Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்
 
AVN5_ILAYARAJA_21557f-350x248.jpgவருகிற ஆகஸ்ட் 24ந் தேதி சனிக்கிழமை இசைஞானி இளையராஜா முதன் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் 19 டாப் பாடகர், பாடகிகளும், 75 இசைக் கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஒத்திகை பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் தீவிரமாக நடந்து வருகிறது. ஜயங்கரன் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

லண்டனிலேய மிகப்பெரிய உள்ளரங்கான ஓ2 வில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இது தொடர்பாக இளையராஜா சென்னையில் பேட்டி அளித்தபோது உலக இசை அமைப்பாளர்களுக்கு ஒரு சவால் விட்டார் அது இதுதான்.

“நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன்.

இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன்.

இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது.

இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.

http://123tamilcinema.com/2013081227165.html

இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இதைச்சொல்ல இளையராசாவுக்கு தகுதியுண்டு

ஒரு தமிழனாக பெருமைப்படணும்

  • கருத்துக்கள உறவுகள்

எனது அலுவலகத்தில் இசை தெரிந்த ஒரு வெள்ளை இருக்கிறார்.. அவரிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன், இசை சம்பந்தமாக.. :D

என் இனிய பொன் நிலாவே பாட்டைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சுவாரசியமடைந்தார்.. அந்தப் பாடலின் இணைப்பை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.. அப்போது இசைஞானி பற்றியும் சில குறிப்புக்களைத் தந்தேன்.. இந்த அரை மணிநேரத்தில் இசைக்குறிப்பு எழுதுவதைப் பற்றிக் குறிப்பிட்டபோது அதிர்ச்சியடைந்துவிட்டார்.. :lol:

நான் பெரிதும் மதிக்கும் ஒருவர் இளையராஜா. அவரது இசைக்கு என்றுமே நான் அடிமை. இவர் இசையமைத்த பாடல்களில் ஆகக் குறைந்தது 95% வீதமான பாடல்களும் என்னிடம் உள்ளது (Discography)...  ஆனால் இவர் பேசும் பேச்சுகளுக்கு என்றுமே நான் ரசிகன் அல்ல. பெரிய ஞானியாக இருந்தும் தன்னடக்கமும் இல்லை, அவையடக்கமும் இல்லை இவரிடம்.

அவருக்கு தன்னை கண்டுக்கிறாங்க இல்லையே என்கிற மன ஆதங்கம்.. :D அவரது ஆன்மா ஒரு முதிர்ந்த ஆன்மா போல் தெரியவில்லை.. :unsure:  இன்னும் அவருக்கு பிறப்புகள் இருக்கும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தன்னை கண்டுக்கிறாங்க இல்லையே என்கிற மன ஆதங்கம்.. :D அவரது ஆன்மா ஒரு முதிர்ந்த ஆன்மா போல் தெரியவில்லை.. :unsure:  இன்னும் அவருக்கு பிறப்புகள் இருக்கும்.. :D

அடப்பாவி

இத்துடன் திரி   சூடுகிளப்பப்போகுது என்று  பார்த்தால்.............................?? :D  :D

இதைச்சொல்ல இளையராசாவுக்கு தகுதியுண்டு

ஒரு தமிழனாக பெருமைப்படணும் :icon_idea:

அவர் ஒரு  இசையில் ஞானி தான் மாற்று கருத்து இல்லை ,

மற்றது பலது நடிப்பு சிலது கிறுக்கு சிலது பொறாமை .

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிதும் மதிக்கும் ஒருவர் இளையராஜா. அவரது இசைக்கு என்றுமே நான் அடிமை. இவர் இசையமைத்த பாடல்களில் ஆகக் குறைந்தது 95% வீதமான பாடல்களும் என்னிடம் உள்ளது (Discography)...  ஆனால் இவர் பேசும் பேச்சுகளுக்கு என்றுமே நான் ரசிகன் அல்ல. பெரிய ஞானியாக இருந்தும் தன்னடக்கமும் இல்லை, அவையடக்கமும் இல்லை இவரிடம்.

நிழலி

சும்மா  ஒன்றுமே இல்லாதவனுக்கு

ஏன்  எதையுமே சாதிக்காதவனுக்கே பெரும்  ஆலவட்டம்   எடுக்கிறப்போ

சாதனையாளனுக்கு அது வருவதை  எப்படி  தடுப்பது???

இப்போ

அவர்  சொன்னதை  ஒரு போட்டியாக ஏற்றுக்கொண்டு

அவரது வாயை  அடக்க உலகத்தில்  ஒருத்தர் இல்லாதபோது...........

(எத்தனை  ஆயிரம்  இசையமைப்பாளர்கள்  இந்தியாவில்   மட்டும்)

அவரது பேச்சு வலிமை  பெறுகிறது அல்லவா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன கற்பனைச் சம்பவம்.. :D

நிழலி ஒரு மீட்டிங் போறர்.. அங்கே சிக்கலான கோடிங் பற்றி கதைக்கிறார்.. திரையில் அவர் எழுதிய புரோகிராம் விரிகிறது.. அதில் ஓப்பின் பிராக்கட்டைப் பார்த்த மற்றவர்கள் ஏன் ஒரே பிராக்கட்டா போட்டிருக்கிறீங்கள் என்று கேட்டால் நிழலி என்ன பதில் சொல்லுவார்..? :D அவையடக்கத்தை காப்பாற்றுவாரா? :lol:

ஏன்  நிழலியிடம் போவான்

இசைக்கு இப்படி ஒரு இடத்தில் கேள்வி  வந்தால்  பதில்   என்ன???

(உங்களிலேயே  ஆரம்பிப்போம் :D )

பிராக்கெட்டா இருந்தால் என்ன பிரா கட்டாக இருந்தால் என்ன நிழலி எப்பவும் தன்னிலை விளக்கம் கொடுத்து விடுவார். அதுக்காக நிழலியால மட்டும் தான் பிராக்கெட் போட முடியும் அதுக்கு ஹூக் போட நிழலியால மட்டும் தான் 2 செக்கனில் முடியும் என்றெல்லாம் சொல்ல மாட்டார். :lol:

இதிலிருந்து  என்ன  தெரிகிறது என்றால்

நிழலி  யம்பவான்(தனி ராச்சியம்)  இல்லை

இளையராசா  தனி  ராச்சியம் செய்கிறார்(அதாவது போட்டிக்கு ஆளில்லை)  என்று தெரிகிறது :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  நிழலியிடம் போவான்

இசைக்கு இப்படி ஒரு இடத்தில் கேள்வி  வந்தால்  பதில்   என்ன???

(உங்களிலேயே  ஆரம்பிப்போம் :D )

பதில் சொல்வது கடினமானது..

ஒரு உதாரணத்துக்கு உயிரெழுத்துக்களில் "அ" வுக்கு அடுத்தது "ஏ" என்கிறார் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு தமிழர்.. :D அதற்கு உங்கள் பதில் என்ன வாக இருக்கும்..? :huh:

தெரியாத ஆளாக இருந்தால், மேலும் கீழும் பார்ப்பீர்கள்..  :D  பகிடி விடுறாரா என்று ஒரு கணம் யோசிப்பீர்கள்.. :unsure: அவர் உண்மையிலேயே தனக்குத் தெரியும் நினைத்துக்கொண்டு தனக்கு அரிவரி தெரியும் என்று சொன்னால் நீங்கள் திட்டி விடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.. :D அதையேதான் இளையராஜாவும் செய்கிறார்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி லண்டன் வாறாராம் புறோகிராம் செய்ய :D

நிழலி நிறையத்தான் வாய் அடிப்பார். அவரின் பலம் அவரின் program codeல் இருந்து வருவதல்ல. கத்தரிக்கோலின் உருக்கிரும்பின் பலம் அது. இளையராஜாவின் பலம் அவரின் படைபாற்றலில் இருந்து வருவது. அவர், நிழலியுடன் அல்ல, வேறு யாருடனும் கூட ஒப்பிடப் படக்கூடியவர் அல்ல. அவர் அவை அடக்கம் காக்க வேண்டியது முக்கியம். நிழலிக்கு அவசியம் அல்ல. இயந்திர துப்பாக்கியை பொது மக்கள் மத்தியில் நின்று சுழற்றினால். பல கொலைகள் விழும். அத்தனை எண்ணிக்கை குற்றமும்  சாட்டப்படும். துவக்கை நேராக பிடியாமல் எடுத்து சுழற்றினால் அதனால் தாக்கப்படத்தக்க ஒரு இலக்கும் கூட தவறிவிடும். நிழலி யாரையும் கெடுக்க முடியாது. தன்னையும் கெடுக்க மட்டார். இளையராஜாவின் அகங்காரம் அதை செய்யக்கூடியது.

Edited by மல்லையூரான்

சாதுவாக என்னை நல்லவிதமாகச் சொல்வது மாதிரியும் கிடக்கு, திட்டிகின்ற மாதிரியும் கிடக்கு... நிழலி நல்லவரா கெட்டவரா?

நிழலி யாரையும் கெடுக்க முடியாது.

இதை வாசிக்கும் போது மனக்கண்ணில் பழைய வில்லன் செந்தாமரையும் அவரின் கையில் அகப்படும் நடிகை அம்பிகாவும் தான் தோன்றுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதுவாக என்னை நல்லவிதமாகச் சொல்வது மாதிரியும் கிடக்கு, திட்டிகின்ற மாதிரியும் கிடக்கு... நிழலி நல்லவரா கெட்டவரா?

அது தான்  நானும் பதில்  எழுதல

ஓம்  என்றாலும்  சிக்கல்

இல்லை  என்றாலும்  சிக்கல் :lol:  :D

சாதுவாக என்னை நல்லவிதமாகச் சொல்வது மாதிரியும் கிடக்கு, திட்டிகின்ற மாதிரியும் கிடக்கு... நிழலி நல்லவரா கெட்டவரா?

இதை வாசிக்கும் போது மனக்கண்ணில் பழைய வில்லன் செந்தாமரையும் அவரின் கையில் அகப்படும் நடிகை அம்பிகாவும் தான் தோன்றுகின்றனர்.

நான் வக்கீல் மட்டுமே. வழக்குரைப்பது என் வழமை. குற்றவாளியா சுற்றவாளியான என்று தீர்ப்பளிப்பது யூறர்களில்லையா? :D

நீதிபதி இசை வெகு விரைவில் வருவார். :D பொறுமை காக்கவும்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் வக்கீல் மட்டுமே. வழக்குரைப்பது என் வழமை. குற்றவாளியா சுற்றவாளியான என்று தீர்ப்பளிப்பது யூறர்களில்லையா? :D

நீதிபதி இசை வெகு விரைவில் வருவார். :D பொறுமை காக்கவும்

:lol:

நீதிபதிக்கு ஜூரர்கள் முதலில் தங்கள் முடிவைச் சொல்லவேண்டும்.. எங்கை அவையெல்லாம்?? :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் வக்கீல் மட்டுமே. வழக்குரைப்பது என் வழமை. குற்றவாளியா சுற்றவாளியான என்று தீர்ப்பளிப்பது யூறர்களில்லையா? :D

நீதிபதி இசை வெகு விரைவில் வருவார். :D பொறுமை காக்கவும்

:lol:

இதை  நான்  வன்மையாக  கண்டிக்கின்றேன்

இளையராசாவின் ரசிகனை

அதுவும்  தனது பெயரிலேயே இசையை  வைத்திருப்பவரை எப்படி நீதிபதியாக ஏற்பது.............??? :lol:  :D  :D

'ராஜா தி ராஜா' நிகழ்ச்சி ரத்தாகலாம் என தகவல்!! 

[Thursday, 2013-08-15 23:19:01]
Iayaraaja-UK-Puthinam-150.jpg

எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகாததால் லண்டனின் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தாகப் போவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக இளையராஜா இசையமைக்கும் எந்தப் படங்களிலும் பாடல்கள் மட்டும் ஹிட்டே ஆவதில்லை. மேலும் சமீபகாலமாக புதிய பட வாய்ப்புகளுடம் அவரைத்தேடி பெரிய அளவில் வராததால் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த தொடங்கிவிட்டார். இதுமட்டுமல்ல இப்படி ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தியதால்த்தான் அவருக்கு ஆங்கில படத்தில் இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்து, ஆஸ்கார் விரும் வென்றார் என நினைப்போ என்னவோ! அது அவருக்கே வெளிச்சம்.

ஆனால் இசை நிகழ்ச்சி என்று வரும்போது இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தான் சொல்கிறார்கள். அதற்கு உதாரணமாக அவர் ஏற்கனவே நடத்திய துபாய், கனடா, சிங்கப்பூர் என அரங்கங்கள் காலியாக இருந்த இசை நிகழ்ச்சிகளை பட்டியலிடுகிறார்கள்.

இசைஞானியின் கடந்த சில வருடங்களின் வரலாறு இப்படியிருக்க, லண்டனில் முதல் முறையாக நடைபெற இருக்கும் 'ராஜா தி ராஜா' இசை நிகழ்ச்சி ரத்தாகும் சூழலுக்கு போயிருக்கிறதாம்.

ஆமாம், வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி 'ராஜா தி ராஜா' என்ற பெயரில் லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக லண்டனில் உள்ள 'தி ஓ டூ' என்ற அரங்கில் இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இளையராஜா தலைமையேற்கும் இந்த நிகழ்ச்சியில் கமலும் கலந்து கொள்கிறார். இவர்களுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ்.பி ஷைலஜா, கார்த்திக், சின்மயி உட்பட பிரபல பாடகர், பாடகிகளும் பங்கேற்கின்றனர்.

'ராஜா தி ராஜா' நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆதரவு இல்லாததால் நிகழ்ச்சியே நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம், ஒன்று கனடாவில் மாவீரர் தினத்திற்கு சில நாட்கள் முன்பு இசை நிகழ்ச்சி நடத்த முற்பட்டது, பின்பு பிற்போடப்பட்டாலும், அது காலநிலை சரியில்லை என்ற காரணம் மட்டும்தான் என அறிவித்தார்.

இப்போது இலண்டனில் இசை நிகழ்ச்சிக்கு கட்டணம் இந்திய ரூபாயில் 25 ஆயிரமாம் ஒருவருக்கு!. கடைசி சீட்டில் உட்காருவதற்கு சுமார் 5 ஆயிரமாம். [ தமிழகத்தில் அதிகபட்ச டிக்கட் விலையே அதுதான்.] ஒரு வேளை இங்கிலாந்தில் தமிழர்கள் மரத்தில் பணம் பறிக்கின்றார்கள் என இளையாராஜா நினைத்திருப்பார் என கிண்டலடிக்கின்றார்கள் விபரம் அறிந்தவர்கள். கடைசி நேரத்தில் நிகழ்சியை அரங்கமைப்பாளர்களுக்கு அறிவித்து பிற்போடப்பட்டாலும் போட்ட பணம் கொஞ்சம் கிடைக்கும் என்கின்றார்கள். இப்போது கமல்ஹாசனை நிகழ்சிக்கு அழைத்துவர இருக்கின்றோம் என கமலின் விளம்பரம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நடைபெற்ற எந்த ஒரு கூட்டங்களிலும் இளையராஜாவோ, அவரது மகன்களோ கலந்து கொண்டதே இல்லை. அதுமட்டுமில்லாமல் ஈழம் சம்மந்தமான நிகழ்ச்சிகளுக்கு அவரிடம் நன்கொடை கேட்டபோது கூட ஈழத்துக்கு எதிரான கருத்தையே வெளியிட்டு அவர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் இளையராஜா.

இதனால் கடுப்பான லண்டனில் உள்ள ஈழத்தமிழர்கள் தற்போது லண்டனில் நடைபெற உள்ள 'ராஜா தி ராஜா' நிகழ்ச்சியை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

'ராஜா தி ராஜா' நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் சுமார் 10 நாட்களே இருக்கும் நிலையில் 5 சதவீத டிக்கெட்டுகள் கூட விற்பனையாகவில்லையாம். இப்படியே போனால் ஆடிட்டோரியத்தில் 60 சதவீத சீட்டுகள் காலியாகத்தான் இருக்கும். என்னதான் நிகழ்ச்சி ஸ்பான்ஸர்களுக்கு ஓசியாக டிக்கெட்டுகள் கொடுத்தாலும் கூட பாதி சீட்டுகள் காலியாகத்தான் இருக்குமாம்.

இதனால் இளையராஜாவை நம்பி பணம் போட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் கடைசி நாள் வரை இதே மோசமான நிலை வந்தால் பேசாமல் நிகழ்ச்சியை கேன்சல் செய்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம். இதனால் திட்டமிட்டபடி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி நடைபெறுமா என்பது சந்தேகம் தானாம்..?

இந்த தகவலை கேள்விப்பட்ட இசைஞானியோ அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "ஒரு ரசிகர் வந்தால் கூட அவருக்காக நான் நிகழ்ச்சியை நடத்துவேன்" என்று பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறாராம்.

இப்படித்தான் கனடாவில் அறிவித்தவர் மக்கள் வரத்து குறைந்தவடன் 5 மணிக்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டியவர் இரண்டு மணி நேரம் தாமதமாக 7 மணிக்கு வந்தவர் 3 மணி நேரம் மட்டுமே இசை நிகழ்ச்சி நடத்தினார்.

பணம் செலவழித்து நிகழ்ச்சி பார்க்க வந்தவர்கள் பணத்தை கொடுத்து சும்மா உட்கார்ந்துவிட்டு போனார்கள்.

http://www.seithy.com/briefPuthinam.php?newsID=90224&category=Puthinam&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சவால்...  விட்டால், உது தான் நடக்கும்.
இளையராயா.. சிம்பொனி, இசசை அமைச்ச மாதிரி இருக்கும்.
என்ன.... இருந்தாலும், ராசா தன் வாயால்... கெட்டுப் போகின்றார்.
இது, தான்.... சௌந்தர்ராஜனுக்கும் நடந்தது.
 
புகழ்.. உச்சியில் வந்ந்தால், ஏழையாக இருப்பவனே.. மனிதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.