Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது பத்திரிகைகளின் காழ்ப்புணர்வு. "பிரிவினைவாத தலைவர்" என்று போட்டால் மக்கள் சரி என்பதற்கு வாக்களிக்காமல் தவறு என்பதற்கு வாக்களிப்பார்கள் என தந்திரமாக நினைத்திருக்கிறார்கள்.

யோசித்துக்கொண்டிருந்தால் வாக்கெடுப்பில் தோற்க வேண்டியது தான். வாக்களித்தவர்கள் "பிரிவினைவாத தலைவர்" என்பதை தவிர்த்து விட்டு தான் வாக்களித்தார்கள்.

 

 

இல்லை  துளசி

இதன் மூலம் உண்மையை  நாம் மறுதலிக்கின்றோம்

பிரிவினைவாதத்தலைவரை அழைத்தது சரியா என்பதை உள் வாங்கியே பதிலளித்துள்ளனர்

எமக்கு வேண்டியவாறு உண்மையை  மாற்றவேண்டியதில்லை.

அப்படியாயின் இந்த கருத்துக்கணிப்பே தப்பாகிவிடும்.

மக்களின் கட்டளைகளுக்கு பணியவும் மதிப்பளிக்கவும்  வேண்டும்

இல்லாதுவிட்டால் அவர்கள் வேறுவழிகளை  நாடுவர்

இதுவே  இங்கும்.

காலம் பதில் சொல்லும்

 

Edited by விசுகு

  • Replies 101
  • Views 7.1k
  • Created
  • Last Reply

விசுகு அண்ணா, யாசீன் மாலிக் பிரிவினைவாத தலைவர் என்று வைத்துக்கொண்டாலும் அவர் வருகைக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

 

ஆனால் அவர் ஒரு விடுதலைப்போராளி என்பதே எனது கருத்து.

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, யாசீன் மாலிக் பிரிவினைவாத தலைவர் என்று வைத்துக்கொண்டாலும் அவர் வருகைக்கு நான் ஆதரவளிக்கிறேன்.

 

ஆனால் அவர் ஒரு விடுதலைப்போராளி என்பதே எனது கருத்து.

 

 

ஆகா

நல்ல  முன்னேற்றமம   துளசி :icon_idea:

 

(வாக்களித்த மக்களுக்கு தெரியும் துளசி

இந்த பத்திரிகைக்காறர்களின் சூத்திரம் எல்லாம் :icon_idea: )

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் செல்வாக்குப் பெற்று எம்மெல்லேக்களையும் எம்பிக்களையும் முதலில் கொண்டு வர வழியைப் பார்க்கவேண்டும். இல்லாவிட்டால் அரசியல் செய்து என்ன பிரயோசனம்?

சீமான் அண்ணா 2014 இல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடபோகிறார். :rolleyes: அதில் எடுபடாவிட்டால் 2021 இல் மீண்டும் போட்டியிடுவார் என நினைக்கிறேன். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்க ரெல்மீ கிளியர்லி...

 

இவர்தான் யாசீன்...
நடு இரவு 2 மணி சென்னை விமான நிலையம் புறப்படும் முன் தங்கும் விடுதி முன் காரில் அமருங்கள் விடுதியை காலி செய்துவிட்டு தோழர்கள் வருகிறார்கள் என்ற போதும். அங்கே விடுதி காவலருக்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு விரிச்சோடி கிடந்த ரோட்டை பார்த்தவாறு தன் கையில்வைத்திருந்த மடிக்கணினியில் படிக்க ஆரம்பித்தார் இந்த பிரிவினைவாதி....

துப்பாக்கி பிடித்த கையில் இன்று மடிக்கணினியில் எழுதுகிறார், படிக்கிறார். மக்களை திரட்டி போராடுகிறார். இவரைத்தான் பயங்கரவாதி என்கிறார்கள்....

ஈழதமிழர்களின் வலியை காஸ்மீர் எங்கும் கொண்டு செல்வேன்...
ஈழ மக்களுக்காக நாங்கள் துனை நிற்போம் என்று அறைகூவல் விடுத்த யாசீன் மாலிக் உங்கள் பார்வையில் பயங்கரவாதி என்றால்...
நாங்கள் ஆயிரம் முறை சொல்வோம் அவரை போராளி என்று....

 

946567_581993228501106_496426184_n.jpg

 

(facebook)

சென்னை விமான நிலையத்தில் அதிகாலையில் காஸ்மீரத்து போராளி யாசீன் மாலிக் தன் தாயகத்திற்கு திரும்புவதற்காக நின்றுகொண்டிருந்த வேளையில் காலையில் ஏதாவது சாப்பிடுகிறீர்களா..? என்று தோழர் செல்வம் கேட்கையில் அந்த உணவு விடுதியின் பெயர் பலகைகளில் இருந்த தமிழர் வகை உணவுகளை ஒவ்வொன்றாக படித்துபார்த்து இது என்ன இது என்ன என்று விசாரித்து விட்டு தோசை சாப்பிடலாம் என்றார்.

 

தமிழகத்திற்கு வந்து தங்களை போலவே இந்தியத்தின் சதியால் ஒடுக்கப்பட்ட இன்னொரு தேசிய இனத்திற்காக பேசியதற்கு தண்டனையாக பலவசசுவுகளை வாங்கப்போகிறோம் என்பதை அறியாமல் அந்த நாள் கடந்து கொண்டிருந்தது.

 

பின்பு விமானம் ஏற உள்ளே செல்லும் போது தனது அடையாள அட்டையை தேடினார். அட்டையை பின்பு கண்டுபிடித்தபின் விடை பெறும் முன் கேலியாக சொன்னார் நம்மை போன்ற போராட்டக்காரர்களுக்கு தனியான அடையாள அட்டை தேவை இல்லை, அன்றைய ஆங்கில நாளிதழில் தன் புகைப்படத்தோடு வந்திருந்த செய்தியை காட்டி இதை காட்டி விட்டு போனால் போகிறது என்று சொன்னவர் காஸ்மீரில் இதோ போல் நடந்த ஒரு சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

 

மிக இயல்பான உரையாடலும் நகைச்சுவையான பேச்சும் அவரின் கடந்த கால வலிகளையும் மீறி வெளிப்பட்டது. அவருடன் இருந்த இரண்டு நாட்கள் நிச்சயம் மனம் நிறைந்த நாட்கள்.... நினைவுகள் அழிவதில்லை.....

 

969506_581083041925458_1484913640_n.jpg

 

 

உமர்கயான்

 

(facebook)

181241_581646188535810_636022772_n.jpg

 

(facebook)

எளிமையான உரையாடலில் ஆரம்பித்தது யாசின் மாலிக் உடன் சந்திப்பு.

 

கடந்த 3ம் தேதி டெல்லியில் காஸ்மீர் சிறைகளில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை திரட்டி அமைதிவழியில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார். டெல்லி திகார் சிறையில் 84ம் ஆண்டு தூக்கிலிட்டு கொல்லப்பட்ட காஸ்மீரத்து மகபூப்பட் அவர்களின் சகோதிரி உட்பட அந்த ஆர்ப்பாட்டத்திர்கு வந்திருந்த பெண்களை கைது செய்தும், யாசின்மாலிக்கை கைது செய்தும் திருப்பி அனுப்பியது காஸ்மீருக்கு டெல்லி காவல்துறை. அப்போழுது நடந்த தள்ளு முள்ளில் தான் யாசின்மாலிக்கின் கழுத்தில் பிடிப்பு ஏதோ ஏற்ப்பட்டு கழுத்துப்பட்டை அணிந்திருக்கிறார்.

 

தமிழக சிறைகளில் நீண்டகாலமாக விடுதலை மறுக்கப்பட்ட இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் தொடர் பரப்புரை பற்றி ஏற்கனவே தோழர்கள் மூலம் கேள்விபட்ட யாசின் மாலிக் அது குறித்து ஆர்வமாக கேட்டறிந்தார்.

 

22 ஆண்டுகளாக தூக்கு கொட்டடியில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் குறித்தும் அவர்களுக்கு தூக்கை நிறுத்த தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பற்றியும் நல்ல ஒரு முன்னேடுப்பு என்று குறிப்பிட்ட யாசின் நான் வைத்திருந்த இந்த ஆடையை காட்டிய போது சிறை படத்தை பார்த்து நான் அணிந்துகொள்ளட்டுமா..? என்றார் இல்லை வேண்டாம் என்றதும் அதை ஆர்வமுடன் பார்த்தார்.

 

மிக எளிமையான ஒரு ஜனநாயக போராளிக்கு இந்த நாடு கொடுக்கும் பட்டம் பிரிவினை வாதி...

 

308392_582658048434624_1810045153_n.jpg

 

உமர்கயான்

(facebook)

Edited by துளசி

தினமணியை கண்டிக்க....

 

044-23457604

044-23457605
044-23457606 .

 

editordinamani@gmail.com
webdinamani@dinamani.com
sriram.s@dinamani.com

 

(முகநூல்)

Rajkumar Palaniswamy

 

1947 க்கு முன் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்திய துணை கண்டத்தில் பல சமஸ்தானங்கள், தேசங்கள் இருந்தன. இந்த தேசங்கள் அனைத்தும் விடுதலை பெற வேண்டும் என இந்திய துணை கண்டம் முழுவதும் போராட்டம் நடந்தது. இப்போராட்டங்களில் பங்குபெற்ற போராளிகளை எவரும் பிரிவினைவாதிகள் என கூறியது இல்லை.

ஆனால் தமிழீழம், காஷ்மீர், தமிழகம், பஞ்சாப், அசாம், மணிப்பூர், நாகாலாந்து போன்ற தேசிய இனங்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் மக்களை கூசாமல் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்துகிறது அரசு மற்றும் ஊடகங்கள்.

காஷ்மீர் விடுதலைக்கு போராடுபவர்கள் காஷ்மீர் தேசியவாதிகள், தமிழர் விடுதலைக்கு போராடுபவர்கள் தமிழ்த் தேசியவாதிகள். இப்படித் தான் ஊடகங்கள் இவர்களை அழைக்க வேண்டுமே தவிர பிரிவினைவாதிகள் என்று அழைப்பது தவறு. ஊடகம் செய்யும் இந்த விசமப் பிரச்சாரத்தை தயவு செய்து யாரும் பின்பற்ற வேண்டாம்.

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
யாசின் மாலிக்கின் காதல் திருமணம் பற்றி அவரின் மனைவி .....
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாசின் மாலிக் பற்றி விமர்சனம்: ராம கோபாலனுக்கு சீமான் கண்டனம்

 

சென்னை: ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி கட்சித் தலைவர் யாசின் மாலிக் பற்றி விமர்சனம் செய்த இந்து முன்னணி தலைவர் ராம கோபாலனுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசியதை இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கண்டனம் செய்துள்ளார்.

யாசின் மாலிக் காஷ்மீர் பயங்கரவாதி என்றும், பாரதத்திற்கு எதிராக செயல்படுபவர் என்றும், அவர் இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்றும் வர்ணித்துள்ள ராம.கோபாலன், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிக்கு தமிழ்நாட்டில் இடம்கொடுப்பதா என்றும் கேட்டுள்ளார்.

யாசின் மாலிக் தலைவராக இருக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இந்திய நாட்டின் குடிமகனான அவருக்கு இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச அரசமைப்பு சட்ட ரீதியாக அவருக்கு உரிமை உள்ளது என்பதை ராம கோபாலானுக்கு கூறிக்கொள்கிறோம்.
 

 

பாரத தேசத்தின் ஒற்றுமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள், காவிரியிலும், முல்லைப் பெரியாற்று அணையிலும் கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டின் உரிமையை மறுத்தபோது என்றைக்காவது அதனை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறீர்களா?

இன்றைய உலகில் தம் இனத்திற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் போராடும் தலைவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தும் ஒரு ஆட்சி, அதிகார மமதை சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால், பயங்கரவாதி யார்? விடுதலைப் போராளி யார் என்பதை நமக்கு பின் வரும் சந்ததிகள் முடிவு செய்வார்கள்" என்று சீமான் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=15245

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தக் காணொயை இணைத்த சயனிக்கு நன்றி! எல்லோரும் கட்டாயம் ஒருதரம் பாருங்கள்.

 

கேள்வியைக் கேட்கும் ஊடகவியலாளர் (கோஸ்வாமி) ஒட்டுமொத்த இந்தியாவின் "மனச்சாட்சியாக" ஒலிக்கிறார். :D சில சமயங்களில் இந்திய உளவுத்துறை அதிகாரிபோல் மிரட்டல் தொனியிலும் கேட்கிறார். :blink:

 

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் ஹஃபீஸ் சயீதை (மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்பட்டவர்) எப்படி மாலிக் சந்திக்கலாம்.. அதுவும் இந்தியக் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு .. என்று கேட்டிருந்தார்.. சரியான கேள்வி.. :D

 

ஆனால் மாலிக் பதிலில் கோட்டை விட்டுவிட்டார். தான் வேண்டுமென்றே சந்திக்கவில்லை.. அவராக வந்து உண்ணாநோன்பில் கலந்துகொண்டார் என்று சொல்லியிருக்கிறார்.

 

இதுக்குப் பதிலாக, இந்திய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் எப்படி பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசுகிறார்கள்.. பாகிஸ்தானல்லவா சயீதுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வருகிறது என்று கேட்டிருக்கலாம்.. :wub:

 

அதுபோல, இந்த விடயத்தினால் நீங்கள் இந்தியா திரும்பி வரும்போது உங்கள் இந்தியக் கடவுச்சீட்டைப் பறித்தால் என்ன செய்வீர்கள் என்று கோஸ்வாமி கேட்டபோது.. பறித்தால் பறித்துக்கொள்ளட்டும் என்று மாலிக் சொல்லியிருக்கிறார்.. இது சரியான பதில் அல்ல..

 

பறித்தால் நல்லதுதான்.. எனக்குத்தேவை இந்தியக் கடவுச்சீட்டு அல்ல.. காஷ்மீர் கடவுச்சீட்டு என்று சொல்லியிருந்தால் கிக் அதிகமாக இருந்திருக்கும்.. :lol:  

தமிழீழ விடிவிற்கான  போராட்டம் ஆயிதப்போராட்டமாக நடந்தபோது ...........கஸ்மீரில் போராடும் போராட்டக்குழுவோ ,இந்தியாவோ ,பாகிஸ்தானோ ஒரு மன்னாங்கட்டியளும் எம்மை திரும்பிப்பார்க்கல ............ஆனால் ,இந்தியாவோ, பாகிஸ்தானோ எமக்கு செய்ததை ,கஷ்மீரில் உள்ள போராட்டக்குழுக்கள் எமக்கு செய்யவில்லை ...................[எதை என்று உங்களுக்கு தெரியும் ]

 

Edited by தமிழ்சூரியன்

1979 களில் அசாம் மாநிலத்தில் மாணவர் போராட்டம் வெடித்தது .பின்பு அதன் தலைவர் மாநில முதலமைச்சராக வந்தார் பின்பு என்னாச்சு?

ஒரு காலத்தில் கே.பி யையும் இப்படித்தான் புகழ்ந்தோம்.அவரின்ட கப்பல் சுழிச்சுப்போட்டு ஆயுதத்தை கொண்டு வந்திடும் என்று....இப்ப அவர் எங்களை சுழிச்சுபோட்டார்.....அதேமாதிரி அம்மானை புகழ்ந்தோம் அம்மான் அடிச்சா அந்த மாதிரி அடியா இருக்கும் என்றோம் ...இப்ப அவர் அடிச்சார் நெத்தியடி எங்களுக்கு....

 

நாங்கள் ஒருவரும் சீமான் அண்ணாவின் கட்சியினர் அல்ல. சீமான் அண்ணா தடம் மாறினால் பின்னர் ஆதரவை கைவிடலாம். ஆனால் எதற்கு இப்பொழுதே மாறி விடுவார் என்ற சிந்தனை எமக்குள்? கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ மீண்டும் முதல்வராக வருவதை விட சீமான் அண்ணா வந்தால் என்ன தான் பிரச்சினை?

 

நிச்சயமாக கருணாநிதி போலோ அல்லது ஜெயலலிதா போலோ இல்லாமல் சீமான் அண்ணா குறுகிய காலத்தில் தமிழகத்தில் பல நன்மைகளை செய்துள்ளார் என்பது உண்மை.

Edited by துளசி

தமிழீழ விடிவிற்கான  போராட்டம் ஆயிதப்போராட்டமாக நடந்தபோது ...........கஸ்மீரில் போராடும் போராட்டக்குழுவோ ,இந்தியாவோ ,பாகிஸ்தானோ ஒரு மன்னாங்கட்டியளும் எம்மை திரும்பிப்பார்க்கல ............ஆனால் ,இந்தியாவோ, பாகிஸ்தானோ எமக்கு செய்ததை ,கஷ்மீரில் உள்ள போராட்டக்குழுக்கள் எமக்கு செய்யவில்லை ...................[எதை என்று உங்களுக்கு தெரியும் ]

 

தமிழக மக்களுக்கே எமது நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாத போது காஷ்மீர் போராட்ட குழு எம்மை திரும்பி பார்க்கவில்லை என்று அவர்களையும் இந்த பட்டியலில் இணைப்பது சரியல்ல. எமது செய்தி அவர்களிடம் எவ்வளவுக்கு போய் சேர்ந்ததோ தெரியாது. அவர்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காக நாமும் குரல்கொடுத்திருக்கவில்லை.

இன்று எமக்குள் ஒரு ஒற்றுமை உருவானால் வரவேற்பது நல்லது.

 

ஈழ ஆதரவு கருத்தை யாசீன் மாலிக் இப்பொழுது தெரிவித்ததே பெரிய விடையம். இதுவே பல செய்திகளில் இடம்பிடித்திருக்கும்.

 

ஒவ்வொரு கட்சியும் பயத்தில் ஆளாளுக்கு எதிர்அறிக்கை விடுவதே இந்த செய்தி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. :D

தமிழக மக்களுக்கே எமது நாட்டில் என்ன நடந்தது என்று தெரியாத போது காஷ்மீர் போராட்ட குழு எம்மை திரும்பி பார்க்கவில்லை என்று அவர்களையும் இந்த பட்டியலில் இணைப்பது சரியல்ல. எமது செய்தி அவர்களிடம் எவ்வளவுக்கு போய் சேர்ந்ததோ தெரியாது. அவர்கள் கொல்லப்படும் போது அவர்களுக்காக நாமும் குரல்கொடுத்திருக்கவில்லை.

இன்று எமக்குள் ஒரு ஒற்றுமை உருவானால் வரவேற்பது நல்லது.

 

ஈழ ஆதரவு கருத்தை யாசீன் மாலிக் இப்பொழுது தெரிவித்ததே பெரிய விடையம். இதுவே பல செய்திகளில் இடம்பிடித்திருக்கும்.

 

ஒவ்வொரு கட்சியும் பயத்தில் ஆளாளுக்கு எதிர்அறிக்கை விடுவதே இந்த செய்தி எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. :D

தங்கை கஷ்மீர் போராட்டக்குழு எமக்கு துரோகம் செய்யவில்லை என்பதை மட்டும் தெளிவாய் சொல்வதற்கே அப்படிக்கருத்திட்டேன் ..............அவர்கள் போராட்டத்தை மனிதம் மதிக்கும் எமது போராட்டத்தைப்போல ...................மனிதமும் ,மனிதநேயமும் பற்றி பரந்துபார்க்கும் உங்களுக்காக இதை எழுதவில்லை .................யாருக்காகவோ. :) 

சத்யம் டிவியில் சீமான் அண்ணா சூடான பேட்டி :)

 

http://www.youtube.com/watch?v=vog96KJQPCI&feature=youtu.be

 

(facebook)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் மக்கள் மயபடுத்த படவில்லை என்றார்கள்.

 
நாம் போராடியது எமை தான்ன்டி யாருக்கு தெரியும் என்றார்கள்.
 
புலிகள்   புலிகள் புலிகள் என்று தாம் செய்யவேண்டியது எல்லாவற்றையும் புலிகளே செய்திருக்க வேண்டும் என்றார்கள். தமிழ் மக்களுக்கு புலிகள் உணவு ஊட்டிவிடவில்லை என்ற குறைபாட்டை இன்னும் யாரும் எழுதவில்லை என்ற ஏமாற்றம் எமக்கு.
 
இப்போது சீமான் அதை கொஞ்சம் செய்கிறார்.......... எமது போராட்டத்தை தமிழகத்தில் நிறுவினார்............. மற்றைய மாநிலங்களுக்கு நகருகிறார்.
 
இப்போது யாசின் மாலிக்கை முதன் முறையாக பல தமிழர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
அவர் ஒரு விடுதலை போராளியாக இந்தியாவில் விடுதலை கிடைத்து எங்கும் திரிகிறார்.
அவரை அரசு பயங்கரவாதி இல்லை என்கிறது .............அதை ஏற்கே இவர்களுக்கு கஷ்டமாக இருக்கிறது.
 
இப்போது ஈழத்தின் எதிரி சிங்களவன் என்பது இரண்டாம் நிலை என்பதைத்தான் நான் நம்புகிறேன்.

 

மே 18 லண்டனில் நடைபெற்ற இன அழிப்பு நினைவு நாளில் சீக்கியர்களும் பங்குபற்றினார்கள். அவர்கள் அன்று முகநூலில் share பண்ணிய status  இது. :)
 

WE ARE WITH YOU....

The Tamil community are holding an Anti Genocide Rally in Hyde Park today...Sikhs are joining them...

Enough respect!!

The Tamil's stood with us for Prof. Davinderpal Singh Bhullar, lets now STAND with them!!

Waheguru, Waheguru, Waheguru, Waheguru, Waheguru!!

Must Share ...tamils are really a good people.

 

264548_451645318254224_2030126751_n.jpg

 

 

(facebook)

அசீம் திரிவேதி : வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு (கருத்துப்) போராளி.

தமிழீழ பிரச்சனை குறித்து தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டாலும், இது குறித்து வடநாட்டவர்களுக்கு இன்னும் விழுப்புணர்வு ஏற்படவில்லை என்பது தான் உண்மை. மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்த போது தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தந்த ஒரே வடநாட்டு அரசியல்வாதி திரு.சோம் பிரகாஷ் சிங் தான். இவர் பீகாரில் இருந்து தமிழகத்திற்கு வந்து மாணவர்களுக்கு தனது ஆதரவை நல்கினார். இவர் கூறியது நமக்கு பெரும் வியப்பை தந்தது. இவருக்கே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் ஈழப் பிரச்சனை பற்றி தெரியும் என்றார். தெரிந்தவுடன் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராஜபக்சே இந்தியா வந்த போது அவனுக்கு கறுப்புக் கொடு காட்டி கைதும் ஆனார். இவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தது தமிழகத்தில் வசிக்கும் சீனிவாஸ் திவாரி என்ற நண்பர் தான்.

இதன் தொடர்ச்சியாக சீனிவாஸ் திவாரி பல முறை வடநாடு சென்று அங்கிருக்கும் மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் வாதிகளை சந்தித்து ஈழப் பிரச்சனைக்காக ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் இப்போது டெல்லியில் வசிக்கும் கருத்துப் போராளி ஓவியர் அசீம் திரிவேதியிடம் ஈழப் பிரச்சனை பற்றி எடுத்துக் கூறியுள்ளார். அசீம் இப்போது தான் ஈழப் பிரச்சனை குறித்த உண்மையை அறிந்துள்ளார் . தமிழர்களுக்கு இனி தன்னால் இயன்ற ஆதரவை தருவதாக உறுதி அளித்துள்ளார். இவரது ஓவியம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது .

ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே அசீம் அவர்களின் லட்சியமாகும். அதற்காக இந்திய பாராளுமன்றத்தை கேலி செய்யும் விதமாகவும் , அரிசியல்வாதிகள் இந்திய அன்னையை துகில் உரிவது போலவும் ஓவியம் வரைந்து இந்திய அரசின் கோபத்திற்கு ஆளானார். இதனால் காங்கிரஸ் அரசு அசீமின் மேல் தேசத் துரோக வழக்கு தொடுத்தது. இந்தியாவில் அஜ்மல் கசாப், அணுஉலைப் போராளி உதயகுமார் அடுத்து இவரின் மேல் தான் இத்தகைய கடும் வழக்கை போட்டது இந்திய அரசு. எனினும் அசீம் திரிவேதிக்கு இந்தியா முழுவதும் இருந்து பெரும் ஆதரவு திரண்டதால், அவர் வழக்கில் இருந்து தப்பினார். அசீம் திரிவேதியின் இத்தகைய துணிச்சலான சிந்தனையால் கவரப்பட்டு இளைஞர்கள் பெரும் அளவில் அவரது விசிறிகளாக உள்ளனர். அதனால் ஈழத் தமிழர்களின் பிரச்சனை இவரின் மூலமாக எளிதாக இந்திய இளைஞர்களை சென்றடையும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய கருத்துப் போராளி இப்போது தமிழ் ஈழத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருப்பது நமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது . இவருக்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பலாமே ! 09336505530

படத்தில் : அசீம் திரிவேதி , சீனிவாஸ் திவாரி

 

419232_637788156236038_691026874_n.jpg

 

Rajkumar Palaniswamy

 

(facebook)

 

பி.கு: அசீம் திரிவேதியின் முகநூல் பக்கம் https://www.facebook.com/cartoonistaseem?fref=ts

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலருக்கு யாசின் மாலிக்கை முஸ்லீம் என்பதால் பிடிக்கவில்லை என்பதுதான் எனது எண்ணம்.

 

முதலில் காஷ்மீர் இந்தியாவுடைய ஒரு பகுதி எனும் விதண்டாவாதத்தை நிறுத்தித் தொலையுங்கள். இங்கே இன்னுமொரு திரியில் நாரதர் அவர்கள் மிக அருமையாக காஷ்மீரத்துச் சரித்திரத்தை மிகவும் தெளிவாக ஆண்டடிப்படையில் விளங்கப்படுத்தியிருக்கிறார்.அதை ஒருமுறை படித்துப் பாருங்கள்.

 

காஷ்மீர் எனும் மன்னராட்சி கொண்ட நாடு ஒருபோதுமே இந்தியாவினதோ அல்லது பாக்கிஸ்த்தானினதோ பகுதியாக இருந்தது கிடையாது. முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அந்த நாட்டிற்கு இந்து மன்னர் ஒருவர் தலைவராக இருந்தார். எங்கே தனது சிறுபான்மை அரசை முஸ்லீம்கள் பாக்கிஸ்த்தானோடு சேர்ந்து கலைத்துவிடுவார்களோ என்று பயந்து அந்நாள் இந்தியப் பிரதமர் நேருவுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டார். இதையடுத்து ஆசஸாத் காஷ்மீரை பாக்கிஸ்த்தானும், ஜம்முக் காஷ்மீரை இந்தியாவும் அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டன. இந்துக்களைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று இந்திய ராணுவம் அங்கே நுழைந்து முஸ்லீம்களைக் கொன்று வருகிறது. இந்தியாவை எதிர்க்கக் கிடைத்த சந்தர்ப்பமாக இதைப் பாவித்துப் பாக்கிஸ்த்தான் அங்கே போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சியும், உதவியும் செய்துவருகிறது (இந்தியா எமக்கு 1980 களில் செய்ததுபோல).

 

இடையில் அகப்பட்டுச் சாகும் மக்களோ அப்பாவி முஸ்லிம்கள்.

 

இங்கே பிரச்சினை என்ன?? காஷ்மீரத்து மக்களின் போராட்டம் சரியா தவறா என்பதா அல்லது யாசின் மாலிக்கை சீமான் அழைத்தது தவறா சரியா என்பதா??? என்னைப் பொறுத்தவரை இது இரண்டுமே தவறாகத் தெரியவில்லை.

 

முதலில் காஷ்மீரத்து மக்களின் போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அம்மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காட்டிலும் அதிகமான கொடுமையை அனுபவித்துவரும் எமக்கே அந்த மக்களின் போராட்டத்தின் நியாயம் புரியவில்லை என்றால், வேறு யார்தான் புரிந்து கொள்வார்கள்???

 

இண்டாவது, யாசீன் மாலிக்கை சீமான் அழைத்தது என்பது. முதலில் யாசீன் மாலிக் பாக்கிஸ்த்தானின் கைப்பொம்மை என்று உங்களுக்குச் சொன்னது யார்?? முஸ்லீமாக இருந்தால் உடனேயே அவர் பாக்கிஸ்த்தானின் முகவர், இந்தியாவைப் பிரிக்க முனைகிறார் என்று எல்லோரும் போர்க்கொடி தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டீர்கள். ஜெ. கே. எல். எப் எனப்படும் ஜம்முக் காஷ்மீர் விடுதலை முண்ணனியின் ஸ்தாபகர்களில் ஒருவரான யாசின் மாலிக், ஒரு போதுமே தனது சுதந்திரக் காஷ்மீர் பாக்கிஸ்த்தானுடன் சேரவேண்டும் என்று கேட்டது கிடையாது. இன்று இந்தியாவின் ஆக்கிரமிற்கெதிராகப் போராடும் நாங்கள், ஒருகாலத்தில் பாக்கிஸ்த்தானுக்கெதிராகவும் பொராட வேண்டிவரும், ஆகவே சுதந்திரக் காஷ்மீர்தான் வேண்டும், பாக்கிஸ்த்தானின் இன்னொரு மாநிலமல்ல என்று அவர் பலதடவை பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

 அவர் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒரு விடயம் என்னவென்றால், இந்தியாவுமில்லாத, பாக்கிஸ்த்தானுமில்லாத சுதந்திரக் காஷ்மீர் என்பதே. இதில் அவர் எப்போது தன்னைப் பாக்கிஸ்த்தானுடன் சேர்த்துக்கொண்டார் என்று யாராவது சொல்லமுடியுமா?? அல்லது அவர் பாக்கிஸ்த்தானின் ஏஜெண்ட் என்றால் இந்தியா அவரை எப்படி இதுவரை சுதந்திரமாக உலாவ விட்டிருக்கிறது என்கிற கேள்வியை நீங்கள் உங்களையே ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

 

இந்தியாவில் பிரிவினை வாதத்தை அவர் ஆதரிக்கிரார் என்று சொல்கிறீர்களே, அப்படியானால் நாங்கள் தமிழீழம் கேட்பது எந்த விதத்தில் நியாயம். அதுவும் பிரிவினைவாதம் தானே?? காஷ்மீரத்து மக்கள் கேட்டால் அது பிரிவினைவாதம் , ஆனால் நாம் கேட்டால் மட்டும் அது நியாயமான தனிநாட்டுக் கோரிக்கையா??? ஒருவன் தனக்குச் சொந்தமான நாட்டில் தான் சுதந்திரமாக வாழ அனுமதி கேட்டால் அது பிரிவினைவாதம் என்றால் நீங்கள் இன்று ஈழத்தில் கேட்பதும் பிரிவினைவாதமே !!!!

 

முஸ்லீம்கள் என்றாலே அவர்கள், பாக்கிஸ்த்தானுடன் தான் நிற்பார்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டி ஒரு இனத்தின் நியாயமான சுதந்திரப் போராட்டத்தைப் பிரிவினைவாதம், மதத் தீவிரவாதம் என்று கொச்சைப்படுத்தும் நீங்கள், பாக்கிஸ்த்தானுக்குள்ளேயே சுதந்திர தனிநாடு கேட்டுப் போராடும் பாலுச்சிஸ்த்தான் முஸ்லீம்களின் வாழ்க்கைய அறிந்ததுண்டா?? அவர்களும் முஸ்லீம்கள்தானே?? ஏன் அவர்களை பாக்கிஸ்த்தானை எதிர்க்கிறார்கள் என்று யாராவது எண்ணிப் பார்த்ததுண்டா??

 

சீனாக்காரன் வருகிறான், பாக்கிஸ்த்தான் காரன் வருகிறான் என்று போலித்தேசியக் கூப்பாடு போட்டு தமிழர்களையும் இன்னும் பல இனத்தவர்களையும் பலவந்தமாக தன்னுடன் சேர்த்துவைத்திருக்கும் இந்துத்துவ இந்தியா சொல்லும் கட்டுக்கதைகளை விட்டு வெளியே வாருங்கள்.

 

இறுதியாக, இந்தியாவில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் ஒருவரை அழைத்து இந்தியாவின் பகைமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று சொல்பவர்களிடம் ஒரு கேள்வி. இன்றுவரை இந்தியாவைப் பகைத்துகொள்ளக் கூடாது என்று நீங்கள் இருந்ததன் மூலம் என்னத்தைச் சாதித்து விட்டீர்கள். முள்ளிவாய்க்காலில் பலியெடுக்கப்பட்ட ஒரு சின்னஞ் சிறு உயிரையாவது உங்களின் இந்திய விசுவாசத்தால் காப்பாற்ற முடிந்ததா?? அல்லது இதைவிட இந்தியா என்னதான் செய்துவிடும் என்று பயப்படுகிறீர்கள்? முள்ளிவாய்க்கால் நரவேட்டையை விடவும் பயங்கரமான பலிப்பீடத்தை இந்தியப் பிசாசுகள் அரங்கேற்றும் என்று பயப்படுகிறீர்கள்??? இப்படி அவர்கள் செய்துவிடுவார்கள் என்று பயந்து பயந்தே இருந்த எல்லாவற்றையும்இழந்துவிட்டோமே, இன்னும் என்னவிருக்கிறது உங்களிடம் இழப்பதற்கு ???

 

இறுதியாக, ஈழப் போராட்டம் வெற்றியடைந்தால் காஷ்மீரத்து மக்களின் போராட்டமும் வெற்றியடைந்துவிடும் என்று இந்தியப் பேய்கள் நினைக்கின்றன. அதற்காகத்தன்னும் எமது போராட்டம் எந்தவிதத்திலும் வென்றுவிடக் கூடாது என்று அவை சபதம் பூண்டிருக்கின்றன, அதை நோக்கி வேலை செய்கின்றன. நீங்கள் இந்தியப் பேய்கள் கோபம் கொண்டுவிடும் என்று பயந்து அடக்கி வாசிப்பது அப்பேய்கள் செய்யும் உங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கெதிரான வேலைப்பட்டை நீங்களே ஆதரிப்பதாக இருக்குமேயன்றி வேறொன்றில்லை.  நீங்கள் அந்தப் பேய்களுக்கு வணக்கம் செலுத்தினாலென்ன, வழிபாடு செய்தாலென்ன, அவை உங்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்வு மாறப்போவதில்லை. 

 

ஆகவே எங்கள் போராட்டத்தினை ஒத்த காஷ்மீரத்து மக்களின் போராட்டத்தையும் நாம் ஆதரிப்போம். அடக்கப்பட்ட இரு மக்கள் கூட்டங்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.இந்திய மாயையை விட்டு வெளியே வருவோம் !!!!!



நான் தவறு என்று வாக்களித்துள்ளேன்.

நண்பா, நீயுமா??

  • கருத்துக்கள உறவுகள்

நான் காஸ்மீர் மக்களது போராட்டத்தை ஆதரிக்கிறேன்.ஆனால் யாசீன் மாலிக்கை இந்த நேரத்தில் கூப்பிட்டது பிழை என்பது தான் என் கருத்து.அவர் முஸ்லீம் என்பதால் அல்ல.எங்களையே உலகம் தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள் என்ட கண்ணோடத்தில் தான் பார்க்குது.அதே நேரத்தில் அவர்களையும் அப்படித் தான் பார்க்குது.இப்படி இருக்கும் போது முதலில் உலகிற்கு எமது போராட்டத்தைப் பற்றி புரிய வைக்கிறதை விட்டு,விட்டு எதற்கு இப்ப தேவையில்லாத வேலை எல்லாம்.எமக்கு ஒரு நாடு கிடைத்த பின்னர் கட்டாயமாக காஸ்மீர் மக்களுக்கு உதவ வேண்டும்   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.