Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10ஆயிரம் கி.மீ தூரம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கப் போகிறதாம் இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sundhar-17913-150.jpg

அதி நவீன அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  

எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்கும் நிலையில் இந்தியா உள்ளது. இதற்கு அரசு அனுமதியளித்தால், இதை தயாரிக்க தயாராக இருக்கிறோம். அக்னி - 5 ஏவுகணையின் இலக்கு, சீனா முழுமைக்கும், ஐரோப்பாவையும் எட்டும் அளவுக்கு உள்ளது. இது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராணுவத்தில் சேர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=93089&category=IndianNews&language=tamil

1237060_649332001758416_932418526_n.jpg

அதோ பாத்தியா அது தான் நாங்க செய்த புது ஏவுகணை நம்புடா நம்பு 

காந்தியின் படங்களை உங்களது அலுவலகங்களில் போட்டு ஏமாற்றுவதை நிறுத்துங்கள்.

பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில் யாரப்பு உங்களுக்கு எதிரி? பக்கத்தில் சுரண்டுபவனையே எதிர்க்க திராணியில்லை.

 

Farmer: அமெரிக்கா missile அடிப்போம் என்று சொறியாது எல்லோ....

Big toys are for just show :)

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பக்கத்தில உள்ள பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் வாறதை நிப்பாட்டுங்களோய். வாறதுமில்லாம உங்க ஜவான்களின் கழுத்தை வெட்டி தலையை தூக்கிக்கிட்டு எல்லோ போறாங்கள். :lol::D

வல்லரசு இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் வாழ்த்துக்கள்...


Dharavi_Slum_in_Mumbai.jpg

slums-india.jpg

இப்படி அடுத்தவனை கிள்ளுக்கீரையாக நினைத்தபடியால் தான் ஒருக்கால் நல்ல சூடு....

நாங்கள் திருந்த மாட்டோமே :)

  • கருத்துக்கள உறவுகள்

Advertisement
 
Advertisement
WR_20130918142511.jpeg

 

கிள்ளுகீரைகள் தான்சார் தாங்கள் பெரிய வல்லரசு என்று பினாத்தினால் என்ன சொல்லிச்சொல்வது??

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுங்கா ஒரு ஜியோ ஸ்ரேசனரி சற்றலைட்டை ஏவ முடியல்ல. ஒரு உருப்படியான GSLV கூட இல்லை. 10 ஆயிரம் கிலோமீற்றருக்குப் பாயம் போறம் என்றது அர்த்தபுஷ்டியான நடவடிக்கை அல்ல..!

 

சும்மா ஏவுகணையை ஏவி ஒரு பிரயோசனமும் இல்லை. இன்று உலக நாடுகள் ஏவுகணை தடுப்புப் பொறிமுறையில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. காரணம் எல்லோரிடமும் அணு குண்டுகளும்.. இரசாயன ஆயுதங்களும் பெருகிக் கிடக்கின்றன..! இந்த நிலையில்.. ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நோக்கித்தான் உலகம் கவனம் செலுத்துகிறது.

 

இந்தியா மட்டும் இந்த விடயத்தில்.. அமெரிக்க - சோவியத் நிழல் யுத்த காலத்தில் நிற்கிறது. அதற்கு வக்காளத்து வேற இங்க..! எனி வல்லரசு என்ற பதத்தை சுமக்கப் போறவை.. எவ்வளவுக்கு எவ்வளவு ஏவுகணை தடுப்புப் பொறிமுறையைக் கொண்டிருக்கினமோ அவை தான்.. அதற்குச் சொந்தமாக முடியும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

993394_644554472236169_1489091402_n.jpg

ஏவுகணை ஏவுறேன் ஆசியாவின் வல்லரசு அப்பிடி சொல்லுவியா சொல்லுவியா மவனே மித்ச்சே கொன்னு புடுவன் 

ஒழுங்கா ஒரு ஜியோ ஸ்ரேசனரி சற்றலைட்டை ஏவ முடியல்ல. ஒரு உருப்படியான GSLV கூட இல்லை. 10 ஆயிரம் கிலோமீற்றருக்குப் பாயம் போறம் என்றது அர்த்தபுஷ்டியான நடவடிக்கை அல்ல..!

 

சும்மா ஏவுகணையை ஏவி ஒரு பிரயோசனமும் இல்லை. இன்று உலக நாடுகள் ஏவுகணை தடுப்புப் பொறிமுறையில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. காரணம் எல்லோரிடமும் அணு குண்டுகளும்.. இரசாயன ஆயுதங்களும் பெருகிக் கிடக்கின்றன..! இந்த நிலையில்.. ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை நோக்கித்தான் உலகம் கவனம் செலுத்துகிறது.

 

இந்தியா மட்டும் இந்த விடயத்தில்.. அமெரிக்க - சோவியத் நிழல் யுத்த காலத்தில் நிற்கிறது. அதற்கு வக்காளத்து வேற இங்க..! எனி வல்லரசு என்ற பதத்தை சுமக்கப் போறவை.. எவ்வளவுக்கு எவ்வளவு ஏவுகணை தடுப்புப் பொறிமுறையைக் கொண்டிருக்கினமோ அவை தான்.. அதற்குச் சொந்தமாக முடியும்..! :icon_idea::)

 

 

நெடுக்கு: இந்தியாவிடம் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை இல்லை என்று எப்படி தெரியும்? அவர்கள் வைத்திருக்கிறார்கள் (அல்லது உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்..... இந்தியா Isreal/US/Russia மாதிரி இராணுவ/தளபாட/உலோக (material) தொழிழ்நுட்ப்த்தில் முன்னேறியவர்கள் கிடையாது.... ஆனால் கடந்த 20-30 வருடத்தில் தான் இதில் கவனம் காட்டி தங்களை வளர்கிறார்கள்....

 

GSLV என்பதே இந்திய ராகெட் இன் பெயர் தான்... அதன் வெற்றி காண தூரத்தில் இல்லை... cryogenic engine, vehicle எல்லாம் தங்களே தயாரித்து விட்டார்கள்...இன்னும் சில பிரச்சனைகளை திருத்தியவுடன் அதுவும் ஓரு நம்பகமான ராகெட் ஆக மாறும்...

 

இந்தியாவில் வடிவமைத்த tank - Arjun (எங்கட ஆள் இல்லை) க்கு isreal இருந்து வந்த testing team வைத்த பெயர் Desert Ferrari :)

இந்தியாவிடம் பெரிதாக புடுங்கத்தக்க தாங்கிகள் இல்லை. ஒரு மிகப்பெரிய ஆயுத கொள்வனவாக அமரிக்காவிடம் தாங்கிகள் வாங்குகிறது இந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

993394_644554472236169_1489091402_n.jpg

ஏவுகணை ஏவுறேன் ஆசியாவின் வல்லரசு அப்பிடி சொல்லுவியா சொல்லுவியா மவனே மித்ச்சே கொன்னு புடுவன் 

:D  :D  :D முடியல அன்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு: இந்தியாவிடம் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை இல்லை என்று எப்படி தெரியும்? அவர்கள் வைத்திருக்கிறார்கள் (அல்லது உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்..... இந்தியா Isreal/US/Russia மாதிரி இராணுவ/தளபாட/உலோக (material) தொழிழ்நுட்ப்த்தில் முன்னேறியவர்கள் கிடையாது.... ஆனால் கடந்த 20-30 வருடத்தில் தான் இதில் கவனம் காட்டி தங்களை வளர்கிறார்கள்....

 

GSLV என்பதே இந்திய ராகெட் இன் பெயர் தான்... அதன் வெற்றி காண தூரத்தில் இல்லை... cryogenic engine, vehicle எல்லாம் தங்களே தயாரித்து விட்டார்கள்...இன்னும் சில பிரச்சனைகளை திருத்தியவுடன் அதுவும் ஓரு நம்பகமான ராகெட் ஆக மாறும்...

 

இந்தியாவில் வடிவமைத்த tank - Arjun (எங்கட ஆள் இல்லை) க்கு isreal இருந்து வந்த testing team வைத்த பெயர் Desert Ferrari :)

 

இந்தியாவிடம் ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறை ஏவுகணை பொறிமுறையை விட மோசமான நிலையில் இருக்குது.

 

இந்தியாவிட GSLV ஐ தான் சொன்னம் சார். அதைக் கூட ஒழுங்கா செலுத்த முடியல்ல. ஏலவே செலுத்தினதுகள் எல்லாம் கடலுக்க தொப்புத்தொப்புன்னு விழுந்தது தெரியல்லைப் போல...! (உங்களுக்கு மேலே சொன்னதும் புரியல்லப் போல.)

 

அர்ஜூன் டாங்கி.. சோவியத் யூனியன் இருக்கேக்க அதனோடு கூட்டுச் சேர்ந்து தயாரிக்க வெளிக்கிட்டது. இன்னுமா தயாரிச்சுக்கிட்டு இருக்காங்க..????!

 

இந்தியா ஒன்னும் பெரிய பருப்புக் கிடையாது. அதன் எதிரிகளோடு ஒப்பிடும்.. போது.. உள்ள வெறும் காத்த தாங்க நிலைதான். 

 

4 வது உலக வல்லரசுன்னு பீற்றிக்கிட்டு வந்து புலிகளின் கெரில்லா போர்முனையில் அடிவாங்கிட்டுப் போனதும் இதே இந்தியா தான். இந்திய இராணுவ வரலாற்றில் ஈழக்களமே அதற்கு பெரிய இழப்பை வழங்கிய களம். பங்களாதேஷ் பிரிக்கப் போய்க் கூட இந்தளவு பேரைப் பலியிடல்ல..!

 

2009 இல் புலிகளை வெல்ல இந்தியா மட்டும் காரணம்மல்ல. மிச்சம் சொச்ச நாடுகளும் தான். மேலும் புலிகள் மீண்டும் கெரில்லா போர்முறைக்குப் போக ஏதோ காரணத்தால் விரும்பியும் இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் புலிகளே இந்த ஆயுதப் போராட்டத்தை முடிவுறுத்தவே விரும்பியுள்ளனர். அதற்கு எமது மக்கள் சந்தித்து வந்த இழப்புகள் மற்றும் இந்தப் போரைச் சாட்டி.. தமிழ் மக்களை.. உலக அரங்கில் பல தசாப்தங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்ட சிங்களப் பேரினவாதத்தின் செயல்கள் புலிகளுக்கு அப்படி ஒரு முடிவை எடுக்க நிற்பந்தித்திருக்கலாம். அதனை சொக்கத்தங்கம்.. சோனியாவின் வெற்றியாக அறுவடை செய்யும் உங்களை என்னென்று எடுத்துக் கொள்வது..???! :icon_idea::rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

largesmil.gif

993394_644554472236169_1489091402_n.jpg

ஏவுகணை ஏவுறேன் ஆசியாவின் வல்லரசு அப்பிடி சொல்லுவியா சொல்லுவியா மவனே மித்ச்சே கொன்னு புடுவன் 

 

Good one. :lol:

 

ஆயுதங்கள் வருவதைத் தடுத்தது அமெரிக்கா. கப்பல்களைக் காட்டிக் கொடுத்து.
 
மஹிந்தவுக்கு ஆட்லறிகளும், மல்டி பரல்களும், விமானக் குண்டுகளும் குடுத்தது சீனா, பாக்கி..
 
அப்படி என்றால் இந்தியாவின் பங்கென்ன ?
 
அமெரிக்கா செய்ததே போராட்டத்தை அழிப்பதற்கு தாராளமாகப் போதுமானது.
 
நடேசனிடம் முள்ளிவாய்க்கால் காலப்பகுதியில் இந்தியப்படைகள் தரையில் உள்ளனவா என்று கேட்டபோது ஆம் என்று அவர் பதில் அளிக்கவில்லை.
 
இந்தியாவிடம் Geo -Sync Satallitesஎதுவுமில்லை. இதனால் சட்டலைட்டுகளைப் பாவித்து இந்தியா காட்டிக் கொடுத்தது என்று குற்றம் சாட்டுவது வலுவற்றது.
 
 
அப்படி என்றால் இந்தியாவின் பங்கென்ன ?

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம்  Geo -Sync Satellites க்கள் உள்ளன. அவற்றை இந்தியா ஐரோப்பா மற்றும் ரஷ்சியா வழியாகச் செலுத்தியுள்ளது.மேலும் உளவு நடவடிக்கைகளுக்காக polar satellites தான் அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனை செலுத்தும் ஆற்றலும் (PSLV) இந்தியாவிடம் உள்ளது. 

 

போரின் போது இந்தியா வான்வழித் தாக்குதல்களை வழிநடத்தியது. குறிப்பாக மிக் பாவனைகளை இந்தியா ஒருங்கமைத்தது. மேலும்.. விடுதலைப்புலிகளின் வான்.. கடல் செயற்பாடுகளை கண்காணித்ததும் இன்றி நேரடியாக தாக்கி அழிக்க உதவியது.

 

இந்திய போர்க்கப்பல்கள் கடலில் 24/7 கண்காணிப்புக்களை வழங்கின. களம் இறுக்கமடைந்த போது.. இந்திய இராணுவ அனுபவங்கள் சிங்களத்துக்கு வழங்கப்பட்டன. இதனை கோத்தா மற்றும் சரத் பொன்சேகாவின் விஜயங்கள் கட்டியம் கூறி நிற்பதோடு.. வன்னிக்கு இந்திய படை அதிகாரிகள் நேரடியாகவும் விஜயம் செய்துள்ளனர்.

 

இவற்றிற்கு எல்லாம் மேலாக.. வெளியார் தலையீடுகள் நிகழ்ந்து போர் ஓய்வு வரமால் இருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது.

 

அமெரிக்காவின் செயற்பாடுகள் புலிகளின் ஆயுத வழங்கலை சர்வதேச கடலில் புலிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் மையம் கொண்டிருக்க இந்தியாவின் செயற்பாடுகள் சண்டைக் களத்தை அண்மித்து இருந்தது.

 

அண்மையில்.. முள்ளிவாய்க்காலில் இருந்து திரும்பிய மக்கள் சிறீலங்கா நீதிமன்றில்.. வெளியிட்ட கருத்து ஒன்றின் பிரகாரம்.. இந்தியக் கொடியுடன் நின்ற போர்க்கப்பலில் இருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே கருத்தை சூசை அண்ணரின் மனைவியின் கைதின் போதும் கேட்டிருந்தோம்.

 

இந்தப் போரில்.. பன்னாட்டு ஒத்துழைப்புக்கள் நேரடியாக இருந்ததால் தான் சிறீலங்காவால் வெல்ல முடிந்தது. இந்த நாடுகள் எமது விடுதலைப் போராட்டத்தை எப்போதுமே தமது சுயலாபத்திற்காக பாவிப்பதையே நோக்காகக் கொண்டிருந்தனர். அதில் முதன்மையான நாடு என்றால் அது இந்தியா தான். :icon_idea:

இந்தியாவிடம்  Geo -Sync Satellites க்கள் உள்ளன. அவற்றை இந்தியா ஐரோப்பா மற்றும் ரஷ்சியா வழியாகச் செலுத்தியுள்ளது.மேலும் உளவு நடவடிக்கைகளுக்காக polar satellites தான் அதிகம் பாவிக்கப்படுகின்றன. அதனை செலுத்தும் ஆற்றலும் (PSLV) இந்தியாவிடம் உள்ளது. 

 

 

எதிரிநாடுகளை உளவு செய்ய Polar சட்டலைட்டுகளைப் பாவிப்பார்கள். ஒரு யுத்தம் நிகழும் இடத்தை கண்காணிக்க இவை பெரிய உதவியில்லை. இந்தியாவிடம் உள்ள Geo-Sync சட்டலைட்டுகள் இந்திய மேற்குக் கரையோரத்தைக் கண்காணிக்கின்றன. பாகிஸ்தான் பக்கமாக. இலங்கைப் பக்கமாக அல்ல. 

 

 

 

 

போரின் போது இந்தியா வான்வழித் தாக்குதல்களை வழிநடத்தியது. குறிப்பாக மிக் பாவனைகளை இந்தியா ஒருங்கமைத்தது. மேலும்.. விடுதலைப்புலிகளின் வான்.. கடல் செயற்பாடுகளை கண்காணித்ததும் இன்றி நேரடியாக தாக்கி அழிக்க உதவியது.

 

 

 

 

 

இலங்கை மிக் விமானத்தைப் பலகாலம் உக்கிரேனிய பைலட்டுகள் தான் ஓட்டினார்கள். அத்தோடு அமெரிக்கா பீச்கிராஃப்ட் என்ற உளவு விமானத்தை வளங்கியிருந்தது. இந்த பீச்கிராஃப்ட் மிக நவீன உளவு விமானம். இஸ்ரேலும் பலகாலம் தானியங்கி உளவு விமானங்கள் பலவற்றை வளங்கியபடி இருந்தது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்தியா வளங்கிய ராடரைச் சொல்லலாம். அந்த ராடர்கள் சரி இல்லை என்று கோத்தா சினாவிடம் ராடர்களை வாங்கினான்.

 

 

 

 

இவற்றிற்கு எல்லாம் மேலாக.. வெளியார் தலையீடுகள் நிகழ்ந்து போர் ஓய்வு வரமால் இருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது.

 

 

 

போர் ஓய்வுக்கு வருவதை புலிகளே விரும்பவில்லை.

 

 

 

அண்மையில்.. முள்ளிவாய்க்காலில் இருந்து திரும்பிய மக்கள் சிறீலங்கா நீதிமன்றில்.. வெளியிட்ட கருத்து ஒன்றின் பிரகாரம்.. இந்தியக் கொடியுடன் நின்ற போர்க்கப்பலில் இருந்து முள்ளிவாய்க்காலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே கருத்தை சூசை அண்ணரின் மனைவியின் கைதின் போதும் கேட்டிருந்தோம்.

 

 

 

 

இந்த குற்றச்சாட்டு ஆராயப் படவேண்டியது. ஏனென்றால் முள்ளி வாய்க்கால் ஒடுங்கிய நிலப்பரப்பு. ஒரு பக்கம் இந்து சமுத்திரம். மறுபக்கங்களில் ஆயிரக்கணக்கான சிங்களப் படை முன்னேறுகிறது. இந்நிலையில் கடலில் சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து இந்த ஒடுங்கிய நிலப்பரப்பின் மீது தாக்குவது.. ஷெல்கள் இலகுவாக முன்னேறும் சிங்களப்படை மீது போய் விழலாம். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் ஆராயப் பட வேண்டியவை.
 
  • கருத்துக்கள உறவுகள்

polar satellites மூலம் தான் நுண்ணிய உளவுளையும் குறுங்கால இடைவெளியிலான உளவுகளையும் செய்ய முடியும். அந்த வகையில்.. இந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ உடன் இணைந்து ரோ இதனை செய்ததாக செய்திகள் வெளிவந்ததுடன் ரோவின் கடல்.. தரை கண்காணிப்பு விமானப்பறப்புகளும் வன்னி மீது போரின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

 

A day after Sri Lanka Army occupied the town of Ki'linochchi, India's foreign intelligence agency and crucial adviser to the Government on foreign policy-making, the Research and Analysis Wing (RAW), was engaged in a "secret aerial surveillance mission across the Palk Straits" on Saturday according to a report in the Indian media. The report quoted sources who claimed that an aircraft "with high-tech espionage equipment" belonging to the RAW's top-secret wing Air Research Centre (ARC) had taken off from the Chennai airport around 3:00 a.m., on Saturday. The report filed by India's largest selling English daily has buttressed the claims of Tamil Nadu politicians who have accused New Delhi of providing several kinds of strategic military help to the Government of Sri Lanka.

 

http://www.lankanewspapers.com/news/2009/1/37647.html

 

ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியில் சிறீலங்கா விமானப்படையின் செயற்திறன் இன்மையே முக்கிய பங்களித்ததாகக் கூறிய இந்தியா வன்னி இறுதிப் போரில் சிறீலங்கா விமானப்படையை உச்ச அளவில் பயன்படுத்த ஒத்துழைப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியது. உக்ரைன்.. ரஷ்சிய விமானிகள் பறப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும்.. இந்தியா தான் விமானத் தாக்குதல் யுக்திகளை ஒருங்கமைத்தது. அத்தோடு ரடார்களையும் வழங்கி நேரடிக் கண்காணிப்பில் ஈடுபட்டது.

 

Four Indian military experts, assisting the Sri Lankan military, were wounded this week in Vanni and are undergoing treatment in Colombo, reliable sources told TamilNet Friday. The story, first broke by the Australia based Global Tamil Vision (GTV) on Thursday, had said the wounded were Indian soldiers who were undergoing treatment at a military hospital in Colombo. Although TamilNet was able to confirm through reliable sources on Friday that there are at least 4 Indian military experts undergoing treatment, specific details were not obtainable due to the prevailing threat on the right to know information in the island.

 

http://www.tamilnet.com/cat.html?catid=13&year=2009&month=01&view=summary

Students in Chennai protest against alleged Indian military aid to Colombo

[TamilNet, Tuesday, 27 January 2009, 07:00 GMT]

 

26_01_09_erode_tanks_75775_445.jpg

Tamil Nadu Police arrested a group of students in front of Tamil Nadu Legislative Assembly Tuesday while they were attempting to protest against what they alleged as an attempt by the Indian Government to export battle-tanks to the Sri Lankan military, reacting to reports and photographs that have appeared in a largest selling Tamil daily (Erode edition of Dianthanthi). Meanwhle, Tamil political leaders in Tamil Nadu, when contacted by TamilNet said that they were investigating the veracity of the claim that tanks photographed at Erode were destined for the Colombo government.

 

புலிகள் போர் நிறுத்ததை விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் முன் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை..!

 

Only international-sponsored ceasefire can lead to the end of conflict - LTTE

[TamilNet, Friday, 30 January 2009, 09:14 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) Political Head B. Nadesan Friday blamed Colombo for stepped up genocidal artillery attacks on civilian targets Friday after committing a war crime of issuing ultimatum to civilians to move against their will into the hands of the genocidal military. Most of the civilians are continuously forced to live inside the bunkers and civilian casualties were mounting in Udaiyaarkaddu, Thearaavil and other areas, Mr. Nadesan charged. Only a permanent ceasefire mooted by the International Community and negotiations followed by it would resolve the conflict as envisaged by the Tamil people and the LTTE, Mr. Nadesan said

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28209

 

Ceasefire, solution first; laying down arms irrelevant: LTTE appeals to Co-chairs, UN

[TamilNet, Monday, 23 February 2009, 03:58 GMT]

Urging International Community to effect a ceasefire and initiate a political solution as a priority than insisting LTTE to lay down arms, the Political Head of the Liberation Tigers of Tamileelam (LTTE), B. Nadesan, made an appeal Sunday to the heads of the Co-chairs countries saying that "when a permanent political solution is reached for the Tamil people, with the support and the guarantee of the international community, the situation will arise where there will be no need for the arms of the LTTE."

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28503

 

இந்தியாவின் எமக்கெதிரான செயற்பாடுகள் குறித்து இன்னுமா சந்தேகம்...????! :rolleyes:

India in duplicitous, murderous collaboration with genocidal regime - SA Post

[TamilNet, Sunday, 15 February 2009, 15:00 GMT]

 

The_Post_%28SA%29front.jpg

Noting that the "shelling of safe areas, the genocide massacre of the elderly, innocent women, and children," are war crimes "on a par with the worst of Nazism," an article in South Africa's popular daily, The Post, accuses India that it "has revealed a duplicitous and murderous collaboration with the genocidal regime in power in Colombo. Not only deaf to the pleas and cries of its own Tamil population to intervene in this murderous onslaught, it actively assists the regime in the supply of military hardware, the training of strike-aircraft pilots, the supply of military expertise, and the provision of military advisors on the ground."

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28426

 

இந்தியா தான் அழித்தது என்பவர்கள்..
 
இந்திய அமைதிப்படை காலத்தில்
 
1. 80,000 வரையான இந்தியப்படைகள்
2. தாங்கிகள், ஹெலிகள், மிராஜ், முல்லைத்தீவு கடலில் யுத்தக்கப்பல்கள்
3. இறுதி யுத்த நிலமையோடு ஒப்பிடும் போது சிறிய, ஆயுத பலம் குறைந்த புலிகள் அமைப்பு
 
இப்படி இருந்தும், அமைதிப்படை காலத்தில் அழிந்து போகாத அமைப்பு..
 
இறுதி யுத்ததில் இந்தியா, அமைதிப்படை காலத்தில் பாவித்த சக்தியை பாவிக்கவில்லை என்று தெரியும் (80,000 பேரை கொண்டுவந்து இறக்கவில்லை)
 
அப்படியானால்..எப்படி கூடுதல் சக்தியால் முடியாததை குறைந்த சக்தியால் சாத்தியமாக்கியது என்பதற்கான விளக்கத்தைத் தரவேண்டும்.
 
 
******************************** *****************************************************************************
 
 
இறுதி யுத்ததின் வெற்றிக்கான முக்கியமான காரணிகள்..
 
1. சிங்கள மல்டி பரல்
2. அவர்களின் பெருந்தொகை ஆட்லறி
3. சரத் ஃபொன்சேகாவின் சிறு குழுக்கள் திட்டம் 
4. ஆளில்லா விமானங்கள் மூலம் வான் வேவு
5. யாழ்ப்பாணம் (மிகப்பெரிய தமிழ்ச் சனத்தொகை) விலத்தி வைக்கப்பட்டது
7. ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிப்பு
8. புலிகளை தாக்குதல் யுத்தத்தில் இருந்து பாதுகாப்பு யுத்தத்திற்குள் தள்ளிவிட்டது
 
இதில் எதிலாவது இந்திய பங்களிப்பு தெரிகிறதா ?
 
இதில்..
 
1- 2. ‍ சீனா
3. அமெரிக்கா (இப்படியான வித்தியாசமான ஐடியாக்கள் அமெரிக்க இராணுவ  மூளைகளுக்குத் தான் வரும். இந்திய மூளைகளுக்கு வராது.)
4. அமெரிக்கா, இஸ்ரேல்
5. சிறி லங்கா
7. அமெரிக்கா
8. அமெரிக்கா, சிறிலங்கா..
 
 
***********************************************************************************************************************
 
ஈரோடு தாங்கிகள் வன்னிக்கு வந்தனவா ? இறுதி யுத்தத்தில் தாங்கிகள் பெருமளவில் பாவிக்கப் படவில்லை. சரத் பொன்சேகாவின் சிறு குழு முறை பாவிக்கப்பட்டது.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நேரடியாக களத்தில் நின்றது என்பதுதான் நான் அறிந்ததும். ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சில சம்பவங்கள் அனுமானங்களை மேற்கொள்ள உதவலாம்.

1) இந்திரா ரேடார் வழங்கியமை. இவை இருந்த அனுராதபுர படைத்தளத்தை புலிகள் தாக்கியபோது அதனுள் வேலையில் இருந்த இரண்டு இந்திய நிபுணர்கள் காயமடைந்தார்கள்.

2) சார்க் மாநாட்டுக்காக சிங் கொழும்பு போனபோது 9000 இந்திய இராணுவத்தினர் "பாதுகாப்புக்காகச்" சென்றமை. இது ஆசியாவில் முதல்தடவையாக இருக்கலாம்.

3) இயக்கத்தின் விமானம் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோது இந்திய தூதரகத்தின் மேலிருந்து பதில் தாக்குதல் செய்யப்பட்டமை..

4) இறுதிப்போரின்போது புல்மோட்டையில் இந்திய "மருத்துவர்கள்" முகாம் அமைத்திருந்த விடயம். ஆனந்தபுரத்தில் விிழுந்த நச்சுக்குண்டு இங்கிருந்தே ஏவப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

5) எவ்வளவு சீண்டினாலும் பணிந்துபோகும் பண்பு.. :D பின்ன.. சிங்களவனிடம் இந்தியாவின் பங்களிப்பிற்கான ஆதாரங்கள் இருந்தால் அடக்கித்தானே வாசிக்கவேண்டும்?? :rolleyes:

1233965_584071314961899_1316936055_n.jpg


யாழ் அன்பு, உங்களுக்குள் ஒரு கார்டூனிஸ்ட்(கேலி சித்திர வரைவாளர்) ஒழிந்திருக்கிறார். நீங்கள் வரையாமல் தமிழக நடிகர்களின் படத்தை வைத்து கலக்குகிறீர்கள். :D

வாய் விட்டு சிரித்துவிட்டேன். நன்றி.

நன்றி விவசாயி அண்ணா,நுணாவிலான்அண்ணா மற்றும் ரசித்த அனைவருக்கும் . எனக்கு ஓவியம் வராது ஆனால் நகைச்சுவை துணுக்கு எழுத வரும் அதான் கொஞ்சம் மிக்ஸ்  பண்ணுறேன்  :lol:

Edited by யாழ்அன்பு

10ஆயிரம் கி.மீ தூரம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கப் போகிறதாம் இந்தியா!

049084.jpg_480_480_0_64000_0_1_0.jpg

 ஒருதரலால் எழும்பி நடக்கவே முடியாதாம் இதில ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம் ஐயோ ஐயோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.