Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி ரயில் விபத்தில் ஒருவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DSC05715(1).jpg

-சி.சிவகருணாகரன்,எஸ்.ஜெகநாதன்,சுமித்தி தங்கராசா

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். 

கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.

கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

DSC05717.jpg

DSC05723.jpg

DSC05720.jpg

இப்பொழுதுதான் ஆரம்பிக்கின்றார்கள். அதற்குள் ஒருவர் பலியா? பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்ய வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் பிரதேசம் தானே அண்ணே எதுக்கு பாதுகாப்பு ஏற்பாடு எல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடரூந்து கடவைகளில் தடுப்பு போடமாட்டோம்.. ஆனால் நல்லா வண்டில் விடுவோம்.. - இந்திய ரயில்வே

அகாலச் சாவடைந்த தாத்தாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொலை செய்ய என்றே இது வருகிறது போல...! :(


அது  சரி.. ரயில் விபத்தையும் இராணுவம் கனரக ஆயுதங்களோட வந்தா விசாரிக்கிறது. இதெல்லாம் சிறீலங்காவின் சன நாயகத்தில நடக்கலாமாம்.. என்று அமெரிக்க இராணுவ பிரதானி சொல்லிக் கொடுத்திருப்பார் போல...! :(:rolleyes:

55ம் கட்டை பகுதிகளில் A 9 பாதைக்கும்  பாரதி புரம் அரை ஏக்கர் திட்டம் , தொண்டமான்புரம் பகுதிகளுக்கும் நடுவால் ரயில் பாதை முன்னரான காலங்களில் அமைந்து இருந்தது... !  

 

அதே வளித்தடம் தான் இப்போதும் போடப்படுமாகில்  மாடு மேய்க்க போகும் மக்கள்,  சைக்கிளில் போகும் மக்கள் எண்று பலருக்கு  நீண்ட காலத்துக்கு இந்த பயண சரக்கு ரயில்களால் ஆபத்தை தவிர்க்க முடியாது... 

முதல் நரபலி 

 

 குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் அமைக்கப்பட்ட ரயில் பாதையல்லவா!. இந்து தர்மப்படி எதனையும் திறந்து வைக்கும்போது பலிகொடுப்பது அவர்களது வழமை. பலியானவருக்கு சுவர்க்கம் கிடைக்கும்.

தென்னிலங்கையில் அனைத்து பாதுகாப்பற்ற ரயில் கடவைகளிலும் ஒருவர் பணிக்கமர்த்தப்பட்டு அவருக்கு ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது.  அவர் புஐகயிரதம் வரும் நேரங்களில் தற்காலிக தடையை அமைத்து மக்கள் போக்குவரரத்தைத் தடை செய்வார்... 

தமிழ் பகுதிகளில் இந்த நடைமுறை இல்லைபோல் இருக்கிறது......

  • கருத்துக்கள உறவுகள்

இரயிலில் அடிபட்டுச் செத்துப்போன உயிர் எருமைமாடோ அன்றேல் வேறு ஒரு ஜந்துமோ இல்லை. ஆறு அறிவுள்ள மனிதர் இரயில் தண்டவாளத்தைக்கடக்கையில், கொஞ்சமேனும் அவதானம் இல்லாமல் போய் அடிபட்டுச் செத்துப்போட்டு தண்டவாளத்தையும் இரயிலையும் குற்றங்கூறிப்பலன் இல்லை. மேலே காணப்பட்டுள்ள படங்களில் ஒன்றில், பாதுகாப்புத்தடை இருக்கின்றது தவிர அதை மேலிருந்து கீழாக இழுக்கும் கயிறும் காணப்படுகின்றது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இரயிலில் அடிபட்டுச் செத்துப்போன உயிர் எருமைமாடோ அன்றேல் வேறு ஒரு ஜந்துமோ இல்லை. ஆறு அறிவுள்ள மனிதர் இரயில் தண்டவாளத்தைக்கடக்கையில், கொஞ்சமேனும் அவதானம் இல்லாமல் போய் அடிபட்டுச் செத்துப்போட்டு தண்டவாளத்தையும் இரயிலையும் குற்றங்கூறிப்பலன் இல்லை. மேலே காணப்பட்டுள்ள படங்களில் ஒன்றில், பாதுகாப்புத்தடை இருக்கின்றது தவிர அதை மேலிருந்து கீழாக இழுக்கும் கயிறும் காணப்படுகின்றது.

என்ன செய்வது.. மேற்கு நாடுகளில் அரசின் duty of care என்றால் என்ன என்பதை அறிய வேண்டி வந்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

இரயிலில் அடிபட்டுச் செத்துப்போன உயிர் எருமைமாடோ அன்றேல் வேறு ஒரு ஜந்துமோ இல்லை. ஆறு அறிவுள்ள மனிதர் இரயில் தண்டவாளத்தைக்கடக்கையில், கொஞ்சமேனும் அவதானம் இல்லாமல் போய் அடிபட்டுச் செத்துப்போட்டு தண்டவாளத்தையும் இரயிலையும் குற்றங்கூறிப்பலன் இல்லை. மேலே காணப்பட்டுள்ள படங்களில் ஒன்றில், பாதுகாப்புத்தடை இருக்கின்றது தவிர அதை மேலிருந்து கீழாக இழுக்கும் கயிறும் காணப்படுகின்றது.

 

இறந்த  ஒரு பெரியவர்  சார்ந்து

இந்த வரிகளை  உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

 

வழமையான போக்குவரத்து

எச்சரிக்கைகள் இருந்துமே உலக நாடுகளில்  இது   போன்ற  விபத்துக்கள்  நடக்கின்றன.

 

ஆனால் வழமையாக சாதாரணமாக  சென்று வருபவருக்கு

புதிதாக ரயில் வருவது எப்படி தெரிந்திருக்கமுடியும்...........??

 

இறந்தவரை அசிங்கப்படுத்தலாமா  நண்பரே...... :(

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இங்கு யார் இறந்தவரை அசிங்கப்படுத்துவது? அந்த எண்ணம் எனக்கில்லை. மாறாக மேற்கு நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகள் ஆகியவற்ரிலும் இப்படியான விபத்துக்கள் நடைபெறுகின்றன என்பதுடன் இதை விட்டுவிடமுடியாது. கிளிநொச்சிவரைக்குமான தொடரூந்து என்பது பலவருடகாலத்திற்குப் பின்பு நடக்கும் சம்பவம் (அதற்காக அஹா ஓகோ எனப் புழகாங்கிதமடையவில்லை, வழக்கமான ஒருவிடையே தவிர போராட்டத்துக்கு உன்பு அதாவவ்து பாராளுமன்ற ஜனநாயகத்துடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு முன்பே தொடரூந்து வடபகுதிச் சேவையில் ஈடுபட்டது, இவைகள் அனைத்தையும் தாண்டியே எமது போராட்டம் வலுப்பெற்றது) இது பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாக விடையம் அப்படியிருக்கையில் தொடரூந்தின் பயணத்தருணம் அனேகரின் கவனத்தை எளிதில் தன்பக்கம் ஈர்த்துக்கொள்ளும் அதையும் தாண்டி ஒரு விபத்து ஒருவரது உயிரைப் பறிக்கின்றதென்றால் கவனக்குறைவு அன்றேல் அலட்சியம் இதுவே காரணம். இங்கு அறியாமை எதுவுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிலுக்கும் நேரத்திற்கும்

இது ஒரு Test Run..ஆகவே Train எப்போவரும் என்று அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்

அந்த பெரியவர் சிலவேளை காது கேட்காமல் train வருவதை அவதானிக்காமல் டிராக்கை கடக்க முயன்றிருக்கலாம்.....

இல்லை ஒரு ஆர்வகோளாறில் கிட்டே சென்றிருக்கலாம்...

பலியானவருக்கு வயது 78 அதுவும் அவர் கண்பார்வை சரியாக இருந்து இருக்கும் என்பதுக்கு இல்லை, அதோடு காற்றுவளம் அவர் பக்கம் இருந்து இரயில் பக்கம் வீசி இருக்குமானால் அவரால் நிச்சயமாக இரயிலின் சத்ததை கேட்டிருக்க முடியாது. அதோடு பரீட்சார்த்த சேவை எனும் போது இரயில் கடவையில் ஊளியர் யாராவது பணியில் இருந்தார்களா என்பதில் சந்தேகம் இருக்கிறது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு Test Run..ஆகவே Train எப்போவரும் என்று அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்

அந்த பெரியவர் சிலவேளை காது கேட்காமல் train வருவதை அவதானிக்காமல் டிராக்கை கடக்க முயன்றிருக்கலாம்.....

இல்லை ஒரு ஆர்வகோளாறில் கிட்டே சென்றிருக்கலாம்...

 

இப்பிடித்தான் நானும் யோசிச்சனான்.
எடுத்ததுக்கெல்லாம் அரசியலையும் போராட்டங்களையும் சம்பந்தப்படுத்துறது அவ்வளவு நல்லாயில்லை.இதைத்தான்  ஆட்டுக்கை மாட்டை ஓட்டுறதெண்டு ஊரிலை சொல்லுவினம்.
 
அந்த முதியவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

முன்னரெல்லாம் புகையிரத விபத்துக்கள் அதிகமாகவே நடந்திருக்கின்றன.தற்கொலைகள் இன்னும் அதிகம்.

முன்னரெல்லாம் புகையிரத விபத்துக்கள் அதிகமாகவே நடந்திருக்கின்றன.தற்கொலைகள் இன்னும் அதிகம்.

அது உண்மை தான் வன்னியிலை இருக்கும் மக்களுக்கு சாகிறதுக்கு மருந்து வாங்கிற செலவு கூட மிச்சம் தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.