Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே போனீர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே  போனீர்கள்

 

எம்மோடு நின்று

எதிரியை

துரோகியை எதிர்த்து

எழுத்தாணியால் பகை விரட்டுவீர்

என்று நாம் கணித்திருக்க

எங்கே போனீர்கள்.........

 

 

புலி  அடிக்கையிலே

புலி  வெல்கையிலே

புகழ்ந்து

புனிதரின் புகழ் பாடியோர்

தோல்வி  என்றதும்

எங்கே போனீர்கள்.........

 

பகைவரும்

பதுங்கியிருந்தோரும்

புரளியில் புகழ் தேடுவோரும்

புது வரலாற்றை எழுத

புனிதரின் சாட்சிகள்

எங்கே போனீர்கள்.........

 

புலிகள் வெடிக்கையிலே

புலிகள் எரிகையிலே

நானும் வருவேன்

உம்மை மறவோம் என

சத்தியம் செய்தீர்களே

எங்கே போனீர்கள்.........

 

சிலரைக்கண்டோம்

வேறு பெயரில்

வேறு அணியில்

நடுநிலை என்ற பித்தலாட்டத்தில்

இவர்கள் இப்படித்தான்

மாற்றத்தை அடைப்போர் என்ற

அறிவுக்கொழுந்தாய்

எங்கே போனீர்கள்.........

 

வாழ்க்கையின் தத்துவம் 

உண்மை நண்பனை

தோல்வியில் தெரியும்

போராட்டத்திலும் அது தான்

நல்லவனை நாம் அறிய

தோற்கவேண்டுமா?

எங்கே போனீர்கள்.........

 

 

மாவீரர் ஒரு போதும்

பிரதிபலன் கேட்டதில்லை

வரலாற்றை மாற்றுவதை

மட்டுமே எதிர்க்கின்றோம்

விடாப்பிடியா இது

உங்களைத்தான் தேடுகின்றோம்

எங்கே போனீர்கள்.........

 

புலிகளின் பின்னால் நின்ற நாம்

சம்பந்தரின் பின்னால்

புரியவில்லை

புல்லையும் தின்ன

இறங்கியுள்ளோம் நாமென்று

எங்கே போனீர்கள்.........

 

 

வாரீர்

சொந்த முகத்தைக்கேட்கவில்லை

முகவரியும் தேவையில்லை

கருத்தையாவது

சொந்தமாக வைப்பீர்

அடுத்த கட்டம் என்ன

அதையாவது உரைப்பீர்

எங்கே போனீர்கள்.......

 

காத்துக்கிடக்கின்றோம்

நாலு வருடமாச்சு

8 கோடி இருந்தும்

நாதியற்ற  தமிழராய்................

எங்கே போனீர்கள்.......

எங்கே போனீர்கள்.......

எங்கே போனீர்கள்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கும் போகவில்லை, எங்களையும் விற்றுவிடுவீர்கள் என்ற பயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆக்கம் , தொடருங்கள் விசுகு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் போகவில்லை, எங்களையும் விற்றுவிடுவீர்கள் என்ற பயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

பச்சோந்திகளா நாம்??

 

எள்ளவும் உங்களை நான்  

எழுதவில்லை

என்பதைப்புரிவீர் தம்பி

 

என் தம்பிகள் 

எங்கிருந்தாலும் 

எம் தாகம்  மறவார்

நாம் அறிவோம்

 

 

நன்றி  வருகைக்கு

கவிதை நன்றாக உள்ளது .சிலமுரன்பாடுகள் உள்ளது .எல்லாம் புலிகள்தான் செய்யவேண்டும் ,பலர் பார்வையாளராக இருந்ததன் விளைவுதான் இன்று நாங்கள் அனுபவிப்பது .
 

விடுதலைப்பயணத்தில் ,யார்,யார் தங்களுடன் பயணிப்பார்கள் என்பதை தலைவரும் ,புலிகளும் உணர்ந்தே உள்ளனர் .இந்தியப்படைகளுடனான போரின் போது புலிகள் நேரடியான அனுபவத்தை பெற்றாகள் .அந்த தருணத்தில் யார்,யார் தங்களுடன் நின்றார்கள் என்பதை நேரடியாக கண்டார்கள் .
 
அனால் இன்று புலிகள் இல்லை ,அப்படியானால் எல்லாவற்றையும் மீண்டும் புலிகள் வரும்வரை கிடப்பில் போடவேண்டும் என்று நினைகிண்றீர்களா ?இதையும் கடந்து ஈழத்தமிழன் செல்லவேண்டும் ,அதில்தான் அங்குள்ள மக்களின் எதிகாலம் தங்கியுள்ளது .
வெளிநாட்டிலிருந்து நாங்கள் எதையும் எழுதல்லாம் ,கதைக்கலாம் .ஆனால் தாயகத்தில் இன்றைக்கு மக்கள் அதாள பாதாளத்தில் விழுந்துள்ளர்கள் .ஆகவே சாத்தியமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமைதான் தேவை .
 
சம்பந்தரின் தலைமைக்கு பின்னால் செல்வது பிழை என்று சொன்னால்தாயகத்தில் உள்ள மக்கள் பிழையானவர்களா?
நான் 2002இல் தாயகத்தில் நின்றசமயம் திருகோணமலையில் இருந்த புலிகளின் கட்டளைத்தளபதிகள் ,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரிடத்திலும் நேரடியாக கேட்டேன் .அதாவது உங்களுக்கு இந்த இரண்டு பேரைத்தவிர (சம்பந்தர் ,துரைரெட்னசிங்க்கம் )வேறு எவரும் திருமலையில் இல்லையா ?அவர்கள் சொன்னபதில் ,தலைவர் சொன்னவர் தங்களுக்கு ,சம்பந்தர் ஐயாவின் அனுபவம் ,தலைமை இரண்டும் தங்களுக்கு தேவை .
 
 

Edited by Gari

யதார்த்த கவி.வார்த்தைகளின் வலிமையை அவர்கள் உணரட்டும். தமக்கான நிலையான இருப்பை தக்கவைக்கும் அவர்களை விட்டுவிடுவோம் எமக்கான இலக்கு நோக்கி சரியான வழியில் பயணிப்போம்.

நியாயமான கேள்விகளை கொண்ட அற்புதமான வரிகள் ...........ஆரோக்கியமான சிந்தனையும் ,பார்வையும் ,கொண்டகொள்கையின் உறுதித்தன்மையும் அவனது எழுத்துக்களில் அறியமுடியும் ,அவை கவிதையாய் இருக்கட்டும்,கட்டுரையாய் இருக்கட்டும்,கதையாய் இருக்கட்டும் ,பாடலாய்  இருக்கட்டும் ,இசையாய்  இருக்கட்டும் ...............தொடருங்கள் உங்கள் அற்புதமான பணியை .

 
 
[தமிழில் உள்ள திருக்குறளுக்கே தமிழில் விளக்கம் இருக்கும்போது ,தமிழில் உள்ள சில கவிதைகளுக்கும் தமிழில் விளக்கம் தேவையா என்ற ஒரு கேள்வி பல நாட்களாய் என் மனதில் உள்ளது . :rolleyes: ...........................................சில பின்னோட்டக்கருத்துக்களால்  .........]

விசுகண்ணா யதார்த்தத்தை சொல்லும் கவிதை.. உண்மை வலிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 ஈழத்தமிழர்களின் திசைகாட்டி. அந்த வகையில் பலரும் பல திசைகளில் தங்கள்

பயணத்தைத் தொடர்கின்றனர். ஒரு நாள் அவர்கள் எல்லோரும் மையப்புள்ளியில் சந்திக்கும் காலம் வரும் விசுகு  அண்ணா தேடலுக்கு நன்றிகள்

காற்றடிக்கிற பக்கம் பாய் வலிக்கும்(இழுக்கும்).  சுங்கான் பிடிக்கிற பக்கம் படகு போகும்.  சந்தர்பம் ஒரு பாதி. தலைமை மறு பாதி. அங்கு தான் பயணம் போகும். 

 

தலைமைகள் மக்களை இணைக்க வேண்டும். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆக்கம் , தொடருங்கள் விசுகு 

 

நன்றி  சகோதரா

நிச்சயம் தொடர்வேன்

நீங்களும் தங்கள் வரலாற்றுக்கட்டுரையை  தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்ப கவிதை எழுதினாலும் அழகாய் எழுதுறீங்கள் !

தொடருங்கள் வாழ்த்துகள் !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக உள்ளது .சிலமுரன்பாடுகள் உள்ளது .

எல்லாம் புலிகள்தான் செய்யவேண்டும் ,பலர் பார்வையாளராக இருந்ததன் விளைவுதான் இன்று நாங்கள் அனுபவிப்பது .

 

இதில் எனக்கும் உடன்பாடுண்டு

ஆனால் நான் பார்வையாளனாக என்றும் இருந்ததில்லை.

இன்று  கொஞ்சமேனும் நித்திரை கொள்வதற்கு எனது முடிந்ததுக்கும் மேலான உதவிகள் ஒரு காரணம்.

ஆனால் 10  அல்லது 20 வீதம் தான் அப்படி இருந்தது

மீதம் பார்வையாளர்களாகவே இருந்தது என்பதில் பெருத்த ஏக்கம் உண்டு

 

விடுதலைப்பயணத்தில் ,யார்,யார் தங்களுடன் பயணிப்பார்கள் என்பதை தலைவரும் ,புலிகளும் உணர்ந்தே உள்ளனர் .இந்தியப்படைகளுடனான போரின் போது புலிகள் நேரடியான அனுபவத்தை பெற்றாகள் .அந்த தருணத்தில் யார்,யார் தங்களுடன் நின்றார்கள் என்பதை நேரடியாக கண்டார்கள் .

 

நிச்சயமாக எல்லாம் பதிவிலும் உண்டு.

அத்துடன் மக்கள் எவரையும் பகைவர்களாக அவர்கள் கருதிதில்லை. இடைஞ்சல்கள் செய்தபோதும்.

 

அனால் இன்று புலிகள் இல்லை ,அப்படியானால் எல்லாவற்றையும் மீண்டும் புலிகள் வரும்வரை கிடப்பில் போடவேண்டும் என்று நினைகிண்றீர்களா ?

 

இது தான் எனது கேள்வியும் இன்று அவர்கள் இல்லாதபோது

அவர்களுக்கு வாக்குறுதி  கொடுத்தோர்  எங்கே போனீர்கள் என்பது தான்...

 

 

இதையும் கடந்து ஈழத்தமிழன் செல்லவேண்டும் ,அதில்தான் அங்குள்ள மக்களின் எதிகாலம் தங்கியுள்ளது .

வெளிநாட்டிலிருந்து நாங்கள் எதையும் எழுதல்லாம் ,கதைக்கலாம் .ஆனால் தாயகத்தில் இன்றைக்கு மக்கள் அதாள பாதாளத்தில் விழுந்துள்ளர்கள் .ஆகவே சாத்தியமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கக்கூடிய தலைமைதான் தேவை .

 

பாதாளத்தில் விழுந்து கிடக்கும் தாயக மக்களுக்கு கிடைத்த ஒரு துரும்பு கூட்டமைப்பு என பலமுறை  எழுதியுள்ளேன்.

தலைவரால் முன்னெச்சரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட அவ்வமைப்பை என்றும் ஆதரிக்கின்றேன்.

 

சம்பந்தரின் தலைமைக்கு பின்னால் செல்வது பிழை என்று சொன்னால்தாயகத்தில் உள்ள மக்கள் பிழையானவர்களா?

 

வெளிநாட்டிலிருந்து நாங்கள் எதையும் எழுதல்லாம் ,கதைக்கலாம் .ஆனால் தாயகத்தில் இன்றைக்கு நிலை என்ன என்பதை உணர்ந்தவன். அந்தவகையில் கூட்டமைப்பைப்பற்றியோ அதன் உறுப்பினர்கள் பற்றியோ தாயக மக்களின் அரசியல் நடவடிக்கைகள் பற்றியோ கருத்து எழுத தயங்குவதுண்டு.

இருந்தாலும் அரசியல் தலைவர்கள் பதில் சொல்லணும் என்ற ரீதியில் சம்பந்தர் ஐயாவினது  நடவடிக்கைகளில் சில கேள்விகள் உண்டு. ஆனாலும் அவரது நிலை அறிவேன்.

இங்கு புலிகள் வளைந்து கொடுப்பதில்லை என்பதற்கே நாம் இன்று சம்பந்தர் ஐயாவின் பின்னால் நிற்பதே நாம் எவ்வளவு தூரம்  தாயகக்கோரிக்கையிலிருந்து விட்டுக்கொடுத்து நிற்கின்றோம் என்றே  எழுதினேன்.

 

நான் 2002இல் தாயகத்தில் நின்றசமயம் திருகோணமலையில் இருந்த புலிகளின் கட்டளைத்தளபதிகள் ,அரசியல் பொறுப்பாளர்கள் எல்லோரிடத்திலும் நேரடியாக கேட்டேன் .அதாவது உங்களுக்கு இந்த இரண்டு பேரைத்தவிர (சம்பந்தர் ,துரைரெட்னசிங்க்கம் )வேறு எவரும் திருமலையில் இல்லையா ?அவர்கள் சொன்னபதில் ,தலைவர் சொன்னவர் தங்களுக்கு ,சம்பந்தர் ஐயாவின் அனுபவம் ,தலைமை இரண்டும் தங்களுக்கு தேவை .

 

2003 இல் நானும் போயிருந்தேன்.

சந்திப்புக்களை  நடாத்தியிருந்தேன்.

எனவே தெரியும்..........

 

 

இன்று நேரமில்லாத போதும்  இதற்கு பதில் எழுதணும் என்பதற்காகவே எழுதுகின்றேன்

நேற்று இங்கு சிலரால்

இங்கு 2 பிரிவு இருக்கு

இரண்டும் பிரயோசனமற்றது என்று எழுதப்பட்டிருந்தது.

அது என் மனதைச்சுட்டதால் வந்ததே இது.

மற்றும்படி உங்களில் பெரு மதிப்பு உண்டு.

சிலவற்றை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

நன்றி  கருத்துக்கும் கேள்விகளுக்கும் நேரத்திற்கும்.....

உடல் நலத்தை கவனியுங்கள்

 

சம்பந்தர் ஐயாவினுடைய  நடவடிக்கைகளை  எவ்வாறு எல்லாம் பாவிக்கின்றனர் என்பதை  உணர்த்த இது.

 

 

(அதுதான் சம்பந்தர் போன வருடம் யாழ்பாணத்தில் சிறிலங்கா கொடியை ஏற்றியவர் .

எப்ப அழியும் காத்திருந்தவர்கள் தமிழ் மக்களும் கூட்டமைப்பும் (சிலர் தவிர்த்து ).

தமிழினி இன்று இருக்கும் நிலைதான் அன்று சம்பந்தருக்கு .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124730&page=2  )

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
ஓவ்வொரு வரியிலும் ஆதங்கமும் நியாயமும்...அதிகம் எழுதுங்கள்...இப்பொழுதுதான் நிறைய எழுத தொடங்கி இருக்கிறீர்கள்..அறச்சீற்றம்...கோபம் வரும்பொழுதுதான் உள்ளிருக்கும் எழுத்தாளன் வெளியே வருகிறான்..இதுதான் கலை..
 
முன்னர் ஒருமுறை எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து...
 

ஒற்றைவரியைக்கூட எழுதமுடியாமல் எம் கவிஞ்ஞர்கள் பலரின் பேனாக்களின் வழியே இன்றும் ஓலங்களே இறங்குகின்றன....அவலமாக செத்துப்போன எம் குழந்தைகளின் கண்ணீர்த்துளிகள் பேனாமையாய்க் கரைந்தோடுகின்றன....இன்னும்கூட இரக்கமின்றி,எந்தவிதக்குற்றவுணர்வுமின்றி,கொஞ்சம்கூட வெட்கமின்றி எங்கள் எழுத்தாளர்கள் பலரின் பேனாக்கள் தங்கள் குழந்தைகளின் குரல்வளையை நெரித்த கொலைகாரர்களின்குரலாய்ப் பேசுகின்றன...தம் உறவுகளின் மேல் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் இனப்படுகொலையை,தம் சகோதரிகளின் மேல் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை,எமதுமக்கள் சொல்லவே வாய்கூசும் எத்தனையோ உண்மைகளை தங்கள் குழந்தைகளின் புதைகுளிகளின்மேல் நின்றபடி நியாயப்படுத்துகின்றன....வெட்கமற்ற உங்கள் எழுத்துக்கள் இந்த உலகில் இன்னும் விற்றுத்தீர்ந்துகொண்டிருப்பதுதான் செத்துப்போன எம் குழந்தைகளை இன்னுமொருமுறை சாகடிக்கிறது,புதைக்கப்பட்ட என்னினத்தை மீண்டுமொருமுறை புதைக்கிறது....
 
பாடல்களையும்,ஆடல்களையும்,திரைப்படங்களையும் எட்டுக்கோடி தமிழர்களின் ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருக்க தெருக்கோடிகளில் நின்றபடி எங்கள் கண்ணீரைப் பதிவுசெய்ய நாங்கள் எப்பொழுதும் சில வெள்ளைமனிதர்களின் ஊடகங்களை தேடிப்போகவேண்டியிருக்கிறது....எங்கள் குழந்தைகளின் ஓலங்கள்,எங்கள் சகோதரிகளின் கண்ணீர்கள்,எங்கள் அண்ணண்களின் கண்களில் தெரிந்த இயலாமைகள்,ஏக்கம்கள்,மரணத்தின் நிழல்கள் என எங்கள் அவலம்கள் எல்லாம் நல்லிதயம் படைத்த பல வெள்ளையின மனிதர்களின் பேனாக்களில் இருந்து இன்றும் இரத்தமாய்க் கசிந்துகொண்டிருக்கின்றன...எங்கள் குழந்தைகள் சிந்திய இரத்தத்தை சுவைத்தபடி இரக்கமின்றி எழுதிக்கொண்டிருக்கும் என் இனத்தில் தவறிப்பிறந்தவர்களே...உங்கள் மரணம் எழுதப்படும் கடைசி நாளில்,நீங்கள் எழுதியவைகள் மரணவேதனையாக உங்களை சூழ்ந்துகொள்ளும் ஒரு நாளில்,எங்கள் குழந்தைகளின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியாமல் கூனிக்குறுகிப்போய் நிற்பீர்கள்...ஒரு பெரும் தரித்திரமாகவே வரலாற்றில் உங்கள் இருப்பு எழுதப்படும்...

 

 

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.