Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான்  கவிதை கொட்டுது. வாத்தியார் தான் காரணமோ ??? :D  நானறியேன். நன்றாக இருக்கிறது

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மயில் இறைச்சியில் 'அது' தேடலா?

தமிழ்மகன் முருகனே இகழ்வாரே!

மயில் இறைச்சியில், வைட்டமின் தேடும் மாணாக்கர் பாஞ்சுவிற்கு சிறிய குட்டு!

 

- வாத்தியார்.

 

குட்டில் கலங்கிய மூளையின் தேடலில் உதித்த மயில் இறைச்சிக்கான பொழிப்புரை, :icon_idea:

 

பெண்ணை மயில் என்று சொல்வர். :(

இறை என்றால் நீர் இறைத்தல் என்றும் பொருளுண்டு.

இச்சி என்றால் இத்தியெனவும், இத்தியென்றால் இஞ்சி எனவும் பொருளுண்டு. :o

அதாவது 'மயில் இறைச்சி' என்றால், பெண் நீர் இறைத்து வளர்த்த இஞ்சி என பொருள் கொள்ளலாம், :)  அதில்தான் எத்தனை வைட்டமின்கள். ஆகவே இதையே நான் தேடிச்சென்றதாக முருகப்பெருமானைப் பொருள்கொள்ள வைக்கலாம். கவலை வேண்டாம் வன்னியரே. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பக்தி ஒரு தமிழ்மொழிச் சொல் அல்ல. வடமொழிச்சொல்.

சரியான தமிழ்ச்சொல்  பத்தி என வரவேண்டும்) //

 

எனக்கு உள்ள பிரச்சனையே இந்த இடைநிலை மெய்மயக்கந்தான் :D :D . மேலும் பக்தி வடமொழிச் சொல் என்கின்றீர்கள் .  பத்தி என்பதற்குத் தாழ்வாரம் என்ற பொருளும் உண்டல்லவா ??

பக்தி என்பது வடமொழிச்சொல் தான்

பத்தி என்பது  தாழ்வாரத்திற்கு ஒத்த கருத்துள்ள சொல்லேன்றாலும்???

பிரச்சனை இல்லை

சொல்லில் மெய்மயக்கம் சரியாகத்தானே இருக்கின்றது

கோமகன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வினை அடிகளுக்கு உதாரணம் கூறுங்கள் வாத்தியார்.

நடந்து, பறந்து என்பவை வினை எச்சங்கள் இல்லையா???

சுமேரியர் நீங்கள் கூறும் வினை அடிகள் என்பது எவை

என்று கூறுங்கள்.

நடந்து பறந்து என்பவையும் வினை எச்சங்கள் தான்

நடந்தது நடந்தன நடந்தான்

பறந்தது பறந்தன என்பன முழுமையானவை

வாத்தியார், சகாரா குளப்பிறா படிக்க விடாமல் தனக்கு வாழ்க்கையில் ஒருவருமே காதல் கடிதம் தரேலையாம் எண்டு இன்னும் தனக்கு மனத்தாக்கமாம். 

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்க, உங்கட வீட்டுக்குப் பக்கத்துவீட்டு அருண் இதை உமக்குக் குடுத்துவிடச் சொன்னவன். ஆர்வம் தாங்காமல் உடைச்சுப் படிச்சிட்டன். நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன். என்னெண்டு முடிவைச் சொல்லும்.

 

ஆருயிரே சகாரா!

உன்னைக் காணும் போதெல்லாம் என் நெஞ்சு மிக வேகமாகத் துடிக்கிறது. பயத்தினால் அல்ல. உன்மீதுள்ள காதலால். உன்னையே எந்நேரமும் பார்த்துக்கொண்டிருக்க வேணும் போல் இருக்கிறது. ஆனால் பாழாய்ப்போன வாத்தியாரும் மற்றவர்களும் பார்க்கமுடியாது பயப்படுத்துகின்றனர். நீ வீதியில் எத்தனை பேருடன் சேர்ந்து வந்தாலும் உன் காலடி ஓசையை வைத்தே உன்னை என்னால் அறிய முடிகிறது. காவடிச் சிந்து நீ எனக்கு. எந்த  ஜென்மத்திலும் உன்னை மறவா வரம் வேண்டிக் கடவுளிடம் தினம் போகிறேன். கண்ணே என்னை ஏற்றுக்கொள்வாயா???? உன் சம்மதம் வேண்டி சரணடையக் காத்திருக்கும்

உன் அடிமை அருண்.


 

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கணப் பிழையின்றித் தமிழில் காதல்கடிதம் எழுதுவதெப்படி என்று அடுத்து வாத்தியார் படிப்பிக்கப்போவதாகக் கேள்வி. அதுக்குப்பிறகு பாருங்கோ சகாரா, உங்களுக்கு வந்து குவியப்போகும் காதல்கடிதங்களை. அடுப்பு மூட்டப் பேப்பருக்கு பஞ்சமே இல்லாது போகும். ஆனாலும் ஒரு வேண்டுகோள் சகாரா. Old is gold மறக்கவேண்டாம். :wub:   

பார்க்கிறசாடையில் பஞ்சாட்சரம்  ஆருக்கோ காதல்  கடிதம் கொடுக்க ரெடி போலை கிடக்கு  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போலி

 

சொல்லொன்றின் ஆரம்பத்திலோ அல்லது இடையிலோ
அல்லது முடிவிலோ சேரவேண்டிய எழுத்திற்கு மாறாக வேறு ஒரு எழுத்து

சேர்க்கப்பட்டாலும் அந்தச் சொல்லின் பொருள் மாறாமல்  இருக்கும்
 

சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்து

ஒரே பொருளைக் கூறி நிற்பதற்குப் போலி எனப்பெயர்.
 

மஞ்சு  = மைஞ்சு
மயல்  = மையல்
நயம் = ஞயம்
என்பன சொல்லின் முன்னர் எழுத்து மாறுபட்டாலும்
ஒரே பொருளைக்  கொடுப்பதால்  முதற்போலி எனப்படும்.
 

 

ஐந்நூறு  = ஐஞ்நூறு
அரயர்   = அரையர்
அமச்சு  = அமைச்சு
அரசியல்  =அரைசியல்
 என்பன எழுத்து ஒன்றோ பலவோ ஒரு சொல்லின் இடையில்

பிழையாகச் சேர்க்கப்பட்டாலும் சரியான பொருளைத் தருவதால் இடைப்போலி எனப்படும்
 

பந்தல் = பந்தர்
நிலம் = நிலன்
குடல் = குடர்
சாம்பல் = சாம்பர்
என்ற சொற்கள் சொல்லின் இறுதியில் எழுத்து மாறினாலும்

பொருள் மாறாது இருக்கும் கடைப்போலியின் உதாரணங்கள்
 

ஐந்து ( எண்) என்பது சரியாக எழுதப்பட்ட சொல்
அதையே சிலர் அஞ்சு( எண்) எனவும் எழுதுகின்றார்கள்
இங்கே முதல், இடை, கடை, எனப்  போலிகள் அனைத்தும்

ஒரு சொல்லில் வந்து பொருள் மாறாமல் இருக்கின்றது    

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ நாம் ஒன்றை எழுதும்போது போலிகளையும் பயன்படுத்தித் தாராளமாக எழுதலாம் என்கிறீர்களா??? வாத்தியார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நான் கவிதைகள் எழுதும்போது நிறைய போலிகளைப்பயன்படுத்தியுள்ளேன் :lol:

ஐயோ நான் படிக்க வந்ததையே மறந்திட்டனேயப்பா இந்தச் சனத்தின் லொள்ளுகளால்  :o  வாத்தியார் கிட்டடியிலை சோதனை ஒண்டும் இல்லைத் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அப்போ நாம் ஒன்றை எழுதும்போது போலிகளையும் பயன்படுத்தித் தாராளமாக எழுதலாம் என்கிறீர்களா??? வாத்தியார்.

 

 

"அ ஐ முதலிடை யொக்குஞ்  சஞயமுன்"

 

"ஐகான் யவ்வழி  நவ்வொடு சில்வழி"

ஞஃகான் உறழும் என்பரும் உளரே

 

"மகர  விறுதி யஃறிணைப்  பெயரின்

 னகரமோ டுறழா  நடப்பன வுளவே "       

 

இதன்படி எழுதலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

போலிகள் இலைமறை காயாகவும் உள்ளனவா வாத்தியார்.?? ஆண், பெண், திருநங்கை இவைமூன்றும் போலியா? நிஜமா? என்று தெரியவேண்டும். காரணம், எனக்கு மீண்டும் ஒரு பெண்ணுக்கு காதல்கடிதம் எழுதும் நோக்கமில்லை. :unsure:   எழுதினாலும், அலைமகளுக்கு நிச்சயம் எழுதமாட்டேன். :D  அவர் ஆணா, பெண்ணா, திருநங்கையா என ஒரு ஐயப்பாடு எனக்குள்ளது. ஏனெனில் "Gender:Not Telling" :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வாத்தியார்.

 

நீங்கள் 'போலி...போலி' என்றவுடன் எனக்கு 'போளி' ஞாபகமாய் மனதையும், நாவையும் வாட்டுது. அதுவும் கடைப்போலி என்றதும் மதுரை கடைகளில் கிட்டும் கடைப்போளிதான் நினைவிலாடி நாவில் நீர் ஊறுகிறது. :icon_idea:

 

ஆகையால் போளி சாப்பிட்டுவிட்டு பின்னர் வகுப்பிற்கு வருகிறேன்...இரண்டு நாள் விடுப்பு தாங்கோ. :)

 

 

poli-final1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

போலி என்று ஒட்டகத்தையும் குறிப்பிடுவதாக அறிந்துள்ளேன். 'ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதை' என்பதுபோல் போலிக்கு இடம்கொடுத்தால் அதனால் தமிழுக்குப் பாதிப்பு ஏற்படாதா?. :o  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாரியைகள்
 

 

ஒரு எழுத்தையோ சொல்லையோ அல்லது சொற்றொடரையோ நாக்கினால்

உச்சரித்துக் கூறும்போது அந்த உச்சரிப்பு சற்றுக் கடினமாக

இருந்தால் அந்த உச்சரிப்பை எளிமையாக்கவும் மென்மையாக்கவும் அந்த உச்சரிப்புடன்

வேறு ஒரு எழுத்தையோ  அல்லது ஒரு எழுத்துக் கூட்டத்தையோ சேர்த்துக் கொள்கின்றோம்
 

அப்படிச்சேர்த்துக்கொள்ளப்படும் எழுத்திற்கு அல்லது எழுத்துக்கூட்டத்திற்குச் சாரியை எனப்பெயர்.
 

இன் வற்று அத்து அம் ஒன் ஆன் அக்கு இக்கு அன்
 

என்பன சொல் சாரியைகள் ஆகும்

 

மயில் + ஐ = மயிலை
கால் + ஐ = காலை
கால் + ஆல் = காலால்
காலம் + அத்து  = காலத்து
என் + அக்கு = எனக்கு
என்பன சில உதாரணங்கள்
 

இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேரும்போதும்

சாரியைகள் அந்தச் சொற்களுடன் சேர்ந்து அச்சொற்களுடன் இயைந்து இடையே நிற்கும்.
 

பத்து + ஒன்று = பதினொன்று
(பத்து + ஒன்று,  பத் + ஒன்று, பத் + இன் + ஒன்று =பதினொன்று )
 

இவை சொல் சாரியை எனப்படும்
சொற்களுடன் சேர்ந்து வருவதனால்  சொல் சாரியை எனப்படும்

 

 

தனி எழுத்துக்களான அ ஆ இ ஈ ஐ  க கா ஔ என

எல்லா உயிர், மெய் எழுத்துக்களுக்கும் சாரியை உள்ளது.
 

அதாவது
அ க இ ச போன்ற குறில் எழுத்துக்களிற்கு கரம் என்ற சாரியை சேர்க்கப்பட்டு

அகரம் சகரம்  தகரம் டகரம் எனவும்
 

நெடில் எழுத்துக்களிற்கு காரம் என்ற சாரியையைச் சேர்த்து

ஈகாரம் ஏகாரம் ஊகாரம் எனவும்
 

ஐ ஔ என்ற எழுத்துக்கள் இரண்டிற்கும் கான் என்ற சாரியையைச் சேர்த்து

 

ஐகான் ஔகான் எனவும் அழைப்பர்        

 

இவை எழுத்துச்  சாரியைகள் எனப்படும்.

எழுத்துக்களுடன் சேர்வதனால் எழுத்துச் சாரியை எனப்படும்

அவைதாம் இன்னே வற்றே அத்தே அம்மே
ஒன்னே ஆனே அக்கே இக்கே
அன்னென் கிளவி உளப்படப் பிறவும்
அன்ன என்ப சாரியை மொழியே

என்று கூறுகின்றது   தொல்காப்பியம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் :  சுவி !

 

அடியேன் :   உள்ளேன் ஐயா .

 

வாத்தியார் :  வாரும், விடுமுறைக் கடிதத்தை  தலைமை ஆசிரியரிடம் கொடுக்கச் சொன்னால்  ஏன்  உப தலைமை ஆசிரியரிடம் கொடுத்தனீர்!

 

சுவி :   அவர்தான்  தலை  மை யோடு   இருந்தவர் , அதுதான் அவரிட்டக் குடுத்தனான்.

 

வாத்தியார் :  ம் ...  எனக்கெண்டு வந்து  வாய்க்குது,   வைரவருக்கு ....  ............ ......... !

 

 

 

ஆகா , நிறைய வகுப்புகளைத் தவறவிட்டு விட்டேன். எல்லா வகுப்புகளும் நல்ல கலகலப்பாகப் போகின்றன ! :D  :D  

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நான் படிக்க வந்ததையே மறந்திட்டனேயப்பா இந்தச் சனத்தின் லொள்ளுகளால்  :o  வாத்தியார் கிட்டடியிலை சோதனை ஒண்டும் இல்லைத் தானே?

இங்கபார்ற்றா காமடிய.. படிக்கவந்தவவாம்..  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது
 

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்
 

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை
ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்
 

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்
அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.
 

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது
கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்
 

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.
:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 
 
 

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் எழுத்ததிகாரம் முடிவடைகின்றது

 

அடுத்து நாங்கள் படிக்க இருப்பது சொல்லதிகாரம்

 

அதற்கிடையில் எழுத்ததிகாரத்தில் படித்தவற்றை

ஒரு பரீட்சையின் மூலம் மீளாய்வு செய்யலாம்

 

அடுத்த வாரம் 24 ம் திகதி ஒரு சிறிய பரீட்சை நடத்தலாம் என வாத்தியார் நினைக்கின்றார்

அதுவரை உங்களுக்குப் படிப்பதற்காக விடுமுறை கிடைக்கின்றது.

 

பரீட்சையின் பின்னர் சொல்லதிகாரம் தொடர்வது

கிடைக்கும் பெறுபேறுகளைப் பொறுத்து அமையும்

 

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மீண்டும் எழுத்ததிகாரம் படிக்க வேண்டும்.

:o  

பரீட்சையில் பங்கு கொள்பவர்கள் வகுப்பில் கலந்து கொள்பவர்கள் மட்டுமல்ல.

வேறு பாடசாலையில்  படித்தவர்களும் பங்கு கொள்ளலாம் :D  :D  :) 

 

 

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

Edited by சுபேஸ்

எனக்கு முக்கியமாக தேவையான ஒன்று biggrin.png தொடருங்கோ வாத்தியார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

பொம்பிளைகளுடன் பீச்சுக்குப் போகலாம்

ஆனால் பிள்ளைகளுடன் வரக்கூடாது

சம்மதமா ??? :D  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

பொம்பிளைகளுடன் பீச்சுக்குப் போகலாம்

ஆனால் பிள்ளைகளுடன் வரக்கூடாது

சம்மதமா ??? :D  :lol:  :D

பீச் சுற்றுலா கான்சல் வாத்தியார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. இந்த விடுமுறைக்கு பொம்பிளைப்பிள்ளையளோட பீச்சுக்கு போவமா..? :D

எங்க ..எங்க ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.