Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெய்ல் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

Featured Replies

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை தொடக்க வீரர்களாக தரங்காவும், ஜெயவர்த்தனேவும் களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன் (13.1 ஓவர்) சேர்த்தனர். தரங்கா 25 ரன்னில் அவுட் ஆனார். ஜெயவர்த்தனே 52 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு மேத்யூஸ் (55 ரன்) தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. சண்டிமால் 21 ரன், சங்ககரா 17 ரன்னில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

முடிவில் இலங்கை அணி 48.3 ஓவரில் 208 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் சுனில் நரீன் 4 விக்கெட்டும், ரவி ராம்பால் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

209 ரன் இலக்குடன் வெஸ்ட்இண்டீஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல், சார்லஸ் களம் இறங்கினர். கெய்ல் அதிரடியாக ஆட அவருக்கு சார்லஸ் பக்கபலமாக இருந்தார். கெய்ல் பந்தை வீணாக்காமல் ரன்களை எடுத்ததால் வெஸ்ட்இண்டீஸ் ஸ்கோர் சீராக சென்றது. சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஸ்கோர் 115 ரன் இருந்தபோது சார்லஸ் அவுட் ஆனார். அவர் 58 பந்தில் 29 ரன் எடுத்தார்.

அதன்பிறகு டேரன் பிராவோ ஜோடி சேர்ந்தார். கெய்ல் தொடர்ந்து அதிரடி ஆடி 89 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரது 21-வது ஒருநாள் சதமாகும். அவர் 109 ரன் (100 பந்து) எடுத்திருந்தபோது அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். அவரது அதிரடி சதத்தால் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றியை நோக்கி எளிதாக முன்னேறியது.

டேரன் பிராவோ (21 ரன்), பொல்லார்ட் ( ரன் எதுவும் இல்லை) அவுட் ஆனாலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 37.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.

நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.http://dinaithal.com/sport/16589-west-indies-won-by-gayle-century-in-action.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கெய்ல்  89 பந்தில் சதத்தை பூர்த்தி செய்தார் இதில் 9 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தோற்றான் என்பதில் மகிழ்ச்சி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை எந்த வடிவில் தோற்றாலும் சந்தோசப் படுபவன்  நான்.....

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், அல்வாயன்..

நீங்கள் வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு இனவெறி பேசலாம்.. ஆனால் தாயக மக்களை நினைத்துப் பார்த்தீர்களா..?! :unsure: நீங்கள் இனவெறி பேசப்பேச அங்கு எம் உறவுகளுக்கல்லவா கேடு விளையப் போகிறது?! :( ஆகவே சிறீலங்கன்ஸ் கிரிக்கட் அணியை நீங்கள் தயவுசெய்து ஆதரிக்கவேண்டும்.. :(:D

விளையாடும் முழு ஆட்டங்களும் ஒரு டீம் வெல்லும் என்றால் ஆட்டமே நடத்தமாட்டார்கள்.

அரசியல் தான் தெரியாது என்று பார்த்தால் விளையாட்டும் தெரியாது போல கிடக்கு :icon_mrgreen: .

உங்களுக்கு பொருத்தமான ஏதாவது மித்திரன் ரக செய்திகளை போட்டு கிண்டுங்கோ .

ICC rankings for Tests, ODIs and Twenty20

ICC Test Championship

28 May 2013 Team Matches Points Rating South Africa 36 4601 128 England 48 5536 115 India 42 4714 112 Australia 47 5191 110 Pakistan 33 3444 104 Sri Lanka 39 3574 92 West Indies 34 3112 92 New Zealand 37 2997 81 Bangladesh 21 134 6

Zimbabwe is currently unranked, as it has played insufficient matches. It has 266 points and a rating of 27.

ICC ODI Championship

28 June 2013 Team Matches Points Rating India 43 5291 123 England 41 4650 113 Australia 39 4406 113 South Africa 31 3436 111 Sri Lanka 46 4920 107 Pakistan 41 4173 102 West Indies 37 3319 90 New Zealand 31 2738 88 Bangladesh 26 1950 75 Zimbabwe 20 1094 55 Ireland 8 312 39 Netherlands 5 69 14 Kenya 4 45 11

ICC Twenty20 Championship

25 June 2013 Team Matches Points Rating Sri Lanka 18 1979 132 West Indies 20 2008 126 India 18 1789 119 Pakistan 29 2491 119 England 26 2283 114 South Africa 22 1934 114 Australia 23 1843 102 New Zealand 25 2035 102 Ireland 12 659 82 Bangladesh 14 834 76 Zimbabwe 14 527 48 Netherlands 8 253 42 Kenya 9 280 40

ஒரு சிறிய தீவாக இருந்துகொண்டு உலக கிரிக்கெட்டில் சிறி லங்காவிற்கு எப்போதும் தனி இடம் இருக்கு .அதற்கு  என்போன்று உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் ஆதரவும் ஒரு காரணம் .அதை உலக கோப்பை ஆட்டங்களின் போது நேரில் கண்டவன் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் வென்றால் திண்ணையில் வெழுக்கிறான், பீத்திறான் என்பதும் தோற்றவுடன் பம்முவதும் தெரிந்தது தானே. Be sportive.

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D :D

பாவம் சிறிலங்கா அணி! 

குருட்டு லக் எப்பவும் வேலை செய்யாது!!

வெஸ்ட் இண்டீஸ் அணி மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த போட்டியில் நாங்கள் எப்படியும் ஒரு  கை பார்ப்போம் :lol:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ICC rankings for Tests, ODIs and Twenty20

ICC Test Championship

28 May 2013 Team Matches Points Rating South Africa 36 4601 128 England 48 5536 115 India 42 4714 112 Australia 47 5191 110 Pakistan 33 3444 104 Sri Lanka 39 3574 92 West Indies 34 3112 92 New Zealand 37 2997 81 Bangladesh 21 134 6

Zimbabwe is currently unranked, as it has played insufficient matches. It has 266 points and a rating of 27.

ICC ODI Championship

28 June 2013 Team Matches Points Rating India 43 5291 123 England 41 4650 113 Australia 39 4406 113 South Africa 31 3436 111 Sri Lanka 46 4920 107 Pakistan 41 4173 102 West Indies 37 3319 90 New Zealand 31 2738 88 Bangladesh 26 1950 75 Zimbabwe 20 1094 55 Ireland 8 312 39 Netherlands 5 69 14 Kenya 4 45 11

ICC Twenty20 Championship

25 June 2013 Team Matches Points Rating Sri Lanka 18 1979 132 West Indies 20 2008 126 India 18 1789 119 Pakistan 29 2491 119 England 26 2283 114 South Africa 22 1934 114 Australia 23 1843 102 New Zealand 25 2035 102 Ireland 12 659 82 Bangladesh 14 834 76 Zimbabwe 14 527 48 Netherlands 8 253 42 Kenya 9 280 40

ஒரு சிறிய தீவாக இருந்துகொண்டு உலக கிரிக்கெட்டில் சிறி லங்காவிற்கு எப்போதும் தனி இடம் இருக்கு .அதற்கு  என்போன்று உலகம் முழுக்க உள்ள தமிழர்களின் ஆதரவும் ஒரு காரணம் .அதை உலக கோப்பை ஆட்டங்களின் போது நேரில் கண்டவன் .

மேற்கிந்தியாவும்  தீவுகள் தான்.  :)  :)

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை .........அதனாலேயே தோற்றோம் ....... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், அல்வாயன்..

நீங்கள் வெளிநாட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு இனவெறி பேசலாம்.. ஆனால் தாயக மக்களை நினைத்துப் பார்த்தீர்களா..?! :unsure: நீங்கள் இனவெறி பேசப்பேச அங்கு எம் உறவுகளுக்கல்லவா கேடு விளையப் போகிறது?! :( ஆகவே சிறீலங்கன்ஸ் கிரிக்கட் அணியை நீங்கள் தயவுசெய்து ஆதரிக்கவேண்டும்.. :(:D

இசை.. அது தாயகத்தை விட்டு ஓடி வந்து அசைலம் அடிச்சிட்டு.. தாயகம் என்ன நிறம் என்று அறியாதவர்களின்.. தாயகப் போலிப் பாசப் புலம்பல்.

நாங்கள் எல்லாம் சிங்களவன்ர விக்கெட் விழ அவன் முன்னாடியே கைதட்டி வரவேற்ற ஆக்கள்..! கைதட்டிட்டு ஒரு சில சிங்களம் முறாய்க்க.. பம்மினது.. கதைய மாத்தினது.. வேற விசயம்..! இதில இன்னொரு விசயம் என்ன தெரியுமா.. தமிழ் பேசும் முஸ்லீம் நண்பர்களும் கூட இருந்து கைதட்டினது தான்..! :lol::D

  • 2 weeks later...

சிங்கன்கள் கலக்குறாங்கள் :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.