Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவுஸ்திரேலியாவில் புலிகளை தடை செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது

Featured Replies

LTTEFlag2.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம், வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=18233

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் பிள்ளையை அடித்ததால் வேல்சில் போராட்டம் நடாத்தப்பட்டதை பரதேசிகள் என விழிக்கும் பம்மாத்துகள்  4 வருடங்களாக இல்லாத புலிகளை பயங்கரவாதிகள் ஆக்குவது பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் ? 
 
  • கருத்துக்கள உறவுகள்

என் என்டால் ஆதர‌வாளர்களின் செயற்பாடு அந்த மாதிரி இருக்குது இல்லாட்டில் இப்ப போய் தடை செய்வானோ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

என் என்டால் ஆதர‌வாளர்களின் செயற்பாடு அந்த மாதிரி இருக்குது இல்லாட்டில் இப்ப போய் தடை செய்வானோ ^_^

இல்லை, ரதி!

அவுஸ்திரேலியாவை, அகதிபடகுப் பிரச்சனையை வைத்து, இந்தோனேசியாவும், இலங்கையும், பிளாக் மெயில் பண்ணுகின்றன!

வேறு வழியின்றி,அவுஸ்திரேலியா தலையாட்ட வேண்டிய நிலைமையில் உள்ளது!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என் என்டால் ஆதர‌வாளர்களின் செயற்பாடு அந்த மாதிரி இருக்குது இல்லாட்டில் இப்ப போய் தடை செய்வானோ ^_^

புலிகளைத்தடை செய்யாத நாடு அவுஸ்திரெலியா. இதனால் 2006, 2008, 2009, தற்பொழுது ஒவ்வொருமுறையும் சிங்கள அரசு, அவுஸ்திரெலியாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் போது கேட்பது வழக்கம். இதைவிட்டு நீங்கள் செய்திக்கு காது, கை போட்டு எழுதவேண்டாம். புலி எதிர்ப்பு ஊடகங்கள் உடனே இப்படி நடந்திருக்கலாம் என்று தலைப்புச் செய்திகளை போட்டுவிடப்போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, ரதி!

அவுஸ்திரேலியாவை, அகதிபடகுப் பிரச்சனையை வைத்து, இந்தோனேசியாவும், இலங்கையும், பிளாக் மெயில் பண்ணுகின்றன!

வேறு வழியின்றி,அவுஸ்திரேலியா தலையாட்ட வேண்டிய நிலைமையில் உள்ளது!

இதுதான் உண்மை. அவுஸ்த்திரேலிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை படகு அகதிகள் பிரச்சினை என்பது மிகவும் பாரதூரமானது. இந்த பிரச்சினையை வைத்து ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் செய்யும் அரசியல் மிகப்பெரியது. ஒருவரை ஒருவர் குழிபறிப்பதற்கும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் ஒரு மிக முக்கிய பிரச்சினையாகவும் இந்த படகு அகதிகள் பிரச்சினையை அவை நோக்குகின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் கோடிக்கணக்கான பணம் இந்த படகு மக்களைக் கைய்யாளும் விவகாரங்களுக்குக்ப் பாவிக்கப்பட்டிருக்கிறது. தமது வரிப்பணம் இவ்வாறு சட்டவிரோத படகு அகதிகளுக்காக விரயமாக்கப்படுவதைக் கண்டு சாதாரண அவுஸ்திரேலியர்கள் கொதிப்படைந்துள்ளனர். இது பதவியில் இருக்கும் அரசாங்கத்துக்கு வருகிற தேர்தலில் மிகவும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சியின் அரசியலும் இந்த அகதி பிரச்சினையை வைத்தே முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே தற்காலிகமாகவேனும் இந்த அகதிப் பிரச்சினையில் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸி அரசு இருக்கிறது. ஆகவேதன் அது சிறிலங்காவுடன் சேர்ந்து செயற்பட விரும்புகிறது. இது சிறிலங்காவுக்கு காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம், நாங்கள் அகதிகளின் படகுகளை நிறுத்துகிறோம், பதிலுக்கு ஆஸியில் இயங்கும் தமிழ்த்தேசிய அமைப்புகளைத் தடை செய்யுங்கள் என்று கேட்கிறது. 

ரதி நினைப்பதுபோல இங்கொன்றும் புலிகள் இயங்கவுமில்லை, அவர்களின் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்யவுமில்லை. இங்கு நடப்பதெல்லாம் ஆஸி சட்டங்களுக்கு அமைவான சனநாயக முறையிலான அரசியல் முன்னெடுப்புகள்தான். 

இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது அண்மையில் இங்கு நடைபெற்ற சிறிலங்காவின் கொலைகளங்கள் பற்றிய விவரணம் மற்றும் இவை போன்ற அரசியல் ஒன்று கூடல்களைத் தடுக்கச் சொல்லித்தான். ஏனென்றால் அரச பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் புலிகளாவது சிங்களவனுக்கு சகஜம். 

ரதிக்கு இது தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியர்களின் கொதிப்பு அடங்க தான் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கிறதே அவுஸ்திரேலிய அரசு.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியர்களின் கொதிப்பு அடங்க தான் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கிறதே அவுஸ்திரேலிய அரசு.

உண்மையில் இப்பொழுது படகுகளில் வருபவர்கள் யாழ்மாவட்டத்தையோ அல்லது வன்னியினைச் சேர்ந்தவர்கள் அல்ல. நீர்கொழும்பு, உடப்பு(புத்தளம்) வாழ் தமிழர்களும் சிங்களவர்களும் தான். உண்மையான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கிறது. அத்துடன் இலங்கையில் இருந்து வருபவர்களைவிட அதிகளவு அகதிகள் அப்கனிஸ்தான், ஈரான் நாட்டினைச் சேர்ந்தவர்கள். இவர்களால் அவுஸ்திரெலியாவுக்கு பிற்காலத்தில் பயங்கரவாத நிகழ்வுகள் நடக்கலாம் என்ற பயமும் அவுஸ்திரெலியர்களுக்கு இருக்கிறது. அகதிகளுக்காக படகில் வருபவர்களுக்காக அவுஸ்திரெலியாப்பணம் பலவழிகளில் செலவிடப்படுகிறது. பல தமிழர்கள் தமிழ் அகதிகளுக்கு ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்புக்காக வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு தங்குமிடவசதி, விமானப் போக்குவரத்து செலவு தவிர சம்பளமாக 10000க்கு மேற்பட்ட அவுஸ்திரெலியப்பணம் மாதம் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இதனால் பல தமிழர்கள் செய்கிற வேலையினை விட்டு அகதிகளுக்கான மொழி பெயர்ப்பு வேலையினைத் தேடுகிறார்கள். இதைவிட தமிழ் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், தமிழ் புலனாய்வாளார்கள் என்போருக்கு அவுஸ்திரெலியா அரசு பணம் செலவிடுகிறது. இதேபோல அப்கானிஸ்தான், ஈரான் மொழி பேசுபவர்களுக்கும் பல மடங்கு உதவிகளை அவுஸ்திரெலியா அரசு வழங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியர்களின் கொதிப்பு அடங்க தான் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பிக் கொண்டு இருக்கிறதே அவுஸ்திரேலிய அரசு.

கந்தப்பு சொல்வது சரி அண்ணா. இதே பொருள்பட நேற்று இந்த கருத்தை எழுதி இருந்தேன். இப்போது அகதிகள் பிரச்சனையை Boarder Security விடயமாகப் பார்க்கிறார்கள். குறிப்பாக ADF (Australian Defence Force) இன் பங்களிப்பை பெற்று பிரயோகிப்பதை பொலிசி மட்டத்தில் ஆராய்கிறார்கள்.  இதே மாதிரியான நடவடிக்கையை ஜோன் ஹவாட்டின் அரசாங்கமும் பல வருடங்களுக்கு முன்னர் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது தான் பல ஆப்கானிகள் தங்களது பிள்ளைகளை கடலில் எறிவதன் மூலமும், படகை உடைப்பதன் மூலமும் அவுஸ் கடற்படைக் கப்பல்களில் ஏற முனைந்தார்கள்.

"இந்தக் கிழமை கெவின் இந்தோனேசியா அவிஸ்திரேலியா தலைவர்கள் கூட்டத்தில் கதைக்கப் போகும் முக்கிய நோக்கமே அகதிகள் தன். இலங்கை அகதிகளை விட அவுசுக்குப் பிரச்சனையாக இருப்பது ஆப்கானி, இராக்கி, ஈரானி, சிரிய அகதிகள் தான். இவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இலங்கை அகதிகள் எண்ணிக்கை குறைவு. குறிப்பாக இப்படி வரும் அரபு அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் என ASIO எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது. படகில் வரும் ஒவ்வொருவரும் ASIO வின் கழுகுக் கண்களினால் அவதானிக்கப் படுவதும் இதன் காரணமாகவே. ஏற்கனவே சில இலங்கை அகதிகள் ASIO வினால் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம். சில விடயங்களை பொது வெளிகளில் கதைக்க முடியாது என்பதால் பலவற்றைக் கூற முடியவில்லை."

உண்மையில் இப்பொழுது படகுகளில் வருபவர்கள் யாழ்மாவட்டத்தையோ அல்லது வன்னியினைச் சேர்ந்தவர்கள் அல்ல. நீர்கொழும்பு, உடப்பு(புத்தளம்) வாழ் தமிழர்களும் சிங்களவர்களும் தான். உண்மையான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கிறது. அத்துடன் இலங்கையில் இருந்து வருபவர்களைவிட அதிகளவு அகதிகள் அப்கனிஸ்தான், ஈரான் நாட்டினைச் சேர்ந்தவர்கள். இவர்களால் அவுஸ்திரெலியாவுக்கு பிற்காலத்தில் பயங்கரவாத நிகழ்வுகள் நடக்கலாம் என்ற பயமும் அவுஸ்திரெலியர்களுக்கு இருக்கிறது. அகதிகளுக்காக படகில் வருபவர்களுக்காக அவுஸ்திரெலியாப்பணம் பலவழிகளில் செலவிடப்படுகிறது. பல தமிழர்கள் தமிழ் அகதிகளுக்கு ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்புக்காக வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு தங்குமிடவசதி, விமானப் போக்குவரத்து செலவு தவிர சம்பளமாக 10000க்கு மேற்பட்ட அவுஸ்திரெலியப்பணம் மாதம் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இதனால் பல தமிழர்கள் செய்கிற வேலையினை விட்டு அகதிகளுக்கான மொழி பெயர்ப்பு வேலையினைத் தேடுகிறார்கள். இதைவிட தமிழ் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், தமிழ் புலனாய்வாளார்கள் என்போருக்கு அவுஸ்திரெலியா அரசு பணம் செலவிடுகிறது. இதேபோல அப்கானிஸ்தான், ஈரான் மொழி பேசுபவர்களுக்கும் பல மடங்கு உதவிகளை அவுஸ்திரெலியா அரசு வழங்குகிறது.

உண்மையான அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குகிறது என்று கூற முடியாது அண்ணா. எல்லோரும் தாங்கள் அகதிகள் என்ற தொனியிலேயே தங்கள் case officer உடன் உரையாடுகிறார்கள். சிங்கள இராணுவத்தின் சித்திரவதை, கடத்தல் போன்ற கதைகள் இப்போது எடுபடுவது இல்லை.  DIAC இனது சில media releases இணைத்திருக்கிறேன். அதனைப் பார்த்தல் புரியும்.  சில தரவுகளைப் பார்க்கும் போதும் வருபவர்களில் அநேகர் திரும்ப அனுப்பப் படுகிறார்கள் எனப் புரியும். எல்லா விடயங்களையும் அரசாங்கங்கள் வெளியிலே சொல்வது இல்லை. அதற்கு அவுசும் விதி விலக்கு அல்ல. FOI (Freedom  Of Information) சட்டம் மூலம் அனைத்து தகவல்களையும் பெற முடியாது.

http://www.immi.gov.au/managing-australias-borders/detention/facilities/statistics/

இது நடந்து பத்து நாட்கள் தான்

Transfers of Sri Lankan, Lebanese and Vietnamese continue to Nauru 22-06-2013 -

Transfers of Sri Lankan, Lebanese and Vietnamese nationals to Nauru continue as 30 irregular maritime arrivals were successfully transferred to the Nauru Regional Processing Centre today.

The group of single adult males departed Christmas Island late yesterday on a charter aircraft, escorted by the Australian Federal Police (AFP), DIAC staff, interpreters and medical staff.

The group arrived in Nauru about 12.30pm local time.

On arrival in Nauru, the group of Vietnamese, Sri Lankan and Lebanese nationals – the 20th transfer to Nauru – were subject to relevant immigration, customs and quarantine clearance processes.

They will now be settled into their accommodation at the regional processing centre and go through induction processes.

The completion of this transfer reaffirms the strong message of deterrence for anyone considering risking their lives on dangerous people smuggling boats.

“The Australian Government is committed to deterring people from taking dangerous journeys by boat and stopping those people smugglers who profit from this trade,” a Department of Immigration and Citizenship spokesman said.

“There will be no advantage for boat arrivals.”

Selection of this group was based on operational considerations and an assessment of their particular circumstances to confirm transfer was appropriate.

Transfers will continue to occur both to Manus Island in Papua New Guinea and Nauru as part of the policy of regional processing of irregular maritime arrivals. 

The spokesman said the Australian Government continued to implement the recommendations of the report of the Expert Panel on Asylum Seekers, whose central principle provides that people choosing to travel to Australia by boat should receive no advantage.

“The Australian Government is committed to deterring people from taking dangerous journeys by boat and stopping those people smugglers who profit from this despicable trade,” the spokesman said.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.