Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் பிடிபட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மாணவியும் இளைஞனும் பிடிபட்டனர்

vipa_-150x150.jpgயாழ் நகரில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் யாழ். பிரதேச செயலக ஊழியர்கள் பிடித்துள்ளனர்.   இந்த இளைஞன் யாழ் நகரில் தங்க நகைக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகனாகும். முhணவி சுன்னாகத்தை சேர்ந்தவர்.

இந்த இளைஞன் தனது காரில் பாடசாலை மாணவியை ஏற்றி வந்து யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள போட் என்ற விடுதியில் அறை ஒன்றை எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடுதியில் இவ்வாறு பலர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் கலாச்சர சீரழிவுகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.vipa_.jpgvipa_002.jpgvipa_006.jpgvipa_004.jpg

http://www.thinakkathir.com/?p=50024

இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஊடகங்களின் செய்தியின் படி அந்தப் பெண் தன்னுடைய காதலுடனேயே அங்கே தங்கியிருக்கிறார். இரு தரப்பு சம்மதத்தோடு பாலியல் உறவில் ஈடுபடுகின்ற வயதை குறைப்பது பற்றி சிறிலங்கா அரசு ஆராய்கின்ற நிலையில் இதில் சட்டப்படியான குற்றமும் எதுவும் இல்லை.

தாம் ஏதோ கலாச்சாரத்தை காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்கள், ஆண்கள் மீது சிலர் அராயகத்தை நிகழ்த்துகிறார்கள்.

Edited by சபேசன்

சில தனிப்பட்ட எதற்குமே பிரயோசனமில்லாததுகள் தமது சொந்த பிரச்சனைக்காக வெளியிட்ட செய்தியே இது. சில பத்திரிகைகள் இப்படியான செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் தாம் எவளவு கழிசடைதனமான பத்திகை நடத்துகிறோம் என்று காட்டியுள்ளார்கள். ஒரு பெண்ணின் படத்தை பிரசுரிப்பது கலாச்சாரமா ?

சபேசனின் கருத்துடன் நான் நூற்றுக்கு நூறு வீதம் உடன்படுகிறேன். கலாச்சாரம் என்ற போர்வையில் மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களில் தலையிடும் அநாகரிகம் எமது தமிழ் சமுதாயத்தின் நோய்க்கூறுகளில் ஒன்று. தனது வீட்டுபிரச்சனைகளை ஒத்திவைத்துவிட்ட அடுத்தவர் அந்தரங்களை ஆராய்வது தமிழ் கலாச்சாராமா?

இந்தச் செய்தியில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஊடகங்களின் செய்தியின் படி அந்தப் பெண் தன்னுடைய காதலுடனேயே அங்கே தங்கியிருக்கிறார். இரு தரப்பு சம்மதத்தோடு பாலியல் உறவில் ஈடுபடுகின்ற வயதை குறைப்பது பற்றி சிறிலங்கா அரசு ஆராய்கின்ற நிலையில் இதில் சட்டப்படியான குற்றமும் எதுவும் இல்லை.

தாம் ஏதோ கலாச்சாரத்தை காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்கள், ஆண்கள் மீது சிலர் அராயகத்தை நிகழ்த்துகிறார்கள்.

இலங்கை அரசு ஆமிகாளால் பாலியல் தொழில் இழுத்து விழுத்தபட்டவர் என்றோ ஒரு நாள் திரும்பி வந்து ஆமிகள் மீது வழக்கு தொடராமல் இருப்பதற்கு ஒவ்வொரு நாளும் சட்டத்தை மாற்ற ஆரய்கிறார்கள்.  ஆராய்வதில் வழக்கு தங்க போகிறது என்று விவாதிக்க முயல்வது, சட்டத்தை அறியாத பாமரத்தனமையாக எடுத்துகொள்ள முடியாது;  குற்றவாளிகலை காப்பாற்ற செய்ய முயற்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது என்ன பகிடியா? உதயன் மீதுதான் வழக்கு தொடர முடியும் என்றால் பொய் செய்தியை போட்ட இந்த பத்த்ரிகை மீது வழக்கு போட்ட இலங்கை கோடுகள் கிழிந்து போய்விடுமா?

ஒரு மறுப்பு அறிக்கை விடத்தெரியாத பெண்ணும், ஆணும், வியாபரம் நடத்தும் தந்தையுமா ? அப்படி விட்டிருந்தால் இங்கே கொண்டுவந்து பதிய முடியுமா?

அரசின் அடிவருடிகள் செய்தால் பங்கு கிடைப்பவர்கள் அந்த கேடிகளை காப்பாற்றுகிறார்கள்.  இவர்களின் அரச கேடிகளை  காபாற்றும் முயற்சிகள் பலதவைகள்  யாழில் பார்த்துதான்.

ஒரு இளைஞனும் இளைஞியும் மனமொத்து உறவில் ஈடுபவதை இலங்கையின் சட்டப்படியும் தண்டிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அதைக் குறிப்பிட்டேன்.

சிறிலங்கா அரசு பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதைக் குறைப்பதற்கான காரணங்களை ஆராயும் நோக்கம் அதில் இல்லை.

சட்டப்படி இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதனால்தான் காவல்துறையும் அழைக்கப்படவில்லை.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தால் காவல்துறையை அழைத்திருக்க முடியும்.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞன் பெண்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டிருந்தால், அதை அணுகுவதற்கான வழி இது அல்ல. இங்கே ஊடகங்கள் அந்தப் பெண்ணை குறிப்பிட்ட இளைஞனை விட மோசமாக மானபங்கப்படுத்தி உள்ளனர். ஊடகங்களே விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள ஊடகங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை புலம்பெயர்ந்துவிட்ட சபேசன் சொல்லக்கூடாது.. :icon_idea: இதை எங்கையோ கேட்டமாதிரி இல்லை??!! :D

  • கருத்துக்கள உறவுகள்

சில தனிப்பட்ட எதற்குமே பிரயோசனமில்லாததுகள் தமது சொந்த பிரச்சனைக்காக வெளியிட்ட செய்தியே இது. சில பத்திரிகைகள் இப்படியான செய்திகளை பிரசுரிப்பதன் மூலம் தாம் எவளவு கழிசடைதனமான பத்திகை நடத்துகிறோம் என்று காட்டியுள்ளார்கள். ஒரு பெண்ணின் படத்தை பிரசுரிப்பது கலாச்சாரமா ?

ஈபிடிபி ஒட்டுக்குழு அவரசப்பட்டு ஏன் அறிக்கை விடுகுது. ஒருவேளை இந்த விடுதி ஒட்டுக்குழு தலைவருக்கு கப்பம் கட்டுதோ... அல்லது சொந்தமோ..??!

காதலன்.. காதலியை (மாணவியை) விடுதிக்கு அழைத்து வந்து என்ன.. பார்வை பார்த்தவரா..???!

காதலர்கள் தங்களின் அந்தரங்க உறவுகளை பெற்றோரின் அங்கீகாரத்தோடு.. அல்லது அங்கீகாரமில்லாமலோ.. திருமணம் செய்து கொண்டு.. தங்கள் தங்கள்.. வீடுகளில் வைச்சுக் கொள்வது தானே நல்லதும் பாதுகாப்பும். விடுதிகளிலும் வீதிகளிலும் வைத்துக் கொள்வதால் தானே இவை செய்தியாகின்றன..!!!! :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளிநாடுளில் உள்ளவர்கள் அரசியல், பொருளாதாரத்தில் தாயகத்தில் உள்ளவர்களுக்கு வழி காட்ட முடியுமாயின், ஏன் கலாச்சரத்திற்கு முன்மாதிரியாக இருக்க கூடாது?

காரில் போய் விடுதிகாளில் தங்காமல், கார்களிலேயே தங்கள் தேவைகளை தீர்த்துக்கொள்ளலாமே? :icon_idea:

ஒரு இளைஞனும் இளைஞியும் மனமொத்து உறவில் ஈடுபவதை இலங்கையின் சட்டப்படியும் தண்டிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் அதைக் குறிப்பிட்டேன்.

சிறிலங்கா அரசு பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான வயதைக் குறைப்பதற்கான காரணங்களை ஆராயும் நோக்கம் அதில் இல்லை.

சட்டப்படி இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதனால்தான் காவல்துறையும் அழைக்கப்படவில்லை.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தால் காவல்துறையை அழைத்திருக்க முடியும்.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞன் பெண்களை ஏமாற்றுவதையே வேலையாகக் கொண்டிருந்தால், அதை அணுகுவதற்கான வழி இது அல்ல. இங்கே ஊடகங்கள் அந்தப் பெண்ணை குறிப்பிட்ட இளைஞனை விட மோசமாக மானபங்கப்படுத்தி உள்ளனர். ஊடகங்களே விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதில் சொந்த மானத்தை காப்பாற்றத்தக்கதாக எதுவும் இல்லை. வழக்கமானா நான் அதை சொல்ல வில்லை... இதை சொல்லவில்லை மட்டும்தான்.

அப்பட்டமாக சட்டதை விளங்காத்தனமாக "இலங்கை ஆராய்வதால் குற்றம் இல்லை" என்ற வசனத்தை அந்தக்கருத்தில் எழுதியது நான் இல்லை. அப்போ அது தவறு என்று ஒத்துக்கொள்ளாம்தான் அவமானம்.

சட்டப்படி மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, முஸ்லீம் கடைகளை உடைக்கும் பொதுபல சேனா, குத்தி இவர்களில் யாரையும் கூட ஒன்றும் செயய முடியாது என்பதால் இவர்களை அவர்களில் ஒருவராக கூறவருவது விளங்குகிறது.

அவர்களை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் எல்ல ஊடகங்களையும், அடிக்க, உதைக்க, ஆர்பாட்டம் செய்து மிரட்ட, வழக்கு போட எல்லாவற்றுக்கும் இலங்கையில் எப்போதுமே முடியும்.  இந்த முறை முடியாவிட்டால் இது குத்திகள் கூட்டத்திற்கு இலங்கையின் சரித்திரத்தில் இல்லாத தோல்வி. யாரோ விசையம் தெரிந்த ஊடகவியலார் ஒருவர் குத்திகள் கூட்டத்தை வெறும் பிரச்சாரத்தோடு நிற்கத்தக்கதாக மடக்கிவிட்டார்கள். படு அவமானம். :lol: :lol: :lol: :lol: :lol:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் உள்ள ஊடகங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை புலம்பெயர்ந்துவிட்ட சபேசன் சொல்லக்கூடாது.. :icon_idea: இதை எங்கையோ கேட்டமாதிரி இல்லை??!! :D

அத்துடன்

இதுவரை அவர்களை  பிழையாக வழி நடாத்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக்கேட்கணும்.

மேலும் இதுவரை எழுதிய

ஆய்வுக்கட்டுரைகள்

சமர் வகுப்புக்கள்

போருக்கான தூபமிடல்கள்

வழிகாட்டிக்குறிப்புக்கள்

நகர்வுக்கான முன்னோட்டங்கள்

வலிந்த,  துணிந்த,  ஒதுங்கிய,  பின் வாங்கிய,   முன்போன,  வட்டமடித்த,,,,  ..............???போன்ற கதைகளால்

கிடைத்த வருமானத்தை அந்த மக்களிடம் கணக்கு காட்டி அவர்களிடம் சமர்ப்பித்து  எல்லோருக்கும் முன் மாதிரியாக முன்காலை வைக்கணும். :icon_idea:

இசை! இந்த செய்தியை வெளியிட்டவை இணைய ஊடகங்கள். இவைகள் தாயகத்தில் இருந்து செயற்படவில்லை. குட் மோர்னிங்!

இதிலே அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் தாயகத்தில் இருக்கின்றார்கள். அந்தக் கிணற்றுத் தவளைகளுக்கு உலகம் எந்தத் திசையில் போகின்றது என்பதை சுட்டிக் காட்டுவதற்கான முழுத் தகுதியும் எனக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இந்த செய்தியை வெளியிட்டவை இணைய ஊடகங்கள். இவைகள் தாயகத்தில் இருந்து செயற்படவில்லை. குட் மோர்னிங்!

தினக்கதிர் என்பது தாயகத்தில் இருந்து செயற்படுவது என நினைத்துவிட்டேன் (படங்கள் வேறு போட்டிருக்கிறார்களே.. ) என் எண்ணம் தவறானால் மன்னிப்பு.. மன்னிப்பு.. மன்னிப்பு.. :D

விசுகு! வணக்கம்! யாரை தவறாக வழி நடத்தினேன் என்று சொன்னால் புண்ணியமாக போகும். என்னுடைய வழி காட்டுதலில் யாரும் இதுவரை நடக்கவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் நான் தவறாக வழி நடத்தி விட்டேன் என்கிறீர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இந்த செய்தியை வெளியிட்டவை இணைய ஊடகங்கள். இவைகள் தாயகத்தில் இருந்து செயற்படவில்லை. குட் மோர்னிங்!

இதிலே அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்கள் தாயகத்தில் இருக்கின்றார்கள்.

அந்தக் கிணற்றுத் தவளைகளுக்கு உலகம் எந்தத் திசையில் போகின்றது என்பதை சுட்டிக் காட்டுவதற்கான முழுத் தகுதியும் எனக்கு உண்டு.

இந்த கணக்குப்படிதான்  பிரபாகரனுக்கும் புலிகளுக்கும்  வழி  காட்டினீர்களா??? :(

இதிலே இன்னும் ஒரு விடயமும் இருக்கிறது. நுணாவிலான் தவறாக நினைக்கக் கூடாது. இந்தச் செய்தி வேறு இணைய ஊடகங்களிலும் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். யாழ் களத்தின் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட ஊடகங்கள்தான் இந்த செய்தியை பெரிது படுத்தி வெளியிட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இசை! இந்த செய்தியை வெளியிட்டவை இணைய ஊடகங்கள். இவைகள் தாயகத்தில் இருந்து செயற்படவில்லை. குட் மோர்னிங்!

இந்த படங்களை  எடுத்துக்கொடுத்துவர்கள் தாயகத்தில்தான் இருக்கிறார்கள்

அப்படியாயின் படத்தை வெளியிட்டவரை நீங்கள் தூற்றுவது பத்திரிகைத்தர்மம் ஆகாது  :(

விசுகு! தலைவரையும் புலிகளையும் நீங்கள் இப்படி அவமானப்படுத்தக் கூடாது. புலம்பெயர்ந்த ஒருவனின் வழிகாட்டலில் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. அவர்களின் வழிகாட்டலில்தான் தமிழர்கள் நடந்தார்கள்.

இங்கே நான் கலாச்சாரம் பற்றிய நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே இதைப் பேசுகிறேன். தவிர்க்க முடியாதபடி இலங்கையில் பாலியல் சார்ந்த கருத்துக்கள் மாற்றம் பெறுகின்றன. சில பிற்போக்குவாதிகள் அதை பொறுக்காமல் இப்படியான அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

பாலியல் பற்றிய கட்டுப்பாடுகள் இருந்த இடத்திலும், பாலியல் சுதந்திரம் உள்ள இடத்திலும் வாழ்பவன் என்கின்ற அடிப்படையில் இது பற்றி பேச என்னால் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொன்றாகப்பார்ப்போம்.

1- விசுகு! தலைவரையும் புலிகளையும் நீங்கள் இப்படி அவமானப்படுத்தக் கூடாது.

புலம்பெயர்ந்த ஒருவனின் வழிகாட்டலில் அவர்கள் போராட்டம் நடத்தவில்லை. அவர்களின் வழிகாட்டலில்தான் தமிழர்கள் நடந்தார்கள்.

புலம் பெயர்ந்தவர்களின்  தவறான வழி நடாத்துதலில் தான் போராட்டம் அழிந்தது என்று அடிக்கடி எழுதி  வருபவர் தாங்கள்.  இதை இன்று தங்களது வாயால் வரவைக்கவே   அவ்வாறு எழுதினேன். இனி மேலாவது   தலைவரையும் புலிகளையும் நீங்கள் இப்படி அவமானப்படுத்த மாட்டீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இங்கே நான் கலாச்சாரம் பற்றிய நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே இதைப் பேசுகிறேன். தவிர்க்க முடியாதபடி இலங்கையில் பாலியல் சார்ந்த கருத்துக்கள் மாற்றம் பெறுகின்றன. சில பிற்போக்குவாதிகள் அதை பொறுக்காமல் இப்படியான அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

2- பாலியல் பற்றிய கட்டுப்பாடுகள் இருந்த இடத்திலும், பாலியல் சுதந்திரம் உள்ள இடத்திலும் வாழ்பவன் என்கின்ற அடிப்படையில் இது பற்றி பேச என்னால் முடியும்.

அதேபோல் ஐனநாயகம் தளைத்தோங்கும்  இடத்திலிருந்து ஊரிலுள்ளவர்களுக்கு எழுதியபோது

அவர்களுக்கே அந்த உரிமையுண்டு என்று எழுதுவதை இனியாவது நிறுத்துவீர்களா???

அல்லது

ஊருக்கு உபதேசம் எனக்கில்லையடி பாப்பா???

இங்கே நான் கலாச்சாரம் பற்றிய நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே இதைப் பேசுகிறேன். தவிர்க்க முடியாதபடி இலங்கையில் பாலியல் சார்ந்த கருத்துக்கள் மாற்றம் பெறுகின்றன. சில பிற்போக்குவாதிகள் அதை பொறுக்காமல் இப்படியான அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

எது அடாவடி என்பது புரியவில்லை. அந்த திறந்த கலாச்சார நாடுகளில் உடகங்களின் சுதந்திர நிலையை அடாவடி என்றா விபரிக்கிறார்கள்?

பாலியல் பற்றிய கட்டுப்பாடுகள் இருந்த இடத்திலும், பாலியல் சுதந்திரம் உள்ள இடத்திலும் வாழ்பவன் என்கின்ற அடிப்படையில் இது பற்றி பேச என்னால் முடியும்.

இந்த கிணத்து தவளைகளை ஒருதடவை இலங்கைக்கு விஸா எடுத்து கொடுத்து கூட்டிக் கொண்டு போனாலத்தான் அவர்களுக்கு புலம் பெயர் கலாசாரதை  அங்கே எடுத்து செல்ல வேண்டும் என்ற பாரிய பொறுப்பு விளங்க போகுது. இல்லையேல் தாம் மட்டும் தான் அனுபவிக்க முயலபோகிறார்கள். 

மேலும் செங்கலடி கொலைவழக்கில் கலாசாரம் பற்றி எழுதியவர்கள் இங்கே வந்து ஊடக சுதந்திர அதமிதியம் பற்றியும் எழுதுகிறார்கள்.  இப்படி திரிக்குத் திரியும் அம்னீசியா

Edited by மல்லையூரான்

விசுகு! நீங்கள் ஜனநாயகம் தளைத்தோங்கும் நாட்டிலே இருந்து கொண்டு அங்கே அடக்குமுறைக்கு எதிராக போராடுபவனுக்கு ஆதரவாக தாராளமாக குரல் கொடுங்கள். அதற்கான உரிமையும் கடமையும் உங்களுக்கு உண்டு. நீங்களும் புலம்பெயர் நாடுகளில் உங்களுக்கு தெரிந்த வழிகளில் போராடுங்கள்.

ஆனால் ஈழத்திலே அடக்குமுறைக்கு எதிராக போராடுகின்ற மக்கள் உங்கள் வழிகாட்டலில்தான் போராட வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியாது. இதையே நான் முன்பு கூறியிருந்தேன். நாளையும் கூறுவேன்.

இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக நான் குரல் கொடுக்கிறேன். ஊடகங்களும் இளைஞர்களும் அத்துமீறியதை கண்டிக்கிறேன். ஆனால் அந்தப் பெண் என்னுடைய உத்தரவுப்படிதான் நடக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லையே!

இப்படி ஒரு ஆசை வேறு  இருக்கா...

தலை சுத்துது.......... :( 

ஒன்றுக்கொன்று முரணான பதில்.

இன்று போய் நாளை வாருங்கள் சபேசன்

நாம் இங்கு தான் இருப்போம்......

புலிகள் இருந்த காலத்தில் கூட தவறான  உறவுகள் இருந்தன  அதே போல் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களும் நடந்தன . புலிகள்  முறைப்பாடு கிடைத்தால் மட்டுமே  நடவடிக்கை எடுத்தார்கள் அல்லது  ஒருவர் பல பெண்களை காதலித்து ஏமாற்றிக் கொண்டு திரிகிறார் என தெரிந்தால் மட்டும் அவரை  விரும்ப்பமில்லாத திருமண பந்தத்தில் இணைத்து விட்டார்கள்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவும் ஆமிகளாள் பாதிக்க பட்ட பெண்களின் கதை இதிலும் தயவு செய்த்து எழுதுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122474&hl=

வீட்டுக்கு ஒருவன்/ஒருத்தி என்று சொன்ன திரி எங்காவது உலகத்தில் இருக்க என்று தேடிப்பார்த்து வாருங்கள்...அதன் பின்னர் இதையும் ஒரு திரி என்று கருதுவோம். வேணும் என்றால் அரியனெந்திரனையும் கூட்டிக்கொண்டு போங்கள் ...அவர் அந்த காலத்தில் இருந்தே அரசியல் வாதியாக இருந்தவர்.

விசுகு! நான் எங்கும் முரண்படவில்லை. நீங்கள்தான் ஆதரவாக குரல் கொடுப்பதையும், வழிகாட்டுவதையும் ஒன்றாக கருதி குழம்பிப் போயிருக்கிறீர்கள். நீங்களும் கொஞ்சம் ஓய்வெடுத்து வாருங்கள். நானும் இங்குதான் இருப்பேன்.

மல்லை! நீங்கள் இணைத்த செய்தியில் உள்ள விடயத்தோடு இதைப் பார்க்கலாம். ஒரு அப்பாவிப் பெண்ணிடமும் ஆணிடமும் தமது வீரத்தைக் காட்டியவர்கள் நீங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தமது வீரத்தைக் காட்ட வேண்டும். தமிழ் பெண்களிடம் பாலியல் அத்துமீறலை செய்கின்ற இப்படியானவர்களை அல்லவா அம்பலப்படுத்த வேண்டும்.

ஆனால் அங்கே எதுவும் செய்ய முடியாமல் நின்று கொண்டு, யாரோ ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து தனிமையில் தங்கி நின்ற இடத்தில் புகுந்து இப்படி அடாவடி புரிவது எப்படி நியாயம் ஆகும்?

உங்கள் இணைப்புக்களை இந்த அடாவடிப் பேர்வழிகளிடம் அனுப்புங்கள். ஏதாவது செய்கிறார்களா என்று பார்ப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.