Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே - அவர்கள் பற்றி பேசுவது பிரயோசனமற்றது - தயாமாஸ்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே - அவர்கள் பற்றி பேசுவது பிரயோசனமற்றது - தயாமாஸ்டர்

முதலமைச்சர் வேட்பாளரென எவரும் இல்லை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

http://www.youtube.com/watch?v=2Adidjni1uk

 

கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி பேசுவது இப்போதைக்கு  பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே என  சுதந்திரக்கட்சி பிரமுகர் தயாமாஸ்டர் தெரிவித்துள்ளார். 

தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாட்டினை  யாழ். ஊடக அமையத்தில் அவர் நடத்தியிருந்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் 'தடுப்பிலுள்ள அனைவரும் விடுவிக்கப்பட வேண்டுமென்பதே எனது கோரிக்கையாகும். அதற்காக நான் நீண்டகாலமாக குரல் கொடுக்கின்றேன்.ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் முன்பதாக  வாக்குமூலமளிக்கையினில் இது தொடர்பாக பிரஸ்தாபித்திருந்தேன். தற்போது வடக்கு தேர்தலில் போட்டியிடுகையிலும் அதே நிலைப்பாட்டடை கொண்டுள்ளேன்' என அவர் தெரிவித்தார். அவ்வேளை சரணடைந்து தகவல் அற்றிருக்கும் மூத்த மற்றும் முன்னாள் போராளிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் 'கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் பற்றி இப்போதைக்கு பேசுவது பிரயோசனமற்றது. காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே' என தெரிவித்தார்.

முன்னதாக அவர் பணியாற்றி வந்த தொலைக்காட்சி குழுமத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளிற்காக வெளியேறுவதாக அதன் பணிப்பாளர் எஸ்.குகநாதன் அறிவிப்பை விடுத்திருந்தார்.

இதே வேளை டக்ளஸ் தேவானந்தா பத்திரிகை ஆசிரியர்களிடையே இடம்பெற்ற சந்திப்பில் தானே முதலமைச்சர் வேட்பாளரென அறிவித்துள்ளாரேயென எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அவ்வாறு  முதலமைச்சர் வேட்பாளரென எவரும் இல்லையென கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93843/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கருணா, பிள்ளையானின் கதி தான் இந்த இருவருக்கும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் போனவர்கள் காணாமல் போனவர்களே - அவர்கள் பற்றி பேசுவது பிரயோசனமற்றது - தயாமாஸ்டர்

 

 

இவரது, வார்த்தைகள் கோத்தபாயாவின் வார்த்தைகள் போல உள்ளன!  :o

 

ஒரு வித்தியாசமாகத் தமிழில், இவரது வாய்க்குள்ளிருந்து வருகின்றன!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிணங்களுக்குள் ஒளிந்திருக்கும்....அவர்கள்.....மற்றும்படி இவர்கள் நடைப் பிணங்களே...

இவரது, வார்த்தைகள் கோத்தபாயாவின் வார்த்தைகள் போல உள்ளன!  :o

 

ஒரு வித்தியாசமாகத் தமிழில், இவரது வாய்க்குள்ளிருந்து வருகின்றன!

தொடர்ந்த சித்திரவதைகளால். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள அங்கத்தவர்கள் இவரது செய்தியை இங்கு பிரசுரிப்பதைத் தவிர்க்கலாம். சிலர் அவருக்கு வக்காளத்து வாங்கலாம் அதுபற்ரி எனக்குக் கவலையில்லை. அப்படி ஒருவர் தமிழர் மத்தியில் இல்லை என்பதுபோல் இவரையும் செய்திகளிலிருந்து காணமற்போகச் செய்யவேண்டும். தமிழ் பிரசுர உலகம் இதைச்செய்யுமா? இவரது செவ்விக்காக சில ஜந்துகள் உந்தாள் கூப்பிட்டதும் போயிருக்குத்தானே. உதுகள என்ன செய்வது.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தயா மாஸ்டர் விடுதலைப்புலிகள்  இருந்த போதே முக்கியத்துவம் இழந்த ஒருவராகவே இருந்தார். நீண்ட காலத்துக்கு முன்னர் அவர் வகித்த பதவி ஒன்றை வைச்சு.. அவரை பெரியாளாகக் காட்டி அவர் மூலம் தனது பிரச்சாரத்தை தமிழ் மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பியது சிங்களப் பேரினவாத அரசு. தயா மாஸ்டர் போன்றவர்கள் இலகுவில் நிறம் மாறக் கூடியவர்கள் என்பதால் அரசு மற்றும் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தமது பிரச்சார நோக்கங்களுக்காக இவர்களை பயன்படுத்துவதில் பெரிய இடர்பாடுகள் இருக்கப் போவதில்லை.

 

இப்படி எத்தனையோ காட்சிகளை எம் மக்கள் கடந்த காலங்களில் கண்டுவிட்டனர். தலைவர் காலத்தில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தான் அவரால் தமிழ் மக்களுக்கான சிங்கள அரசியல் தளத்தில் அரசியலுக்காக முன்னிறுத்தப்பட்டவர்கள். அவர்களில் இன்றும் கொள்கை மாறாதவர்களை மக்கள் ஆதரிக்கலாம். மற்றவர்களை எல்லாம் புறக்கணிப்பதே நல்லது. நாங்க களத்தில் நின்றால் இந்த முடிவைத் தான் எடுப்போம். எனி மக்களின் முடிவு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவரது, வார்த்தைகள் கோத்தபாயாவின் வார்த்தைகள் போல உள்ளன!  :o

 

ஒரு வித்தியாசமாகத் தமிழில், இவரது வாய்க்குள்ளிருந்து வருகின்றன!

 

அவரது தொழில் அது தானே

பழகிவிட்டது

 

 

 

முதலமைச்சர் பற்றி பேசாது இவர் போன்றவர்கள் நிறுத்தப்படுவதே சிங்களத்தின் குள்ளநரி விளையாட்டுத்தான்.

அது எந்த சிங்களக்கட்சியாக இருப்பினும்...........

தயா வாத்தி வீட்ட யாரும் காணாமல் போகும் வரைக்கும் இது பெரிய பிரச்சினையே இல்லை தானே...   ???  இது தயா வாத்திக்கு மட்டும் இல்லை நிறைய தமிழர்களுக்கும் புலம்பெயர் புலிகள் எண்டு  வியாக்கியானம் செய்யும் எல்லா தமிழர்களுக்கும் பொருந்தும்..  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.