Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:

திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவும், சீரிளமை குன்றாத மொழியாகவும், வளமையும் தூய்மையும் மிக்க மொழியாகவும், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழும் நெறிக்கும் இலக்கணம் வகுத்த மொழியாகவும், உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதிலும், அதனை உலகெங்கும் பரப்புவதிலும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பெருமை வாய்ந்த தமிழ் மொழியை சிறப்பிக்கும் வண்ணம், அமெரிக்கா நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலையைப் போல, Statue of Liberty  போல  தமிழர்களின் நாகரீகம், பண்பாடு,  இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில்,  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும். மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா ஒன்றும் அங்கு உருவாக்கப்படும்.

சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, பாரதியார் விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவை திருவள்ளுவர் திருநாளிலும்,  தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது,  உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது ஆகியவை சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்றும் வழங்கப்படுகின்றன.  அந்த வகையில், திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து திருக்குறளை பிற நாட்டு அறிஞர்களும் பாமரர்களும் புரிந்து கொள்ள வழிவகை செய்தவரும், அற நெறிக் கருவூலமான நாலடியார் மற்றும் திக்கெட்டும் தமிழ்ப் புகழ் பரப்பும் திருவாசகம் ஆகியவற்றை மொழி பெயர்த்தவரும் ஆன அயல்நாட்டு தமிழ் அறிஞர் திரு. ஜி.யு. போப்பின் தமிழ்த் தொண்டை போற்றும் வகையில், அயல் நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவருக்கு ஜி.யு.போப் விருது  வழங்கப்படும்.  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய்,  தங்கப் பதக்கம்,  தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.  இதற்கென ஒரு லட்சத்து  50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.

தமிழ் அறிஞருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர் ஒருவருக்கு உமறுப் புலவர் பெயரில் விருது வழங்கப்படும். விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவிட  வகை செய்யும் வகையில்  கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படும்.  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்படும். இதற்கென ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த விருது சித்திரைத் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும்.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் தமிழ்க் கல்வி வளர முதல் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2003 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் நிதி எனது அரசால் வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, ஒரிசா, உத்தரபிரதேஷ், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவிட மானியங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.  ஆந்திராவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞர் மு.வ. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்த் துறை தொடங்கப்பட்டு தற்போது பொன்விழா கண்டுள்ளது. இத்தமிழ்த் துறையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் முதுகலை,  முனைவர் பட்டப் படிப்பு  படித்து வருகின்றனர். ஆனால் தமிழ்த் துறையில் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அங்கு தமிழ்ப்  படிக்கும் மாணவர்களின் நலனைக் கருத்தில்  கொண்டும்,  வருங்காலத்தில் ஆந்திர மாநிலத்தில்  தமிழ் மொழியை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டும், திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு

3 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிதி உதவியாக ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

தமிழர் பண்பாட்டையும் நாகரீகத்தையும் போற்றி வளர்த்து வரும் டெல்லி தமிழ்ச் சங்க வளாகத்தின் நுழைவாயிலில் தமிழர் தம் கட்டடக் கலையை வெளிப்படுத்தும் விதமாக தோரண வாயில் அமைத்திட வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசு உதவிட வேண்டும் எனவும் தில்லி தமிழ்ச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று டெல்லித் தமிழ்ச் சங்கத்திற்கு தோரண வாயில் கட்ட நிதி உதவியாக  25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

பேரறிஞர் அண்ணாவால்  1968ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலகத் தமிழ்  மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழர் தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக் கூறும் தொல் காப்பியத்தின் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். தொல்காப்பியத்திற்கு எழுதியுள்ள பல்வேறு விளக்க உரைகளை ஒன்று சேர்த்து முறைப்படுத்துவது, பிற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தொல்காப்பியம் குறித்தான பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்துதல்  போன்ற பல்வேறு தமிழ் வளர்ச்சிப் பணிகள் இந்த ஆய்விருக்கையின் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்கென உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும். நாட்டிற்காக பெருந்தொண்டாற்றி பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களை கவுரவிக்கும் வகையிலும்,  வருங்கால சந்ததியினர் அவர்களின் தியாகங்களை அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள் மற்றும் மணி மண்டபங்களை அரசு உருவாக்கிப் பராமரித்து வருகிறது.

 

 

 

அந்த வகையில், வாள் வீச்சு, அம்பு எறிதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் என பல்வேறு போர்க் கலைகளை கற்றறிந்தவரும், பல மொழிகளில் புலமைப் பெற்றவரும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெயரை பெற்றவரும், சிவகங்கை சீமை மன்னர் பதவியை வகித்தவருமான வீர மங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன்.  இதன்படி,  80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் தருணத்தில், 8.4.2013 அன்று வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சு. குணசேகரன், வீர மங்கை வேலு நாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு விழா நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தார். இவரது கோரிக்கையை ஏற்று, சுதந்திர போராட்ட வீரர் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கை மாவட்டத்தில் நினைவுச் சின்னம் அமைக்கின்ற பணிகள் முடிக்கப் பெற்றவுடன், அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்திற்குள் உள்ள 3 ஏக்கர் பரப்பளவிலான இடம் பயன்பாட்டில்  இல்லாத நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், இங்கு வரக் கூடிய லட்சக்கணக்கான மக்களை மகிழ்வூட்டும் வகையிலும், அந்த இடத்தினை மேம்படுத்தி இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படும்.

மேற்காணும் நடவடிக்கைகள் தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் அறிஞர்களின் பெருமையையும் உலக அரங்கில் எடுத்துச் செல்ல வழி வகுப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=14863

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தமிழ் ஆர்வம் வந்தது பாராட்டுக்குரியது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தமிழ் ஆர்வம் வந்தது பாராட்டுக்குரியது.. :D

 

சீமானுக்கு நன்றிகள்

(ஏதோ  நம்மால் முடிந்தது :D  :D )

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செலவை 1 கோடியாகக் குறைத்துக் கொண்டு.. மிகுதி 99 கோடியையும் மதுரை வாழ் வறிய மக்களுக்கு தமிழ் தாய் தொழிற்பேட்டை அமைத்து வேலை வழங்க அல்லது தமிழ் தாய் குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தால்.. சிலையாக நிற்கும் தமிழ் தாய்.. தமிழர்களை வாழ வைத்தும் நிற்பாரில்ல..! செய்வார்களா..??!

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனையும், தமிழையும், வீரத்தையும் உலகறிய செய்தவர் எமது தேசியத்தலைவர். 
 
தமிழை தமிழ்நாட்டில் அழியாது பாதுகாக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றிகள். 
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் அங்குள்ள மக்களுக்கு ஒழுங்காக தமிழை பேச,எழுத கற்றுக் கொடுங்கள் பிறகு தமிழ் தாய்க்கு சிலை வைப்பதை பற்றி யோசிக்கலாம்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் தமிழ் ஆர்வம் வந்தது பாராட்டுக்குரியது.. :D

 

வந்த பின்னூட்டங்களில் சிறந்ததை தெரிவு செய்து எனது கருத்தை சொல்லுகிறேன்.. :icon_idea:

 

இந்த பந்தா வேலைகள் செய்யாத/இல்லாத இடமே இல்லை. யாரோ சொன்னமாதிரி 1 கோடியில் செய்தால் அடுத்த புயலில் நடுரோட்டிலதான் கிடக்கும்

ஒட்டவாக்கு போனவர்களுக்கு தெரியும் downtown இல ஒரு சிலந்தி இருக்கிறது..எதோ கண் பவுடரோ மட்டையோ போட்டு செயதவங்களாம் ..எந்தனையோ மில்லியன் டொலர்..

ஜெயலலிதா பொதுமக்கள் பள்ளிகளில் ஆங்கில கல்வித்திட்டத்தை கொண்டுவரப்போகிறார்.  இது தமிழ் நாட்டில் தனியார் பள்ளிகளில் கிடைக்கிறது. இதைப்பற்றிய விவாத கருத்துக்களை சரியாக தமிழ் நாட்டு நிலைமைகளை அறிந்துதான் சொல்லலாம். இது படித்தவர்களை வெளியே அனுப்புமா அல்லது தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பை கூட்டுமா? அப்படியாயின் அதற்கு்தனியார் துறை மாதிரியே கட்டணமும் அறவிட வேண்டும். இது அமெரிக்கா போன்ற நாடுகளைக் கவர செய்யும் முயற்சியா என்பது கூடத் தெரியாது.

 

எப்படி இருந்தாலும் கருணாநிதி இதை எதிர்த்திருந்தார். அதற்கு ஒரு சமநிலை திட்டமாக இந்த திட்டங்கள் வருவதாக இருக்கலாம்.

 

 

 

 

கருணாநிதியின் வள்ளுவர் கோட்டம் ,கன்னியாகுமரி வள்ளுவர் சிலை 
போல காலகாலமா நிலைத்து நிற்பதற்காக இருக்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.