளர்ச்சி கண்ட

காலத்தில்இந்தப் பஞ்சமா பாதகச் செயல்கள் அருகியே இருந்தன.

 

விஞ்ஞான வளர்ச்சி மனிதனை மேலும் மிருக உணர்வுள்ளவனாக மாற்றுகின்றதில் 

பெரும் பங்கு வகிக்கின்றது.

சினிமா, கணனிவிளையாட்டுக்கள், வலையுலகில் வழிந்தோடும் பாலியல் காட்சிகள் 

மனிதனை மேலும் மிருக நிலைக்குத் தள்ளிச் செல்லுகின்றன.

 

மது வகைகள் இன்று இளையோர்கள் கைகளில் தாராளமாகப் பழக்கத்தில் உண்டு.

மதுவிற்கு அடிமையானவன் மிருகத்திற்குச் சமனாகின்றான் 

 

இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் சிறுவயதினரையே பாலியல் சம்பந்தமான 

ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கின்றது.

ஆடு மாடு கோழி கௌதாரி எனக் கண்டவற்றையெல்லாம் உணவாக்கி 

மனிதர்களின் மனதினில் ஒருவித மிருக உணர்வுகளைத் தூண்டி விடுகின்றனர்.

 

மொத்தத்தில் விஞ்ஞான வளர்ச்சியும் உணவுப் பழக்க வழக்கங்களுமே

மனிதன் பல பாதகச் செயல்களில் ஈடுபட உதவி நிற்கின்றன.

 

இப்படியான கலிகாலத்தில் கடவுளால் ஒன்றுமே செய்ய முடியாது

 

 

 

இப்படி பல இடங்களில் நடந்து கொண்டுதானிருக்கு, காவல் துறையும் தங்களால் இயன்றவரை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள், அதையும் தாண்டி பல குற்றங்கள் நடைபெறுகின்றன, இவற்றுக்கு காரணம் ஒரு தனி மனிதனின் நடவடிக்கைகளே

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.