Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரெழு ஜாமா இறைவன் வரமா? நிஐத்தோடு கூடிய சில கர்ணபரம்பரைக் கதைகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊரெழு மேற்கு பொக்கனை சுண்னாகத்தில் அமைந்துள்ள வரலாற்று சான்றுமிக்க ஒரு இடம் தான் ஜாமா.

இது எப்போது உருவானது என்பது பற்றி தகவல்களை அறிய முடியவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இங்கு காணப்படும் ஜாமாவின் சிறப்பம்சம் என்னவெனில்,

ராமரும் சீதையும் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டனர் அவ் வேளையில் ராமருக்கு தாகம் ஏற்பட்டதும் நிலாவரையில் அமைந்துள்ள தொட்டியில் தண்ணீர் பருகி தனது தாகத்தினை தீர்த்துக் கொண்டார்

DSCF3093-300x225.jpg

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஊரெழுக்கிராமத்தை அடைந்தனர். அப்போது சீதைக்கு தாகம் ஏற்பட்டது சீதையின் தாகத்தினை தீர்ப்பதற்காக ராமர் அருகில் இருந்த ஜாமாவுக்கு சென்று தன்னுடைய வில்லை ஊன்றி தண்ணீரை எடுத்து சீதையின் தாகத்தினை தீர்த்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர்

இராமர் வில் ஊன்றி தண்ணீர் எடுக்கும் போது இராமருடைய பெருவிரல் அடையாளமும் முளங்கால் அடையாளமும் தரையில் பதிந்து காணப்படுகிறது (வலக்காலை முளங்கால் படுமாறும் இடது காலை பாதம் படுமாறும் ஊன்றி தண்ணீரை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது)

இந்தஜாமாவானது பல அழிவுகளையும் ஏற்படுத்தியது. ஜாமாவின் மேற்பகுதி ஒரு சாதாரண குட்டையாக தான் காணப்படுகிறது ஆனால் அடிப்பகுதியில் ஒரு பெரிய அகழியே காணப்படுகிறது

அது பற்றி சில கர்ண பரம்பரைக் கதைகள் ஊர் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.….

ஜாமாவுக்கு அருகில் உள்ள ஆலயத்தில் பூசை செய்யும் பூசகரின் கனவில் ஜாமாவின் அடிப்பகுதியில் ஒரு சூலம் இருப்பதாகவும் அது 8கி.கி.தங்கத்தினால் ஆனது என்றும் காட்டி இருந்தது. அதனை ஊர் மக்களிடத்தில் கூறியிருந்தார் அதனைக்கேட்டு ஒருவர் ஜாமாவின் அடிப்பகுதிக்குள் இறங்கி பார்த்துவிட்டு மேலே வந்து கூறினார் ‘ஒரு சூலம் இருப்பதாகவும் அதனை சுற்றி பாம்புகள் இருப்பதாகவும் அதுமட்டும் அல்லாது கீழே பெரிய ஆறே ஓடுகிறது எனக்கூறினார் பின்னர் மறுபடியும் அந்த சூலத்தினை எடுப்பதற்காக ஜாமாவின் அடிக்குள் இறங்கியிருந்தார் பல மணி நேரமாகியும் அவர் மேலேவரவில்லை அவர் இறந்திருக்கலாம் என நம்பப்பட்டது

அதுமட்டும் இல்லாது இந்த ஜாமாவுக்கும் கீரிமலைக்கும் தொடர்பிருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. அதனை எவ்வாறு கிராம மக்கள் அறிந்தார்கள் என்றால் ஓரு தேசிக்காயினை ஜாமாவுக்குள் போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்கின்றது என்பதாலாகும்.

கீரிமலைக் கடல் கொந்தளிக்கும் போது இவ் ஜாமாவானது தண்ணீரை வெளியில் தள்ளுகின்றது இதனால் அக்கிராமம் வெள்ளத்தில் மூழ்கிவிடும் இவ்வாறு பல முறை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு மூழ்கும் போது அக்கிராமத்தில் உள்ள வீடுகள் ஆடு மாடு கோழி மற்றும் விவசாயம் போன்றவை அழிந்துபோயின. இவ்வாறான நேரத்தில் தொடர்ந்து வெள்ளம் 5 6 நாட்கள் வற்றாமல் இருக்கும். அதுவரைக்கும் மக்கள் அயல் கிராமங்களிளல் குடியேறுவார்கள.; பின்னர் கடல் கொந்தளிப்பு குறைந்ததும் ஜாமா தண்ணீரை இழுத்துவிடும.; பின்னர் மக்கள் தமது கிராமத்துக்கு வந்து குடியேறுவார்கள். இவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு பல அமைப்புகள் உதவிசெய்துள்ளன.

இந்த ஜாமாவை பார்வையிடுவதற்காக சுற்றுலாப்பயணிகளாக வெளிநாட்டவர்களும் சிங்களவர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்

தேசிய நீர் வளங்கள் வடிகாழல் அமைப்பு சபையினர் ஜாமாவை புனரமைத்து நீர் வழங்கும் வளமாக மாற்றி அமைத்துள்ளனர். இதற்கருகில் குழாய் கிணறுகள் அடித்து குழாய்கள் மூலம் இங்கிருந்து மானிப்பாய் சங்குவேலி சுன்னாகம் ,கந்தரோடை, கட்டுடை, நவாலி போன்ற இடங்களிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு .பயனாளிகளிடமிருந்து நீர் விநியோக அடிப்படையில் பணம் அறவிடப்படுகிறது.

cropped-cropped-edit-oodakam1.jpg

பெயரை மாத்துங்கப்பா முஸ்லிம்கள் வந்து தங்கள் இடம் எண்டு சொல்ல போகிறார்கள்  :lol: 

 

இணைப்பிற்கு நன்றி

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் நண்பர்களுடன் பொக்கனையை சென்று பார்த்துள்ளேன். அச்சமயம் அந்தஇடம் கல்லும் மண்ணும் கலந்த கலட்டிநிலமாக மேடு பள்ளங்களுடன் கூடியிருந்தது. இங்கு காணப்படும் கட்டிடங்களோ அணைகளே அன்றில்லை. ஒரு சரிவான இடத்தில் 6 - 7 அடி ஆழமுள்ள சிறு குழிபோல் பொக்கனை காட்சிதந்தது. அதன் அருகே அமெரிக்கா அன்பளிப்புச் செய்ததாகச் சொல்லப்படும், நீர் இறைக்கும் பெரிய காற்றாலை ஒன்று அலகுகள் கழன்று பாவனையின்றிக் காணப்பட்டது. அந்தக்குழியில் 3 அடி தண்ணீர் இருப்பதாகவும் எத்தனை பெரிய நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பூட்டி இறைத்தாலும் 1 அடிக்குமேல் நீர் வற்றவே வற்றாது என்று எங்களை அங்கு அழைத்துச்சென்ற நண்பன் கூறினான். நீர் சற்று உவர்த்தன்மை கொண்டதால் பயிர்ச்செய்கைக்கு உதவாது, ஆகையினால் அந்த நீரைப்பயன்படுத்த யாரும் அக்கறைப்படவில்லை என்று அறிந்தேன். பொக்கனையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள கிணறுகள் மிகவும் ஆழமாக இருக்கும்போது ஒரு மேட்டில், ஒரு ஆள் உயரமே கொண்ட வற்றாத அந்த நீர்ச்சுனை அதிசயமே. இது பற்றிய சில கர்ண பரம்பரைக் கதைகளையும் அறியத்தந்த நந்தனுக்கு நன்றிகள். தேசிக்காய்க் கதை நிலாவரையிலும் பேசப்படுகிறது.

DSCF3096-1024x768.jpg

ஆறாம் வகுப்பு படிக்கும் போது மதியஇடைவேளைக்கு சில வேளைகளில் பொக்கணை விசிட் அடிப்போம் .அதன் அருகில் ஒரு உயரமான காற்றாடியும் இரண்டு மிக நீளமான இரும்பு குழாய்களும் இருக்கு .அந்த இரும்பு குழாயின் மீது நடந்துதான் சிலவேளைகளில் ஊற்றுக்கு போவோம் .தேசிக்காய் கொண்டுபோய் எறிந்துவேறு பார்த்தோம் .அது எங்கு போய் மிதந்தது என்று ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் .

நிலாவரை மிகவும் பயனுள்ள ஒரு பெரும் நன்னீர் ஊற்று .அது அப்பவே காவலாளிகள் போட்டு ஒழுங்காக பராமரிக்கபட்டுவந்தது .

 

எமது கிராமத்தில் இருந்துதான் யாழ்பாணத்திற்கு குடிநீர் அனுப்பிக்கொண்டு இருந்தார்கள்.அங்கு ஏழு பெரிய மிக ஆழமான கிணறுகள் அங்கு இருக்கு .அவரிற்கிடையில் தொடர்பு இருக்கு என்பார்கள் உண்மை தெரியாது . கிணறுகள் மூடப்படுத்தான் இருக்கு .ஒரு  மூடி அதில் இருக்கு அதனஊடாக திறந்து  உள்ளே பார்க்க முடியும் அந்த காணி கோண்டாவிலில் இருந்து கோப்பாய் போகும் இருபாலை வீதியில் இருக்கு .சுற்றவர முள்ளுக்கம்பி அடித்துவைத்திருந்தார்கள் .அதன் நடுவில் மிக ஆழமாக கிடங்கு தோண்டி அதற்குள்தான் மோட்டார்கள் இரண்டு வைத்திருந்தார்கள் .அந்த மோட்டாரால் தண்ணீர் பம் பண்ணி அனுப்புகின்றார்கள் .அங்கு மோட்டார் இயக்கவும் கண்காணிக்கவும் இருபத்திநாலு மணிநேரமும் ஊழியர் இருப்பார் .இவர்களுக்கு (இரண்டு குடும்பம் ) அதே காணியில் தங்குமிடம் வேறு கொடுத்திருந்தார்கள் .

பற்றையும் புல்லுமாக இருந்த அந்த பெரிய காணியில் விளையாட்டு மைதானம் கேட்டு அன்றைய மேயர் துரையப்பாவிடம் போனோம் .பெரியதொரு மைதானம் எமக்கு அங்கு கிடைத்தது .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பரமேஸ்வராச்சந்தியுடன் (அதாவது இப்போதைய கம்பஸ் சந்தி) யாழ் மாநகரசபையினது அதிகார எல்லை முடிவடைகிறது. அதன்பின்பு திருநெல்வேலி விவசாயப்பயிற்சிப்பள்ளிக்கு அடுத்த பக்கத்தில் இருக்கும் காணியிலேயே யாழ்ப்பாணத்துக்கான நன்நீர் வினியோகக் கிணறு இருக்கின்றது. திருநெல்வேலி, கோண்டாவில், உரும்பிராய் ஆகியன கிராமசபை நிர்வாகத்துக்குள் வருகின்றது. இவை எல்லாம் இப்படி இருக்க எப்படி அல்பிரட் துரையப்பாவிடம் விளையாடக் காணிகேட்டுப் போகவேண்டும். தவிர அல்பிரட் துரயபாவைச் சந்தித்திக்கும் காலம் எழுபதுகளின் ஆரம்பகாலம் அதாவது 19975 யூலைக்கு முன்பு அதாவது படித்த மணோ மொக்கு மணோ வைமன் பஞ்சு அவர்கள் கள்ளுக்குக் கொக்குவில் போனகாலம் அப்போ நீங்கள் தமிழீழத்திற்கான போராட்டத்தின் ஆரம்பகட்டப் பார்வையாளராக இருந்திருக்கிறியள். வஸ்தியன் பிள்ளையைப் போட்டுத்தள்ளியதும் புலிகள் அச்செய்தியை பகிரங்கமாக வீரகேசரியில் வாசித்தவர்களில் நீங்கள் முதல் சந்ததி. அப்போது நான் நினைக்கிறன் உங்களுக்கு பதினேழிலிருந்து இருபத்தி இரண்டு வயதுக்குள் இருக்கலாம். என் ஊகம் சரிதானா நண்பர் அர்சுண். தவிர யாழ் மாநகரசபைக்குச் சொந்தமான காணி கோண்டாவிலில் இருக்கக்கூடாது என்பது என் வாதம் இல்லை.

farm school இற்கு அருகில் இருக்கும் இடம் பற்றியும் முதலில் எழுத நினைத்தேன் நீண்டு விடும் என்று விட்டுவிட்டேன் .farm school தாண்ட தின்னவேலிக்கு முதல் பலாலி வீதியில் வரும் அந்த நிலையத்தில் இருந்துதான் விநியோகம் நடைபெற்றது .கிணறு கோண்டாவிலில் தான் இருந்தது .

எமது மைதானம் எழுபதுகளில் கிடைத்திருக்கவேண்டும் .ஏழு கிணறு வேலையாளர்களின் இருப்பிடத்திற்கு  அடுத்து எமக்கு ஒரு தோட்டமும் இருந்தது .சிறு வயதில் நாம் தோட்டத்தில் நிற்கும் போது அந்த குவட்டேர்ஸ் இல் இருந்த குடும்பத்தலைவி சொல்லுவா "மாட்டுக்கு போடுகின்றமாதிரி தினமும் போடுகின்றேன் உதுகள் திருந்துதுகள் இல்லை" என்று.  பிள்ளைகளுக்கு கொடுக்கும் அடியை பற்றி கணவனிடம் சொல்லும் வசனம் அது .

அந்த வசனம் இன்னமும் பசுமரத்தாணியாக நினைவில் இருக்கு .

 

அந்த நேரம் புலிகள் பற்றி பெரிதாக தெரியாது .ராகவனை நன்றாக தெரியும் .சில வருடங்கள் அவரும் எம்முடன் கிரிக்கேட் விளையாடியவர் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நிலாவரையில் இருந்துதான் காரைநகர் நேவி குடிநீர் எடுத்தது !

கல்வியங்காட்டுக்கும் முத்திரைச்சந்தைக்குமிடையில் யமுனாரி இருக்குது ! அதுவும் வற்றாத கேணி !!

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர் அவரது தந்தை ஒரு ஆசிரியர், இதை ஏன் எழுதுகிறேன் என்றால் அண்மையில் ராகவன் அவரது தம்பியார் அம்பியினது மகளது சாமத்தியச்சடங்குக்கு இந்தியா போனதாகவும். அவர் சென்னைபோய் இறங்குவதற்கு முதல்நாள்  வே.பிரபாகரன் அவர்களுடன் பாண்டிபஜாரில் நடாத்திய துப்பாக்கிச் சூடுசம்பந்தமான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாகவும் அறிந்தேன். அம்பி தொன்னூறுகளில் சென்னையில் வந்திறங்கும் ஈழத்து உதிரிப்போராளி இயக்க உறுப்பினர்களிடமிருந்து சுடுகலன்கள் வாங்கி ஆந்திர நக்சலைட்டுகளுக்கு காசுக்கு வித்தவகையில் ஆந்திரப் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டவர். ராகவன் காவிக்கொண்டு ஓடினது ரஜனிதிரணகமவின் சகோதரியும் நித்தியானந்ததின் பொண்டாட்டியுமாகிய நிர்மலாவை. இந்தியா தற்போது ராகவன், நிர்மலா, டாக்குத்தர் சிவகுமார் (அதுதான் லெட்டர்பாட் அறிக்கையாளர் முன்னைநாள் யாழ் பல்கலைக்கழகச் சமூகம்) இவர்கள் எல்லோரையும்வைத்து இந்திய உளவுப்பிரிவு ரோ ஏதோ திட்டம் போடுது இதுகளுக்கை உங்களையும் இழுப்பினம் மாட்டுப்படாதயுங்கோ. (பாண்டிபயாரில் ராகவன் எதுவுமே செய்யவில்லை தலவருக்குப் பக்கத்தில் கூடப்போனது மட்டுமே மற்றப்படி தமிழீழ விடுதலை வரலாற்றில் புலிகளின் லோக்கல் ரெயினிங் என்று ஆரம்பகாலங்களில் கூறப்பட்ட புலத்து இராணுவப் பயிற்சி எடுத்த கடைநிலைப் போராளி ஒருவனேனும் செய்த சமர்களையோ அன்றேல் விடுதலைக்கான வேலைத்திட்டங்கயோ முன்னெடுக்கவில்லை. ராகவன் என்பவர் எப்போது பிரபல்யம் ஆனார் எனில் தலைவர் கருத்தொருமித்து திருமணம்செய்தபோது, இயக்கத்தில் இருந்து விட்டோடி நிர்மலாவையும் கிளப்பிக்கொண்டுபோக இதுதான் சந்தர்ப்பம் என ஒரு தவறினை தலைவர்மேல் குற்றம்சாட்டிவிட்டு ஓடும்போதேபிரபல்யம் ஆனார். மேலதிக விபரமாக குண்டப்பா அன்றேல் ரகுவப்பா என அழைக்கபடும் சிலகாலம் தலைவருக்கு காவலாக இருந்தவரும் சாமத்தியவீட்டில் கலந்துகொண்டார். இவர் எண்பதுகளின் இறுதியிலே சென்னையில் கியூ பிரிவுடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜாமாவிற்குள் இத்தனை உயரத்திலும் வற்றாமல் நீர் இருக்கின்றது.

 

அறியாத பல தகவல்களை அறியத்தந்த நந்தனுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி :D

எங்கட வீட்டுக்கு பின்னாலை இருந்த வடலீக்கை இராமர் காலைக்கடன் கழிக்க தண்ணியோடை ஒதுங்கினவர் போலை.. பிறகு பனையான அதுகளிலை இருந்து இறக்க இறக்க குறையாமல் கள்ளு வருகுது எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்...

Edited by தயா

எங்கட வீட்டுக்கு பின்னாலை இருந்த வடலீக்கை இராமர் காலைக்கடன் கழிக்க தண்ணியோடை ஒதுங்கினவர் போலை.. பிறகு பனையான அதுகளிலை இருந்து இறக்க இறக்க குறையாமல் கள்ளு வருகுது எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்...

எங்கட வீட்டு வளவுக்குள்ளை இலங்கைய எரித்து விட்டு அனுமன் வரும் வழியில் உச்சா போனவர் அந்த இடமும் பெரும் பள்ளமாகி மழை  பெய்யும் போதெல்லாம் அனுமனின் உச்சா நிரம்பி வழியும் கண்டியளோ தயா (நாங்களும் எழுதுவம் ) :icon_idea: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி நந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமண்ணிலுள்ள வியப்பான, ஆச்சரியமான, அதிசயமான பொக்கணை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள மேற்கொண்ட இந்தப் பதிவிற்கு, மேலும் அறிந்த, அரிய செய்திகளை இணைத்து, அதன் சிறப்புகளை, அதிசயங்களை உலகமறியச் செய்து பெருமைகொள்வதை விட்டு, இராமர் காலைக்கடன் கழிப்பதையும், அனுமன் உச்சா போனதையும் ஆராய்ந்துதான் எங்கள் தாய்நாட்டின் பெருமைகளைச் சிறப்பிக்க வேண்டுமா?. :(  

ஈழமண்ணிலுள்ள வியப்பான, ஆச்சரியமான, அதிசயமான பொக்கணை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள மேற்கொண்ட இந்தப் பதிவிற்கு, மேலும் அறிந்த, அரிய செய்திகளை இணைத்து, அதன் சிறப்புகளை, அதிசயங்களை உலகமறியச் செய்து பெருமைகொள்வதை விட்டு, இராமர் காலைக்கடன் கழிப்பதையும், அனுமன் உச்சா போனதையும் ஆராய்ந்துதான் எங்கள் தாய்நாட்டின் பெருமைகளைச் சிறப்பிக்க வேண்டுமா?. :(

இராமன் எண்டவனே ஒரு கட்டுக்கதை... அப்படி ஒரு பரதேசி வந்து உங்கட ஊரை அழிச்சு போட்டு தண்ணி குடிச்சு போட்டான் எண்ட கட்டுக்கதையை ஊர் பெருமை எண்டுறீயள்... தமிழ் நண்றாக வாழும்...

ஒரு 200 வருசம் கழிச்சு இராசபக்ச வந்து அங்கை தண்ணி குடிச்சவன் எண்டு மகாவம்சம் சொல்லும் அதயும் உங்கட பரம்பரையள் நம்பும் பெருமைப்படும் ...

தமிழனுக்கு மட்டும் தான் எல்லாரும் தலையிலை இலகுவிலை மிளகாய் அரைக்கலாமா இல்லை வேறை ஆக்களுக்குமா...?

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.