Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்..? காரணம் பல சொல்கிறார்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Avoid-divorce-news-150.jpg

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே ஆயிற்று� ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.

இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.

மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.

இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான், இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான் ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப் பாருங்கள்...!

http://www.seithy.com/breifNews.php?newsID=88686&category=CommonNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

....முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.

.....

மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.

ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.

இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம் சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்....

http://www.seithy.com/breifNews.php?newsID=88686&category=CommonNews&language=tamil

சுத்த சோப்ளாங்கித்தனமான யோசனைகள்... :wub:

ஆண்கள் கண்ட நேரத்தில் 'நாக்கைத் தொங்கப்போட்டு' வரும் நேரமெல்லாம் பெண்கள் 'ஒத்துழைப்பு' கொடுக்கணுமாம்...அதே பெண்ணிற்கு அப்பொழுது என்ன மனநிலையென ஆண்கள் அறிய தேவையில்லை... நல்லா இருக்குடா நியாயம்! :o

பெண்கள் எப்பொழுதும் ஸ்லிம்மாக தங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டுமென விரும்பும் ஆண்கள், தங்கள் உடல் அழகையும் கவனத்தில்கொள்ள வேண்டுமென பெண்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதை ஒத்துக்கொள்வதில்லை.

தொப்பையை தள்ளிக்கொண்டு, வழுக்கையுடன் வரும் ஆண்களை இன்னமும் பூஜிக்கும் பெண் துணைகள் இருப்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதில் குடி, புகை போன்ற ஆண்களின் நாற்றத்தையும் இருவரும் 'சேர்கையில்' பெண்கள் சகித்து ஒத்துழைக்க வேண்டும்...நல்ல நியாயமடா! :rolleyes:

பிற பெண்களிடம் தனக்கு பிடித்த குணத்தையும், அழகையும் கண்டேன், அதனால் அவளை விரும்ப எத்தனிக்கிறேன் என வாதிக்கும் சுயநல ஆண்கள், இதையே தங்கள் வீட்டுப்பெண்களும் திருப்பி செய்ய ஆரம்பித்தால் குடும்பத்தின் நிலையென்ன என சிந்திக்க வேண்டும்..

ஆயிரம் காரணங்களைச் சொல்லி தங்கள் தடுமாற்றத்திற்கு நியாயம் கற்பிக்க எண்ணும் வக்கற்ற ஆண்கள், பெண்களும்,ஆண்களும் எல்லாவிதத்திலும் சரிபாதி, இணை என்று எக்கணம் பொறுப்போடு பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளை போகபொருளாக எண்ணாமல் கனிவுடன் அணுகுகிறானோ, அவனே ஆண்மகன் என சொல்லத் தகமை படத்தவன்! காய்ந்த மாடு கம்மங்கொல்லையில் விழுந்தவைகளெல்லாம் அல்ல..!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை விலக்க நூறு  காரணங்கள் என்றால்  ஆவளுடன் கலக்க ஓரிரு காரணங்கள் கூடவா கிடைக்காது ! :blink:

Edited by suvy

பெண்களை  (ஆண்கள் ) கவர்வது எப்படி ஒரு கட்டுரை இவ்வளவு ஆக்ரோசமாக கருத்து வரவில்லையே தலைவா  :( 

உங்கள் கருத்துடன் உடன்படும் அதே நேரம்

ஆயிரம் காரணங்களைச் சொல்லி தங்கள் தடுமாற்றத்திற்கு நியாயம் கற்பிக்க எண்ணும் வக்கற்றவர்கள் , பெண்களும்,ஆண்களும் எல்லாவிதத்திலும் சரிபாதி, இணை என்று எக்கணம் பொறுப்போடு தங்களின் துணைவனின் / துணைவியின்  உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளை/அவனை  போகபொருளாக / உழைக்கும் இயந்திரமாக எண்ணாமல் கனிவுடன் அணுகுகிறானோ/ளோ , அவனே/ளே better half (துணைவன்/துணைவி) என சொல்லத் தகமை படத்தவன்/ள்!

:D  :D 

Edited by கா ளா ன்

தன்னை நம்பி வந்த பெண்ணையும், வாரிசுகளையும் வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஆண்களுக்கிருக்கிறது..(தன் தலையை அடகு வைத்தாவது). இதையே சமீபத்தில் இந்திய நீதிமன்ற தீர்ப்பும் அடித்துச் சொல்லியிருக்கிறது.

நான் மேலே குறிப்பிட்டவைகள் நாட்டில் நடைபெறும்/எதிர்பார்க்கும் சம்பவங்களின் அடிப்படையிலேயே!

தங்கள் கருத்துக்களுக்கு, நன்றி கா ளா ன்!

உழைக்கும் இயந்திரமாக பார்க்க வேண்டாம் என்றேனே தவிர உழைத்து குடும்பத்தை காப்பாற்றாமல் சோம்பேறியாக இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை அண்ணா   :) 

  • கருத்துக்கள உறவுகள்

தசதரனுக்கு 60ஆயிரம் பெண்டாட்டிகள் உள்ளபோது, அவரது நாட்டிலுள்ள அத்தனை ஆண்களுக்கும் எத்தனை பெண்டாட்டிகளோ!!! :icon_idea: பிருந்தாவனத்தில் அத்தனை கன்னிப் பெண்களும் கண்ணணுடைய காதலிகள் :wub:. அந்த யோகம் இன்றைய ஆண்களுக்கும் இருந்தால் அவர்கள் ஏன் மேலும் ஒரு பெண்ணைத் தேடப்போகிறார்கள்??? :D 

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிடம் உடலுக்கு அப்பால் ஒரு சுவாரசியமும் (இதுவும் காணாததை காணும் வரை தான்) இல்லை என்பதால்..! கலியாணம் கட்டின நாள் முதல்.. ஒரே ஒரு வாழ்க்கையை திரும்பத் திரும்ப அதே முறையில்.. எப்படி வாழுறது. முடியாதுப்பா.. கற்பனை பண்ணிக்கவே முடியல்ல. இதில எப்படி கட்டிக்கிட்டு வாழினமோ..! அதுக்கும் ஒரு தியாக மனப்பான்மை வேண்டும். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, எம்மைத் தியாகிகள் என முன் மொழிந்த்ததற்கு !  இந்த வெக்கையிலும்  பழஞ்சோத்துத்தண்ணீ  குடித்தமாதிரி ஜில் என்றிருக்கு ! :D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களிடம் உடலுக்கு அப்பால் ஒரு சுவாரசியமும் (இதுவும் காணாததை காணும் வரை தான்) இல்லை என்பதால்..! கலியாணம் கட்டின நாள் முதல்.. ஒரே ஒரு வாழ்க்கையை திரும்பத் திரும்ப அதே முறையில்.. எப்படி வாழுறது. முடியாதுப்பா..

இதே கருத்து,

பெற்ற தாய்க்கும் பொருந்துமா? அவரும் பெண் தானே?

மனித வாழ்க்கையில் ஒரே அம்மாதானே ஒருத்தனுக்கு இருக்க முடியும்?

சுவாரசியம் இல்லாமல் அம்மா சலித்துவிடுமா?

அதே தாய்க்குப் பின் மனிதனுக்கு தாரம்தானே ஆறுதலான மாற்று?

பெண்களைப் பற்றிய உங்களின் பார்வையும், அளவுகோலும் மாற்றம் பெற வேண்டும்..காலம் செல்லச் செல்ல அதில் மாற்றம் நிச்சயம் வந்தே தீரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுவாரசியம் இல்லாமல் அம்மா சலித்துவிடுமா?

அதே தாய்க்குப் பின் மனிதனுக்கு தாரம்தானே ஆறுதலான மாற்று?

பெண்களைப் பற்றிய உங்களின் பார்வையும், அளவுகோலும் மாற்றம் பெற வேண்டும்..

முருகனுக்கு அம்மாவும் சலித்துத்தானே பழநியாண்டவர் ஆனார். தெய்வயானையும் சலித்துத்தானே வள்ளியைத் தேடிப்போனார். இப்படியெல்லாம் எங்களுக்குப் பாடசாலையிலேயே எள்ளாகப் பாடம்சொல்லி வளர்த்துவிட்டு இன்று நெல்லாக விளையவில்லையே என்று கவலைகொள்வதில் என்ன பயன். தமிழர்கள் கற்கைநெறி ஊடாகவும் தங்கள் தனித்துவத்தையும், வாழ்க்கை நெறியையும் இழந்திருக்கும் உண்மையை உணர்ந்துகொண்டு தங்களின் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பின் அளவுகோலும் மாற்றம் பெற வேண்டும்.

பாஞ்ச்..., அதே பாடசாலயில் படித்த மாணவமணிகள்,

மகாபாரதத்தில் திரளெபதிக்கு ஐந்து கணவன்மார்கள் இருந்தார்கள், பராமரித்தார்கள் என்பதை படித்துவிட்டு அதையே வேதவாக்காக நடக்க முற்பட்டால் நாடு தாங்குமா?

இராவணன் பிறன் மனைவியைக் கவர்ந்தான்... என படித்துவிட்டு ஊரிலுள்ள அடுத்தவன் மனைவியை நோட்டம் விடும் செய்கைகளை ஊக்குவிப்பீர்களா?

புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்படும் நல்லவற்றை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாக, எடுத்துக்காட்டாக அன்னம் போல் பிரித்தெடுத்து நாம் நடக்க முயலவேண்டுமே தவிர நாங்கள் வாத்துக் கூட்டமாகவே இருப்போமென சிலர் நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது. :)

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இதே கருத்து,

பெற்ற தாய்க்கும் பொருந்துமா? அவரும் பெண் தானே?

மனித வாழ்க்கையில் ஒரே அம்மாதானே ஒருத்தனுக்கு இருக்க முடியும்?

சுவாரசியம் இல்லாமல் அம்மா சலித்துவிடுமா?

அதே தாய்க்குப் பின் மனிதனுக்கு தாரம்தானே ஆறுதலான மாற்று?

பெண்களைப் பற்றிய உங்களின் பார்வையும், அளவுகோலும் மாற்றம் பெற வேண்டும்..காலம் செல்லச் செல்ல அதில் மாற்றம் நிச்சயம் வந்தே தீரும். :)

அம்மாவை எந்தக் குழந்தையும் ரத்துச் செய்வதில்லையே. ஆனால் சில அம்மாக்கள் குழந்தைகளை ரத்துச் செய்துவிட்டு.. வைத்தியசாலையில்... வீதியில்.. குப்பைத் தொட்டியில்.. தொட்டியில் போட்டுவிட்டு போய்விடுவது உண்டு. சில அம்மாக்கள் வளர்ந்த பின் கைவிடுவதும் உண்டு..!

அந்த இரத்த பந்தத்தை அறுக்க வழியில்லை என்பதற்காக.. வேண்டாத விரும்பாத ஒரு உடல் பந்தத்தை காலம் பூரா தொடரனுன்னு ஏன் ஆண்களை வலிந்து கேட்டுக்கொள்ளனும். ஒரு பெண் தன் இஸ்டத்திற்கு இச்சைக்கு ஏற்ப ஆண் இல்லை என்றால் திருமண பந்தத்தை முறித்துப் பிரிந்து செல்லலாம் என்று பெண் விடுதலை பேசுபவர்கள்.. அதே விடுதலையை ஏன் ஆண்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை..! :):rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

...இரத்த பந்தத்தை அறுக்க வழியில்லை என்பதற்காக.. வேண்டாத விரும்பாத ஒரு உடல் பந்தத்தை காலம் பூரா தொடரனுன்னு ஏன் ஆண்களை வலிந்து கேட்டுக்கொள்ளனும். ஒரு பெண் தன் இஸ்டத்திற்கு இச்சைக்கு ஏற்ப ஆண் இல்லை என்றால் திருமண பந்தத்தை முறித்துப் பிரிந்து செல்லலாம் என்று பெண் விடுதலை பேசுபவர்கள்.. அதே விடுதலையை ஏன் ஆண்களுக்கு வழங்குகிறார்கள் இல்லை..! :):rolleyes::icon_idea:

இருவருக்கும் பந்தத்தை இனிமேலும் தொடர விருப்பமில்லையென ஒருமித்த கருத்தொற்றுமை இருந்தால் தாராளமாக பிரிந்து செல்லலாம்...

ஆனால் ஆண் தன் விருப்பத்திற்கேற்ப மனைவி இருக்கவேண்டும் / நடக்க வேண்டுமென விரும்பும் அதே உரிமை, பெண்ணிற்கும் அந்த ஆண்மகனிடம் சம அளவில் எதிர்பார்க்கும் உரிமை உண்டு என்பதை ஏன் இந்த ஆணாதிக்கவாதிகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

வாழ்க்கையில் ஒருவொருக்காக ஒருவர் செய்யும் சின்னச் சின்ன விட்டுகொடுப்புகள், ஊடலையும், அதன் பின் கூடலையும் கொணர்ந்து இல்லற வாழ்க்கைக்கு சுவையையும் அர்த்தத்தையும் மெருகூட்டுகின்றன..

அதில் துளிரும் உங்கள் வாரிசுகளை/பேரன்,பேத்திகளை கையில் ஏந்திப் பாருங்கள், அந்த பேரின்பம் புரியுமையா...! :)

தானாகக் கனிந்த பழம் போல கிடக்கு! 

இல்லை, அனுபவம் பேசுகின்றது என்று சொல்லவந்தேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்படும் நல்லவற்றை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாக, எடுத்துக்காட்டாக அன்னம் போல் பிரித்தெடுத்து நாம் நடக்க முயலவேண்டுமே தவிர நாங்கள் வாத்துக் கூட்டமாகவே இருப்போமென சிலர் நினைத்தால் ஒன்றும் செய்ய இயலாது. :)

நல்லவற்றை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாக, எடுத்துக்காட்டாக அன்னம் போல் பிரித்தெடுக்கும் தகுதியைப் பெறுவதற்கும் ஒரு பருவ வயதுக்கு வரவேண்டும். இளமையில் கல்வி சிலைபோல் எழுத்து எனக் கற்றுக்கொண்ட நாங்களே, பிஞ்சு உள்ளங்களில் தவறான விதைகளை விதைத்துவிட்டு நச்சுச்செடி வளர்ந்துவிட்டதே என்று கவலைப்படுகிறோம். புராண, இதிகாசங்களில் தவறுகள் எனக் காணப்படுபவற்றை நீக்கிவிட்டு நல்லவற்றை மட்டும் பாலகர்களுக்கு ஊட்டி வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமே. யார் தடுக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கிறோமா!. தமிழர்களை நல்லமுறையில் சிறப்புச்செய்யும் வகையில் பாடப்புத்தகங்களையும் மாற்றிக்கொள்ளலாமே?. எங்கள் மனதில் சிலையாகப் பதிந்துவிட்ட ஆரம்பக் கல்விமுறையும் தடுப்பவற்றில் ஒன்றாக உள்ளதை உணரமுடிகிறது. தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கும் அடியேன் என்ற பாடலை புறந்தள்ள விரும்பினாலும், அதற்கெதிராக எங்கள் மனமே போராடும் நிலைக்குத்தான் நாங்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஆண் தன் விருப்பத்திற்கேற்ப மனைவி இருக்கவேண்டும் / நடக்க வேண்டுமென விரும்பும் அதே உரிமை, பெண்ணிற்கும் அந்த ஆண்மகனிடம் சம அளவில் எதிர்பார்க்கும் உரிமை உண்டு என்பதை ஏன் இந்த ஆணாதிக்கவாதிகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்?

அதில் துளிரும் உங்கள் வாரிசுகளை/பேரன்,பேத்திகளை கையில் ஏந்திப் பாருங்கள், அந்த பேரின்பம் புரியுமையா...! :)

பெண்கள் எதிர்பார்க்கும் அதே உரிமையைத் தானே ஆண்களும் எதிர்பார்க்கினம். அதெப்படி பெண்கள் எதிர்பார்க்கிறது பெண்ணாதிக்கமாக இல்லாமல் ஆண்கள் எதிர்பார்க்கிறது மட்டும் ஆணாதிக்கம் என்றாகிடுது..???!

ஒரு பெண் அழகாக... சிலிம்மா.. இருக்கனுன்னு விரும்பிறது கூட ஆணாதிக்கம் என்றால்.. பெண்கள் ஆண்களை எவ்வெவ்வாறோ எல்லாம் இருக்கக் கேட்பதும் வலியுறுத்துவதும் பெண்ணாதிக்கமாகவே கருதப்படனும்... இப்படியே போய்க்கிட்டு இருந்தா எதில விட்டுக்கொடுத்து எதில பிடிச்சு எந்த வாழ்க்கையை வாழுறதாம்..???!

பரஸ்பரம்.. அடுத்தவர் தேவையை மற்றவர் உணர்ந்து அதற்கேற்ப தம்மை இசைவு படுத்தி வாழத் தெரியாட்டில்.. அந்த வாழ்க்கையில் அர்த்தமில்லை. ஒரே விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால் அந்த விட்டுக்கொடுக்கிறவரின் விருப்பு வெறுப்புக்கள் என்னாவது. செத்து சுடுகாட்டிலா அவை நிறைவேறுவது. அதிலும்.. திருமணம் ஆகாமலே இருக்கலாம்...! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணி அடிக்க காசு தரவில்லை என்று தாயை மிதித்தே கொன்ற மகன்.செய்தியில் வந்துள்ளது.வயதான தாயை பட்டினி போட்டு சாகடித்த மகன் இதுவும் செய்தியில் உள்ளது.

இங்கு எந்த ஆண் உத்தமனாக இருக்கிறான்.பெண்களை நோக்கி சுட்டு விரல் நீட்ட?உடல் தேவையில் கூட தன் தேவை மட்டையும் நிவர்த்தி செய்து விட்டு வெளியில் நான் ஆண் சிங்கமாக்கும் என கூறும் சேவல்களே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எதிர்பார்க்கும் அதே உரிமையைத் தானே ஆண்களும் எதிர்பார்க்கினம். அதெப்படி பெண்கள் எதிர்பார்க்கிறது பெண்ணாதிக்கமாக இல்லாமல் ஆண்கள் எதிர்பார்க்கிறது மட்டும் ஆணாதிக்கம் என்றாகிடுது..???!

ஒரு பெண் அழகாக... சிலிம்மா.. இருக்கனுன்னு விரும்பிறது கூட ஆணாதிக்கம் என்றால்.. பெண்கள் ஆண்களை எவ்வெவ்வாறோ எல்லாம் இருக்கக் கேட்பதும் வலியுறுத்துவதும் பெண்ணாதிக்கமாகவே கருதப்படனும்... இப்படியே போய்க்கிட்டு இருந்தா எதில விட்டுக்கொடுத்து எதில பிடிச்சு எந்த வாழ்க்கையை வாழுறதாம்..???!

பரஸ்பரம்.. அடுத்தவர் தேவையை மற்றவர் உணர்ந்து அதற்கேற்ப தம்மை இசைவு படுத்தி வாழத் தெரியாட்டில்.. அந்த வாழ்க்கையில் அர்த்தமில்லை. ஒரே விட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தால் அந்த விட்டுக்கொடுக்கிறவரின் விருப்பு வெறுப்புக்கள் என்னாவது. செத்து சுடுகாட்டிலா அவை நிறைவேறுவது. அதிலும்.. திருமணம் ஆகாமலே இருக்கலாம்...!

ஆண்களின் உரிமையை, வலுவை பெண்களிடம் மட்டுமே காட்டுவதை ஆண்மையென இச்சமூகம் அங்கீகரிப்பதை எதிர்த்தால், பெண் விடுதலை பேசுபவர்கள் என்கிறீர்கள், அதை மீண்டும் மீண்டும் நிறுவ முயல்பவர்களை ஆணாதிக்கவாதிகள் என அழைப்பதில் தவறில்லையே?

திருமண வாழ்விற்கு முதல் அடிப்படையே பரஸ்பர நம்பிக்கை, விட்டுக்கொடுத்தல் தான்...ஆனால் அந்த அடித்தளமே நீ பெரியவனா..? நான் பெரியவனா...? என இருவரும் 'ஈகோ'வில் இருந்தால் இல்லறம் எப்படி நல்லறமாகும்? இங்கே ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டுமென யாரும் சொல்லவில்லையே? அப்புறம் ஏன் துறவறம்?

ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம், பெண்களை அடக்கியாள்வதே ஆண்மை, பெண் ஆணின் விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே வளைந்து கொடுக்கவேண்டும் என இன்னமும் எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் நுழையலாம் என் எண்ணுபவர்கள் தயவுசெய்து திருமண ஆசையை துறந்துவிடலாம்... சமூக பாதுகாப்பில்லாத பெண்களின் வாழ்க்கையை வீணடிப்பதற்கு நிச்சயம் அது ஒரு முற்றுப் புள்ளியாகும்.

நீண்ட கருத்துப் பரிமாறல்களுக்கு நன்றி, நெடுக்ஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவற்றை நம் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாக, எடுத்துக்காட்டாக அன்னம் போல் பிரித்தெடுக்கும் தகுதியைப் பெறுவதற்கும் ஒரு பருவ வயதுக்கு வரவேண்டும். இளமையில் கல்வி சிலைபோல் எழுத்து எனக் கற்றுக்கொண்ட நாங்களே, பிஞ்சு உள்ளங்களில் தவறான விதைகளை விதைத்துவிட்டு நச்சுச்செடி வளர்ந்துவிட்டதே என்று கவலைப்படுகிறோம். புராண, இதிகாசங்களில் தவறுகள் எனக் காணப்படுபவற்றை நீக்கிவிட்டு நல்லவற்றை மட்டும் பாலகர்களுக்கு ஊட்டி வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாமே. யார் தடுக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கிறோமா!. தமிழர்களை நல்லமுறையில் சிறப்புச்செய்யும் வகையில் பாடப்புத்தகங்களையும் மாற்றிக்கொள்ளலாமே?. எங்கள் மனதில் சிலையாகப் பதிந்துவிட்ட ஆரம்பக் கல்விமுறையும் தடுப்பவற்றில் ஒன்றாக உள்ளதை உணரமுடிகிறது. தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கும் அடியேன் என்ற பாடலை புறந்தள்ள விரும்பினாலும், அதற்கெதிராக எங்கள் மனமே போராடும் நிலைக்குத்தான் நாங்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளோம்.

பாஞ்ச்,

விளையும் பருவத்திலேயே நல்லது எது, கெட்டது எது என கற்பித்தலே நலம். நல்லவற்றை மட்டுமே போதிப்பது, பகலை மட்டுமே காண்பிப்பதற்கு சமம்.

இரவு, பகல், யோகியன், அயோக்கியன், திருடன், காவலன் என சமூகத்தில் உலாவரும் நாணயத்தின் இரு முகங்களையும் காட்டினால் தானே முதிர்வில் பகுப்பாய முடியும்?

இங்கு எந்த ஆண் உத்தமனாக இருக்கிறான்.பெண்களை நோக்கி சுட்டு விரல் நீட்ட?உடல் தேவையில் கூட தன் தேவை மட்டையும் நிவர்த்தி செய்து விட்டு வெளியில் நான் ஆண் சிங்கமாக்கும் என கூறும் சேவல்களே அதிகம்.

கூவும் சேவல்களை சிறிதே நெறிப்படுத்தினால், முறையற்ற கூவல்களின் சாரம், காரம் குறையும். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்,

விளையும் பருவத்திலேயே நல்லது எது, கெட்டது எது என கற்பித்தலே நலம். நல்லவற்றை மட்டுமே போதிப்பது, பகலை மட்டுமே காண்பிப்பதற்கு சமம்.

இரவு, பகல், யோகியன், அயோக்கியன், திருடன், காவலன் என சமூகத்தில் உலாவரும் நாணயத்தின் இரு முகங்களையும் காட்டினால் தானே முதிர்வில் பகுப்பாய முடியும்?

கூவும் சேவல்களை சிறிதே நெறிப்படுத்தினால், முறையற்ற கூவல்களின் சாரம், காரம் குறையும். :)

ராசா

தற்காலம் 

கரிகாலம்

வேடிக்கை  பார்ப்போம்

பட்டு வரட்டும்

நாம் போடாத  கூச்சலா?

தற்பொழுது..............??? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

தற்காலம் 

கரிகாலம்

வேடிக்கை  பார்ப்போம்

பட்டு வரட்டும்

நாம் போடாத  கூச்சலா?

தற்பொழுது..............??? :icon_idea:

:lol::rolleyes::icon_idea:

சரிதான்...! ஆதங்கத்தில் செப்பினேன்...இனி அவர்கள் பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் அண்ணா தங்கள் கருத்திற்கு. ஆனாலும் இன்னும் உங்கள் கருத்தோடு சில முரண்பாடுகள் உள்ளன. ஆண்கள் மீது ஆணாதிக்கம் என்பதை திணித்துப் பார்க்க விரும்புகிற நீங்களே வீடுகளில் ஆண்கள் அடக்கி ஆளப்படுவது குறித்தான பெண்ணாதிக்கம் பற்றி பேச மறுக்கிறீர்கள். இது மிகவும் அபந்தமானதாகப்படுகிறது.

எத்தனையோ வீடுகளில் ஆண்கள் பேசாமடந்தைகளாக உள்ளனர். தீர்மானங்கள் எடுக்கும் வலுவிழந்து உள்ளனர். அப்படியான வீடுகளில்.. ஒரு துடிப்பான ஆண் நிச்சயம் திருமணம் என்ற போலிப் பந்தம் மூலம் அந்தப் பெண்ணுக்கு அடிமையாகவோ.. அல்லது தனது சுதந்திரத்தை.. சுகிப்பான வாழ்வை தியாகம் செய்தோ வாழத்தயாராக இருக்கமாட்டான். அப்படி ஒரு நிலையில்.. பிரிந்து போவது நல்லது என்று தான் சிந்திப்பான். நீங்களே உங்களுக்கு அப்படி ஒரு நிலையை கற்பனை செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். என்ன முடிவை எடுப்பீர்கள் என்று..??! :)

விட்டுக்கொடுப்பு என்பது ஆண்களிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படக் கூடாது. பெண்களும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். புரிந்துணர்வு என்பது ஆண்களுக்கு என்று மட்டும் இருக்கக் கூடாது. புரிந்துணர்வு என்பது பெண்களுக்கும் ஆண்களின் மீது இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரின் தேவையை அறிந்து செயற்படும்.. பக்குவம் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்.. ஏன் பிரிய முடிவெடுக்கப் போகிறார்கள். :):rolleyes:

ராசா

தற்காலம் 

கரிகாலம்

வேடிக்கை  பார்ப்போம்

பட்டு வரட்டும்

நாம் போடாத  கூச்சலா?

தற்பொழுது..............??? :icon_idea:

இன்றைய இளையவர்கள்.. நியூட்டனின் பிள்ளைகள். நியூட்டனின் 3ம் விதியை பின்பற்றுபவர்கள். பட்டுத் தெறித்தோடுவது உங்கள் காலம். இன்று பட்டதை.. திருப்பித் தாக்கி உணர வைக்கும் காலம்..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் அண்ணா தங்கள் கருத்திற்கு. ஆனாலும் இன்னும் உங்கள் கருத்தோடு சில முரண்பாடுகள் உள்ளன. ஆண்கள் மீது ஆணாதிக்கம் என்பதை திணித்துப் பார்க்க விரும்புகிற நீங்களே வீடுகளில் ஆண்கள் அடக்கி ஆளப்படுவது குறித்தான பெண்ணாதிக்கம் பற்றி பேச மறுக்கிறீர்கள். இது மிகவும் அபந்தமானதாகப் படுகிறது. எத்தனையோ வீடுகளின் ஆண்கள் பேசாமடந்தைகளாக உள்ளனர். தீர்மானங்கள் எடுக்கும் வலுவிழந்து உள்ளனர். அப்படியான வீடுகளில்.. ஒரு துடிப்பான ஆண் நிச்சயம் திருமணம் என்ற போலிப் பந்ததம் மூலம் அந்தப் பெண்ணுக்கு அடிமையாகவோ.. அல்லது தனது சுதந்திரத்தை.. சுகிப்பான வாழ்வை தியாகம் செய்தோ வாழத்தயாராகத நிலையில்.. பிரிந்து போவது நல்லது என்று தான் சிந்திப்பான். :)

விட்டுக்கொடுப்பு என்பது ஆண்களிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படக் கூடாது. பெண்களும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். புரிந்துணர்வு என்பது ஆண்களுக்கு என்று மட்டும் இருக்கக் கூடாது. புரிந்துணர்வு என்பது பெண்களுக்கும் ஆண்களின் மீது இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரின் தேவையை அறிந்து செயற்படும்.. பக்குவம் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்.. ஏன் பிரிய முடிவெடுக்கப் போகிறார்கள். :):rolleyes:

என்  வீட்டை  வைத்துத்தான் நான் எழுதமுடியும்  ராசா

அது வரை  எனது கருத்து சரி

இன்றைய இளையவர்கள்.. நியூட்டனின் பிள்ளைகள். நியூட்டனின் 3ம் விதியை பின்பற்றுபவர்கள். பட்டுத் தெறித்தோடுவது உங்கள் காலம். இன்று பட்டதை.. திருப்பித் தாக்கி உணர வைக்கும் காலம்..! :):lol:

வாழ்க்கை  என்ற    ஒன்றுக்குள்   வந்த பின்  பொறுப்பு  என்ற  ஒன்று  தொற்றிக்கொள்கிறது

அதற்கு பக்க  காரணங்களாக பல  உள்ளன.

( சமூகம்  சட்டங்கள்  பிள்ளைகள்  அவர்களின்  எதிர்காலம்.......................)

இதில் இருவரும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பது தான் ஐனநாயகம்.  ஒன்று அப்படி  இப்படி மாறி  இழுத்தால் மற்றவர் சமாளிப்பது விட்டுக்கொடுப்பு.  ஆனால்  அதற்கொரு எல்லையுண்டு என்ற  உங்கள்   வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.  ஆனால் அவனே அல்லது அவளே அதை  ஏற்று  நடக்கும்போது  நாம்............???

யாரோ ஒருத்தன் அனுபவிச்சு எழுதி இருப்பான் போல மின் அஞ்சலில் அனுப்பி இருந்தான்... 

"Marriage is like a public toilet. Those waiting outside are desperate to get in & those inside are desperate to come out..."  :icon_mrgreen: 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.