Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாகரத்து.. உண்மையில் ஒரு நாடகம் தானே..!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/bKy6lO-TJvw

 

உடல் இரசாயனங்களின்

உந்துதலில்

உன்னைக் கண்டேன்.

உன்னதமாய் தோன்றிய

உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி

உலவவும் செய்தேன்..!

உயிர்மெய்யென

உன்னில் நானே

உளறியும் கொட்டினேன்.

உன்னை நீயே

உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...!

 

உறவுகள் விரிந்தது

உண்மைகள் என்பதாய் வளர்ந்தது.

உடலும் உறவு கொண்டது

உயிர்களும் தோற்றம் பெற்றன.

உடைக்க முடியாத பந்தம்

உன் - என் உறவென்று

உறுதியாய் நம்பி இருந்தேன்

உன் அன்பை

உண்மை அன்பெனக் கண்டதால்.!

 

உறுத்தலாய்

உருண்டது ஓர் நாள்..!!

உன் முன்னவன் என்று

உதிரியாய் ஒருத்தனை

உதாரணம் காட்டினாய்.

உள்ளதில் படர்ந்தது

உதவாக்கரை எண்ணம்.

உன்னை அது

உறவால் வெறுக்க வைத்தது.

உறவுகள் விரிசல் காண...

உயிர்கள் அந்நியமாக

உடல்கள் பிரிந்தன.

 

உளலும் மனதில்

உருமாறிய நீ

உண்மையில் வேண்டாதவளானாய்.

உணர்வுகள் அழித்து

உன்னை உதிர்க்கும் தருணமே

உளத்திற்கு அமைதி என்றானேன்..!

 

உலகம் பூராத் தேடி

உயிரால் உயில் எழுதி

உருப்படியாய் எடுத்த

உயிர் நீ யென்பதை

உடனடியாய் தூக்கி எறிந்தேன்.

உதறித் தள்ளினேன்

உன் நினைவுகளை...!

உடைந்த

உறவில் தேடினேன்..

உத்தமனாய்

உன்னைப் பிரிய ஒரு விவாகரத்து.

 

உரைகள் எழுதிய - நீதிமன்றின்

உதவியோடு

உன்னை என்னை அறியாதவன்

உத்தரவுக்கு அடிபணிந்து..

உன்னை வலிந்து விலக்கினேன்..!

உருவானது நிம்மதி என்று

உள்ளம் தேற்றினேன் - ஆனாலும்

உடலும்

உள்ளமும் கலந்தவள் நீ

உண்மை அது என்று

உள்ளம் உரைக்க...

உன் நினைவுகள்

உன்னை விடுகுதில்லை

உன்னவனிடத்தில் இருந்து.

உறவுகள் அறுத்தவன்

உலைக்களம் ஏவிய

உதாரணமாய் ஆனான் விவாகரத்தால்...!

 

உண்மையில்

உற்ற உறவுகள்

உடலால்..

உள்ளத்தால் இணைந்த பின்

உருவாகும்

உறவது பிரிக்க இயலா இணைப்பு.

உலகில் அதை அறுக்க

உங்கு எவரும் இல்லை..!

உணர்ந்து கொண்டேன்

உண்மைகள் அறிந்து கொண்டேன்..!

உவளே என்

உயிர் என்றும்

உற்ற தோழி என்றும்

உறவுகள் தொடர்ந்தேன்.

உள்ளம் வாழ்த்த

உன்னை

உள்ளமெங்கும் என்னிடத்தில் தாங்கிய படி..!!

 

http://youtu.be/qWeqB33-TZ0

 

(விவாகரத்துக்கள் அதிகரித்து வரும்... இன்றைய நிலையில்... அண்மையில் மேற்படி பாடல்கள் இரண்டையும்..  பார்த்த போது மனதில் உதித்ததை இங்கு ஆக்கியுள்ளோம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

"உ" கவிதை மனதில் உட்கார்ந்துவிட்டது..! :D

உடலை மட்டும் பிரிக்க முடியும்

உள்ளங்கள் உடைத்தாலும் நினைவில்தான் வாழும் .

 

அழகான விளக்க கவிதை அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்

உற்ற உறவுகள்

உடலால்..

உள்ளத்தால் இணைந்த பின்

உருவாகும்

உறவது பிரிக்க இயலா இணைப்பு.

உலகில் அதை அறுக்க

உங்கு எவரும் இல்லை..!

உணர்ந்து கொண்டேன்

உண்மைகள் அறிந்து கொண்டேன்..!

உவளே என்

உற்ற தோழி என்று

உறவும் தொடர்ந்தேன்

உள்ளம் நிறைய

உன்னை

உள்ளமெங்கும் என்னிடத்தில் தாங்கிய படி..!!

 

 

 

அருமையான கவிதை ஒன்று நெடுக்ஸ் அண்ணா.. காதலிகள்/காதலன்கள் பிரிந்துபோகலாம்..நினைவுகளாய் தங்கிவிடலாம்.. ஆனால் மனைவி/கணவன் என்ற உறவு அதை எல்லாம் தாண்டியது... பிள்ளைகளுக்கு அப்பா அம்மாவாகா..,அம்மாக்களுக்கு மருமகளாக,மருமகனாக..சமூகத்தில் ஒரு அங்கமாகிவிடும் குடும்பமாக.. அத்தனை எளிதாக வெட்டிவிடும் உறவா அது.. மீண்டும் நன்றி அண்ணா மனதை தொட்ட நெகிழ்ச்சியான கவிதை ஒன்றுக்கு..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. பிரம்மச்சாரிகள் கவிதையும் எழுதி கருத்தும் சொல்லுறாய்ங்க.. :unsure: கேட்டுக்கிறவேண்டியதுதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை உணர்வால் இணைந்தபின்
எத்தனைமுறை விவாகரத்து வந்தாலும்
அகலாத நினைவுகள் மீண்டும் மீண்டும் அசைபோடும்

கவிதைக்குப் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. பிரம்மச்சாரிகள் கவிதையும் எழுதி கருத்தும் சொல்லுறாய்ங்க.. :unsure: கேட்டுக்கிறவேண்டியதுதான்.. :D

 

பிரபஞ்சத்தில என்ன நடக்குதுன்னு.. பற்றி சிந்திக்கிற படியால் தான் பிரமச்சாரிகளா இருக்கம்.( மனதளவில் என்று சொல்ல ஏலாது. மனசில பல கனவுகள் பகலிலும் நித்திரையிலும் வந்து போகும் தானே..! உடல் அளவில்.. என்று சொல்லலாம். :lol:  ) இல்ல சம்சாரிகளா ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டுக் கிடந்திருப்பம். இப்படி எல்லாம் சிந்திக்க எழுத சந்தர்ப்பம் வாய்க்கனுன்னு தான் காலம் எங்களை சுதந்திரமாக உலாவ விட்டுள்ளது போலும்.

 

கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றி..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி வந்தியர். :)

  • கருத்துக்கள உறவுகள்

"உ" வரியில்... கவிதையின் எல்லா வரிகளையும் ஆரம்பித்த கவிதை அழகு நெடுக்ஸ்.
சுபேஸ் கூறிய‌து போல்... திரும‌ண‌ம் செய்த‌வ‌ர்க‌ள், விவாக‌ர‌த்துப் பெறுவ‌து கொடுமை.
முத‌லில்... ச‌முக‌ம் ம‌திக்காது. அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளும்... ஒரு ஏக்க‌ நிலையுட‌னேயே வாழ்வார்க‌ள்.
அந்தத் தம்பதியுடன் சம்பந்தப் பட்ட அனைவருமே... பாதிக்க‌ப் படுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் ஆனவர்கள்.. அதிலும் குழந்தைகளை வைத்துக் கொண்டு விவாகரத்துப் பெறுவது என்பது உண்மையில்.. கொடுமையான விடயங்களில் ஒன்று. அவர்கள் நிறைய புரிந்துணர்வுக்கான வழியைக் கண்டு கொள்வதே விவாகரத்தை விட குடும்பப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவுவதாகவும் இருக்கும்.

 

இன்று புலம்பெயர் மண்ணில் எம்மவரிடையே குறிப்பாக பெண்கள் மத்தியில்.. தான் தன் சம்பாத்தியத்தில்.. அல்லது அரச உதவியில் வாழ முடியும் என்ற அந்த ஒரு எண்ணமே.. சின்னச் சின்ன விடயங்களிலும் குடும்பத்தை சீர்குலைக்கும் முடிவை எடுக்கத் தூண்டுவதைக் காண்கிறோம். குடும்பம் என்ற அந்த அடிப்படை சமூகக் கட்டமைப்பின் பெறுமதி தெரியாமல் பல பெண்கள் (படித்த பெண்கள் கூட) வெறும் ஆணுக்கு நான் என்ன சளைத்தவளா என்ற...உணர்வுத் தூண்டலில் முடிவெடுப்பதை எல்லாம் காண்கிறோம். இதனால் சீரழிந்தது பிள்ளைகளாகவும் இருக்கக் காண்கிறோம். குறிப்பாக மிக இள வயதில் பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாது பாலுணர்வுத் தூண்டல் வழியில்.. காதல்.. உறவு என்று திரியும் பல தமிழ் பிள்ளைகளின் பின்னணியை பார்த்தால்.. அவர்களின் குடும்பங்களில் இப்படியான சீரழிவுகள் நிகழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அப்பா -  அம்மா சண்டை. விவாகரத்து.. பிரிந்து வாழுதல்.. என்று பல கொடுமைகள்.. எம் புலம்பெயர் சமூகத்திலும் கூட..!

 

இதில் அரசாங்கத்தை ஏய்க்க உதவிப் பணம் பெற... செய்யும் விவாகரத்துக்களும்.. பிரிந்து வாழ்தல்களும் உண்டு.

 

நன்றி தமிழ்சிறீ அண்ணா தங்கள் வரவிற்கும்.. கருத்திற்கும். :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மண்ணில் அண்மையில் நடந்த ஓர்.. உண்மைச் சம்பவம்:

 

ஒரு தமிழ் பையன்..நிறையத் திறமைசாலி. ஆனால் வீட்டில் அப்பா - அம்மா சண்டை. அதுவும் இருவரும்.. 50 வயதை தாண்டியவர்கள். சண்டையின் பிரதான இலக்கு.. பெண் சுதந்திரம். அந்த அம்மாக்கு.. தனக்கும் கணவர் போல.. தன் பெயரில்.. சொத்துக்கள் வாங்கனும் என்ற ஆசை. அந்த ஆசை.. வெறியாகி.. விவாகரத்து வரை செல்ல.. பிள்ளைகள் வழித்தடம் மாறிப் போயின.

 

இறுதியில்.. அந்தப் பையன்.. படிப்பை பாழ்படுத்தினான். லண்டன் வீதிகளில்.. குழுக்களில் இணைந்தான். அவனுக்கு 19 வயதான நிலையில்.. ஒரு 17 வயதே ஆன பெண்ணை திருமணம் செய்யாமலே.. கர்ப்பமாக்கினான். இடையில்.. தகாத நடவடிக்கைகள் காரணமாக.. சில முறை சிறையும் சென்றான். இன்று.. வற்புறுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில் மேற்படி பெண்ணோடு குடும்பம் நடத்துகிறான். அதேவேளை.. அவனின் நண்பர்கள்.. பல்கலைக்கழகத்தில் பட்டம் எடுக்கும் நிலையில்...!

 

அந்தப் பையனில் உண்மையில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அவனை சரியான வயதில்... சரியாக.. வழிநடத்தத் தவறிய பெற்றோரே இதற்கு முக்கிய பொறுப்பு. இன்னொன்று.. அவனின் தந்தைக்கு பிள்ளைகள் மீதே கடும் சந்தேகம். கடும் போக்கு. அதுவும் அவர்கள் பெற்றோரை பொய் சொல்லி ஏமாற்ற ஒரு காரணமும் ஆனது. அதுவும் தவறான வழியில் செல்ல பிள்ளைகளுக்கு தூண்டுதலும் ஆனது. :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிகம் குண்டக்க மண்டக்க கவிதை எழுதும் நெடுக்ஸ் அண்ணா நல்லதொரு விடையத்தை கவிதையாக்கியுள்ளார்.

தங்கள் எல்லாக் கவிதைகளை, படைப்புக்களைப் படித்தாலும் உடன்பாடில்லாத திரிகளில் கருத்தாடுவதில்லை. முகஸ்துதிக்காக எழுடுவது நல்ல விமர்சனமாகாது. ஆனால் இக்கவிதை ஒரு சமூகப்பிரச்சனையைச் சொல்லியுள்ளது. அதுவும் முதலடி "உ" வில் இருக்க வேண்டும் என்று எடுத்த முயற்சியும் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும் எங்கும் துருத்திக்கொண்டு இருக்கவில்லை.

 

எதையும் தாங்கும் இதயம் என்று பீத்திகொண்டாலும் உண்மையாக நேசித்தவர்களின் பிரிவு என்பது தாங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரு வலி.

நல்ல கவிதை ப்றோ ... வாழ்த்துக்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஜீவா. :)

  • கருத்துக்கள உறவுகள்

உவப்பான ஒரு கவிதை,

உவர்ப்பின்றி 

உள்வாங்க முடியுது! :D

உ  வரியில்  உண்மையை  சொன்னாரு   நெடுக்கால போவன்     குறுக்கால போவாரு எல்லோரும்  கொஞ்சம்   படியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட எல்லா உறவுகளுக்கும் நன்றி. :)

"விவாகரத்து" என்ற விடயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக குழந்தைகள் உள்ளவர்கள் தங்களுக்குள் விவாகரத்து என்ற எண்ணத்துக்கே இடங்கொடுக்கக் கூடாது. ஆனாலும் சில இடங்களில்...  மனம் ஒத்துப் போகாமல் வாழும் கட்டாயத்திலிருந்து இருவரும் பரஸ்பரம் விடுபடுவதற்கு விவாகரத்து தேவைப்படுகிறது. - இனிமேலும் முடியாது என்ற நிலையில் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

 

ஆனால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்படும் விவாகரத்து என்பது கொடுமையானது. மற்றவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஆழமான வலியைக் கொடுக்கும்.

எமது தமிழ் சமுதாயத்தில் இப்பொழுது விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம்.

 

பெண்கள் சரிசமனாக சமத்துவமாக மதிக்கப்படவேண்டும், அவர்களின் சுதந்திரம் என்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனாலும் பெண்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும் சுதந்திரம் என்பது விவாகரத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஒரு காரணி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டி நிற்கின்றன! தங்களால் ஆண்களின் துணையில்லாமல் வாழ முடியும் என்ற முடிவை சட்டென்று எடுத்துவிடும் மனோபாவம் பெண்களிடம் அதிகரித்து வருகின்றமை வருத்ததிற்குரியது!

இப்படியான எண்ணங்களை இருபாலாரும் தவிர்த்து வாழ்க்கையின் உண்மையான சந்தோசம் என்பது உண்மையான விட்டுக்கொடுப்பில்தான் உள்ளது என்பதனை உணர்ந்து வாழவேண்டியது அவசியம்.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"விவாகரத்து" என்ற விடயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக குழந்தைகள் உள்ளவர்கள் தங்களுக்குள் விவாகரத்து என்ற எண்ணத்துக்கே இடங்கொடுக்கக் கூடாது. ஆனாலும் சில இடங்களில்...  மனம் ஒத்துப் போகாமல் வாழும் கட்டாயத்திலிருந்து இருவரும் பரஸ்பரம் விடுபடுவதற்கு விவாகரத்து தேவைப்படுகிறது. - இனிமேலும் முடியாது என்ற நிலையில் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

 

ஆனால் ஒருதலைப்பட்சமாக திணிக்கப்படும் விவாகரத்து என்பது கொடுமையானது. மற்றவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் ஆழமான வலியைக் கொடுக்கும்.

எமது தமிழ் சமுதாயத்தில் இப்பொழுது விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம்.

 

பெண்கள் சரிசமனாக சமத்துவமாக மதிக்கப்படவேண்டும், அவர்களின் சுதந்திரம் என்பதற்கு நான் எதிரானவன் அல்ல. ஆனாலும் பெண்களுக்கு இக்காலத்தில் கிடைக்கும் சுதந்திரம் என்பது விவாகரத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஒரு காரணி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டி நிற்கின்றன! தங்களால் ஆண்களின் துணையில்லாமல் வாழ முடியும் என்ற முடிவை சட்டென்று எடுத்துவிடும் மனோபாவம் பெண்களிடம் அதிகரித்து வருகின்றமை வருத்ததிற்குரியது!

இப்படியான எண்ணங்களை இருபாலாரும் தவிர்த்து வாழ்க்கையின் உண்மையான சந்தோசம் என்பது உண்மையான விட்டுக்கொடுப்பில்தான் உள்ளது என்பதனை உணர்ந்து வாழவேண்டியது அவசியம்.

 

 

இதுக்கு தான் ஊருக்குள்ளை ஒரு அனுபவஸ்தன் இருக்க வேணும்கிறது.. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

கவிதைக்கு நன்றிகள்

 

தற்பொழுது நடக்கும் திருமணங்களின் போது

இன்றிலிருந்து   இருவரும் 

கருத்தொருமித்து

காதலித்து

இடைவெளியற்கு

ஒன்றாக  வாழணும்

என்றுதான்  வாழ்த்துவேன்.

புரியவேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.

 

ம்ம்ம்.. பிரம்மச்சாரிகள் கவிதையும் எழுதி கருத்தும் சொல்லுறாய்ங்க.. :unsure: கேட்டுக்கிறவேண்டியதுதான்.. :D

 

உறுத்தலாய்

உருண்டது ஓர் நாள்..!!

உன் முன்னவன் என்று

உதிரியாய் ஒருத்தனை

உதாரணம் காட்டினாய்.

உள்ளதில் படர்ந்தது

உதவாக்கரை எண்ணம்.

உன்னை அது

உறவால் வெறுக்க வைத்தது.

உறவுகள் விரிசல் காண...

உயிர்கள் அந்நியமாக

உடல்கள் பிரிந்தன.

 

தனது கொள்கையிலிருந்து அவர்  பின்  வாங்கியதாக தெரியவில்லை  இசை.

இங்கும் பெண்தான் தப்பு செய்கிறார்....

நாங்க நிதானமாகத்தான் எழுதுகின்றோம் :lol:  :D  :D

அருமையான கவிதை நெடுக்ஸ் அண்ணா.

தனது கொள்கையிலிருந்து அவர்  பின்  வாங்கியதாக தெரியவில்லை  இசை.

இங்கும் பெண்தான் தப்பு செய்கிறார்....

நாங்க நிதானமாகத்தான் எழுதுகின்றோம் :lol:  :D  :D

 

நானும் அதை கவனித்தேன். ஆனாலும் சமூகத்தில் முன்னாள் காதலை காரணம் காட்டி பெண்களை ஒதுக்கும் குணம் ஆண்களுக்கே மிக மிக அதிகம் என்ற ரீதியில் இக்கவிதையை பார்த்தேன். :rolleyes:

உதாரணத்துக்கு ஒரு ஆண் ஏற்கனவே காதலித்து பிரிந்திருந்தாலும் தனக்கு மனைவியாக வருபவள் காதலித்திருக்க கூடாது என நினைப்பான். அல்லது அவள் காதலித்திருந்தால் அதை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து விட்டு சில மாதங்கள்/ சில வருடங்கள் செல்ல சிறு சிறு பிரச்சினைகள் வரும் போது முன்னாள் காதல் கதையை இழுத்து கதைப்பான். இதனால் குடும்பங்களில் விரிசல் ஏற்படுவதுண்டு.

 

இதுவே அவன் தான் காதலித்திருந்தால் அதை சொல்லாமலேயே திருமணம் செய்திருப்பான் அல்லது சொல்லி விட்டு திருமணத்தின் பின்னரும் தனது முன்னாள் காதலியுடன் நட்புடன் பழகுகிறேன் என சொல்லி விட்டு பழகுவான். :o (இதனால் அக்காதலியின் கணவர் அவளுடன் பிரச்சினைப்படலாம் என்பதையும் யோசிக்க வேண்டும் :rolleyes:). அதே தனது மனைவி முன்னாள் காதலனுடன் நட்பாக பழகுவதாக கேட்டால் விட மாட்டான். ^_^ (தனது மனைவியை முன்னாள் காதலனுடன் கதைக்க விட கூடாது என சிந்திப்பவன் தனது முன்னாள் காதலி இப்பொழுது அடுத்தவன் மனைவி என்பதையும் யோசித்தால் பிரச்சினைகள் குறைவாக இருக்கும். :icon_mrgreen:)

 

அதற்காக எல்லா பெண்களும் நல்லவர்கள் என கூறவில்லை. தனது கணவனின் காதல் கதை தெரிந்தால் அதை குத்திக்காட்டி கதைத்து பிரச்சினைப்படும் பெண்களும் உள்ளார்கள். :)

 

பி.கு: இக்காலத்தில் காதலிக்காமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. எனவே நீங்கள் காதலிக்காதவர்களாக இருப்பினும் உங்களுக்கு வரும் துணை ஏற்கனவே யாரையும் காதலித்திருக்கலாம் என்ற நினைப்புடன் திருமணம் செய்தால், அதை சாதாரணமாக எடுக்க பழகி கொண்டால் பின்னர் ஏமாற்றம் இருக்காது. :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

என்ர  ஆத்தாடி

ஆரம்பித்தாச்சா?? :lol:  :D  :D

நானும் ஏற்கனவே காதலித்து பிரிந்தவள் தான். எனக்கு திருமணம் செய்ய ஆர்வமில்லை. :rolleyes: ஆனால் திருமணம் செய்யாமல் இருக்க வீட்டில் விட மாட்டார்கள் போலிருக்கு. :(

நான் திருமணம் செய்வதாக இருப்பின் முன்னர் காதலித்தது பற்றி சொல்வேன் - திருமணத்தின் பின்னர் அதை பற்றி கதைக்க கூடாது என்ற கோரிக்கையுடன். (சொல்வதால் வரும் பின் விளைவுகள் பற்றி தெரிந்திருந்தாலும்.... :))

 

திருமணத்தின் பின்னரும் அதையே நோண்டிக்கொண்டிருந்தால் நானாகவே அவனை விவாகரத்து எடுக்கப்போவதாக கேட்க தான் plan... :D:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.