Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் மின்சாரம் இயந்திரங்கள் இல்லாமல் வாழும் ஆமிஸ் இன மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1970  களில் ஜேர்மனி சுவிஸ் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கா வந்த இந்த மக்கள் இப்போதும் அந்த நாளில் வாழ்ந்த வாழ்க்கை மாதிரியே வாழ்கிறார்கள்.இவர்களைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன்.அரை குறை நம்பிக்கையாக இருந்தது.அண்மையில் பென்சில்வேனியா மாநிலத்தில் லான்செஸ்ரர் என்னும் இடத்திற்கு இவர்களைப் பார்ப்பதற்காக போயிருந்தேன்.பெரும் தொகையான மக்கள் இவர்களையும் இவரகள் வதிவிடங்களையும் பார்க்க வருகிறார்கள்.வந்தவர்கள் இவர்களது உற்பத்தி பொருட்களையும் நிறையவே வாங்கி செல்கிறார்கள்.

 

சாதாரணமாக எமது வீடுகள் போன்ற வீடுகளிலேயே வாழ்கிறார்கள்.ஆனால் மின்சாரம் பாவிப்பதில்லை.மோட்டார்வண்டி பாவிப்பதில்லை.எந்த ஒரு இயந்திரத்தையும் பாவிப்பதில்லை.ஏன் மிதிவண்டி கூட பாவிப்பதில்லை.ஆனால் ஸ்கூட்டர் மாதிரி இரண்டு பக்கமும் பெரிய சில்லு நடுவில் நின்று ஒற்றைக் காலால் தள்ளி தள்ளி ஓடித்திரிகிறார்கள்.தொலைக்காட்சி வானொலிப்பெட்டி தொலைபேசி எதுவும் பாவிப்பதில்லை.ஏன் என்று கேட்டால் பெரியர்களான பின் உலகைப் புரிந்து கொண்டால் பரவாயில்லை சிறு வயதில் வேறு இன மக்களின் கலாச்சாரத்தை அவர்கள் உள் வாங்க கூடாதென்பதில் மிகவும் அக்கறை செலுத்துகிறார்கள்.இன்னமும் தமது சொந்த மொழியையே தாய்மொழியாக பாவித்தாலும் ஆங்கிலமும் கதைக்கிறார்கள்

 

https://www.google.com/search?q=amish+house&client=firefox-a&hs=Vhh&rls=org.mozilla:en-US:official&channel=fflb&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=RQgNUt60KoW34APV-oH4Dw&ved=0CEsQsAQ&biw=1440&bih=771

 

உடை

ஆண்கள் சாதாரணமாக எங்களைப் போன்றே உடைகளை அணிகிறார்கள்.ஆனால் பெண்கள் முழங்கால் தெரியாமல் கன்னியாஸ்திரிகள் போன்ற உடைகளையே அணிகிறார்கள்.அத்துடன் தலைக்கும் நேர்ஸ்மார் போடுவது போன்ற உரு கவசத்தை அணிகிறார்கள்.

 

பாடசாலை

இவர்கள் தமது இனத்திற்கு என தனியான பாடசாலையை வைத்திருக்கிறார்கள்.எல்லா பாடசாலைகளும் ஒரு பெரிய அறை கொண்ட கட்டடம் தான்.எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தால் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாது.அத்துடன் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சில பாடங்களையே கற்றுக் கொடுக்கிறார்கள்.

http://www.amishfarmandhouse.com/The_One-Room_School.html

 

உழைப்பு

மிகவும் கடின உழைப்பாளிகள்.கூடுதலாக பெரிய பெரிய பண்ணைகள் இருக்கின்றன.தோட்டம்கள் செய்கிறார்கள்.அந்த பெரிய தோட்டத்தில் நமது ஊரில் மாட்டால் உழுவது போல் குதிரையால் உழுகிறார்கள்.அந்த மக்களுக்கே உரிய ஒரு கொடை போல நிறையவே கைவேலைகள் தெரிந்து வைத்துள்ளனர்.இத்துடன் மரவேலைகள் மிகவும் நுட்பமான வேலைகள் எல்லாம் கையால் செய்து பெரிய பெரிய வியாபாரம் செய்கிறார்கள்.

 

பிரயாணம்

நாங்கள் மோட்டார்வண்டி வைத்திருக்குமாப் போல இவர்கள் குதிரை வண்டி வைத்திருக்கிறார்கள்.யாராவது இவர்களின் நண்பர்கள் கேட்டால் அவர்களின் வண்டிகளில் பயணிக்கிறார்கள்.சாரதிப் பத்திரம் எதுவும் எடுப்பதில்லை.பேரூந்து மற்றும் புகைவண்டிப் பயணங்கள் மேற் கொள்கிறார்கள்.ஆனால் விமானத்தில் பயணிப்பதில்லை என்கிறார்கள்.

 

திருமணம்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் திருமணம் செய்யலாம்.எந்த காரணத்தைக் கொண்டும் அவர்கள் இனம் தவிர்ந்த மற்றைய இனத்துக்குள் திருமணம் செய்து கொள்ளதில்லை.யாராவது மீறி திருமணம் செய்ய முயன்றால் தமது இனத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள்.

 

கோவில்

இவர்களுக்கு தனிப்பட்ட கோவில்கள் இல்லை.கிறிஸ்தவ மதத்தையே தழுவி வணங்குகின்றனர்.கிழமைக்கு கிழமை ஒவ்வொருவர் வீட்டிலும் கோவிலில் செய்ய வேண்டியதை செய்கிறார்கள்

 

இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த இனமாக இருந்தாலும் இடை இடையே தமது இனத்தை வெறுத்து நண்பர்களுடன் தனியாகவும் போய் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.என்ன படிப்பு இல்லாததால் நல்ல வேலைகள் செய்து வாழ முடியாது.

 

மிக முக்கியமாக அரசாங்கத்திற்கு எந்த வரிகளும் செலுத்துவதில்லை.ஏனெனில் அரசிடமிருந்து எந்த உதவித் தொகையோ இளைப்பாற்று சம்பளமோ எதுவும் பெறுவதில்லை.வயது போனால் அவர்களுது குடும்பங்கள் தான் அவர்களை கவனிக்க வேண்டும்.

 

கடைசியில் சுடலைப் பக்கம் போனால் கிறிஸ்தவ மதத்தினரைப் போலவே புதைத்துள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு, ஈழபிரியன். சுவாரசியமாக  உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் உள்ளார்கள்..! சில கிழமைகளுக்கு முன்னர் ஹமில்ட்டன் பக்கமாகப் போனபோது உட்புறச்சாலை ஒன்றில் ஒரு குதிரைவண்டில் போனது.. அவர்களா என்று தெரியவில்லை..

தகவல்களுக்கு நன்றி ஈழப்பிரியன்..!

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

------

மிக முக்கியமாக அரசாங்கத்திற்கு எந்த வரிகளும் செலுத்துவதில்லை.ஏனெனில் அரசிடமிருந்து எந்த உதவித் தொகையோ இளைப்பாற்று சம்பளமோ எதுவும் பெறுவதில்லை.வயது போனால் அவர்களுது குடும்பங்கள் தான் அவர்களை கவனிக்க வேண்டும்.

------

 

வித்தியாசமான மக்களாக இருக்கிறார்கள். பகிர்விற்கு... நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்
நன்றி ஈழப்பிரியன்
 

பகிர்விற்கு நன்றி ஈழப்பிரியன்.
 

கனடாவில் இவர்களை பார்த்திருக்கின்றேன் .இவர்கள் மற்றவர்களில் இருந்து விலகி இருக்கவே விரும்புகின்றார்கள் .இவர்களை பார்க்க மிக சந்தோசமாக இருக்கும் .

HARRISON FORD "WITNESS"  படம் பார்த்தால் அமீஷ் இனத்தை பற்றியது .மிக நல்லபடம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துக்கள் பகிர்ந்த  நுணாவிலான் இசைக்கலைஞன் தமிழ்சிறி ரதி தப்பிலி அர்சுனுக்கு நன்றி.

 

 


http://en.wikipedia.org/wiki/List_of_U.S._states_by_Amish_population List of U.S. states by Amish population

 

 

Ohio 59,103 Pennsylvania 58,009 Indiana 45,144 Wisconsin 14,957 New York 10,787 Michigan 10,218 Missouri 9,833 Kentucky 8,172 Iowa 7,179 Illinois 6,267 Minnesota 2,765 Tennessee 1,948 Maryland 1,512 Delaware 1,424 Kansas 940 Virginia 547 Oklahoma 523 Montana 363 Colorado 330 Nebraska 275 West Virginia 217 Maine 203 Mississippi 175 Arkansas 130 North Carolina 127 Florida 125 Texas 52 South Dakota

31

 

 


http://en.wikipedia.org/wiki/List_of_U.S._states_by_Amish_population List of U.S. states by Amish population

 

 

Ohio 59,103 Pennsylvania 58,009 Indiana 45,144 Wisconsin 14,957 New York 10,787 Michigan 10,218 Missouri 9,833 Kentucky 8,172 Iowa 7,179 Illinois 6,267 Minnesota 2,765 Tennessee 1,948 Maryland 1,512 Delaware 1,424 Kansas 940 Virginia 547 Oklahoma 523 Montana 363 Colorado 330 Nebraska 275 West Virginia 217 Maine 203 Mississippi 175 Arkansas 130 North Carolina 127 Florida 125 Texas 52 South Dakota

31

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்படி ஒரு ஈழத்தவன் வாழ்ந்தால் நக்கல்  நையாண்டிகளுடன் பட்டிக்காட்டான் பட்டம் சூட்டுவர்.
 
ஈழத்து விவசாயிகள் இயற்கையைத்தவிர வேறுயாரிலும் தங்கியிருப்பவர்களல்ல.வரியும் கட்டுபவர்களல்ல.அரச உதவிகளையும் நாடுபவர்களல்ல.மின்சார சக்தியையும் தேடுபவர்களல்ல...... :)

இவர்கலும் மாரி விடுவர்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஈழப்பிரியன் ! :D

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் பகிர்ந்த குமாரசாமி பாலா80 சுவி மற்றும் பெருமாளுக்கு நன்றி.


 

இப்படி ஒரு ஈழத்தவன் வாழ்ந்தால் நக்கல்  நையாண்டிகளுடன் பட்டிக்காட்டான் பட்டம் சூட்டுவர்.
 
ஈழத்து விவசாயிகள் இயற்கையைத்தவிர வேறுயாரிலும் தங்கியிருப்பவர்களல்ல.வரியும் கட்டுபவர்களல்ல.அரச உதவிகளையும் நாடுபவர்களல்ல.மின்சார சக்தியையும் தேடுபவர்களல்ல...... :)

 

 

இந்த இனத்தவர்கள் ஜேர்மனியில் இருந்து வந்ததாகவும் ஆனால் இப்பொது ஜேர்மனியில் இவரகள் பூர்வீகமே இல்லை என்கிறார்கள்.

 

மற்றும் நீங்கள் எழுதியது போல் எம்மைப் பார்த்து முதலில் சிரிப்பது எமது இனம் தான்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.