Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

gina1202844629.gif

 

ரயில் நிலையம் வடிவமைப்பைத் தவிர ( முக்கியமாக நிலைய மேற்கூரையின் வடிவமைப்பு அதரப்பழசு! :( a typical Indian goods shed style !!) சென்னை மெட்ரோ ரயில் நன்றாக இருக்கிறது..!

மென்மேலும் வளரட்டும், வாழ்த்துக்கள்..! :lol:

கூடிய விரைவில் இதில் முதல் பயணம் செய்ய எனக்கும் வாய்ப்பிருக்கிறது..:)

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயில் நிலையம் வடிவமைப்பைத் தவிர ( முக்கியமாக நிலைய மேற்கூரையின் வடிவமைப்பு அதரப்பழசு! :( a typical Indian goods shed style !!) சென்னை மெட்ரோ ரயில் நன்றாக இருக்கிறது..!

 

இந்த நேரம்..... மேற் கூரையை ஞாபகப்  படுத்தி, மகிழ்ச்சியுடன் இருக்கும் மக்களின் வயிற்றில் புளியை கரைக்காதீங்க வன்னியன்.:rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

CIrJDZiUEAEMoIq.jpg
ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையம்

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயிலுக்கு மாலையெல்லாம் போட்டிருக்கு..,ரயில் எடுக்கும்போது எல்லாச்சில்லுக்கும் தேசிக்காய் வச்சாங்களா ,வன்னியன் சார்:(:lol:

  • Like 1
Posted

முதல் ரயிலை ஓட்டிய பிரீத்தி : குவிகின்றன வாழ்த்துக்கள்!

Tamil_News_large_1285689.jpg

சென்னையில் முதல் மெட்ரோ ரயிலை இயக்கிய பெண் பிரீத்தி, 28. 'இந்த இடத்தில் தான் வேலை செய்வேன். அதிலும் இந்த பணியை தான் மேற்கொள்வேன்' என, பிடிவாதமாக, மெட்ரோ ரயில் பணிக்கு வந்த பெண். பிரீத்தி, மெட்ரோ ரயில் ஓட்டுனர் பணிக்கு வந்தது குறித்து, அவரது தாய் சாந்தி கூறியதாவது:

நாங்கள் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே, வாகனத்தை ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவள் பிரீத்தி. சைக்கி ளில் சுற்றிக் கொண்டே இருப்பாள்.
இதை பார்க்கும் எங்களது குடும்ப நண்பர், பிரீத்தியை 'சைக்கிள் ராணி' என்று தான் அழைப்பார். பின், இருசக்கர வாகனம், ஆட்டோ என, பிற வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டார்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடித்தார். 'எலக்ட்ரிக் மேக்னடிக் வேவ்ஸ் ரிசர்ச் சென்டர்' என்ற மத்திய அரசு நிறுவனத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்தார்.

இதற்கிடையே, மெட்ரோ ரயில் பணியில், ஜூனியர் இன்ஜினியராக சேர வாய்ப்பு கிடைத்தும், ரயில் ஓட்டுனராகத் தான் பணிபுரிவதாகவும், இல்லையென்றால் தான் சேர விரும்பவில்லை எனவும் கூறினார். அவர் நினைத்தபடியே, ரயில் ஓட்டுனராக தேர்வு செய்யப்பட்டார். டில்லியில், நான்கு மாதங்கள் பயிற்சி முடித்து விட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, சென்னை மெட்ரோ ரயிலை ஓட்டும் பயிற்சி பணியில் இருந்தார். தற்போது, மெட்ரோ ரயிலை சாவகாசமாக இயக்குகிறார். இவ்வாறு, சாந்தி தெரிவித்தார். சமூகவலை தளங்களில், பிரீத்திக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1285689

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் ரயிலை ஓட்டிய பிரீத்தி : குவிகின்றன வாழ்த்துக்கள்!

Tamil_News_large_1285689.jpg

 

நாங்கள் சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கிறோம். சின்ன வயதில் இருந்தே, வாகனத்தை ஓட்டுவதில் அலாதி பிரியம் கொண்டவள் பிரீத்தி. சைக்கி ளில் சுற்றிக் கொண்டே இருப்பாள்.
இதை பார்க்கும் எங்களது குடும்ப நண்பர், பிரீத்தியை 'சைக்கிள் ராணி' என்று தான் அழைப்பார். பின், இருசக்கர வாகனம், ஆட்டோ என, பிற வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டார்.
சென்னை அடையாறில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் முடித்தார். 'எலக்ட்ரிக் மேக்னடிக் வேவ்ஸ் ரிசர்ச் சென்டர்' என்ற மத்திய அரசு நிறுவனத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1285689

சைக்கிள் ராணிக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரயிலுக்கு மாலையெல்லாம் போட்டிருக்கு..,ரயில் எடுக்கும்போது எல்லாச்சில்லுக்கும் தேசிக்காய் வச்சாங்களா ,வன்னியன் சார்:(:lol:

கோயம்பேடு மத்திய காய்கறி சந்தை வழியாகத்தான் இந்த சென்னை மெட்ரோ ரயில் செல்கிறது.. வியாபாரிகளே எலுமிச்சை பழத்தை வைத்துக்கொடுத்துதான் இந்த ரயிலை வரவேற்றிருப்பார்கள்..

ஆனால் ஒவ்வொரு சில்லுக்கும் தேசிக்காய் வைத்தால், மெட்ரோ ரயில் வழுக்கி விழுந்துவிடாதா நந்தன் சார்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிச்சயம் உடனே தமிழ்ப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியோடு இந்த மெட்ரோ ரயிலில் ஒரு டூயட் வரும், அல்லது வில்லன் சேசிங் சண்டைக்காட்சி வரலாம்..

யார் முதலில் எந்தப் படத்தில் எடுக்கப்போகிறார்களோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப் பட்ட, மெட்ரோ ரயில் திட்டத்தை..... அ.தி.மு.க. தொடர்ந்து முடித்து வைத்தது  ஆச்சரியமாக உள்ளது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சைக்கிள் ராணிக்கு வாழ்த்துக்கள்.

சைக்கிள் ராணியை வாழ்த்துவதோடு அவர் தலையில் சூடிக்கொள்ள யாராவது பூ கொடுங்கப்பா இன்னும் மங்களகரமாக இருக்கும்.

lucwe_225851.jpg.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவரின் அனுபவத்தை கேட்க...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகாக உள்ளது, சென்னை.:)

Posted

மெட்ரோ ரயில்: பாடத்தை மறக்காதீர்கள்

charu_2458937f.jpg
 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொதுமக்களின் வசதியையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

இப்போதாவது வந்ததே என்றுதான் நாம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டும். ஜூன் 29-ம் தேதியன்று தொடங்கப்பட்ட சென்னை ஆலந்தூருக்கும் கோயம்பேட்டுக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம், சரியாக 115 ஆண்டுகள் தாமதமாகத்தான் நமக்கு வந்துள்ளது. ஆம், பாரிஸ் நகருக்கு மெட்ரோ ரயில் வந்தது 1900-ம் ஆண்டு. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் பயன்படுத்தும் ஒருசில மெட்ரோக்களில் பாரிஸும் ஒன்று. 214 கிலோ மீட்டர்களில் 303 ஸ்டேஷன்களை இணைக்கிறது பாரிஸ் மெட்ரோ. நான் பாரிஸ் செல்லும்போதெல்லாம் என்னுடைய தீராத சுவாரசியம் இந்த மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வதுதான். பூமிக்குக் கீழே ஐந்து அடுக்குகளில் ரயில்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருக்கின்றன. ஐந்தாவது அடுக்கில், ஓட்டுநர் இல்லாமல் தானே இயங்கும் ரயில். மொத்தம் 700 ரயில்கள்.

சென்னையின் மக்கள் தொகையைவிட பாரிஸின் மக்கள் தொகை பாதிதான். சென்னை 44 லட்சம். பாரிஸ் 22 லட்சம். ஆனால், ஒரு நாளில் பாரிஸ் மெட்ரோவைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 42 லட்சம்! இதுபற்றி என் பாரிஸ் நண்பர்கள் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு, ‘இந்த நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் மெட்ரோவில் பயணிக்கிறார்கள்’ என்று. புறநகரில் வசிக்கும் மக்களும் பெருமளவில் மெட்ரோவைப் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் இந்தக் கணக்கு. இதுபற்றி இன்னொரு நகைச்சுவையும் உண்டு. பாரிஸ் நகரின் மக்கள்தொகையைவிட இரண்டு மடங்கு மக்கள் பூமிக்குள் இருக்கிறார்கள்! காரணம், அங்கே மெட்ரோ ரயில்கள் அநேகமாக பூமிக்குள்தான் ஓடுகின்றன.

எல்லாமே பூமிக்குள்தான்

பொதுவாகவே, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பூமிக்கு உள்ளே உள்ள நிலப் பகுதியை மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு வீட்டுக்குமான தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவை எல்லாமே பூமியின் உள்பகுதி வழியாகத்தான் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் இன்னமும் கழிவு நீரை வெளியேற்றுவதற்கான பாதாள சாக்கடைகூட நாடு முழுவதும் கட்டமைக்கப்படவில்லை. தஞ்சாவூர் நகரில் இன்னமும் மராட்டிய மன்னர்கள் கட்டிய திறந்த சாக்கடையைத்தான் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்த நகரின் அத்தனை மக்களுடைய மலஜலக் கழிவுகள் செல்வதைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட கொடூரமான காட்சி தெரியுமா?

அது போக, தமிழக நகரங்களில் மெட்ரோ வாட்டர், மின்சாரம், சாலை நிர்மாணம் ஆகிய மூன்று துறையினரும் ஒருவருக்கொருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் மாற்றி மாற்றிச் செய்துகொண்டிருக்கும் ‘பணி’களைப் பற்றி ஆச்சரியப்படாத சராசரி மனிதனே கிடையாது. ஒரு வருடமாகச் சாலை போடப்படாமல் சரளைக் கற்களாகக் கிடக்கும் சாலையைப் போட்ட அடுத்த நாளே, மின்சார வாரியப் பணியாளர்கள் வந்து அந்தச் சாலையைத் தோண்டிக்கொண்டிருக்கும் காட்சியை என்னவென்று சொல்ல! இந்த நிலையில் அண்டர் கிரவுண்ட் மூலமே சமையல் எரிவாயு விநியோகத்தையும் செய்தால் என்ன ஆகும் என்று யோசிக்கவே பயமாக உள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பூமிக்கு மேலே மின்கம்பிகளையும் பார்க்க முடியவில்லை. விளக்குக் கம்பங்கள் மட்டுமே பூமிக்கு மேலே ஒளியைப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நம் நாட்டுச் சாலைகளில் தாறுமாறாகப் பிய்ந்தபடி இருக்கும் மின்கம்பிகளை அந்த நாடுகளில் பார்க்கவே முடியவில்லை. எல்லாமே பூமிக்குக் கீழேதான். அதைப் போலவேதான் ரயில்களும் அங்கே பூமிக்குக் கீழே ஓடுகின்றன. நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை நான்கு மணி நேரம் மட்டுமே ரயில்களுக்கு ஓய்வு.

பாரிஸ் மெட்ரோவின் ஆச்சரியம்

பாரிஸ் மெட்ரோ ரயில் திட்டத்தின் இன்னொரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால், ஒரு ஸ்டேஷனுக்கும் இன்னொரு ஸ்டேஷனுக்குமான தூரம் 600 மீட்டரிலிருந்து ஒரு கிலோ மீட்டர். அதாவது, கிட்டத்தட்ட அரை கிலோமீட்டருக்கு ஒரு ஸ்டேஷன் என்று சொல்லலாம். பொதுமக்களின் வசதிக்காகவே மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சவுகரியத்தை அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இதெல்லாம் எனக்குக் கடந்த திங்களன்று ஆலந்தூர் டு கோயம்பேடு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது ஞாபகம் வந்தது. இப்போதாவது வந்ததே என்ற சந்தோஷம் ஏற்படுகின்ற அதே வேளையில், இதுகுறித்த வேறு சில எண்ணங்களும் என்னை ஆட்கொண்டன.

தோல்விக்கான காரணங்கள்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட பறக்கும் ரயில் சேவை மக்களுக்கு முழுமையாக உபயோகமில்லாமல் இருக்கிறது. ஒரே காரணம்தான். நகரிலேயே மிகவும் புறக்கணிக்கப்பட்ட இடங்கள் என்றால், அந்தப் பறக்கும் ரயில் நிலையங்கள்தான். உதாரணமாக, மந்தைவெளி, கலங்கரை விளக்க ரயில் நிலையங்கள். இந்த இடங்களில் ஒருவர் பகலில் செல்வதற்கே அஞ்சும் நிலைமை உள்ளது. ஆள் நடமாட்டமே கிடையாது. பிச்சைக்காரர்களும், குடிகாரர்களும், சமூக விரோதிகளும் பொழுதைப் போக்கும் இடங்களாகவே அவை உள்ளன. மாலை ஆறு மணிக்கு மேல் அங்கே செல்பவரை உயிருக்குத் துணிந்தவர் என்றே சொல்ல வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு மந்தைவெளி ரயில் நிலையத்தில் மாலை ஏழு மணி அளவில் சல்லாபித்துக்கொண்டிருந்த ஒரு காதல் ஜோடியைப் பிரித்து, அந்த இளைஞனைக் கொலை செய்தார் ஒரு நபர்.

பறக்கும் ரயில் திட்டத்தின் படுதோல்விக்கு இன்னொரு காரணம், அந்த ரயில் நிலையங்களுக்குச் செல்லவே ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி நடந்து சென்றுவிட்டால் ஆகாயத்தின் அருகே தெரியும் நடைமேடைக்கு எத்தனையோ படிகளை ஏறிக் கடக்க வேண்டும். 30 வயதுக்கு உட்பட்டவர்களால்தான் அது சாத்தியம். அப்படியே ஏறிப்போனால் மேலே குடிப்பதற்குத் தண்ணீரோ, தேநீரோ கிடைக்காது. ஓய்வறை, கழிவறை வசதிகளும் கிடையாது.

பாடம் கற்க வேண்டும்

115 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கும்போது இதையெல்லாம் ஏன் இங்கே பிரஸ்தாபிக்கிறேன் என்றால், இந்தத் தவறுகளிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். பாடம் கற்றுக்கொண்டுவருகிறார்கள் என்றே தெரிகிறது.

ஆலந்தூர் - கோயம்பேடு இடையே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் இருந்தது; தண்ணீரும் கிடைத்தது. இந்தச் சேவைகள் தொடர வேண்டும். உலகின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் மட்டும் அல்ல; மூன்றாம் உலக நாடுகள்கூட இந்த விஷயத்தில் அவற்றோடு போட்டி போடுகின்றன. சிலி நாட்டின் சான்டியாகோ நகரின் மெட்ரோவில் நின்றால், பாரிஸ் மெட்ரோவுக்கும் அதற்கும் உங்களுக்கு வித்தியாசமே தெரியாது. ஐந்து லைன்களில் 108 ஸ்டேஷன்களை இணைக்கிறது சான்டியாகோ மெட்ரோ ரயில் திட்டம்.

பாரிஸில் சிக்கனம்; சென்னையில்…

ஒரு முக்கியமான விஷயம், பாரிஸில் கார் வைத்திருப் பவர்கள்கூட காரில் செல்ல இஷ்டப்படுவதில்லை. காரில் செல்வதைவிட மெட்ரோவில் செல்வது வசதியாகவும், சிக்கனமாகவும் இருக்கிறது என்கிறார்கள் பாரிஸ்வாசிகள். அப்படிப்பட்ட நிலையைத்தான் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். அதற்கு இடையூறாக இருக்கக்கூடிய ஒரு பிரச்சினையை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். ஆலந்தூரிலிருந்து கோயம்பேட்டுக்கு ஒருவழி டிக்கட் 40 ரூபாய். இது 25 ரூபாயாகக் குறைக்கப்பட வேண்டும். மெட்ரோ ரயில் திட்டம் மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும்தான் என்று அரசு முடிவெடுத்துவிட்டால் இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மீட்டர் போடாமல் இருநூறு, முன்னூறு என்று கேட்கும் ஆட்டோவைவிட மெட்ரோ ரயில் பயணம் மலிவுதான்.

- சாரு நிவேதிதா, எழுத்தாளர்,

http://tamil.thehindu.com/opinion/columns/மெட்ரோ-ரயில்-பாடத்தை-மறக்காதீர்கள்/article7377843.ece?ref=relatedNews

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் மெட்ரோ ரயிலை கொண்டு வந்தது என்பதற்கு.....
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்... வெளியிடும் போட்டி அறிக்கைகள், விரக்தியை ஏற்படுத்து கின்றது.

Posted

Photo Gallery

சென்னைக்கு மெட்ரோ ரயில் வந்ததற்கு நாங்கதான் காரணம் என்று சொந்தம் கொண்டாடி திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்.

http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=25877&cat=Album#.VZkGvhvtmkp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் பலவகையான சாதகங்கள் இருப்பது போலவே ,சில வகையான பாதகங்களும் உண்டு. குறிப்பாக எதிர்கால மாணவர்களுக்கு இது ஒரு பெரிய தலையிடியாகவும் கூட இருக்கும்.

அடுத்தாண்டில் இருந்து வரும் வினாக்களில் சில:

_ சென்னையில் மெட்ரோ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப் பட்டது ?

_ முதலாவது மெட்ரோ பயணம் எப்போது ஆரம்பிக்கப் பட்டது?

_ மெட்ரோவை இயக்கிய பெண்மணியின் பெயர் என்ன?

_ இத் திட்டம் யாரால் தொடங்கி முடிக்கப் பட்டது ? ( இது கொஞ்சம் கடினமான கேள்வி) சமயோசிதமாகப் பதில் போட வேண்டும், எந்தக் கட்சி அப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதைக் கவணித்து எழுத வேண்டும். :lol: :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்தாண்டில் இருந்து வரும் வினாக்களில் சில:

_ சென்னையில் மெட்ரோ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப் பட்டது ?

_ முதலாவது மெட்ரோ பயணம் எப்போது ஆரம்பிக்கப் பட்டது?

_ மெட்ரோவை இயக்கிய பெண்மணியின் பெயர் என்ன?

_ இத் திட்டம் யாரால் தொடங்கி முடிக்கப் பட்டது ? ( இது கொஞ்சம் கடினமான கேள்வி)

ம்..உங்களை TNPSC(Tamil Nadu Public Service Commission)யில் கமிட்டி மெம்ராக்கிவிடவேண்டியதுதான்.. நல்ல 'கேள்வி' ஞானம் உள்ளது..! :lol:

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று மாலை சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது..:innocent:

கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை இருபுறமும் சென்றுவந்தேன்..

அல்ஸ்த்தோம்(Alstom) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரயிலின் பெட்டிகள் நல்ல தரத்துடன் வடிவமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது..பெட்டியினுள்ளே பிற நாட்டு மெட்ரோ ரயில்களின் வசதிகளைப்போலவே அமைந்துள்ளது பாராட்டப்படவேண்டிய அம்சமாகும்..

இரயில் நிலையங்களின் பெயர்களை மட்டும் தமிழ், ஆங்கிலம், இந்தி என்ற வரிசையில் எழுதிவைத்துள்ளார்கள்..மற்ற வகைகளில் அனைத்து தகவல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது மனநிறைவை தருகிறது. இரயிலில் பிரயாணம் செய்வது பெட்டிகள் அதிகம் குலுங்காமல், மிகச் சரியான அளவில் குளிரூட்டப்பட்டு இனிமையாக இருந்தது..

ஒலிபெருக்கியில் முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் அறிவிப்பு செய்வது நெருடலாக உள்ளது.. தமிழ்நாட்டில், தமிழை பின்னுக்குத் தள்ளிய முதல் அரசு நிறுவனம், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனமாகத்தான் இருக்கும்.:(

மற்றபடி இரயில் நிலையங்களாகட்டும், இரயில் பாதைகளின் மொத்த கட்டிட வேலைகள் அனைத்திலுமே மொத்த இந்தியத்தனம் பளிச்சிடுகிறது.. பல இடங்களில் வேலைத்தரம் மோசமாக பல்லிளிக்கிறது.. வேலைகளில் நேர்த்தி, வடிவமைப்பில் நிபுணத்துவம் சுத்தமாக இல்லை..

மொத்தத்தில் இது "டிபிக்கல் இந்தியன் வொர்க்..!" :unsure:

பல நாட்டு மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துவிட்டு, சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களைப் பார்த்தால் மிக மிகச் சாதாரணமாகத் தெரியும்.. ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சாயிற்றே..!

சிறப்புற வாழ்த்துவோம்! :grin:

எனது கைப்பேசியில் எடுத்த சில படங்களை கீழே இணைத்துள்ளேன்..

 

2i1i9at.jpg

aktm5k.jpg

qzgaj5.jpg

mv3let.jpg

28cki9c.jpg

x98oy.jpg

hv5te0.jpg

5w05mu.jpg

sevpc1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெட்ரோ ரயில், வெள்ளோட்டம் (29.06.15) விடப்பட்டு, ஒரு மாதத்தின் பின், நீங்கள் பயணித்துள்ளீர்கள். 
நீங்கள் எடுத்த, படங்களைப் பார்க்கும் போது.... ரயில் நிலையத்தின் தரை மினுங்குகின்றது, ரயில் சுத்தமாக உள்ளது.
ஆனால்.... ஆக்களை மட்டும் காணவில்லை. பயணச் சீட்டின், விலை அதிகம் என்பதால்.... அதில் பயணிக்கும் மக்கள் குறைவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெட்ரோ ரயில், வெள்ளோட்டம் (29.06.15) விடப்பட்டு, ஒரு மாதத்தின் பின், நீங்கள் பயணித்துள்ளீர்கள். 
நீங்கள் எடுத்த, படங்களைப் பார்க்கும் போது.... ரயில் நிலையத்தின் தரை மினுங்குகின்றது, ரயில் சுத்தமாக உள்ளது.
ஆனால்.... ஆக்களை மட்டும் காணவில்லை. பயணச் சீட்டின், விலை அதிகம் என்பதால்.... அதில் பயணிக்கும் மக்கள் குறைவா?

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ஏறக்குறைய 10 கி.மீ தூரம் இருக்கும்.. ஆனால் இந்த தூரத்தைக் கடக்க ரூ.40 என்பது அதிகமான கட்டணம்தான். மேலும் இந்த வழித்தடத்தில் ஈகாட்டுத்தாங்கல் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் குடியிருப்பு பகுதிகள், அதிக அலுவலகங்கள் கிடையாது. ஆகவே வணிக முக்கியத்துவமோ, இணைப்பு வசதிகளோ தற்பொழுது இல்லாத நிலையில், உயர்தட்டு மக்களும் பயணம் செய்ய அதிக வாய்ப்பு இல்லைதானே..?

இரு வழித்தடங்களும் முற்றாக வேலை முடிந்து, முழுத்திட்டமும் அமல்படுத்தப்பட்ட பின்தான் மெட்ரோ இரயிலின் செல்வாக்கு வீச்சு பற்றி அளவிடமுடியும் சிறி.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.