Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விட்டு விடுதலையாதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை என்னும் சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உள்ளனவாயினும் விட்டு விடுதலையாதல் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே எம் புலன்களும் மனதும் ஆடக்கி ஆளப்படுகின்றன என நான் எண்ணுகிறேன். மனைவியிடமிருந்து, கணவனிடமிருந்து, பிள்ளைகளிடமிருந்து, காதலன் காதலியிடமிருந்து, உறவுகளிடமிருந்து, தன் பொறுப்பிலிருந்து விடுதலையாகி நின்மதியாக இருக்கவே பலரும் எண்ணுகின்றனர். ஆனால் அவ் அரிய நிலை பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை.

நாம் ஒருவர் மீது அன்பு செலுத்தும்போது அதீதமாக அவர்பால் ஈர்ப்புக்கொண்டு அவரும் எம்மேல் அந்தளவு அன்பு கொண்டுள்ளார் என எண்ணி அவர்களுடன் உரையாடுவதைப் பேறாகவும் எண்ணி உரையாடிக்கொண்டிருப்போம். ஆனால் அன்பு என்பதும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது என்பதும் ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் உண்மை அன்பு நீடிக்கும் என்பதையும் உணராதிருக்கின்றோம். அதன் பயன்தான் எமக்குள் ஏற்படும் ஏமாற்றங்களும் அழுகைகளும். எம் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள, எமக்காக வேலைகளைச் செய்ய எம் சுயநலத்துக்காக, சுய தேவைகளுக்காக  அன்பு என்று கூறிக் கொள்கின்றோம் என்பதுதான் உண்மை.

பல நேரங்களில் அன்புகூட சுயநல நோக்கம் கொண்டதாகவே இருக்கின்றது. பலரும் அது தவறு என்று அடித்துக் கூறலாம். ஆனால் சிந்தித்துப் பார்த்தோமானால் அதில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது புரியும்.

நாம் எப்படி மற்றவரிடம் அன்பு செலுத்துகின்றோமோ அவர்களும் பதிலுக்கு எம்மீது அன்பு கொண்டவர்களாகவும் திருப்ப அந்த அன்பை வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்கும் வரைதான் அது நிலைக்குமே தவிர ஒருவருக்கு அந்த அன்பைச் செலுத்துவதற்கு முடியாது போனாலோ அல்லது அவருக்கு எம்மேல் ஒருவித சலிப்பு ஏற்பட்டுப் போனாலோ அந்த அன்பில் விரிசல் விழுந்து போகிறது.

நல்ல நண்பர்கள் என்று கூறுகிறோம். அந்த நல்ல நண்பர்கள் இருவர் ஒரு சிறு விடயத்தில் முரண்பட்டு பின்னர் அந்த நட்பைத் தொடர முடியாது போவதற்கும் மனதில் ஏற்படும் ஒரு சலிப்போ அன்றி வன்மமோ அல்லது இயலாமையோகூடக் காரணமாக அமையலாம். ஆனாலும் அப்படி ஒரு சிறு கீறல் ஏற்பட்டுவிட்டாற்கூட மீண்டும் மனதை ஓட்ட வைப்பது கடினமாகிவிடும்.

ஆண்களைப் பொருத்தவரை பெண்களைப் போன்று எதனிலும் ஆழ்ந்து அன்பு செலுத்த முடியாது போவதர்க்குக் காரணம் அவர்கள் அடி மனதில் ஆழமாகப் பற்றியிருக்கும் சுயநலமே என்றால் மிகையாகாது. தான், தன் விடயம், தன் சுற்றம் என்று சிந்திக்க மட்டும் முடியும் ஒருவரால் மற்றவர் நிலையில் நின்று எதையும் சீர்தூக்கிப் பார்க்கவும் முடியாது. அதனால் பெருமளவான ஆண்கள் பெண்களைப் போல் மன அழுத்தங்களுக்கு ஆளாவதும் இல்லை. ஒருசிலர் விதிவிலக்காய் இருப்பதும் உண்டுதான்.

எம் உணர்வுகளின் ஆதீத உந்தலாலேயே நாம் மற்றவர்பால் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் அந்த உணர்வுகள் எந்நாளும் அதே அலைவரிசையில் இருந்துகொண்டே இருக்கும் என்பதில்லை. இருந்தாற்போல் அந்த உணர்வு சட்டென அடங்கிப்போக விடுதலை உணர்வு தலை தூக்கலாம். அப்படியெனில் இத்தனை நாட்கள் எம்மிடையே இருந்தது வெறும் உணர்வுகளின் தாக்கம் தானன்றி உண்மை அன்பு இல்லை என்றாகிவிடுகிறது.

 உண்மையான அன்பு ஒருவர்மேல் நாம் வைத்தோமானால் அது எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறாது இருக்கும். சுயநலம் சாராதிருக்கும்.
அதில் இரக்கம்,விட்டுக்கொடுத்தல், பிறர் நிலை நின்று நோக்கல் எல்லாம் இருக்கும். இக்காலத்தில் அப்படி எல்லாம் இருக்கிறதா என்ன ???

கல்லெறி வாங்க நான் தயார். நீங்கள் தயாரா உறவுகளே????????

முதல் கல்லை நான் எறிகின்றேன் :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் உங்கள் தலைப்பும்,கருத்தும் பிடித்திருக்கிறது ஆகவே இதை பதிய முனைகிறன்.நான் எழுதுவது பிடிக்கிறதும்,பிடிக்காமல் போவதும் மற்றவர்கள் கருத்தை உள் வாங்கும் நிலையைப் பொறுத்தது...இது ஒரு லூசு என்று நினைக்காதவரையில் சந்தோசம்....

பலரோடு பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் அனேகமானவர்கள் இடை நடுவில் தள்ளி விட்டுட்டு போகுபவர்களாத் தான் இருக்கிறார்கள்...எல்லாருக்கும் எல்லார் மீதும் தொடர்ந்து பழகுவதற்கோ,பேசுவற்கோ,அன்பாக இருப்பதற்கோ விருப்பம் வராது....ஆனால் இவர்கள் நம்மை விட்டு விலத்திடக் கூடாது என்று நினைத்தால் அப்படியானவர்கள் தான் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கவே அதிரடி நடவடிக்கை செய்பவர்களாக இருப்பார்கள்.நான் அனுபவித்த படியால் சொல்கிறேன்..

உன்னை விட்டால் வேறை யாரு நமக்கு என்ற மாதிரி நன்றாக இனிக்க,இனிக்க பேசுவார்கள் தங்களுக்கு என்று ஒரு துணை வந்ததும் பழகிக்கொண்டு இருந்தவர்களை மறந்துடுவார்கள்...ரொம்ப சுய நலமான உலகமாக மாறிட்டு வருகிறது..சில ஆண்களை பொறுத்த மட்டில் தாங்கள்,தங்கள் குடும்பம்,சுற்றம் இது தான் அவர்களது கனவாக இருக்கிறது..தொடர்ந்து பேச மாட்டார்கள்..

ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டால்  அங்காலை திரைப்பட வசனங்கள் தான் வரும்....ஆண்கள் தான் இதில் ரொம்ப மோசம்..தங்களை நம்பி வந்தவைக்கு துரோகம் செய்யக் கூடாதாம்..அப்போ முன்னர் பேசிட்டு இருந்தவே என்ன தெருவில நிண்டவையா இல்ல கேக்கிறன்.........சொல்லப் போனால் எல்லாம் றாமா தான்...

இப்படியான காரணங்களால் நான் மற்றவர்களோடு பேசுவதில்லை,பேச விருப்பம் வருகிறது இல்லை..ஏன் ஆண்கள் முன்னாடி போகவே பிடிக்கிறது இல்லை....யார் அது என்று கேட்டால் நட்பு என்று சொன்னால் என்ன வந்து இருக்கிறவே கொலையா செய்துடுவீனம்.....ஏன் இவ்வளவு பயம்........??? சுய நலம்.

சின்ன,சின்ன விடையங்களை கூட எடுத்து கூற முடியாத அழவுக்கு மாற்றம் பெற்று விடுகிறார்கள்..என்னைப் பொறுத்த மட்டில் நான் யாரோடும் சுய நலமாக பழகுவதில்லை..நான் சுய நலமாக பழகவேண்டிய அவசியமும் இல்லை..

எனது கருத்து பிடிக்காது விட்டால் நிர்வாகம் நீக்கி கொள்ளலாம்...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இது அயன் ரான்டின் (Ayn Rand) தத்துவத்தால் பாதிப்பிற்குள்ளான கருத்து மாதிரிப் படுகுது. சில பதில் கேள்விகள் மூலம் ஆர்மபிக்கலாம்:

உணர்ச்சியில் இருந்து அன்பை எப்படிப் பிரித்தறிவது? அன்பு காதல் பாசம் எல்லாம் உணர்ச்சியின் வடிவம் தானே? யாராவது தனிப்பட  "மூளையால்" அன்பு செய்ய இயலுமா?

எல்லா அன்பும் தேவை கருதியா? அம்மா அப்பா குழந்தையின் மீது வைக்கும் அன்பு எதை எதிர் பார்க்கிறது? அப்படி ஒன்றை எதிர் பார்த்தால் அம்மா அப்பாவுக்கு அது கிடைக்கிறதா? அப்படிக் கிடைக்கா விட்டால் குழந்தையை வெறுப்பார்களா தாயும் தந்தையும்?

அன்பு என்பது ஒரு உழைப்பு (effort) என்பதால் தான் இடையிடையே வேலையில் வருவது போல சலிப்பும் களைப்பும் வருகிறது என நான் நினைக்கிறேன். உழைப்பு அவசியம் இல்லாத ஒரு அன்பு/பாச வகையைக் காட்ட முடியுமா?

எங்கோ படித்த ஞாபகம்..

உயிரினங்களின் வாழ்வியல் அடிநாதம் தனது சந்ததியை இப்பூவுலகில் விட்டுச் செல்வதாம்.. :rolleyes:

அதாவது, எமக்குத் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையே இதுதான் என்கிறார்கள்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும், படிக்க வேண்டும்.. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று செய்கிற இன்னோரன்ன செயல்களுக்கு அடித்தளமாக இந்த வம்சத்தை விட்டுச் செல்லுதல் உள்ளதாக சொல்கிறார்கள்.. :unsure:  வளமான வாழ்வு இருந்தால் வளமான எதிர்காலம் சந்ததிக்குக் கிடைக்கும்..

அதுபோல, குழந்தை பிறந்தவுடன் ஆண்களுக்கு சுரக்கும் ஒருவகை ஹோர்மோனால் அவர்கள் களைப்படையாமல் சுற்றித்திரிவார்கள்.. இதுவும் "சந்ததியைக் காத்தல்" என்கிற அடிப்படையினுள் வரும்.

ஆண்கள் பல பெண்களைத் தேடுவதும் (பல இடங்களில் சந்ததியை விட்டுச் செல்லுதல்.. :D ) பெண்கள் கண்ணும் கருத்துமாக பிள்ளைகளை வளர்ப்பது இதில் அடங்கும்..

கணவன் மேல் கோபமாகி தற்கொலை செய்யும் பெண்கள் குழந்தைகளையும் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அதாவது அந்த ஆணுக்கு வழங்கப்படக்கூடிய அதியுச்ச தண்டனை.. இது அனிச்சை செயல்..

ஆண் சிங்கம் தன் பெண்ணினத்தை நெருங்கும்போது அதன் குட்டிகளைக் கொன்றுவிடும்.. அது தன் குட்டியாக இருந்தால் கொல்லாது.. அவற்றால் உணர்ந்துகொள்ள முடியும். இதுகுறித்து டிஸ்கவறியில் ஒரு விவரணம் போட்டார்கள்..

வேற்று ஆணின் குட்டியைக் கொன்றால் அந்தப் பெண் சிங்கம் வம்ச விருத்தி வேண்டி கொன்ற ஆண் சிங்கத்தை ஏற்றுக்கொள்ள வழியுண்டு.. விந்தை உலகம்..

பி.கு: சுமோ அக்காவின் பதிவை இன்னும் வாசிக்கவில்லை.

இப்போது வாசித்துவிட்டேன்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் கல்லை நான் எறிகின்றேன் :lol: :lol: .

கல் எறிவீர்கள் என்று  பார்த்தால் வார்த்தைகளால் எறியவே பயப்படுகிறீர்களே கோமகன். :lol:

நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை யாயினி. ஆண்களைப் பொருத்தவரை எல்லாவற்றிர்க்கும் பெண்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய தேவை உள்ளதனால் அதை இழக்க விரும்பாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் மற்றவர் உணர்வுகளைப் பற்றி சிறிதேனும் எண்ணிப் பாராது தன்னலமே பெரிதென எண்ணுவதனாலேயே உடனே அவர்களால் ஒரு நடப்பை, உறவைப் பிரிந்து நின்மதியாக இருக்க முடிகிறது.ஆனால் பெண்களால் அப்படி முடிவதில்லை. பெண்கள் பொருளாதார ரீதியில் மட்டும் ஆண்களைச் சார்ந்து இருக்கின்றனரே தவிர மற்றைய எல்லாவற்றிலும் சுயமாக தன்னுணர்வுடன் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.சுயநலம் கொண்டவர்கள் பிரயாணம் வழிப் பயணத்தில் சேர்ந்து பிரயாணம் செய்வது போன்றதும் அவர்கள் இறங்குமிடம் வந்ததும் சொல்லாமலே இறங்குவதும் போன்றதே. தொடர்ந்து அவர்களால்  மற்றவருடன் அன்பாக இருக்கவே முடியாது ஆகையால் அப்படிப்பட்டவர்கள் மற்றவரை ஏமாற்றாது முதலிலேயே விலகி இருப்பது மற்றவர் மனத்தைக் காயப்படுத்தாது இருக்க வழி வகுக்கும்.

நீங்கள் எந்தக் காலத்திலை இருக்கிறியள்  :o  :o  ?

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

இது ஏதோ வீட்டில அயலில நடந்த சம்பவங்களை வைச்சுக் கொண்டு ஏதோ நடக்குது. இதில நானும் நீங்களும் தெரியாம வந்து மாட்டிக் கொண்டம் போல. இந்த அனுபவங்கள் எங்களுக்கிருக்காது (ஏனெண்டா நாங்கள் மனம் கல்லாகிப் போன சுயநலம் மிக்க் ஆண்கள் :D ). அதனால எனக்கு விளங்குதில்ல, உங்களுக்கேதும் விளங்குதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது அயன் ரான்டின் (Ayn Rand) தத்துவத்தால் பாதிப்பிற்குள்ளான கருத்து மாதிரிப் படுகுது. சில பதில் கேள்விகள் மூலம் ஆர்மபிக்கலாம்:

உணர்ச்சியில் இருந்து அன்பை எப்படிப் பிரித்தறிவது? அன்பு காதல் பாசம் எல்லாம் உணர்ச்சியின் வடிவம் தானே? யாராவது தனிப்பட  "மூளையால்" அன்பு செய்ய இயலுமா?

எல்லா அன்பும் தேவை கருதியா? அம்மா அப்பா குழந்தையின் மீது வைக்கும் அன்பு எதை எதிர் பார்க்கிறது? அப்படி ஒன்றை எதிர் பார்த்தால் அம்மா அப்பாவுக்கு அது கிடைக்கிறதா? அப்படிக் கிடைக்கா விட்டால் குழந்தையை வெறுப்பார்களா தாயும் தந்தையும்?

அன்பு என்பது ஒரு உழைப்பு (effort) என்பதால் தான் இடையிடையே வேலையில் வருவது போல சலிப்பும் களைப்பும் வருகிறது என நான் நினைக்கிறேன். உழைப்பு அவசியம் இல்லாத ஒரு அன்பு/பாச வகையைக் காட்ட முடியுமா?

முன்னைய கேள்வுகளுக்கு நீங்கள்தான் பதில் தர வேண்டும். என்னுடையது என்னும் சுயநலம் சார்ந்ததாக ஏன் பெற்றோரின் அன்பு இருக்கக் கூடாது. எம்மக்குக் காலங்காலமாகக் கூறப்பட்டும் நடைமுறையில் இருக்கும் எம் பண்பாட்டுகளுக்கும் இந்த அன்பு செலுத்துதலுக்கும் கூட தொடர்பு இருக்கலாம். என்னுடையது இதைப் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டியது என்கடமை என்னும் உணர்வு மரபுயிரணு 

க்களிநூடாகக்  கடத்தப்படுவதும் அதனூடு எம் மூலையில் ஏற்படும் கட்டளைகளும் கூட இது சார்பானதாக இருக்கலாம். தேவை, தேவை அற்றது என்பதுகூட தனி மனித மனங்களில் அன்பு சார்ந்த மாற்றத்தையும் எதிர் வினைகளையும் ஏற்படுத்தக் கூடியதுதானே.நீங்கள் கூறியதுபோல அதுவும் ஒரு உழைப்புத்தான். நாம் பிரதி அன்பு செலுத்துவது அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடுவது, இயலாது விடில் கைவிடுவது என்பன கூட ஒருவகை உழைப்புத்தான்.

நீங்கள் எந்தக் காலத்திலை இருக்கிறியள்  :o  :o  ?

இன்னும் அப்படியான நிலையில் எம் பெண்கள் இருக்கிறார்கள் கோமகன். நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டும் வைத்துக்கொண்டு கூறுகிறீர்கள். அதுவும் புலம்பெயர் தேசத்தில் எண்ணிக்கை குறைவாக இருப்பினும் இன்னும் எம் தாயகத்தில் எந்நிலையில் எம்மவர் இருக்கின்றனர்.

இசை,

இது ஏதோ வீட்டில அயலில நடந்த சம்பவங்களை வைச்சுக் கொண்டு ஏதோ நடக்குது. இதில நானும் நீங்களும் தெரியாம வந்து மாட்டிக் கொண்டம் போல. இந்த அனுபவங்கள் எங்களுக்கிருக்காது (ஏனெண்டா நாங்கள் மனம் கல்லாகிப் போன சுயநலம் மிக்க் ஆண்கள் :D ). அதனால எனக்கு விளங்குதில்ல, உங்களுக்கேதும் விளங்குதா?

பயப்பிடவேண்டாம் ஜஸ்டின். உதுதான் ஆண்களின் நிலை. தொடர்ந்து ஈடு கொடுப்பது உங்களுக்கு முடியாதிருக்கிறது. :lol: எங்கேயோ தொடக்கி எங்கேயோ போகுது போல. நீங்கள் வீணா ஏன் இசையையும் இழுக்கிறீர்கள். :D

எங்கோ படித்த ஞாபகம்..

உயிரினங்களின் வாழ்வியல் அடிநாதம் தனது சந்ததியை இப்பூவுலகில் விட்டுச் செல்வதாம்.. :rolleyes:

அதாவது, எமக்குத் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையே இதுதான் என்கிறார்கள்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும், படிக்க வேண்டும்.. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று செய்கிற இன்னோரன்ன செயல்களுக்கு அடித்தளமாக இந்த வம்சத்தை விட்டுச் செல்லுதல் உள்ளதாக சொல்கிறார்கள்.. :unsure:  வளமான வாழ்வு இருந்தால் வளமான எதிர்காலம் சந்ததிக்குக் கிடைக்கும்..

அதுபோல, குழந்தை பிறந்தவுடன் ஆண்களுக்கு சுரக்கும் ஒருவகை ஹோர்மோனால் அவர்கள் களைப்படையாமல் சுற்றித்திரிவார்கள்.. இதுவும் "சந்ததியைக் காத்தல்" என்கிற அடிப்படையினுள் வரும்.

ஆண்கள் பல பெண்களைத் தேடுவதும் (பல இடங்களில் சந்ததியை விட்டுச் செல்லுதல்.. :D ) பெண்கள் கண்ணும் கருத்துமாக பிள்ளைகளை வளர்ப்பது இதில் அடங்கும்..

கணவன் மேல் கோபமாகி தற்கொலை செய்யும் பெண்கள் குழந்தைகளையும் கொல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அதாவது அந்த ஆணுக்கு வழங்கப்படக்கூடிய அதியுச்ச தண்டனை.. இது அனிச்சை செயல்..

ஆண் சிங்கம் தன் பெண்ணினத்தை நெருங்கும்போது அதன் குட்டிகளைக் கொன்றுவிடும்.. அது தன் குட்டியாக இருந்தால் கொல்லாது.. அவற்றால் உணர்ந்துகொள்ள முடியும். இதுகுறித்து டிஸ்கவறியில் ஒரு விவரணம் போட்டார்கள்..

வேற்று ஆணின் குட்டியைக் கொன்றால் அந்தப் பெண் சிங்கம் வம்ச விருத்தி வேண்டி கொன்ற ஆண் சிங்கத்தை ஏற்றுக்கொள்ள வழியுண்டு.. விந்தை உலகம்..

பி.கு: சுமோ அக்காவின் பதிவை இன்னும் வாசிக்கவில்லை.

இப்போது வாசித்துவிட்டேன்.. :D

வாசித்துவிட்டுக் கருத்தை எழுதவில்லையே இசை :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துவிட்டுக் கருத்தை எழுதவில்லையே இசை :lol:

ஜஸ்ரினின் பதிவை வாசித்துவிட்டுத்தான் கருத்து எழுதினேன்.. :D பிறகு உங்கள் பதிவை படித்துவிட்டு, ஒரு வரி போட்டேன்.. அது பழைய பதிவுடன் சேர்ந்துகொண்டது.. :unsure:

நிற்க.. நான் எழுதியதுக்கும், உங்கள் முதல் பதிவுக்கு தொடர்பு உள்ளதுதானே.. மனிதர்கள் எல்லோருமே சுயநலத்தின்பாற்பட்டே இயங்குகிறோம்.. இதில் ஆண்/பெண் விதிவிலக்கில்லை.. பெண்கள் சுயநலவாதிகள் இல்லை என்று சொல்வதால் உங்களுக்கு சந்தோசம் வரும் என்றால் விட்டுவிடுவோம்.. :lol:

எனது பதிவில் சொன்னதுபோல, அன்பைக் காட்டுவதற்கும் சுயநலமே காரணம்..

ஒரு பியூட்டிஃபுல் ஃபிகரும், அட்டு ஃபிகரும் அருகருகே நின்றால் அந்த பியூட்டியில் அன்பு பொங்குவது இயல்பு.. :D ஏனென்றால் அழகான ஃபிகரைக் கட்டி அழகான குழந்தை பெற்றால் அதுக்கு ஒரு மறைமுக சமூக அந்தஸ்தும், நல்ல மாப்பிளை அல்லது பொம்பிளை கிடைக்கும்.. :D இப்பிடியே வம்சம் நல்லா விருத்தியாகும் என்கிற நல்ல எண்ணம்தான் காரணம்.. :icon_idea:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

இது ஏதோ வீட்டில அயலில நடந்த சம்பவங்களை வைச்சுக் கொண்டு ஏதோ நடக்குது. இதில நானும் நீங்களும் தெரியாம வந்து மாட்டிக் கொண்டம் போல. இந்த அனுபவங்கள் எங்களுக்கிருக்காது (ஏனெண்டா நாங்கள் மனம் கல்லாகிப் போன சுயநலம் மிக்க் ஆண்கள் :D ). அதனால எனக்கு விளங்குதில்ல, உங்களுக்கேதும் விளங்குதா?

பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துவர ஆண் சிங்கங்களுக்கு வம்ச விருத்தி ஞாபகம் வந்துவிடும்.. :rolleyes: அப்ப மேய்ச்சலுக்குப் போக நிற்பார்கள்.. :D அது பெண்களுக்கு சுயநலமாக தெரியும்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 'ஆராய்ச்சி எல்லாருக்கும் இந்த வயதில வாறது எண்டு கேள்வி! :o

இதுவும் கடந்து போகும், சுமே! :icon_idea:

நீங்கள் எங்கேயோ போறியள்  இசை நான் எதோ நினைத்து இத்திரி திறக்க...... :D

இந்த 'ஆராய்ச்சி எல்லாருக்கும் இந்த வயதில வாறது எண்டு கேள்வி! :o

இதுவும் கடந்து போகும், சுமே! :icon_idea:

ஒரு பொதுத் திரியில் கருத்து எழுதவே இத்தனை யோசனை ஆண்களுக்கு ம் ..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

அன்பிலார் எல்லாம்தமக்குரியர் அன்புடையார்
என்பும்உரியர் பிறர்க்கு- திருவள்ளுவர்.

ஒண்டும் விளங்கவில்லைக் கரு :D

பயத்தில ஒருத்தரும் இந்தத் திரியை எட்டிப் பாக்கினமில்லைப் போலை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் ஏதோ சொல்ல வாறியள் என்று மட்டும் விளங்குது.. :rolleyes:

ஆனாலும் பாருங்கோ நாங்கள் சுழியனுகள் .... :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஏதோ சொல்ல வாறியள் என்று மட்டும் விளங்குது.. :rolleyes:

ஆனாலும் பாருங்கோ நாங்கள் சுழியனுகள் .... :lol::icon_idea:

ஆமா..ஆமா..

உப்பிடியே சொல்லிக் காலத்தைக் கடத்துங்கோ :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரத் தமிழில் ஏதோ சொல்ல விழைகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது!  vil-rigole.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரத் தமிழில் ஏதோ சொல்ல விழைகிறீர்கள் என்று மட்டும் புரிகிறது!  vil-rigole.gif

நீங்களுமா ???? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

'விட்டு விடுதலையாதல்" :wub:

இந்தத் தலைப்பிற்கும் உங்களுடைய கட்டுரைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா சுமே?

கட்டுரையில் நீங்கள் எதனை சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்து கொள்ளுவது கடினமாக இருக்கிறது. தலைப்பை நீக்கிவிட்டு கட்டுரையை வாசித்தால் புரிதல் ஏற்படும்      "விட்டு விடுதலையாதல் "  என்ற மாபெரும் சொல்லோடு குறுகிய எண்ணோட்டங்களை இணைத்து பார்க்க புலன்கள் :( மறுக்கின்றன. விட்டு விடுதலையாதல் என்று எழுதிக் கொண்டு :icon_mrgreen: விலங்குகள் மாட்ட எத்தனிப்பதுபோல் இருக்கிறது உங்களுடைய ஆக்கம் :unsure: ஒருவேளை எனது புரிதல் தவறானதாக இருந்தால் மன்னித்து விடுங்கள் :rolleyes:

உண்மைதான் சகாரா. இந்தத் தலைப்பு என் மனவோட்டத்தில் உதித்தது. ஆனாலும் சில வேளைகளில் ஒன்றை எழுத விளைந்தாலும் தடைகள் எம்மை எழுதவிடாது செய்துவிடுகின்றன. என் சந்தேகங்களுக்கும் குழப்பத்துக்கும் சிலநேரம் மற்றவர்களின் கருத்துக்களினூடாக ஒரு தெளிவு கிடைக்கலாம் என்னும் ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால் நீங்கள் கூறியபிறகுதான் மற்றவர்களுக்கும் புரியாது என்று தெரிகிறது. முற்றிலும் தொடர்பில்லை தலைப்புக்கு என்று கூற முடியாது. ஆனால் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் வரிகளாக அதை நீங்கள் பார்ப்பதால், நான் எழுதிய விடயங்கள் குறுகிய எண்ணங்களைத் தெரிகின்றன.

ஒருத்தரும் சீரியஸாக இல்லாமல் விளையாட்டாத்தான் இந்தத் திரியைப் பாக்கிறீர்கள். ஆமிக்கும் விளங்கேல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.