Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் சிறப்பிற்கு... காரணமானவர்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1379604_357929451005862_2096427747_n.jpg

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்களின் அறிவியல் அறிவு நன்றாகத்தான் இருந்து உள்ளது. ஆனால் அதற்குப் பின்பு அது வளரவே இல்லை. ஆரியம் வேருன்றி சாதியம் தழைத்த பின்பு அறிவு எப்படி வளரும்?

  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரம் கடலுக்கு நடுவே என்றாலும் அது ஒரு சிறிய தீவில் தானே கட்டப்பட்டுள்ளது. இப்படி வேறு தீவுகளில் ஒன்றுமே கட்டப்படவில்லையா சிறி???

கல்லணையும் ஆங்கிலேயர் ஒருவர்தானே தன சொத்துக்களை எல்லாம் விற்றுக் கட்டுவித்தார் என்று படித்திருக்கிறேன். அவரின் வடிவமைப்புத்தான் அது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை தமிழர்களின் அறிவியல் அறிவு நன்றாகத்தான் இருந்து உள்ளது. ஆனால் அதற்குப் பின்பு அது வளரவே இல்லை. ஆரியம் வேருன்றி சாதியம் தழைத்த பின்பு அறிவு எப்படி வளரும்?

 

ஆதித்ய இளம்பிறையன்,

நாம், விரும்பியோ... விரும்பாமலோ...

சினிமாவும், திராவிடக் கொள்கையும்.... தமிழனின் பாரம்பரியத்தை, ஓரம் கட்டியதையும் குறிப்பிட வேண்டும்.

கல்லணையும் ஆங்கிலேயர் ஒருவர்தானே தன சொத்துக்களை எல்லாம் விற்றுக் கட்டுவித்தார் என்று படித்திருக்கிறேன். அவரின் வடிவமைப்புத்தான் அது.

 

கல்லணை கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் கட்டியது சுமேரியர். அந்த தொழில்நுட்பம் தமிழர்களுடையது.  பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் அது செப்பனிடப் பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமேஸ்வரம் கடலுக்கு நடுவே என்றாலும் அது ஒரு சிறிய தீவில் தானே கட்டப்பட்டுள்ளது. இப்படி வேறு தீவுகளில் ஒன்றுமே கட்டப்படவில்லையா சிறி???

கல்லணையும் ஆங்கிலேயர் ஒருவர்தானே தன சொத்துக்களை எல்லாம் விற்றுக் கட்டுவித்தார் என்று படித்திருக்கிறேன். அவரின் வடிவமைப்புத்தான் அது.

 

சுமோ...

ஆங்கிலேயர்... தனது பணத்தைத் தான், கல்லணை கட்டுவதற்கு முதலீடு செய்தார்.

கட்டியவன்..... தமிழ் எஞ்னீயர் கரிகலான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் அன்று உலகம் முழுவதையும் தன் கையில்
வைத்திருந்தபடியால்தான்  இன்று உலகமே சேர்ந்து

தமிழன்  முதுகில் கும்மியடிக்கின்றார்களோ??? :rolleyes:  :D

ஆதித்ய இளம்பிறையன்,

நாம், விரும்பியோ... விரும்பாமலோ...

சினிமாவும், திராவிடக் கொள்கையும்.... தமிழனின் பாரம்பரியத்தை, ஓரம் கட்டியதையும் குறிப்பிட வேண்டும்.

 

 

சாதிய  ஆதிக்கத்தில் இருந்து மீள திராவிடமும் சினிமாவும் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கை அளித்துள்ளன. ஆனால் இன்னமும் நாம் அங்கேயேதான் நின்று கொண்டு இருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவம் இருந்திருக்கிறது. இன்றும் அதே நிலைமையில் தான் உள்ளது.இந்த ஆயிரம் வருடத்தில் அது எங்கோ சென்றிருக்க வேண்டும். புதிதாக அதில் கண்டுபிடிப்புகளோ மாற்றங்களோ ஏதும் இல்லை. ஆனால் முன்னொரு  வருடம் கொண்ட  ஆங்கில மருத்துவம் எங்கோ போய் விட்டது.

 

சுமேரியர், சிறி வரலாறை தவறாக சொல்லாதீர்கள். கல்லணையை கட்டியது தமிழனே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கட்டிய கல்லணையை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே வந்த ஆங்கிலேயர்கள் கட்டியதாக கூறலாமா?

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

 

மேலதிக தவலுக்கு இங்கே செல்லவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சுமேரியர், சிறி வரலாறை தவறாக சொல்லாதீர்கள். கல்லணையை கட்டியது தமிழனே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கட்டிய கல்லணையை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே வந்த ஆங்கிலேயர்கள் கட்டியதாக கூறலாமா?

சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழினுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப் படுகிறது.

 

மேலதிக தவலுக்கு இங்கே செல்லவும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88

 

நான் வாசித்ததாகக் கூறினேனே தவிர அறுதியாகக் கூறவில்லை. தெளிவு படுத்தியமைக்கு நன்றி இளம்பிறையன்.

 

அங்கோர்வட் தமிழர் சாதனையா ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

சுமேரியர், சிறி வரலாறை தவறாக சொல்லாதீர்கள். கல்லணையை கட்டியது தமிழனே. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கட்டிய கல்லணையை இருநூறு ஆண்டுகளுக்கு முன்னே வந்த ஆங்கிலேயர்கள் கட்டியதாக கூறலாமா?

------

 

வேம்படியிலை... படிச்ச சுமோ சொன்னது... சரியாய் இருக்கும் என்று, நானும் ஆமோதித்தது பிழை.... ஆதித்யன்,

இனிமேல்... இப்பிடியான தவறுகளைச் செய்ய மாட்டேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படியிலை... படிச்ச சுமோ சொன்னது... சரியாய் இருக்கும் என்று, நானும் ஆமோதித்தது பிழை.... ஆதித்யன்,

இனிமேல்... இப்பிடியான தவறுகளைச் செய்ய மாட்டேன். :D

 

நல்ல அநியாயம்தான் உது :lol:

 

அங்கோர்வட் தமிழர் சாதனையா ?

 

அங்கோவாரில்  சோழ மன்னன் படையெடுத்துச் சென்று பின் அங்கேயே தங்கி இருந்ததாக வாசித்துள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்ததாகக் கூறினேனே தவிர அறுதியாகக் கூறவில்லை. தெளிவு படுத்தியமைக்கு நன்றி இளம்பிறையன்.

 

சுமே, நீங்கள் சொல்வது முல்லைப் பெரியாறு அணையாக இருக்கலாம்!

 

இதைக்கட்டியவர் ஆங்கிலேயர் தான்!

 

'கல்லணையில்' எந்த விதமான அத்திவாரமும் இல்லாமல், கல்களை மட்டும் போட்டு, ஆற்றின் நீரோட்டத்தில் அவை புதைந்து போன பின்பும், மீண்டும், மீண்டும், கற்களைப் போட்டு, அதன் மேல் கட்டப்பட்டதே கல்லணை!

 

உலகத்தில் எவருமே, நினைத்துப்பார்க்க முடியாத 'பொறியியல் சாதனை' யை நிகழ்த்திக்காட்டியவன், கரிகால் பெருவளத்தான்!

அங்கோர்வட் தமிழர் சாதனையா ?

 

அங்கோர்வட் என்ற விஷ்ணு கோவிலை கட்டியவன் இரண்டாம் சூர்யவர்மன். இவன் கைமர் பேரரசை சார்ந்தவன்.
 
இவன் தமிழ் பல்லவ குல வழித் தோன்றல் என்று கூறக் காரணம்.
 
1. வர்மன் என்பது பல்லவ மன்னர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொள்வது.
எடுத்துக் காட்டாக
 
சிம்ம வர்மன், நரசிம்ம வர்மன், வீர வர்மன், புத்த வர்மன், நந்தி வர்மன், அபராஜித வர்மன் ....
 
இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இதே போல கைமர் பேரரசை சேர்ந்த மன்னர்களின் பெயர் சூர்யா வர்மன், ஜெய வர்மன். ஜெய வர்மனை மட்டும் ஜெய வர்மன் I, ஜெய வர்மன் II, ஜெய வர்மன் III என்ற எட்டு அரசர்கள வரை சொல்லுகின்றனர்.
 
2. பல்லவர்கள் விஸ்ணுவை வழிபட்டனர். அங்கோர்வட் கோவிலும் விஸ்ணுவை வழிபட எழுப்பப்பட்டதே. இந்து மதத்தை தெற்காசிய முழுவதும் பரப்பியவர்கள் தமிழ் மன்னர்கள் என்பது வேறு கதை. 
 
3. அங்கோர்வட் கோவில் தமிழர் கட்டடக் கலையைச்(Dravidan Architecture) சேர்ந்தது என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்டது. இது மாமல்லபுரத்து கோவிலையும், சோழ மன்னர்களின் கோவிலையும் ஒத்துள்ளது. கம்போடியர்களின் மதம் புத்தம். அங்கு விஷ்ணுவுக்கு கோவில் கட்டியவர்கள் பல்லவர்களே.. பல்லவ இளவரன் போதி தர்மர் சீனாவில் சென்று அங்கேயே தங்கி புத்த மதத்தை தழுவி தற்காப்பு கலையை நிறுவியது ஞாபக்கத்தில் கொள்ளத்தக்கது. 
 
4. அங்கோர்வட் கோவில் சுவர்கள் முழுவது தமிழ் குறியீடுகள்(tamil inscription) காணப்படுகிறது 
 
இன்னும் நிறைய எழுதலாம். அலுவலக நேரத்தில் இதற்க்கு மேல் எழுதினால் திட்ட மேலாளர்(Project Manager) நமக்கு சங்க ஊதி விடுவார்  :)
  • கருத்துக்கள உறவுகள்

....ஆங்கிலேயர் ஒருவர்தானே தன் சொத்துக்களை எல்லாம் விற்றுக் கட்டுவித்தார் என்று படித்திருக்கிறேன். அவரின் வடிவமைப்புத்தான் அது.

 

யம்மாடி, அவர் முல்லைப் பெரியார் அணையை கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் திரு. ஜான் பென்னி குக்.

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D

 

இராமேஸ்வரம் கடலுக்கு நடுவே என்றாலும் அது ஒரு சிறிய தீவில் தானே கட்டப்பட்டுள்ளது. இப்படி வேறு தீவுகளில் ஒன்றுமே கட்டப்படவில்லையா சிறி???

கல்லணையும் ஆங்கிலேயர் ஒருவர்தானே தன சொத்துக்களை எல்லாம் விற்றுக் கட்டுவித்தார் என்று படித்திருக்கிறேன். அவரின் வடிவமைப்புத்த

 

இந்த பெருந்தன்மையும் தமிழனின் சிறப்புதான்..

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைபெரியார் அணையே ஆங்கிலேயப் பொறியியளாளர் John Pennycuick (British engineer) தனது சொத்துக்களை வித்துக் கட்டினார். 

 

Kallanai Built By Karikalan, A Chola King. (This image also shows 19th century additions to the ancient dam)

It was built by the Chola king Karikalan around the 1st Century AD[1] and is considered one of the oldest water-diversion or water-regulator structure in the world, still in use.[2][3] The Kaveri River forms the boundary between the Erode and Salem districts. The Bhavani River joins the Kaveri at the town of Bhavani, where the Sangameswarar Temple, an important pilgrimage spot in southern India, was built at the confluence of the two rivers. Sweeping past the historic rock of Tiruchirapalli, it breaks into two channels at the island of Srirangam, which enclose between them the delta of Thanjavur (Tanjore), the garden of South India.

The northern channel is called the Kollidam (Kolidam); the other preserves the name of Cauvery, and empties into the Bay of Bengal at Poompuhar, a few hundred miles south of Chennai (Madras). On the seaward face of its delta are the seaports of Nagapattinam and Karikal. Irrigation works have been constructed in the delta for over 2,000 years.

The Kallanai is a massive dam of unhewn stone, 329 metres (1,080 feet) long and 20 metres (60 feet) wide, across the main stream of the Cauvery. The purpose of the dam was to divert the waters of the Cauvery across the fertile Delta region for irrigation via canals. The dam is still in excellent repair, and supplied a model to later engineers, including the Sir Arthur Cotton's 19th-century dam across the Kollidam, the major tributary of the Cauvery. The area irrigated by the ancient irrigation network of which the dam was the centrepiece was 69,000 acres (280 square kilometres). By the early 20th century the irrigated area had been increased to about 1,000,000 acres (4,000 square kilometres).

பதிலுக்கு நன்றி ஆதித்ய இளம்பிறையன்.
 
 
 
பல்லவ தொடர்பு இருந்திருக்கலாம்.
 
ஆனால் பல்லவர் தமிழர் தானா ?  :)
 
 
***************************************************************************
 
 
 
இந்த அங்கோர்வட் கட்டப்பட முதல் கம்பூச்சியாவில் சைவ சமயம் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பின்னர் பல்லவச் செல்வாக்கினால் வைஸ்ணவம் வளர்ந்திருக்கலாம். சைவம் கூட தமிழருக்கு என்று தனித்துவமானதல்ல. உதாரணமாக காஷ்மீர் சைவத்தைச் சொல்லலாம்.
 
ஆனால் கம்பூச்சியாவுடன் பண்டைய தமிழ் தொடர்புகள் இருந்திருக்கின்றன. கம்போடியவின் கேமர் இனத்தவரே எங்கள் சமுதாயத்தில் காணப்படும் சீவல் தொழில் செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தும் இருக்கிறது.
 
இவை அனைத்தும் கம்போடிய தமிழ்த் தொடர்புகளை நிரூபித்தாலும் அங்கோர்வட்டைக் கட்டிய சூரியவர்மன் தமிழனா என்பதற்கு போதிய ஆதாரத்தைத் தரவில்லை. இங்கே வர்மன் என்பது சமஸ்கிரத "வர்மா" என்பதில் இருந்து தோன்றியது. கவசம் என்று அர்த்தம். பெருமைக்குரிய பிற்சேர்க்கையாக கேமர் மன்னர் பரம்பரை இதைப் பாவித்திருக்கலாம்.
 
அங்கோர்வட் தூண்களில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ் அல்ல. பெரும்பாலும் சமஸ்கிரதமும் கேமர் பாசையுமே.

பல்லவர்கள் தமிழ்க் குடிகளா என்பதை தனி திறந்துதான் விவாதிக்க வேண்டும் ஈசன்.

மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆயிரத்து மூன்னூறு வருடங்கள் தாய்லாந்து உட்பட தென்கிழக்கு ஆசியாவையே தமிழர்கள் ஆண்டு இருந்திருக்கின்றனர்.

சொல்வனத்தில் பதியப்பட்ட ஒரு கட்டுரையை கொஞ்சம் சுருக்கி தந்திருக்கிறேன். முழுப் பதிவையும் காண இங்கே செல்லவும் http://solvanam.com/?p=26758

சைபீரியாவிலிருந்து தங்கம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இந்தப் பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதாய் நம்பி தாய்லாந்துக்கு தங்கம் வாங்க வந்தார்கள். இந்த நாட்டுக்கு அதன் காரணமாய் “சொர்ண பூமி” என்று பெயர் வைத்ததே நம்மவர்கள்தான். பர்மா வழியாக தரை மார்க்கமாய் கொஞ்சமும் கடல் மார்கமாய் அனேகரும் வந்தார்கள்.

இந்த நாட்டில் தங்கியிருந்த காலத்தில் இந்தியர்கள் தங்கள் மேம்பட்ட நாகரீக வளர்ச்சியால் மொழி, வானசாஸ்திரம், மதக்கருத்துக்கள், இதிகாசங்கள் போன்ற தாங்கள் அறிந்த விஷயங்களை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை எளிதாக ஏற்றுக்கொண்டார்கள். மெல்ல மக்களிடையே இவர்கள் கலந்தார்கள். சிலர் உள்ளூர் இனத்தலைவர்களின் பெண்களை கல்யாணம் செய்து கொண்டார்கள். இனத்தலைவர்களின் குடும்பத்தோடு சம்மந்தப்பட்டதால் இந்தியர்களுக்கு எளிதாய் செல்வாக்கும் அங்கீகாரமும் வந்து சேர்ந்தன. இந்தியர்கள் தலைமையில் இனக்குழுக்கள் தோன்றின. இனக்குழுக்களிலிருந்து சிற்றரசுகள் தோன்றி, ஒன்றோடு ஒன்று போரிட்டு இணைந்து , கொஞ்சம் கொஞ்சமாய் இந்தியர்கள் தலைமை வகித்த பேரரசுகள் தோன்றின. பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, வியத்நாம் உட்பட இந்தப் பிரதேசமே கெமர்கள், ஃபுனான்கள், சம்பா, விஜேயேந்திரர்கள் என்று இந்திய மன்னர்கள் ஆளுமையில் கிட்டத்தட்ட ஆயிரத்து முன்னூறு வருடங்கள் இருந்தது.

வர்மன் என்ற பெயரை வைத்திருந்தவர்கள் தென்னிந்திய அரசர்கள். குறிப்பாக பல்லவர்கள். இது யதேச்சையான நிகழ்வு இல்லை. இந்திய சரித்திரத்தை குறிப்பாய் பல்லவர்களின் அரச வம்சத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும். இந்தியாவில் குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த பல்லவ அரசன் ஆட்சிசெய்தானோ அந்த அரசன் பெயரும் இங்கே தாய்லாந்தில் அதே காலகட்டத்தில் ஆட்சி செய்த அரசன் பெயரும் ஒன்றாய் இருக்கிறது என்பது இங்கே கல்வெட்டுகள் வெளிப்படுத்தும் உண்மை.

ராசசிம்மன் என்கிற பெயர்கொண்ட அரசன் ஏழாம் நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசியாவில் அரசாண்டிருக்கிறான். இதே காலகட்டத்தில் இந்தியாவில் ராசசிம்மன் என்னும் பல்லவ அரசன் ஆண்டிருக்கிறான். மகேந்திரவர்மன் என்கிற கெமர் அரசன் தான் பெற்ற வெற்றிகளை நிலைநாட்ட மலையின் மீது சிவனுக்கு ஒரு கோயிலை எழுப்பி மாபெரும் லிங்கம் ஒன்றை பிரத்திக்ஷ்டை செய்தான். அதே கால கட்டத்தில் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசன் காவிரி ஆற்றை எதிர்நோக்கியபடி திருச்சிராப்பள்ளி குன்றின் மீது அவனும் ஒரு கோயிலை எழுப்பியதையும் சுட்டிக்காட்டி சரித்திர ஆராய்ச்சியாளர் நீலகண்ட சாஸ்த்ரி எழுதியிருக்கிறார். இந்த இருவருடைய கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துக்களில் நெருக்கமான ஒற்றுமைகள் இருப்பதை பற்றியும் எழுதியிருக்கிறார். -

பல்லவ மன்னர்கள் தெற்கு ஆசிய கெமர் ராஜ்யத்தில் திருமணம் செய்து கொண்ட குறிப்புகள் இருக்கின்றன. கெமர் இளவரசி ரங்க பதாகை என்பவளை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான். இதுமட்டுமல்லை. தென்கிழக்கு ஆசியாவின் கெமர் அரசர்கள் இந்தியாவில் வந்து அரசாண்ட சரித்திரமும் நடந்திருக்கிறது. கெமர் நாட்டிலிருந்து இரண்டாம் நந்திவர்மன் என்னும் மன்னனைக் கொண்டுவந்து பல்லவ அரசனாக முடிசூட்டிய சரித்திரமும் அதில் ஒன்று..

கியாசிந்தன் என்கிற பர்மா பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் எங்க ஊர் சோழ நாட்டு இளவரசி ஒருத்தியை மணம் செய்து கொண்டான் தாய் நீலகண்ட சாஸ்திரிகள் எழுதியிருக்கிறார். ராஜேந்திர சோழன் கடல் கடந்து வந்து ஸ்ரீவிஜய அரசின் மேல் படையெடுத்து சுமத்ரா, மலேயா என்று கடாரம் வரை ஜெயித்திருக்கிறான். பதினொன்றாம் நூற்றாண்டில் ஒருமுறை இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜய அரச குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட ராஜாங்க சச்சரவில் தலையிட்டு படையெடுத்து ராச்சியத்தை உரிய உள்ளூர் மன்னருக்கு தந்துவிட்டு திரும்பியிருக்கிறான்”

“பல்லவர்கள் மட்டுமல்ல சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் தென்கிழக்கு ஆசியத் தொடர்பு இருந்திருக்கிறது. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு குறிப்பு ஒன்று வியத்நாமில் சம்பா எனும் அரசை ” ஸ்ரீ மாறன்” என்கிற அரசன் நிறுவினான் என்று சொல்கிறது. இதை ஆராய்ச்சி செய்த ழூவோ பிலியோழா என்கிற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ” மாறன்” என்பது பாண்டியரின் வம்சப் பெயர் என்றும் இந்த ஸ்ரீமாறன் என்கிற பாண்டியன் நிறுவிய அரசே “சம்பா” என்றும் சொல்கிறார். சோழர்கள் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு “சம்பாபதி” என்ற பெயர் இருந்தது. அதனால் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து சென்ற சோழர்கள் அந்தப் பிரதேசத்துக்கு “சம்பா” என்று பெயரிட்டிருக்கலாம்.”

“பத்தாம் நூற்றாண்டில் பல பிராமணர்கள் தென்னிந்தியாவிலிருந்து கெமர் அரசர்களால் கொண்டுவரப்பட்டார்கள் என்கிறது தென்கிழக்கு ஆசிய சரித்திரம். உதாரணமாய் இரண்டாம் ஜெயவர்மனுக்கு சடங்குகள் செய்து ஞான உபதேசம் செய்த இரணிய தர்மன் என்கிற பிராமணர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டவர் என்று படித்திருக்கிறேன்..”

“தென்கிழக்கு ஆசியாவில் இந்து மதம், பூஜை பழக்கங்கள், புராணக் கதைகள் போன்றவை பரவ இவர்கள் முக்கியமான காரணமாய் இருந்தார்கள். மன்னர்களின் அரச பரம்பரையின் ஆஸ்தான குருமார்கள் இவர்கள். அரச குடும்பத்தில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவர்களே தலைமை வகித்து நடத்தினார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்த இந்த பிராமணர்கள் இந்த ஊரிலேயே தங்கி இந்த ஊர் பெண்களை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்..அவர்களின் பிராந்திய இந்திய மொழி மறந்தவர்கள்…. மத வழக்கங்களை மட்டும் பின்பற்றி வருகிறார்கள்…முதல் இந்திய ராஜாங்கமான “புனான்” வம்சமே “கௌடின்யா” என்கிற பிராமணனால் உருவாக்கப்பட்டது..”

 

இதை எல்லாம் வரலாற்று சான்றுகளோடு பதிந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எப்பேர்பட்ட இனம் இந்த தமிழினம்!!!!  

 

அங்கோர்வட் தூண்களில் காணப்படும் தமிழ் எழுத்துக்களை காண இங்கே செல்லவும்

http://3.bp.blogspot.com/_fC56RldUqZU/SddhSBph4RI/AAAAAAAAAu4/BTlwYYu1Hgc/s1600-h/Murali2004-12-30+15.53.11.JPG

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ,தொடருங்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.