Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களால் முடிந்ததை செய்வோம் உறவுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இருள் விலகி மறையும் இந்த இனிய காலை பொழுதை போல, தமிழர் துயர் அகன்று

தேசியம்

சுய நிர்ணயம்

தன்னாட்சி

ஆகியவற்றின் முதல்ப்படியாக இன்றைய வடக்கு தேர்தல் அமையட்டும்

நீங்கள் ஒவொருவரும் உங்கள் உறவுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க சொல்லுங்கள் மறந்திடாமல் மறக்காமல் தேர்தலில் வாக்கு போட சொல்லுங்கள்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காது சங்கே முழங்கு!!!

தமிழர் யாரையும் வீட்டுக்கு வெளிவரவிடாமல் பார்த்துக்கொண்டு, அனந்தியை கொலை செய்ய முயற்சித்துவிட்டு, வடமாகாண மக்களை வாக்களிக்கும் படி கூறுகிறார். செய்வதெல்லாம் செய்துவிட்டு புருடா விடுகிறார் இந்த போக்கிரி. தமிழர் அதிகாரத்தை கையில் எடுத்தால்த்தான் இவர்களின் கொட்டம் அடங்கும்.

 

 

அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடியும் : பஷில்

வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்காக இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும். அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அமைதியான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

விசேடமாக வட மாகாண சபைக்காக இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் வாக்குரிமையுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அனைவரும் வாக்களிப்பதன் மூலமே ஜனநாயகத்தை உறுதிபடுத்த முடியும்.

வடக்கில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் நிலைநாட்டும் செயற்பாடுகளையும் அபிவிருத்திகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும். எனவே மக்கள் தேர்தலில் வாக்களிக்கவேண்டும்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=7181

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச்சாவடிகளுக்கு விரைந்து

செல்லுங்கள்!

வாக்குகளை உடன் பதிவு

செய்யுங்கள்.நீங்கள் தாமதிக்கும்

ஒவ்வொரு விநாடிகளும் கள்ளவாக்குகளைப் போடுவதற்குத்

தயாராக உள்ள கொலைகாரக் கும்பல்களுக்கு சாதகமாய்

அமைந்துவிடும்.

வீட்டுச் சின்னத்திற்கு உங்கள்

வாக்குகளை இடுங்கள்.உங்கள்

வீடுகளையும், மண்ணையும்

காப்பாற்றுங்கள்.

அன்பான எம் இனிய உறவுகளே!! அடக்கு முறைக்கும், அடிமைத்தனத்துக்கும் அடிபட்ட ஒரு இனம் காலை புலர்கிறது.. உங்கள் கைகளில்தான் எங்கள் வாழ்வும்,அழியாத இலட்சியமும் இருக்கின்றது.. ஆயிரம் ஆயிரம் வீரர்கள் சிந்திய குருதியும்,பல ஆயிரம் எம் உறவுகள் சிந்திய குருதியும் வீணாய் போக நாம் அனுமதிக்க முடியாது வருங்காலத்தில்.. எத்தனை கொலைகள்,பாலியல் தொல்லைகள்,பாலியல் வல்லுறவுக்கள்,தற்கொலைகள் எம் இனத்துக்கு நடந்த கொடுமைகள்..வரிசை வரிசையாக சொல்லலாம் நேற்றுவரை காடையர்கள் செய்த கொடுமைகளை,புலர்கின்ற பொழுதோடு எங்கள் சுமைகளை ஓரளவு இறக்கி வைப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைந்து வாக்களிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.. உறவுகளே,நாம் ஒரு பெரிய ஒரு இனம் என்பதையும்,நாம் எப்பவும் அடிமைப்பட்ட இனம் இல்லை என்பதையும் ஜனநாயக வழியில் எமது வாக்குகளை எங்கள் வீட்டுக்கு அள்ளி வழங்குவோம்.. தமிழரின் ஒப்பற்ற சக்தியாக தாயகத்தில் விளங்குவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மட்டும்தான் என்பதை உலகுக்கு எடுத்துச்சொல்வோம்.உலகிலேயே படுகேவலமாக ஒரு பெண் வேட்பாளரை அடித்து மிரட்டுகின்ற சம்பவம் எங்க தாயகத்தில்தான் நடந்தேறியிருக்கிறது.இப்படியான ஒரு கட்டத்தில் நாங்கள் நிற்கிறோம்.ஆனால் நாங்கள் எதுவந்தாலும் வெல்வோம் என்ற உறுதியுடன் ஜனநாயக வழியில் போராடுகிறார் அந்த பெண்மணி..இப்படிப்பட்ட துணிந்த இனம்தான் நாங்கள் என்பதை காடையர்களுக்கு புரிய வைப்போம்... " ஒன்றுபடுவோம்,ஒற்றுமையோடு வாக்களிப்போம் எம் இனங்காக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு"

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.யாழ்பாணத்திற்கு தொலைபேசி எடுத்தேன் தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்திவருகிறது.திட்டமிட்டு கைத்தோலைபேசிகளை முடக்கி விட்டார்களோ???????

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் செய்தாலும் செய்து இருப்பார்கள் நான் நேற்றே தொடர்பு கொண்டு நண்பர்கள் உறவினர்களிடம் கூறிவிட்டேன் உங்கள் வாக்கு வீட்டிற்க்கே என்று

  • கருத்துக்கள உறவுகள்

நானும் யாழ்ப்பாணத்திலிருக்கும் தமிழ் உறவுகளுக்கு தொலைபேசியில் அழைத்துச் சொல்லாமென்றால், அங்கே தெரிந்தவர்கள் யாருமே எமக்கில்லை.  :o 

 

பெரும்பான்மை தமிழர்களின் விருப்பங்கள் வென்றால் மகிழ்ச்சி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் இப்பதான் நித்திரையால எழும்பினவயள்போலக்கிடக்கு. இதை எப்பவோ செய்திருக்கவேணும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடத்திற்கு முன் வன்னியில் உள்ள உறவொருவருடன் உரையாடினேன். அவர் சொன்னார். வெற்றி நிச்சயம் என்று...

என்றாலும் முடிவுவரும் வரை பதட்டமாக இருக்கும் என்று...

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடத்திற்கு முன் வன்னியில் உள்ள உறவொருவருடன் உரையாடினேன். அவர் சொன்னார். வெற்றி நிச்சயம் என்று...

என்றாலும் முடிவுவரும் வரை பதட்டமாக இருக்கும் என்று...

நல்லதையே எதிர் பாப்போம்

சைய்க்கிள் காரர்கள் என்ன செய்யிறாங்கள். அவையள்தான் ஏதோ எல்லாத்தையும் இவங்கள் கைவிட்டுப் போட்டாங்கள் எண்டாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.