Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையாருக்கு ஏன் இந்த தேவையல்லாத வேலை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தி புத்தி எண்டு 2 wife ஆம்

பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி

2. புத்தி என்ற மனைவி

(சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!)

3. மோதை

4. பிரமோதை

5. சுமகை

6. சுந்தரி

7. மனோரமை

8. மங்கலை

9. கேசினி

10. காந்தை

11. சாருகாசை

12. சுமத்திமை

13. நந்தினி

14. காமதை

15. வல்லபை

முதலியவரை மணந்தனர்.

என்ன  ராசா

இனி  பிரமச்சாரிகளை  நம்பவே மாட்டேன்........... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பருவாய் இல்லை போல ரெண்டோட நிறுத்திட்டார் அண்ணன் 15 ஆம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் பருவாய் இல்லை போல ரெண்டோட நிறுத்திட்டார் அண்ணன் 15 ஆம்

:D

ஓம்  நான்  பரவாயில்லை

நானும்  முருக பக்தன் தான். :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ராசா

இனி பிரமச்சாரிகளை நம்பவே மாட்டேன்........... :lol::D:D

அதான் அண்ணே சொல்லுறது கட்டினவனுக்கு ஒரு பொண்டாட்டி கட்டாதவனுக்கு ஊரெலாம் பொண்டாட்டி...:D:d

-------------------------------------------------------------

உங்கள் தெய்வங்களென்று நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள்? ஒருமுறை ஒரு இந்து சகோதரி என்னிடம் வந்து, “ஐயா, என் கணவர் என்னைவிட்டு வேறொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்” என்று அழுதுகொண்டே கூறினார். உடனே, “உங்கள் பெயர் என்ன? என்றேன். அவர், “தெய்வானை” என்று கூறினார். “நீங்கள் யாரை தெய்வமாக வழிபடுகிறீர்கள் அம்மா?” என்று கேட்டேன். உடனே அவர் இரண்டு மனைவிகளையுடைய ஒரு கடவுளுடைய பெயரை (முருகன்) கூறினார். “நீங்கள் வழிபடும் இந்த தெய்வத்திற்கு எத்தனை மனைவிகள்” என்று கேட்டேன். “இரண்டு” என்று பவ்வியமாக பதிலளித்தார். உடனே நான் அவரிடம், “அம்மா, நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்கள் வழிபடும் கடவுளுக்கு மட்டும் இரண்டு மனைவிகள் இருக்கலாம், உங்கள் கணவனுக்கு இருக்கக்கூடாதா?” என்று கேட்டேன். உடனே அந்த அம்மா, “அப்படி என்றால் என் கணவர் செய்வது சரியென்று சொல்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “இல்லை தாயே உங்கள் கணவர் செய்வது சரியென்று நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், உங்கள் கணவர் செய்வது தவறானால், உங்கள் கடவுள் செய்வதும் தவறென்று ஒத்துக்கொள்ள வேண்டும். அல்லது உங்கள் கடவுள் செய்தது சரியானால் உங்கள் கணவன் செய்வதும் சரி என்று ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினேன். உடனே அந்த அம்மா, “என்ன சொல்றீங்க” என்று கேட்டார்கள். நான் சொன்னேன், “அம்மா, உண்மையாகவே முருகக் கடவுளுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள் என்று நம்புகிறீர்களா? அப்படியே அது உண்மையானால் அந்த கேவலமான வாழ்வியலை தமிழ்க் கலாச்சாரம் என்று எப்படி ஏற்றுக்கொண்டு தமிழ்கடவுளாக மனப்பூர்வமாக வணங்க முடியும்?” என்று கேட்டேன். அப்பொழுது அந்த தாய், “எல்லோரும் கும்பிடுறாங்க அதனால் நானும் கும்பிடுறேனுங்க” என்று புன்சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

மனிதன் தன் வாழ்வில் தவறுகள் செய்வது இயல்பு. ஆனால், அதுபோல கடவுளும் தவறுகள் செய்தால், மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு? கடவுளின் வாழ்க்கை தரம், மனிதனுடைய வாழ்க்கைத் தரத்தை விட உயர்வாக இருக்க வேண்டாமா!

ஒருநாள் ஒரு பிராமண பெண்மணியிடம், “மாமி, கங்கை கரைத்தோட்டத்து பொம்முனாட்டிங்க குளிச்சுண்டேயிருக்கச்ச, அவா புடவையை எடுத்துண்டு, பக்கத்தில இருக்கிற மரத்தில உக்காந்து கண்ண பரமாத்மா வேடிக்கை பாத்துண்டிருந்தார்னு புராணம் சொல்றது. சாக்ஷாத் பகவான் இப்படி எல்லாம் பண்ணுவாரா? அப்படி யாராச்சும் பண்ணினா அவ்வாள பகவான்னு சொல்ல முடியுமா? சத்து யோஜன பண்ணிப் பாருங்கோ” என்று கேட்டேன். உடனே மாமி, “நேக்கு சின்ன வயசில இருந்தே சந்தேகம் தான். ஆனா, இதை எல்லாம் மாமாகிட்ட சொன்னா என்னை divorce பண்ணிடுவாரோல்லியோ என்றார்.

உங்கள் தங்கை, அக்கா அல்லது அம்மா இவர்களில் யாராவது ஒருவர் ஓர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். திடீரென்று ஒருவன் வந்து அப்பெண்மணி ஆற்றங்கரையில் வைத்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் மரத்தின்மீது ஏறியிருந்து, ஆற்றில் அரைகுறை ஆடையோடு குளித்துக்கொண்டிருக்கும் நபரை காமக்கண்ணோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், அப்படிப்பட்ட கேவலமான பண்பாடுடைய நபரை நீங்கள் யாரென்று நினைப்பீர்கள்? சமுதாயம் அப்படிப்பட்ட ஒருவரை ஒரு முன்மாதிரி மனிதனாக ஏற்றுக்கொள்ளுமா? நிச்சயமாக நீங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். கண்ணபரமாத்மா அப்படி வாழ்ந்திருப்பாரா? கங்கைக் கரைத்தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம், கண்ணன் நடுவினிலே என்று பாடி கண்ண பரமாத்மாவை கேவலப்படுத்துகிறார்களே. இதை அறிந்தும் இது தவறென்று நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறீர்களே! நிஜமாகவே கண்ணபிரான் அவ்வளவு அசிங்கமான லீலைகளில் ஈடுபட்டிருப்பாரா? அவர் அப்படித்தான் வாழ்ந்திருப்பாரானால் அவரை பரமாத்மா என்று கூறமுடியுமா? ‘கண்ணன் வெண்ணை திருடினார்’ என்று கூச்சமில்லாமல் கூறுகிறார்களே. நிஜமாகவே கண்ணன் வெண்ணெய் திருடியிருப்பாரா? அப்படியே அவர் திருடியிருந்தால், அவரை கடவுளென்று எப்படி அழைக்கமுடியும்? தயவுசெய்து இக்கேள்விக்கு பதில் கூறுங்கள். இதை தட்டிக் கேட்காமல் கண்மூடித்தனமாக நம்புகிறீர்களே! அப்படிப்பட்ட ஒருவரை கடவுள் என்று நீங்கள் உங்கள் பெற்றோரின் பரம்பரை மதநம்பிக்கையால் நம்புகிறீர்கள்.

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்று சந்தேகத்தோடு வாழ்ந்தது போதும். தனிமனிதனாய் நின்று எது சரி, எது தவறு என்று யோசிப்பதல்லவா பகுத்தறிவு! ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி யோசியுங்கள்.

பிள்ளையார் முருகரை ஏமாற்றினார், சிவபெருமான் விஷ்ணுவுடன் தவறு செய்தார், இராமர் மறைந்திருந்து வாலியைக் கொன்றார் என்றெல்லாம் கூறி கடவுளை அசிங்கப்படுத்துவது நியாயமா?

கடவுளுக்கு பெண்டேது பிள்ளையேது?

காமகுணலீலை முதலானதேது?

கடவுளுக்கு பகடிச்சீட்டு தாயமேது?

காடுகளில் வேட்டைக்குத் திரிவதேது?

கடவுளுக்கு காமிகளின் தொழிலில்லை

காருண்யத் தொழிலொன்றே கடவுள் பாரம்

என்று ஞானவெட்டியான் என்னும் தமிழ்ச்சித்தர் பாடினார். கடவுள் களவு, விபச்சாரம், பொய், ஏமாற்றல், வேசித்தனம், காமவிகாரம் என்னும் கீழ்தரமான பாவங்களை செய்வாரா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். இந்நிலையில், உங்கள் கடவுள்கள் உங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கும் என்பது காமெடியாகத் தெரியவில்லையா?

http://nimmathi.com/qa.php?subaction=showfull&id=1368530304&archive=&start_from=&ucat=1&

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை பார்வதியால் அவரின் அதித சக்தியால் சிறுவனை உருவாக்குவதற்கு பதிலாக ஒரு அழகான குளியல் அறையினை உருவாக்கி இருக்கலாம். :D   

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்’ என்று சந்தேகத்தோடு வாழ்ந்தது போதும். தனிமனிதனாய் நின்று எது சரி, எது தவறு என்று யோசிப்பதல்லவா பகுத்தறிவு! ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு’ என்ற அறிஞர் அண்ணாவின் அறிவுரைப்படி யோசியுங்கள்.

பிள்ளையார் முருகரை ஏமாற்றினார், சிவபெருமான் விஷ்ணுவுடன் தவறு செய்தார், இராமர் மறைந்திருந்து வாலியைக் கொன்றார் என்றெல்லாம் கூறி கடவுளை அசிங்கப்படுத்துவது நியாயமா?

கடவுளுக்கு பெண்டேது பிள்ளையேது?

காமகுணலீலை முதலானதேது?

கடவுளுக்கு பகடிச்சீட்டு தாயமேது?

காடுகளில் வேட்டைக்குத் திரிவதேது?

கடவுளுக்கு காமிகளின் தொழிலில்லை

காருண்யத் தொழிலொன்றே கடவுள் பாரம்

என்று ஞானவெட்டியான் என்னும் தமிழ்ச்சித்தர் பாடினார். கடவுள் களவு, விபச்சாரம், பொய், ஏமாற்றல், வேசித்தனம், காமவிகாரம் என்னும் கீழ்தரமான பாவங்களை செய்வாரா? நீங்கள் யோசித்துப் பாருங்கள். இந்நிலையில், உங்கள் கடவுள்கள் உங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சேர்க்கும் என்பது காமெடியாகத் தெரியவில்லையா?

இன்றைய  பச்சை  எல்லாம் சுண்டலுக்குப்போட்டே  முடிந்தவிட்டது

ஆச்சரியமான 

சகலகலாவல்லவன்

என்  தம்பி  சுண்டல் :icon_idea:

1234802_232355970254054_889942622_n.jpg

ஏய் யாரடா அது நம்ம பிள்ளையாரையே கிண்டல் பண்ணுறது பாகிஸ்தான் தீவிரவாதியாடா அப்பிடியே சுவரில எகிறி விட்டேன் உங்க எல்லார் தலையும் பிஞ்சு போகும் யாக்கிரதை  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்கு இரண்டு மனைவிகள் என்பது தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு ரெண்டு இல்லைப்பா 15 :D

  • கருத்துக்கள உறவுகள்

1234802_232355970254054_889942622_n.jpg

ஏய் யாரடா அது நம்ம பிள்ளையாரையே கிண்டல் பண்ணுறது பாகிஸ்தான் தீவிரவாதியாடா அப்பிடியே சுவரில எகிறி விட்டேன் உங்க எல்லார் தலையும் பிஞ்சு போகும் யாக்கிரதை  :lol:

பிள்ளையாருக்கு மூக்கு நீண்டு துதிக்கையன் ஆனார். விஜயகாந்துக்கு நாக்கு நீண்டு நாக்கையன் ஆனாரோ? நாக்குமூக்குப் பாடல் பிறந்த காரணம் புரிந்துவிட்டது!. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாருக்கு மூக்கு நீண்டு துதிக்கையன் ஆனார். விஜயகாந்துக்கு நாக்கு நீண்டு நாக்கையன் ஆனாரோ? நாக்குமூக்குப் பாடல் பிறந்த காரணம் புரிந்துவிட்டது!. :icon_idea:

http://www.youtube.com/watch?v=MniKwyeF7u8 :D:lol:

ஒரு முறை பார்வதி தேவி குளிக்க சென்றார். அப்போது காவல் காப்பதற்கு ஆட்களே இல்லை. ஆகவே பார்வதி தேவி, தன் உடம்பில் உள்ள அழுக்கால், ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி, அதற்கு உயிரையும் கொடுத்து, வெளியே காவல் காக்குமாறு உத்தரவிட்டார். அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்தான். அப்போது சிவபெருமான் நீண்ட நாள் தியானத்திற்கு பின் கைலாய மலையில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு சிறுவன் வெளியே நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு, வீட்டின் உள்ளே செல்ல முயன்றார். அந்த சிறுவனோ, சிவபெருமானைத் தடுத்து உள்ளே செல்லக்கூடாது என்று சிவபெருமானை தடுத்து நிறுத்தினான். அதனால் கடுஞ்சினம் கொண்ட சிவபெருமான், தன் கையில் உள்ள சூலத்தால் அச்சிறுவனின் தலையை துண்டித்தார். பின்னர் தான் தெரியவந்தது, அச்சிறுவன் பார்வதியின் மகன் என்று. இதனால் அச்சமுற்ற சிவபெருமான், பார்வதி குளித்து வருவதற்கு முன்னர், தனது பூதகணங்களை அழைத்து, பூவுலகில் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து வருமாறு கட்டளையிட்டார். சிவபெருமானின் கட்டளைக்கேற்ப, பூதகணங்களும் முதலில் ஒரு யானையை பார்த்தார்கள். பின் அந்த யானையின் தலையை துண்டித்து கொண்டு சென்றார்கள். பின்பு சிவபெருமான் அந்த யானையின் தலையை அச்சிறுவனுக்கு பொருத்தி, மீண்டும் உயிர் கொடுத்தார். அந்நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த பார்வதி, யானை தலையுடன் கூடிய அச்சிறுவனைப் பார்த்து, இந்த பிள்ளை யார்? என்று கேட்டார். அப்படி பார்வதி கேட்ட கேள்வியை தான், சிவபெருமான் பார்வதியின் மகனுக்கு பிள்ளையார் என்ற பெயரைச் சூட்டி, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் வந்த பெயர்கள் தான் விநாயகர், கணபதி, விக்னேஷ்வரன் போன்றவைகள். இந்த கதையின் காரணமாகவும், விநாயகர் சதுர்த்தி என்னும் பண்டிகை கொண்டாடப்படுவதாவும் நம்பிக்கை உள்ளது.

Thatstamil

என்றாலும் இவர் கைலாசத்துக்கு ரெஸ்ற் எடுக்க போகும்போது அவவுடைய பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்காதது இவருடைய தப்பு. இவர் கைலாசம் சென்றபோது, புதுசா ஒரு செக்குரிட்டி காட்டுக்கு அப்பொயின்ற்மென்ட் குடுத்து, அதை அவருக்கு இன்போம் பண்ணாமலும், காவலனுக்கு தன்னுடைய கஸ்பன்டை இன்ட்ரடியுஸ் பண்ணாததும் இந்தம்மாவோட தப்பு. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு விநாகயர் சதுர்த்திப்பா..... பிள்ளையார பற்றி தப்பு தப்பா பேசின ஆக்கள் எல்லாரும் தோப்புக்கரணம் போட்டு தும்பிக்கையான துதிங்க.... இல்லது கோபத்தில ஏதாச்சும் பண்ணிடுவார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

ஸர்வ விக்னஹரம் தேவம்

ஸர்வ விக்ன விவர்ஜிதம்

ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்

வந்தே அஹம் கணநாயகம்.

என்று போற்றுகிறது. அவரது தந்தை, தாயான சிவபராசக்தி வணங்குவதால் அவரது பெயர் ஜ்யேஷ்டராஜன் ஆயிற்று.

தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது.

வழிபாட்டுக்கு பின் விநாயகரை கரைப்பது ஏன்?

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பியளோ?

தமிழ்நாட்டிலயும் சரி தமிழீழத்திலயும் சரி முருகனுக்கெண்டு பழம்பெரும் கோயில்கள் இருக்கும்போது முருகற்ர அண்ணன் சிவனின்ர மூத்தபெடிக்கு ஏன் பழம்பெரும் கோயில்கள் இல்லை? :rolleyes: :lol:
 
முருகனுக்கு பழமை வாய்ந்த கோயில்கள் இருக்குதெண்டால் பிள்ளையாருக்கும் கட்டாயம் இருந்திருக்க வேணுமல்லோ? :icon_idea: ஏன் இல்லை. யாராவது புத்திஜீவியள், சைவ சமய அறிவாளர்கள் விளக்கம் சொல்லுங்கப்பா. :rolleyes::lol:

அதாரு சொன்னது பிள்ளையாருக்கு இல்லை எண்டு?

எல்லாக் கோயில்களிளும் பிள்ளையாருக்கு எண்டு தனி சந்நிதானம் அமைக்கப் படுவது சம்பிரதாய பூர்வமாக இருந்ததால், அவருக்கு எண்டு தனி கோவில்கள் இருக்க வில்லை.

பிறகு தான், கற்பக விநாயகர் கோவில், மருதடி விநாயகர், உச்சிப் பிள்ளையார், முருகண்டிப் பிள்ளையார் போன்ற, தனியே மரங்களுக்கு கீழும், வழித்தடங்களிலும் அமைக்கப் பட்ட கோவில்கள் பிரபல்யமானது.

ஊகூம் :( அது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக தெரியல. :unsure:

அது என்ன பிறகு? :rolleyes:  அண்ணனைப் பற்றியல்லோ முதல்ல யோசிக்கோணும்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊகூம் :( அது ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாக தெரியல. :unsure:

அது என்ன பிறகு? :rolleyes:  அண்ணனைப் பற்றியல்லோ முதல்ல யோசிக்கோணும்? :lol:

ஊரிலை கலியாண நடக்கிற கோவிலுக்கு போற, மாப்பிளை, பொம்பிளை வீட்டுக் காரர், ஆராவது பெரிசை பிடித்து, நீங்கள் வீட்ட நில்லுங்கோ, மாபிள்ள, பொம்பிள வரேக்க ஆலாத்தி எடுக்க அலுவல் பார்க்க வேண்டும் எண்டுவினம்.

அதில்ல விஷயம். வீட்டுக்கு காவலுக்கு ஆள் தேவை.

பெரிசை காணவில்லை எண்டு ஆரும் கலியாணத்தில கேட்டால், அவோவுக்கு, வீடில கன அலுவல் கிடக்குது... அதுதான் வரவில்லை எண்டுவினம்.

அது மாதிரி, பிள்ளையார் எல்லாக் கோவிலுக்கும் முதல் பூசை வைக்க வேண்டும் எண்ட சம்பிரதாயத்தால் அவரை எல்லா கோவிலிலும் ஒரு மூலையில் வைத்ததால், தனிக் கோவில் தேவை வரவில்லை.

பின்னர், அவரது பலம் அறிந்து தனிக் கோவில் அமைத்தார்கள்.

விளங்கவில்லை எண்டு அடம் பிடித்தால், கோத்தாவிடம் சொல்லிப்போடுவன், ஆமிக்காரன். பிறகு என்ன, UN பக்கமா வேற வேலை தந்து போடுவார்.

எனக்கொரு சந்தேகம். யாராவது தீர்த்து வைப்பியளோ?

தமிழ்நாட்டிலயும் சரி தமிழீழத்திலயும் சரி முருகனுக்கெண்டு பழம்பெரும் கோயில்கள் இருக்கும்போது முருகற்ர அண்ணன் சிவனின்ர மூத்தபெடிக்கு ஏன் பழம்பெரும் கோயில்கள் இல்லை? :rolleyes: :lol:

முருகனுக்கு பழமை வாய்ந்த கோயில்கள் இருக்குதெண்டால் பிள்ளையாருக்கும் கட்டாயம் இருந்திருக்க வேணுமல்லோ? :icon_idea: ஏன் இல்லை. யாராவது புத்திஜீவியள், சைவ சமய அறிவாளர்கள் விளக்கம் சொல்லுங்கப்பா. :rolleyes::lol:

இந்தியா அல்லது தமிழகம் இரும்பு நாகரீகத்தில் முன்னணியில் இருந்த நாடு. முருகன் கையில் இருக்கும் வேல் கற்கால ஆயுதம். இரும்பில் அப்படி செய்வத்தில்லை. முருகன் கடவுளானது கற்கால நாகரீகம் மனிதரிடம் இருந்த போது. பிள்ளையார் ஒரு 2000-1500 வருடங்களுக்கு முன்னர்தான் புராணக்கதைகளால் வாதாபியில் ஆரம்பிக்கப்பட்டவர்.  இந்து சமயக்கடவுகளில் மிகவும் பிந்திய கடவுள். ஆனால் முருகன் சிவனுக்கும் முந்தய கடவுளாக இருக்கலாம். முருகனின் ஒருமூர்த்தமான தண்டாயுதபாணி காலத்தில் உடை உடுப்பதில்லை. சிவன் காலத்தில் தோலினால் செய்த ஆடைகளை உடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  சிவனுக்கு சூலம் ஆயுதமாக இருக்கிறது. தண்டாயுதபாணி தடி மட்டுமே ஆயுதமாக கொள்பவர்.  இது சரியாக இருந்தால் குறைந்தது 5000 ஆண்டுகள் பழமையானவர் சிவன் பிள்ளையாருக்கு. அதே போல முருகன் 5000-7000ஆண்டுகள் பழமையானவர் சிவனுக்கு

மல்லை,

என்னப்பா இது,

தேப்பன், எப்படி மகனுக்குப் பிறகு??

முடியல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.