Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

வெற்றி ஈட்டிய அந்த தமிழ்தேசிய நட்சத்திரங்களின் படங்களை இங்கே போட்டால் நாங்களும் அறிந்துகொள்வோமில்லையா? :(http://www.euthayan.com/view.php?urldel=backend/html/2013-09-23/01/1_05.gif

http://www.euthayan.com/view.php?urldel=backend/html/2013-09-23/01/1_05.gif

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply

உங்கள் இணைப்பினை நான் குறை சொல்லவில்லை. கட்டாயம் இணையுங்கள். நான் சொல்லவந்தது சிறிலங்கா தேர்தல் முறையினால் தோற்ற கட்சியில் இருந்தும் 7 பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது உலகத்துக்கு தெரியுமா?

தெரிய வேண்டியவர்களுக்கு தெரியும் என்றுதான் நினைக்கிறேன். 

இப்படி கண்துடைப்பு தேர்தல்கள் பல நாடுகளில் நடப்பதுண்டு (பல ஆபிரிக்க நாடுகள், கம்யூனிச நாடுகளின் தேர்தல்கள் ). தேர்தலின் பின்னர் பதவிக்கு அதிகாரம் இல்லாதவர் வருவது.(ஈரான் மாதிரி). வந்தால் பதவியை இன்னொருவர் தட்டிப்பறிப்பது(பாகிஸ்த்தான் மாதிரி).

17ம் திருத்ததின் பின் வந்த 18ம் திருத்தம் அரசியல் அமைப்பின் அதிகார சமநிலையை கெடுத்துவிட்டது என்றதையும் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள். 6ம் திருத்ததை சர்வதேச நீதி அமைப்புகள் எதிர்க்கின்றன.

தெரிந்தும் இலங்கையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை.  அதற்கு யாரும் திருப்த்திகரமான விளக்கம் கொடுக்கவில்லை.

இந்தத் தேர்தலில் நானும் வாக்களித்தேன் அதுவும் என்னுடைய கன்னி வாக்கு.... யாழில் இருந்த எதிர்பார்ப்ப்பைவிட அதிகமான வாக்குகள்.

புதிதாக முளைத்ததை யாழ் வர்த்தக சமூகம் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் ஒரு கூட்டம் மகிந்தவுக்கு மாசக்கணக்கில் வேலை செய்தார்கள் என்ன கொடுமை.

நோட்டீசை கிக்கிக்கிறது, ஆமிக்கரனோட அலையிருது.. எல்லாத்துக்கும் சேர்த்து நல்ல ஒரு ஆப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபைதேர்தலில் போட்டியில் வெற்றிபெற்ற கூட்டமைப்பு வேட்பாளர்கள் 28பேரின் படங்கள்.

tna%20600%20400.jpg

1175155_499260726825322_397699384_n.png

சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர்!- சிங்கள இணையத்தளம் புகழாரம்

ஆசிரியையை முழங்காலிட்டவர்கள், பாடசாலை அதிபர்களை தாக்கியவர்கள், மண்வெட்டி, சேலை, சாரம், செல்லிடப் பேசிகள், புரியாணி பொதி, சாராயம் கிடைக்குமானால் எந்த கொடியவனுக்கும் வாக்களிக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு, இன்னும் தமக்கான வீட்டை கூட கொண்டிருக்காத வடக்கு தமிழர்கள், பிச்சையெடுத்து உண்டாலும் மனசாட்சியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்ற செய்தியை கூறியுள்ளனர்.

தென் பகுதி சிங்களவர்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும் தமக்கும் கெடுதியைச் செய்யும் வில்லனைப் புரிந்து கொண்ட வடபகுதி மக்கள் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அவனை தோற்கடித்தனர்.

  • தொடங்கியவர்

மன்னார் மாவட்ட விரு;பபு வாக்குகளை அறிந்தவர்கள் இணையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சற்று விளக்கமாக கூற முடியுமா கந்தப்புஅண்ணோய்

 உதாரணத்துக்கு ஒரு மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதி இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் நடைபெறும் தேர்தல்களின் அடிப்படையில் 10 தேர்தல் தொகுதியில் முதல் இடத்தினைப் பிடிப்பவர்கள் அந்த மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்தப் பத்துத்தொகுதியிலும் 80 வீதமான வாக்குகள் பெற்றிருக்கிறது. அரசுக்கட்சி 20 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறது. ஆனால் விகிதசார அடிப்படையில் (100/10 = 10) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 8 இடங்களைத்தான் பெறமுடியும். 20 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற அரசுக்கட்சி 2 இடங்களைப் பெறலாம்.

2009 தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி 42.5% வீத வாக்குகள் பெற்று 27 இடங்களைப் பெற்றது. அதாவது 27 தொகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்தது. அதிமுக, மதிமுக கூட்டணி 38 வீத வாக்குகள் பெற்று 12 இடங்களைத்தான் பிடித்தது. விஜயகாந்தின் கட்சி தனியாகப் போட்டியிட்டு 10 வீதவாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. அதே போல பாரதிய ஜனதாவும் 5 வீத வாக்குகள் பெற்று ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. சிறிலங்காவின் போல வீதசார வாக்குகள் கணிக்கப்படுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் , அதிமுக மதிமுக கூட்டணி 14 இடங்களையும் ,தேதிமுக  4 இடங்களையும்,பாஜக 2 இடங்களையும் பெற்றிருக்கும் , மிகுதி 3 இடங்களும் வேறு சில கட்சிகளுக்கு சென்றிருக்கலாம். தமிழ் நாட்டில் பாரதி ஜனதா கட்சி, திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் 2 இடங்களைப் பெற்றால் யாரும் நம்புவார்களா?.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஒன்றும் சொல்ல வில்லையா?

வடமாகாண தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை

Seeman_7.gifஉலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கை அரசால் நடத்தப்பட்ட வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஈழத் தமிழ் மக்கள் அளித்துள்ள மாபெரும் வெற்றியானது, தமிழினத்தை இன அழித்தல் செய்த இலங்கை அரசுக்கு தமிழர்கள் புகட்டியுள்ள பாடமாகும் என்று இலங்கை வடமாகாண தேர்தல் குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இராணுவத்தை பயன்படுத்தி கடும் அச்சுறுத்தல் செய்து, தமிழர்களை வாக்குச் சாவடிக்கு வர விடாமல் செய்து, அதன் மூலம் தாங்கள் விரும்பும் பொம்மை அரசை ஏற்படுத்த ராஜபக்ஷ அரசு செய்த முயற்சியை துணிந்து வந்து வாக்களித்து தமிழ் மக்கள் முறியடித்துள்ளனர்.  தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வட மாகாண தமிழ் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை, இலங்கையின் ஒற்றுமைக்கு உட்பட்டு தாங்கள் வாழவும், இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு தீர்வையே அவர்கள் விரும்புவதை வெளிப்படுத்துவதாக கூறினால் அதை விட கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம் எதுவும் இருக்க முடியாது. ஏனெனில் இந்த தேர்தலில் வாக்களித்தவர்களில் அங்கு நடந்த தமிழின அழிப்புப் போரில் தங்கள் கணவன்மாரை இழந்த 50,000 பெண்கள் வாக்களித்துள்ளனர்.

தங்கள் பிள்ளைகளை போரில் இழந்த, போருக்குப் பின் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத இளைஞர்களின் பெற்றோர்கள் பல ஆயிரக்கணக்கில் வாக்களித்துள்ளார்கள். இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சில் தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தைகளை இழந்த தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். தாங்கள் வாழ்ந்த இடங்களை அபகரித்து அங்கு இலங்கை இராணுவ முகாம்களை ஏற்படுத்திய அரசின் முடிவால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். இவர்களின் வாக்குதான் இலங்கை அரசின் முன்னெற்ற முகமூடியை கிழத்தெறிந்திருக்கிறது. எனவே, இந்த வெற்றியை எந்த வித்திலும் ராஜபக்ஷ அரசும், அதற்கு எல்லா வழிகளிலும் முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசும் தங்களது ஜனநாயக முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கூறிக்கொண்டால் அதைவிட பெரிய ஏமாற்று இருக்க முடியாது. இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசமைப்பில் செய்யப்ட்ட 13வது திருத்ததன் கீழ் வட மாகாண அரசுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க தொடர்ந்து முயற்சிப்போம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அந்நாட்டு சட்டத்தின்படி, தமிழர் மாகாணத்திற்கென்று தனித்த அதிகாரங்கள் எதையும் வழங்குவதற்கு வழியில்லை என்ற நிலையில், அவர்கள் முயற்சி வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. இந்த தேர்தலின் முக்கிய பலனாக நாம் தமிழர் கட்சி கருதுவது, இலங்கையின் அரசமைப்பிற்கு உட்பட்டு அமைக்கப்படும் ஒரு மாகாண அரசால் தமிழர்களுக்கு எந்த விதமான அரசியல் சம உரிமையும் கிடைக்காது என்பதை உலக நாடுகள் உணர்வதற்காக ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. சர்வதேசம் கூறும் அந்த அதிகாரப் பரவலும், தமிழர்களுக்கு அரசியல் சம உரிமையும் கிடைக்காமல் போனால், அப்போதாவது, தமிழர்களின் அரசியல் விடுதலையை நேர்மையாக ஆதரிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். தமிழர்களின் அரசியல் தலையெழுத்தை முடிவு செய்ய ஐ.நா. வாயிலாக அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.

http://www.puradsifm.com/news/eelam-news/seeman/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில்..லங்காசிறி தமிழ்வின் இணைய தளம் பெரிய பங்கு ஆற்றி இருக்கு தமிழ் கூட்டமைப்புக்கு...அவர்களுடன் நேர்கானல்...பல தடவை ஆனந்தி அக்காவுடன் நேர்ககானல் கண்டு இருக்கினம்...ஏன் இவர்களின் இணைய தளத்தை யாழில் தடை செய்தார்கள்....  :unsure:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69819

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 உதாரணத்துக்கு ஒரு மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதி இருக்கு என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகத்தில் நடைபெறும் தேர்தல்களின் அடிப்படையில் 10 தேர்தல் தொகுதியில் முதல் இடத்தினைப் பிடிப்பவர்கள் அந்த மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அந்தப் பத்துத்தொகுதியிலும் 80 வீதமான வாக்குகள் பெற்றிருக்கிறது. அரசுக்கட்சி 20 வீதத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறது. ஆனால் விகிதசார அடிப்படையில் (100/10 = 10) தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 8 இடங்களைத்தான் பெறமுடியும். 20 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற அரசுக்கட்சி 2 இடங்களைப் பெறலாம்.

2009 தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் திமுக கூட்டணி 42.5% வீத வாக்குகள் பெற்று 27 இடங்களைப் பெற்றது. அதாவது 27 தொகுதிகளில் முதல் இடத்தைப் பிடித்தது. அதிமுக, மதிமுக கூட்டணி 38 வீத வாக்குகள் பெற்று 12 இடங்களைத்தான் பிடித்தது. விஜயகாந்தின் கட்சி தனியாகப் போட்டியிட்டு 10 வீதவாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. அதே போல பாரதிய ஜனதாவும் 5 வீத வாக்குகள் பெற்று ஒரு இடத்தினையும் பிடிக்கவில்லை. சிறிலங்காவின் போல வீதசார வாக்குகள் கணிக்கப்படுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களையும் , அதிமுக மதிமுக கூட்டணி 14 இடங்களையும் ,தேதிமுக  4 இடங்களையும்,பாஜக 2 இடங்களையும் பெற்றிருக்கும் , மிகுதி 3 இடங்களும் வேறு சில கட்சிகளுக்கு சென்றிருக்கலாம். தமிழ் நாட்டில் பாரதி ஜனதா கட்சி, திமுக அதிமுக கூட்டணி இல்லாமல் 2 இடங்களைப் பெற்றால் யாரும் நம்புவார்களா?.

இந்த திரியை பல தடவைகள் வாசித்தும் என்ன பொதுவாக எழுதூவது என்று தெரியவில்லை. பல பந்தி எழுத்தாலர்கள்னதும் கருத்துக்களை வாசித்து குளப்பம் தான் மிச்சம். இந்த வெற்றியால் எல்லொருக்கும் சந்தொசம் அனால் அது எப்படி என்றுதான் விழகவில்லை. 

மற்றது , இதில் கந்தப்பு சொன்னது மிக எளிய முறையில் இருந்தாலும், உண்மையில் விகிதார பிரதினித்துவ முறை இன்னும் கொன்சம் சிக்கலானது. விக்கி பீடியாவிவில் ஒன்று இருகிறது, ஆனால் நடைமுறையில் அதவிட கடினம் என்று ஒரு மாவட்டதெரிவு அத்தாட்சி அதிகாரி சொன்னது நினைவில் இருக்கு. - 

அடிப்படையில், ஒரு மாவடதிற்ர்கு 10 பிரதினிதகள் என்ரால், 

முதலில் மாவட்த்தில் வென்ற கட்சிக்கு ஒரு ஆசனம் - சீட்

பின் விழுத்த வாக்குகளில், 5 வீதத்திக்கும் குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகள் நீக்கபடும்.

மிகுது வாக்குகள் 9 ஆல் பிரிக்க படும். 

அதன் படி, ஒரு ஆசனத்திற்க்கு உரிய, ஆக்கக் குறைந்த வாக்கு தீர்மனிக்கபடும்

அதன் படி கட்சிகளுக்கு ஆசனன்கல் பிரித்து கொடுக்க படும்.

பல சந்தர்பன்களின் அது குரன்கு அப்பம் பன்கிட்ட மாதிரி அல்லது, இப்பத்தையை "டக் வேத் "  முறை போல வரும். 

பலருக்கு என்னத்தையோ என்ன்வோ பார்த்தது போல இருக்கும்.

இது இப்பொது பல வளரரும் நாடுகளிலும், ஈரொப்பவிலும் நடைமுறையில் உள்ளதாக விக்கி பீடியா சொல்லுகிரது. 

அமெரிக்க கனடா  போன்ற வளர்ந்த நாடுகளுக்கு இது டேவைப்படாது, அதே போல இந்தியா போன்ற நாடுகளுக்கு - கொன்சம் கடினமானது - 

இலன்கைக்கு - சிறிய, எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளுக்கு போருந்தலாம். 

Thanks  :   Cartoonist Bala ( Kumudam Magazine )

1268731_10200682298446198_2111489052_o.j

நன்றிகள் சிதம்பரத்தை பேய் பார்தது போல் இருந்ததை இலகுவாக விளங்கபடுத்தியமைக்கு.

இந்த நடைமுறை பாராளுமன்ற தேர்தலுக்குத்தான் ,மாகாணசபைக்கு இல்லை .

Name of the Party/Independent Group No. of Votes Received
Percentage  %
No. of Members Elected
United People's Freedom Alliance
540,513
69.05 %
23
United National Party
169,668
21.67 %
7
Democratic Party
36,096
4.61 %
2
Sri Lanka Muslim Congress
17,130
2.19 %
1
People's Liberation Front
16,311
2.08 %
1
 
மேலே உள்ளது குருணாகலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிபு .

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே எழுதிய உதாராணம் படிதான் இத்தேர்தல் முறை முடிவுகள் கணிக்கப்படுகின்றன.. கிரி இணைத்த குருநாகல் தொகுதியைப்பார்த்தால் அங்கு 34 தொகுதிகள் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி 69.05 வீத வாக்குகள் பெற்றிருக்கிறது. (69.05/100)* 34 = 23.477 . இதனால் 23 தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சி பெற்றிருக்கிறது. ஐக்கிய தேசியக்கட்சி 21.67 விகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. (21.67/100) *34 = 7.3678. இதனால் ஐக்கியதேசியக்கட்சி 7 இடங்களைப் பிடித்திருக்கிறது. சரத்பொன்சேகாவின் கட்சி 4.61 வீதவாக்குகள் பெற்றிருக்கிறது. (4.61/100)*34 =1.5674 இவர்களால் 1 இடங்களைத்தான் பிடிக்கமுடியும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2.19 வீத வாக்குகள் பெற்றிருக்கிறது. (2.19/100)* 34 = 0.7446 . மக்கள் விடுதலை முன்னணி 2.08 வீதவாக்குகளைப் பிடித்திருக்கிறது. (2.08/100) *34 =0.7072 . 34 தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கட்சிக்கு 23 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 7 இடங்களையும் , சரத்பொன்சேகாவின் கட்சிக்கு 1 இடங்களையும் வழங்கியபின்பு (23+7+1 =31) இன்னும் 3 இடங்கள் இருக்கின்றது. இப்பொழுது ஐக்கியமக்கள் கட்சியிடம் 0.477ம் (23.477 - 23) ஐக்கிய தேசியக்கட்சியிடம் 0.3678ம் (7.3678 - 7)ம் சரத் பொன்சேகாவின் கட்சிக்கு 0.5674ம்(1.5674 - 1 ) முஸ்லிம் காங்கிரசுக்கு 0.7446ம் மக்கள் விடுதலை முன்னணிக்கு 0.7072 ம் இருக்கின்றது. இன்னும் இருக்கும் 3 இடங்களுக்கு அதிகமாக மிகுதியாக வைத்திருக்கும் 3 கட்சிகள் தெரிவு செய்யப்படும். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் (0.7446), மக்கள் விடுதலை முன்னணி (0.7072), சரத்பொன்சேகாவின் கட்சி (0.5674)களுக்கு மிகுதி இருக்கும் 3 இடங்களும் தலா ஒவ்வொரு இடமாக வழங்கப்பட்டிருக்கிறது. இதே முறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டிருக்குமானால் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு குறைந்தது 2 இடங்கள் கிடைத்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் விடுதலைப்புலிகள் காலத்தில் 2004ல் நடைபெற்ற தேர்தலில் 10 வீதத்துக்கும் குறைவாகப் பெற்ற ஈபிடிபிக் கட்சி யாழ்ப்பாணத்தில் ஒரு இடத்தினைப் பெற்றது. டக்லஸ் தேவானந்தா அத்தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். குரு நாகல் மாவட்டத்தில் சிங்களவர்கள் அதிகமான இடத்தில் விகிதசார முறைப்படி(சிறிலங்காவின்) நடைபெற்ற இத்தேர்தலில் வெறும் 2.19 வீத வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு தொகுதிப்படி அதிக வாக்குகளைப் பெற்றவர்கள் என்று கணிக்கப்பட்டிருந்தால் முற்று முழுதாக மகிந்தாவின் கட்சியே 34 இடங்களைப் பெற்றிருக்கலாம். 1977 தேர்தலில் அதிக வாக்குகளின் படி கணிக்கப்பட்டதினால் தமிழர் ஒருவர் இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக 1977ல் தெரிவு செய்யப்பட்டார். தமிழர் ஒருவர் இனிமேலும் எதிர்க்கட்சித்தலைவராக வரக்கூடாது என்று சிங்களம் விரும்பியதினால் விகிதசாரப் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர்கள் அதிகளவு பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படக்கூடாது என்பதினால் தான் தரப்படுத்தல் சட்டம் கொண்டுவரப்பட்டது. வட மாகாணத்தில் தமிழர்கள் அதிகளவு வென்றதினால்தான் மாகாணசபைத்தேர்தலில் காணி அதிகாரம் மாகாணசபைக்கு கிடைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஒருவேளை சிங்களக்கட்சி வடமாகாணத்தில் வெற்றி பெற்றால் இச்சட்டம் வந்திருக்காது. சிங்களத்தின் பெரும்பாலான சட்டங்கள் தமிழர்களுக்கு எதிராகவே கொண்டுவரப்படுகின்றது. இதனால்தான் நான் சிங்கள நாட்டினை எனது தாயகமாகச் சொல்வதில்லை. நான் சிறிலங்கன் என்று சொல்வதினை விட எனக்கு கல்வி, வேலை, சம உரிமை, சுதந்திரம் எல்லாவற்றையும் தந்ததினால் அவுஸ்திரெலியா நாட்டுத்தமிழன் என்று சொல்வதினைப் பெருமைப்படுகிறேன். சிங்களத் துடுப்பாட்ட அணி அவுஸ்திரெலியாவுக்குவரும் போது அவுஸ்திரெலியாத் தேசியக்கொடியுடன் துடுப்பாட்டம் பார்த்துவருகிறேன். ஒவ்வொரு சிங்களத்து விக்கெட்டுக்கள் விழும் போதும் மைதானத்தில் துள்ளி மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்.

Edited by கந்தப்பு

:)  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.