பெயர்: சுமந்திரன்
நண்பர்களுக்கு: சுமா
எதிரிகளுக்கு: ஏப்ரஹாம்
அலர்ஜி: ஒற்றுமைக்கு
விவசாயம்: கமெராவுக்கு முன்
போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின்
வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால்
விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால்
படித்தது: நாவன்மை
படிக்காதது: நாவடக்கம்
எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை
இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை
வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி
வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல்
அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை
தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை
நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி
அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி
அண்மைய வெற்றி: பதில் செயலாளர்
தந்திரம்: தமிழரிடம் மட்டும்
பிரயோகிப்பது
இராஜதந்திரம்: கிலோ என்ன விலை?
கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர்
ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு
மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை
மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய
இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது
இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது
வாழ்க்கைக்கு: கொழும்பு
வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம்
எதிரிகளின் ஆயுதம்: சமயம்
நான் எடுக்கும் கேடயம்: சமயம்
அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன்
அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன்
பிடித்த திசை: வடக்கு
பிடித்த படம்: முதல்வன்
முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல
பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
By
goshan_che ·