Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தசுவாமி ஆலய ரத பவனி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC_0187%20copy(2).jpg

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த இரதோற்சவம் இன்று புதன்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.  அதிகாலை 5 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து எம்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

அலங்காரக் கந்தனென வர்ணிக்கப்படும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தத் தேர்த் திருவிழாவில்  நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். (படங்கள்: எஸ்.கே.பிரசாத்,என். நவரத்தினராசா) 

DSC_0267%20copy(1).jpg

DSC_0184%20copy.jpg

DSC_0271%20copy.jpg

DSC_0272%20copy.jpg

DSC_0254%20copy.jpg

DSC_0286%20copy(1).jpg

DSC_0295%20copy.jpg

DSC_0297%20copy(2).jpg

DSC_0304%20copy.jpg

DSC_0358%20copy.jpg

DSC_0425%20copy.jpg

DSC_0428%20copy.jpg

DSC_0449%20copy.jpg

DSC_0208%20copy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1(47).jpg


sapparam3.JPG

  • கருத்துக்கள உறவுகள்

குண்டும் போடுவோம் பூவும் போடுவோம் .....அப்பே ரஜ

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்

ஏங்கப்போறான்

இன்னும்  இவ்வளவு   இருக்கா.. :(

(எவ்வளவு அழிச்சாலும்....)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன்

ஏங்கப்போறான்

இன்னும்  இவ்வளவு   இருக்கா.. :(

(எவ்வளவு அழிச்சாலும்....)

 

எப்படி இப்படியெல்லாம்...ம்? :o

 

Good lateral thinking!

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இப்படியெல்லாம்...ம்? :o

 

Good lateral thinking!

 

 

அது  ஒன்றுமில்லை  ராசா

என்  கண்ணே  பட்டுவிடும் போலிருந்தது

அது தான்.......... :)

  • கருத்துக்கள உறவுகள்

இலட்சக் கணக்கில தேங்காய் உடைத்திருப்பாங்களோ? :unsure:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிப் பயங்கரவாதிகளை அழித்த பின்னர் எல்லா சமூக மக்களும் சமாதானத்தில் திளைத்துப் போயுள்ளனர்..!

 

என்ன கொடுமை சரவணா. நீயே இதற்குச் சாட்சி. இதே கோவில் மீது குண்டு போட்டதும்.. இதே கூட்டம் தான் என்பதை மறக்க வேண்டாம்.

 

பிரச்சனைகளின் தோற்றுவாய்களை மறைத்து மறந்து.. வாழ்வது பிரச்சனைகள் கொலிடே முடிந்து மேற்கு நாட்டுக்கு ஓடிடுறவைக்கு எதுவும் செய்யாது உள்ளூரில் வாழ்பவர்களுக்கே ஆபத்தாகும். :icon_idea:

நல்லூர் கந்தன் புலம்பெயர்ந்து பல ஆண்டுகளாச்சு இப்போது இருப்பது சிங்கள கந்தே அவரை ஏன் தமிழர்கள் வணங்குகின்றனர் என்று தெரியவில்லை    :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
எது எப்படியோ ...........
தமிழரை காக்க போர் புரிந்தவன் முருகன்!
புலவர்களை வைத்து தமிழ் வளர்த்தவன்!
 
அந்த அரசன் பவனி வருவது மகிழ்ச்சிக்கு உரியது.
ஆடுற மாட்டை ஆடி கறக்க வேண்டும் என்பார்கள். இந்த மூடர்களுக்கு ஏதாவது ஒரு புராண  கதையை சொல்லியாவது அவனை வணங்க வைக்க வேண்டும்.

முருகா நீ என்னும் உயிரேட தான் இருக்கிறியோ??? உதில அரைவாசி சிங்கள சனமா இருக்குமோ??

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்திடுபவர்கள் ஒரு விடையத்தைக் கவனிக்கவேண்டும், தொண்ணூறிநாலாம் வருடப் பாரிய இடம்பெயர்வு, அவ்விடம்பெயர்வில் மக்கள் மாட்டும் இடம்பெயர்ந்துபோகவில்லை ஆடு, கோழி, மாடு, நாய்கள் சில இவைகள் அனைத்தும் இடம்பெயர்ந்தது. எந்த நம்பிக்கையில் அவற்றையெல்லம் தம்முடன் எடுத்து வந்தார்களோ அவைகள் அனைத்தும் போன போன இடங்களில் அப்படியே கைவிட்டுப்போனதும் சிலதை வந்தவிலைக்கு வித்ததும் இறுதியில் எதுவுமே மிஞ்சவில்லை. வலிகாமத்தில் விட்டுவந்த கால்நடைகள் அனைத்தும் இரையாக்கப்பட்டது அன்றேல் கட்டாக்காலிகளாகின. மெல்லத் தமிழினம் திரும்பிப்போனது இப்போது மீண்டும் தங்களால் இயன்றளவு இளந்தவற்ரில் சிலவற்றைத் தங்களது சொந்தமுயற்சியில் திரும்பவும் பெற்றுக்கொண்டது. எந்த ஒரு இனத்துக்கும் இப்படியொரு இன்னல் வந்திருக்குமாக இருந்தால் மீண்டெள பல பத்துவருடங்கள் வேண்டும். தற்போது வன்னியின் நிலையும் இதுவே. இவை அனைத்தும் எமக்குக் காட்டிநிற்பது எமது வாழ்வியல் பரிமாணங்களை. எதிரி இதனால்தான் பயப்படுகிறான். கோவில்திருவிழாக்கள், பண்டிககள், வீட்டு விசேடங்கள் இவையனைத்தும் நாம் இன்னமும் சோர்ந்துவிடவில்லை என்பதற்கான அறிகுறி. உலகின் எந்த ஒரு வளர்முக நாட்டிலும் இப்படியான திருவிழாக்கள் பெரும்திரளான மக்கள் பங்களிப்புடன் நடைபெறுவதாக இருந்தால் எவ்வளவு அனர்த்தங்களைச் சந்தித்திருக்கும் என்பதை கடந்தகாலங்கள் உலகுக்கு உணர்த்தியே உள்ளது. ஆனால் எமது மண்ணின் விழாக்கள் எதுவும் ஆகக்குறைந்த சிறு சலனமும் இன்றி மிகவும் கட்டுக்கோப்புடன் நடைபெறுவதை யாராலும் மறுக்க முடியாது. இது, எமது எதிரியானவனுக்கும் எமை அவதானிப்போருக்கும் ஒரு விடையத்தைச்  சொல்கின்றது, அது எதுவெனில் "சின்ன நூல் கண்டோ எமைச் சிறைப்படுத்துவது" எனும் செய்தியை. ஆம் எமது வாழ்வியலின் வேர்கள் நல்லூரிலோ சன்னதிக் கோவிலிலோ அன்றேன் வல்லிபுரத்தான் வாசலிலோ மட்டுநகர் மாமங்கப் பிள்ளையார் கோவிலிலோ நிலையெடுத்ததல்ல, மாறாக குமரிக்கண்டத்திலும் ஆதிச்சநல்லூர் முதுமக்கள் இடுகாட்டிலும் நிலையெடுத்தவை. ஆடல் பாடல் கூடிக்கொண்டாடுதல் இவைகளை நாமே ஏனையோர்க்கு அறிமுகம் செய்துவைத்தோம். உச்சா போவதற்கே ஓரிடத்தை நாமே உலகுக்கு சிந்துவெளிச்சமதரையில் அறிமுகப்படுத்தியவர்கள். இவைகள் எதையும் எம்மால் எளிதில் எடுத்தெறிந்து விடமுடியாது. இவ்விழாக்கள் தமிழனின் இன்ணொரு எழுர்ச்சியின் வடிவங்கள்.

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும் கந்தனேயுனை மறவேன்... இவற்றை ஆடம்பரமென்றோ அவசியமற்றவை என்றோ யாரும் சொன்னாலும், உண்மையில் ஏராளமானவற்றை இழந்து கொடுந்துயர் அடைந்து மெல்ல மெல்ல மீண்டுவரும் எமக்கு, ஐ.நா. வரை சென்று முழங்கி,முக்கி முனகி எதுவும் இன்றுவரை ஆகாதபோது, ஆண்டவனிடம் சென்று அழுது தீர்த்தெனினும் மனதை ஆற்றுப்படுத்துவோம் எனின் உளவியல் பாதிப்பிலிருந்து ஓரளவாவது மீள்லாமே."தம்பி எழும்பு, முகம் கழுவு, 'கடவுளை வணங்கு', புத்தகம் எடு, பாடம் படி...." என்று கட்டமைக்கப்பட்ட வாழ்க்கை முறையை, அங்கிருந்து இலகுவில் மாற்ற முடியுமோ? எனினும் ஒருவேளைச் சாப்பாட்டிற்கே கடும் சிரமப்ப்படும் பல குடும்பங்கள் இன்னும் முன்னெற முடியாதிருப்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முருகா நீ சுழியன்டாப்பா......நாங்கள் புலம்பெயர்ந்த சுழியன்கள்...நீ உள்நாட்டிலேயெ சுழியன்....

முருகா நீ சுழியன்டாப்பா......நாங்கள் புலம்பெயர்ந்த சுழியன்கள்...நீ உள்நாட்டிலேயெ சுழியன்....

 

என்றாலும் அம்மா அப்பாவைச் சுற்றிவந்து அல்வாக் குடுத்த அண்ணனை விடவா...?

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை ஒன்றிணைத்த முருகனுக்கு நன்றி.பகுத்தறிவுக்கு அப்பால் இதுபோன்ற விழாக்கள் தமிழருக்கு மிக அவசியமானவை.இன்று தமிழர்களின் தெய்வங்களான முருகனுக்கும்இ அம்மனுக்கும் விழா எடுக்க மறந்தோமென்றால் குரங்குக்கும் (அனுமானுக்கும்)இராமனுக்கும்இசாய்பாபாஇநித்தியானந்தா போன்ற ஏமாற்றுச் சாமிகளுக்கும் விழா எடுக்க வேண்டி வரும்.இப்போழுதே யாழப்பாணத்தின் வீடுகளில் அனுமார் படங்கள் அலங்கரிக்கத் தொடங்குவதும் மிகப் பெரிய அனுமன் சிலை அங்கு நிர்மாணிக்கப் பட்டிருப்பதும். இதற்கான அறிகுறிகளாகும்.பகுத்தறிவின் பெயரால் எமது பண்பாட்டையும் கலைகளையும் .வரலாற்றையும் அழித்து விடக்கூடாது. பகுத்தறிவை ஆக்க ப+ர்வமான விடயங்களில் முன்னறுத்த வேண்டும். ஞரழவந ஆரடவஞைரழவந நுனவை

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.