Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கிலும் இராணுவ அடக்குமுறை ஆரம்பம்!துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!15 மேற்பட்டோர் காயம்!!!

Featured Replies

தெற்கிலும் இராணுவ அடக்குமுறை ஆரம்பம்!துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!15 மேற்பட்டோர் காயம்!!!
வியாழக்கிழமை, ஆவணி 1, 2013 3:35 pm
1629623885ten-c-270x155.jpg

பெலுமஹரவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் படுகாயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றிரவு 7.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதில், 11 பேர் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கம்பஹா மற்றும் வத்துப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும்இ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதுகாப்பு தரப்பினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை கலைப்பதற்கே கண்ணீர்புகை குண்டு வீசிஇ தண்ணீர் பீச்சியடித்ததாகவும் பாதுகாப்பு தர்ப்பினர் தெரிவித்தனர்.

கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பிரதேசத்தில் கிணற்று நீரில் விஷ இரசாயனம் கலந்துள்ளமை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸாரும், இராணுவத்தினரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

கொழும்பு கண்டி வீதியின் பெலும்மாற என்ற இடத்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

http://urumal.com/2013/08/01/13967/

 

கொழும்பு கண்டி வீதிக்கு குறுக்காக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, இராணுவ ஜீப் வண்டியின் ஒன்றின் மேல் எறிய இராணுவ அதிகாரி ஒருவர், 5 நிமிடங்களுக்குள் வீதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். அவ்வாறு கலைந்து செல்லவில்லை தாக்குதல் நடத்தப்படும் என கூறினார்.

ஊடகவியலாளர் புகைப்படமோ, வீடியோ படங்களையே எடுக்க கூடாது. மீறி எடுத்தால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என அந்த அதிகாரி எச்சரித்தார்.

அப்போது கூடியிருந்த மக்கள் “ஐயோ சார் அப்படி செய்ய வேண்டாம். நாங்கள் குடிப்பதற்கு தண்ணீரை தான் கேட்கிறோம். எமன்கு பெரிய பிரச்சினை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மீது பொல்லுகளால் சரமரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சிலர் அடியை வாங்கி கொண்டு சிதறி ஓடினர்.

சிலர் ஓடி ஒழிந்து கொள்ள இடம் தேடினர். பெண்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து 5 நிமிடங்களில் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து தடை நீங்கியது. சுமார் 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீதியின் இருமருங்கிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு தேடி வீடுகளுக்குள் ஓடியவர்கள் தேடித் தேடி தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை கொழும்பு – கண்டி வீதியின் பெலும்மாற சந்தியில் பிரதேச வாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடையேற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறிகையில், பிரதேசவாசிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தடையேற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை அவர்கள், ஏற்காதால இராணுவத்தின் உதவியை நாட நேர்ந்தது என்றார்.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக இராணுவம் தலையிட நேர்ந்தது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் ரத்துபஸ்வல பிரதேச மக்களில் சிலர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்இ அப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் சேகரிக்கப்பட்ட தண்ணீர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை  ஆய்வறிக்கை கிடைக்கும் வரையிலும் வெலிவேரிய பகுதியிலுள்ள தொழிற்சாலைகளை இரண்டுவாரகாலத்திற்கு தற்காலிகமாக மூடிவிடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுவரையும் அப்பிரதேசத்திற்கு பவுசர் மூலம் தண்ணீர் விநியோகிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

 குடிதண்ணீருக்கு பாதுகாப்பு காரியதரிசியுடன் பேச வேண்டிய நாடு ஒன்ற்தான் இலங்கை என்றால் , அது முழுக்க முழுக்க இராணுவமயமாக்கப்பட்டுவிட்டதென்பதல்லவா கருத்து . இந்த நிலைமையில் அந்த மாகாணத்துக்கு நீதி அதிகாரம் கொடுத்தால் என்ன நடக்கும்? ஆமியை ஏவிவிடும் கோத்தா உள்ளே போவராக்கும்.

 

இது இலங்கையின் யதார்த்தமாக இருக்க வடமாகாணத்துக்கு மட்டும் நீதி அதிகாரம் வரும் என்று Fairy Tale சொன்னால் அது நடந்து முடியாமல் யாரவது நம்புவார்களா? சிவசங்கர் மேனன் சோனியாவை ஏமாற்ற முடியும். தமிழ் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் என்ன நடந்தது என இனியாவது புரிந்து கொள்வார்களா ?


சிங்கள பெரும்பான்மை இனத்தவர்.

இது தான் இலங்கையின் உண்மையான பிரச்சனை..பதவிக்கு வரும் அரசியல் வாதிகள் மக்களை தமக்கு ஏற்றவகையில் ஆடுமாடுகள் போல் மேய்த்தபடியால் வந்த வினை..
நாங்களும் முள்ளை முள்ளால் எடுக்கதெரியாமல் எல்லாத்தையும் அழிய கொடுத்தது தான் மிச்சம்

இது தான் இலங்கையின் உண்மையான பிரச்சனை..பதவிக்கு வரும் அரசியல் வாதிகள் மக்களை தமக்கு ஏற்றவகையில் ஆடுமாடுகள் போல் மேய்த்தபடியால் வந்த வினை..

நாங்களும் முள்ளை முள்ளால் எடுக்கதெரியாமல் எல்லாத்தையும் அழிய கொடுத்தது தான் மிச்சம்

உங்களுக்கே விளங்க ஆரம்பித்திருக்கிறது. அடுத்தமுறை நாங்கள் முள்ளு எடுக்கப் போனால் இன்னொரு முள்ளாள் முதுகில் குத்திக்கொள்ளப்பட மாட்டோம்.

 

குளிக்கபோய் சேறுபிரட்டாமல் காலில் முள்ளை எடுக்கப் போய், முள் எடுக்க முடியாத இடாமான முதுகில் இன்னொரு முள்ளால் குத்துபட்டிடாமல்.... .....

 

வெற்றி நமதே :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு சிங்கள  மக்களையே  காவு கொள்ள துணிந்து விட்டது.

துப்பாக்கி தூக்கிய கைகள் எல்லாவற்றிற்கும்  தீர்வு குண்டால் தான் என்று நினைப்பார்கள் .

வாழ்க ஜனநாயகம்!

1970 ல் துப்பாக்கிகளை தூக்கிய கைகள் ஒயவில்லை. 1958ல் தூக்கிய தடிகளை வைக்கவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி தூக்கிய கைகள் எல்லாவற்றிற்கும்  தீர்வு குண்டால் தான் என்று நினைப்பார்கள் .

 

அதனால் தான்..... 35 வருடப் போராட்டத்தில், புளொட் ஒரு சிங்கள இராணுவத்தையும்... இது வரை கொல்லவில்லை. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.