Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13912298_1637870446541972_8616815528326804192_n.jpg?oh=2407ca1685f49f1081a3a6bb06206a91&oe=5869BF03

படிக்காத மேதையின் கேள்வி.

  • Replies 224
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

ராசவன்னியன்

Update:   சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்திற்கு தேவையான தடையில்லா மின்சாரம் வழங்க உயர் அழுத்த மின்சார நிலையம் (230/110kV) நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் அழுத்த மின்சார நிலையம் (2

suvy

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினா

குமாரசாமி

இந்தியா விண்வெளியில் ஆராய்ச்சி செய்வதை ஒருசில வருடங்கள் நிறுத்திவிட்டு..... ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் மகளுக்கும்   மருத்துவ மலசல வசதிகளை செய்துதர முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

படிக்காத மேதையின் கேள்வி.

நீரும் முக்கியம், ரயிலும் முக்கியம்..மறுக்கவில்லை!

ஆனால் எந்த வசதியும், அதனை பயன்படுத்திக்கொள்ளப்போகும் மக்கள் தொகையின் அளவைக் கொண்டே அளவிடமுடியும்(ஏழு மாவட்ட பரப்பளவைக் கொண்டு அல்ல) என்பது படிக்காத மேதை அறிவதும் முக்கியம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உத்தேசிக்கும் அழகர்கோவில் அணையினால் நிலத்தடி நீரை உயர்த்த(Recharge) பயன்படப்போவதாக அறியும் மாவட்டங்கள், பழைய இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலியின் வறட்சியான பகுதிகளான விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் விளாத்திகுளம் முதலியன. ஆனால் இவ்வணையின் நீரவரத்திற்கான சாத்தியக்கூறுகள் வைகை ஆற்றின் நீர் உற்பத்தி பகுதிகளாகும்..இவை கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மாநில எல்லையில் உள்ளது..

ஏற்கனவே முல்லைப்பெரியாறு குடிமிப்பிடி சண்டை முடிந்தபாடில்லை, இதில் வைகை நீர்பிடிப்பு பகுதியில் அரிதாக கிட்டும் உபரி நீரினை அழகர் கோவில் அணைக்கு நீராதாரமாக வழங்க மலையை குடைந்து சுரங்க நீர்வழியமைக்க கேரள அரசும், தமிழக அரசும் இணைந்து செய்ய முன்வருமா?

அணை அமைக்கும் சாத்தியக்கூறுகளை பொறியாளர்களாலும், ஆட்சி பீடத்தில் இருப்பவர்களாலும் தீர ஆராய வேண்டிய விடயம்..

Edited by ராசவன்னியன்
  • Like 1
Posted (edited)

பேசும் படங்கள்: ஏர்போர்ட் - சின்னமலை மெட்ரோ சேவை

p_3017706f.jpg
 
விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

1_3017699a.jpg

சோதனை முன்னோட்டமாக நேற்று (செவ்வாய்க் கிழமை) இயக்கிப் பார்க்கப்பட்ட ரயில்

2_3017697a.jpg

f5671e8d-8b43-41ef_3017695a.jpg

தயார் நிலையில் இருக்கும் மெட்ரோ ரயில்கள்

198c65b5-781a-4755_3017703a.jpg

2072a398-a443-4e61_3017696a.jpg

b9a49868-1b59-44f0_3017701a.jpg

மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம்தொடங்கி வைத்தார்.

465898c1-58a3-40b7_3017702a.jpg

நிகழ்ச்சியில் பேசும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு

39432101-315f-4d9d_3017700a.jpg

முதல் ரயிலை இயக்கும் பெண் ஓட்டுநர் அம்சவேணி

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படங்கள்-ஏர்போர்ட்-சின்னமலை-மெட்ரோ-சேவை/article9131449.ece?homepage=true

விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஒட்டுநர் அம்சவேணி | படம். ம.பிரபு
மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஒட்டுநர் அம்சவேணி | படம். ம.பிரபு

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார்.

சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந் தபடி ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து விமானநிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன.

விமான நிலையம், மீனம் பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கி மலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

197cf686-0875-4b01_3017679a.jpg

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், ''2-ம் கட்ட மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. 45 கி.மீல் இதுவரை 19 கி.மீக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும்'' என்றார்.

விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/விமான-நிலையம்-சின்னமலை-மெட்ரோ-ரயில்-சேவை-காணொலி-காட்சியில்-ஜெயலலிதா-தொடங்கி-வைத்தார்/article9131410.ece?homepage=true

Edited by நவீனன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யூலை 17, 2013 அன்று ராசவன்னியரால் யாழ்களத்தில் ஓடவிட்ட மெற்றோ மாநகர தொடரூந்து (Metro Rail) பற்றி தற்போதுதான் அறிந்து பார்த்துப் படித்தேன். முன்பே அறிந்திருந்தால் என் கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். அதனைப் பின்பற்றியும் மெற்றோ மாநகர தொடரூந்து உருவாகியிருக்கும். இன்று ஆகா, ஓகோ என்று வாழ்த்துபவர்களும், மூக்கில் விரல்வைத்து அசந்துபோயிருப்பார்கள்.:(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினாவரை  விரட்டி இருக்கலாம் ....! tw_blush:

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Paanch said:

கவலை வேண்டாம் பாஞ் ஐயா..
தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை..

தீராத பிரச்சனையால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை பறக்கு இரயில் திட்டமும்(Madras Rapid Transit System-MRTS), அதன் பின்னனியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும்(CMRL), சென்னை பறக்கும் ரயில் திட்டமும் குழப்பமின்றி இணையும் வழிமுறையையும் வகுக்க தகுந்த ஆலோசகரை(Consultant) தமிழக அரசு தேடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆழ்ந்த அனுபவமிக்க தாங்கள், அப்பதவிக்கு தகுதியானவர்தான்..

தாங்கள் விண்ணப்பிக்கலாமே!

Check here:   Hunt for Consultant

"In a step ahead for Chennai Metro Rail taking over the Mass Rapid Transit System (MRTS), a consultant will be appointed in about two months for facilitating the process.

According to officials of Chennai Metro Rail Limited (CMRL), tenders have been called to appoint the consultant and the process may be completed in about a month. “The consultant will draft the terms with regard to issues such as finance and operations. We had a discussion with the officials of Railways sometime ago. We hope to complete the merger at least in about 3-5 years,” an official said.."

contind...

19SEPSTS01_Tend_G6_3016380f.jpg

6 hours ago, suvy said:

இவர் ராசவன்னியர் எப்பவுமே அவசரக் குடுக்கை ....! அப்பவே பாஞ்ச்சுடன் காதும் காதும் வைத்தமாதிரிப் பகிர்ந்திருந்தால் , அமீரகமும் அல்மானும் (ஜெர்மனி) சேர்ந்து அண்ணாநகரில கண்ணா பிண்ணா வென்று மெட்ரொவை மெரினாவரை  விரட்டி இருக்கலாம் ....! tw_blush:

அமீரகம் தயார்தான், 'அல்மான்' தான் அல்வா குடுக்குது..! vil-blagueur.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை 'விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம்' - வெளிப்புற தோற்றம்..

Photo2339.jpg  Photo2340.jpg

Photo2341.jpg  Photo2351.jpg

ஒப்பீட்டில் 'ஆலந்தூர் மெட்ரோ நிலைய'த்தைவிட உட்புறத்தில் வேலைத் தரமும், அழகும் குறைந்த விமான நிலைய மெட்ரோ நிலையம்..

பல வெளிநாட்டு பயணிகள் பயன்படுத்தக்கூடிய இந்நிலையம், உட்புற வேலைப்பாட்டில் தரம் குன்றி அமைந்தது துரதிஷ்ட்டமே!

Photo2344.jpgPhoto2347.jpg

Photo2348.jpgPhoto2346.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆலந்துர் மெட்ரோ நிலைய முகப்பு

Photo2367.jpg  Photo2368.jpg

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ராசவன்னியன் said:

கவலை வேண்டாம் பாஞ் ஐயா..
தங்கள் சேவை தமிழ் நாட்டிற்கு தேவை..

தீராத பிரச்சனையால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் சென்னை பறக்கு இரயில் திட்டமும்(Madras Rapid Transit System-MRTS), அதன் பின்னனியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனமும்(CMRL), சென்னை பறக்கும் ரயில் திட்டமும் குழப்பமின்றி இணையும் வழிமுறையையும் வகுக்க தகுந்த ஆலோசகரை(Consultant) தமிழக அரசு தேடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆழ்ந்த அனுபவமிக்க தாங்கள், அப்பதவிக்கு தகுதியானவர்தான்..

தாங்கள் விண்ணப்பிக்கலாமே!

அமீரகம் தயார்தான், 'அல்மான்' தான் அல்வா குடுக்குது..! vil-blagueur.gif

ஈழத்தமிழன்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் முதலில் தலை வணங்குகிறேன். இருந்தும் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாழவைத்திருக்கும் ஒரு நாட்டைக் கேவலப்படுத்தியதால் என் சேவையைத் தமிழ்நாட்டிற்கு வழங்க நான் தயாரில்லை என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன். tw_cry:

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த விரிவான திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி, 104 கிலோ மீட்டர்  தொலைவுக்கு  104 ரயில் நிலையங்களுடன் உருவாக்கப்பட உள்ளது.

மாதவரம்-சிப்காட்,

கோயம்பேடு -கலங்கரை விளக்கம்,

மாதவரம் - சோளிங்கநல்லூர்

உள்ளிட்ட  மூன்று வழித்தடங்களில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற உள்ளது. அதாவது, மாதவரத்தில் இருந்து பாடி, வளசரவாக்கம் மற்றும் மேடவாக்கம் வழியாக சிப்காட் வரை ஒரு தடம் அமைக்கப்பட உள்ளது. கோயம்பேட்டில் இருந்து  கலங்கரை விளக்கம் வரை ஒரு தடம். மாதவரத்திலிருந்து பெரம்பூர், லஸ், அடையாறு மற்றும் ECR வழியாக  சோளிங்கநல்லூர் வரை ஒருத் தடம் அமைக்கப்பட உள்ளது.

விகடன்

nlec7n.jpg

Posted

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, இசைக்கலைஞன் said:

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

முடியல..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, இசைக்கலைஞன் said:

அங்க அம்மா, சின்னம்மானு ஒரே களேபரமா இருக்கு.. இங்க நீங்க ரயிலு உட்டு வெளானுகீரிங்களா?! :D: tw_dizzy: tw_blush:

சின்னம்மா பெரியம்மா, சித்தப்பு பெரியப்பு சச்சரவுகளை தீர்க்க காலம் பத்தாது.. சந்துல சிந்துபாடி ரெயில் விட வேண்டியதுதான்!

இன்று காலை பேரனுடன் கோயம்பேட்டிலிருந்து விமான நிலையம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தேன்..

ரயில் பெட்டிகளும், டிக்கட் வழங்கும் வசதிகளைத் தவிர அனைத்து கட்டிட அமைப்புகளும், உள்ளக வேலைப்பாடும், ரயில் தட மேம்பால வழிகளின் வேலைப்பாடும் பல்லிளிக்கிறது. தாழ்ந்த இந்தியத் தரம் பளிச்சிடுகிறது.

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என திருப்தியடைய வேண்டியதுதான்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை, திருமங்கலம் - நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கும்-அதிகாரிகள் தகவல்!

201704012316566117_Tirumangalam--Metro-r

சென்னை:

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23 கிலோ மீட்டர் தூரம் முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன. இதில் முதல் கட்டமாக 2–வது வழித்தடத்தில் உள்ள உயர்த்தப்பட்ட பாதையான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 வழித்தடத்திலும் சுரங்கப்பாதையிலும், உயர்மட்ட பாதையிலும் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இந்த சுரங்கப்பாதையில் பயணம் செய்ய மக்கள் ஆர்வமாக இருப்பதால், எப்போது ரெயில் சேவை தொடங்கப்படும்? என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

ஜூன் மாதம்

திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை உள்ள 7.6 கிலோ மீட்டர் தூரப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்து உள்ளன. இந்தபாதையில் மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னைக்கு வந்து இறுதிக்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட உள்ளார்.

இதனைத்தொடர்ந்து வரும் ஜூன் மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்த பாதையில் கோயம்பேடு முதல் திருமங்கலம் வரை உயர்த்தப்பட்ட பாதையாகும். திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் வரை சுரங்கப்பாதையாகும். இதில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரை சிக்னல் மற்றும் மின்சார இணைப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் சோதனை ஓட்டமும் நடந்து வருகிறது.

வண்ணாரப்பேட்டை– விம்கோ நகர்

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் தூரத்துக்கான விரிவாக்கத்தில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, சுங்கச்சாவடி, தாங்கல், கவுரி ஆசிரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் ஆகிய 8 ரெயில் நிலையங்கள் வர உள்ளன. இதில் சர் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை ஆகிய 2 ரெயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைய உள்ளன. மீதம் உள்ள 6 ரெயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் வர உள்ளன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து முதல் 2 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. ‘ஆப்கான்ஸ்’ நிறுவனத்துக்கு பணிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள 7 கிலோ மீட்டருக்கு விரைவில் பணிகள் தொடங்க உள்ளன. 2018–ம் ஆண்டு இந்தப்பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தினத்தந்தி

டிஸ்கி:

யப்பாடா, இனி சென்னை சென்றால், விமான நிலையத்திலிருந்து வீடு செல்ல வாடகை மகிழுந்துகளுக்கு வரிசையில் தொங்கிக்கொண்டிருக்க தேவை இல்லை..

மெட்ரோ ரயில் சேவையை அதிகாலை 4:30 மணிக்கு தொடங்கினால், விமான நிலையதிற்கு செல்லும் / வரும் பயணிகள் அதிகம் பயன்பெறுவர். மெட்ரோ ரயில் சேவையின் நோக்கமும் முழுமையடையும்..!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை(14-05-2017) திறக்கவிருக்கும் சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த கட்ட நகர்வான 'சுரங்கப் பாதையில்' அண்ணா நகர் திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்க வழியில் ரயில் சேவை மக்களுக்காக காத்திருக்கிறது..

சில படங்கள் இங்கே பார்வைக்கு..!

20170510a_004101008.jpg

பச்சையப்பன் கல்லூரி ரயில் நிலையம்.

20170509_174005.jpg

திருமங்கலம் ரயில் நிலையம்.

20170509_175313.jpg

ஷெனாய் நகர் ரயில் நிலையம்.

C_m7zxGUAAA8zf0.jpg

அண்ணாநகர் கிழக்கு ரயில் நிலையம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுரங்க தளத்திலிருக்கும் ரயில் நிலையங்களின் படங்கள்..!:)

Metro_1_3163800g.jpg

metro_3163797g.jpg

12_BLPRU_METRO1_3163819g.jpg

12_BLPRU_METRO3_3163817g.jpg

34452635792_4221f94a39_b.jpg

34452635012_358722b1e2_b.jpg

34452634492_d9a816da13_b.jpg

34452635422_e50b288259_b.jpg

34452633982_0f821278c0_b.jpg

நாளை திறக்கவிருக்கும் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை எனக்கும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. :grin:

காரணம், என் சென்னை வீட்டருகே 100மீ தொலைவில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது..  அனைத்து ரயில் நிலையங்களிலும், "காய் ரே.. ஆஜ் மே.." என அந்நிய மொழியில் இல்லாமல் எம் தாய்மொழி தமிழிலில் எங்கும் அறிவிப்புகள் மற்றும் பலகைகள்..!

இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மெட்ரோ ரெயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்!

சென்னை:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே நாளை தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப் படும்.

ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம்.

மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.

மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம்.

ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம்.

மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம்.

ரெயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம்.

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை.

ரெயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உட்பட்டு) விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.

http://www.maalaimalar.com/News/TopN...in-damages.vpf

Mock Fire Drill..

34452080062_51354890b8_b.jpg

34227837340_553b1ce153_b.jpg

34452079052_7f35d8d057_b.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ராசவன்னியன் said:

நாளை திறக்கவிருக்கும் சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை எனக்கும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.. :grin:

காரணம், என் சென்னை வீட்டருகே 100மீ தொலைவில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது..  அனைத்து ரயில் நிலையங்களிலும், "காய் ரே.. ஆஜ் மே.." என அந்நிய மொழியில் இல்லாமல் எம் தாய்மொழி தமிழிலில் எங்கும் அறிவிப்புகள் மற்றும் பலகைகள்..!

இத்திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகள்..!

இன்று ஆரம்பிக்க இருக்கும்.... மெட்ரொ ரயில் சேவைக்கு வாழ்த்துக்கள். :)
ரயில் நிலையங்கள்.... மிக அழகாக கட் டப்  பட்டுள்ளமையுடன், 
தமிழுக்கு  முன்னுரிமை கொடுத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ரயிலின்... வெள்ளோட்ட காணொளிகள் கிடைத்தால், இணைத்து விடுங்கள்  ராஜவன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 hours ago, தமிழ் சிறி said:

இன்று ஆரம்பிக்க இருக்கும்.... மெட்ரொ ரயில் சேவைக்கு வாழ்த்துக்கள். :)
ரயில் நிலையங்கள்.... மிக அழகாக கட் டப்  பட்டுள்ளமையுடன், 
தமிழுக்கு  முன்னுரிமை கொடுத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. 
ரயிலின்... வெள்ளோட்ட காணொளிகள் கிடைத்தால், இணைத்து விடுங்கள்  ராஜவன்னியன்.

பச்சைகளையும், வாழ்த்துக்களையும் வழங்கிய உறவுகளுக்கு மிக்க நன்றி..! happycopains.gif

எனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு மெட்ரோ நிலையம் அமைந்திருந்தாலும், வெளிநாட்டில் வசிப்பதால் சென்னை மெட்ரோ சுரங்க வழியில் பயணம் செய்ய, இன்னும் அரை வருடம் நான் காத்திருக்க வேண்டும்..

சுரங்க வழியில் ரயில் சேவை துவக்க விழா படங்களும் காணொளிகளும் கீழே..!1

34603504216_fd0211133a_b.jpg

துவக்க விழா..

34647778595_9c7ed072c9_z.jpg

அமைச்சர்களின் முதல் துவக்கப் பயணம்..

34647778915_e7534ba623_z.jpg

34517050991_5be356fbc3_z.jpg

34647778215_30dd4a7fbe_z.jpg

பொதுமக்கள் பயணம்..

காணொளிகள்..

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  அரசாங்கம் அப்படி இப்படி போனாலும் மெட்ரொ நேராய் போகுது. நல்லாய் இருக்கு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 13.5.2017 at 3:35 PM, ராசவன்னியன் said:

மெட்ரோ ரெயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயில்!

சென்னை:

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே நாளை தொடங்கி வைக்கப்படும் சுரங்க மெட்ரோ ரெயிலை தவறாகப் பயன்படுத்தினால் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரெயில் சொத்துகளுக்கு ஊறுவிளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப் படும்.

ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம்.

மெட்ரோ ரெயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்துக்குள் நுழைபவர்களுக்கு 3 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ.250 அபராதம்.

மெட்ரோ ரெயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம்.

ஓடும் ரெயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம்.

மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு தொல்லை கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 அபராதம்.

பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தால் ரூ.50-ம், பயணத்துக்கான பயணக் கட்டணத்தோடு அபராதம்.

ரெயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம்.

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை.

ரெயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை (சட்ட விதிகளுக்கு உட்பட்டு) விதிக்கப்படும்.

மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை.

பொய்யான புகார்கள், பொய்யான நிவாரணம் கோருபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும்.
http://www.maalaimalar.com/News/TopN...in-damages.vpf

ரயில் ஒழுங்காய் ஓடுதோ இல்லையோ.......இப்படி கடுமையான சட்டங்கள்தான் அடுத்த சந்ததியை கட்டுக்கோப்புடன் வாழவைக்கும்.

அரசு! உந்த சினிமா கட்டவுட்டுகளுக்கு பால் ஊத்துறதையும் நிற்பாட்டினால் அரைவாசி தமிழ்நாடு எதுவுமே இல்லாமல் முன்னேறிடும்.:grin:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Update:

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்தில் அடுத்த கட்டமாக இடபெறவிருந்த சென்னை கலங்கரை விளக்கம் முதல் கோயம்பேடு வழித்தட திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதே வழித்தடம் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படுகிறது..

(இதே வழித்தடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினால் திட்டமிடப்பட்டிருந்த "மோனோ ரயில் திட்டம்" இனி என்னவாகும் என தெரியவில்லை! rougir5.gif )

மற்றுமொரு இனிய செய்தி..

கோயம்புத்தூரிலும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது..

இவற்றுக்கான அறிவிப்பை இன்று சட்டசபையில் முதல்வர் அறிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று வட பழனி - அரும்பாக்கம் இடையே சென்னை மெட்ரோ இரயிலின் என்ஜின் பழுதால், பயணிகள் அருகேயுள்ள அடுத்த ரயில் நிலையத்திற்கு நடந்து செல்லும் காட்சி..!

Typical Indian quality of operation & maintenance..?

7c56e5f763b275f5ad882d8216b0f839.jpg

8c4e81617fe2c9033463cac428c6fe7b.jpg

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.